Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்டெர்லைட்டுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டெர்லைட்டுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி!

spacer.png

நாட்டில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சமாளிக்க, மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் ஆக்ஸிஜன் பிளான்ட்டில் ஆக்ஸிஜன் நான்கு மாதங்களுக்கு தயாரித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

தனக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு இன்று (ஏப்ரல் 26) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், அதற்கு முன்னதாகவே காலை 9.30 மணிவாக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார்.

 

இக்கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம், விஜயபாஸ்கர், திமுக சார்பில் கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, பா.ம.க. சார்பில் துணை பொதுச் செயலாளர் ராதா கிருஷ்ணன், தே.மு.தி.க சார்பில் பாலாஜி, அன்புராஜ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாலகிருஷ்ணன், சவுந்தரராஜன், இந்திய கம்யூ. கட்சி சார்பில் முத்தரசன், வீரபாண்டியன் மற்றும் காங்கிரஸ் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பனீந்தர் ரெட்டி, அதுல்ய மிஸ்ரா, பொதுத்துறை செயலாளர் செந்தில் குமார் உள்பட உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அங்கீகாரம் இல்லை என்பதால் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சியினருக்கு இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு இல்லை.

காலை கூடிய இந்தக் கூட்டத்தில் பேசிய திமுகவின் பிரதிநிதி கனிமொழி எம்பி,

“ உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எழுப்பியுள்ள கேள்வி, இன்றைக்கு நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் உச்சபட்ச நிலையை அனைவருக்கும் உணர வைக்கிறது.

அதே நேரத்தில் – நாம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை, மறந்து விட முடியாது. அதில் 13 அப்பாவிகள் உயிரிழந்து - அந்தக் குடும்பங்கள் எல்லாம் இன்றும் நிலைகுலைந்து நிற்கின்றன. தூத்துக்குடி மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பையும் நாம் புறக்கணித்து விட முடியாது.

 

உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்த நேரத்தில், ஏப்ரல் 23-ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடத்திய கருத்துக் கேட்பு கூட்டத்தில் கூட, தூத்துக்குடி மக்கள் கடுமையாக எதிர்த்துள்ளார்கள். அவர்களின் எதிர்ப்பையும் நாம் உதாசீனப்படுத்திட முடியாது.

அதேசமயம் தூத்துக்குடி மக்கள் மனிதநேயத்தின் மறுபக்கமாக திகழுபவர்கள் என்பது எனக்குத் தெரியும். அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் - ஒருவருக்கு ஆபத்து என்றால் உடனே ஓடிச் சென்று உதவிட இதயம் கொண்டவர்கள் அந்த மக்கள்.

நாடு முழுவதும் - ஏன், தமிழ்நாட்டிலேயே கூட ஆக்சிஜன் தேவைப்படுகின்ற இந்த நேரத்தில்- ஸ்டெர்லைட் ஆக்சிஜன் பிளாண்ட்டை மட்டும் இயக்கி - மக்களைக் காத்திட ஆக்சிஜன் தயாரிப்பது குறித்து, மனிதநேயத்தின் அடிப்படையில் நாம் எடுக்க வேண்டிய முடிவுதானே தவிர - ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கு அல்ல”என்று பேசினார் கனிமொழி எம்பி.

மேலும் அவர், “நாட்டு மக்கள் எல்லாம் தமிழ்நாட்டை நோக்கி ஆக்சிஜன் கோரிக்கையை வைக்கிறார்கள். உச்சநீதிமன்றமே ஏன் மாநில அரசே அதை தயாரித்துக் கொடுக்கக் கூடாது என்று தமிழகத்தைப் பார்த்துக் கேட்கிறது. இந்த நேரத்தில் ஒருமைப்பாட்டின் பக்கம் –மனிதாபிமானத்தின் பக்கம் எப்போதும் நிற்கும் தமிழகம் ஆக்சிஜன் வழங்குவதிலும் முன்னணியில் நின்றது என்ற பெருமையும் நாம் பெறக் கூடியதுதான். ஆகவே உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் கருத்துகளை முன்வைக்கும் போது, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் பிளாண்ட் மட்டும் செயல்பட அனுமதிப்பது என்றால், முக்கியமான சில கருத்துகளை முன்வைக்க வேண்டும். அதில்,

 

இந்த அனுமதி தற்காலிகமானது, அதுவும் ஆக்சிஜன் தயாரிக்க மட்டுமே இந்த அனுமதி. வேறு எந்த வடிவிலும் ஆலையை இயக்கக் கூடாது, ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்கப்படுகிறது என்பதை கண்காணித்திட - மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரி ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைத்திட வேண்டும், அக்குழுவில் தூத்துக்குடி மாவட்ட மக்கள், ஸ்டெர்லைட் போராட்டக் குழு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றிட வேண்டும், ஆக்சிஜன் தயாரிக்க ஒரு குறிப்பிட்ட “காலவரம்பிற்கு” மட்டும் அனுமதி வழங்க வேண்டும், இப்போது ஆக்சிஜன் தயாரிக்க வழங்கப்படும் அனுமதியை எக்காரணம் கொண்டும் ஒரு முன்னுதாரணமாக வைத்து - ஆலையை நிரந்தரமாக திறக்க அனுமதி கோரக்கூடாது என்று அரசு உத்தரவிலேயே தெளிவுபடுத்திட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையில் இந்த அனுமதியின் பெயரில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை தமிழக மக்களுக்கு தேவைப்படும் அளவிற்கு இலவசமாக அளிக்க வேண்டும், மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையின் சொந்த மின்சாரத்தை பயன்படுத்த அனுமதிக்க கூடாது. தமிழக அரசுதான் மின்சாரம் வழங்க வேண்டும்.

நாங்கள் கூறிய இந்தக் கருத்துகளை, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் அழுத்தமான கருத்துகளாக முன் வைக்க வேண்டும்” என்று பேசினார் கனிமொழி. ஸ்டெர்லைட் அமைந்துள்ள தூத்துக்குடி மக்களவை உறுப்பினராகவும் கனிமொழி இருப்பதால் அவரது கருத்தை முதல்வர் உற்று கவனித்தார்.

கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் எல். முருகன், “ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதித்து, கிடைக்கும் ஆக்ஸிஜனை தமிழகத்துக்கு பயன்படுத்திவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று கூறினார்.

அதிமுக சார்பிலும் ஆக்ஸிஜன் தயாரிக்கலாம், ஆனால் ஆக்ஸிஜன் மட்டுமே தயாரிக்க வேண்டும், எக்காரணம் முன்னிட்டும் இது சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்பட அனுமதிக்கப் படக் கூடாது என்று வற்புறுத்தப்பட்டது.

மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் திமுகவின் கருத்தை ஒட்டியே தங்கள் கருத்தை எடுத்து வைத்தனர்.

தலைவர்கள் பேசியதை அடுத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

“ தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம் அல்ல. மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது தமிழக அரசு தான். நாளுக்கு நாள் கொரோனா அதிகரிக்கிறது, ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது என கூறினார். அதை ஒட்டி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி தரலாமா வேண்டாமா என்பது பற்றி விவாதிக்கத்தான் இந்தக் கூட்டம்” என்று குறிப்பிட்டார்.

தலைவர்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்தக் கூட்டத்தில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது என்றும், தேவைப்பட்டால் மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி இந்த முடிவுகளில் மாற்றம் செய்துகொள்ளலாம்”என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

தமிழக அரசின் இந்த நிலைப்பாடு உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கில் வாதாடும் வழக்கறிஞருக்கும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் இன்னும் ஒரு வாரத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

https://minnambalam.com/politics/2021/04/26/37/sterlite-copper-produce-oxygen-four-months-all-party-meeting

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டெர்லைட்டை திறந்தால்.... :எச்சரிக்கும் சீமான்

spacer.png

கொரோனா பேரிடர் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும்; சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் நிறுவனத்தின் ஆக்ஸிஜன் பிளான்ட்டில் நான்கு மாதங்களுக்கு மட்டும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 26) காலை நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

 

இந்நிலையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “கொரோனா இரண்டாம் அலை ஏற்படுத்தியிருக்கும் பேரிடர் காலச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்குவதாகக் கூறி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க நடக்கும் முயற்சிகள் பேரதிர்ச்சி தருகின்றன.

தூத்துக்குடி நிலத்தையும், சூழலியலையும் பாழ்படுத்தி, சுவாசிக்கும் காற்றையே நச்சுக்காற்றாக மாற்றியதோடு மட்டுமல்லாது 14 உயிர்களின் மூச்சுக்காற்றையும் நிறுத்தக் காரணமாக இருந்த ஸ்டெர்லைட் ஆலையானது, மக்களின் உயிர்காக்க சுவாசக்காற்றை உற்பத்தி செய்து தருவதாகக் கூறுவது கேலிக்கூத்தானது. மத்திய அரசின் கையாலாகத்தனத்தாலும், மக்கள் நலன் குறித்த அக்கறையின்மையினாலும் நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைக் காரணமாகக் கொண்டு மீண்டும் இயங்குவதற்கு அடித்தளமிடும் ஸ்டெர்லைட் ஆலையின் முயற்சிகளை மொத்தமாய் முறியடிக்க வேண்டும். மக்களின் உயிருக்கும், மண்ணின் நலத்துக்கும் முற்று முழுதாகத் தீங்கு விளைவிக்கிற, நச்சு ஆலை என்று உயர் நீதிமன்றத்தாலேயே குறிப்பிடப்பட்ட, சூழலியல் கேடுகளுக்காக 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட கொடிய ஸ்டெர்லைட் ஆலையை எதன்பொருட்டும் மீண்டும் திறக்க அனுமதிக்கக்கூடாது.

 

தாமிரத்தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், அத்தட்டுப்பாடு நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும் கூறி, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று வாதிட்டவர்கள், இக்கட்டான தற்காலச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, ஆக்சிஜன் உற்பத்திக்காகத் திறக்க வேண்டும் எனக் கூறி வருவது முழுக்க முழுக்க ஏமாற்றுவாதமாகும். ஸ்டெர்லைட் ஆலை இயங்கத் தொடங்கிய காலந்தொட்டு மூச்சுத்திணறல் முதல் புற்றுநோய் வரை பல்வேறு நோய்களுக்கும், உடல் உபாதைகளுக்கும் ஆட்பட்ட தூத்துக்குடி மக்கள் நாளும் அல்லல்பட்டு நின்றபோது அதனைத் துளியும் மதித்திடாது இலாபநோக்கில் சுற்றுச்சூழலைச் சீரழித்து, மக்களைத் துன்புறுத்தி கொள்ளை இலாபம் ஈட்டி வந்த ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், இன்றைக்கு மக்கள் உயிரின் மீது பரிவு காட்டுவதாகக் கூறுவது பச்சைச்சந்தர்ப்பவாதம் என்பதைத்தாண்டி வேறில்லை”என்று கூறியுள்ள சீமான்,

மேலும், “ கொரோனா காலத்தில் நோய்த்தொற்றுக்கு ஆட்பட்ட நோயாளிகளின் உயிர்களைக் காக்க அவர்களுக்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்ய வேறு வழியே இல்லை என்பது போல ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது குறித்து ஆலோசிப்பது அபத்தமானது; அவமானகரமானது. இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு நாட்டில், ஒரு அவசரத் தேவைக்குச் சுவாசக்காற்றை உற்பத்தி செய்யக்கூட மாற்று வழிகளில்லையா?

ஸ்டெர்லைட் ஆலையைவிட்டால் ஆக்சிஜனைக் கொண்டு வர வாய்ப்புகளே வேறு ஏதுமில்லையா? அநியாயமாக 14 உயிர்களைப் பறிகொடுத்து அதற்கு இன்னும் நீதிகிடைத்திடாச் சூழலில் அதனை எண்ணி நாளும் மனம் வெதும்பி நிற்கிற நிலையில் அவ்வேதனையின் சுவடு மறைவதற்குள்ளாகவே அதனைத் திறக்க முற்படும் வேலைகளைத் தொடங்குவது மிகப்பெரும் மோசடித்தனம். சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவித்ததாக நீதிமன்றத்தால் 100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட ஆலையை, சூழலியல் விதிகளை மீறி மன்னார் வளைகுடாவுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள ஆலையை எதன்பொருட்டும் திறக்கக்கூடாது.

 

சட்டத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்தின் வழியாக ஊடுருவப் பார்க்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டிய தமிழக அரசு, நீதிமன்றத்தில் எதிர் நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, தற்போது கருத்துக்கேட்புக் கூட்டம், அனைத்துக் கட்சிக்கூட்டம் என வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாகக் காய் நகர்த்துவது தேவையற்ற சிக்கலையும், பதற்றத்தையும் தமிழகத்தில் உருவாக்கும்.

14 உயிர்களைப் பலிகொண்ட அந்த ஆலையை எதன்பொருட்டும் திறப்பதெனும் பேச்சுக்கே இடமில்லை என்பதுதான் மண்ணின் மக்களின் மனநிலையாக உள்ளது. அதனை உணராது, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதும், கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்துவதும் தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டிப்பார்ப்பதாக உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக மக்கள் போராடும்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கலந்தாலோசிக்காத இந்த அரசு, இப்போது அனைத்துக் கட்சிக்கூட்டத்தைக் கூட்டுவதே வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவான முன்நகர்வாகத்தான் கருதப்படும். தனது கட்டுப்பாட்டிலிருக்கும் காவல்துறை, தூத்துக்குடியில் 14 உயிர்களைப் பறித்தபோது, ‘தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். எனக்கு எதுவும் தெரியாது’ எனக்கூறி வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவாக நின்ற தமிழக முதல்வர், இப்போது மறுபடியும் இத்தகைய படுபாதகச்செயலைச் செய்தால் அது தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும்.

தனக்கிருக்கும் அதிகார நெருக்கத்தையும், பணபலத்தையும் கொண்டு யாரையும் வளைத்துப் போட்டுவிடலாம் எனும் மமதையில் ஆலையை மீண்டும் திறந்துவிடக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாக மத்திய அரசு வரிந்துகட்டி நிற்பதும், அதற்கு ஆதரவாக மாநில அரசு முன்முயற்சிகளை முடுக்கி விடுவதும் வெட்கக்கேடானது. தங்கை ஸ்னோலின் உள்ளிட்ட 14 பேரைக் கண்முன்னே துள்ளத்துடிக்கப் படுகொலை செய்திட்ட அரசுகள் இன்றைக்குத் துளியும் மனச்சான்று இல்லாது ஸ்டெர்லைட் ஆலையின் பக்கம் நிற்கத் துணிவது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஆகவே, தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது அரசின் கொள்கை முடிவென அறிவித்து, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கிற வேதாந்தா குழுமத்தின் முன்நகர்வுகளை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இதற்கு மாறாக, தற்காலச் சூழலைக் காரணமாகக் காட்டி, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சிகள் நடக்குமேயானால் தமிழகம் மீண்டும் போர்க்களமாக மாறும்; தேவையற்றப் பதற்றமும், சட்டம் ஒழுங்குச் சிக்கலும் ஏற்படுமென எச்சரிக்கிறேன்”என்று கூறியுள்ளார்.
https://minnambalam.com/politics/2021/04/26/39/corona-oxygen-sterlite-open-tamilnadu-will-warzone-seeman-warning

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி காணும் திராவிடம் தமிழ்நாட்டை அழிக்க உருவாக்கப்பட்டது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டெர்லைட்: திமுகவின் அணுகுமுறையில் மாற்றமா?

 

spacer.png

நாட்டில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்குவதற்கான வழிவகைகளில் ஒன்றாக, தூத்துக்குடியில் மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலை, ஆக்ஸிஜன் தயாரிக்க தங்களை அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில், தமிழக அரசு இன்று (ஏப்ரல் 26) காலை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது.

இந்த கூட்டத்தில், 'ஸ்டெர்லைட் ஆலையை நான்கு மாதங்களுக்கு ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம்' என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

 

இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் கலந்துகொண்ட கனிமொழி, "உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்த நேரத்தில், ஏப்ரல் 23-ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடத்திய கருத்துக் கேட்பு கூட்டத்தில் கூட, தூத்துக்குடி மக்கள் கடுமையாக எதிர்த்துள்ளார்கள். அவர்களின் எதிர்ப்பையும் நாம் உதாசீனப்படுத்திட முடியாது.

அதேசமயம் தூத்துக்குடி மக்கள் மனிதநேயத்தின் மறுபக்கமாக திகழுபவர்கள் என்பது எனக்குத் தெரியும். அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் - ஒருவருக்கு ஆபத்து என்றால் உடனே ஓடிச் சென்று உதவிட இதயம் கொண்டவர்கள் அந்த மக்கள்.

நாடு முழுவதும் - ஏன், தமிழ்நாட்டிலேயே கூட ஆக்சிஜன் தேவைப்படுகின்ற இந்த நேரத்தில்- ஸ்டெர்லைட் ஆக்சிஜன் பிளாண்ட்டை மட்டும் இயக்கி - மக்களைக் காத்திட ஆக்சிஜன் தயாரிப்பது குறித்து, மனிதநேயத்தின் அடிப்படையில் நாம் எடுக்க வேண்டிய முடிவுதானே தவிர - ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கு அல்ல"என்று பேசினார்.

அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சி என்று திமுக எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுகவின் நிலை கொஞ்சம் கொஞ்சமாக மென்மையாகிறதோ என்ற விமர்சனங்களும், கருத்துகளும் இதை ஒட்டி எழுந்தன.

இதற்கு பதிலளிக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

 

"ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தி.மு.கழகத்தின் சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்களும், கழகத்தின் மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரி கனிமொழி அவர்களும் பங்கேற்று, கழகத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர்.

மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம், அதற்கான மின்சாரத்தை வழங்கலாம் என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இம்முடிவு தற்காலிகமானதுதான்.

தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகும் நச்சு ஆலையான ஸ்டெர்லைட் எப்போதும் எந்தச் சூழலிலும் திறக்கப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்"என்று கூறியிருக்கிறார் ஸ்டாலின்.

https://minnambalam.com/politics/2021/04/26/50/dmk-stand-changes-on-Sterlite-issue-mkstalin-clarified

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிற்கு ஆக்சிஜன் அனுப்பி உதவ தயாராகும் வெளிநாடுகள் - BBC News தமிழ்

 

இந்தியாவுக்கு ஆக்சிஜன் அனுப்பும் சீனா, அமெரிக்கா, பிரிட்டன், சவுதி அரேபியா

 

6 மணி நேரங்களுக்கு முன்னர்

OXYGEN

பட மூலாதாரம், HMO @TWITTER

கொரோனா இரண்டாவது அலையால் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் கிடைக்காமல் இந்திய மருத்துவமனைகள் திணறிக் கொண்டிருக்கின்றன. பல மாநிலங்களில் சுகாதாரக் கட்டமைப்பு முடங்கிப் போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மாநில அரசுகள் மத்திய அரசிடம் உதவி கோரி வருகின்றன.

ஒடிஷா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் இருந்து பிற மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்களில் ஆக்சிஜன் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சில மாநிலங்கள் வெளி நாடுகளில் இருந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்வதற்கும் முயற்சி செய்து வருகின்றன.

இப்படியொரு கடினமான தருணத்தில் சில நாடுகள் இந்தியாவுக்கு ஆக்சிஜனையும் பிற மருத்துவ உபகரணங்களையும் அனுப்பியிருக்கின்றன. வேறு சில நாடுகள் ஆக்சிஜனை அனுப்புவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கூறியிருக்கின்றன.

இதற்காக ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் விமானப்படையைச்ச சேர்ந்த விமானங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு ஆதரவாக சீனா இருக்கும் என இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு 10 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை அடுத்த 7 நாள்களில் வழங்கப் போவதாகவும் சீனத் தூதரகம் கூறியுள்ளது.

வரும் நாள்களில் ஆக்சிஜன் வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு அனுப்ப இருப்பதாக பிரான்ஸ் அதிபர் மக்ரோங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கோரிக்கையைத் தொடர்ந்து அத்தியாவசிய மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் கூடிய விரைவில் அனுப்ப இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

300 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், 600 மருத்துவக் கருவிகள் ஆகியவற்றை இந்தியாவுக்கு அனுப்புவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள ஜெர்மன் பிரதமர் ஏங்கலா மெர்கல் அவசரகால உதவிகளை வழங்கப் போவதாகக் கூறியுள்ளார். ஆக்சிஜன் உற்பத்திக் கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு அனுப்ப ஜெர்மனி திட்டமிட்டிருக்கிறது.

சிங்கப்பூர் அரசு 250 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் உள்ளிட்ட மருத்துவப் பொருள்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. சிங்கப்பூரின் ஷாங்காய் விமான நிலையத்தில் இருந்து மருத்துவப் பொருள்களைக் ஏற்றி வந்த விமானம் மும்பை விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து சேர்ந்தது.

ஐக்கிய அரபு அமீரக அரசு இந்தியாவுக்கு கிரையோஜெனிக் ஆக்சிஜன் டேங்கர்களை அனுப்பி வைத்திருக்கிறது. இந்தியாவுக்கு உதவுவதில் உறுதியாக இருப்பதாக அந்நாட்டில் வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயத் தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

செளதி அரேபிய அரசு இந்தியாவுக்கு கிரையோஜெனிக் ஆக்சிஜன் டேங்கர்களையும் 80 டன் ஆக்சிஜனையும் அனுப்பி வைத்திருக்கிறது. அதானி குழுமம் மற்றும் லிண்டே நிறுவனத்துடன் இணைந்து இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக செளதி அரேபியா கூறியுள்ளது. இது தவிர லிண்டே நிறுவனம் தனியாக 5 ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்களை இந்தியாவுக்கு அனுப்ப இருக்கிறது.

கூடுதலாக 12 கிரையோஜெனிக் ஆக்சிஜன் டேங்கர்களை இந்தியாவுக்கு அனுப்புவதாக அதானி குழும தலைவர் கவுதம் அதானி கூறியுள்ளார். செளதி அரேபியாவின் தம்மாம் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு இவை வர இருக்கின்றன.

கோவிஷீல்டு தடுப்பு மருந்து தயாரிப்பதற்குத் தேவையான பொருள்களை இந்தியாவுக்கு அனுப்ப இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்தியாவுக்கு உதவி செய்வதில் உறுதியாக இருப்பதாக அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடந்த 7 தசாப்தங்களாக இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவை அமெரிக்கா பேணி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

நியூயார்க்கின் கென்னெடி விமான நிலையத்தில் இருந்து 318 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை அமெரிக்கா அனுப்பி வைத்திருக்கிறது.

அசாம் மாநில அரசே நேரடியாக பூடானில் இருந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்யத் திட்டமிட்டிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அந்த மாநில சுகாதார அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

வல்லரசு???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

வல்லரசு???

இலங்கை விவகாரத்தில்  பாம்பின் பல்லை  பிடுங்கிய பின் அடித்து கொன்ற வல்லரசு அது.

எங்கே பார்ப்போம் பாக்கிஸ்தான் அல்லது சீனாவுடன் ஏதாவது........???????அரைத்து சாம்பலாக்கி விடுவார்கள். 

அண்மையில் நாட்டு எல்லையில் கிந்திய இராணுவத்தை கல்லால் எறிந்தும் முட்கம்பிகளால் தாக்கியும் துரத்தியடித்தது சீனா.
 

  • கருத்துக்கள உறவுகள்

நீ அரிசி கொண்டு வா ..

Screenshot-2021-04-27-14-34-17-242-com-a நான் உமி  கொண்டு வாறன்..

Screenshot-2021-04-27-14-35-02-662-com-a

ரெண்டையும் ஒன்டா கலந்து ஊதி ஊதி சாப்பிடுவம் என்ன.?

☺️..😊

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நீ அரிசி கொண்டு வா ..

Screenshot-2021-04-27-14-34-17-242-com-a நான் உமி  கொண்டு வாறன்..

Screenshot-2021-04-27-14-35-02-662-com-a

ரெண்டையும் ஒன்டா கலந்து ஊதி ஊதி சாப்பிடுவம் என்ன.?

☺️..😊

 

வாசிக்காமல்.... கையெழுத்து போட்டு விட்டோம் என்று, திராவிட கட்சிகள் நழுவப் போகின்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நீ அரிசி கொண்டு வா ..

Screenshot-2021-04-27-14-34-17-242-com-a நான் உமி  கொண்டு வாறன்..

Screenshot-2021-04-27-14-35-02-662-com-a

ரெண்டையும் ஒன்டா கலந்து ஊதி ஊதி சாப்பிடுவம் என்ன.?

☺️..😊

பத்து வருடங்களுக்கு பின்னர்: 

நாங்கள் உன்னை என்ன செய்ய சொன்னோம்: ஒட்சிசன் தயாரிக்க

இப்ப நீங்க என்ன செய்கிறீர்கள்?

அது தாங்க இது??

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இந்தியாவுக்கு ஆக்சிஜன் அனுப்பும் சீனா, அமெரிக்கா, பிரிட்டன், சவுதி அரேபியா

ஜேர்மனியில் இருந்து ஒட்சிசன் தயாரிக்கும் இயந்திரங்களை (Mobile)இந்தியா பெற்றுக்கொள்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

பத்து வருடங்களுக்கு பின்னர்: 

நாங்கள் உன்னை என்ன செய்ய சொன்னோம்: ஒட்சிசன் தயாரிக்க

இப்ப நீங்க என்ன செய்கிறீர்கள்?

அது தாங்க இது??

நடந்து முடிந்த தேர்தலில்... வாக்காளருக்கு கொடுத்த பணத்தை எல்லாம்,

இப்ப... “ஸ்டெர்லைட்” ஆலையிருந்து வாங்கியிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் விவகாரம் : அரசியல் தலைவர்களின் கருத்து!

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் விவகாரம் : அரசியல் தலைவர்களின் கருத்து!

இந்தியாவில் கொரோனா நோயாளர்களுக்கு தேவையான ஒக்சிஜன் பற்றாக்குறை நிலைவுகின்ற நிலையில், ஒக்சிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்த தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின்  ‘ ஒக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

இந்த முடிவு தற்காலிகமானதே. தி.மு.க ஆட்சி அமைந்த பிறகும் குறித்த ஆலை எந்த சூழலிலும் திறக்கப்படாது’ எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குறிப்பிடுகையில், தமிழக அரசு ஆலையை தன் பொறுப்பில் எடுத்து ஒக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கு தேவையான பொறியாளர்களை, பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம்  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக அரசின் இந்த முரணான முடிவை ஒவ்வாமையுடன் ஏற்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1212725

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இந்த முடிவு தற்காலிகமானதே. தி.மு.க ஆட்சி அமைந்த பிறகும் குறித்த ஆலை எந்த சூழலிலும் திறக்கப்படாது’ எனத் தெரிவித்துள்ளார்.

ஆலையை திறப்பதுக்கு முதன் முதல்  அனுமதி கொடுத்ததே இந்த திமுக கருணாநிதி சுடாலின் குடும்பம் தான் இப்ப மறுபடியும் வருவம் என்ற ஆட்ச்சி கனவில் சத்தம் இன்றி திறப்புவிழா நடக்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டெர்லைட்டை திறக்க நீதிமன்றம் அனுமதி- அனைத்துக் கட்சிகளின் துரோகம்! 

இந்தியாவில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஆனால் தூத்துக்குடி மக்களுக்கு துரோகம் இழைத்து திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வைத்த கோரிக்கைகள் எதுவும் கருத்தில் கொள்ளப்படவில்லை. மொத்தத்தில் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் வேதானந்தாவுக்கு விலை போனதாக தூத்துக்குடி மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். அதிமுக பாஜக வேதானந்தாவை ஏற்கனவே ஆதரிக்கும் நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை ஒரு போதும் திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று வாக்குறுது கொடுத்த திமுக தங்களுக்கு வரலாற்றுத் துரோகத்தை இழைத்து விட்டதாக தூத்துக்குடி மக்கள் திமுக மீது வெறுப்படைந்துள்ளார்கள்.


ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக நடந்த வழக்கில் நீதிபதி, “நாடு மிகப்பெரிய நெருக்கடியில் இருக்கிறது. இந்த விஷயத்தில் உள்ளூர் மக்களின் நம்பிக்கையை நாம் பெற்றாக வேண்டும். இதில் எவ்வித அரசியலும் இருக்கக் கூடாது. மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய நிலைமை தேசிய நெருக்கடி. எனவே, நாம் தேசத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திப் பிரிவை மட்டும் இயக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்த ஆலையில் எத்தனை தொழிலாளர்கள் பணியாற்றுவார்கள். அதில் யார், யார் இருப்பார்கள் என்பதை நிபுணர் குழு முடிவு செய்யும் என்று நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டார்.

இந்த உத்தரவினையடுத்து ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று தமிழக வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் அனைத்தும் மத்திய அரசுக்கே சொந்தம். அது மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் என்றது. அதையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

வேதானந்தா வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே

இதன் பின்னர் வேதானந்தா நிறுவனத்தின் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே “நாங்கள் ஆக்சிஜன் ஆலையை மட்டுமே திறக்க இருக்கிறோம் கண்காணிப்புக் குழுவில் சுற்றுச் சூழல் ஆர்வலர்களோ பொது மக்களோ இருக்கக் கூடாது. அரசு அதிகாரிகள் மட்டுமே இருக்க வேண்டும். மேலும் 35 டன் திரவ ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்கிறார்கள் ஆனால் 200 டன் திரவ ஆக்சிஜன் வரை நாங்கள் உற்பத்தி செய்வோம். இந்த பணிக்கு 200 ஊழியர்கள் வரை தேவைப்படுகிறார்கள்” என்றார்.


இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஆஜரான காலின் கன்சால்வேஸ் வாதிட்டார். அவர் ஆலையை திறக்க வேண்டும் என்றால் அதை தமிழக அரசின் மூலம்தான் திறக்க வேண்டும். ஆலையை அவர்களாகவே திறக்க அனுமதிக்கக் கூடாது என்று வாதிட்டார். இவைகளை ஏற்க மறுத்த நீதிமன்றம் மருத்துவ தேவைகளுக்காக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஆலையைத் திறக்கலாம். எத்தனை பணியாளர்களை அமர்த்திக் கொள்வது எனப்தை கண்காணிப்புக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும். அதை கண்காணிப்புக் குழு முடிவு செய்யும்.

மொத்தத்தில் திமுக எம்.பி யும் , திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரியவருமான கனிமொழி முன் வைத்த நிபந்தனைகள் எதனையும் நீதிமன்றம் ஏற்கவில்லை. எந்த விதமான தடையும் இன்றி முழு சுதந்திரத்தோடு ஸ்டெர்லைட் இன்னும் சில நாட்களில் திறக்கப்பட அதிமுகவும் மிக முக்கியமான திமுகவும் அதன் எம்,பி கனிமொழியுமே காரணம்.
 

https://inioru.com/ஸ்டெர்லைட்டை-திறக்க-நீதி/

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

ஆலையை திறப்பதுக்கு முதன் முதல்  அனுமதி கொடுத்ததே இந்த திமுக கருணாநிதி சுடாலின் குடும்பம் தான் இப்ப மறுபடியும் வருவம் என்ற ஆட்ச்சி கனவில் சத்தம் இன்றி திறப்புவிழா நடக்குது.

சுடாலின்.... ஆலையின் ஒப்பந்தத்தில், என்ன எழுதியிருக்கிறது... என்று வாசிக்காமல் கையொப்பம் இட்டதாக,  முன்பு கூறியவர். 😎

துண்டு சீட்டையே.... பார்த்து, வாசிக்கத் தெரியாதவரிடம், யார் ஆலையின் ஒப்பந்தத்தை வாசிக்கக் கொடுத்தவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2021 at 12:41, தமிழ் சிறி said:

நடந்து முடிந்த தேர்தலில்... வாக்காளருக்கு கொடுத்த பணத்தை எல்லாம்,

இப்ப... “ஸ்டெர்லைட்” ஆலையிருந்து வாங்கியிருப்பார்கள்.

May be a cartoon of text

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.