Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் புர்கா உட்பட முகத்தை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நிழலி said:

இது ஒரு கடைந்தெடுத்த இனவாத நடவடிக்கை. அதள பாதாளத்தில் செல்லும் தங்கள் இமேஜ் இனை தூக்கி நிறுத்தவும் கொழும்பு துறைமுக நகரம் மீதான சீனாவின் அதிகாரம் தொடர்பான எதிர்ப்புகளை சமாளிக்கவும் மகிந்த சகோதரர்களுக்கு இருக்கும் ஒரே வழி இப்படியான இனவாத நடவடிக்கைகள் மூலம் சிங்கள மக்களை திசை திருப்புதம் மட்டுமே.

வஹாபிசம் வளர்வதையும், கிழக்கு முஸ்லிம் பகுதிகளில் மத அடிப்படைவாதம் வளர்வதையும் ஊக்குவித்ததே இவர்கள் தான். சிங்களம் பலியாடை வளத்து விட்டு இன்று பலி கொடுக்கின்றது. காணி அபகரிப்பு, பெளத்த மயமாக்கல். புலிகள் மீள முனைகின்றனர் என்று சொல்லிச் செய்யும் கைதுகள் போன்ற தமிழர்கள் மீதான நிறுவனப்படுத்தப்பட்ட இனவாதச் செயல்கள் ஒரு புறம், ஜனாசா எரிப்பு, புர்கா தடை, போன்ற செயல்கள் மூலம் முஸ்லிம்கள் மீதான நடவடிக்கை மறுபுறம். 
 

ஜெயபாலனின் கேள்வியில் நியாயம் இருக்கின்றது. ஒன்றில் இந்த கம்பஸை அரசே பொறுபேற்று நடாத்தியிருக்க வேண்டும், அல்லது கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைத்து இருக்க வேண்டும். ஆனால் இவை இரண்டில் எதைச் செய்தாலும் கிழக்கில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களுக்கு சாதகமாக அமைந்து விடும். எனவே அதை இராணுவ கல்லூரியுடன் இணைக்கின்றனர். 

இலங்கை அரசினை நடத்துபவர்கள், இனவாதிகளாக இருப்பதால், உங்கள் பார்வையில் தவறில்லை.

இன்னமும், ஒரு முக்கியமான இஸ்லாமிய அமைப்புகளையோ, அரசியல்வாதிகளோ இதுக்கு எதிராக குரல் கொடுத்ததாக தெரியவில்லையே.

மத மாறுவது வேறு. மாத்துவது வேறு. முதலாவது தனிமனித உரிமை. இரண்டாவது தவறு. அவ்வாறு செய்து, வேறு மதத்தவரை கொலை செய்ய வைப்பது எந்த விதத்திலும் நியாயமானது அல்ல. ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

இந்த கிழக்கு பல்கலைக்கழகம், ஒரு ஜிகாதிகளை உருவாக்கி இருக்கக்கூடிய ஒரு அமைப்பு என்பதே சிங்களவர் மத்தியில் சொல்லப்படுவது.

நான் அதனை ஏற்றுக் கொள்ளாவிடினும், அந்த கட்டிடம், அமைவதுக்கு நிதி வந்தது சவுதியில் இருந்து என்பதும், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி பெறாமல், அரசியல் செல்வாக்கு மூலம், அமைத்துக் கொள்ளப்பட்டது என்பதன் காரணமாக அதனை பல்கலைக்கழகம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. 

இதனை அனுமதித்தால், நாளை ஒரு கொட்டிலை கட்டி, பல்கலைக்கழகம் என்பார்கள், டாக்டர் பட்டமும் கொடுப்பார்கள். 

நோக்கம் தவறானது என்பதால், அதனை அரசு எடுத்ததில் பிழை இல்லை.
 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசின் தேசிய பாதுகாப்பிற்கு சோசல் மீடியா மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. சோசல் மீடியாவை இலங்கை அரசின் அமைச்சரவை எப்போது தடை செய்யப்போகின்றது?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

இலங்கை அரசின் தேசிய பாதுகாப்பிற்கு சோசல் மீடியா மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. சோசல் மீடியாவை இலங்கை அரசின் அமைச்சரவை எப்போது தடை செய்யப்போகின்றது?

இலங்கையின் சமூக பொருளாதார, அரசியல் வளர்ச்சிக்கு சோசல் மீடியா தடையாக இருக்குமானால் அதனை எப்போது வேண்டுமானாலும் தடை செய்யலாம்.

🙂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

மன்னிக்க வேண்டும், ஜனநாயக உரிமைக்கும், பணம் வீசி மத மாற்றபடுத்தலுக்கும் வித்தியாசம் உண்டு.

சவூதி வகாபிச மத உருவேற்றிகளும் வந்து மதம் மாற்றவும்  மட்டக்கிளப்பு பல்கலைக்கழகம் அமைக்கவும், கோடிக்கணக்கான  ரூபா பணமும் ஏன் வந்தது.

உள்ளூர் லெப்பைகள் புளுங்கிக்கொண்டிருப்பதை,  விளங்கி, 'நியாயத்தை கதைப்போமா'.

சன்னி, சியா கொலை வெறி பகை, நமது அப்பாவி உடன்பிறப்புக்களிடையே வேணாமே. 

உருவேத்தி, கொலைகளை செய்து, இன்று இஸ்லாமிய மக்கள் இருப்பையே கேள்விக்குறியாக்கி விட்டார்களே, அதுவா, ஜனநாயக உரிமை.

அரசு, எடுத்த இந்த நடவடிக்கை நியாயமானது. முகத்தினை மறைக்க தேவையில்லை. தலையினை மூடிகட்டுவது மட்டுமே, பண்டைய, இலங்கை இஸ்லாமிய தமிழர் பண்பாடு.

நம்மிடையே கூட சில கிறிஸ்தவ அமைப்புக்கள், இங்கே மதம் மாத்துவதில் வெற்றி பெற்றுள்ளன. அது தவறு என்று, சொன்னால், இல்லை, அது ஜனநாயக உரிமை எனலாமா? 

சுஜமாக மாறுவது வேறு, மாற்றபடுத்தல் வேறு.

கிழக்கே அரபும், தென்புறத்தில், சீனமும், தமிழையும் சிங்களத்தினையும் தூக்கி வீசட்டும் என்ற நிலை வேண்டாமே.

மன்னார் முதலிய வன்னி பகுதியில், சவூதி பணத்தில், இன்று சிறையில் உள்ள ஒருத்தர் போட்ட ஆட்டத்தினையும், வில்பத்து காடழிக்கும் அளவுக்கு போனதையும் பார்த்தோமே.

மறுபுறம், கிழக்கில், அவலத்தில் இருந்த தமிழருக்கு, என்ன வேலைகள் எல்லாம் செய்தோம் என்று, அதே பணத்திமிரில் ஒருவர் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தாரே.

எமக்கு, மதவெறி வேண்டாம், அந்த, அன்பான, சாரம் கட்டின, நானாகள், தம்பிகள் லெப்பைகள், டாதாக்கல், தங்கைகள் தான் வேண்டும். 

Ceylon Muslim - First Islamic Digital Media in Sri Lanka - YouTube

Sri Lankan Moors - Wikipedia

Moor Pic | Sailan Muslim - The Online Resource for Sri Lanka Muslims

 

And click the link below.

http://www.dailynews.lk/sites/default/files/news/2020/03/15/z_p07-All.jpg

All Ceylon Muslim League celebrate international Women day

Where is the face mask?

http://fathimawelfarecentre.lk/wp-content/uploads/2016/02/blog-2.jpg

இந்த ஆடை அணியுமாறு அழுத்தத்துக்கு உள்ளாகும் இலங்கை முஸ்லீம் பெண்கள்.

15,673 Sri Lanka Women Photos and Premium High Res Pictures - Getty Images

படங்கள் தகவல்களுடன் நல்ல விளக்கம் 👍
இதே மாதிரியே முஸ்லிம் பெண்கள் மீதான மூடும் உடை அழுத்தம் தென்கிழக்கு ஆசியா நாடுகளிலும் நடைபெற்றதாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இலங்கை அரசினை நடத்துபவர்கள், இனவாதிகளாக இருப்பதால், உங்கள் பார்வையில் தவறில்லை

அவருடைய கோணல் பார்வை. இலங்கை அரசினை நடத்துபவர்கள் இனவாதிகளாக இருப்பதால் முஸ்லிம் மத அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கிறார் அவர்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

நாளை இலங்கையில் ஒருவர் புத்தபிக்கு போல் வேடமிட்டு பாரிய வன்முறை தாக்குதலில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கூறி மக்கள் மொட்டை அடித்து காவி கட்டிக்கொண்டு பொதுவெளிக்கு வருவதை அரசு தடை செய்யுமா?

புத்த மத்தை சேர்ந்த ஆண்கள் எல்லோரும் மொட்டை அடித்து காவி உடை அணிந்து தான் வீட்டை விட்டுவெளியே வரமுடியும் என்று புத்தமதத்தின் பெயரால் கட்டாயபடுத்தபடவில்லை. புத்தபிக்குகளாக இருப்பவர்கள் மட்டுமே காவி கட்டி மொட்டை அடித்து கொண்டு உள்ளனர். அதே போன்று இந்துக்கள் ஆண்கள் ரிசேட் இல்லாமல் பூநூல் போட்டு கொண்டு தான் வெளியே வர முடியும் என்றோ கிறிஸ்தவ ஆண்கள் பாதிரியார் உடை அணிந்து தான் பொது இடங்களில் வரமுடியம் என்றோ  இல்லை. ஆனால் முஸ்லிம் பெண்கள் எல்லோரும் புர்க்காவால் மூடி தான் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியும். ஆயிரம் வருடங்கள் பிற்பட்ட முறைக்கு பின்னோக்கி  கொண்டு செல்ல  முஸ்லிம் மதத்தின் பெயரால் கட்டாயபடுத்தபடுகிறார்கள்.இந்த பாரிய வேறுபாட்டை விளங்கி கொள்ளுங்கள். இங்கே நாதமுனி படங்களுடன் விளக்கியுள்ளார் முன்னைய முஸ்லிம் பெண்கள் நிலை - இன்றைய அவர்களின் புர்க்கா நிலை.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.