Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் இணையத்தில் பெண்களின் நிலமை...

யாழ் இணையத்தில் பெண்களின் நிலமை! 65 members have voted

  1. 1. யாழ் இணையத்தில் பெண்களிற்கு சம உரிமை இருக்கின்றதா?

    • ஆம்!
      37
    • இல்லை!
      25
    • தெரியவில்லை!
      3

Please sign in or register to vote in this poll.

Featured Replies

அனைவருக்கும் வணக்கம்!

யாழ் இணையத்தில் சில காலங்களாக பெண்கள் மீதான கீழ்வரும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது...

1. தனிப்பட்டவர்களின் வாழ்க்கையை கிளறுதல்

2. தனிப்பட்டவர்களின் வாழ்க்கையை குறிப்பிட்ட ஒரு செய்தித் தலைப்புடன் ஒப்பிட்டு கதைத்தல்

3. கருத்து எழுதும் ஒரு பெண்ணை பல ஆண்கள் சேர்ந்து தாக்குதல்

4. தனிப்பட்ட பெண்ணிற்கு அறிவுரை கூறுவது போல் கூறிக்கொண்டி உண்மையில் பலர் முன்னிலையில் அந்தப் பெண்ணை நையாண்டி செய்தல்

யாழ் இணையத்தில் சில காலங்களாக பொதுப்படையில் பெண்கள் மீது கீழ்வரும் தாக்குதல்கள் நடக்கின்றது....

1. பெண்வர்க்கத்தை நையாண்டி செய்து கவிதை எழுதி ஒட்டுதல்

2. குறிப்பாக உலகச் செய்திகளில், உலகில் எங்காவது ஒரு மூலையில் நடைபெறும் ஆண்கள் சார்பான ஒரு சம்பவத்தை இணைத்துவிட்டு பின் அதை வைத்து பெண்கள் மீது தாக்குதல் செய்தல்

யாழ் இணையத்தில் பெண்கள் மீதான தாக்குதல்கள் நடப்பதால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள்...

1. யாழ் இணையத்தில் பெண்கள் இணைவதற்கு தயக்கம் காட்டுதல்

2. யாழ் இணையத்தில் பெண்கள் கருத்து எழுதுவதற்கு தயக்கம் காட்டுதல்

3. யாழ் இணையத்தில் உள்ள பெண் கள உறவுகள் இணையத்தில் இருந்து விலகிச் செல்லல்

3. யாழ் இணையத்தில் உறுப்பினர்களாக இருக்கும் தனிப்பட்ட பெண்களிற்கு ஏற்படும் மன உலைச்சல்கள் மற்றும் அவமானங்கள்

யாழ் இணையத்தில் பெண்கள் மீதான தாக்குதல்களை நிருவாகம் தடுக்கும் வழிகள்...

1. யாழ்பிரியா தவிர மோகன், வலைஞன், யாழ்பாடி, இராவணன், மதன் மற்றும் இணையவன் அனைவரும் ஆண்கள். இங்கு மட்டறுத்துனர்களின் ஆண்: பெண் விகிதாசாரம் 6:1 என்ற விகிதத்தில் இருக்கின்றது. எனவே, இந்த ஏற்றத்தாழ்வை சமநிலைப்படுத்துவதோடு உடனடியாக இரண்டு பெண் மட்டறுத்துனர்களை யாழ் களத்தில் நியமிக்க வேண்டும். மட்டறுத்துனர்களின் ஆண்:பெண் விகிதாசாரம் சமநிலைப்படுத்தப்படும் வரை இனிமேல் மேலதிக ஆண் மட்டறுத்துனர்களை நியமிக்ககூடாது.

2. பெண்களை பொதுவில் நையாண்டி செய்யும் ஆக்கங்கள் யாழ் இணையத்தில் இணைக்கப்படுவதை தடை செய்தல் அல்லது அவ்வாறு இணைக்கப்பட்டவற்றை அகற்றுதல்

3. யாழ் இணையத்தில் கருத்து எழுதும் பெண்களை நேரடியாக அல்லது மறைமுகமாக தாக்கி எழுதப்படும் கருத்துக்களை அகற்றுதல்

யாழ் இணையத்தில் பெண்கள் மீது நடாத்தப்படும் தாக்குதல்களை தவிர்ப்பதற்கு யாழ்கள பெண்கள் செய்யக்கூடியவை...

1. நீங்கள் தனிப்பட்ட அல்லது பொதுப்படையில் பெண்கள் மீது யாழ் இணையத்தில் தாக்குதல் நடாத்தப்படுவதை அவதானித்தால் அதை நிருவாகத்திற்கு ரிப்போர்ட் மூலம் அறிவித்தல்

2. செய்தித் தலைப்புடன் சம்மந்தப்படாத கருத்துக்கள் எழுதுவதை தவிர்த்தல்

3. அரட்டை களத்தில் கருத்து எழுதும் போது சற்று அவதானமாக இருத்தல். நீங்கள் பகிடியாக எழுதும் பதில் கருத்துக்களே பெண்கள் மீது நையாண்டி செய்யப்படும் கருத்துக்கள் எழுதப்படுவதை ஊக்குவிக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்

தமிழ்த் தேசியத்தை மையப்படுத்தி யாழ் இணையம் செயற்படுவதாக பலர் கூறுகின்றார்கள். ஆனால், தமிழீழத்தில் பெண்களிற்கு கொடுக்கப்படும் கெளரவம், சமத்துவம் யாழ் இணையத்தில் கொடுக்கப்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயம். தமிழ்த்தேசியம் என்று கூறும் போது அங்கு பெண்களின் பங்கு ஆண்களிற்கு சரி சமனாகக் காணப்படுகின்றது. எனவே, யாழ் இணையத்தில் தமிழ்த்தேசியதிற்கு எதிரான கருத்துக்கள் எழுதுவது தடைசெய்யப்பட்டுள்ளது போல் யாழ் இணையத்தில் பெண்களிற்கு எதிரான கருத்துக்கள் எழுதப்படுவதும் தடை செய்யப்படவேண்டும்.

அம்மா, அக்கா, தங்கச்சி, மனைவி, காதலி, மாமி, சித்தி, அத்தை, அம்மம்மா, அண்ணி, பாட்டி, மகள், மருமகள்... என இவர்கள் அனைவருமே பெண்கள்... பெண்கள் மீது யாழ் இணையத்தில் கோழைத்தனமான தாக்குதல்கள் நடாத்தும் ஆண்கள் கருத்து எழுதும்போது இதை மனதில் வைத்துக்கொள்வார்களா?

இப்போதைக்கு இவ்வளவு...

மிகுதி தொடரும்....

நன்றி!

களத்தின் ஆரோக்கியம் கருதி இன்று என்னால் தலைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது! நன்றி!

Edited by கலைஞன்

  • Replies 120
  • Views 12.7k
  • Created
  • Last Reply

ஒருசிலர் ஏதோ எழுதியிருக்கலாம் அதற்காக..பெண்களே கவலை கொள்வதாக தெரியவில்லை ஏன் மாப்பிளை நீங்க போய்....

நான் ஆம் என்றுதான் ஓட்டுப்போட்டேன்..

  • தொடங்கியவர்

காரணம் மற்றும் முக்கியத்துவம் கருதியே இந்த தலைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்ற தனிப்பட்ட தாக்குதல் சம்பவங்களை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாகப் படவில்லை. எனவே, நடைபெற்ற சம்பவங்களை ஆதாரத்துடன் குறிப்பிடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருசிலர் ஏதோ எழுதியிருக்கலாம் அதற்காக..பெண்களே கவலை கொள்வதாக தெரியவில்லை ஏன் மாப்பிளை நீங்க போய்....

நான் ஆம் என்றுதான் ஓட்டுப்போட்டேன்..

ஒரு சிலர் இல்லை தற்போது யாழில் பெண்களை தவறாகவும் சீண்டும் விதத்திலும் கருத்துக்கள் வைப்பவர்கள் அதிகமாகி கொண்டே போகிறார்கள் முன்பும் பல நாரத வேலை செய்து பல பெண்களை யாழ்களத்துக்கு வராம செய்த வீரர்கள் இன்றும் வேறு பெயர்களில் வந்து, இருக்கும் ஒரு சிலரையும் யாழுக்கு வரவிடாம செய்வதுக்கு வெகு ஆவலாக இருக்கிறார்கள்( குறிப்பாக சில விகடமான வர்கள் நாரதர் செய்யும் வேலைகளை செய்து கொண்டு விலகி நிக்கிறார்கள் விகடமாக)

Edited by தீபா

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு எங்குதான் தாக்குதல் இல்லாமல் இருக்கு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பிரச்சனையே அல்ல. (ஆனால் பல பக்கங்களைத் தாண்டப் போவது மட்டும் உறுதி. ) இங்கே யாரும் பால் அடிப்படையில் கருத்தெழுதவில்லை என்பதை உணரமுடியும். தங்களுக்குள்ள தனிப்பட்ட பிரச்சனைகளைத் தீர்க்க சிலர் தலைப்புக்களை உருவாக்கலாம். கருத்துக்கள் எழுதலாம்.

ஆனால் மற்றய களங்களை விட யாழ்களம் தான் அதிகளவு பெண்களை ஊக்குவித்தது. ஊக்குவித்துக் கொண்டும் இருக்கின்றது. ஆண்கள் தங்களுக்குச் சார்பான விடயங்களை உயர்த்துவதும், பெண்கள் தங்களுக்குச் சார்பான விடயங்களை உயர்த்துவதும் என்பதும் புதுமையல்ல. இங்கே மதம் பற்றிய விவாதங்கள் சூட, மதச்சார்பு, சார்பில்லாதவர்கள் தங்களுக்குச் சார்பானவற்றைத் தான் தேடிப்பிடித்து இணைத்தார்கள்.

இது ஒரு விவாதக்களம், எனவே தங்கள் கொண்டிருக்கின்ற கொள்க சரியானது என்பதை ஒவ்வொருவரும் கொள்ளக்கூடும்.

ஆனால் சிலருக்கிடையே தனிப்பட்ட விதத்தில் பிரச்சனை நடப்பது உண்மை. அது தனிப்பட்ட பிரச்சனையாக விடுதலே சரியானது. அதை ஆண்பெண் பிரச்சனையாகப் பெருப்பிப்பது என்பது என்னும் அதிக சிக்கலைத் தான் தூண்டுமே தவிர, வேறு ஒரு வகை நன்மையையும் தராது. தனிப்பட்ட பிரச்சனைகககுரியவர்கள் தங்களைப் பற்றிய தூற்றுதல் கருத்துக்கு REPORT பண்ணுவதற்கான வசதிகள் கூட இக்களத்தில் உள்ளது. அதைப் பாவிக்கலாமே.

நான் அறிந்தவரை இங்கே மட்டறுத்தினர் பால் அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. அவ்வாறன நோக்கம் கொண்டதாகவும் தெரியவில்லை. அவர்களின் மட்டறுத்தல் என்பதும் பால் அடிப்படையை மையப்படுத்தி அமைந்ததல்ல. எனவே சும்மா பிரச்சனைக் கிளப்ப வேண்டும் என்ற மூலமே இதில் தொனிக்கின்றது.

மிகுதிக்கு பிறகு வாறேன்.....:lol:

குறிப்பாக சில விகடமான வர்கள் நாரதர் செய்யும் வேலைகளை செய்து கொண்டு விலகி நிக்கிறார்கள் விகடமாக)

தீபா ..யாரை சொல்லுறீங்க அப்பாவி விகடனையோ..

ஐயோ என்ன கொடுமை சார் இது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் இணையத்தில் பெண்களின் பரிதாப நிலமை..., உடனடிநடவடிக்கை தேவை!

இந்த தலைப்பே போதும் சில ஆண்களுக்கு பெண்களை பரிதாப நிலைக்கு கொண்டுவர?

கலைஞன் நல்லதுக்காக இந்த விடயத்தை தொடங்கினாலும் போட்டு இருக்கும் தலைப்பு இன்னும் கேவலப் படுத்துகிறது இங்கு எந்த பெண்ணும் பரிதாப நிலைக்கு வரவில்லை ஆனா யாழ்களத்தில் பெண்களை இழிவுபடுத்தும் கருத்துக்களை கண்டும் காணாமல் விடும் பரிதாப நிலையில் யாழ்கள விதிமுறைகள் எனபது சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்..............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை பாராளுமன்றம் போல வந்திட்டு யாழ் களம்...

இங்கே ஆண் பெண் பாகுபாடு ஏதும் இல்லை

கருத்துச்சுதந்திரம் எல்லாருக்கும் உண்டு..

என்னோட எழுத்துக்களைப் படித்தால் தெரியும்..தாயையும் பெண்ணையும் நான் மதிக்கிறவன் என்று...

இப்டிடியொரு எழுத்துக்களத்திலே போய் பெண்ணுக்கு சமஉரிமை இல்ல அது இதுன்னு எழுதினா நீங்க சமுதாயத்திலே எப்படி வீறுநடை போடமுடியும்..

தடைகள் எதிரேயில்லை..எங்கள் உள்ளுக்குள் இருக்கிறது..

எழுந்து நிற்க ஏணிதேவையில்லை உன் கால்களே போதும்..

உழைக்க வழியிருந்தும் பிச்சை கேட்பவனையம் பரிதாப்படுபரையும் நான் வெறுப்பவன்..

இது கேட்டுப் பெறுவதல்ல..நாம் எடுத்துக்கொள்வது..

தடையை தடவிக் கேளாதீர்கள் தட்டிக்கேளுங்கள் முடியவில்லையா முட்டிக்கேளுங்கள்..

எங்கள் வீட்டில்;.. என் வீட்டுப் பெண்ணுக்கு கவுரத்தைதரக்கூடிய உரிமைகள் யாவும் தரப்பட்டெ இருக்கிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் பெண்களின் பெயரில் கருத்தெழுதும் ஆண்களால்தான்.பலர் அவர்களத்தான் தாக்குகின்றார்கள்.பிரச்சனை எங்கேயோ இருக்க தயவு செய்து இந்த பெண் பிரச்சனையை பூதாகரமாக்கி விடாதீர்கள். :lol:

  • தொடங்கியவர்

முதலாவது விடயமாக நான் கூறுவது இங்கு ஆரம்பித்து இருக்கும் கருத்துக்கணிப்பு சும்மா ஒரு Formality க்கு போடப்பட்டுள்ளதே ஒழிய இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவு உண்மை நிலலையை எடுத்தியம்பப் போவதில்லை. ஏனெனில், யாழ் களத்தில் ஆண்களே பெரும்பான்மையாய் உள்ளனர்.

இரண்டாவது, இங்கு யாழ் களத்தில் பெண்களிற்கு சம உரிமை உள்ளது, பெண்களிற்கு தகுந்த கெளரவம் வழங்கப்படுகின்றது என பெண்கள் கூறுவதில் நியாயம் இருக்கிறது.(அதற்காக பெண் ஐடியில் இருக்கும் ஆண்கள் எழுதும் கருத்துக்களை கவனத்தில் கொள்ளகூடது) ஆனால், பெண்களிற்கு சம உரிமை யாழ் களத்தில் உள்ளது, பெண்கள் யாழ் களத்தில் கெளவரவத்துடன் நடாத்தப்படுகின்றார்கள், அவர்களிற்கு ஒரு பிரச்சனையும் இல்லை, இந்தத் தலைப்பு விசமத்தனமான முறையில் வேறு ஒரு உள்நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது என ஆண்கள் கூறும் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

மூன்றாவது...

மற்றவர்களின் பதில் கண்டு தொடரும்... :lol:

நன்றி!

யாழ் களத்தில் பெண்கள் கௌரவமாக தான் நடத்தப்படுகின்றார்கள். குறிப்பாக இங்கு பெண்களை பெயர் சொல்லி அழைக்கும் ஆண்கள் மிக மிக குறைவு சகோதரி, அக்கா, தங்கை என்று அழைக்கும் ஆண்கள் தான் அதிகமாக இருக்கின்றார்கள் அத்துடன் யாழ் களத்தில் பெண்களினால் முன்வைக்கப்படும் ஆக்கங்களையும் ஆண்கள் உரிய முறையில் மரியாதையுடன் ஏற்றுக்கொள்கின்றார்கள் பெண்களை ஊக்கப்படுத்துகின்றார்கள், உற்சாகப்படுத்துகின்றார்கள் இன்னும் நிறைய சொல்ல முடியும்.

இந்த தலைப்பை ஒரு அனுபவம் மிக்க ஆண் ஆரம்பித்திருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம்.

நான் ஆம் என்று தான் ஓட்டு போட்டேன். :lol:

பெண்களுக்கு சமவுரிமை..இல்லையா?? :)

ஐயா..இப்ப நாங்க எங்களின்ட(ஆண்) சமஉரிமைக்கு குரல்கொடுக்க வேண்டிய நேரமையா :lol:

உங்க செம ஜோக்தான் போகுதோ? கலைஞா!! ..நீயுமா??

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா... இப்படியும் ஒரு தலைப்பா..!

இங்க மனிசர் கருத்தெழுதப் படுற பாட்டுக்க.. பெண்கள் வேற பரிதாபமா இருக்கினமாம்.. ஆண்கள் பலர் சூழ்ந்து தாக்கினமாம்..!

இந்த நெடுக்காலபோவனை பெண்கள் எல்லாம் சூழ்ந்து தாக்கினதை கலைஞர் சார் காணேல்லையோ..??!

பெண்களுக்கு பரிந்து பேச உலகம் இன்னமும் முண்டி அடிக்குது.. ஆனா ஆண்கள் நிலை..??! பெண்களின் பரிதாபத்துக்கு தனித்தலைப்பு.. ஆனா ஆண்களின் பரிதாபத்தை.. யாரும் ஆண்களே கண்ணெடுத்தும் பாக்கிறாங்களா..??!

களத்தில பெண்களைப் பாருங்க..

யாழ் பிரியா மேம்..!

ஜம்மு மேம்..! (சர்ச்சை இருக்குது ஆணா பெண்ணா என்று)

கறுப்பி மேம்..!

மூக்கி மேம்..!

அனிதா மேம்..!

பிரியசகி மேம்..!

இவள் மேம்..!

இனியவள் மேம்..!

வெண்ணிலா மேம்..!

ரசிகை மேம்..!

ராதா மேம்..!

தீபா மேம்..!

தமிழ்தங்கை மேம்..!

சண்முகி அக்கா..!

தாமரை மேம்..!

தூயா மேம்..!

இன்னும் பெயர் குறிப்பிடாமல்.. பலர்..!

இவ்வளவு பேர் படு பிசியா எழுதிட்டு இருக்காங்க.. இன்னும் இருக்காங்க.. பெயர் சிக்கல்ல..

ஆண்களைப் பாருங்க..

வானவில்

ஈழவன்

தூயவன்

லிசா

டண்

கலைஞன்

குமாரசாமி சார்

விகடகவி

யாழ் வினோ

குளக்காட்டான் சார்

வலைஞன் சார்

சோழியான் சார்

சாத்திரி சார்

யாழ்பாடி சார்

வடிவேலு சார்

கிருபன் சார்

புத்தன் சார்

கந்தப்பு சார்

நாவலர் சார்

தோழர் வசம்பு

நண்பர் சாணக்கியன்

இறைவன் சார்..!

சபேசன் சார்..!

பெயர் சிக்காமல் சிலர்..!

இவ்வளவு பேர்தான் கொஞ்சோண்டாலும் எழுதிறது..! மிச்சாக்கள் சண்டை சச்சரவு என்றா மட்டும் வாறாக்கள்..! :lol::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

name='nedukkalapoovan' date='Jun 27 2007

அடப்பாவிகளா... இப்படியும் ஒரு தலைப்பா..!

இங்க மனிசர் கருத்தெழுதப் படுற பாட்டுக்க.. பெண்கள் வேற பரிதாபமா இருக்கினமாம்.. ஆண்கள் பலர் சூழ்ந்து தாக்கினமாம்..!

இந்த நெடுக்காலபோவனை பெண்கள் எல்லாம் சூழ்ந்து தாக்கினதை கலைஞர் சார் காணேல்லையோ..??!

பெண்களுக்கு பரிந்து பேச உலகம் இன்னமும் முண்டி அடிக்குது.. ஆனா ஆண்கள் நிலை..??! பெண்களின் பரிதாபத்துக்கு தனித்தலைப்பு.. ஆனா ஆண்களின் பரிதாபத்தை.. யாரும் ஆண்களே கண்ணெடுத்தும் பாக்கிறாங்களா..??!

சரி எல்லாம் கிழிஞ்சுது போ! இந்தமனுசனும் முழிச்சிருந்து கண்ணை புடுங்கி இஞ்சை வைச்சாச்சு.சரி எனியென்ன பெட்டிபாயை கட்டிக்கொண்டு எல்லாரும் இஞ்சை வாருங்கோப்பா :lol:

  • தொடங்கியவர்

அட கடவுளே... கடைசியில் இந்த தலைப்பையும் ஆண்கள் Lead பண்ணப் போகின்றார்கள் போல இருக்கின்றது.. பெரிய, பெரிய ஆண் வி.ஐ.பி க்கள் ஏற்கனவே மிகவும் அலேர்ட் ஆகிவிட்டார்கள் போல் தெரிகின்றது...

தாய்க்குலமே இன்னும் மெளனமேன்? தயவுசெய்து துணிந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

நீங்கள் மெளனம் சாதித்தால் உங்களுக்கு உண்மையில் யாழ் களத்தில் பிரச்சனை ஒன்றும் இல்லை என்ற அபிப்பிராயம் வந்துவிடாதா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பை ஒரு அனுபவம் மிக்க ஆண் ஆரம்பித்திருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம்.

யாழ் இணையத்தில் பெண்களின் பரிதாப நிலமை...,

ஒருவேளை உண்மையாக இருந்தால், பாதிக்கப்பட்டிருந்தால் எப்படிங்க இப்படி ஒரு தலைப்பை முன் வைத்து எழுத வருவாங்க :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அட கடவுளே... கடைசியில் இந்த தலைப்பையும் ஆண்கள் Lead பண்ணப் போகின்றார்கள் போல இருக்கின்றது.. பெரிய, பெரிய ஆண் வி.ஐ.பி க்கள் ஏற்கனவே மிகவும் அலேர்ட் ஆகிவிட்டார்கள் போல் தெரிகின்றது...

தாய்க்குலமே இன்னும் மெளனமேன்? தயவுசெய்து துணிந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

நீங்கள் மெளனம் சாதித்தால் உங்களுக்கு உண்மையில் யாழ் களத்தில் பிரச்சனை ஒன்றும் இல்லை என்ற அபிப்பிராயம் வந்துவிடாதா?

தப்பான அர்த்தம் கற்பிக்கிற வகைல தான் இத்தலைப்பு.. வகை செய்கிறது.

ஒரு காலத்தில் புலம்பெயர்ந்த பெண்கள் சிலரால் ஐரோப்பாவில் உருவாக்கப்பட்ட பெண்ணிய அமைப்பு ஒன்று யாழ் களத்தை ஆணாதிக்க களம் என்று சொன்னதாக நண்பர் ஒருவருடன் யாழ் களம் குறித்து கலந்துரையாடிய போது அறியக்கிடைத்தது...!

அதன் மறு பிரவேசமா இத்தலைப்பு..??!

நடைமுறையில் எந்தப் பால் ரீதியான பாகுபாடும் இங்கு கருத்தெழுத தலைப்பிட இல்லை. அப்படி இருக்க.. இப்படி.. ஆண் - பெண் என்ற பாகுபாடு ஏன். அதுவும் புனைபெயரில்.. மறைந்திருந்து கருத்தெழுதும் இடத்தில்.. ஆண்களுக்கு பெண்களுக்கு அச்சம் பரிதாபம் என்பது... வேடிக்கையானதாக உள்ளது..!

ஆனால் எனி ஆண் - பெண் என்ற பாகுபாட்டை இது களத்தில் வளர்க்க வகை செய்யப் போகிறது..

சமூகத்தில் ஆண்களாலும் பிரச்சனை இருக்குது பெண்களாலும் இருக்குது. அதைத்தான் சில தலைப்புக்கள் பெண்களைச் சாடுவது போலவும் சில ஆண்களைச் சாடுவது போலவும் உள்ளன. மற்றும் படி யாழில் ஆண் - பெண் என்ற வேறுபாடின்றி எல்லோரும் கள உறவுகள் தான். சகோதர சகோதரிகள் தான்..!

நமக்கு மட்டும் எல்லாம் பேரப்பிள்ளைகள்..!

நன்றியுடன் நெடுக்ஸ் தாத்தா. :lol:

இந்த நெடுக்காலபோவனை பெண்கள் எல்லாம் சூழ்ந்து தாக்கினதை கலைஞர் சார் காணேல்லையோ..??!

பெண்களுக்கு பரிந்து பேச உலகம் இன்னமும் முண்டி அடிக்குது.. ஆனா ஆண்கள் நிலை..??! பெண்களின் பரிதாபத்துக்கு தனித்தலைப்பு.. ஆனா ஆண்களின் பரிதாபத்தை.. யாரும் ஆண்களே கண்ணெடுத்தும் பாக்கிறாங்களா..??!

களத்தில பெண்களைப் பாருங்க..

யாழ் பிரியா மேம்..!

ஜம்மு மேம்..! (சர்ச்சை இருக்குது ஆணா பெண்ணா என்று)

கறுப்பி மேம்..!

மூக்கி மேம்..!

அனிதா மேம்..!

பிரியசகி மேம்..!

இவள் மேம்..!

இனியவள் மேம்..!

வெண்ணிலா மேம்..!

ரசிகை மேம்..!

ராதா மேம்..!

தீபா மேம்..!

தமிழ்தங்கை மேம்..!

சண்முகி அக்கா..!

தாமரை மேம்..!

இன்னும் பெயர் குறிப்பிடாமல்.. பலர்..!

இவ்வளவு பேர் படு பிசியா எழுதிட்டு இருக்காங்க.. இன்னும் இருக்காங்க.. பெயர் சிக்கல்ல

நெடுக்ஸ் தாத்தா ........ உங்களையும் பெண்கள் தான் தாக்கினவையா ? எத்தனை பெண்கள் ?

எனக்கு தெரிஞ்சு உங்க கூட பெண்கள் விவாதம் பண்ணியிருக்கினம் ஆனால் எங்க உங்களை தாக்கி கதைக்கினம் ?

உங்க கூட விவாதம் பண்ணுற பெண்கள் எண்டால் நான் , சகி , தமிழ் தங்கை ,ஜெனனி (ரசிகை அக்கா- ரசிகை அக்கா நோர்ம்லா கதைப்பா - தாக்கி எல்லாம் கதைக்க மாட்டாங்க) வேற யாரப்பா எனக்கு ஞாபகம் இல்லை .......

சரி அதை விடுவம், நீங்கள் சொன்ன பெண்கள் லிஸ்ட் ல எத்தனை பெண்கள் இருக்கினம் ? இப்ப எத்தனை பேர் வாறவை ? அதச் சொல்ல முடியுமா ?

பெண்கள் பெயரில் வந்து கருத்து எழுதினால் அவையும் பெண்களா ?

எனக்கும் சிலரில் கோவம் ....... ஏனெண்டால் ஒரு தலைப்பில் நான் பெண்களுக்காக கதைச்சால்...... வெறொரு தலைப்பில் நக்கலா எனக்கு பேச்சு விழும் ..... விழுந்திருக்கு,.....! ஆனால் அவையை எதிர்த்து கருத்து வைக்கிற அளவுக்கு தைரியம் கிடையாது எனக்கு !

இந்த விசயத்தில் ஆண்களைப் பாராட்டலாம். யாராவது சீண்டிக் கதைச்சால் திருப்பி பதில் குடுக்கினம். ஆனால் எங்களால் முடியல.... :lol:

அதுக்காக நெடுக்ஸ் தாத்தா நீங்க அப்படி கதைச்சீங்க எண்டு சொல்ல வரல......... உங்க மேல எனக்கு நிறைய மரியாதையும் உண்டு.... ஒரு தலைப்பில் நடப்பதை வேரொரு தலைப்பிற்கு கொண்டு சென்று மற்றவர்களை தாக்கமாட்டீர்கள் அதனால் சொல்லுறன். :P

ஆனால் யாழ்ல நிறைய பெண்கள் இப்ப வாறயில்லை ...... நிறையப் பேர மிஸ் பண்ணுறம்........ தமிழினி அக்கா , ரமா அக்கா , சினேகிதி , மழலை ,(ரசிகை அக்கா- பிஸி),மூக்கி,கீதா, சந்தியா , நித்திலா ,(தூயாவும் வாறது குறைவு )

இதுல மூக்கி அக்கா பெண்களுக்காக கதைச்சவா ...... அதுக்கப்புறம் காணாம்....... பெண்களுக்காக துணிஞ்சு கதைக்கிறவை கொஞ்ச நாளில் காணாமல் போயிருவினம் :)

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவேண்டும் சகோதரன் கலைஞன் அவர்களே!

இங்கு பெண் உறுப்பினர்கள் அதிகம் இருப்பதாக தெரிகின்றது, உங்களால் கூறப்பட்ட அந்தக் குற்றச்சாட்டு சில நாட்களின் முன்பு பெயர்மாற்றம் மூலம் வந்தவர்களினால் இருந்திருக்கலாம்.

ஆனால் இப்போது அப்படிப்பட்ட பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை.

ஆகவே இந்த தலைப்பு தொடராமல் மூடிவிடுவது தான் நல்லது என்று நான் நினைக்கின்றேன்.

இப்போது நூற்றுக்கு மேற்பட்ட விருந்தினர்கள் பார்வையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தத் தலைப்பின்படி நாமே தளத்தின் மதிப்பைக் கெடுக்கின்ற மாதிரியில்லையா?

  • தொடங்கியவர்

நான் ஒரு ஆண் என்பதை முதலில் மாண்புமிகு மகாஜனங்களிற்கு தெரிவித்து கொள்கின்றேன்...

மேலும், இந்த தலைப்பை உருவாக்குமாறு எனக்கு ஒருவரும் ஐடியா தரவில்லை. ஏதுவித பெண்கள் அமைப்புக்களுடனும் எனக்கு எதுவித தொடர்பும் இல்லை. இது எனது மூளையில் சுயமாக உதித்த சிந்தனை!

நான் யாழ்களத்தில் பல பகுதிகளில் கருத்து எழுதாவிட்டாலும், தினமும் பரிமாறப்படும் கருத்துக்களை வாசித்து வருகின்றேன். Based on the Observations - whatever I have seen here - இந்த தலைப்பை ஒட்டியுள்ளேன்.

அதற்காக யாழ் களத்தில் உள்ள எல்லா ஆண்களும் கூடாதவர்கள் என்றோ அல்லது எல்லா பெண்களும் நல்லவர்கள் என்றோ நான் கூறவில்லை. நன்றி!

இங்கு பெண் உறுப்பினர்கள் அதிகம் இருப்பதாக தெரிகின்றது,

அப்படியா ? யார் யார் தொடர்ந்து எழுதுறவர்கள் ? :lol:

இந்த தலைப்பு எதற்காக தொடங்கியதென்று மாப்பு சொல்லி இருக்கார்.

தலைப்பை விட்டு அவரோட எண்ணம் நல்லதே!

(தலைப்பை உறுப்பினர் பிரிவுக்கு மாற்றினால் என்ன?)

ஆனால் புயலில மாட்டின படகு போல தலைப்பு இனி போக போவுது. யாருக்கு வெளிச்சமோ தெரியா எனக்கு இருட்டா தான் இருக்கு!

அனியும் நானும் ஒரே ஆக்கள் எண்டு ஒரு வதந்தி வந்திச்சு!

அது இண்டைக்கு உண்மையோ எண்டு எனக்கே சந்தேகமா கிடக்கு...

ஏனென்றால்..அனியின் கருத்து தான் எனதும்! :P

எனக்கும் சிலரில் கோவம் ....... ஏனெண்டால் ஒரு தலைப்பில் நான் பெண்களுக்காக கதைச்சால்...... வெறொரு தலைப்பில் நக்கலா எனக்கு பேச்சு விழும் ..... விழுந்திருக்கு,.....! ஆனால் அவையை எதிர்த்து கருத்து வைக்கிற அளவுக்கு தைரியம் கிடையாது எனக்கு !

சிலர் வேறு களத்தை பற்றிய கருத்தையே தலையில கொண்டு காவி சுமக்கினம்..பெண்களையும் பழிக்கினம்!

உதாரணம்1 : தாயகபறவைகள் பகுதியில் எழுதிய ஒரு கருத்தினை யாழ் உறவோசையில் மட்டுறுத்தினர் பகுதியில் எழுதியது.

உதாரணம்2: அதே பிரிவில் தா.பறவைகள் பற்றி எழுதியது.

உதாரணம் 3: தா.பறவைகள் பிரிவில் அதை பற்றி நக்கலாக எழுதியது.

.................................

நெடுக்ஸ் அண்ணா, நீங்கள் சொன்ன சில விடயங்கள் சரியே!

யாழ்வினோ சொன்னதும் சரிதான்.

தங்கை,அக்கா எண்டு பழகுவதும் இங்கு தான். அது என்றைக்குமே சந்தோசத்திற்குரிய ஒன்று.

ஆனாலும் களத்தில் சிலர்..பெண்களை எதிரி கட்டுவதும் உண்மை!

காரணம் யாருக்கு வெளிச்சமோ? சத்யமா எனக்கில்லை.

இங்கு விளையாட்டாக சீண்டி கதைப்பது வேறு வேணுமென்று நினைத்து வைத்து பழி வாங்க கதைப்பது வேறு. அப்படி கதைத்து தான் பலரை இழந்து விட்டோம்.

நான் இங்கு பெண்கள் அடிமைபடுத்தபடுகிறார்களோ இல்லை சமமாக கருதவில்லை என்றோ சொல்ல வரவில்லை. ஊக்குவிக்கும் அண்ணாக்கள், நண்பர்களும் இருக்கிறார்கள்.

ஆனா சில சமயங்களில்...சிலரால்..சிலரின் கருத்துக்களால் தாக்கபடுகிறார்கள். தொடக்கம் கூட ஆண்களின் கருத்துக்களாகவே இருக்கின்றது. இப்படி ஆண்கள் பெண்களால் தாக்க தொடங்குவது குறைவு..ஏன் இல்லை என்றே சொல்லலாம்..

இதுவே நம் யாழில் உள்ள வித்தியாசம்..என்று நான் நினைக்குறன்.

வேறென்ன..இதில் பெண் உருவில் உள்ள ஆண்கள் அடக்கமில்லை!! :lol:

Edited by பிரியசகி

அதற்காக யாழ் களத்தில் உள்ள எல்லா ஆண்களும் கூடாதவர்கள் என்றோ அல்லது எல்லா பெண்களும் நல்லவர்கள் என்றோ நான் கூறவில்லை. நன்றி!

அதை உங்களுக்காக இன்னும் ஒருவர் செய்து இருக்கிறார்..! நீங்கள் என்ன நோக்கமாக கொண்டு இந்த பக்கத்தை ஆரம்பித்தீர்களோ தெரியாது... ஆனால் அதை ஒருத்தர் நல்ல கருத்தாளர், கெட்டவர்கள் யார் எண்டு வகைப்படுத்தி தன் காழ்ப்புணர்ச்சிக்கு பயன் படுத்தி தன் இயலாமைக்கு தீனி போட்டு இன்பம் கண்டார்....! அந்த வகையில் மகிழ்ச்சி....!! :P :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.