Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகளான விடுதலைப்புலிகளும், மேற்குலக நாடுகளும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகளான விடுதலைப்புலிகளும், மேற்குலக நாடுகளும்.

இற்றை வரை 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப்புலிகள் ஆரம்பக் கட்டத்தில் கெரில்லாப் போர் மூலம் போராடி வந்து, தற்போது மரபு வழியில் முப்படைகளையும் அதாவது தரைப்படை, கடற்படை, வான்படை ஆகியவற்றை உள்அடக்கி பலம் வாய்ந்ததன் காரணமாக சிறிலங்கா அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் படைச் சமநிலை உருவாக்கியதன் விளைவு போர் நிர்ப்பந்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது.

போர் நிறுத்த ஒப்பந்தம் 2002 ல் உருவாகி ஐந்து வருடங்கள் கடந்தும், ஆறாவது வருடத்தை நோக்கிக் கொண்டிருக்கும் போதும் இதுவரை காலமும் ஒருவித சமாதான உடன்படிக்கையும் , மேற்குலகம் சிறிலங்கா அரசாங்கத்தின் ஏதேச்சைத்தனமான சமாதான நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு எந்தவிதமான அழுத்தங்களையும் கொடுக்காமல், பாராமுகமாக இருந்து வருகின்றது.

எமது விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் மறைந்த தேசக்குரலோன் அன்டன். பாலசிங்கமும், அவரோடு விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளும் அரசாங்கத் தரப்பினரோடும் மேற்குலகம் இனப்பிரச்சனை தீர்வுக்காக எத்தனையோ வட்டமேசை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் விடுதலைப்புலிகள் எவ்வளவோ விட்டுக்கொடுப்போடு சமஷ்டி ஆட்சி முறையை வலியுறுத்தி பேசினார்கள். இந்த சமஷ்டி முறையை விரும்பாத சிறிலங்கா அரசாங்கம் ஒற்றையாட்சியின் கீழ் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்ற தீர்வை முன் வைத்தது. ஆனால்......... இந்த ஐந்து வருட காலத்திலும் எந்த ஒரு தீர்வுப் பொதியையும் முன்மொழியாது காலத்தை வீணடித்து, விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று பிரச்சாரம் செய்து மேற்குலக நாடுகளை நம்ப வைத்தாலும், எமது தலைவர்கள் எமது விடுதலைப்போராட்டத்தின் உண்மையான நிலையை கூறியும் மேற்குலகத்துக்கு செவிடன் காதில் சங்கு ஊதின மாதிரி ஆகியது. இன்று வரை போர்நிறுத்த ஒப்பந்தமும் காகிக வடிவிலேயேதான் இருக்கின்றது.

நடைமுறையில் போர் நிறுத்த ஒப்பந்தம் காலவதியாகிவிட்டது. வீணே விடுதலைப்புலிளை மேற்குலக நாடுகள் அழுத்தத்துக்கு மேல் அழுத்தம் கொடுத்து, அவர்கள் நாடுகளிலே விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்வதிலேயே முனைப்பாக கண்ணும் கருத்துமாய் இருந்திருக்கிறார்கள். இருக்கின்றார்கள் இப்போதும்.

இவ்வளவு தூரம் அரசாங்க பயங்கரவாதமும், மனித உரிமை மீறல்களையும் மேற்குலகம் சற்று கண்டிருக்கிறதே ஒழிய பாரதூரமான அழுத்தங்களை சிறிலங்கா அரசாங்கத்துக்கு கொடுக்காமல் நிதி உதவியை அள்ளி வாரி கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

இன்று கிழக்கு மகாணத்தில் சிறிலங்கா படையினர் விடுதலைப்புலிகளை அழிக்கின்றோம் என்று கூறிக்கொண்டே லட்சக்கணக்கான தமிழர்களின் உடமைகளை சூறையாடியும், அவர்களைக் கொலை செய்தும், அவர்களை அகதிகளாக்கி வருகின்ற வேளைகளில், இந்த மேற்குலகம் தமிழர்களையும், விடுதலைப்புலிகளையும் வேறுபடுத்தவே சிறிலங்கா அரசாங்கத்துடன் சேர்ந்திருக்கிறார்கள் என்பது நிருபணமாக இருக்கின்றது.

முன்னுதாரணமாக வாகரையை இராணுவத்தினர் கைபற்றியபோது அமெரிக்க தூதர் ஓடோடிச்சென்று,அங்கு படையினருடன் கலந்து ஆலோசித்ததும் இதற்கு உதாரணமாகும். மற்றும் இங்கிலாந்து தூதர் சிறிலங்கா துடுப்பாட்ட வீரர்களுடன் சிங்கக் கொடியுடன் புகைப்படம் எடுத்ததும் நிருபணமாகி உள்ளது.

இந்த சமாதான காலத்தில் மேற்குலகப் பிரதிநிதிகள் கொழும்பு வந்து அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்திவிட்டு கிளிநொச்சி சென்று, அங்கும் சமாதானம் விடயமாக பேச்சு வார்த்தை நடாத்தி விட்டு செல்வதுமாக இருக்கின்றது. இதை உன்னிப்பாக கவனிப்போமாக இருந்தால் மேற்குலகத்தின் ஒருசிலரை சிறிலங்கா அரசாங்கத்தின் உளவாளிகளாக இருக்கலாம் என்று எண்ணிப்பார்க்கத் தூண்டுகின்றது.

இவற்றை எல்லாம் உற்று நோக்கினால் மேற்குலக நாடுகளோ அல்லது இந்தியாவோ தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு முன் வருவார்களா என்பதில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்.

அடுத்தகட்ட நிகழ்வுக்கு நகர்ந்து செல்லமுடியாத நிலைக்கு சிறிலங்கா அரசாங்கமும், அதன் அராஜகமான போக்குகளும் காரணமாய் இருப்பதோடு, மேற்குலகுமும் நியாயமான முறையில் உருப்படியான வழியினை முன்மொழியாதது கவலைக்குறியதே

இப்படியிருக்க விடுதலைப்புலிகளும், மேற்குலக நாடுகளின் அழுத்தம் காரணமாக அவர்களும் சற்று அடக்கி வாசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கான மக்கள் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது தினம் தினம் கடத்தல்கள், கொலைகள், கொள்ளைகள் என்று இராணுவத்தாலும், ஒட்டுக்குழுக்களாலும் அனுபவித்துவரும் எம்மக்கள், தமக்கு எப்போ விடிவு வரும் என்று வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றார்கள்.

மேற்குலகில் எமது புலம்பெயர்ந்த மக்கள் பேரணிகள், உண்ணாவிரதங்கள் மேற்கொண்டு சாதித்ததால் இந்த நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஊதுகுழலாக இருக்குமேயொழிய எமது தமிழீழ மக்களுக்கு ஒருவித பயனும் இல்லை என்று நாம் கருதினாலும், புலம் பெயர்ந்த மக்களாகிய நாங்கள் இந்த போராட்டங்களை மேற்குலக நாடுகளில் மனதைத் தளரவிடாது முன்னேடுப்போம். (அடிக்கு மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.)

மேற்குலகம் கண்ணை மூடிக்கொண்டு பேசாமடந்தைகளாக இருப்பதால் என்ன பயன்?

மேற்குலகமே..! மேற்குலகமே இனியும் நாம் உன்னை நம்பி இருப்பதில் எந்தவித பயனும் இல்லை.

வாழ்க தமிழ். வளர்க தமிழீழம்

Edited by கறுப்பி

முக்கிய காலக்கணிப்பு.

திருவிழா ஒன்று உள்ளது :(:huh: அதுவும் உலகம் அறியக்கூடியதாக கொண்டாடவேண்டி உள்ளது :(:lol: எவ்வளவு செலவுசெய்தாலும்.... உலகுக்குக் காட்டவேண்டிஉள்ளது :(:lol: அதுவே இன்றைய உலக... எமது.... யதார்த்தம் :rolleyes::( அதை தவிர்க்கமுடியாமல் உள்ளது. :D

இவ்வாறான மேற்குலகின் கண்மூடித்தனமான போக்கை கண்டு நாமும் கண்முடிவிடக்கூடாது. தொடர்ந்து பிரச்சார முன் எடுப்புகளை செய்ய வேண்டும்

ரணில் அரசில் தொடங்கிய ஒப்பந்தம் சந்திரிக்க அதிகாரத்தில் சீரளிந்து மகிந்தர் மற்றும் ஜே வி பி பிக்குகளின் அதிகாரத்தில் உருக்குலைந்து உள்ளது. இடையில் ரணில் மகிந்தர் ஒப்பந்தம் வேறு வந்தது. இப்போ மங்கள கிழம்பியிருக்கின்றார். எல்ல தரப்பு ஆட்சியாளரையும் கண்டாச்சு ஒரு துரும்பு பயனும் இல்லை. வெளி நாடுகளும் அயல் நாடும் சிங்களமும் ஒன்றை புரிந்து கொண்டுள்ளனர் அதுவானது இழுத்தடிப்பு ஒன்றே போரட்டத்தை சீரளிக்கும் என்பதாகும். அத்தோடு மெல்ல மெல்ல பிரதேசங்களை கைப்பற்றுவதும் சிங்களக்குடியேற்றங்களை செய்வதுமாக சிங்களம் சர்வதேச மறைமுக ஆதரவுடன் தனது ஆக்கிரமிப்பை தெடர்கின்றது.

மனித உரிமை குற்றச்சாட்டுகள் எல்லம் எருமை மட்டில் பெய்த மழைபோலவே மகிந்தருக்கு உள்ளது. இதை சர்வதேசத்துக்கு புரிய வைக்க வேண்டிய கடமை புலம் பெயர் மக்களுக்கு கடமையாக உள்ளது. தொடர்ந்து முயற்சிப்போம்.

தமிழ்மக்களின் சார்பில் இது பொறிக்கப்பட்டதால்...

இதை மொழிபெயர்த்து ஆங்கில தளங்களில் போடவேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகத்தினர் பேசாமடந்தைகளாக இருக்கவில்லை. ஒவ்வொரு நாடுகளிலும் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாகப் பல வருடங்களாக செயற்பட்டு வந்தவர்களை உள்ளே தள்ளி, புலம்பெயர் தமிழ் சமூகத்தைத் தமிழீழத்துக்கு ஆதரவான செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கச் செய்யும் செயல்களை முடுக்கியுள்ளனர்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதன் முதலாய் முதன் முதலாய் எழுதிய ஆக்கத்துக்கு ஊக்கம் தந்த வலைஞனுக்கு நன்றி.

மற்றும் வாசித்து கருத்து சொன்ன netfirend , சுகன் , விகடகவி , கிருபனுக்கும் சேர்ந்த நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் மேலும் உங்கள் ஆக்கங்களை எதிர்ப்பார்க்கின்றோம்.. வாழ்த்துக்கள்.. :D

இது கறுப்பியா எழுதியது?????????? :D:D:D:D:D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது கறுப்பியா எழுதியது?????????? :D:D:D:D:D:D

ஏனுங்கோ நல்லாயில்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:D:D:D கறுப்பியக்கா நீங்க எப்பவில இருந்து இப்பிடி எல்லாம் ஆய்வு செய்ய வெளிக்கிட்டீங்க??????? 2 3 வசனத்தில பதிலெழுதிட்டு போறனீங்க.............................. இந்தளவு திறமைய எங்க ஒளிச்சு வைச்சிருந்தீங்க???????????????????? ஆய்வாளினி கறுப்பியக்கா வாழ்க...................... B) B)

தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகளான விடுதலைப்புலிகளும், மேற்குலக நாடுகளும்.தமிழ் மக்களின் சோகங்களை, பிரச்சனைகளை, கடந்தாகால அண்மை வரலாற்றை இந்தக் கட்டுரை மேற்கோள்களுடன் அழகாக ஒரு கதை போல் கூறுகின்றது. மேற்குலக நாடுகளின் கபடத்தன்மை கட்டுரையில் தெளிவாகச் சுட்டுக்காட்டப்பட்டுள்ளது."இப்படியிருக்க விடுதலைப்புலிகளும், மேற்குலக நாடுகளின் அழுத்தம் காரணமாக சற்று அடக்கி வாசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்..." இவ்வாறு கூறுவது பொருத்தமாகப் படவில்லை. விடுதலைப் புலிகள் எதை அடக்கிவாசிக்கின்றார்கள்? போராட்ட உத்வேகத்தையா? போராட்டத்தின் வெளித்தோற்றத்தையா? அல்லது அறிக்கைகள் விடுவதையா? சரியாக விளங்கவில்லை. விடுதலைப்புலிகள் மீதான அழுத்தங்கள் மூலம் மேற்குலகம் தமிழ் மக்கள் சிறீ லங்கா பேரினவாத அரசு மூலம் அடக்கி ஒடுக்கப்படுவதை உத்தியோகபூர்வமாக ஊக்குவிக்கின்றது என்று கூறியிருக்கலாம். ஏனெனில், உண்மையில் மேற்குலகம் விடுதலைப் புலிகளிற்கல்ல, தமிழ் மக்களிற்கே ஆப்பு வைப்பதற்கு ஓடுப்பட்டுத் திரிகின்றது. சிறீ லங்கா பேரினவாத அரசு கோமாளித்தனமான தீர்வுப்பொதியை தமிழ்மக்களின் தலையில் கட்டிவிடுவதை மேற்குலகம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றது. "மேற்குலகில் எமது புலம்பெயர்ந்த மக்கள் பேரணிகள், உண்ணாவிரதங்கள் மேற்கொண்டு சாதித்ததால் இந்த நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஊதுகுழலாக இருக்குமேயொழிய எமது தமிழீழ மக்களுக்கு ஒருவித பயனும் இல்லை என்று நாம் கருதினாலும்... " தெளிவில்லாமல் இருக்கின்றது. கருத்தில் மயக்கம் ஏற்படாதிருக்க சிறிய வசனங்களாக எழுதப்பட்டுருக்கலாம்."மேற்குலகம் கண்ணை மூடிக்கொண்டு பேசாமடந்தைகளாக இருப்பதால் என்ன பயன்?.. " அதானே? என்ன பயன்? நிறையவே பயங்கள் உள்ளன. ஆனால், அவை எமக்கல்ல! மேற்குலகத்திற்கு!மன்னிக்கவும், பேசா மடந்தைகளாக இருப்பதன் மூலம் நிறையவே பயன்கள் உள்ளது மேற்குலகத்திற்கு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்து சொன்ன சபேசன் ஈழப்பிரியன் பூனைக்குட்டி கலைஞனுக்கு நன்றி.கலைஞன் உங்க விமர்சனத்துக்கு நன்றி. நீங்க எழுதிய கருத்தை உள்வாங்கிக் கொண்டேன்.

."இப்படியிருக்க விடுதலைப்புலிகளும், மேற்குலக நாடுகளின் அழுத்தம் காரணமாக சற்று அடக்கி வாசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்..." இவ்வாறு கூறுவது பொருத்தமாகப் படவில்லை. விடுதலைப் புலிகள் எதை அடக்கிவாசிக்கின்றார்கள்? போராட்ட உத்வேகத்தையா? போராட்டத்தின் வெளித்தோற்றத்தையா? அல்லது அறிக்கைகள் விடுவதையா? சரியாக விளங்கவில்லை.
போர்நிறுத்த ஒப்பந்தம் இன்னும் காகிதவடிவில் இன்னும் இருக்கின்றபடியால் தான் போரை முன்னெடுத்து நடத்த முடியாத காரணத்தை மனதிற்கொண்டு அப்படி எழுதினேன்.

கறுப்பி அக்கா,

இப்பதிப்பு உங்களது ஆக்கம் என்று தெரியாமல் வாசித்துவிட்டு உடனே பாராட்டுத் தெரிவிக்கவில்லை. கவிதையில் மட்டுமல்லாது அரசியல் விடுதலைப்போராட்டம் தொடர்பான சிந்தனையிலும் உங்கள் திறமையை நிரூபித்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.

உலகை.... உலக செய்திகளை நாம் அறிகின்றோம். புலத்தில்.... வாழும் நாட்டு நடப்போடு வாழ... அவர்கள் செய்திகளை வாசிக்க நாம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோ ம் :) உலகு "நம்செய்தியை" வாசிக்குமா... வாசிப்போர் நாமும் சிங்களமும்தான் :rolleyes::D

இவர்கள் தான் அந்தமேற்குலக நாடுகளும் அவர்கள் யனநாயகமும் :D :D

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான சுய ஆக்கம்.....தொடரட்டும் உங்கள் ஆய்வுகள்......இதை வேறு இனையதளங்களில் உள்ளவர்கள் வெட்டி ஒட்டவேனும் நன்றி யாழ் இனையம் என்றும் போடவேனும்

அண்டைக்கு உந்த தலைப்பை பார்த்தனான். வழமை போல் வாசிக்கவில்லை. நாலுபேர் கருத்தெழுதின பிறகுதான் நான் எட்டிப் பாக்கிறது. இன்டைக்கு எட்டிப் பார்த்தால் கறுப்பியக்கா கருத்து. முதலாவது என்டாலும் ஆழமாக சிந்தித்திருக்கிறீங்கள். வாழ்த்துக்கள்.

கப்பி அக்கா உங்கள் ஆய்வு மிகவும் அருமை............கப்பி அக்காவோ என்று நானே கொஞ்ச நேரம் திகைத்து போயிட்டேன் என்றா பாருங்கோ..................பேஷ் பேஷ் அடுத்த ஆயிவு எப்போழுது..........

:D:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்து சொன்ன லிசான் , net friend , புத்தன் , வாசகன் , ஜமுனா வுக்கு நன்றி.

அடுத்த ஆய்வு சில வாரங்களின் பின் நிச்சயம் வரும் யமுனா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.