Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தீவில் ஒரு சீன நகரம் – அகிலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தீவில் ஒரு சீன நகரம் – அகிலன்

Capture-12-696x325.jpg
 6 Views

இலங்கையின், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்ததும், எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பை எதிர் கொண்டதுமான கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம், பாராளுமன்றத்தில் 91  மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மூலத்துக்கு ஆதரவாக 149 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையிலேயே 91 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா அச்சத்தில் முடங்கிக் கிடக்க, மக்களின் கவனம் அந்த அச்சத்தில் இருக்க, பாராளுமன்றத்தில் சட்டமூலத்தை ராஜபக்‌ச அரசாங்கம் இலகுவாக முன்னகர்த்தி விட்டது. கொரோனா அச்சம் இதற்காகவே இந்தக் காலப் பகுதியில் உச்சத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் சில விமர்சனங்கள் உள்ளன.

ஆனால், வாக்கெடுப்பின் போது 150 வாக்குகள் ஆதரவாகக் கிடைத்ததாக பொதுஜன பெரமுன இப்போது அறிவித்திருக்கின்றது. பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பெறுவதற்கு 150 வாக்குகள் அவசியம். இலத்திரனியல் முறையில் நடைபெற்ற வாக்களிப்பின் போது தொழில்நுட்ப குறைபாடுகள் காணப்பட்டதால், 149 எனப் பதிவாகி விட்டது என்ற கருத்தை பொதுஜன முன்னணி இப்போது முன்வைத்திருக்கின்றது.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என சபாநாயகர் அறிவித்திருக்கின்றார். ஆனால், நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டே இறுதி வாக்கெடுப்புக்கு சட்டமூலம் விடப்பட்டது என்பதால், 149 வாக்குகளுடனேயே இதனை நடைமுறைப்படுத்த முடியும். ஆக, மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை என்பது சட்டமூலம் நடைமுறைப்படுத்துவதை எவ்வகையிலும் பாதிக்கப் போவதில்லை.

ஆக, இலங்கையில் தன்னாதிக்கத்தைக் கொண்ட சீனாவின் தீவு ஒன்று உருவாகப் போவது உறுதியாகி இருக்கின்றது. எதிர்க் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. சர்வதேச வல்லரசான  அமெரிக்கா தமது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தது. அண்டை நாடான இந்தியா வெளிப்படையாகப் பேசாவிட்டாலும், மறைமுகமாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது.

இவை அனைத்தையும் தாண்டி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இரண்டு நாள் விவாதத்தின் பின்னர் கடந்த வியாழக் கிழமை சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு, சீனாவுக்கு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நிரந்தரமான ஒரு இடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பல விடயங்களையும் சுட்டிக் காட்டியிருந்தன. முக்கியமாக, தனி நாட்டுக்கு இணையான அதிகாரங்களைக் கொண்டதாக கொழும்புத் துறைமுக நகர ஆணைக் குழுவுக்கான அதிகாரங்கள் உள்ளன. இது இலங்கையின் இறைமைக்கு ஆபத்து என்பதை அவை சுட்டிக் காட்டியிருந்தன.

b-79.jpg

இந்த நிலையில், பாராளுமன்றத்தில் இந்த சட்டமூலம் எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பதையும், பிரதான கட்சிகள் எவ்வாறான தமது பிரதிபலிப்பை வெளிப்படுத்தி இருந்தன என்பதையும் சுருக்கமாகப் பார்ப்போம்.

பாராளுமன்றத்தில் சட்டமூலம் மீதான விவாதம் முடிவடைந்த பின்னர், இரண்டாவது வாசிப்பு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 148 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதன் பின்னர் குழு நிலையில் அரசாங்கத்தினால் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டதுடன், எதிர்க் கட்சியினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுக்கு ஆளும்கட்சி இணங்கவில்லை. இதனால் மூன்று சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுக்கு வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டன. இதன் பின்னர் நடத்தப்பட்ட மூன்றாவது வாசிப்பிலேயே கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான மூன்றாவது வாசிப்பு  பாராளுமன்றத்தில் 91  மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 149 வாக்குகள் கிடைத்ததாக அப்போது அறிவிக்கப்பட்டது. ஆனால், 150 என பொது ஜன பெரமுன இப்போது தெரிவித்து புதிய சர்ச்சை ஒன்றை உருவாக்கியிருக்கின்றது.

கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பில் பலதரப்புக்களினால் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இச் சட்டமூலம் தொடர்பான தனது வியாக்கியானத்தை உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு அனுப்பி வைத்த நிலையில், அதனை சபாநாயகர் கடந்த 18 ஆம் திகதி சபைக்கு அறிவித்தார். உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தில் சட்டமூலத்தில் சில சரத்துக்களை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பும், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும்  நிரூபிக்கப்பட வேண்டுமென தெரிவித்திருந்தது. அத்துடன் திருத்தங்களையும் முன்வைத்திருந்தது. அந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டால், மூன்றில் இரண்டு அவசியமில்லை!

இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் திருத்தங்களை  ஏற்றுக் கொள்வதாக அறிவித்த அரசு, சட்ட மூலம் தொடர்பான விவாதத்தை  கடந்த புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களாக   பாராளுமன்றத்தில் நடத்தியது. இவ்வாறான நிலையிலேயே விவாதத்தின் இறுதி நாளான  வியாழக்கிழமை அதனை நிறைவேற்ற அரசு முயன்ற போது எழுந்த எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.லக்ஷ்மன் கிரியெல்ல சட்டமூலம் தொடர்பில் வாக்கெடுப்பைக் கோராது தமது எதிர்ப்பை பதிவு செய்யுமாறு சபாநாயகரிடம் கோரினார்.

இதற்கிடையில் எழுந்த ஜே.வி.பி. எம்.பி விஜித ஹேரத் சட்டமூலத்தை நிறைவேற்ற வாக்கடுப்பைக் கோரினார். இதனையடுத்து இலத்திரனியல் முறையில்  வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அரச தரப்பும் அரசின் பங்காளிக் கட்சிகளும் சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. எதிர்க் கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தியும் அதன் பங்காளிக் கட்சிகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே .வி.பி., கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி,  மற்றும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான ரிசாத் பதியுதீன் ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர்.

இதேவேளை ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்கெடுப்பில் பங்கேற்காத அதேவேளை, எதிர்க்கட்சிப் பக்கத்தில் உள்ள முஸ்லிம் கூட்டமைப்பு எம்.பி.யான அலிசப்ரி ரகீம் மற்றும் சுயாதீன எம்.பி.யான அத்துரலிய  இரத்தின தேரர் ஆகியோர் சட்ட  மூலத்துக்கு ஆதரவாக  வாக்களித்தனர். 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தது போலவே எதிர்க்கட்சியை சேர்ந்த அரவிந்தகுமார், இஷாக் ரஹ்மான், டயானா கமகே ஆகியோரும் ஆதரவாக வாக்களித்தனர்.

இதன் பின்னர் சட்ட மூலத்திலுள்ள சில சரத்துக்களை  நிறைவேற்ற எதிர்க் கட்சியினர் வாக்கெடுப்புக்களைக் கோரியதுடன், பல சரத்துக்களுக்கு திருத்தங்களையும் முன்வைத்தனர். இந்த திருத்தங்களில் பெருமளவானவை அரசினால் நிராகரிக்கப்பட்டு குறித்த சரத்துக்கள் திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டன.

எதிர்க் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அரச சார்பில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மறுத்துரைத்தார். “கொழும்பு துறைமுக ஆணைக்குழுச் சட்டத்தின் ஊடாக பாராளுமன்றத்துக்கு உள்ள நிதி அதிகாரத்துக்கு ஒரு துளியளவேனும் பாதிப்பு ஏற்படாது. அத்து டன், துறைமுக நகரின் முழுமையான நிதி அதிகாரமும் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே இருக்கும்” என  அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். “நாட்டுக்கு அந்நிய செலாவணி அத்தியாவசியமாகும் என்பதை அனைவரும் அறிவோம். நாட்டின் கடன் சுமையை மேலும் மேலும் அதிகரிக்காது அந்நிய செலாவணியை ஈட்டிக் கொள்வது அவசியம். நாம் மிகவும் போட்டியானதொரு உலகத்தில்தான் வாழ்கிறோம். அந்நிய செலாவணியை ஈட்டிக் கொள்ள வெளிநாட்டு முதலீடுகள் அவசியம். முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக புதிய நிறுவனங்களை உருவாக்க வேண்டும். புதிய உபாய மார்க்கங்கள் அவசியம். கொழும்புத் துறைமுக நகரம் அவ்வாறானதொரு நிறுவனம்” என்பது அமைச்சர் பீரிஸின் கருத்தாக இருந்தது.

இருந்த போதிலும், எதிர்க்கட்சிகள் இதனை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்த கருத்துக்கள் முக்கியமானவை. “தற்போதைய துறைமுக நகர சட்ட மூலமானது 1815 இல் கைச்சாத்திடப்பட்ட கண்டி ஒப்பந்தத்தை விடவும் மிகப்பெரிய காட்டிக்கொடுப்பு” என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

“கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது, இந்நாட்டின் இறையாண்மை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி, அரசியல் சுதந்திரம் ஆகியவற்றுக்கு பெரும் அச்சுறுத்தல் என்பதுடன், மரண அடியாகவும் அமைந்துள்ளது. அரசியலமைப்பை மீறியே குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. சட்ட மூலமொன்றை உருவாக்குவதற்கான நடைமுறை இருக்கின்றது. அதனையும் மீறி வெளிநாட்டு நிறுவனமொன்றின் சட்டத்தரணியே இச்சட்ட மூலத்தை தயாரித்துள்ளார். சட்டமூலத்திலுள்ள சரத்துகளில் 34.6 வீதம் அரசமைப்புக்கு முரணானது என்பது உயர்நீதிமன்றத் தீர்ப்பு மூலம் உறுதியாகின்றது” என்பதையும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

எதிர்க் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலேயே இச்சட்டமூலம்  நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இச்சட்டமூலத்தின்படி துறைமுக நகருக்குச் செல்வதற்கு விசேட அனுமதி பெறப்பட வேண்டும். அங்கு அமெரிக்க டொலர்தான் பயன்படுத்தப்படும். இலங்கையின் வழமையான சட்டங்கள் அங்கு செல்லுபடியற்றதாக இருக்கும். இலங்கையின் வரிச்சட்டங்கள் அங்கு நடைமுறைப்படுத்தப்படாது என்பது உட்பட ஒரு தனிநாட்டுக்குரிய அனைத்து அம்சங்களையும் கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழு கொண்டிருக்கும். இதனைவிட, துறைமுக நகரத்துக்கென கடவுச்சீட்டு ஒன்று தயாரிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளிவரும் தகவல்கள் எந்தளவுக்கு உண்மையானவை என்பது தெரியவில்லை.

பல ஆயிரம் கோடி டொலர்களைச் செலவிட்டு இலங்கைத் தீவின் வரை படத்தையே மாற்றும் வகையில் தனியான ஒரு பாரிய நகரத்தை கடலுக்குள் அமைத்துள்ள சீனா, அதனை நிர்வகிக்கும் அதிகாரத்தை இலங்கைக்கோ மற்றொருவருக்கோ கொடுத்து விட்டுச் செல்லும் என்பது எதிர்பார்க்கக் கூடியதல்ல. அவ்வாறு கொடுத்து விட்டுச் செல்வதென்றால், இதற்காக சீனா செலவிட்ட பெருந் தொகையான பணம், அதற்காக முன்னெடுக்கப்பட்ட பிரயத்தனங்கள் என்பன சீனாவைப் பொறுத்த வரையில் அர்த்தமற்றதாகி விடும். அதனால், அதற்குத் தேவையான சட்ட மூலங்களைக் கொண்டு வருவதற்குத் தேவையான அழுத்தங்களை சீனா நிச்சயமாக ராஜபக்‌ச க்களுக்குக் கொடுத்திருக்கும். அந்தப் பின்னணியிலேயே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.

KKS-Harbour-and-Colombo-Port-project-300

விரும்பியோ விரும்பாமலோ கொழும்புக்கு அருகே சீனாவின் பாரிய நகரம் ஒன்று உருவாகி விட்டது. இங்கிருந்து கொண்டு கொழும்புத் துறைமுகத்தை முழுமையாக உளவு பார்க்க முடியும். அதனைவிட, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் ஆதிக்கத்துக்கும் இது பெரும் சவாலாகப் போகின்றது. அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றன இதற்கு எதிராக முன்னெடுத்த அனைத்து நகர்வுகளும் தோல்வியடைந்து, இலங்கைத் தீவில் சீனாவின் நகரம் ஒன்று உருவாகி விட்டது!

https://www.ilakku.org/?p=50526

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

Bild

அரசனை நம்பி புருஷனை கைவிட்டால் இது தான் கதி

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது ஜென்ம எதிரி முட்டாள், பலமில்லாதவன் என்று யார் உங்களிடம் சொன்னாலும் அவர்களிடத்தில் உங்கள் எதிரியை காட்டிலும் அவதானமாய் இருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, goshan_che said:

உங்களது ஜென்ம எதிரி முட்டாள், பலமில்லாதவன் என்று யார் உங்களிடம் சொன்னாலும் அவர்களிடத்தில் உங்கள் எதிரியை காட்டிலும் அவதானமாய் இருங்கள்.

இவர் வரவர விவேகானந்தர் நினைப்பிலை  திரியிறார். எங்கையாவது பள்ளம் திட்டியிலை சந்திப்பம் தானே 😎

  • கருத்துக்கள உறவுகள்

2 minutes ago, குமாரசாமி said:

இவர் வரவர விவேகானந்தர் நினைப்பிலை  திரியிறார். எங்கையாவது பள்ளம் திட்டியிலை சந்திப்பம் தானே 😎

🤣 ஓம் 🕉. பக்தா….மூச்சை இழுத்து விடு அப்பனே….🤣

  • கருத்துக்கள உறவுகள்

துறை முக நகர விடயத்தில் இலங்கை மிக லாவகமாக செயல்படுகிறது.

சீனா கேட்கும் எதுவும் இலங்கை கொடுக்க முடியாத விடயங்கள் அல்ல.

இலங்கை கொடுக்க விரும்பாத எதையும் சீனா கேட்கப்போவதும் இல்லை.

நேற்று வரை வரைபடத்தில் இல்லாத இடத்தை சீனாவின் செலவில் கட்டி சீனாவிடம் கொடுத்து விட்டு, ஆயுளுக்கும் இந்தியாவுக்கு எதிரான காப்புறுதியை எடுக்கிறது இலங்கை.

Diplomatic master stroke. கடுப்பாகவும், பொறாமையாகவும் இருக்கிறது. நிச்சயம் சிரிப்பாக இல்லை.

இந்தியாவும், அமெரிக்காவும் வாய் மூடி இருப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை.

இறங்குவதெண்டால் இப்போதைக்கு இறங்கி இருக்க வேண்டும். இலங்கையை சீனாவுக்கு விட்டு கொடுக்க அமெரிக்கா முடிவு செய்து விட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

இதற்கான ஆப்பு நிச்சயமாக உண்டு. வரும். ஆனால் விழுந்தாலும் மீசையில் ஒட்டவில்லை என்பதை ஏற்க கொஞ்சம் கடினமான விடயங்களை செய்தாச்சு. அதற்கு கொஞ்சம் மிளகாய் தேசிக்காய் வைத்து கட்டி பாடையில் ஏற்ற உடனடியாக முடியாதல்லவா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, விசுகு said:

இதற்கான ஆப்பு நிச்சயமாக உண்டு. வரும். ஆனால் விழுந்தாலும் மீசையில் ஒட்டவில்லை என்பதை ஏற்க கொஞ்சம் கடினமான விடயங்களை செய்தாச்சு. அதற்கு கொஞ்சம் மிளகாய் தேசிக்காய் வைத்து கட்டி பாடையில் ஏற்ற உடனடியாக முடியாதல்லவா??

உலகத்திலையே முக்கிய தேவை முடிய மேற்குலகை கழட்டி விட்ட பெருமை சிங்கள சிறிலங்காவையே சாரும்.

எல்லாம் நல்லதுக்கே.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

இதற்கான ஆப்பு நிச்சயமாக உண்டு. வரும். ஆனால் விழுந்தாலும் மீசையில் ஒட்டவில்லை என்பதை ஏற்க கொஞ்சம் கடினமான விடயங்களை செய்தாச்சு. அதற்கு கொஞ்சம் மிளகாய் தேசிக்காய் வைத்து கட்டி பாடையில் ஏற்ற உடனடியாக முடியாதல்லவா??

நான் அப்படி நினைக்கவில்லை.

மத்திய கிழக்கில் அதிகம் அமெரிகாவின் ஆளுகைக்கு உட்பட்ட நாடு எது?

இஸ்ரேல். 

இஸ்ரேல் எப்போதாவது தான் அமெரிகாவினால் அடக்கி ஆளப்படுவதாக நினைத்ததுண்டா? இல்லை.

இந்து சமுத்திரத்தில் சீனாவின் இஸ்ரேலாக இலங்கை வருவதில் சீனாவுக்கும், இலங்கைக்கும் ஒரு நெருடலும் இல்லை.

உங்களுக்கும் எனக்கும் இலங்கையில் பலகாலம் ஆங்கில மொழி பயன்பாடு இருந்தமையால் அது உறுத்துவதில்லை. 

இப்போ ஒரு சந்ததிக்கு சீனம் உறுத்தும் பின்னர் அது ஆங்கிலம் போல ஆகிவிடும்.

இலங்கையர் அனைவரும் ஆங்கிலம் போல இன்னொரு இணைப்பு மொழியாக சீனத்தை கற்ற வேண்டி வரும்.

யூகேயில் கூட பலர் பிரெஞ்சை விட்டு சீனம் படிக்கிறார்கள். வேலைவாய்ப்பு எல்லா தடைகளையும் உடைக்கும்.

காலனிய காலம் போலன்றி நவகாலனியம் வித்தியாசமானது. 

சவுதி, இஸ்ரேல், தைவான், ஜப்பான் கூட அமெரிக்காவின் நவ காலனிகள்தான்.

அதே போல் வரப்போகும் சீனாவின் நவகாலனியத்யில் முன் வரிசையில் நிற்கிறது இலங்கை. 

ஆனால் இப்போதும் மேற்கும் இந்தியாவும் இறங்கி ஆடினால் வெல்லலாம். ஆனால் ஏனோ தயங்குகிறார்கள்.

இலங்கையை பொறுத்தவரை அவர்களுக்கு “சொப்பன சுந்தரியாக” இருப்பதில் ஒரு சிக்கலும் இல்லை.

1. தமிழருக்கு சுயாட்சி தனிநாடு கூடாது 

2. இந்திய தலையீட்டை முடிந்தவரை தவிர்க வேண்டும்

3. பெளத்த சிங்கள மேலாண்மையில் தலையிட கூடாது

இவைதான் இலங்கயின் bottom lines . இவை தவிர மிகுதி எல்லாம் up for sale தான்.

இந்த மூன்றும் சீனாவுக்கு தேவையில்லாத விடயங்கள்.

ஆகவே சீனாவும் இலங்கையும் நீண்டகாலம் ஒன்றிய வாழிகளாக நிலைத்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, goshan_che said:

மத்திய கிழக்கில் அதிகம் அமெரிகாவின் ஆளுகைக்கு உட்பட்ட நாடு எது?

இஸ்ரேல். 

இஸ்ரேல் எப்போதாவது தான் அமெரிகாவினால் அடக்கி ஆளப்படுவதாக நினைத்ததுண்டா? இல்லை.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா தேவையா? அல்லது அமெரிக்காவுக்கு இஸ்ரேல் தேவையா என்பது தான் முக்கியம்.

தமது தேவைக்காக  பெரிய பிரித்தானியா இஸ்ரேலை உருவாக்கியது என்பதுதான் வரலாறு என ஒருவர் கூறுகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த துறைமுகநகர். சிங்கப்பூர்  துறைமுகத்தின் வளர்ச்சியை  மட்டம்தட்ட அல்லது வீழ்த்த  சீனாவால்  உருவாக்கப்பட்டதாய் நினைத்தேன்  இது சீனாவுக்கும்  சிங்கபூருக்குமிடையிலான  பொருளாதரப் போட்டியாய் அமைத்தால் இந்தியா...அமெரிக்கா ஏன் கவலைப்படவேண்டும்?மாறாக  மகிழ்ச்சியடையலாம்  என்னெனில்  சில கட்டணங்கள்  குறையலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, goshan_che said:

உங்களுக்கும் எனக்கும் இலங்கையில் பலகாலம் ஆங்கில மொழி பயன்பாடு இருந்தமையால் அது உறுத்துவதில்லை. 

இப்போ ஒரு சந்ததிக்கு சீனம் உறுத்தும் பின்னர் அது ஆங்கிலம் போல ஆகிவிடும்.

இலங்கையர் அனைவரும் ஆங்கிலம் போல இன்னொரு இணைப்பு மொழியாக சீனத்தை கற்ற வேண்டி வரும்.

யூகேயில் கூட பலர் பிரெஞ்சை விட்டு சீனம் படிக்கிறார்கள். வேலைவாய்ப்பு எல்லா தடைகளையும் உடைக்கும்.

வேலைக்காக ஒரு மொழியை கற்பதற்கும்.......இன வளர்ச்சிக்காக ஒரு மொழியை திணிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

அன்று ஏனைய நாடுகள் மீது படையெடுத்தவர்கள் செய்ததை இன்று சீனர்கள் செய்கின்றார்கள் அவ்வளவே.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

இஸ்ரேலுக்கு அமெரிக்கா தேவையா? அல்லது அமெரிக்காவுக்கு இஸ்ரேல் தேவையா என்பது தான் முக்கியம்.

தமது தேவைக்காக  பெரிய பிரித்தானியா இஸ்ரேலை உருவாக்கியது என்பதுதான் வரலாறு என ஒருவர் கூறுகின்றார்.

இதனால்தான் ஒன்றியவாழி என்ற பதத்தை பாவித்தேன். இது ஒரு உயிரியல்பதம்.

ஒட்டுண்ணி ஒரு உயிரி இன்னொரு உயிரியை உறிஞ்சி வாழும் முறை. இதில் ஒன்று இழக்கும், ஒன்று பெறும்.

ஒன்றியவாழிகள் அப்படி அல்ல. ஒன்றுக்கு தேவையானதை மற்றையதும், மற்றையதுக்கு தேவையானதை ஒன்றும் பரஸ்பரம் வழங்கிகொள்ளும். இஸ்ரேல் அமெரிக்க உறவு இதுதான்.

மேற்கின் ஒட்டுமொத்த (அதில் பிரிட்டனுக் அடக்கம்) நலனுக்காக இஸ்ரேல் உருவாக்கபட்டாலும், உருவாகி விரைவிலேயே அது அமெரிக்காவுக்கு வாழ்க்கைபட்டு விட்டது🤣.

3 minutes ago, குமாரசாமி said:

வேலைக்காக ஒரு மொழியை கற்பதற்கும்.......இன வளர்ச்சிக்காக ஒரு மொழியை திணிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

அன்று ஏனைய நாடுகள் மீது படையெடுத்தவர்கள் செய்ததை இன்று சீனர்கள் செய்கின்றார்கள் அவ்வளவே.

இரெண்டுக்குமான வித்தியாசத்தை காலனிய அணுகுமுறைக்கும் நவகாலனிய அணுகுமுறைக்கும் இடையில் இருந்து அறியலாம்.

5 minutes ago, Kandiah57 said:

இந்த துறைமுகநகர். சிங்கப்பூர்  துறைமுகத்தின் வளர்ச்சியை  மட்டம்தட்ட அல்லது வீழ்த்த  சீனாவால்  உருவாக்கப்பட்டதாய் நினைத்தேன்  இது சீனாவுக்கும்  சிங்கபூருக்குமிடையிலான  பொருளாதரப் போட்டியாய் அமைத்தால் இந்தியா...அமெரிக்கா ஏன் கவலைப்படவேண்டும்?மாறாக  மகிழ்ச்சியடையலாம்  என்னெனில்  சில கட்டணங்கள்  குறையலாம்

இது சிங்கபூரின் பலத்தை எவ்வளவு குறைக்கும் என தெரியவில்லை. ஆனால் அதைவிட இது கடல்வழி பட்டுபாதையின் ஒரு சந்தி என்பதே உண்மை. 

இதில் சிங்கபூரை மட்டு படுத்துவது உட்பட பல நன்மைகள் சீனாவுக்கு உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, Kandiah57 said:

இந்த துறைமுகநகர். சிங்கப்பூர்  துறைமுகத்தின் வளர்ச்சியை  மட்டம்தட்ட அல்லது வீழ்த்த  சீனாவால்  உருவாக்கப்பட்டதாய் நினைத்தேன்  இது சீனாவுக்கும்  சிங்கபூருக்குமிடையிலான  பொருளாதரப் போட்டியாய் அமைத்தால் இந்தியா...அமெரிக்கா ஏன் கவலைப்படவேண்டும்?மாறாக  மகிழ்ச்சியடையலாம்  என்னெனில்  சில கட்டணங்கள்  குறையலாம்

ஐரோப்பிய ஒன்றியமும் வட அமெரிக்க நாடுகளும் ஆசியாவில் சீன ஆதிக்கத்தை விரும்புவார்களா? இல்லையேல் இந்திய ஆதிக்கத்தை விரும்புவார்களா??

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

ஐரோப்பிய ஒன்றியமும் வட அமெரிக்க நாடுகளும் ஆசியாவில் சீன ஆதிக்கத்தை விரும்புவார்களா? இல்லையேல் இந்திய ஆதிக்கத்தை விரும்புவார்களா??

 ஐரோப்பிய.ஒன்றிய...வடமெரிக்கா நாடுகளுக்கு...தடையில்லமாலிருத்தால்  யாரும் ஆதிக்கம் செய்யலாம்...ஆனால். எந்த ஆதிக்கமுமற்ற  நிலையையே  விரும்புவார்கள். இது எனது எண்ணம் மட்டுமே. 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

இஸ்ரேலுக்கு அமெரிக்கா தேவையா? அல்லது அமெரிக்காவுக்கு இஸ்ரேல் தேவையா என்பது தான் முக்கியம்.

தமது தேவைக்காக  பெரிய பிரித்தானியா இஸ்ரேலை உருவாக்கியது என்பதுதான் வரலாறு என ஒருவர் கூறுகின்றார்.

மதிய கிழக்கை தனது ஆழுகைக்குள் வைத்திருக்க இஸ்ரேல் அமெரிக்காவுக்குத் தேவை. அதேபோன்று மத்திய கிழக்கில், தனது இருப்பிற்கு இஸ்ரேலுக்கு அமெரிக்கா தேவை. மத்திய கிழக்கின் எண்ணெய் வளம் என்பது அமெரிக்காவின் Dollar உலக Reserve Currency என்கின்ற நிலையை வைத்திருப்பதற்கு தேவை. 

ஆகவே Dollar + United States of America + Israel என்பன இணை பிரியாதன. 

எப்போது மத்திய கிழக்கின் எண்ணை வளம் குன்றுகிறதோ/மத்திய கிழக்கை விட அதிகமாக கச்சா எண்ணை வேறு எங்காவது உற்பத்தியாகிறதோ/எண்ணையை விட வேறு சக்தி அதனை பிரதியீடு செய்கிறதோ அப்போதுதான் இந்தக் கூட்டு உரு மாறும். 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

சரியான பார்வை. ஆனால் இதையும் தாண்டி அமெரிக்காவின் பொருளாதாரமே யூதர்கள் கையில்தான். எனவே எண்ணை வளம் குன்றினாலும் எந்த அமெரிக்க ஜனாதிபதியும் இஸ்ரேலை தூக்கி எறிய முடியாது.

அடுத்து எண்ணை வளம் தேவைபடாது போகினும் சுயஸ் உட்பட்ட கேந்திர முக்கியதுவம் உள்ள இடம் அது.

தவிரவும் அமெரிக்காவின் பைபிள் பெஸ்ட் புனித மண் யூதர் கட்டுப்பாட்டில் இருக்கவே விரும்பும்.

ஆகவே அரபிகளை ஒன்று சேராமல் தடுக்க எப்போதும் மேற்குக்கு இஸ்ரேல் தேவை. எண்ணைக்கு பின்னான காலத்திலும்.

ஈரானின் எண்ணை/ எரிவாயு வளம் இன்னும் 300 வருடங்களுக்கு தாக்கு பிடிக்குமாம். எனவே அது வரை இஸ்ரேலுக்கு  பொங்கு சனி என்கிறீர்கள். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

ஈரானின் எண்ணை/ எரிவாயு வளம் இன்னும் 300 வருடங்களுக்கு தாக்கு பிடிக்குமாம். எனவே அது வரை இஸ்ரேலுக்கு  பொங்கு சனி என்கிறீர்கள். :cool:

2030 க்கு பிறகு யூகேயில் டீசல் பெற்றோல் கார் உற்பத்தியாகாதாம். 50 வருடத்துள் எண்ணை பலத்த சரிவை சந்திக்கும் என்கிறனர்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

சரியான பார்வை. ஆனால் இதையும் தாண்டி அமெரிக்காவின் பொருளாதாரமே யூதர்கள் கையில்தான். எனவே எண்ணை வளம் குன்றினாலும் எந்த அமெரிக்க ஜனாதிபதியும் இஸ்ரேலை தூக்கி எறிய முடியாது.

அடுத்து எண்ணை வளம் தேவைபடாது போகினும் சுயஸ் உட்பட்ட கேந்திர முக்கியதுவம் உள்ள இடம் அது.

தவிரவும் அமெரிக்காவின் பைபிள் பெஸ்ட் புனித மண் யூதர் கட்டுப்பாட்டில் இருக்கவே விரும்பும்.

ஆகவே அரபிகளை ஒன்று சேராமல் தடுக்க எப்போதும் மேற்குக்கு இஸ்ரேல் தேவை. எண்ணைக்கு பின்னான காலத்திலும்.

இது அமெரிக்கா பலமாக இருந்தால் மட்டுமே சாத்தியம். எப்போது US Dollar World's Reserve  Currency என்கின்ற நிலையிலிருந்து கீழிறங்கத் தொடங்குகிறதோ அப்போது அமெரிக்காவின் இறங்குமுகம் ஆரம்பமாகிறது. 

அந்த இறங்குமுகம் ஆரம்பமாகிவிட்டதாகவே தோன்றுகிறது, அமெரிக்காவின் புண்ணியத்திலேயே.

மூன்றாம் உலக யுத்தத்தினை எதிர் கொள்வதற்கு எங்கள் முதலாம் சந்ததி ஆயத்தமாக இருக்க வேண்டும். (ஏற்கனவே ஆரம்பாகி(?😜) அது தோல்வியில் முடிவடைந்துகொண்டிருக்கும் நாட்களில் நாம் இருக்கிறோம் என நம்புகிறேன் 😜)

2 minutes ago, goshan_che said:

2030 க்கு பிறகு யூகேயில் டீசல் பெற்றோல் கார் உற்பத்தியாகாதாம். 50 வருடத்துள் எண்ணை பலத்த சரிவை சந்திக்கும் என்கிறனர்.

அதற்குத்தான் Tesla, Ford ஐ அதி வேகமாக முன்னகர்த்துகின்றனர். 

😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, goshan_che said:

2030 க்கு பிறகு யூகேயில் டீசல் பெற்றோல் கார் உற்பத்தியாகாதாம். 50 வருடத்துள் எண்ணை பலத்த சரிவை சந்திக்கும் என்கிறனர்.

அப்ப வீட்டு குளிருக்கு விறகு தான் எரிக்க வேணும்? 🤣

கோதாரி விழ  பனம் மட்டையும் இஞ்சை இல்லை 😎

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kapithan said:

இது அமெரிக்கா பலமாக இருந்தால் மட்டுமே சாத்தியம். எப்போது US Dollar World's Reserve  Currency என்கின்ற நிலையிலிருந்து கீழிறங்கத் தொடங்குகிறதோ அப்போது அமெரிக்காவின் இறங்குமுகம் ஆரம்பமாகிறது. 

அந்த இறங்குமுகம் ஆரம்பமாகிவிட்டதாகவே தோன்றுகிறது, அமெரிக்காவின் புண்ணியத்திலேயே.

மூன்றாம் உலக யுத்தத்தினை எதிர் கொள்வதற்கு எங்கள் முதலாம் சந்ததி ஆயத்தமாக இருக்க வேண்டும். (ஏற்கனவே ஆரம்பாகி(?😜) அது தோல்வியில் முடிவடைந்துகொண்டிருக்கும் நாட்களில் நாம் இருக்கிறோம் என நம்புகிறேன் 😜)

அதற்குத்தான் Tesla, Ford ஐ அதி வேகமாக முன்னகர்த்துகின்றனர். 

😀

இறங்குமுகம் அல்ல இப்போதைக்கு இழுபறி stalemate என்றுதான் நான் நினைக்கிறேன்.

3ம் உலக போர் இப்போ நடக்கிறது ? உயிரியல் ஆயுதம் மூலம்? என்பது என் அனுமானங்களில் ஒன்று.

12 minutes ago, குமாரசாமி said:

அப்ப வீட்டு குளிருக்கு விறகு தான் எரிக்க வேணும்? 🤣

கோதாரி விழ  பனம் மட்டையும் இஞ்சை இல்லை 😎

ஓமண்ணை இந்த gas boilers பொருத்துவது 2035 ஓட சட்டவிரோதமாம்🤣

பனைமட்டை இருந்தாலும் கொழுத்தேலாது, wood burning stove அதிகம் மாசு தரும் எண்டு அதை இன்னும் விரைவா தடை பண்ண போகினமாம். 

அப்பருக்கு கண்டாவளைல ஒரு காணி இருக்கு. பாப்பம் 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, goshan_che said:

அப்பருக்கு கண்டாவளைல ஒரு காணி இருக்கு. பாப்பம் 🤣

நான்  என்ரை பழைய உறுதியளை தூசு தட்டி வைச்சிருக்கிறன்... எதுக்கும் பாப்பம் 😁

10 minutes ago, goshan_che said:

wood burning stove

முதல்லை குண்டு வெடிக்க வைக்கிறது......மேலை ரொக்கற் விடுறதை நிப்பாட்டச்சொல்லுங்கோ....பூமி கூலாகிடும் 😷

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.