Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Covid questions: கறுப்பு பூஞ்சைத் தொற்று தாக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Covid questions: கறுப்பு பூஞ்சைத் தொற்று தாக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

Covid questions: கறுப்பு பூஞ்சைத் தொற்று தாக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்?Mucormycosis Testing

Mucormycosis Testing ( AP Photo / Mahesh Kumar A )

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Covid question: ௭ன் உறவினருக்கு டயாபடிக் நியூரோபதி (Diabetic Neuropathy) உள்ளது. அவர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ௭டுத்துக்கொள்ளலாமா?

- வீரா (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் சஃபி சுலைமான்
 

பதில் சொல்கிறார் நாகர்கோயிலைச் சேர்ந்த குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி.

``நீரிழிவு என்பது நம் உடலின் ரத்தக் குழாய்களையும் நரம்பு நுனிகளையும் தாக்கக்கூடிய ஒரு நோய். நரம்பு நுனிகளைத் தாக்கும் நிலையைத்தான் டயாபடிக் நியூரோபதி என்கிறார்கள். இதன் அறிகுறிகளாக நரம்பு நுனிகளில், முக்கியமாக கால்களிலும், சிலருக்கு கைகளிலும் வலியோ, மதமதப்போ, உணர்ச்சியின்மையோ, சரும வறட்சியோ வரலாம். கட்டுப்பாடில்லாத ரத்தச் சர்க்கரை அளவுதான் டயாபடிக் நியூரோபதிக்கான முக்கிய காரணம். அதாவது நீரிழிவின் வீரியத்துக்கேற்ப முறையான மருத்துவம் செய்யாமலிருப்பது அல்லது ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைக்காத அளவுக்கு உணவு உண்பது என இந்த இரண்டு காரணங்களால்தான் நியூரோபதி பாதிப்பு அதிகரிக்கிறது.

இந்நிலையில் டயாபடிக் நியூரோபதி உள்ளவர்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா என்றால் நிச்சயம் போட்டுக்கொள்ளலாம். ஆனால் அதற்கு முன் ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். HbA1c எனப்படும் மூன்றுமாத கால சர்க்கரை அளவை 7-க்குள் கொண்டுவர வேண்டும். கூடவே டயாபடிக் நியூரோபதி பாதிப்பையும் கட்டுப்படுத்த சிகிச்சைகள் மேற்கொண்டு, பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்".

கறுப்பு பூஞ்சைத் தொற்று வராமலிருக்க ௭ன்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை?

- வீரா (விகடன் இணையத்திலிருந்து)

``கறுப்பு பூஞ்சையைக் கட்டுப்படுத்த சில விஷயங்கள் மிக மிக முக்கியம். முதல் விஷயம் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக்கொள்வது. அதற்கு நம் உணவில் புரதம் அதிகமிருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கறுப்பு பூஞ்சைத் தொற்றுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு மிக முக்கியமான காரணம் என்பதால் உணவில் அதிகபட்ச அக்கறை அவசியம். ஊட்டச்சத்து குறைவான நபர்களுக்கு கொரோனா தொற்று தாக்கவும் வாய்ப்புகள் அதிகம். அடுத்தது நீரிழிவு உள்ளவர்களுக்கு இயல்பிலேயே நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருக்கும். இவர்களுக்கு பிற தொற்றுகள் பாதிக்கும் வாய்ப்புகளும் அதிகம். இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும்போது, கதவுகளைத் திறந்துவைத்தது போல கறுப்பு பூஞ்சையும் மிக எளிதாக உடலுக்குள் நுழைந்துவிடும். எனவே நீரிழிவு உள்ளவர்கள் உணவில் பரதம் மற்றும் நுண்ணூட்டச்சத்துகள் குறையாமலும், ரத்தச் சர்க்கரை அதிகரிக்காமலும் கவனமாக இருக்க வேண்டும்.

Indian doctor performs extended functional endoscopic sinus surgery on a person suffering from mucormycosis
 
Indian doctor performs extended functional endoscopic sinus surgery on a person suffering from mucormycosis AP Photo/Amit Sharma

அடுத்து கொரோனா தொற்றுக்காக நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு ஆக்சிஜன் செலுத்தும் நிலையில் அந்தக் குழாய்கள், நீர் நிரப்பும் குவளைகள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். வாய் மற்றும் மூக்கின் வழியே இந்தத் தொற்று பரவுவதால் இந்த விஷயங்களை மருத்துவரிடம் கேட்டும் உறுதிபடுத்திக்கொள்ளலாம்"

 

https://www.vikatan.com/news/healthy/how-can-we-prevent-black-fungus-mucormycosis-infection

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்றில் இருந்து மீளும் சிறுவர்களை தாக்கும் பல்லுறுப்பு வீக்க நோய்!

கொரோனா தொற்றில் இருந்து மீளும் சிறுவர்களை தாக்கும் பல்லுறுப்பு வீக்க நோய்!

கொரோனா தொற்றில் இருந்து மீளும் சிறுவர்களுக்கு பல்லுறுப்பு வீக்க நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிறார் நல மருத்துவர், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட சிறுவர்களின் உடலில் நோய் எதிர்பொருளான ஆன்டிஜென் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அதன்காரணமாக அவர்களுக்கு பல்லுறுப்பு வீக்க நோய் ஏற்படுகிறது.
இந்த நோய் ஏற்பட்டால் இதயம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளில் வீக்கம் ஏற்படும். பல்லுறுப்பு வீக்க நோய் உயிர் பறிக்கும் நோய் அல்ல.

எனினும் அந்த நோயால் சிறார்கள் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
கொரோனா தொற்றில் இருந்து சிறுவர்கள் மீண்ட 4 முதல் 6 வாரங்களுக்குப் பிறகு பல்லுறுப்பு வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1218002

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

கறுப்பு பூஞ்சையைக் கட்டுப்படுத்த சில விஷயங்கள் மிக மிக முக்கியம். முதல் விஷயம் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக்கொள்வது. அதற்கு நம் உணவில் புரதம் அதிகமிருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கறுப்பு பூஞ்சைத் தொற்றுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு மிக முக்கியமான காரணம் என்பதால் உணவில் அதிகபட்ச அக்கறை அவசியம்.

அங்கெல்லாம் ஒரு மாஸ்க் போட்டால் ஒரு கிழமைக்கு மாத்துவது இல்லையாமே ?

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 24/5/2021 at 20:20, பெருமாள் said:

அங்கெல்லாம் ஒரு மாஸ்க் போட்டால் ஒரு கிழமைக்கு மாத்துவது இல்லையாமே ?

எங்க? 🙄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, shanthy said:

எங்க? 🙄

இது எங்கத்தையான் நியூஸ்சோ அங்கை :cool:

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

இது எங்கத்தையான் நியூஸ்சோ அங்கை :cool:

நான் நினைச்சேன் பெருமாள் யேர்மனி குடிமக்களை சொல்றாரோ 😀

அண்மையில் தமிழ்க்கடை ஒன்றுக்கு போயிருந்தேன். Kasse வில் இருந்த ஆளினதும் சில பணியாளர்கள் மாஸ்க்கும் ஊத்தையாக இருந்தது. அதுவும் மறுபக்கம் திருப்பி போட்டிருந்தார்கள். அப்படி ஏதாவது செய்தியை பெருமாள் அறிஞ்சிட்டாரோ என்று நினைச்சுப்போட்டன். 😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, shanthy said:

எங்க? 🙄

எனக்கு ஏழரை நடுக்கூறு குட்டு  வாங்கியே தலை புண்ணாகுது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

எனக்கு ஏழரை நடுக்கூறு குட்டு  வாங்கியே தலை புண்ணாகுது 🤣

சரி சரி யாவும் சுபம். கூல் பெருமாள். 😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, shanthy said:

அண்மையில் தமிழ்க்கடை ஒன்றுக்கு போயிருந்தேன். Kasse வில் இருந்த ஆளினதும் சில பணியாளர்கள் மாஸ்க்கும் ஊத்தையாக இருந்தது. அதுவும் மறுபக்கம் திருப்பி போட்டிருந்தார்கள். அப்படி ஏதாவது செய்தியை பெருமாள் அறிஞ்சிட்டாரோ என்று நினைச்சுப்போட்டன். 😀

டொச்சிலை நாலு கிழி கிழிச்சிருக்கலாமே? 🤣

  • கருத்துக்கள உறவுகள்

மற்ற நாடுகளில் கொரோனா உள்ளது ஆனால் கறுப்பு பூஞ்சை இல்லை ஏன் இந்தியாவில் மட்டும் பெருமாள் சொன்ன காரணமும் + அசுத்தமாக இருக்கலாம்.

14 hours ago, shanthy said:

அண்மையில் தமிழ்க்கடை ஒன்றுக்கு போயிருந்தேன். Kasse வில் இருந்த ஆளினதும் சில பணியாளர்கள் மாஸ்க்கும் ஊத்தையாக இருந்தது. அதுவும் மறுபக்கம் திருப்பி போட்டிருந்தார்கள்.

நான் நினைத்தேன் அங்கே எல்லாம் காலை ஒன்று மாலை இன்னொன்று மாஸ்க் பாவிப்பார்கள் என்று 😷

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

டொச்சிலை நாலு கிழி கிழிச்சிருக்கலாமே? 🤣

அட அதை மறந்து போனேன். 😀அடுத்தமுறை கிழிக்கத்தான் வேண்டும். 😀

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

மற்ற நாடுகளில் கொரோனா உள்ளது ஆனால் கறுப்பு பூஞ்சை இல்லை ஏன் இந்தியாவில் மட்டும் பெருமாள் சொன்ன காரணமும் + அசுத்தமாக இருக்கலாம்.

நான் நினைத்தேன் அங்கே எல்லாம் காலை ஒன்று மாலை இன்னொன்று மாஸ்க் பாவிப்பார்கள் என்று 😷

வேலை இடங்களில் மணிக்கு ஒருதடவை மாஸ்க் மாத்த வேணும். அதுவும் உணவுப் பொருட்களுடன் வேலை செய்வோருக்கு அதிக கட்டுப்பாடு. தமிழ்க்கடை களில் ஏனோ கவனமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

டொச்சிலை நாலு கிழி கிழிச்சிருக்கலாமே? 🤣

 

37 minutes ago, shanthy said:

அட அதை மறந்து போனேன். 😀அடுத்தமுறை கிழிக்கத்தான் வேண்டும். 😀

Masks GIFs | Tenor

கையோடை... அந்த மாஸ்க்கையும், பறித்து... கிழித்து விடுங்கள். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, shanthy said:

வேலை இடங்களில் மணிக்கு ஒருதடவை மாஸ்க் மாத்த வேணும். அதுவும் உணவுப் பொருட்களுடன் வேலை செய்வோருக்கு அதிக கட்டுப்பாடு. தமிழ்க்கடை களில் ஏனோ கவனமில்லை. 

அது சர்வதேச தமிழ் கடைகளின் நிலை அக்கா ☹️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.