Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை-தமிழக ஆளுநர் உரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை-தமிழக ஆளுநர் உரை

 
11-6-696x475.jpg
 36 Views

தமிழ்நாட்டில் முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற பிறகு சட்டப்பேரவையின் முதலாவது கூட்டம் இன்று தொடங்கியது. இதையொட்டி தமிழக ஆளுநர் ஆற்றிய உரையில், ஆளும் திமுக அரசின் நோக்கம், எதிர்கால திட்டங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

அதன் முக்கிய அம்சங்களில் ஒனறாக ஈழ தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களையும் சட்டத் திருத்தங்களையும் மேற்கொள்ளுமாறும்  ஒன்றிய அரருக்கு வலியுறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈழத் தமிழர்களுக்கு சம குடிமைசார் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதி செய்திட, இலங்கை அரசை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=52970

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

16 -வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது; கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள்

16 -வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது;  கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள்

 

சென்னை

16 -வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்  உரையுடன் தொடங்கியது.கவர்னர்  தனது உரையை, ``வணக்கம்” என தமிழில் தொடங்கினார். மேலும், ``தமிழ் இனிமையான மொழி. எளிமையான வாழ்க்கையை வாழுங்கள்’’ என்றார்.

தொடர்ந்து  உரையாற்றிய கவர்னர் மேலும்  கூறியதாவது;-

அரசின் ஒவ்வொரு செயலும் சமூகநீதி, ஆண் பெண் சமத்துவம், அனைவருக்கும் பொருளாதார நிதியை அடிப்படையாக கொண்டிருக்கும். மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள் தமிழகம் முழுவதும் மீண்டும் அமைக்கப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தேவைப்படும் உதவிகளுக்கு, பல்வேறு கோரிக்கைகளாக பிரதமரிடம் முதல்வர் முன்வைத்திருக்கிறார்.

ஒன்றிய அரசு வழங்கும் தடுப்பூசியின் ஒதுக்கீடு போதுமான அளவில் இல்லை. தமிழகத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை உயர்த்திட வேண்டும். `உறவுக்கு கை கொடுப்போம்.. உரிமைக்கு குரல் கொடுப்போம்’ என்ற கொள்கைக்கு ஏற்ப ஒன்றிய அரசுடன் நல்லுறவு பேணுவோம்.

விவசாயிகள் நலனை பாதுகாக்க,  வேளாண் உற்பத்தியை பெருக்க,   ஆண்டுதோறும் வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும்.நிதிநிலை குறித்து ஜூலை மாதத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களும், திருத்தங்களும் மேற்கொள்ள மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்

100 ஆண்டுகளை கடந்து நிற்கும் தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டுக் கொள்கை காலத்தை வென்று சமூகநீதியை உறுதி செய்துள்ளது; தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்திட அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.

அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்களுக்கான புதிய காப்பீட்டு திட்டத்தின் பலன்கள் மேலும் உயர்த்தப்படும்.

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும்;  அதை இந்த அரசு உறுதி செய்யும்.

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ் மொழியை இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வலியுறுத்தப்படும்.

கட்சத்தீவை மீட்பது, மீனவர் நலன் பாதுகாப்பு போன்றவற்றுக்கு தீர்வு காண ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என கூறினார்.

சென்னை-கன்னியாகுமரி தொழில் பெருவழியில் புதிய தொழில் நிறுவனங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை மாநகர கட்டமைப்பை உயர்த்த 'சிங்கார சென்னை 2.0' திட்டம் கொண்டுவரப்படும்

ரேஷன் அட்டைக்காக விண்ணப்பிக்கும் அனிவருக்கும் 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டுகள்

தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை வகுக்க நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் குழு அமைக்கப்படும்.

மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பிரச்னைகளில் தமிழக உரிமைகளை பாதுகாத்திட அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.

வெள்ளக் கட்டுப்பாடு முறைகளை வகுக்க அதில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் பேரிடர் மேலாண்மை சுற்றுச்சூழல் நகர திட்டமிடுதல் துறைகளின் வல்லுநர்கள் அடங்கிய சென்னை பெருநகர வெள்ள நீர் மேலாண்மை குழு அமைக்கப்படும்.

திரவ மருத்துவ ஆக்ஸிஜன் வழங்க ரூபாய் 50 கோடி, மூன்றாம் அலை முன்னேற்ற நடவடிக்கைக்கு ரூபாய் 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் அலையை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொண்டுள்ளது

2020-ம் ஆண்டு ஒன்றிய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றப்படும் 

வேலை வாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிக அளவில் ஊக்குவிக்கும் வகையில், பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் மாவட்டம் தோறும் நிறுவப்படும்.

 ``ரகுராம் ராஜன், டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார நிபுணர் ஜான் ட்ரீஸ் , டாக்டர் எஸ் நாராயணன் ஆகியோரைக் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும். குழு உறுப்பினர்கள் பரிந்துரை அடிப்படையில் தமிழக பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்களில் பெருந்திறள் போக்குவரத்து அமைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு.

லோக் ஆயுக்தவுக்கு புத்துயிர் அளிக்கப்படும்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க தொழிலதிபர்கள், நிதித்துறை வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். 

திருநங்கைகள் வேலைவாய்ப்பு பெறுவதற்கும், தொழில் தொடங்குவதற்கும் திறன் பயிற்சி அளிக்கப்படும்.

குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்ய இலக்கு சார் திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாடு சுற்றுலாவை மேம்படுத்த நடப்பாண்டில் பெருந்திட்டம் ஒன்று வெளியிடப்படும்.

OBC இடஒதுக்கீட்டில் தற்போதைய வருமான வரம்பினை ரூ.25 லட்சமாக உயர்த்த மத்திய அரசுக்கு கோரிக்கை.

முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தவும், தேவையான அனுமதியை விரைந்து வழங்குமாறும் கேரள அரசையும், ஒன்றிய அரசையும் தமிழக அரசு வலியுறுத்தும்.

அரசுப் பணிகளில் ஆதி திராவிடர் மற்றும் பழக்குடியினருக்கான நிரப்பப் படாத காலியிடங்கள் சிறப்பு நியமனங்கள் மூலம் நிரப்பபடும்.

எல்லாருக்கும் எல்லாம் என்ற மாபெரும் சமூக தத்துவத்தின் அடிப்படையில் அனைவருக்குமான அரசாக இந்த அரசு இயங்கும், ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் மக்களின் அரசாக நடைபோடும்

மதுரவாயல் சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் விரிவுபடுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசால் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும், முழுமையாக பயனளிப்பதை இந்த அரசு உறுதி செய்யும்

வங்கிகள் உட்பட அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை இணை அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும்; இதற்காக அரசியலமைப்பு சட்டப்பிரிவு 343ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்துவோம் என கூறினார்.

https://www.dailythanthi.com/News/TopNews/2021/06/21114020/Highlights-of-the-Governors-speech.vpf

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

`நீட் தேர்வை ரத்துசெய்வோம் என்றார்கள், இன்று?!’-ஆளுநர் உரையில் இடம்பெறாதவற்றைப் பட்டியலிட்ட பழனிசாமி

சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

`பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் அறிவிப்பை வெளியிட்டார்கள். அது குறித்து ஆளுநர் உரையில் எதுவும் இடம்பெறாதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது’ - எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சிங்காரச் சென்னை 2.0, பொருளாதார ஆலோசனைக்குழு, லோக் ஆயுக்தாவுக்குப் புத்துயிர், மீண்டும் உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இன்றைய ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் உரை குறித்து கலைவாணர் அரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரை பெரும் ஏமாற்றம் அளிக்கிறது” என்றார்.

சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
 
சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

இது தொடர்பாக மேலும் அவர் பேசுகையில், ``நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிய தி.மு.க-வின் நிலைப்பாடு தற்போது மாறியுள்ளது. ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லாதது பெருத்த ஏமாற்றமாக இருக்கிறது. தேர்தல் வரும்போது ஒரு பேச்சு, இப்போது ஒரு பேச்சாக இருக்கிறது. தேசிய வங்கிகளில் மாணவர்கள் வாங்கிய கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என தி.மு.க தெரிவித்திருந்தது. அது குறித்து ஆளுநர் உரையில் எதுவும் இல்லை.

 

தி.மு.க ஆட்சி அமைந்து ஒரு மாதமாகியும் விவசாயக் கடன் ரத்து செய்த ரசீது வழங்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் அறிவிப்பை வெளியிட்டார்கள். அது குறித்து ஆளுநர் உரையில் எதுவும் இடம்பெறாதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

சுயஉதவிக் குழுக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றனர். அது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை உயர்த்துவது குறித்து ஆளுநர் உரையில் எந்த அறிவிப்பும் இல்லை. கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் குறித்தும் ஒரு வரிகூட ஆளுநர் உரையில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் உரிமைத் தொகை வழங்குவது குறித்தும் இந்த உரையில் இடம்பெறவில்லை. கொரோனா பரவலை திமுக அரசு முறையாகக் கையாளவில்லை. கிராமப்புறங்களில் கடுமையாக உயர்ந்திருக்கிறது.

சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
 
சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மாநகராட்சி மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கு பாசிட்டிவ் என வந்தது. அவருக்குச் சந்தேகம் இருந்ததால், தனியாரின் ரத்த மாதிரி பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு நெகட்டிவ் என வந்தது. பரிசோதனைகளில் தவறு நடக்கிறது. சாதாரண மக்கள் எப்படி மீண்டும் தனியாரிடம் பரிசோதனை செய்வார்கள்?” என்றார் பழனிசாமி. இந்தச் செய்தியாளர் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டனர்.

 

https://www.vikatan.com/government-and-politics/politics/opposition-leader-edapadi-palanisamy-slams-dmk-regarding-governor-speech

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ சைனா உள்ளவர அங்குள்ள் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நினைக்கிறார்களோ என தோன்றுகிறது இருந்தாலும் இந்திய  குடியுரிமையை பெற்று அங்கு  சுதந்திரமாக வாழலாமா ( ஐரோப்பிய நாடுகள் போல் வீடுகள் தோட்டங்கள் காணிகள் வாங்கி ??

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எனக்கென்னமோ சைனா உள்ளவர அங்குள்ள் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நினைக்கிறார்களோ என தோன்றுகிறது இருந்தாலும் இந்திய  குடியுரிமையை பெற்று அங்கு  சுதந்திரமாக வாழலாமா ( ஐரோப்பிய நாடுகள் போல் வீடுகள் தோட்டங்கள் காணிகள் வாங்கி ??

இப்போ அங்கே சில அங்கீகரிக்கபட்ட குடிமனைகள் வாங்கலாம். ஆனால் விவசாய நிலம், இதர சொத்து வாங்க முடியாது என நினைக்கிறேன்.

குடியுரிமை கிடைத்தால் - ஆதர் அட்டை, ரேசன் நிவாரணங்கள். கல்வியில் இட ஒதுக்கீடு கிடைக்க வழி கிடைக்ககாலம். முகாமில் இருப்பவர்கள் அடுத்த தலைமுறையாவது ஒப்பீட்டளவில் இந்திய குடிமகனாக, கெளரவமாக வாழலாம்.

மேற்கில் உள்ள முன்னாள் புகலிட கோரிக்கையாளர் நிலைக்கு வர முடியாது.

 

8 hours ago, உடையார் said:

 ``ரகுராம் ராஜன், டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார நிபுணர் ஜான் ட்ரீஸ் , டாக்டர் எஸ் நாராயணன் ஆகியோரைக் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும். குழு உறுப்பினர்கள் பரிந்துரை அடிப்படையில் தமிழக பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

👆🏼இது ஒரு மாநில அரசு இதுவரை செய்யாத விடயம் என நினைகிறேன். குறிப்பாக ராஜன் அமெரிக்காவில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி பொறுப்புக்கு வந்தவர். பின்னர் விலகி போனவர். மோடியிடன் லடாய்.

தமிழக அரசு எவ்வளவு பொருளாதார சுதந்திரம் உடையது என்பதை இது காட்டுகிறது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டிலிருந்தபடி இன்னொருநாட்டில் புகலிடம் கோரியவர்களை தாயகம் திரும்புங்கள் என்று கூற எனக்கு எந்த உரித்துமே கிடையாது.

ஆனால் தகர கொட்டகைகளிலும் சொற்ப வருமானத்துடனும்  பல தசாப்தங்களாக அங்கு வாழ்ந்தும் குடியுரிமையும் இன்றி ஏழ்மையிலும் எந்தநேரமும் மத்திய மாநில அரச காவல்துறையின் கண்காணிப்பிலும் அகதி என்ற வசைபாடகளுடனும் வாழ்வதைவிட தற்கால சூழ்நிலைகளில் ஈழ அகதிகள் தாயகம் திரும்புவது சிறந்தது என்றே நினைக்கிறேன்.

ஆக குறைந்தது தமிழர் பிரதேசங்களை முற்றுமுழுதாக ஆக்கிரமிக்கும் துல்லியமான திட்டமிடலுடன் செயல்படும் சிங்கள முஸ்லீம்களின் குடியேற்றத்தையாவது தடுக்கலாம்.

தாயகம் திரும்பினால் வாழ்வுதரம் பாதிக்கப்படும் என்று சொல்லுமளவிற்கு இந்தியாவில் அவர்கள் அதி உச்ச வாழ்வை அனுபவிப்பதாகவும் தெரியவில்லை. 

நெருக்கடி காலத்தில் உயிர் பாதுகாப்பு தந்த தமிழக மண்ணுக்கு சிரம் தாழ்ந்த வணக்கமும் நன்றியும் சொல்லி தாயகம் திரும்பினால்  எம் இனத்தின் விகிதாசாரத்தை கணிசமான அளவு சடுதியாக அதிகரித்து சிங்களவனுக்கும் முஸ்லீமுக்கும் ஒரு நெருக்கடி கொடுக்கலாம், சொந்த மண்ணில் இருக்கிறோம் என்ற நிம்மதியும் கிடைக்கலாம்.

திரும்புவதும் திரும்பாததும் அவர்கள் விருப்பம் இது கருத்து மட்டுமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
51 minutes ago, valavan said:

வெளிநாட்டிலிருந்தபடி இன்னொருநாட்டில் புகலிடம் கோரியவர்களை தாயகம் திரும்புங்கள் என்று கூற எனக்கு எந்த உரித்துமே கிடையாது.

ஆனால் தகர கொட்டகைகளிலும் சொற்ப வருமானத்துடனும்  பல தசாப்தங்களாக அங்கு வாழ்ந்தும் குடியுரிமையும் இன்றி ஏழ்மையிலும் எந்தநேரமும் மத்திய மாநில அரச காவல்துறையின் கண்காணிப்பிலும் அகதி என்ற வசைபாடகளுடனும் வாழ்வதைவிட தற்கால சூழ்நிலைகளில் ஈழ அகதிகள் தாயகம் திரும்புவது சிறந்தது என்றே நினைக்கிறேன்.

ஆக குறைந்தது தமிழர் பிரதேசங்களை முற்றுமுழுதாக ஆக்கிரமிக்கும் துல்லியமான திட்டமிடலுடன் செயல்படும் சிங்கள முஸ்லீம்களின் குடியேற்றத்தையாவது தடுக்கலாம்.

தாயகம் திரும்பினால் வாழ்வுதரம் பாதிக்கப்படும் என்று சொல்லுமளவிற்கு இந்தியாவில் அவர்கள் அதி உச்ச வாழ்வை அனுபவிப்பதாகவும் தெரியவில்லை. 

நெருக்கடி காலத்தில் உயிர் பாதுகாப்பு தந்த தமிழக மண்ணுக்கு சிரம் தாழ்ந்த வணக்கமும் நன்றியும் சொல்லி தாயகம் திரும்பினால்  எம் இனத்தின் விகிதாசாரத்தை கணிசமான அளவு சடுதியாக அதிகரித்து சிங்களவனுக்கும் முஸ்லீமுக்கும் ஒரு நெருக்கடி கொடுக்கலாம், சொந்த மண்ணில் இருக்கிறோம் என்ற நிம்மதியும் கிடைக்கலாம்.

திரும்புவதும் திரும்பாததும் அவர்கள் விருப்பம் இது கருத்து மட்டுமே.

நிதர்சனமான கருத்து. உங்கள் கருத்தோடு நானும் உடன்படுகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.