Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கொங்குநாடு".. கொளுத்திப்போட்டது யாரு.. முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் அரசு..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"கொங்குநாடு".. கொளுத்திப்போட்டது யாரு.. முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் அரசு..!

Velmurugan PUpdated: Sat, Jul 10, 2021, 17:54 [IST]

"மத்திய அரசை" "ஒன்றிய அரசு" (Union of India என்பதன் தமிழ்ப் பதம் அது) என திமுகவினர் கூறி வருவதால் அதிருப்தியில் உள்ள மோடி அரசு, அதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாகவும் . தமிழகத்தின் மேற்கு பகுதியான கொங்கு மண்டலத்தை " கொங்கு நாடு " என்ற பெயரில் தனி யூனியன் பிரதேசமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை துவங்கியுள்ளதாகவும் இன்று காலை பிரபல நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது (அப்படி ஒரு திட்டம் மத்திய அரசிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

பிரபல நாளிதழ்

'மத்திய அரசை' 'ஒன்றிய அரசு' (Union of India என்பதன் தமிழ்ப் பதம் அது) என திமுகவினர் கூறி வருவதால் அதிருப்தியில் உள்ள மோடி அரசு, அதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாகவும் . தமிழகத்தின் மேற்கு பகுதியான கொங்கு மண்டலத்தை ' கொங்கு நாடு ' என்ற பெயரில் தனி யூனியன் பிரதேசமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை துவங்கியுள்ளதாகவும் இன்று காலை பிரபல நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது (அப்படி ஒரு திட்டம் மத்திய அரசிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை).

கொங்கு நாடு

மேலும் தமிழக சட்டசபையில், ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை களங்கப்படுத்தி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் உறுப்பினர் ஈஸ்வரன் பேசியது மத்திய அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும், 90 சட்டசபை தொகுதிகளுடன் கொங்கு நாடு என்ற பிராந்தியத்தைப் பிரித்து அதை புதுச்சேரி போல தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தனிமாநில கோரிக்கை

மறுபக்கம் ஒரு குரூப் 'வாடகை சைக்கிளை' எடுத்துக் கொண்டு 'கொங்குநாட்டுக்கு' ஆதரவாக கிளம்பி விட்டது. இன்று காலை முதலே கொங்கு நாடு என்று ட்விட்டரில் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை தாக்குவதற்காகவே கொங்கு புறக்கணிக்கப்படுவதாக ஆரம்பித்த சிலர், இப்போது கொங்கு மண்டலத்தை தனி மாநிலம் ஆக்க வேண்டும் என்று கோரிக்கைகளை எழுப்பி வருகிறார்கள்.

ஒற்றுமை அவசியம்

தமிழ்நாடு ஒற்றுமையாக இருப்பதுதான் பலம். துரதிஷ்டவசமாக அதை பிரிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை எழுப்புகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின், இது போன்ற பிரிவினை கோரிக்கைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

https://tamil.oneindia.com/news/chennai/kongunadu-is-a-separate-state-is-completely-false-news-why-govt-silent-426667.html

 

டிஸ்கி:

தமிழ் நாட்டை மூன்றாக பிரித்து அதன்மூலம் தன்னை நிலை நிறுத்தும் பாஜக திட்டத்துக்கு பத்திரிகை செய்தி மூலம் நூல் விடுகிறார்கள் போல இருக்கிறது.

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா உடையவேண்டும் என்று கிந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் தவிர ஏனையோர்  விரும்புவதாகச் செய்திகள் வந்தனவே, அப்படி இந்தியா உடைந்தால் உடைந்த சில்லுகள் தெறித்துத் தமிழ்நாட்டையும் காயப்படுத்துவதைத் தவிர்க்க முடியாதே..!🤔 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Paanch said:

இந்தியா உடையவேண்டும் என்று கிந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் தவிர ஏனையோர்  விரும்புவதாகச் செய்திகள் வந்தனவே, அப்படி இந்தியா உடைந்தால் உடைந்த சில்லுகள் தெறித்துத் தமிழ்நாட்டையும் காயப்படுத்துவதைத் தவிர்க்க முடியாதே..!🤔 

கொங்கு நாட்டில் இந்திக்காரர் அதிகமாகி வருகின்றனர். அவர்களின் வாக்குகளை அறுவடை செய்ய வந்தவர், யோகிநாத், உத்தரபிரதேச முதல்வர்.

அதன் படி, அவர்கள் வாக்கால் வென்றார் வானதி. ஆகவே இந்த கொங்குமண்டலத்தினை தனியே பிரிக்க வானதி mla ஆதரவுடன் காரியம் நடக்கலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

கொங்கு நாட்டில் இந்திக்காரர் அதிகமாகி வருகின்றனர். அவர்களின் வாக்குகளை அறுவடை செய்ய வந்தவர், யோகிநாத், உத்தரபிரதேச முதல்வர்.

அதன் படி, அவர்கள் வாக்கால் வென்றார் வானதி. ஆகவே இந்த கொங்குமண்டலத்தினை தனியே பிரிக்க வானதி mla ஆதரவுடன் காரியம் நடக்கலாம். 

உண்மைதான். கூடவே துளுவ வெள்ளாளர்கள் அதிகம் வசிக்கும் இடம். இப்போ அவர்கள் மத்தியில் அவர்களை “துளுவ மொழி பேசும் தனியினமாக” பார்க்கும் பார்வை அதிகரிக்கிறது. 

வட மாநிலத்தவர் கோவை நகரில் மட்டும்தான். அதுவும் ஒரிரு சட்டமன்ற தொகுதிகளில் கொஞ்சம் செல்வாக்க்காக உள்ளார்கள். ஆனால் தமிழர் அல்லாத சாதிகள் என்ற புதிய அடைப்புக்குள் மலையாளிகள், துளுவர் சாதிகள், இவற்றுடன் வட மாநிலத்தவர், தேவேந்திர குல மக்கள், பிஜேபி ஆகியோரை சேர்த்தால் - தெலுங்கான கோரிக்கை போல ஒரு கோரிக்கையை கொங்கு நாட்டிலும் எழுப்பமுடியும்.

 

54 minutes ago, Paanch said:

இந்தியா உடையவேண்டும் என்று கிந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் தவிர ஏனையோர்  விரும்புவதாகச் செய்திகள் வந்தனவே, அப்படி இந்தியா உடைந்தால் உடைந்த சில்லுகள் தெறித்துத் தமிழ்நாட்டையும் காயப்படுத்துவதைத் தவிர்க்க முடியாதே..!🤔 

அப்படி பெரும்பாலான ஹிந்தி பேசாதவர்கள் விரும்புவதாக தெரியவில்லை. 

ஆனால் மொழி வழி மாநிலங்களை உடைத்து சிறிதாக்குவது இந்திய ஒன்றியத்தை வலுவாக்குமே ஒழிய வலுவிழக்க செய்யாது.

முன்பு இராமதாஸ் இந்த கோரிக்கையை வைத்தார் (தமிழ் நாட்டை 3 ஆக உடைக்க வேண்டும்). அப்படி செய்தால் வன்னியர் சாதி வட தமிழகத்தை ஆழலாம், அன்புமணி முதல்வராகலாம் என்ற நப்பாசை.

நான் மேலே சொன்ன சக்திகளுடன் வடக்கே வன்னியரும், தெற்கே முக்குலத்தோரும் தமிழகத்தை 3 ஆக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் கீழ் சுயநலமாக ஒன்று சேர்ந்தால் - தமிழகம் வடக்கு, கொங்கு, தெற்கு என்று பிரியும் என்பது தெலுங்கான காட்டும் பாடம். 

  • கருத்துக்கள உறவுகள்

Tamil.oneindia  செய்திகளுக்கு அவசரப்பட்டு கருத்து சொல்லபோனால் பின்னாடி பெருத்த அவமானங்களை சந்திக்க வேண்டிவரும், அதனால் பிரதான ஊடகங்களில் வெளிவரும்வரை பாத்துதான் பண்ணோணும்.🤔

Tamil.oneindia நம்ம வீட்டுக்குள் இருந்து தட்டிவிடும் புலம்பெயர் கிளுகிளுப்பு ஊடகங்கள் ரகம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

கொங்கு நாடு பிரிவினையில் கனிமவள அரசியல்

 
spacer.png

கப்பிகுளம் ஜெ.பிரபாகர் 

இந்தியா பன்மொழி பேசும் மக்கள் வாழ்கின்ற மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்தியாவில் கடைசியாக எடுக்கப்பட்ட 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 121 மொழிகள் இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு பண்பாட்டையும், வாழ்வியலையும் கொண்ட கூட்டமைப்புதான் இந்தியா என்ற நாட்டின் அடையாளம். அதன் ஒரு அங்கம்தான் தமிழ்நாடு என்ற மாநிலம்.

பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு முந்தைய வரலாற்றில் இந்தியா என்ற பெயர் கிடையாது. ஆனால், சங்க இலக்கியங்களிலும், பிரிட்டிஷ் கால படைப்புகளிலும் தமிழ்நாடு என்ற பெயர் இருந்துள்ளது. பழம்பெருமையையும், வரலாற்றையும் கொண்டது தமிழ்நாடு. உலக மொழிகளிலேயே, குறியீடு, கல்வெட்டு, ஓலைச்சுவடி, பட்டயங்கள், அச்சு, கணிணி மொழி என்று அனைத்து காலத்திலும், அறிவியல் வளர்ச்சியிலும் தனிச்சிறப்பைப் பெற்றது தமிழ் மொழி.

தமிழ்நாட்டில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு பெரும்பான்மை மக்கள் வாழ்ந்து வந்தாலும், தமிழ் நிலப்பரப்பில் தெலுங்கு, உருது, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும், முப்பத்து ஆறு வகையான பழங்குடி மொழிகளைப் பேசுகின்ற வெவ்வேறு இன பழங்குடி மக்களும் வாழ்ந்து வருகிறார்கள்.

தொடக்கத்தில் தமிழ்நாடு என்ற பெயரில் ஒரு நாடோ, மாநிலமோ இருக்கவில்லை. பண்டைய மனிதர்கள் கூட்டமாக வாழ்ந்த காலங்களின் தொடர்ச்சியாக, ஊர்க்குடும்பு, நாட்டான், நாட்டாண்மை, பண்ணாடி முறைகளும், மன்னர்களின் ஆட்சியும்தான் தமிழ் மண்ணில் நடைபெற்று வந்தது. கற்காலம், இரும்பு காலம், வரலாற்றுக் காலம், சங்ககாலம் என்று தொல்லியல் அகழாய்வுகள் மூலம் பிரிக்கப்படும் அத்தனை காலத்திலும் தமிழர்கள் பழம்பெரும் நாகரீகத்தோடு வாழ்ந்து வந்த சான்றுகள் கிடைத்துள்ளன, கிடைத்து வருகின்றன.

சங்க காலத்தில் நாடு என்ற ஆட்சிமுறை வழக்கத்தில் இருந்த போது, தமிழ்நாட்டினை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். மூவேந்தர்களின் பேரரசுகள் வீழ்ந்த போது, பல்லவர்களும், பிற்கால சோழர்களும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளனர். வடமேற்கு பகுதியிலிருந்து வந்த இஸ்லாமியர் படையெடுப்புகள் இந்தியாவில் மாற்றங்களை உண்டாக்க, அதன் தாக்கம் தமிழ்நாட்டின் ஆட்சியமைப்பிலும் மாறுதல்களை ஏற்படுத்தியது. பதினான்காம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டதாக தமிழ்நாடு மாறியது. நாடு, பாளையம், சமஸ்தானம், ஜமீன் என்ற மன்னர்களுக்கு உதவியாக குறு நிலப்பரப்புகளும் ஆட்சி செய்யப்பட்டு அல்லது நிர்வாகம் செய்யப்பட்டு வந்தன.

spacer.png

தமிழ்நாட்டின் நிலப்பரப்பினை சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, பல்லவ நாடு, கொங்கு நாடு, நடு நாடு, நாஞ்சில் நாடு, ஈழ நாடு, மலை நாடு என்று அவ்வப்போது பிரித்தே மன்னர்கள் பலரும் ஆட்சி புரிந்து வந்தனர். இன்று பேசப்படும் கொங்கு நாடு என்பது கூட, சேர நாடு, சோழ நாடு என்று வெவ்வேறு காலகட்டத்தில் ஆட்சி புரியப்பட்டுள்ளது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களும் கொங்கு நாட்டினை ஆட்சி செய்துள்ளார்கள். அப்போது அது பாண்டியது நாடாகவும் இருந்துள்ளது.

கொங்கு நாட்டிற்கென்று தனி மன்னர்கள் ஆட்சிபுரிந்த காலம் மிகவும் குறைவானது. கொங்கு நாட்டில் மட்டும் இருபத்தி நான்கு உள்நாடுகள் இருந்தன. பூந்துறை நாடு, தென்கரை நாடு, காங்கேய நாடு, பொங்கலூர் நாடு, ஆறை நாடு, வாரக்க நாடு, திருவாவினங்குடி நாடு, மணநாடு, தலையநாடு, தட்டைய நாடு, பூவாணிய நாடு, அரையநாடு, ஒடுவங்க நாடு, வடகரை நாடு, கிழக்கு நாடு, நல்லுருக்கு நாடு, அண்டை நாடு, வெங்கல நாடு, காவடிக்க நாடு, ஆனைமலை நாடு, ராசிபுர நாடு, காஞ்சிக்கூடல் நாடு, குருநாடு, வாழவந்தி நாடு ஆகிய இருபத்தி நான்கு நாட்டையும் குறுநில மன்னர்கள் நிர்வாகம் செய்து வந்தனர்.

இப்போது கொங்குநாடு என்று தமிழ்நாட்டிலிருந்து ஒரு பகுதியைப் பிரிப்பதற்கு எழுப்பப்பட்டுள்ள கோரிக்கையின் பின்னே, தேர்தல் அரசியல், கனிம வள அரசியல், மொழி அரசியல், இன அரசியல், சாதி அரசியல் எனப் பல்வேறு அரசியல் காரணங்கள் உள்நோக்கங்களாகப் புதைந்திருக்கின்றன.

விடுதலைப் போராட்டங்களின் தொடர்ச்சியாக, ஐநூற்றி அறுபத்து நான்கு சிற்றரசர்களை, பாளையக்காரர்களை, சமஸ்தானங்களை, மாகாணங்களை ஒன்று சேர்த்து இந்தியா என்ற ஒற்றைக்குடையின் கீழ் மிகப்பெரிய ஜனநாயக நாட்டைக் கட்டமைத்தனர் தலைவர்கள். விடுதலை இந்தியாவில் மக்களாட்சியை நிலைநாட்டிட தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தி, பொருளாதாரத்தில் ஓங்கி உயரச் செய்தனர். இப்போது மீண்டும் இந்தியாவை பிரித்துக் கொண்டிருக்கிறோம். மற்றொருபுறம் கூட்டாட்சியை நீர்த்துப்போகச் செய்யும் ஒற்றை ஆட்சியை, ஒற்றை அதிகாரத்தை நோக்கிப் பயணிக்கிறோம்.

பண்டைய வரலாற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்டால் கொங்கு பகுதியினை 24 மாகாணங்களாகப் பிரிக்க வேண்டும். நிர்வாக வசதிக்காகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் பிரிக்கப்பட்டால், அன்றைய சென்னை மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்ட தமிழர் நிலங்களை ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிடமிருந்து மீட்டு புதிதாக உருவாகும் மாநிலத்தோடு சேர்க்கப்பட வேண்டும். இரண்டும் இல்லாமல் ஒரு மாநிலமோ, ஒன்றியப் பிரதேசமோ பிரிக்கப்பட்டால் அதற்கு வெறும் ஓட்டுவங்கியை மட்டுமே நம்பும் தேர்தல் அரசியலும், பிற உள்நோக்கங்களும் மட்டுமே காரணமாக இருக்க முடியும். அப்படி பிரிக்கப்படுவது, ஒரே மொழி பேசும் மக்களிடையே பிரிவினையை உருவாக்கும். நாட்டின் வளர்ச்சியையும் தடுக்கும்.

spacer.png

கொங்கு நாடு என்றழைக்கப்படும், மேற்கு மாவட்டங்களை நோக்கி பலரின் பார்வையும் பதிவதற்கு முதன்மைக் காரணம் தேர்தல் அரசியல் மட்டுமில்லை. அப்பகுதியில் நிறைந்திருக்கும் இயற்கை வளங்கள். நீர்வளமிக்க மேற்குத் தொடர்ச்சி மலைகளும், கனிம வளமிக்க கிழக்குத் தொடர்ச்சி மலைகளும். இந்தப் பகுதியை தனியே பிரித்தெடுத்துச் சென்று விட்டால், நினைத்ததை சாதிக்க முடியும். கனிம வளச் சுரங்கங்களை ஏற்படுத்தி பொருளாதார வளர்ச்சியென்று தனிப்பாதையில் பயணிக்க முடியும். இரும்பை உருக்கி உலோகங்கள் பயன்படுத்திய தமிழர்களின் உலோகக் கால வரலாறு கிழக்குத் தொடர்ச்சி மலையில்தான் புதைந்து கிடக்கிறது. எட்டு வழிச் சாலையின் பிரச்சனையே கிழக்குத் தொடர்ச்சி மலையின் கனிம வளங்கள்தானே. அப்படியிருக்க மேற்கு மாவட்டங்களை நோக்கிய பார்வை, வெறும் தேர்தல் அரசியல் பார்வை மட்டுமில்லை, அதற்குப் பின்னால் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருளாதார அரசியல் பார்வை. அதற்கு உதாரணமாக ஒடிசாவும், சட்டீஸ்கரும் பிரிந்து வந்த பின்னர் அம்மாநிலங்களில் கனிம சுரங்கங்கள் அதிகரித்து வந்ததைக் காணலாம்.

முன்னொரு காலத்தில் ஈழநாடு என்று ஒரு நாடு இருந்தது. இப்போது தமிழ்நாடு என்று ஒரு மாநிலம் உள்ளது. மொழியாலும், பண்பாட்டாலும், இனத்தாலும் ஒன்றுபட்டு நிற்கும் தமிழ் மாநிலத்தைக் கூறு போட்டால், முதலில் மொழி அழியும், பின்னர் பண்பாடு சிதையும், இறுதியில் இப்படி ஒரு இனம் வாழ்ந்தது என்று வரலாற்றில் படித்துக் கொள்ள முடியும். ஏதோ ஒரு உள்நோக்கத்தில்தான், எதிர்பார்ப்பில்தான் தமிழ்நாட்டினைப் பிரிக்க வேண்டுமென்ற புதிய கோரிக்கையும் உருவாகியுள்ளது. மொழியாலும், இனத்தாலும், பண்பாட்டாலும் உயர்ந்தோங்கி நிற்கும் தமிழர்கள் பிரிவினையைப் புறந்தள்ளி, ஒன்றாக வென்று காட்டுவார்கள்.
 

https://minnambalam.com/politics/2021/07/10/24/Kongunadu-and-mineral-politics

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, valavan said:

Tamil.oneindia  செய்திகளுக்கு அவசரப்பட்டு கருத்து சொல்லபோனால் பின்னாடி பெருத்த அவமானங்களை சந்திக்க வேண்டிவரும், அதனால் பிரதான ஊடகங்களில் வெளிவரும்வரை பாத்துதான் பண்ணோணும்.🤔

Tamil.oneindia நம்ம வீட்டுக்குள் இருந்து தட்டிவிடும் புலம்பெயர் கிளுகிளுப்பு ஊடகங்கள் ரகம்தான்.

ஒரு காலத்தில் நல்லாத்தான் இருந்தது ஆனால் இப்போ டேப்லாயிட்டை விட மோசம் ஆகி விட்டது. இந்த செய்தி தின மலரில் வந்தது - அதை ஒட்டியே இவர்கள் செய்தி போட்டார்கள் என நினைக்கிறேன். அதேபோல் டிவிட்டரிலும் இன்று இந்த கதை ஓடியது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனி மாநிலம் ஆகிறதா கொங்கு நாடு: டுவிட்டரில் டிரெண்டிங்

Dinamalar16:09

சென்னை: தமிழகத்தை இரண்டு மாநிலமாக பிரித்து கொங்கு மண்டலத்தை உள்ளடக்கியதை கொங்கு நாடு என்ற பெயரில் தனி யூனியன் பிரதேசமாக மாற்றும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என, தி.மு.க.,வினர் கூறி வருவதால் கடும் அதிருப்தியில் உள்ள மோடி அரசு, அதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. தமிழகத்தின் மேற்கு பகுதியான கொங்கு மண்டலத்தை, 'கொங்கு நாடு' என்ற பெயரில், தனி யூனியன் பிரதேசமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை துவக்கியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே, சமீபத்தில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற முருகனை பற்றிய குறிப்புகளில், கொங்கு நாடு என்ற வார்த்தை இடம் பெற்றதாகவும், மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

gallerye_150343941_2799858.jpgஇந்நிலையில் இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. பலரும் அரசியல் போட்டிக்காக ஒன்றுப்பட்ட தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பி உள்ளனர். அதேசமயம் ஒரு சிலர் இதை ஆதரித்தும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #கொங்குநாடு, #தமிழ்நாடு, #KonguNadu ஆகிய ஹேஷ்டாக்குகள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின. இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவான கருத்துக்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
gallerye_150249600_2799858.jpg

ஆதரவும்.... 

 

வாய வெச்சுக்கிட்டு சும்மா இருங்கனு சொன்னா கேட்டா தானே... இப்போ ரவிசங்கர் பிரசாத் தமிழகத்திற்கு கவர்னரா இல்ல கொங்கு நாட்டுக்கு கவர்னரானு சுத்தல்ல விட்டாங்க.
கொங்கு நாட்டை தனி மாநிலமாக பிரியுங்கள், யூனியன் பிரதேசமாக வேண்டாம்.
தமிழகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது கொங்கு நாடு தான். கொங்கு நாடு இல்லையே தமிழகம் இல்லை.
தற்போதைய திமுக., ஆட்சியில் கொங்கு நாட்டில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்ற கோபம் உள்ளது. அதனால் அந்த பகுதிக்கு கொரோனா தடுப்பு பணிகள் உள்ளிட்ட பல விஷயங்களில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இன்னும் 5 ஆண்டுகளுக்கு இது தொடரும். இது தான சரியான தருணம், கொங்கு பகுதியை தனி மாநிலமாக பிரிக்கலாம்.
கொங்கை பிரிக்கும் பா.ஜ., திட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தருகிறோம். அதை முதலில் செய்யுங்கள். அப்போது தான் சென்னை திமுக., கூவம் அமைதியாக இருக்கும்.
காஷ்மீர்காரன் இந்தியா விட்டு பிரியிறேன்னு சொன்னப்ப பிரிச்சி விடுங்கனு கூவுனவன்லாம் இப்ப கொங்கு நாடு தமிழ்நாடு விட்டு தனி ஸ்டேட்டா பிரிக்கனும்னு பேசுறது பிரிவிணைவாதம்னு க்ளாஸ் எடுக்குறானுக.

gallerye_160555574_2799858.jpg

எதிர்ப்பும்...

 

நான் கொங்கு பகுதியை சேர்ந்தவன்... எனக்கு எந்த நாடும் வேண்டாம். தமிழ்நாடு போதும்..
கனவிலும் நடக்காத விசயம். தாய்த்தமிழ் நாட்டைத் துண்டாட எந்த சங்கிகள் நினைத்தாலும் விடமாட்டோம்...
தமிழ்நாட்டை மூன்றா கூறுப்போட பேசவதற்கு முன், எங்கள் தாத்தன்கள் இரத்தம் சிந்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும், அவர்கள் பேரன்கள் நாங்கள் போராடிய ஜல்லிகட்டு போராட்டத்தையும் ஒருமுறை நினைத்து பார்க்கவும்!
தங்கள் சுயநல அதிகார வெறிக்காக, அரசியல் லாபத்திற்காக எதையும் செய்யும் என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்.
நமது ஒற்றுமையும், நமது வளர்ச்சியும் அவர்கள் கண்ணை உறுத்துகிறது. தமிழ்மக்கள் ஒற்றுமை காப்போம் , நம் தாய் தமிழ்நாடு காப்போம். என்னுயிர் தமிழ்நாடு
"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்" திருப்பதி உட்படி தமிழகம் பிற மாநிலங்களிடம் இழந்த பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைத்து "முழுமையான தமிழகத்தை" உருவாக்க வேண்டும்...
20 கோடி மக்கள் தொகை இருக்கும் உத்தர பிரதேசத்துல இல்லாத ஆட்சி , பிரச்சனை தமிழ் நாட்டு 6 கோடி மக்கள் ஆட்சில வந்துடுச்சாமா.
தமிழகத்தை துண்டாடி ஒற்றுமையை குலைக்க பா.ஜ., திட்டமிடுகிறது. அது ஒரு போதும் நடக்காது. குஜராத்தை விட தமிழகம் சிறப்பாக உள்ளது.
தமிழ்நாடு தமிழ்நாடாகவே இருக்க விரும்புகிறோம். எங்களுக்கு திராவிட நாடும் வேண்டாம், கொங்குநாடும் வேண்டாம்.
இது மாநிலங்களின் வளர்ச்சிக்கான விஷயமாக தெரியவில்லை. மத்திய மாநில அரசுகளின் மோதல் போக்கு தான். ஓட்டு வங்கிக்காக இப்படி மாநிலத்தை துண்டாட நினைப்பது எந்தவகையில் நியாயம். இன்று கொங்கு நாடு என்று பிரிப்பார்கள். நாளை சோழ மண்டலம் என்று பிரிப்பார்கள். இப்படியே ஒவ்வொருத்தரும் பிரிக்க நினைத்தால் என்ன செய்வது...

 

https://m.dinamalar.com/detail.php?id=2799858

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

கொங்கு நாட்டில் மட்டும் இருபத்தி நான்கு உள்நாடுகள் இருந்தன. பூந்துறை நாடு, தென்கரை நாடு, காங்கேய நாடு, பொங்கலூர் நாடு, ஆறை நாடு, வாரக்க நாடு, திருவாவினங்குடி நாடு, மணநாடு, தலையநாடு, தட்டைய நாடு, பூவாணிய நாடு, அரையநாடு, ஒடுவங்க நாடு, வடகரை நாடு, கிழக்கு நாடு, நல்லுருக்கு நாடு, அண்டை நாடு, வெங்கல நாடு, காவடிக்க நாடு, ஆனைமலை நாடு, ராசிபுர நாடு, காஞ்சிக்கூடல் நாடு, குருநாடு, வாழவந்தி நாடு..

roflphotos-dot-com-photo-comments-201803

செஞ்சி தலைநகரா கொண்டு விழுப்புரம், திருவண்ணமலை உள்ளடக்கி தனியா பிரிச்சி விடுங்கப்பா .. 👌ரொம்ப போர் அடிக்கிறது.👍

gingee-fort.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கொங்கு நாடு: திமுக கூட்டணியின் எதிர்க்குரல்!


spacer.png

ஒன்றிய இணை அமைச்சராக ஜூலை 7ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவிக்கப்பட்டார். பதவியேற்பதற்கு முன்பாக ஒன்றிய அரசு வெளியிட்ட புதிய அமைச்சர்கள் பற்றிய குறிப்பில் எல்.முருகன், கொங்கு நாடு, தமிழ்நாடு என்று இருந்தது. ஒன்றிய அரசின் அதிகாரபூர்வ குறிப்பிலேயே கொங்கு நாடு என்று இடம்பெற்றிருந்தது அனைவரையும் ஆச்சரியத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்தியது.

அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருக்கிற ஒன்றியம் என்ற வார்த்தையை திமுக அரசு பயன்படுத்தத் தொடங்கிய நிலையில் இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சட்டப்படி இதை ஒன்றும் செய்ய முடியாது என்பதால், அவர்கள், கொங்கு நாடு என்ற புதிய வார்த்தைப் பிரயோகத்தைக் கையிலெடுத்தனர். சேர, சோழ, பாண்டிய நாடு என்பதைப் போல கொங்கு நாடு என்பது தற்போதைய இந்திய அரசியல் அமைப்பு உருவாவதற்கு முன்பிருந்த ஓர் இடவாகு பெயர்.

ஆனால், ஒன்றிய அரசின் அதிகாரபூர்வக் குறிப்பில் தமிழ்நாட்டுக்குள் கொங்கு நாடு என்ற ஒரு பிரிப்பை உருவாக்கும் வகையில் கருத்துருவாக்கம் செய்யும் வகையில் எல்.முருகனுக்கு கொங்கு நாடு, தமிழ்நாடு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பயன்படுத்தி சிலர் கொங்கு நாடு என்பது தனியாக பிரிக்கப்பட்டு அங்கே பாஜக கவனம் செலுத்தப் போகிறது என்று கருத்துகளை வெளியிட்டார்கள்.

பாஜகவினரும், சில கொங்கு பிரமுகர்களும் இதை வெளிப்படையாக ஆதரிக்கிறார்கள்.

இந்த நிலையில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுகவின் செய்தித் தொடர்புச் செயலாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று (ஜூலை 10) தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த கருத்தில், “கொங்கு நாடு முழக்கம் சிறுபிள்ளை விளையாட்டுத்தனமானது. இதை அரசியல் அறிவு சார்ந்த ஒன்றாக நான் பார்க்கவில்லை. மத்திய என்பது தொடர்பில்லாத சொல், ஒன்றியம் என்பது இணைந்த என்ற பொருளில் உயர்ந்த சொல். ஒன்றியம் என்ற சொல் அரசியல் அமைப்பில் இருக்கிறது. தமிழும் தெரியாது, அரசியல் அறிவும் கிடையாது, அரசியல் அமைப்பு சாசனத்தையும் தெரியாது என்ற நிலையில் சிலரின் உளறல்களுக்கு என்ன பதில் சொல்வது?” என்று கேட்டிருக்கிறார்.

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேற்று (ஜூலை 10) புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “திடீரென புதிய பிரச்சினையை பாஜக கிளப்பிவிட்டிருக்காங்க. தமிழ்நாட்டைப் பிரிச்சு கொங்கு நாடுனு பிரிச்சு அதை யூனியன் பிரதேசமா மாத்தப் போறதா தகவல் பரப்பிவிட்டிருக்காங்க. இது ரொம்ப ஆபத்தானது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பா வன்மையா கண்டிக்கிறேன்.

மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட தமிழ்நாட்டைப் பல்வேறு கூறுகளாகப் பிரிக்கும் எந்த முயற்சிக்கும் தமிழ்நாட்டு மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். தமிழ்நாட்டுக்குள்ள கொல்லைப்புற வழியாக நுழைய பிஜேபி முயற்சி செய்தால், அதற்கு எதிர்விளைவைதான் பிஜேபி சந்திக்கும். அனைத்து கட்சிகளும் சேர்ந்து இதை எதிர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார் கே.பாலகிருஷ்ணன்.

திமுக கூட்டணியின் தலைமை கட்சியான திமுக இதை சிறுபிள்ளை விளையாட்டு என்கிறது, மார்க்சிஸ்ட் கட்சியோ ஆபத்தானது என்கிறது.
 

https://minnambalam.com/politics/2021/07/11/10/kongunadu-dmk-alliance-opposite-voice-bjp

 

 

  • கருத்துக்கள உறவுகள்

https://www.dinamani.com/tamilnadu/2021/jul/11/tamilnadu-cannot-be-divided-kanimozhi-mp-3658150.html

 

தமிழகத்தை யாரும் பிரிக்க இயலாதாம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.