Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புகலிடப் பெண்கள் மீது வீட்டு வன்முறை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_358704_abuse300.jpg

தாயகத்தை விட்டு பல கனவுகளோடு புகலிடத்தில் இருக்கும் ஆண்களைத் திருமணம் செய்து கொண்டு வரும் பெண்களும் புகலிடத்தில் வாழும் தாயகத்தில் இருந்து இடம்பெயர்ந்த பெண்களும் அவர்களின் கணவன் மற்றும் ஆண் நண்பர்களால் வன்முறைக்கு இலக்காவது லண்டனில் கண்டறியப்பட்டுள்ளது.

அண்மையில் ஒரு ஈழத் தமிழ் பெண்மணி மீதான தொடர் வன்முறை பொலீஸ் விசாரணை வரை சென்றுள்ளது. இருந்தாலும் அந்தப் பெண்மணி கணவரின் வன்முறைகளைத் திட்டமிட்டு மறைப்பது பொலீஸ் மற்றும் இதர தரப்பை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வன்முறைக்கு இலக்காகும் பெண்கள் லண்டனில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் குறிப்பாக பிரித்தானியாவுக்கு வெளியில் ஐரோப்பாவில் இருந்து வரும் பெண்கள் மத்தில் அதிகமாக உள்ளது.

வன்முறைக்கு இலக்கான ஒரு கர்ப்பிணித் தமிழ் பெண் குழந்தை ஒன்றை குறைந்த காலத்தில் பெற்றெடுக்க வேண்டிய நிலைக்கு ஆளானது மருத்து வட்டாரங்களில் கூட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!

இடம்பெயர்ந்துள்ள தமிழர் சமூகத்தில் வீட்டு வன்முறை அதிகம் என்றும் விசாரணையில் ஈடுபட்ட ஒரு தரப்பு தகவல் கூறியது..!

பொதுவாகப் பெண்களால் ஆண்கள் கோபமூட்டப்படுகின்றனர் என்பதை ஏற்றுக் கொள்ளும் பிரித்தானிய சமூகவியலாளர்கள் ஆண்கள் அப்படியான சமயங்களில் தங்கள் கவனத்தை திசை திருப்பி பதிலுக்கு வன்மூறை மற்றும் பதில் கோபம் வெளிப்படுத்தலைத் தவிர்க்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்..!

வன்முறைக்கு இலக்காகும் பெண்கள் உடனடியாக பொலீஸுடன் தொடர்பு கொள்ளக் கேட்கப்படுவதுடன்.. உண்மைகளை மறைக்காமல் கூறவும் சொல்லப்படுகின்றனர்.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்கள் தங்கள் மீதான அக்கறையை அதிகரிக்கவும் கணவன்மாரின் கவனிப்பை பெறவும் முயற்சிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஆண்கள் பெருமளவில் மதுவுக்கு அடிமையாகி இருப்பதும்.. வீட்டு வன்முறை அதிகரிப்புக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.

தமிழர் சமூகத்தினர் மத்தியில் இருக்கும் ஒரு சில ஆண்களால் தோன்றும் இந்த நிலை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்கும் அவப்பெயரை சம்பாதித்துத் தருகிறது..! :D

http://www.endviolenceagainstwomen.org.uk/home.asp

http://www.homeoffice.gov.uk/rds/violencewomen.html

http://www.womensaid.org.uk/landing_page.a...009000500100004

http://www.richmond.gov.uk/final_dv_strategy_published.pdf

http://www.hillingdon.gov.uk/central/democ...ce_children.pdf

Edited by nedukkalapoovan

பொதுவாகப் பெண்களால் ஆண்கள் கோபமூட்டப்படுகின்றனர் என்பதை ஏற்றுக் கொள்ளும் பிரித்தானிய சமூகவியலாளர்கள் ஆண்கள் அப்படியான சமயங்களில் தங்கள் கவனத்தை திசை திருப்பி பதிலுக்கு வன்மூறை மற்றும் பதில் கோபம் வெளிப்படுத்தலைத் தவிர்க்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்..!

கிளிஞ்சுது போ....

பாதிக்கப்படும் பெண்கள் தயங்காமல் சம்பவங்களை வெளிக்கொண்டு வரவேண்டும். அப்போது தான் தவறிழைப்பவர்கள் தண்டிக்கப்படவும் திருந்தவும் வாய்ப்பு வரும். மேற்கத்திய நாடுகளில் உள்ள கோளாறுகளை எல்லாம் சீக்கிரமே பழகிவிடும் நம்மவர்கள் மேற்கத்தியரிடம் உள்ள எத்தனையோ முற்போக்கான நடைமுறைகளை மட்டும் பழகிக் கொள்வதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமான டொமெஸ்ரிக் வயலென்ஸ் பிரச்சனையளில ஆண்கள் பக்கத்து நியாயம் எடுபடுறதில்ல. ஆண்கள் தங்களுடைய சகோதரங்களை, வயதுபோன தாய் தகப்பனைக் கவனிக்கிறதும் பல குடும்பங்களில வீட்டுப் பிரச்சனை ஏற்படக் காரணமாயிருக்குது. இஞ்ச வந்த பிறகு இங்க இருக்கிற சட்டங்கள் 999 மிரட்டல்கள் எல்லாம் பெண்களையும் ஒரு சின்ன விசயத்தை ஊதிப் பெரிதாக்கிறதுக்கு வழிசமைச்சுக் கொடுக்குது. ஆண்களைப் பொறுத்த வரையில குடி ஒரு மிகப் பெரிய காரணமாக வீட்டுப் பிரச்சனையளுக்குத் துணைபோகுது. இப்பிடிப் பல விசயங்களையும் ஆராயவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

மொழியால் வன்முறை (அதாவது அர்ச்சிப்பது), உடலால் வன்முறை (அடித்து உதைப்பது) என்பன தமிழர் சமூகத்தில் தாராளம். இணைந்து தீர்மானங்கள் எடுக்க முடியாமை, ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முயற்சிக்காமை, வீட்டுக்குள்ளேயே எதிரிகளை உருவாக்குவது போன்றன தொடர்ந்து நடைபெற்றால் வீட்டுவன்முறை தொடரவே செய்யும்.. ஆண்களும் பெண்களும் வெவ்வேறு உலகங்களில் வாழ்வதை விட்டு ஒரு உலகத்தைப் பார்க்கவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படித்தான் புரட்சிப்பெண்கள் என்று முழக்கமிட்டாலும் இன்னமும் ஆண் என்கின்ற திமிருக்குள் தெரியாமல் மாட்டுப்பட்ட பெண்களின் நிலை கவலைக்கிடம் தான். சமூக சூழலில் தங்களின் நிலை என்னவாகும்? ! பெற்றோர்கள்,சகோதரர்கள் உண்மையை ஏற்றுக்கொள்வார்களா?!! தவறான தப்பான பெயர் கேட்க வந்துவிடுமோ என்கின்ற அவளின் அச்சத்தினால் அடங்கிப்போக வேண்டி இருக்கின்றது இல்லை முடங்கிப்போகவேண்டித்தான் இருக்கின்றது.

இருந்தாலும் நெடுக்க்ஸ் அண்ணை 'சில ஆண்களால்" என்பதை தடித்த எழுத்துக்களால் காட்டி இருப்பது சிரிப்பை வரவழைத்தாலும் அவர்கள் ஆண்களே அல்ல "அரக்கர்கள், மன நோயாளர்கள் என்ற பிரிவுக்குள்ளேயே அடங்குவார்கள் என்பதைத் தாழ்மையுடன் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.

ஒரு ஆணும் பெண்ணும் இணைந்தாலே இல்லறம் நல்லறமாகும்!! இதில் எது குறைந்தாலும் வாழ்க்கை சிக்கலோ சிக்கல் தான்!!..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனேகமான டொமெஸ்ரிக் வயலென்ஸ் பிரச்சனையளில ஆண்கள் பக்கத்து நியாயம் எடுபடுறதில்ல. ஆண்கள் தங்களுடைய சகோதரங்களை, வயதுபோன தாய் தகப்பனைக் கவனிக்கிறதும் பல குடும்பங்களில வீட்டுப் பிரச்சனை ஏற்படக் காரணமாயிருக்குது. இஞ்ச வந்த பிறகு இங்க இருக்கிற சட்டங்கள் 999 மிரட்டல்கள் எல்லாம் பெண்களையும் ஒரு சின்ன விசயத்தை ஊதிப் பெரிதாக்கிறதுக்கு வழிசமைச்சுக் கொடுக்குது. ஆண்களைப் பொறுத்த வரையில குடி ஒரு மிகப் பெரிய காரணமாக வீட்டுப் பிரச்சனையளுக்குத் துணைபோகுது. இப்பிடிப் பல விசயங்களையும் ஆராயவேணும்.

இரு தரப்புமே ஒருத்தரை ஒருத்தர் குற்றம்சாட்டி வாழப் பழகிட்டாங்க.. எனி பிரச்சனைகள் கூடுமே தவிர குறையிறதா படேல்ல..!

பெண்கள் இப்ப எடுத்ததுக்கெல்லாம் ஆண்களில இலகுவா குற்றம் சுமத்தி தங்கட குற்றங்களை அதில மறைக்க முயலுறாங்க..!

அந்த வகையில் நீதியைத் தேடுறதுக்கு இரு தரப்பு நடவடிக்கைகளையும் தீவிரமா கண்காணித்துக் கருத்துரைக்க வேண்டித்தான் இருக்குது உலகில்..! :)

தமிழ் பெண்களுக்கு வீட்டுக்குள் மட்டுமல்ல வெளியிலும் அடக்குமுறை இருக்கிறது. பாரிஸ் லா சப்பல் பகுதியில் வைத்து பாண்டிச்சேரி வம்சாவளியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை இலங்கை தமிழ் வன்முறைக் கும்பல் ஒன்றில் இருந்த ஒருவர்;; பாலியல் ரீதியாக துன்புறத்தினார்;;;.அந்த கேடுகெட்ட செயலை தட்டிக்கேட்கவந்த அந்தப் பெண்ணின் தந்தையை அந்த நபர் தனது கும்பலின் உதவியோடு அடித்து உதைத்து முட்டிபோட்டு மன்னிப்புக்கேட்க வைத்ததுடன் பாரிசுக்குள் தொடர்ந்து இருந்தால் அந்த பெண்ணை கடத்திச் சென்று வல்லுறவுக்க உட்படத்துவேன் என்றும் எச்சரித்திருந்தார் .இந்தக் கும்பலின் அடாவடிக்குப் பயந்து அந்தக் குடும்பம் காவல்துறையில் கூட முறைப்பாடு செய்யமால் பாரிசை விட்டு வெகு தொலைவில் இருக்கும் பிரான்சின் கீழ்பகுதி நகர் ஒன்றுக்குச் சென்றுவிட்டது.

பின்னர் பல இளம்பெண்களுக்கு (திருமணமானவர்களுக்கும் கூட )தொலைபேசி எடுத்து ஆபாசமாகப்பேசி வம்பு பண்ணுவது மிரட்டுவது என்று இந்த ஐயாவின் லீலைகள் தொடந்து ஒரு கட்டத்தில் மாட்டுப்பட்டுவிடுவோம் என்பது தெரிந்ததும் கனடாவுக்குச் தப்பிச்சென்று அங்கேயும் இந்த லீலைகளை தொடந்து செய்து மாட்டுப்படும் நிலை வந்ததும் மிண்டும் பிரான்சுக்கு திரும்பிவிட்டார்.இந்த நபராலும் அவர் சார்ந்த வன்முறைக்கும்பலாலும் பாரிசிலுள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்களது தொலைபேசி இல்க்கங்களை சிவப்;பு அட்டவணைக்கு மாற்றியிருந்தன. தற்போது அவர் ஊடகம் ஒன்றில்; சமூக சீர் திருத்த நிகழ்ச்சி ஒன்றின் தயாரிப்பாளர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நவம்

பெரும்பாலும் உந்தக் குற்றச்சாட்டுகளுக்குள்ள இருக்கின்றவர்களில் பெரும்பகுதியினர் உப்படி ஏதும் சமூக சேவைக்குள்ள தங்களை மறை;சுக் கொள்ளுவினம். பெரும்பாலும் பாத்தியள் என்றால் அவர்கள் மீதான குற்றச்சாட்டு எடுபடாது. அது இவர்களுக்கு நல்ல வசதியாகப் போட்டுது.

இப்படியான ஆட்களுக்கு 2 போட்டு எடுத்தால் தான் சரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.