Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்து தமிழ் அகதிகள் தற்கொலை முயற்சி !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்து தமிழ் அகதிகள் தற்கொலை முயற்சி !

திருச்சி மத்திய சிறை, சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் அகதிகளில் 15 பேருக்கு மேல் தற்கொலை முயற்சிகளில் ஈடுபாட்டனர் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன.

தம்மை விடுதலை செய்யும்படி முன்வைத்த கோரிக்கைகள் பலனளிக்காமையால் இன்று அவர்களில் பலர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டனரெனத் தெரிகிறது.

சிலர் அளவுக்கதிகமான துக்க மாத்திரைகளை விழுங்கியும், சிலர் தமது வயிறுகளைக் கிழித்துக்கொண்டும் தற்கொலை முயற்சிகளை மேற்கொண்டதாக அறிவிக்கப்படுகிறது.

இவர்களில் பலர் நீண்டகாலமாக இம் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும், பலர் தம்மீது போய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன எனக் கூறுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது 60 இருக்கும் மேற்பட்ட கைதிகள் மத்திய சிறையிலும், 100 ம் மேற்பட்டவர்கள் சிறப்பு முகாமிலும் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். பங்களாதேஷ், சூடான், நைஜீரியா, பல்கேரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இங்கு சிறைவைக்கப்பட்டுள்ளார்கள்

 

(மூலம்: தமிழ் கார்டியன்)

 

https://www.marumoli.com/திருச்சி-சிறப்பு-முகாமில/?fbclid=IwAR1R_XD7yOY-DanqkJT--zrnAhriFEpPCXHyEdP4a_ng2S158ihvNZ9fn-g

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சி சிறப்பு முகாமில், 16 தமிழர்கள் தற்கொலைக்கு முயற்சி!

August 19, 2021

spacer.png

 

குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்படும் வெளிநாட்டவரை தங்க வைப்பதற்காக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கை தமிழர்கள் 78 பேர் உட்பட வங்கதேசம், நைஜீரியா, சூடான், பல்கேரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 116 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் தண்டனை காலம் முடிந்தவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, கடந்த சில ஆண்டுகளாக இலங்கை தமிழர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக கடந்த ஜூலை 15 ஆம் திகதியன்று இலங்கை தமிழர்கள் 10 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களை உடனே விடுவிக்க வலியுறுத்தி கடந்த 11ஆம் திகதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். 8 ஆவது நாளான நேற்று 2 பேரின் உடல்நிலை மோசமானதால் வருவாய்த் துறை, காவல்துறை அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, இலங்கை தமிழர்கள் சிலர் திடீரென தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர்.

உமா ரமணன் என்பவர் வயிற்றிலும், அமல்ராஜ் என்பவர் கழுத்திலும் கத்தியால் கிழித்துக் கொண்டனர். சிலர் மரங்களின் மீது ஏறிக்கொண்டு, கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக அம்புலன்ஸ்களை வரவழைத்து, கத்தியால் கிழித்துக் கொண்டதில் காயமடைந்த உமா ரமணன், அமல்ராஜ் மற்றும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்ட ரீகன், நிஷாந்த், நிமலன், ஸ்டீபன் உள்ளிட்ட 14 பேரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், மாநகர சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் சக்திவேல், முகாம்களுக்கான தனித்துணை ஆட்சியர் ஜமுனா ராணி உள்ளிட்டோர் உடனடியாக முகாமுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் பின்பு ஆட்சியர் சிவராசு கூறியதாவது:

முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 10 மீனவர்கள் ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்டனர். பாஸ்போர்ட் வழக்குகளில் தொடர்புடைய 21 பேரை விடுதலை செய்வதற்கான பரிந்துரை, தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது.

இந்த விவகாரம் குறித்து அரசுக்கு ‘அவசர அறிக்கை’ அனுப்பப்படும். தற்கொலைக்கு முயன்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் நலமுடன் உள்ளனர் என்றார்.

இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய சிறை வளாகத்தில் அதிகளவிலான காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

https://globaltamilnews.net/2021/164874

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, nunavilan said:

திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்து தமிழ் அகதிகள் தற்கொலை முயற்சி !

ஈழமக்கள் சம்பந்தமாக நீலிக்கண்ணீர் வடிக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் என்ன செய்கின்றார்கள்? தொப்புள்கொடி உறவுகள் வாய் வீரத்தோடு சரியா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஈழமக்கள் சம்பந்தமாக நீலிக்கண்ணீர் வடிக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் என்ன செய்கின்றார்கள்? தொப்புள்கொடி உறவுகள் வாய் வீரத்தோடு சரியா?

இவர்கள் அண்மையில் வெளி மாநிலம் ஒன்றில் கைது செய்யப்பட்டவர்களா சாமி ?வெளிநாடு செல்ல காத்திருந்தவர்களா? 

இன்னும் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளை நம்புகிறீர்களே நீங்கள்? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இவர்கள் அண்மையில் வெளி மாநிலம் ஒன்றில் கைது செய்யப்பட்டவர்களா சாமி ?வெளிநாடு செல்ல காத்திருந்தவர்களா? 

இன்னும் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளை நம்புகிறீர்களே நீங்கள்? 

அவர்களும் நமக்கு வேண்டும். எமக்கு துரோகம் செய்தவர்களை தவிர......

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

அவர்களும் நமக்கு வேண்டும். எமக்கு துரோகம் செய்தவர்களை தவிர......

நான் அவர்கள் இந்தியர்களாக பார்க்கிறேன் அப்ப இந்திய துரோகி இல்லையா சாமி , அவர்களும் இந்தியா என்ற வட்டத்தை தாண்ட,மாட்டார்கள் அவ்வளவுதான்  அரசியல் பேச்சு எல்லாம் தேர்தலுக்கு மட்டுமே இதை நம்மவர்கள் பலர் இன்னும் புரிந்துகொள்ளவில்லை 
பழையவற்றை கிளறவேண்டாம் அது எம் .ஜி . ஆர் காலத்தில் முடிந்து போன ஒன்று 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் அவர்கள் இந்தியர்களாக பார்க்கிறேன் அப்ப இந்திய துரோகி இல்லையா சாமி , அவர்களும் இந்தியா என்ற வட்டத்தை தாண்ட,மாட்டார்கள் அவ்வளவுதான்  அரசியல் பேச்சு எல்லாம் தேர்தலுக்கு மட்டுமே இதை நம்மவர்கள் பலர் இன்னும் புரிந்துகொள்ளவில்லை 
பழையவற்றை கிளறவேண்டாம் அது எம் .ஜி . ஆர் காலத்தில் முடிந்து போன ஒன்று 

அரசியல் இல்லாமல் உதவி செய்தவர்கள் எண்ணிக்கை எண்ணிலடங்காது.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

ஈழமக்கள் சம்பந்தமாக நீலிக்கண்ணீர் வடிக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் என்ன செய்கின்றார்கள்? தொப்புள்கொடி உறவுகள் வாய் வீரத்தோடு சரியா?

அது அக‌தி முகாம் இல்லை தாத்தா க‌ழிவு முகாம்

த‌மிழ் நாட்டு அகதி முகாமை நேரில் பார்த்த‌வ‌ன் என்ற‌ முறையில் சொல்லுகிறேன்..........அதுக்கை நீங்க‌ளும் ச‌ரி நானும் ச‌ரி இர‌ண்டு நாள் கூட‌ த‌ங்க‌ மாட்டோம்


1000ரூபாய் காசு மாச‌த்துக்கு
சீட் போட்ட‌ முகாம் உச்சி வெய்யிலுக்கு உட‌ம்புக‌ள் வேர்த்து ஒழுகும் , க‌ழிவு நீர் ஓடும் அத‌ன் அருகே முகாங்க‌ள்

பாவ‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ள் , எப்ப‌டி வாழ‌ வேண்டிய‌துக‌ள் அதுக்கை இருந்து வேத‌னை ப‌டுதுக‌ள் 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

அரசியல் இல்லாமல் உதவி செய்தவர்கள் எண்ணிக்கை எண்ணிலடங்காது.

இல்லையென்று சொல்லவில்லை அரசியலுக்கு அப்பால் பட்ட மக்களாக இருக்கலாம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சற்று முன் ..

240528943_4934796816582487_6657649370635

ஆப்காணிகளுக்கு ஒரு தினுசா முடிவெடுப்பினம் .😢

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 சுமந்திரன் ஐயாவின் நன்றி நவிலல்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.