Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண நகரத்தின் அடையாளங்களை மேம்படுத்தல்! ஐந்திறன்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, valavan said:

கடலுக்கு மேலால ரோட்டு விட்டால் நல்லாதானிருக்கும் நாதம்ஸ்  ஆனா ரோட்டு விட காசு?😜 

எதை வைச்சு வெள்ளைக்காரன் இலங்கை முழுக்க  ரோட்டுக்கள் போட்டு பாலங்கள் எல்லாம் கட்டினான்?
வருமானத்தை வைச்சுதானே?
நெடுந்தீவையும் மண்டைதீவையும் சுற்றுலா அபிவிருத்தி பிரதேசமாக்குங்கோ காசு வருமெல்லே?

எத்தினை நாளைக்குத்தான் புளொரிடா அழகை பாத்து கொட்டாவி விடுவியள்? சேம் வெதர் சேம் வெள்ளை மண் சேம் மரம் கொடியள்.....அரசு நினைத்தால் அல்லது முக்கிய பிரமுகர்கள் நினைத்தால் முடியாதது ஏதுமில்லை.

ஸ்பெயினை பாருங்கோ.....சுவீஸ்ச பாருங்கோ எல்லாம் சுற்றுலா பயணிகள் வசமெல்லோ? இதே முறையை ஏன் நாங்கள் புங்குடுதீவு,அனலைதீவு,மண்கும்பான் ஏரியாக்களுக்கு பயன்படுத்தக்கூடாது?

சூரிய வளமும் பால் போன்ற வெள்ளை மணல் வளமும் அருகே உப்பு நீர் கடல் வளமும் எல்லா நாடுகளுக்கும் அமைவதில்லை. ஆனால் எமது வட பிரதேசத்தில் சகலதும் அமைந்துள்ளது. அம்பன் நாகர்கோவில் பக்கம் போவீர்களாயின் புளோரிடாவை ஒத்த பிரதேசம் அங்கும் இருக்கும். இந்த சூழலை ஏன் நாங்கள் வியாபாரமாக்க முடியவில்லை என்பதை முதலில் சிந்தியுங்கள்.

  • Replies 145
  • Views 9.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இரெண்டு விசயம். 

 1. முதலில்,  ஏன் முடியவில்லை?

எமக்கென ஒரு நிர்வாக அலகு இல்லை.  

அந்த அலகுக்கு நிதி சுதந்திரம் இல்லை.

அந்த அலகுக்கு காணிச் சுதந்திரம் இல்லை.

ஆகவே முடியவில்லை.

இப்படி ஒரு அலகு இல்லாதபோது, இருப்பதை வைத்துத்தான் ஏதாவது செய்ய முடியும்.  

யாழ்பாண போதனா வைத்தியசாலை கழிவு கானை சுத்தம் செய்யும் அதிகாரம் மட்டுமே உள்ள மணியிடம் - போய் ஆஸ்பத்திரியை மண்டதீவுக்கு மாற்றுங்கள் என்று சொன்னால் அது எப்படி அறிவுடமையாகும்?

அதே போலத்தான் விக்கியரும். ஏதோ நாங்கள் அற்புதமான ஐடியா சொன்னோம் விக்கி வாளாவிருந்தார் என்பதாக கதை சொல்லப்படாது.

விக்கியர் இலங்கை திறைசேரி மேற்பார்வையில் கூட ஒரு வடக்கு நம்பிக்கை நிதியத்தை அமைக்க முயன்றார். ஆனால் ஒரு அங்குலம்தானும் அசையவில்லை அரசு.

இவ்வளவு ஏன் புலிகள் கூட ஒரு பொது சுனாமி பொறிமுறையை கோரி அதையும் குழப்பியடித்தார்கள்.

இதுதான் வட கிழக்கின் அரசியல் யதார்த்தம் - ஆகவே நாம் நினைத்தபடி இலங்கை சுகாதார அமைச்சின் கீழ், சிவில் விமான அமைப்பின் கீழ் வருபவற்றை எல்லாம், மாற்ற முடியாது.

2. இரெண்டாவது இந்த திட்டங்களின் நடைமுறை சாத்தியம். சிங்கபூர் ஒருநாளில் எழும்பவில்லை. நான் மேலே சொன்ன சகலதும் அமைந்து, லீகுவான்யு போன்ற ஒரு தலைமை வாய்த்தாலும் - மண்டைதீவுக்கும் குருநகருக்கும் பாலம் போடுவது economically viable (லாபம் பார்க்கும் நிலை) வர பல தசாப்தங்கள் எடுக்கும். 

நீங்கள் சொன்ன மேற்கு நாடுகளில் கூட எத்தனையோ தீவுப் பகுதிகள் பாலம் இல்லாமல் உள்ளன - காரணம் அப்படி ஒரு பாலம் கட்டும் அளவுக்கு அங்கே லாபம் வரப்போவதில்லை. 

ஆகவே இன்றைய வட கிழக்கின் பொருளாதார, அரசியல் நிலையோடு பார்த்தால் - இதெல்லாம் நடக்கிறகாரியம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

வடிவாக தெரியவில்லை இப்போ வெளி மாவட்ட  பஸ்நிலையம் (அரச, தனியார்) கோட்டையடிக்கு மாறிவிட்டது?

ஆஸ்பத்திரி வீதி நிலையம் உள்ளூர் சீடிபி பஸ்சுக்கு மட்டும் என நினக்கிறேன்.

உள்ளூர் தனியார் நிலையம் எங்கே என்று தெரியவில்லை.

@ஏராளன் விளக்கம் பிளீஸ்.

எங்க ஊரு நடத்துனர் அண்ணரிடம் விசாரித்த அளவில் அரசு பேரூந்துகள்(நீண்ட/உள்ளூர்) எல்லாமே யாழ் பிரதான பேரூந்து நிலையத்தில் இருந்து தான் புறப்படுகின்றன.
தனியார் பேரூந்துகள் மின்சாரநிலைய வீதியில் இருந்து புறப்படுகின்றன. ஸ்ரீலங்கா தொலைத்தொடர்பு நிலைய வீதியில் இருந்து தனியார் சொகுசு பேரூந்துகள் புறப்படுகின்றன.
நீங்கள் கூறியது போல நகரமயமாக்கல் திட்டத்தின் போது பேரூந்து(நீண்ட தூர) நிலையம் மாற்றப்படபோகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

நன்றி ஏராளன்.

வல்லவன், ரதி அக்கா - நீங்கள் சொன்னதுதான் சரி. தனியார் சொகுசு பேரூந்துகள் மட்டும்தான் நான் சொன்ன படி.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கருத்துக்களத்தில், அவரவர் தமது கருத்துகளை வைப்பது, அவர்களது அடிப்படை உரிமை.

கருத்தில் தவறு இருந்தால் யாரும் திருத்த முடியும். உதாரணமாக கனடா நாடு, இந்தியாவை காலனியாக வைத்து இருந்தது என்றால்.... என்னப்பா சொல்கிறாய்..... எங்கிருந்து எடுத்து வாறாய் என்று கேட்கலாம்.... திருத்தலாம், மோதலாம்.... ஒரு நியாயமும் இருக்கும்

யாழ்பாண நகரை எப்படி மாற்ற முடியும் என்ற கருத்துக்கு, எனது கருத்து வைக்கப்பட்ட போது, அவருக்கு மண்டை காஞ்சிருக்கும், இவருக்கும் காஞ்சிருக்கும் என்று தனிமனித தாக்குதல் செய்வதும், நிர்வாகம் கண்டுகொள்ளாது, இன்னுமோர் உறவு அப்படியே போய்விட்டார் என்று மனதில் தோன்றுவதை எல்லாம் அடித்து விடுவது கருத்துக்கள் அல்ல.

மண்டைதீவுக்கு யாழ் வைத்தியசாலை மாற்ற முடியும் என்ற கருத்துக்கு, அங்கே குடம் தண்ணீர் என்ன விலை தெரியுமா என்பது, சிறுபிள்ளைவாதம்.

எனது கருத்தின் ஆரம்பத்தில் தெளிவாக சொல்லி இருந்தேன், இன்றைய நிலையில் சாத்தியமில்லை. ஒரு சுயாதீனமாக அரச அமைப்பே இதனை சாத்தியமாக்க முடியும் என்று.

வைக்கப்பட்டது, கருத்தல்ல, வீம்பு.

உறவு, சசிவர்ணம் சுட்டிக் காட்டும் வரை நானும் மோதிக்கொண்டுதான் இருந்தேன்.

புரிந்து விலக, தவிர்க்க நிணைக்கிறேன்.

மீண்டும் சீண்டுவதை என்னென்பது?

நான் ஒரு திரியில் அவசரமாக, தமிழில் பதிய முடியா நிலையில் ஆங்கிலத்தில் போட்ட பதிவு, முமுவதும் ஆங்கிலத்தில் இருந்த காரணத்தால் நீக்கப்படது.

அந்த கருத்தில் மாற்றம் இல்லை. குடும்பத்தில், நாட்டில் சிறந்த மருத்துவர் இருந்தாலும், நாமாக நமது நிலை புரிந்து அணுகாமல், தீர்வு இல்லை.

நமக்கு தான் உலக மகா அறிவு இருக்கிறது, அடுத்தவர்கள் அடி முட்டாள்கள் என்று நிணைப்பை, யாருமே மாத்த முடியாது. நிர்வாகம் தான் என்ன செய்ய முடியும்.

அதுவே எனது அனுதாபத்துக்கு காரணம்.

நேரத்துக்கு நன்றி.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்🤣.

47 minutes ago, Nathamuni said:

# சண்டேயில் மண்டை ஏன் விறைக்கிறது? 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Nathamuni said:

எனது கருத்தின் ஆரம்பத்தில் தெளிவாக சொல்லி இருந்தேன், இன்றைய நிலையில் சாத்தியமில்லை. ஒரு சுயாதீனமாக அரச அமைப்பே இதனை சாத்தியமாக்க முடியும் என்று.

மேலே தெளிவாக சொல்லி உள்ளேன். இந்த திட்டங்கள் சுயாதீன தமிழ் அரசு இருந்தாலும் சாத்தியமா என்பது கேள்வி குறியே. 

நீங்கள் என்றாவது மண்டை தீவுக்கு போயுள்ளீர்களா?

மண்டை தீவுக்கு தண்ணீர் பிரச்சனை எவ்வளவு பாரதூரமானது என்று தெரிந்த யாரும் அங்கே ஒரு மாகாண வைத்தியசாலையை நிறுவ மாட்டார்கள்.

துபாய், சிங்கப்பூர் போல தண்ணீரை வாங்கி கொள்ளும் பொருளாதார நிலைக்கு யாழ்பாணம் வந்த பின் இது சாத்தியமாகலாம். 

இதுதான் உங்கள் பிரச்சனை. நீங்கள் வட - கிழக்கின், அரசியல், சமூக, பொருளாதார வாழ்வுக்கு முற்றிலும் அந்நியமானவராக இருந்தபடி, 

தலைவருக்கு யாழ்பாணத்ததை பிடிப்பது பற்றியும், மணிக்கும், விக்கிக்கும் யாழ் நகரத்தை முன்னேற்றுவது பற்றியும், எழுந்தமானமான அறிவுரைகளை கூறுவதாக எழுதுகிறீர்கள்.

நிற்க, ஒரு சுயாதீன அரச அமைப்பே இதை சாத்தியமாக்கும் என்றாலும், அப்போ இதை போய் ஏன் மணியிடமும், விக்கியிடமும் சொன்னீர்கள்?

அப்படி சொன்னால் அவர்களுக்கு மண்டை விறைக்கும் என்பது சரிதானே?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் வைத்தியசாலையை முற்றாக நகர்த்துவது சாத்தியமில்லை ஆயினும், சில பகுதிகளை சாதாரண ( non emergency)  சத்திர சிகிச்சை, மாதாந்த அல்லது தொடர்  சிகிச்சை ( routine) , அல்லது சில குறிப்பிட்ட பிரிவுகளை தீவுப்பகுதி நோக்கி நகர்த்தலாம். 

ஆனால் தீவுப்பகுதிகளை பாரிய அளவில் சுற்றுலா மையமாக அமைக்க சிங்கள பெளத்த பேரினவாதம் ஒரு போதும் அனுமதிக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

நான் ஒரு திரியில் அவசரமாக, தமிழில் பதிய முடியா நிலையில் ஆங்கிலத்தில் போட்ட பதிவு, முமுவதும் ஆங்கிலத்தில் இருந்த காரணத்தால் நீக்கப்படது.

அது மட்டும் காரணம் அல்ல. ஒரு கருத்து களத்தில் கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் சக கள உறவுக்கு மன உளைச்சல் என்பதாக நீங்கள் கீழ்தரமாக எழுதியாலும்தான் அந்த பதிவு நீக்கப்பட்டது.

இபோதும் அதையேதான் கெட்டிதனமாக எழுதுவதாக நினைத்து எழுதுகிறீர்கள் 🤣.

எந்த நோயும் கேலிக்குரியதல்ல. ஒருவரின் நோய் (இருக்கிறதோ இல்ல்லையோ) அவரை தாக்கும் ஆயுதமும் அல்ல. 

உங்கள் மனநிலையை சோதியுங்கள் என அறிவுரை கூறும் நக்கல் என்னை பாதிக்காது, ஏனென்றால் எனக்கு என் மனநிலை பற்றி போதிய தெளிவு உண்டு, ஆனால் அப்படி சொல்பவரின் கீழ்தரம் பற்றி இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தீவக தண்ணீர் பிரச்சனைக்கு ஓரே தீர்வு கடல் நீரை நன்னீராக்குவதே. அதற்கும் தெற்கு அனுமதி அளிக்கணுமே….! 

வடக்கு முன்னாள் ஆளுநர் கூட அண்மையில் தனது முகநூலில் தன்னால்  இரண்டு வருடங்களுக்கு 400m $  செலவில் பருத்தித்துறையில் ஆரம்பிக்கப்பட்ட துறைமுக அபிவிருத்தி திட்டம் விலை மனுக்கோரலுடன் (?) முடிவுக்கு வந்துவிட்டதாக,

இது தொடர்பாக முழுமையாக என்ன நடந்தது என்று கூட அவரால் கூற முடியவில்லை. 

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

யாழ் வைத்தியசாலையை முற்றாக நகர்த்துவது சாத்தியமில்லை ஆயினும், சில பகுதிகளை சாதாரண ( non emergency)  சத்திர சிகிச்சை, மாதாந்த அல்லது தொடர்  சிகிச்சை ( routine) , அல்லது சில குறிப்பிட்ட பிரிவுகளை தீவுப்பகுதி நோக்கி நகர்த்தலாம். 

ஆனால் தீவுப்பகுதிகளை பாரிய அளவில் சுற்றுலா மையமாக அமைக்க சிங்கள பெளத்த பேரினவாதம் ஒரு போதும் அனுமதிக்காது.

நிச்சயம் வளங்களை பரவலாக்கலாம். இதையே பட்டினங்களை தரமுயர்த்தலாம் என்றேன். Sustainable eco tourism ற்கு ஏற்ற இடம்தான் தீவுப்பகுதி.

ஆனால் பேரினவாதம் அதை சிங்கள மயபடுத்தும் வரை செய்யாது.

14 minutes ago, MEERA said:

தீவக தண்ணீர் பிரச்சனைக்கு ஓரே தீர்வு கடல் நீரை நன்னீராக்குவதே. அதற்கும் தெற்கு அனுமதி அளிக்கணுமே….! 

இதுவும் சிங்கள குடியேறல் நடக்கும் வரை நடவாது.

எம்மையும் செய்ய விடமாட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, MEERA said:

தீவக தண்ணீர் பிரச்சனைக்கு ஓரே தீர்வு கடல் நீரை நன்னீராக்குவதே. அதற்கும் தெற்கு அனுமதி அளிக்கணுமே….! 

ஆணையிறவு கடல் நீரேரியை நனனீரேரியாக மாற்றும் திட்டம், மிகச்சிறந்த திட்டம். அதற்கான செலவு பத்து மில்லியன் டொலர்.... வடபகுதி தேவைக்கு அது போதுமானது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

ஆணையிறவு கடல் நீரேரியை நனனீரேரியாக மாற்றும் திட்டம், மிகச்சிறந்த திட்டம். அதற்கான செலவு பத்து மில்லியன் டொலர்.... வடபகுதி தேவைக்கு அது போதுமானது.

நாதம்ஸ் அது மீன்பிடி அபிவிருத்தி, அதற்கு கூட GR ஒத்துவரவில்லை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் மென் கடன் 400m$.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

நிலைமை புரிந்து விலகிப் போக நிணைப்பவனை, வேண்டும் என்றே, இழுத்துப்பிடித்து சீண்டுவது.....

அது ஒருவருக்கு மட்டுமே இந்த தளத்தில் முடியும். வாழ்க. வாழ்த்துக்கள்.

11 minutes ago, MEERA said:

நாதம்ஸ் அது மீன்பிடி அபிவிருத்தி, அதற்கு கூட GR ஒத்துவரவில்லை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் மென் கடன் 400m$.

மீரா, எனது குறிப்பு, நன்னீர் குறித்தது. நீஙகள் சொன்ன விடயத்தை நான் அறிந்திருக்கவில்லை.

இலங்கை  அரசு முறையாக சிந்தித்தால், மத்தள, பலாலிக்கு வந்திருக்குமே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

மீரா, எனது குறிப்பு, நன்னீர் குறித்தது. நீஙகள் சொன்ன விடயத்தை நான் அறிந்திருக்கவில்லை.

இலங்கை  அரசு முறையாக சிந்தித்தால், மத்தள, பலாலிக்கு வந்திருக்குமே.

மருதங்கேணி நன்னீர் விடயம் உட்பட பல. 

தமிழர்கள் எங்கு எந்த விடயத்தை தொடங்கினால் தமக்குள் அடிபடுவார்கள் என்று தெரிந்து தான் சிங்கள பெளத்த பேரினவாதம் ஆரம்பிக்கும் அல்லது தமது கட்சிக்கூடாக எதிர்ப்பை, புரளியை கிளப்பிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகம் திட்டத்தின் நன்னீர் ஒரு போதும் “வட பகுதியின்” தேவைக்கு போதுமானதாக இல்லை. யாழ் நகரின் குடிநீர் தேவையையே இது முற்றாக பூர்த்தி செய்யுமா என்பது சந்தேகம்.

இந்த திட்டம் பற்றி யாழில் அலசப்பட்டுள்ளது பல திரிகளில். 

இந்த திட்டத்தின் ஒரு பகுதி பூர்ர்தியானதால் ஒரு காலத்தில் ஆனையிறவுக்கும், சுண்டி குளத்துக்கும் இடையான கடல்நீரேரி -  உவர்ப்பு குறைய தொடங்கியது. ஆனால் 3 வருடத்தில் தடுப்பு உடைந்து விட்டது.

தவிரவும் இது இருப்பது சுண்டிகுளம் பறவைகள் சரணாலயத்தில். இந்த திட்டம் எழுந்த போது இல்லாத இயற்கைக்கான கரிசனை இப்போ உள்ளது. 

அடுத்து இதன் நீரேந்து பிரதேசமாக அமைய போவது வன்னி பகுதி - வன்னியில் குளங்களின் உபரி நீரை இங்கே திருப்பி விடும் ஆலோசனையும் உள்ளது. 

ஆனால் வளர்ந்து வரும் கிளிநொச்சி இதர பகுதிகளுக்கே நீர் பற்றாகுறை இருக்கும் போது, வன்னியில் மேலும் குளங்களை செம்மை படுத்தி உபரி நீரை சேகரித்து வன்னியின் தேவைக்கு பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் நியாயமானதே.

இந்த திட்டத்தின் நிதி மதிப்பீடு ஏதும் அண்மை காலங்களில் நடந்ததாக நான் அறியவில்லை. நிச்சயம் 10 மில்லியன் யூ எஸ் என்பது பல பத்தாண்டுகளுக்கு முற்பட்டதாயே இருக்க வேண்டும்.

இனவாதத்தை தவிர்த்து பார்த்தாலும் யாழின் குடிநீர் பிரச்சனை சிக்கலானது.

பலாலிய கிளப்புறம், உறாத்துறையில இறக்கிறம் என்பது போல் விடயம் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் போதான வைத்தியசாலையை இடம் மாற்றுவது பற்றி சில வருடங்களுக்கு முன் கதை அடிபட்டது.மற்றது வெளி மாவட்ங்களுக்கான பேருந்துகள் துரையப்பா தானத்துக்கு அண்மையில் திறந்து வைக்கப் பட்டது.ஆனால் நடைமுறைப் படுத்துவதில் பேருந்து சங்கத்தின் ஒத்துளைப்பு கிடைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, சுவைப்பிரியன் said:

யாழ் போதான வைத்தியசாலையை இடம் மாற்றுவது பற்றி சில வருடங்களுக்கு முன் கதை அடிபட்டது.மற்றது வெளி மாவட்ங்களுக்கான பேருந்துகள் துரையப்பா தானத்துக்கு அண்மையில் திறந்து வைக்கப் பட்டது.ஆனால் நடைமுறைப் படுத்துவதில் பேருந்து சங்கத்தின் ஒத்துளைப்பு கிடைக்கவில்லை.

யாழ்பாண ஆஸ்பத்திரியை கிளப்பி போட்டு அங்கே ஒரு வணிக வளாகம் கட்டலாம் என யாரும் 10% பேர்வழிகளுக்கு ஆலோசனை கொடுத்திருக்க கூடும்🤣.

அப்போ புதிதாக திறந்த பேரூந்து நிலையம் சிவனே என்று கிடக்கிறதா? சங்கத்துக்கு மாறுவதில் என்னவாம் பிரச்சனை?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

அப்போ புதிதாக திறந்த பேரூந்து நிலையம் சிவனே என்று கிடக்கிறதா? சங்கத்துக்கு மாறுவதில் என்னவாம் பிரச்சனை?

புது இடத்தில இவை பயனிகளுக்கு காத்திருக்க அங்கு யாழ் மத்தியிலிருந்து கொத்தாக அள்ளிக் கொன்டு போகிறார்களாம்.லொக்டவுன் முடிய நேரில் பார்தது கடைசி நிலமையை சொல்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, சுவைப்பிரியன் said:

புது இடத்தில இவை பயனிகளுக்கு காத்திருக்க அங்கு யாழ் மத்தியிலிருந்து கொத்தாக அள்ளிக் கொன்டு போகிறார்களாம்.லொக்டவுன் முடிய நேரில் பார்தது கடைசி நிலமையை சொல்கிறேன்

நன்றி.  இதுக்காக அலையவேண்டாம். போகும் போது விசாரியுங்கோ🙏🏾.

நியாயமான பிரச்சனைதான். எல்லாரையும் பக்கத்தில பக்கதில போடுறதுதான் நல்லம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

மற்றது வெளி மாவட்ங்களுக்கான பேருந்துகள் துரையப்பா தானத்துக்கு அண்மையில் திறந்து வைக்கப் பட்டது.ஆனால் நடைமுறைப் படுத்துவதில் பேருந்து சங்கத்தின் ஒத்துளைப்பு கிடைக்கவில்லை.

யார் திட்டம் இடுகிறார்கள் என்று தெரியவில்லை.

என் புகையிரத நிலையம் முன்பு இடம் இல்லையா?

வெளியில் வருபவர்கள், புகையிரத நிலையம் என்றால், வேறு எங்கும் செல்வதற்கு மத்தி அல்லவா? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

யாழ் வைத்தியசாலையை முற்றாக நகர்த்துவது சாத்தியமில்லை ஆயினும், சில பகுதிகளை சாதாரண ( non emergency)  சத்திர சிகிச்சை, மாதாந்த அல்லது தொடர்  சிகிச்சை ( routine) , அல்லது சில குறிப்பிட்ட பிரிவுகளை தீவுப்பகுதி நோக்கி நகர்த்தலாம். 

பொதுவான வைத்திய சேவைகளை பொதுவாக பிரிக்க முடியாது.

எக்கணத்தில், அவசரம் இல்லாத சிகிக்சை, அவசரம் ஆகிறது என்பது ஒருவராலும் தீர்மானிக்க முடியாது.  

அப்படியானல், மேற்றகில் இருக்கும் gp முறையை  ஒத்த , அதை நடைமுறைப்டுத்துவதற்கு உப வைத்திய நிலயங்கள்   (முழுமையாக அல்ல) பொருத்தமானதாக இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

உண்மைதான்..

பழைய கால கட்டிடங்களை  அவற்றின் அமைப்பு கெடாமல் பராமரித்து பாதுகாக்க முடியும்..ஆனால் அதை செய்ய நினைப்பவர்கள் குறைவு..நகரை அழகுபடுத்துகிறோம் என கூறிக்கொண்டு தடுத்து நிறுத்தவேண்டிய செயல்களை செய்யாமல் நகரின் அழகை கெடுப்பதாகவே முடிகிறது.. 

இந்த கட்டுரையில் உள்ள படம்1 கட்டிடத்திற்கு ஏன் மஞ்சள் கலரில் paint அடித்துள்ளார்கள்🤦🏽‍♀️ 

இப்படித்தான் ஒவ்வொரு முறையும் யாழ்பாணம் போகும் பொழுது அங்கு எழுப்படும் கட்டிடங்களையும் அவற்றின் அமைப்பையும் பார்த்துவிட்டு பேசாமல் வந்துவிடுவேன்

என்னைப்பொறுத்தவரையில் யாழ்ப்பாணம், யாழ் மாவட்டம் என்ற இடத்திற்கும் அங்குள்ள மக்களின் தேவைகளுக்கு ஏற்பவும் வளங்களுக்கு ஏற்பவுமே திட்டங்களை அதிகாரத்தில் உள்ளவர்கள் வகுக்கவேண்டும் என நினைக்கிறேன்.. இன்றைய நிலையில் எது அவசியமானது என்பதையும் இன்னுமொரு 10 வருடங்களில் சனத்தொகை அளவு, தேவைகள் எப்படி அண்ணளவாக எதிர்வுகூறல் என நகரவடிவமைப்பு திட்டமிடல் இருக்கவேண்டும் என்று கொஞ்சம் கூடுதலாக பகற்கனவும் காண்பதுண்டு.. ஆனால்  எப்பொழுது செய்யக்கூடிய/அதிகாரத்திற்குட்பட்ட சிறு சிறு திட்டங்களையும் கைவிட்டார்களோ அன்றிலிருந்து பகற்கனவு காண்பது இல்லை..

அவசரத்தில் கட்டி முடிக்கப்பட்ட பலாலி சர்வதேச விமான நிலையம்

கைவிடப்பட்ட யாழ்ப்பாண மாணவர்களின் கல்வி சம்பந்தமான மறு சீரமைப்பு திட்டம்

உள்ளூர் வளங்களை பற்றிய அசட்டை

தேவைக்கு அதிகமான வணிக கட்டிடங்கள் பாவனையின்றி உள்ளது..

தோட்டங்கள் ???

குளங்களின் சீரமைப்பு

இப்படி எத்தனை

இவையெல்லாம் அரைகுறையாக இருக்கும் பொழுது யாழ் போதனாவைத்திய சாலையை இடம் மாற்றுவதோ, யாழ் நகரை வேறு இடத்திற்கு மாற்றுவது என்பதோ தேவையற்ற ஒன்று.. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

பொதுவான வைத்திய சேவைகளை பொதுவாக பிரிக்க முடியாது.

எக்கணத்தில், அவசரம் இல்லாத சிகிக்சை, அவசரம் ஆகிறது என்பது ஒருவராலும் தீர்மானிக்க முடியாது.  

அப்படியானல், மேற்றகில் இருக்கும் gp முறையை  ஒத்த , அதை நடைமுறைப்டுத்துவதற்கு உப வைத்திய நிலயங்கள்   (முழுமையாக அல்ல) பொருத்தமானதாக இருக்கலாம். 

நீங்கள் சொல்வதில் நியாயம் உள்ளது. எனக்கு இது பற்றி அதிகம் தெரியாது. 

குடாநாட்டில், இங்கு உள்ள AnE போல் இருக்கும் ஒரே வைத்தியசாலை யாழ் என்றே நினைக்கிறேன்?

அப்படியாயின், குறைந்த பட்சம் வடமராட்சி, தென்மராச்சியில் இருக்கும் ஆஸ்பத்திரிகள் இரெண்டை இப்படி ஒரு நிலைக்கு தரமுயர்த்துவது பயன் தரலாம்?

இலங்கையில் அண்மையில்தான் அம்புலன்ஸ் 999 போன்ற சேவை அறிமுகமானது. எப்படி போகிறதோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

உண்மைதான்..

பழைய கால கட்டிடங்களை  அவற்றின் அமைப்பு கெடாமல் பராமரித்து பாதுகாக்க முடியும்..ஆனால் அதை செய்ய நினைப்பவர்கள் குறைவு..நகரை அழகுபடுத்துகிறோம் என கூறிக்கொண்டு தடுத்து நிறுத்தவேண்டிய செயல்களை செய்யாமல் நகரின் அழகை கெடுப்பதாகவே முடிகிறது.. 

இந்த கட்டுரையில் உள்ள படம்1 கட்டிடத்திற்கு ஏன் மஞ்சள் கலரில் paint அடித்துள்ளார்கள்🤦🏽‍♀️ 

இப்படித்தான் ஒவ்வொரு முறையும் யாழ்பாணம் போகும் பொழுது அங்கு எழுப்படும் கட்டிடங்களையும் அவற்றின் அமைப்பையும் பார்த்துவிட்டு பேசாமல் வந்துவிடுவேன்

என்னைப்பொறுத்தவரையில் யாழ்ப்பாணம், யாழ் மாவட்டம் என்ற இடத்திற்கும் அங்குள்ள மக்களின் தேவைகளுக்கு ஏற்பவும் வளங்களுக்கு ஏற்பவுமே திட்டங்களை அதிகாரத்தில் உள்ளவர்கள் வகுக்கவேண்டும் என நினைக்கிறேன்.. இன்றைய நிலையில் எது அவசியமானது என்பதையும் இன்னுமொரு 10 வருடங்களில் சனத்தொகை அளவு, தேவைகள் எப்படி அண்ணளவாக எதிர்வுகூறல் என நகரவடிவமைப்பு திட்டமிடல் இருக்கவேண்டும் என்று கொஞ்சம் கூடுதலாக பகற்கனவும் காண்பதுண்டு.. ஆனால்  எப்பொழுது செய்யக்கூடிய/அதிகாரத்திற்குட்பட்ட சிறு சிறு திட்டங்களையும் கைவிட்டார்களோ அன்றிலிருந்து பகற்கனவு காண்பது இல்லை..

அவசரத்தில் கட்டி முடிக்கப்பட்ட பலாலி சர்வதேச விமான நிலையம்

கைவிடப்பட்ட யாழ்ப்பாண மாணவர்களின் கல்வி சம்பந்தமான மறு சீரமைப்பு திட்டம்

உள்ளூர் வளங்களை பற்றிய அசட்டை

தேவைக்கு அதிகமான வணிக கட்டிடங்கள் பாவனையின்றி உள்ளது..

தோட்டங்கள் ???

குளங்களின் சீரமைப்பு

இப்படி எத்தனை

இவையெல்லாம் அரைகுறையாக இருக்கும் பொழுது யாழ் போதனாவைத்திய சாலையை இடம் மாற்றுவதோ, யாழ் நகரை வேறு இடத்திற்கு மாற்றுவது என்பதோ தேவையற்ற ஒன்று.. 

இங்கே யூகேயில் (ஏனைய நாடுகளிலும் இருக்கும்) கட்டிடங்களை வரலாற்று முக்கியம் கருதி grade 1, 2 என பட்டியல் இடுவார்கள். கட்டிட சொந்தகாரார் நினைத்தாலும் கட்டிடத்தை அனுமதி இல்லாமல் ஒரு சின்ன மாறல் கூட செய்யமுடியாது.

மந்திரி மனை எமது Grade 1 listed building ஆனால், சிதிலமடைந்து, காதலர்,  நீண்டதூர டிரைவர்மார், நாய்களின் வதிவிடமாக இருக்கிறது.

இப்படி சந்தைகள், இன்னும் பல 70-100 ஆண்டுகள் மேலான அடையாள சின்னங்கள் அழிந்து போகிறன🙁.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.