Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Ebay-ல் விடுதலைப் புலிகளின் சீருடையில் பெண்களுக்கான நீச்சல் உள்ளாடைகள்- தமிழர்கள் கொந்தளிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Ebay எனப்படும் ஆன்லைன் விற்பனை இணையதளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகளில் பெண்களுக்கான நீச்சல் உள்ளாடைகள் விற்பனை செய்யப்படுவது தமிழர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

விடுதலைப் புலிகள் இயக்கம், உலக அளவிலான ஆயுதக் குழுக்களில் கட்டுப்பாட்டையும் கண்ணியத்தையும் கடைபிடித்த ஒன்று என்பதை சர்வதேச ஆய்வாளர்கள் பலரும் பதிவு செய்திருக்கின்றனர். விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் கட்டுக்கோப்புடன் செயல்பட்டதையும் அவர்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். அமெரிக்கா மீதான இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் உலக நாடுகளின் அடிப்படை கோட்பாடுகள் அடியோடு மாறிப் போயின. தேசிய இனத்துக்கான விடுதலைப் போராட்டம் நடத்திய விடுதலைப் புலிகள் கூட பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டனர். இதனால் உலக நாடுகள்பலவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்தன. அங்கிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பின்னடைவும் தொடங்கிவிட்டது.

புலிகள் சீருடை விடுதலைப் புலிகள் இயக்கம் முப்படைகளையும் கொண்டிருந்தது. ஒவ்வொரு படையணிக்கும் தனித்தனி சீருடைகள் உருவாக்கப்பட்டிருந்தன. அமைதிப் பேச்சுவார்த்தை காலம் தவிர பொதுவாக தலைவர் பிரபாகரன் முதல் சாதாரண இயக்க உறுப்பினர் வரை புலிகளின் சீருடைகளில்தான் வலம் வருவர். புலிகளின் சீருடையை புனிதப் பொருளாகவே அவர்கள் கருதினர்.

பெண்களின் நீச்சல் உடைகள் அத்தகைய விடுதலைப் புலிகளின் முப்படைகளின் சீருடைகளில் தற்போது பெண்களுக்கான நீச்சல் உள்ளாடைகள் வடிவமைக்கப்பட்டு Ebay எனப்படும் இணையதளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவது தமிழர்களை கொதிப்படையச் செய்திருக்கிறது. அதுவும் Sri Lankan LTTE Sea Tigers Cactus Camouflage One-Piece Swimsuit என்ற பெயரிலேயே இந்த விற்பனையும் நடைபெற்று வருகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/ebay-sales-ltte-camouflage-swimsuit/articlecontent-pf600124-434513.html

 

  • கருத்துக்கள உறவுகள்

கொந்தளிச்சமாதிரித் தெரியலியே...🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்காவை தெரியாமேலே லங்காவின் வாசனை பொருள்கள் போன்றவற்றை ஈபே யில் வித்து கொடிகட்டி பறக்கும்  வெள்ளைகளும்  உண்டு.அதுபோல் megacamo(734) 100.0% இந்த ஐடி யில் இருந்து உலக நாட்டு ராணுவங்களின் சீருடைககளை விற்கிறார் பிரான்ஸ் ல் 39 Rle de Kereliza, 56000 Vannes, France இந்த முகவரியில் இருந்து அவரின் வியாபார தொடர்பு நம்பர் .0980923635

Business Info


 

Business name:ATC Erwan Martineau
 
First name:Erwan
 
Last name:Martineau
 
Address:39 ruelle de kereliza
56000
Vannes
FR
 
Phone number:0980923635
 
Email address:sabaister@gmail.com
 
போனில் விசாரித்தபொழுது தான் பிரஞ்சு என்கிறார் ஆங்கிலம் சரளமாக உரையாடுகின்றார் . அவரின் நேரடி இணைப்பு முகவரி https://www.ebay.com/str/allthecamo

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

உலகமெங்கும் ராணுவ சீருடையில் சூட்கேசிலிருந்து உள் ஆடைகள் வரை தைத்து கொள்வார்கள்.

அமெரிக்க ஐரோப்பிய தேசிய கொடிகளில் ஜட்டி பிராவிலிருந்து காலுக்கு சப்பாத்து சொக்ஸ் கூட செய்வார்கள்.

இதெல்லாம் அர்த்தமற்ற செய்திகளை தூக்கி பிடித்து வெற்று விளம்பரம் தேடும் செயல் அன்றி விடுதலை புலிகளுக்காய் விசுவாசமாய் எழுப்பும் குரல் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

உலகமெங்கும் ராணுவ சீருடையில் சூட்கேசிலிருந்து உள் ஆடைகள் வரை தைத்து கொள்வார்கள்.

அமெரிக்க ஐரோப்பிய தேசிய கொடிகளில் ஜட்டி பிராவிலிருந்து காலுக்கு சப்பாத்து சொக்ஸ் கூட செய்வார்கள்.

இதெல்லாம் அர்த்தமற்ற செய்திகளை தூக்கி பிடித்து வெற்று விளம்பரம் தேடும் செயல் அன்றி விடுதலை புலிகளுக்காய் விசுவாசமாய் எழுப்பும் குரல் அல்ல.

ட்றம்பின்… படம் போட்டு, ஆண்களின் ஜட்டி வந்த வேகத்தில்… விற்று விட்டது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

ட்றம்பின்… படம் போட்டு, ஆண்களின் ஜட்டி வந்த வேகத்தில்… விற்று விட்டது. 🤣

ஒருக்கா யாரோ ஒரு தலைவரின் படம் போட்டு ரொய்லெற் பேப்பர் வித்தாங்களாம், ஒவ்வொருக்காலும் துடைச்சு எறியேக்க அவர் எவ்வளவு பீல் பண்ணியிருப்பார்  அது இன்னும் எவ்வளவு கேவலம்,

பின்லேடன்ற படமும் இரட்டை கோபுர தாக்குதலின் பின்னர் ரொய்லெற் பேர்ல அடிச்சு விட்டவங்கள் ...

நாத்தமோ நமக.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளைக் காட்டிக்கொடுத்து உழைக்குதுகள் ஒரு பக்கம்.. புலிகளை கூட இருந்து அழிச்சு உழைக்குதுகள்.. புலிகளை அடைச்சு வைச்சு உழைக்குதுகள்.. புலிகளின் பெயரை பல வகையிலும் உச்சரிச்சு அரசியல் செய்து உழைக்குதுகள்.. புலிகளின் பெயரில் உண்டியல் குலுக்கி உழைக்குதுகள்.. புலிகளின் பெயரில் இல்லாதது பொல்லாததுகளை எல்லாம் எழுதி உழைக்குதுகள்..

அப்படிப் பார்க்கேக்க.. இது புலிகளின் அடையாளத்தை உலகம் மறைக்க விரும்பவில்லை என்பதாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த செய்தி தொகுப்பாளருக்கு நீச்சல் உடைதான் கண்ணில் பட்டிருக்கு..

ஆனால் பல வித இராணுவ சீருடைகளுக்கு ஒத்து புலிகளின் சீருடையும் அமையுது.. பல உடுப்புக்கள் வந்துள்ளன.

https://www.ebay.com/itm/254842544130?_trkparms=amclksrc%3DITM%26aid%3D1110018%26algo%3DHOMESPLICE.COMPLISTINGS%26ao%3D1%26asc%3D234212%26meid%3D504f65584ef3408a9489f842ad74a298%26pid%3D101111%26rk%3D4%26rkt%3D12%26sd%3D254985798164%26itm%3D254842544130%26pmt%3D1%26noa%3D0%26pg%3D2563228%26algv%3DThematicAlgo&_trksid=p2563228.c101111.m2109&amdata=cksum%3A254842544130504f65584ef3408a9489f842ad74a298|enc%3AAQAGAAAB8EBwubJWjIdEzxzwKuMo1Je8ISoWXsrAQ4RqgGHnLNs3c2FXc8PqgCmZZZeHgQLZTSj4%2BW8xx5SCwVH4yBt7KURdWyOiSWD6UjJVMW6j80wTbfxHjuX2iNxRt9s0whpH5cESl21E%2FkKGQFVEU%2FBx%2BXXSK%2Fhjp7qQkq2FrtWZf78M93%2FTe8imizLFJk%2BVnQpn6usn038owChxmQAkxgjkyHr1z1aBkibXvJzliN%2FtpPMhBabqnf81zpWEcMBymGBOzR1fpUJOWdvUboegS7YNsGfNTWs6xFIJuSMZ%2FeM59CoutmlRqnxlI3aY6zIe0hghfSLRf4W0kFAoQumktadLoA9V6EfCVWJCscYY3IF7R%2BJYZcDTmWANGGsdrilvWrqHO5n9GD8ptBusBsPYX%2B4hlnhY80x5SxcWikxYpGg1MFgOpVnGdti1byf1HRpR7vzhGe5dZA0oJSWwtoNeytwsdag0CJzu6AlaLH0R7XtL%2FgHQAfYUzzrBO9OYi8Z99d7JD8OPbebMqfzxv82iCRoRejwsO5HMmyZZuG5J8pxWKAsXMb%2FgTDDmVPKN7CyQTcY3XFhfIvwZdw39hhzcFBhzWH2%2FfCaDYKaDoyIhzkuVArl4PGvjyuxFprV5knMq7U0LvWiT4nkgBOCXp9LtOWMxQoo%3D|ampid%3APL_CLK|clp%3A2563228

 

https://www.ebay.com/itm/254970375433?_trkparms=amclksrc%3DITM%26aid%3D1110018%26algo%3DHOMESPLICE.COMPLISTINGS%26ao%3D1%26asc%3D234212%26meid%3D504f65584ef3408a9489f842ad74a298%26pid%3D101111%26rk%3D3%26rkt%3D12%26sd%3D254985798164%26itm%3D254970375433%26pmt%3D1%26noa%3D0%26pg%3D2563228%26algv%3DThematicAlgo&_trksid=p2563228.c101111.m2109&amdata=cksum%3A254970375433504f65584ef3408a9489f842ad74a298|enc%3AAQAGAAAB8EBwubJWjIdEzxzwKuMo1Je8ISoWXsrAQ4RqgGHnLNs3c2FXc8PqgCmZZZeHgQLZTZ2%2FXEgiDNB3pN%2BFzhqpIwToQunxWUVPBC9SP1YfmAbqj9KE%2B4v92zQJzr8MXkxbOWarHJ88uDfFuUKQmyxxw%2Fr8%2FlwJal3T1R%2BT3ByVMlgdHoi82vFULFmmaeypmiCOQm0oYqLvwb91mUV2zi8LP7TAGd1mB8AEyTBVlVmh17o19TUi5YJrRL85tsk2%2FWaAkFDFIf4RdVxsCVCsAnDsrrrU1im88r5K7FE81yS4Ji3azxwY5YmkPbFPA8tAkCY1KbT8rCqVXlh%2Fo%2F7bQFRntbObid2RPq9fqvXF71BqmLbUCiBFDU%2Bh6t16jtZt20sMQUwzmDer05JpxUDWndu3Bnh7tetOjUnfSSjnTChCBgrt4xeXYmRMFAgQizXazBNrV0Vt85HTMPRgkXPWQ7Kxxho%2Fppt0CZ0%2Fljm7M%2FDMzbdQyKf5XcFk4P1Yync3yE1aDd%2FT%2Fd8wzlrNTeB6Ef5mllhnSiInQhisOXt6b69orz2vOUrpLPUNMZ3pwNF1Kaa%2Fkog6pXgwPgytqg4whMqA0wqhVwHCPkCaMI2o8SGFTh1sCyT8opDQyJtrDtVu24joPp8T5WDGm3UfoIgzDDulMbo%3D|ampid%3APL_CLK|clp%3A2563228

  • கருத்துக்கள உறவுகள்+

எடக் கடவுளே..

இப்பதான் இந்தச் செய்தியைப் பார்த்தனான். 

மாக்களே, இது 4/5 வருடமாக இணையத்தளத்தில் விற்பனைக்காக வலம் வருகிறது... இதுவொன்றும் புதிதல்ல. 

2018இலே, நான் இதைக் கண்டிருக்கிறேன். இதனுள் கடற்புலி, கரும்புலி, வான்புலி, தரைப்புலி என தமிழரின் நாற்படைகளின் உருமறைப்புடையிலும் சப்பாத்து, உள்ளாடை முதல் கணுத்துணி(gaiter) வரை பல வகையான ஆடைகள் விற்பனைக்கு போட்டுள்ளார்கள். 

என்னைப் பொறுத்தவரை எமது நினைவுகளையே அழிக்க நினைக்கும் சிங்களத்திற்கு தண்ணிகாட்டும் எமது வேலைக்கு இவர்கள் ஒத்துளைக்கின்றனர், அவ்வளவுதான். 

இந்த விற்பனைக்கு நான் ஆதரவு. இது என் நிலைப்பாடு.

இதைவைத்து இந்த இந்திய வலைத்தளம் காசு பார்க்க எண்ணினால், .... நடவாது ராசா!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.