Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலியாணம் கட்டுவதற்கு மூளை தேவையில்லை?

23 members have voted

  1. 1. கலியாணம் கட்டுவதற்கு மூளை தேவையா?

    • ஆம்! [திருமணம் செய்தவர்]
      7
    • ஆம்! [இன்னும் திருமணம் செய்யவில்லை]
      8
    • இல்லை! [திருமணம் செய்தவர்]
      2
    • இல்லை! [இன்னும் திருமணம் செய்யவில்லை]
      6

Please sign in or register to vote in this poll.

Featured Replies

எம்மைச் சுற்றி இருப்பவர்கள் எம்மிடம் எப்போதும் கேள்விகள் கேட்டு தொல்லைப்படுத்துவது வழமை. இதில் கேட்கப்படும் கேள்விகளில் முக்கியமான ஒன்று எப்போது நீ கலியாணம் கட்டப்போறாய் என்பது. ஏதாவது கேட்கவேண்டும் என்பதற்காக, என்னிடமும் பலர் இந்த கேள்வியை அடிக்கடி கேட்டு செய்து தொந்தரவு செய்யத் தொடங்கியதால் நான் இவர்களிற்காக ஒரு Standard பதிலை உருவாக்கி வைத்துள்ளேன்..

"படிப்பு முதலில முடிய வேணும், பிறகு இன்னும் நல்ல ஒரு வேலை கிடைக்கவேணும், பிறகு நல்ல ஒரு வீடு வாங்க வேணும், இதவிட, எனக்கு கனகாலமா இங்கஇருந்து அலுத்துப் போச்சு! வேற ஏதாவது நாட்டுக்கு மூவ் பண்னுற ஐடியாவும் இருக்கு.."

"ஓ அப்பிடியே?" இந்த பதிலோட கதை முடிவுக்கு வரும்... ஆனால், என்னை அண்மையில் இரண்டு பெரியவர்கள் சேர்ந்து கேள்விகள் கேட்டு மடக்கத்தொடங்கினார்கள். நானும் கலியாணம் கட்டாமல் இருப்பதற்கு ஒவ்வொரு காரணமா சொல்லிக்கொண்டு இருக்க அவேளும் என்னை விடுறபாடா இல்லை. என்னை குழப்பி நுணுக்கமான முறையில் கேள்விகள் கேட்கத் தொடங்கினார்கள். இறுதியில் எனது திறமையை பாவித்து அவர்களை சமாளித்து விட்டேன். அவர்களுடன் நடந்த உரையாடலில ஒரு சுவாரசியமான விடயம்.. கடைசியில அவர்கள் இப்படி எனக்கு அறிவுரை சொன்னார்கள்..

"உங்களுக்கு உண்மையச் சொல்லவேணுமா இருந்தா, கலியாணம் கட்டுறதுக்கு மூளையே தேவையில்ல. நாங்கள் மூளை இல்லாமல்தான் கலியாணம் செய்தனாங்கள். ஆனா இப்ப நல்ல சந்தோசமா இருக்கிறம்... அதுதான் சொல்லிறம் நீங்கள் கலியாணம் கட்டுறதுக்கு படிப்பு எல்லாம் தேவையில்ல. இப்பயே கட்டலாம்!"

இவர்களின் பதிலை நான் இன்று மீண்டும் நினைத்துபார்த்துவிட்டு இந்த கருத்தாடலை ஆரம்பிக்கின்றேன்.

இங்கு முக்கியமான ஒரு விசயம், மூளையை பாவித்து கலியாணம் கட்டினவர்கள் வாழ்க்கையில் சந்தோசமாக இருக்கின்றார்களா, வாழ்வில் நிம்மதியாக இருக்கின்றார்களா என்பது!

நான் அறிந்தவரை மூளையை பாவித்து கலியாணம் செய்தவர்களைவிட சாதாரணமாக கலியாணத்தை எதிர்கொண்டவர்கள் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ்கின்றார்களோ என தோன்றுகின்றது. வெற்றிகரமாக குடும்பம் நடாத்துவதற்கு மூளை அவசியம் என்பது உண்மை. ஆனால், மூளை இல்லாதவர்களால் சந்தோசமாக வாழமுடியாதா என்பதும் கேள்விக்குறியே? மேலும், வாழ்க்கையில் சந்தோசமாக இருப்பதற்கும் மூளையை பாவிப்பதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றது என நீங்கள் நினைக்கின்றீர்களா?

கலியாணம் என்பது தீர்க்கமாக ஆராய்ந்து மிகவும் கவனமாக எடுக்கப்படவேண்டிய முடிவு இல்லையா? சும்மா எடுத்த எடுப்பில் மூளையை பாவிக்காமல் ஒருத்தியை/ ஒருவனை திருமணம் செய்யமுடியுமா? திருமணம் செய்வதற்கென்று ஒரு தகுதி/தகமை தேவையில்லையா? இந்த தகுதிகள்/ தகமைகள் மூளை இல்லாத நிலையில்/ பாவிக்கப்படாத நிலையில் உருவாக்கப்படமுடியுமா?

இவற்றைப் பற்றிய உங்கள் எண்ணங்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள். முக்கியமாக ஏற்கனவே கலியாணம் கட்டிய இங்குள்ள பெரிசுகள் வெட்கத்தை மறந்து உண்மையை விளம்பினால் நம்மைப்போன்ற பச்சிளம் குழந்தைகளிற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

உங்கள் கருத்துக்களை பார்த்தபின் எனது மிகுதி எண்ணங்களை, சிந்தனைகளை தொடர்கின்றேன். நன்றி! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்யாணம் செய்யிறதுக்கும் மூளைக்கும் என்ன சம்மந்தம்? எனக்கு புரியேலை. :)

  • தொடங்கியவர்

என்னைக்கேட்டால் எப்படி? எனக்கு தெரியாதபடியால்தான் நாலு விசயம் தெரிஞ்ச உங்களிடம் கேட்டுள்ளேன். ஆனாலும், நான்குபேர் கலியாணம் கட்டுவதற்கு மூளை தேவை என்று கருத்துக்கணிப்பில் தெரிவு இட்டுள்ளார்களே? இவர்கள் ஏன் என்ற விளக்கம் தருவார்களா?

"உங்களுக்கு உண்மையச் சொல்லவேணுமா இருந்தா, கலியாணம் கட்டுறதுக்கு மூளையே தேவையில்ல. நாங்கள் மூளை இல்லாமல்தான் கலியாணம் செய்தனாங்கள். ஆனா இப்ப நல்ல சந்தோசமா இருக்கிறம்... அதுதான் சொல்லிறம் நீங்கள் கலியாணம் கட்டுறதுக்கு படிப்பு எல்லாம் தேவையில்ல. இப்பயே கட்டலாம்!"

இப்படி எனக்கு ஒரு அறிவுரை தரப்பட்டது..

நீங்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு நல்ல வழியை எனக்கு காட்டுவீங்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த தலைப்பை இங்கு நான் ஆரம்பித்துள்ளேன்.

நானும் ஆம் என்று தான் கருத்துக்கணிப்பில் தெரிவு செய்தேன். அறிவாளியாக இருக்கவேண்டும் என்ற ஒரு நப்பாசை தான் அதற்கு காரணம். வேறு இரசியம் இல்லை. பிறகு கலியாணம் கட்டினாப்பிறகு ஒரு முட்டாள் மாதிரி கலியாணம் கட்டிபோட்டன் என்று கவலைப்படக்கூடாது தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலியாணம் கட்டுவதற்கு மூளை சிறிதளவாவது தேவை என்று தான் நினைக்கிறேன். ஏனெனில் மூளை இருந்தால் தானே நீங்கள் கலியாணம் கட்டுபவர் உங்களோடு ஒத்து போககூடியவரா என்று அறியலாம் அத்துடன் அவரது பழக்க வழக்கம், விருப்பு வெறுப்பு, இலட்சியங்களை அறிந்தால் தானே அவருடன் நிம்மதியாக இல்வாழ்க்கை நடத்த முடியும்.

நான் யாரை திருமணம் செய்ய என்று முடிவெடுக்க எனக்கு மூளை தேவையாக இருந்தது. ;)

மாப்பி நம்ம அறிவுக்கு ஒன்று தோன்றிச்சு சொல்லுறேன் அதாவது திருமணம் செய்ய ஒரு ஆணும்,பெண்ணும். ஒரு ஜயர் அன்ட் தாலி இருந்தா காணும் என்று நினைகிறேன்........இதை விட என்ன தேவை............ஆனால் திருமணம் கட்டி வாழ்வதிற்கு அறிவு தேவை.........என்று நினைகிறேன்........அத்தோட இப்ப சில பேர் சொல்லுவீனம்..........அறிவில்லாதவர?கள் தானாம் திருமணம் செய்வீனம் என்று..........நீங்களே பச்சை குழந்தை என்றா நான் கைகுழந்தை எனக்கு இதை பற்றி இவ்வளவு தான் தெரியும்.......தெரிந்ததை சொல்லிபோட்டேன்...........

அப்ப வரட்டா........... :P

Edited by Jamuna

ம்ம் நானும் ஆம் எண்டுதான் போட்டனான்.கல்யாணம் கட்டமுதல் கொஞ்சம் யோசிக்கனும். நாமளும் படிச்சு ஒரு வேலைக்கு போவதற்கு நம்மள தாயார் பண்ணிக்கனும்.அதேமாதிரி கல்யாணம் கட்டிக்க போறவர் அவரும் அதே மாதிரி தயார் படுத்தி இருக்கனும். நெடுக அம்மா அப்பா, எல்லாம் எங்களுக்கு தர மாட்டினம் . சும்மா கண்டதும் காதல் அப்புறம் படிப்பெல்லாம் விட்டுட்டு அம்மா அப்பாவை எதிர்த்துக் கொண்டு கல்யாணம். அதுக்கு பிறகு வேலையில்லாமல், இருக்க வீடு இல்லாமல் ,இப்படி நிறைய கஸ்டங்கள் வரலாம். இப்படியும் நடக்குது!

படிப்பு முதலில முடிய வேணும், பிறகு இன்னும் நல்ல ஒரு வேலை கிடைக்கவேணும், பிறகு நல்ல ஒரு வீடு வாங்க வேணும், இதவிட, எனக்கு கனகாலமா இங்கஇருந்து அலுத்துப் போச்சு! வேற ஏதாவது நாட்டுக்கு மூவ் பண்னுற ஐடியாவும் இருக்கு.."

கலைஞன், படிப்பு முடியனும் ஒகே .... நல்ல வேலை கிடைக்கனும் அதுவும் ஒகே! அதென்ன பிறகு ஒரு நல்ல வீடு வாங்கனும் ? வாடகவீடுல இருந்தால் வாழேலாதா..... ஏன் எண்டால் படிப்பை முடிச்சு, வேலை செய்யவே வயது வந்திடும். அதுக்கு பிறகு சொந்த வீடு வாங்குற அளவுக்கு மிச்சப்படுத்தி உழைக்கனும் எண்டால் கஸ்டம் எண்டே நினைக்கிறன். நீங்க கல்யாணம் கட்டிட்டு மனைவியும் நீங்களும் சேர்ந்து வேலை செய்து வீடு வாங்கிக்கோங்க ( எப்படி ஐடியா ;) ) :P

  • தொடங்கியவர்

இன்னிசை, நீங்கள் சொல்வது சரி. நாங்கள் ஆண்டாண்டு காலமாக இறக்கும்வரை ஒன்றாக வாழப்போகும் வாழ்க்கைத் துணையை தெரிவு செய்வதற்கு மூளை அவசியம்தான். இதைவிட இன்னொரு முக்கியமான விடயம் திருமணத்தின் முன் இருவரதும் Blood Group - Rhesus factor என்று நினைக்கின்றேன், அதை அறிந்து அவை ஒருவருடன் மற்றவருக்கு பொருந்துகின்றதா என சரிபார்க்க வேண்டும். இதன்மூலம் பல ஆபத்துக்களை தவிர்க்க முடியும்.

அதாவது, பொருத்தமற்ற Blood Group - Rhesus factor களை கொண்டவர்கள் திருமணம் செய்தால் அவர்களிற்கு பிறக்கும் குழந்தை பிறக்கும் முன் வயிற்றிலேயே இறக்கலாம் அல்லது பிறந்ததும் உடனடியாக இறக்கலாம் அல்லது குழந்தை பிறந்ததும் மனைவி இறக்கலாம். இவை முன்கூட்டியே திருமணம் செய்யப்போகும் ஜோடிகள் சோதனை செய்து அறிந்தபின் திருமணம் செய்வதன் மூலம் தவிர்க்கப்பட முடியும். சாதகம், குறிப்பு, விழா என்று ஆயிரக்கணக்கில் காசை செலவளிப்பவர்கள் இவ்வாறான விஞ்ஞான முன்னேற்றத்தின் மூலம் கிடைக்கும் பயன்களையும் பெற்று திருமண வாழ்வில் இணைவது பொருத்தமாக இருக்கும் அல்லவா? உங்களுக்கு குழந்தை, குட்டிகள் தேவை இல்லையென்றால் இவற்றை பற்றி கவலைப்பட தேவையில்லை என நினைக்கின்றேன்.

இன்னிசை, "நான் யாரை திருமணம் செய்ய என்று முடிவெடுக்க எனக்கு மூளை தேவையாக இருந்தது" என்று சொன்னீங்கள், அப்ப நீங்கள் திருமணம் ஆனவரா?

யம்மூ, திருமணம் செய்வதற்கு ஆணும்,பெண்ணும். ஒரு ஜயர் அன்ட் தாலி இருந்தா காணும் என்று நினைக்கிறீங்களா? நல்லது, அப்ப குருநாதன் தேவையில்லை? ஐயருக்கு பதிலாக குருநாதன் என்று சொல்லி இருக்கலாம். ஆனாலும், திருமணம் கட்டி வாழ்வதற்கு அறிவு தேவை என்று சொல்லி இருக்கிறீங்கள். கெட்டிக்காரன்!

அனி, நிறைய விசயங்களை ஏற்கனவே நல்லா யோசிச்சு வைத்து ஒரு தீர்மானத்தோடதான் இருக்கிறீங்கள்! கெட்டிக்காரி! சந்தோசம்!

உண்மையில் எனது Standard ஆன பதிலில் நான் இவ்வாறு கூற...

"படிப்பு முதலில முடிய வேணும், பிறகு இன்னும் நல்ல ஒரு வேலை கிடைக்கவேணும், பிறகு நல்ல ஒரு வீடு வாங்க வேணும், இதவிட, எனக்கு கனகாலமா இங்கஇருந்து அலுத்துப் போச்சு! வேற ஏதாவது நாட்டுக்கு மூவ் பண்னுற ஐடியாவும் இருக்கு.."

இதற்கான முக்கிய காரணம், முதலில் என்னிடம் வம்பு பண்ணி தொந்தரவு செய்பவர்களிடம் இருந்து விலகிக்கொள்ள இந்த பதில் உதவும். இந்த பதிலை கேட்டவர்கள் திருப்பி இதே கேள்வியை என்னிடம் இன்னும் சுமார் இரண்டு, மூன்று வருடங்களிற்கு கேட்க மாட்டார்கள்..

அடுத்தது, நான் திருமணம் செய்வதற்கு முதலில் எனது மனதுக்கு விருப்பமான ஒருத்தி எனக்கு கிடைக்க வேணும். கண்டவளையும் என்னால் கட்ட முடியாது. உந்த சாதகங்கள், குலங்கள், கோத்திரங்கள் எல்லாம் பார்த்து, புரோக்கர் மூலம் திருமணம் செய்கின்ற விளையாட்டுக்கள் எல்லாம் நமக்கு சுத்தமாய் ஆகாது.

நான் அம்மா, அப்பாவுக்கு அடிக்கடி சொல்லி வந்துள்ளேன். அதாவது, எனது மனதுக்கு பிடிச்சது ஒரு வெள்ளைக்காரியாக இருந்து அவளை தான் நான் திருமணம் செய்ய விரும்புகின்றேன் என்றால் பின் வேறு கதை இல்லை என்று. அவர்கள் நான் சொல்வதற்கு ஆமாம் சாமி போட்டார்கள். எனது Cousin, மற்றும் நண்பர்கள் சிலருக்கு இதை கூறியதும் அவர்கள் சொன்னார்கள், "நீ ஒரு வெள்ளைக்காரியை திருமணம் செய்தால் அடிக்கடி புதிய, புதிய திருமணங்களை வாழ்க்கையில் தொடர்ச்சியாக செய்து சந்தோசமாக இருக்கலாம்!" என்று.

நாங்கள் நடைமுறை வாழ்வில் - practical life - நிகழ்காலத்துடன் வாழ்ந்தால் திருமணம் செய்வதற்கு உந்த மூளை வேணுமா அல்லது தேவையில்லையா என்று ஆராய்ச்சிகள் செய்து எம்மை குழப்பாது வாழக்கூடியதாய் இருக்குமா?

கடைசியாக மூளையை விட உள்ளம் அல்லது இதயமே திருமணம் செய்வதற்கும், செய்தபின் சந்தோசமாக, நிம்மதியாக வாழ்வதற்கும் தேவையோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

கணவனும், மனைவியும் ஒருவருடன் மற்றவர் மிகவும் அன்பு செலுத்தி இதயபூர்வமாக ஒன்றிணைந்து வாழ்ந்தால் தெருவில் வாழ்ந்தால் கூட பிரியாது நிம்மதியாக, என்றென்றும் சந்தோசமாக வாழக்கூடியதாக இருக்கும். ஆனால், இருவரும் தமது மூளைகளை பாவிக்க வெளிக்கிட்டால் கடைசியில் மாளிகை மாதிரி வீடு, ஆடம்பர வாகனங்கள், நவீன வசதிகள், பாங்கில் ஏராளம் பணம் இருந்தாலும் நிம்மதியாக, சந்தோசமாக அவர்கள் தமது வாழ்வில் ஒரு நிமிடத்தை தானும் கழிக்க முடியாத சூழ்நிலைகள் கூட ஏற்படலாம்.

Rhesus factor ஐ பற்றி Wikipedia இல் இப்படி கூறப்படுகின்றது...

http://en.wikipedia.org/wiki/Rhesus_blood_group_system

இது நான் பல வருடங்களிற்கு முன் க.பொ.உ தரத்தில் உயிரியல் பிரிவில் படித்தது. யாராவது கள உறவுகளிற்கு இந்த Rhesus factor ஐ பற்றி இன்னும் விரிவாக தெரிந்தால் அல்லது நான் கூறியவற்றில் பிழைகள் இருந்தால் விளக்கவும். நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞன், எல்லோரது கதைகளையும் கேட்டால் அது கழுதையை மனிதன் சுமந்த கதை ஆகிவிடும். மனிதனுக்கு மட்டுமே பகுத்தறிவு உண்டு பலர் பயன் படுத்துவதே இல்லை என்பது வேறு விடயம். இரண்டு பெரியவர்கள் என்று சொன்னீர்களே அவர்கள் வயதால் பெரியவர்களா இல்லை நடத்தையால் பெரியவர்களா, திருமணம் செய்து வாழ்ந்து முடித்த வயதில் இருப்பவர்கள் அப்படி எல்லாம் அலுத்துக்கொண்டு அறிவுரை வழங்குவது வழக்கம், 'மூளை என்பது அறிவைக் குறிப்பதாகத்தானே கேட்டிருக்கிறீங்கள்.

திருமணம் செய்ய கண்டிப்பாக அறிவு தேவை, சங்கடங்கள் வரும் போது அதை சமாளிக்கும் திறன், சமயோசித புத்தி நிச்சயம் வேண்டும். ஆனால் பட்டப்படிப்பு வேண்டும் என்ற கட்டாயம் இல்லை :rolleyes:!

'அது சரி,,

அம்மாவைக்கெல்லாம் இப்படியோ வெருட்டு விடுறது" வெள்ளைக்காரியைக் கட்டினாலும் சரி எண்டு சொல்ல வேணும் என்று!! தம்பி உதெல்லாம் நல்லா இல்லை சொல்லிப்போட்டன்". :unsure:

Edited by Thamilthangai

குருவே நீங்களும் தேவை தான் என்ட திருமணதிற்கு மற்றவையின்ட திருமணதிற்கு இவ்வளவும் காணும் என்று நினைகிறேன்................நம்ம திருமணதிற்கு நீங்க தானே மாப்பிளைதோழனே சரியா குரு...............நீங்கள் குறிபிடும் மூளை என்பது கல்விதகைமைகளை என்ற அடிப்படையில் எடுத்து கொண்டா என்னால் ஏற்கமுடியாது.........உதாரனதிற்கு கணவண் பொறியாளராகவும் மனைவி டாக்டராகவும் இருப்பதாக வைத்து கொண்டா இந்த குடும்பத்தில் ............இருந்து விட்டு நான் தான் உன்னை விட பெரியவன் என்ற நினைப்பில பல சண்டைகள் வரலாம் ஆனால் இரண்டு பேரும் அறிவில்லாதவர்களாக இருந்தால் இந்த பிரச்சினை வருமா குருவே????? இதை நான் ஒரு உதாரணதிற்கு சொன்னேன்..............நீங்கள் சொல்வது விளங்குது ஆனால் அறிவு மட்டும் தான் தேவை என்று எடுக்க முடியாது திருமணதிற்கு...........அத்தோட அறிவை கொண்டு உங்கள் துணையை தேர்ந்தெடுப்பது பிரயொசனமற்றது...............அறிவை மட்டும் கொண்டு தேர்ந்தெடுத்தால் அவர்களை பற்றி மற்ற விசயங்களை நாங்கள் பார்க்காம மறந்துவிடுவோம்.............எங்கள் சமுதாயத்தில் அது தான் பிரச்சினை அவன் டாக்டர் என்றா உடனே திருமணம்.........இது எத்தனை நாளுக்கு என்று யோசிக்கிறது இல்லை............. :unsure:

சொல்ல போனால் என்னை எடுத்து கொண்டா அறிவு என்பது வெளிநாட்டில் இருக்கும் எமக்கு தேவை தான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் லைவ் பாட்டனரை செலக்ட் பண்ணும் போது நானா இருந்தா அறிவை பார்க்கமாட்டென் வருகிறவா எனக்கு ஒரு நல்லதொரு தோழியாகவும்.........என் மனசை புரிந்து அதற்கேற்ப அனுசரித்து செல்லுகிறவளா இருக்க வேண்டும்.........அறிவு என்ற மமதையில் இருந்து கொண்டு..........இரண்டு பேரும் என்ன பள்லுகூடமா நடத்த போறோம் வீட்டை வாழ்கை தானே ஆகவே என்னை பொறுத்தவரை.........அறிவு நான் எதிர்பார்க்கமாட்டென்......குரு

Edited by Jamuna

திருமணத்திற்கு மூளை தேவை இல்லை..

விவாகரத்திற்குத்தான் மூளை தேவை :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மூளை தேவை அறிவு தேவையில்லை..!

இந்தக் கேள்வி உசிதமாக இல்லாததால் வாக்களிக்கல்ல..!

அறிவும் தேவைன்னா கலியாணம் கட்டிய பலர் கலியாணமே கட்டிருக்க முடியாது..! :rolleyes:

கட்டாயம் தேவை ,

ஏனென்று கேள்வி கேட்டாய் விடை கல்யாணம் கட்டிப்பாருங்கள் அப்ப தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் கட்ட இருவர் தேவை அவ்வளவுதான்.. ஒருவரும் கிடைக்காவிட்டால், அல்லது ஏதாவது கிரகபாவங்கள் இருந்தால் ஒரு கழுதையைப் பிடித்தும் கட்டலாம் (தாலியைத்தான்).. கழுதையும் கிடைக்காவிட்டால் ஒரு தேவதாஸாகவோ/தேவதாசியாகவோ இருந்துவிட்டும் போகலாம். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு நாங்க அறிவு என்டு இங்க சொல்லுறது பட்டபடிப்பை அல்ல. வருபவ உங்களுக்கு பொருத்தமானவவா, ஒத்து போககூடியவவா என்டு கண்டறிய கூடிய அறிவை பற்றி தான் கதைக்கிறம். பட்டபடிப்பு தான் எல்லாம் என்டு இல்லை. இந்த காலத்தில அது இல்லாமலே சீவிக்கலாம் கண்டியளோ.

கலைஞரே ஆம் நான் திருமணமானவர் தான்.

குருவே தங்கா சொல்லுற மாதிரி உங்களுக்கு பொருத்தமானவரா,ஒத்து கொள்ள போககூடையவரா என்ற அறிவை சொல்லுறீங்களா.................இதற்கு எல்லாம் மூளை தேவையில்லை எல்லாம் தன்ட பாட்டில வரும்.............பிறகு நான் ஒன்று கேட்பேன் பிறகு அது ஒரு மதிரியா போயிடும் என்று நான் கேட்காம போறேன்...........

அப்ப வரட்டா........... :P

ஆரேச் பற்றி கலைஞன் கூறியுது உண்மைதான் ஆனால் அது 20- 30 வருடங்களுக்கு முன், இப்போது அதற்கு எதிராக மருந்து கண்டு பிடிக்கப்பட்டு விட்டது. 20% மக்கள் ஆரெச் நெகட்டிவ், 80% மக்கள் ஆரெச் பொசிற்றிவ். தாய், தந்தை இருவரதும் இரத்தம் பொசிற்றிவாக இருக்கும் பட்சத்தில் பிறக்கும் குழந்தையின் இரத்தமும் பொசிற்றிவாக இருக்கும், ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் தாய் பொசிற்றிவாகவும், தந்தை நெகட்டிவாக இருக்கும் பட்சத்திலும் ஒரு பிரச்சனையும் இல்லை பிறக்கும் குழந்தை பொசிற்றிவாக பிறக்கும், ஏனென்றால் பொசிடிவ் ஜீன் ஆட்சியானது.

பிரச்சனை எப்போது என்றால், தாய் நெகடிவ் இரத்தமாகவும், தந்தை பொசிடிவ் இரத்தமாகவும் இருக்கும் பட்சத்தில், பிறக்கும் குழந்தை பொசிடிவாக இருக்கும். சிசு தாயின் கருப்பையில் இருக்கும் போது தாயின் இரத்தமும் சிசுவின் இரத்தமும் கலக்க நேரிடும் போது பொசிடிவ் அன்ரியினுக்கு எதிராக தாயின் இரத்தத்தில் அன்ரிபொடி( அணுக்கள்) உருவாக்கப்படும். முதற்குழந்தைக்கு இதனால் பாதிப்பு குறைவு ஆனால் இவ் அணுக்கள் தாயின் குருதியில் இருந்து இரண்டாவது குழந்தை உருவாகும் போது கருச்சிதைவை ஏற்படுத்தலாம் அல்லது மூளை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் இப்போது தாயின் குருதியில் உள்ள அணுக்களை நடுநிலை படுத்துவதற்குமருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது(றோ-ஆரெச் ஓ).

இது ஊசி மூலமாக முதற் குழந்தை பிறந்து 24- 48 மணித்தியாலத்திற்குள் ஏற்றப்படும். பின்னர் இரண்டாவதும் அதை தொடர்ந்து வரும் குழந்தைகள் கருப்பையில் இருக்கும் போதும் தாயின் இரத்தம் பரிசோதிக்கப்பட்டு அன்ரிபொடி காணப்படின் மருந்து ஊசிமூலம் ஏற்றப்படும். பொதுவாக 7மாதத்திலும் குழந்தை பிறந்து 24- 48 மணித்தியாலத்திற்குள்ளும் கொடுக்கப்படும்.

நற்செய்தி- தாய் நெகடிவ் , தந்தை பொசிடிவ் இரத்தமாக இருப்பவர்கள் எத்தனை குழந்தைகளும் பெற்றுக்கொள்ளலாம். மருந்து விலை- 200 டொலர்.

Edited by yarlkavi

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கவி உங்களுக்கு மூளை இருகிறது விளங்குது அதற்காக இவ்வளவு கனக்கா எழுதினா நான் எப்படி வாசிகிறது,பார்தவுடனே புரிந்து கொள்வதிற்கு நான் என்ன பாபா பக்தனோ.இப்ப என்ன சொல்ல வாறீங்க கல்யாணம் கட்ட மூளை தேவையா இல்லையா?

எனக்கு என்றா கட்டினது பிறகு தான் தெரியுது மூளை தேவையில்லை என்று கலைஞரே. B)

  • கருத்துக்கள உறவுகள்

முளை தேவையா இல்லையா என்பது தெரியாது. ஆனால் கல்யாணம் கட்டுவதற்கு ஆணுக்கு பெண் தேவை. பெண்ணுக்கு ஆண் தேவை. சில இடங்களில் மாறியும் நடக்குது.

யாழ்கவி உங்களுக்கு மூளை இருகிறது விளங்குது அதற்காக இவ்வளவு கனக்கா எழுதினா நான் எப்படி வாசிகிறது,பார்தவுடனே புரிந்து கொள்வதிற்கு நான் என்ன பாபா பக்தனோ.இப்ப என்ன சொல்ல வாறீங்க கல்யாணம் கட்ட மூளை தேவையா இல்லையா?

புத்தன் இதற்கு தான் மூளை தேவை என்கிறது, கலியாணம் கட்டுவதற்கு மட்டும் அல்ல இப்படி ஒரு பெரிய பந்தியை வாசிப்பதற்கும். இதற்கெல்லாம் பாபா பக்தனாக இருக்கவேண்டும் என்று அல்ல, பக்தனாக இருந்தால் நீங்கள் வேறு நிறைய அற்புதங்கள் செய்யலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலுக்கு மனசும்

கல்யாணத்திற்கு தாலியும்

நடக்கும் இரசாயன மாற்றத்தை விளக்கிக்கொள்ள மூளையும் வேணும்

முதல் நம்பிக்கை வேண்டும்!!!

Edited by இனியவள்

வயதுவந்தவர்களுக்கு மட்டும் அல்ல

விபச்சாரத்துக்கு வேணுமென்றால் ஆணும் பெண்ணும் போதும்

திருமணத்துக்கு ஆண் பெண்ணுடன் மூளையும் வேணும்

திருமண பந்தம் மேன்மையானது

வெறுமனே உடலுறவு மட்டுமே அல்ல

ஆனால் அந்த உறவுக்கும் மூளை வேணும்

ஒரு ஆணுக்கு இன்பம்துய்பதென்பது 10 நிமிடத்தில் முடிவுறலாம் ஆனால் பெண்ணுக்கு அப்படியல்ல

ஒரு உணவை நாம் 10 நிமிடத்தில் சாப்பிட்டு முடிக்கலாம் ஆனால் உணவைதயார் செய்ய அரை மணித்தியாலம் அல்லது ஒரு மணித்தியாலம்; வேணாமா?

அதேபோலத்தான் பெண்களும் ஒரு ஆண்நினைத்தவுடன் அவனது மனைவி உறவுக்கு தயாராகிவிடுவதில்லை. சமையலை ஆயத்தம் செய்வதுபோல் பெண்ணையும் உறவுக்கு தயார்படுத்தவேணும்;:அதன்பின் கொள்ளும் உறவே ஆணுக்கும்திருப்தி பெண்ணுக்கும் திருப்தி

இதற்கு மூளை வேண்டாமா?

இல்லையேல் ஒருவர்அரைகுறையாக சாப்பாட்டை கொடுத்துவிட்டு போக தாச்சி சூடாயிருந்துது நான் தோசையச்சுட்டன் எண்டு பக்கத்து வீட்டுக்காரன் சொல்லிவிட்டு போய்விடுவான்

சொல்லித்தெரிவதில்லை மன்மதக் கலை என்பார்கள் ஆனால் சிலருக்குச் சொன்னாலும் தெரிவதில்லை

அதனால்தான் சில குடும்பங்களில் ஆண்கள்மீது பெண்கள் வெறுப்பாகவும் எரிந்துவிழுந்துகொண்டும் இருப்பார்கள் அதற்கு என்ன காரணம்?

அந்தக்குடும்பத்தில் பெண் திருப்திப்படவில்லை ஆண் திருப்திப்படுத்தவில்லை(யாரு

சிவா அண்ணா அப்ப சமைக்க தான் அறிவு தேவை நானும் பயந்து போயிட்டேன்.................அது தானே சாப்பாட்டு கடை இருக்கு பிறகு என்ன.............அறிவான ஆட்களும் திருமணம் ஆன பின் அங்கே தானே வாரவை...........

அப்ப நான் வரட்டா............ :P :P

கலியாணத்தை பற்றிகதைக எனக்கு வயது போதாது

  • கருத்துக்கள உறவுகள்

முதல் நம்பிக்கை வேண்டும்!!!

ஆம்ம்ம்ம, இதோ சரியாக விடையை கூறி பரிசினை களவெடுத்து சாறி தட்டி செல்கிறார்... :rolleyes::):lol:

இதோ அதோ... தனி நபர் தாக்குதல்.. எச்சரிக்கை 1, எச்சரிக்கை 2, எச்சரிக்கை 3... விற்று முடிந்தது. B)

Edited by Danklas

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.