Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை வெள்ளம்: நிரம்பி வழியும் ஏரிகள் - 12ஆம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு - என்ன காரணம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை வெள்ளம்: நிரம்பி வழியும் ஏரிகள் - 12ஆம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு - என்ன காரணம்?

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழ்
8 நவம்பர் 2021, 08:18 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
சென்னை மழை வெள்ளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சென்னையில் வழக்கத்துக்கு மாறாக கனமழை பெய்து வருவதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அங்குள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. வரும் 12ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், `காலநிலை மாறுபாடு காரணமாக ஆறு ஆண்டுகளுக்குள் அதீத கனமழையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் இதேபோன்ற துயரத்தைத்தான் நாம் சந்திக்க வேண்டி வரும்' என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். என்ன நடக்கிறது.

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக, கடந்த சனிக்கிழமை இரவு முழுக்க கனமழை பெய்தது. குறிப்பாக, நுங்கம்பாக்கத்தில் 20 செ.மீ மழையும் அடையாறு எம்.ஆர்.சி நகர், வில்லிவாக்கம், பெரம்பூர், மீனம்பாக்கம், தரமணி ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்தது.

அதிலும் பல பகுதிகளில் 10 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்ததால் நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கின. `வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் வரும் 9 முதல் 11 ஆம் தேதி வரையில் கன மழை பெய்யலாம்' எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கணிக்க முடியாத அதீத கனமழை

சென்னை மழை வெள்ளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சென்னை மழை வெள்ளம்

அதேநேரம், கனமழை தொடர்பாக வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை அறிவிப்பு எதையும் கொடுக்காத சூழலில், அதீத கனமழை பெய்தது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், ` காற்றின் போக்கை கணிக்கும்போது செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், 6ஆம் தேதி நள்ளிரவு மிகக் குறுகிய காலத்தில் இரவு 10 மணி வரையில் 3 செ.மீ மழையும் நள்ளிரவு 1 மணி முதல் 1.45 வரையில் 6 செ.மீ மழையும் 7ஆம் தேதி அதிகாலையில் 5 மணி முதல் 6 மணி வரையில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இதனை `மீசோஸ்கேல் ஃபினோமினா' (mesoscale phenomena) என்பார்கள். அந்தவகையில் இம்மாதிரியான மழையை முன்கூட்டியே கணிக்க முடியாது. உதாரணமாக, நுங்கம்பாக்கத்தில் 20 செ.மீ மழையும் மீனம்பாக்கத்தில் 11 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சுமார் 20 கிலோமீட்டர் இடைவெளிக்குள் மழையின் அளவு வித்தியாசமாக இருப்பதை உணரலாம்" என்கிறார்.

``வானிலை ஆய்வு மையத்தால் கணிக்க முடியாத அளவுக்கு அதீத மழைப் பொழிந்ததற்கு என்ன காரணம்?" என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

``காலநிலை மாற்றம் காரணமாக குறைந்த கால அளவில் அதிதீவிர மழைப் பொழிவு ஏற்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மெரினா கடற்கரையில் அரை மணிநேரத்தில் பத்து செ.மீ மழை பெய்தது. `மேக வெடிப்பு' என்று இதனைச் சொல்வார்கள்.

இதே அளவு மழை, நகரத்தில் பெய்திருந்தால் அதிகப்படியான பாதிப்பு ஏற்பட்டிருக்கும். மேலும், மழைப் பொழிவை நம்மால் கணிக்க முடியாமல் போகிறது. அதிக மழைக்குக் காரணம், கடலில் வெப்பம் அதிகரிக்கும்போது நிறைய தண்ணீர் ஆவியாகிறது. இதன் காரணமாக வளிமண்டலத்தில் அதிகப்படியான ஈரப்பதம் இருக்கும். இதனால்தான் அதிகப்படியான மழையாக கொட்டித் தீர்க்கிறது" என்கிறார்.

ஒரே வாரத்தில் பெய்த மொத்த மழை

``மழையின் சராசரி அளவும் மாறுபட்டுள்ளதே?" என்றோம். ``ஆம். ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் கடைசியோடு தென்மேற்கு பருவமழை நிறைவடையும். அக்டோபர் 20ம் தேதியில் இருந்து வடகிழக்கு பருவமழை தொடங்கும். கார்த்திகை தீபத்துக்குப் பிறகு மழை குறையத் தொடங்கும். நமது பண்டைய வாழ்வியல் முறையில் கார்த்திகை தீபம் என்பதே மழையை வழியனுப்புகிற விழாவாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஒரு வாரத்தில் மொத்த மழையும் பெய்துவிட்டது. இனிமேல் ஆண்டு சராசரி மழை, மூன்று மாத சராசரி மழை என்பதெல்லாம் பார்க்கப்படாமல், 3 மணிநேரத்தில் எவ்வளவு தீவிர மழை பெய்யும் என்பதைப் பொறுத்துத்தான் நமது வடிகால் முறைகள், கட்டமைப்பு போன்றவற்றை உருவாக்க முடியும்."

"இரண்டு மாத காலம் மழை பெய்யும்போது அந்த நீர் நிலத்தடியில் சென்றும் நீர்நிலைகளில் சென்றும் சேமிக்கப்படும். இப்போது அதி கனமழையால் தண்ணீர் ஓடிப் போவதைப் பார்க்க முடிகிறது. சென்னை என்பது கடற்கரை நகரமாக உள்ளது. கடல்மட்டம் உயரும்போது கடலும் உள்புக ஆரம்பிக்கும். இதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் சென்னைக்குள்ளேயே சிறு சிறு தீவுகள் உருவாகக் கூடிய வாய்ப்புகள் உருவாகும் என்கின்றனர். கடலுக்குள் சென்னை செல்லலாம் என்பதற்கான அர்த்தம் இதுதான். சென்னை என்பது ஓர் அற்புதமான நகரம். நாம் அதனை வீணாக்கிவிட்டோம்," என்கிறார் சுந்தர்ராஜன்.

மூன்று மடங்கு அதிகமான தாங்கு திறன்

சென்னை வெள்ளம்

பட மூலாதாரம்,ARUN SANKAR / GETTY IMAGES

"நான்கு நதிகள், 50 பெரிய கால்வாய்கள், 540 சிறிய ஓடைகள் என்பதுதான் சென்னைக்கான இயல்பான வரைபடமாக இருந்தது. இதனை அழித்ததன் விளைவாகத்தான் இவ்வளவு பெரிய பாதிப்புகள் ஏற்பட்டன. அவ்வாறு அழித்தாலும் அதற்கேற்ப மழைநீர் வடிகால் வாய்க்காலை வடிவமைத்தோமா என்றால் அதுவும் இல்லை. 12 மணிநேரத்தில் 22 செ.மீ மழை பெய்யும்போது நிற்கத்தான் செய்யும். அதனை குறைந்தபட்சம் வழிந்து போகும்படியாகவாவது செய்ய வேண்டும். தற்போது வரையில் தண்ணீர் தேங்கிக் கொண்டுதான் உள்ளது. இதனால் பொருளாதாரத்தில் பெரிய இழப்பு ஏற்படும். அடுத்த ஒரு வாரகாலத்துக்கு மக்கள் எந்த வேலையும் செய்யப் போவதில்லை. பொருளாதாரம் நன்றாக இருந்தால்தான் சுற்றுச்சூழல் நன்றாக இருக்கும்" என்கிறார்.

``இதனைத் தடுக்க வேண்டும் என்றால், சென்னை நகர விரிவாக்கத்தை அரசு கைவிட வேண்டும். அரக்கோணம் வரையில் சென்னை நகரை விரிவுபடுத்திக் கொண்டு செல்கிறார்கள். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரக்கோணம் ஆகியவற்றை சேர்த்தால் நான்காயிரம் நீர்நிலைகள் இருக்க வேண்டும். நகரம் விரிவுடையும்போது நீர்நிலைகளையும் நீர் பிடிப்புப் பகுதிகளையும் சேர்த்து ஆக்கிரமிப்பார்கள். நீர் நிலைகளை பாதுகாப்பதைப் போல நீர் பிடிப்புப் பகுதிகளையும் பாதுகாக்க வேண்டும். சென்னை நகரை விரிவாக்கம் செய்ய வேண்டிய தேவையில்லை. காரணம், சென்னையின் தாங்கு திறனைவிட 2, 3 மடங்கு அதிகமான சூழலில்தான் தற்போது உள்ளது.

மேலும், ஒரே நாளில் 45 செ.மீ மழை என்பது 1930, 1970, 2015 ஆகிய காலகட்டங்களில் பெய்துள்ளது. முன்பெல்லாம் இவ்வாறு பெய்யும்போது அதற்கான கால அவகாசம் என்பது அதிகப்படியாக இருக்கும். இப்போது ஆறு ஆண்டு இடைவெளிக்குள் அதிக மழை பெய்துள்ளது. காலநிலை மாறுபாடு காரணமாக இந்த இடைவெளி சுருங்கிவிட்டது" என்கிறார் சுந்தர்ராஜன்.

இனி ஒவ்வோர் ஆண்டும் இப்படித்தான்

``கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் அதிக கனமழை பெய்துள்ளது என்பது அசாதாரணமான விஷயம் கிடையாது. இனிமேல் இது சாதாரணமாகவே நடக்கக் கூடிய நிகழ்வாகத்தான் இருக்கும். பத்து ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஐந்து ஆண்டில் பெய்கிறது. அடுத்த வருடமும் இதேபோல் பெய்தால் ஆச்சர்யமாக இருக்கும். வடகிழக்கு பருவமழை தற்போதுதான் தொடங்குகிறது. அதற்குள் ஏரிகள் நிரம்பிவிட்டன" என்கிறார், சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன்.

தொடர்ந்து மேலதிக தகவல்களைப் பட்டியலிட்டார். `` புவி வெப்பமயமாகும்போது அதில் இருந்து வரக் கூடிய நீராவி, வளிமண்டலத்தில் தங்கிவிடும். தற்போது அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அரபிக் கடலில் இதுபோல் நடப்பது என்பது அரிதான ஒன்று. இந்த ஆண்டு இரண்டு புயல்கள் வந்துவிட்டன. தற்போது மூன்றாவது புயல் வரவுள்ளது. சாதாரணமாக இவை வங்கக்கடலில் வர வேண்டியது. ஏரிகளைத் தூர்வாருவது மட்டும் தீர்வைத் தராது. பொருளாதாரக் கட்டமைப்பை எப்படி மாற்றுவது என யோசிக்க வேண்டும்.

உள்ளூர் அளவிலான தீர்வு

சென்னை மழை வெள்ளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சென்னை மழை வெள்ளம்

காலநிலை மாற்றம் என்பது உலகளாவிய பிரச்னையாக இருந்தாலும் இதற்கான தீர்வுகள் உள்ளூர் அளவில் இருக்க வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள பகுதி ஆரோக்கியமாக இருந்தால்தான் வரக் கூடிய தலைமுறையை காப்பாற்ற முடியும். வேளச்சேரி பகுதியில் ஆண்டுதோறும் மழை வந்தால் நிற்கத்தான் செய்யும். அங்கு கால்வாய் கட்டப் போவதாகச் சொன்னார்கள். அது ஒப்பந்ததாரரை பணக்காரராக்கும் விஷயம். அந்த நீர் எங்காவது சென்று சேரத்தானே வேண்டும். அதனை பங்கிம்ஹாம் கால்வாய்க்குள் விட்டால் அது சரியானதாக இருக்காது. ஒரு பிரச்னையை தீர்க்காமல் அதனை வேறு இடத்துக்கு மாற்றுவதே பொறியியல் யோசனையாக உள்ளது" என்கிறார்.

``கோவளம், பள்ளிக்கரணை, எண்ணூர் என கடற்கரையோரம் உள்ள பகுதிகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நகரத்துக்குள் மழைநீர் வடிகாலை பராமரிப்பது ஒருபுறம் இருந்தாலும் இவையெல்லாம் வரக்கூடிய மைய ரத்தக் குழாயாக இருக்கக் கூடியவைதான் கொசஸ்தலை, அடையாறு, கூவம், கோவளம் போன்றவை. இதனை ஒரு கால்வாயாக பார்க்காமல் சூழல்ரீதியாக எப்படி மேம்படுத்த முடியும் எனப் பார்க்க வேண்டும்.

அந்தப் பகுதிகளில் ஆரோக்கியமான சூழலை உருவாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். மக்கள் சொல்வதை அரசு கேட்க வேண்டும். ரியல் எஸ்டேட் லாபிகள் சொல்வதைக் கேட்கக் கூடாது. மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், `தண்ணீரை கொதிக்க வைத்துக் குடியுங்கள். அதில் சாக்கடை கலந்திருக்கும்' என ஓர் அரசு அதிகாரியே மக்களிடம் சொல்கிறார். இதனை அசாதாரண விஷயமாக யாரும் பார்க்கவில்லை என்பதுதான் வேதனையானது" என்கிறார் நித்யானந்த் ஜெயராமன்.

https://www.bbc.com/tamil/india-59203819

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ஏராளன் said:

சென்னை வெள்ளம்: நிரம்பி வழியும் ஏரிகள் - 12ஆம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு - என்ன காரணம்?

 

Bild

Bild

சந்ததி சந்ததியாக பார்வையிட்டதோடு சரி......🤣

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளையள் விட்டுப்போன போது இருந்த சென்னை வரைபடத்தை தூசி தட்டி எடுக்க வேண்டும் .. 

senthilkumar-sekar-old-chennai-city.jpg

நீர் நிலை ஆக்ரமிப்புகளை இரும்பு கரம் கொண்டு மீட்க வேண்டும் பாதி சென்னை தேறாது.👌

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வெள்ளையள் விட்டுப்போன போது இருந்த சென்னை வரைபடத்தை தூசி தட்டி எடுக்க வேண்டும் .. 

senthilkumar-sekar-old-chennai-city.jpg

நீர் நிலை ஆக்ரமிப்புகளை இரும்பு கரம் கொண்டு மீட்க வேண்டும் பாதி சென்னை தேறாது.👌

Bild

 இஞ்சை பாருங்கோ தோழர் இதுக்கு என்ன சொல்லுறியள்? 😁

சுற்றுப்புற சூழலை கொஞ்சமும் கணக்கெடுக்காமல் நகர விரிவாக்கம் என்ற பெயரில் நீர்நிலைகளை மறித்து கட்டடங்களை கட்டியதன் விளைவு இது. 

இன்று சென்னைக்கு நடப்பது நாளைக்கு கிளிநொச்சியிலும், யாழ்ப்பாணத்திலும் நிகழப் போகின்றது.

கொழும்பில் விரைவில் இதே போன்று நிகழ அதிகம் வாய்ப்பும் உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மழை வெள்ளம்: இதுவரை ஐவர் பலி - என்ன நடந்தது இன்று?

தமிழ்நாட்டில் கடந்த சனிக்கிழமை முதல் தீவிரம் அடைந்துள்ள கன மழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சீர்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் தொடர்ச்சியாக இன்று மாநிலத்தில் பதிவான முக்கிய நிகழ்வுகளின் சுருக்கத்தை இங்கே வழங்குகிறோம்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு நகரின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருக்கிறது. இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 11ஆம் தேதி காலை தமிழக கரையை நெருங்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும் இரண்டு தினங்களுக்கு 'சிவப்பு' எச்சரிக்கை

தமிழ்நாட்டுக்கு நாளையும் நாளை மறுதினமும் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் கன மழை மழையும் சில இடங்களில் அதிகன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பெய்த மழைக்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். 538 குடிசைகள் சேதம் அடைந்துள்ளன. இந்த சேதத்தின் அளவு மேலும் அதிகமாகலாம் என்று மாநில பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் சராசரியாக 16.84 மி.மீ அளவுக்கு மழை பொழிவு பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக மழை பெய்துள்ளது. கடலோர பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக மாநில காவல்துறை, பேரிடர் மீட்புப்படையினருடன் சேர்ந்து ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் நேரில் ஆய்வு

தமிழக மழை வெள்ளம்

பட மூலாதாரம்,MK STALIN

சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மூன்றாவது நாளாக முதல்வர் மு.க. ஸ்டாலினும் மற்ற மாவட்டங்களில் துறை அமைச்சர்களும் ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க அவர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

சென்னையில் வேளச்சேரி, மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம், புளியந்தோப்பு, ராயபுரம், வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் மழை நீர் வசிப்பிடங்களுக்குள் புகுந்துள்ளது. வீடுகளில் வசிக்க முடியாத நிலையில் இருப்பவர்கள், அரசு தற்காலிகமாக அமைத்துள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ளவர்களுக்கு அரசு ஏற்பாடு செய்த உணவு வழங்கப்படுகிறது.

மழை, வெள்ள பாதிப்பு காரணமாக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கையால் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற இடங்களில் மின்சார விபத்து நடக்கவில்லை என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். சென்னை பெரியார் நகரில் வெள்ளம் சூழ்ந்த துணை மின் நிலையத்தை பார்வையிட்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, சென்னையில் உள்ள 223 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நடந்து வருகிறது என்று கூறினார்.

இழப்பீடு எப்போது அறிவிப்பு?

மழை பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள், வீடுகளை இழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் உள்ளிட்டோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண நிதி வழங்குவது தொடர்பான அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் மழை வெள்ளம் தேங்கியிருக்கும் நிலைக்கு அரசின் அலட்சியமே காரணம் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருக்கிறார். வட சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட அவர், அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார்.

தமிழக மழை வெள்ளம்

பட மூலாதாரம்,AIADMK

 
படக்குறிப்பு,

வட சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

"மழை நீர் புகுந்துள்ள இடங்களில் மூன்று நாட்களுக்குப் பிறகும் நீர் வடியவில்லை என்பதால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர் என்று பழனிசாமி தெரிவித்தார். சென்னை நகரின் மேயர் ஆக ஸ்டாலின் இருந்தபோது வடிகால் வசதி போதுமான வகையில் செய்யவில்லை என்றும் அதைத்தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அதிமுக மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தது," என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கன மழைக்குப் பிந்தைய மீட்புப் பணியை அரசு துரிதமாக செய்து முடிக்க ஏதுவாக நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

இதற்கிடையே, மாநிலத்தில் நீடித்து வரும் மழை நீர் தேங்கும் பிரச்னைக்கு முன்பு ஆட்சியில் இருந்த அதிமுகவே காரணம் என்று குற்றம்சாட்டியிருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

"முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள் என தெரியவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக மத்திய அரசிடம் இருந்து பெற்ற நிதியை அவர்கள் எப்படி பயன்படுத்தினார்கள் எனத் தெரியவில்லை. வேலை செய்யாமல் கமிஷன் வாங்குவதிலேயே அவர்கள் அக்கறை காட்டியுள்ளனர். இது தொடர்பாக விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்," என்று ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.

மாநகராட்சிக்கு நீதிபதிகள் கேள்வி

முக ஸ்டாலின்

பட மூலாதாரம்,MK STALIN

சென்னையில் மழை வெள்ள பாதிப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது.

2015இல் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளத்துக்குப் பிறகு இப்போதும் அதே நிலை தொடருகிறது. அப்போதே போதுமான சீரமைப்புகளை மேற்கொண்டிருந்தால் மக்கள் இப்போது பாதிக்கப்பட்டிருப்பார்களா என்று தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி கேள்வி எழுப்பினார்.

சென்னையில் சாலைகளை அகலப்படுத்துவது, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரின் கோரிக்கை ஏற்க நீதிபதிகள் மறுத்தபோதும், அரசுக்கு சில கேள்விகளை எழுப்பினர். 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்கு பின், உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனாலும், தற்போது சென்னை மழை நீரில் தத்தளிக்கிறது? இங்கு மாநகராட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது? வருடத்தில் பாதி மாதங்கள், மக்கள் நீருக்காகவும் பிறகு மீதி மாதங்கள் மக்கள் நீரிலும் அவதிப்படுகின்றனர் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் ஒரு வாரத்தில் நிலைமையை சீர்படுத்த வேண்டும். இல்லையென்றால் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை நீதிமன்ற அவமதிப்பாக கருதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து தற்காப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் பணிகளை மேற்பார்வையிட சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

தமிழக மழை வெள்ளம்: இதுவரை ஐவர் பலி - என்ன நடந்தது இன்று? - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இவிங்க வேற லெவல்...:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2021 ஆம் ஆண்டிலும்
நவீன தீண்டாமை...!  

Bild

Bild

கால்வாய் எங்க டா......😁

Bild

  • கருத்துக்கள உறவுகள்

கனமழை எதிரொலி : 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை!

தெற்கு வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும், தமிழ்நாட்டில் இன்று முதல் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் 11 ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி விரைவிலேயே காற்றழுத்த தாழ்வ மண்டலமாக மாறுவதால் தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடலில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் தென்கிழக்கு வங்கக்கடல் உள்ளிட்ட வங்காள விரிகுடாவில் மணிக்கு 60 கி.மீ வரையில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1248967

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வெள்ளையள் விட்டுப்போன போது இருந்த சென்னை வரைபடத்தை தூசி தட்டி எடுக்க வேண்டும் .. 

senthilkumar-sekar-old-chennai-city.jpg

நீர் நிலை ஆக்ரமிப்புகளை இரும்பு கரம் கொண்டு மீட்க வேண்டும் பாதி சென்னை தேறாது.👌

 

May be an image of map and text that says '1980 GUINDY Open Open/atixed VELACHCHERI ERI = வேளச்சேரி ஏரியின் ஆக்கிரமிப்பு 1996'

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

 

May be an image of map and text that says '1980 GUINDY Open Open/atixed VELACHCHERI ERI = வேளச்சேரி ஏரியின் ஆக்கிரமிப்பு 1996'

1909 ரூ 2021 ..

https://www.puthiyathalaimurai.com/newsview/121641/Chennai-maps-spanning-over-a-century-explain-why-the-city-faces-flood-danger-each-year 

😢..😢

டிஸ்கி

தோழர் இதில் விந்தை என்ன என்றால் செய்தி போடும் "பழைய-தலைமுறை" நியூஸ் சேனலின் குழுமமான SRM  கல்வி நிறுவனங்களும் ஏரிய ஆட்டைய போட்டு கட்டப்பட்டதுதான்..

அதனால்தான் அவர் " ஏரி - வேந்தர் " என்டு மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்..😊

  • கருத்துக்கள உறவுகள்

பெய்கின்ற மழை நீரையாவது சேமித்தால்  ஏனைய மாநிலங்களை கையேந்த தேவை இல்லை.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nunavilan said:

பெய்கின்ற மழை நீரையாவது சேமித்தால்  ஏனைய மாநிலங்களை கையேந்த தேவை இல்லை.  

சேமிக்க இடமிருந்தா தானே?!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தல நீ எங்கிருக்க தல?
வா தல....வெளிய வா தல
உறைக்கிர மாதிரி நாலு வார்த்தை சொல்லு தல....😎

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு மழை வெள்ளம்: சென்னை, தூத்துக்குடி, திருவாரூர் மாவட்டங்கள் தத்தளிப்பு

  • ஆ விஜயானந்த்
  • பிபிசி தமிழ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
வெள்ளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வடகிழக்குப் பருவமழையின் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

"இனிவரும் நாள்களில் மழை பெய்யவில்லை என்றாலும்கூட தேவைக்கு அதிகமான மழை பெய்துவிட்டது. வரும் 30 ஆம் தேதி வரையில் மழை நீடிக்கவே வாய்ப்பு உள்ளது" என்கிறார், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணன்.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவழை தீவிரம் அடைந்து வருவதால் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பல பகுதிகளில் அதி கனமழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக, குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர். அதேநேரம், புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலில், செவ்வாய்க்கிழமையன்று அந்தமான் கடற்பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது அதற்கு அடுத்து வரக் கூடிய 48 மணிநேரத்தில் மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகும் எனத் தெரிவித்திருந்தது. மேலும், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவான பிறகு அது வடமேற்கு திசையும் நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணிப்பினை வெளியிட்டிருந்தது.

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை

இந்நிலையில், தொடர் கனமழையால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவி செய்யும் பணியில் உள்ளாட்சி அமைப்புகள் களமிறங்கியுள்ளன. கடந்த நவம்பர் முதல் வாரத்தில் இருந்தே மழை நீடித்து வருவதால் வெள்ளம் தேங்கக் கூடிய பகுதிகளில் எல்லாம் தற்காலிகமாக வெள்ளம் வடியக் கூடிய நிலையை உள்ளாட்சி அமைப்பின் பணியாளர்கள் ஏற்படுத்தியிருந்தனர். இதன் காரணமாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளம் தேங்கக் கூடிய பகுதிகளில் எல்லாம் ஓரளவுக்கு தண்ணீர் வரத்து சற்று தணிந்தே காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சாப்பாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதேநேரம், சென்னையில் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான பகுதிகள் மிதக்கின்றன. இதனை சரிசெய்யும் வகையில் மாநகராட்சி அதிகாரிகளும் பணியாளர்களும் இரவு பகலாக வேலை பார்த்து வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி உள்பட அமைச்சர்கள் சிலர் நேரடியாக வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

நானும் உங்களோடு நிற்கிறேன்: ஸ்டாலின்

தொடர் மழையால் ஏற்பட்டுள்ள துயரம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ` சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மில்லி மீட்டர் மழை பதிவாவது நான்காவது முறை என வானிலை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து, முடிந்தவரை உடைமை சேதங்களைக் குறைத்து, நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்துள்ளதற்கு முழு முதற்காரணம், கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளால்தான். அவர்களுக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின்

பட மூலாதாரம்,@MK STALIN

மேலும், `அடுத்த சில நாள்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களோடு நானும் களத்தில் நிற்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடியின் துயரநிலை

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் போலவே தூத்துக்குடி மாவட்டமும் கனமழையால் அதிக துயரத்தைச் சந்தித்துள்ளது. அங்கு கடந்த 25ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியால் விரிவாக்கப்பட்ட பகுதிகள் எல்லாம் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன. அங்கு நான்கு கடந்தும் வெள்ளம் வடியாததால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் படகுகள் மற்றும் அரசு வாகனங்கள் மூலம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலோர மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு திங்கள்கிழமையன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலும் தொடர் கனமழையின் காரணமாக முக்கியமான ஏரிகள் நிரம்பி வழிகின்றன. ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய ஏரியான தூசூர் ஏரி நிரம்பியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் எனக் கூறப்பட்டதால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் அச்சம் நிலவுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எப்போது மழை தணியும்?

``மழையின் தாக்கம் எப்போது தணியும்?" என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இந்தப் பருவகாலம் நல்லபடியாகவே சென்ற கொண்டிருக்கிறது. இனிவரும் நாள்களில் மழை பெய்யவில்லை என்றாலும்கூட இது தேவைக்கு அதிகமான மழைதான். அதாவது இயல்புக்கு மிஞ்சிய மழை என்பதில் சந்தேகம் இல்லை. 200 ஆண்டுகளுக்குப் பிறகு பெய்து கொண்டிருக்கின்ற மழை என்கின்றனர். அப்படிப்பட்ட புள்ளிவிவரங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை" என்கிறார்.

மேலும், ``ஐப்பசி கனமழை, கார்த்திகை கனமழை என்பது நமது பாரம்பரியத்தில் தொடர்ந்து சொல்லப்பட்டு வருபவை. இவையெல்லாம் நமக்கு நல்லபடியாக மழை பெய்யக்கூடிய மாதங்கள்தான். அதற்கேற்ப தற்போது கார்த்திகை கனமழை பெய்துள்ளது" என்கிறார்.

மழை

பட மூலாதாரம்,GETTY IMAGES

``இடைவிடாது மழை பெய்வதால் மக்கள் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளதே?" என்றோம். ``உண்மைதான். ஒரு மழைக்கும் இன்னொரு மழைக்கும் இடைவெளி இருந்தால் நன்றாக இருக்கும். கடந்த சில வாரங்களில் சில நாள்கள் மட்டும்தான் மழை இல்லாமல் இருந்தது. தூறல் என்ற அளவிலும் மழை நீடித்தது. தண்ணீர் சரியாக செல்லாததுதான் பிரச்னை. தண்ணீர் தேங்காமல் செல்லக் கூடிய நிலையை உருவாக்க வேண்டும்" என்கிறார்.

`` அடுத்தடுத்த நாள்கள் எப்படியிருக்கும்?" எனக் கேட்டபோது, `` இலங்கை மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. அது மேற்கு நோக்கிச் செல்ல வேண்டும் அல்லது அதனை வலுவிலக்கச் செய்ய வேண்டும். அப்படிப் பார்த்தால் வங்கக்கடல், தென்சீனக் கடல் பகுதியில் ஒரு புதிய நிகழ்வு வரவுள்ளது. அது தாய்லாந்தை கடந்து 30 ஆம் தேதி அந்தமான் கடற்பகுதிக்கு வரும். அப்படி வரும்போதுதான் மழை அளவு குறையும்.

கடந்த 3 மாதங்களின் மழையைத்தான் வடகிழக்குப் பருவமழை என்கிறோம். வறட்சி, புயல் அல்லது எதுவாக இருந்தாலும் அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும். தொடர் மழையால் மக்கள் சிரமத்தில் உள்ளனர். வரும் காலங்களுக்கு ஏற்ப தயாரானால் எந்தவொரு சூழல் வந்தாலும் நம்மால் எதிர்கொள்ள முடியும்"

https://www.bbc.com/tamil/india-59452238

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.