Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுத்தமா? பேச்சா? எதற்கும் நாங்கள் தயார்: மகிந்த அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தமா? பேச்சா? எதற்கும் நாங்கள் தயார்: மகிந்த அறிவிப்பு

[வியாழக்கிழமை, 19 யூலை 2007, 12:51 ஈழம்] [செ.விசுவநாதன்]

யுத்தம் அல்லது பேச்சு எதுவானாலும் நாங்கள் தயாராக உள்ளோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்க நாளிதழலான டெய்லி நியூசின் இன்றைய (19.07.07) பதிப்புக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்:

யுத்தம் அல்லது பேச்சுக்கு நாங்கள் தயாராக உள்ளோம். எது என்பது அவர்களின் கைகளில் உள்ளது. எந்தப் பாதை என்பதை தமிழீழ விடுதலைப் புலிகளே தெரிவு செய்ய வேண்டும்.

பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாம் ஒருபோதும் தயங்கியதும் கிடையாது. பேச்சு மேசையை விட்டு விலகியதும் கிடையாது. விடுதலைப் புலிகள்தான் பேச்சுக்களை நடுவில் முறித்துக் கொண்டனர். அதுதான் ஜெனீவாவில் நடந்தது. ஓஸ்லோவில் நடந்தது. விடுதலைப் புலிகளுக்கு அமைதியில் ஆர்வம் இல்லை.

அனைத்துக் கட்சி மாநாட்டு மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு என்பது அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டது அல்ல. அனைத்து அரசியல் கட்சிகளினது கூட்டு முயற்சியாகும். தங்களது பொறுப்பை அவர்கள் தட்டிக் கழிக்க முடியாது.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதி என்ற வரையறையை ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டது. அத்தகைய துரோகத்தை நாம் செய்ய மாட்டோம்.

தொப்பிக்கல வீழ்ச்சி என்பது கிழக்கில் இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் மேலாதிக்கத்துக்கானது மட்டுமல்ல. விடுதலைப் புலிகளால் ஒடுக்கப்பட்டிருந்த மக்களின் வாழ்க்கையில் அது ஒரு புதிய சகாப்தம்.

அங்கு குடிசார் நிர்வாகத்தை உடனே அமைப்பதுதான் உடனடி முதன்மைப் பணியாகும் என்றார் மகிந்த ராஜபக்ச.

புதினம்

பேச்சுக்குத் தயார் என்றால் எதைப்பற்றிப் பேசுவது.

யுத்தநிறுத்த உடன்படிக்கை பற்றிப் பேச அரசாங்கத்திற்குத் தகுதியில்லை. அதைப் பற்றிப் பேச அவர்கள் விரும்பவும் மாட்டார்கள்.

இனப் பிரச்சனைக்கான இறுதித் தீர்வைப் பற்றிப் பேசுவதானால் தீர்வுத்திட்டம் ஒன்று வேண்டும். தீர்வுத்திட்டத்தைத் உருவாக்குவதற்கு பல தடவை காலக்கெடு விதிக்கப்பட்டு அலட்சியப்படுத்தப்பட்டது. கிழக்கின் வெற்றியுடன் தீர்வுத்திட்டமும் கைவிடப்படும், அல்லது அது தமிழர்களுக்குப் பிச்சை போடுவதாக அமையும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்களும் இதைத் தானே சொல்லி களைச்சுப் போயிற்றம். இனி இரண்டில ஒண்டுதான்.

பாதுகாப்பாய் நூற்றிஐம்பது பேரை வச்சு கொண்டு உவர் பேசுவார்தானே....! உவரின்ர அப்பன் வீட்டு காசே... வருகிர வரிப்பனத்தையும் கொள்ளையும் அடிச்சு சண்டையும் பிடிச்சா உவர் உருப்படுவார் ஆனால் நாடு உருப்படுமோ...??? பாவம் சிங்கள சனம்...! அதுகளின் தலைவிதியை அனுபவிக்க தான் வேணும்...!

இப்ப சொல்லுவார் அடி விழும்போது சமாதானம் சமாதானம் என சிறு குழந்தை போல அழும்போது யோசிப்பார் இன்றைய வெற்றிவிழா கொண்டாட்டம் எவ்வளவு முட்டாள்தனம் என

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் ஜனாதிபதியாக இருப்பவர்கள் கட்டாயம் சொல்ல வேண்டிய வசனம் இது.. எவர்தான் இதுவரை சொல்லாமல் விட்டார்கள்.. ஒவ்வொருவராகச் சொல்லிச் சொல்லி களைத்துப் போனார்கள்.. தற்போது மகிந்தவின் முறை.. இதுவே கடைசியாகவும் இருக்கலாம்!

இப்ப சொல்லுவார் அடி விழும்போது சமாதானம் சமாதானம் என சிறு குழந்தை போல அழும்போது யோசிப்பார் இன்றைய வெற்றிவிழா கொண்டாட்டம் எவ்வளவு முட்டாள்தனம் என

இப்படி முந்தி ஜே. ஆர். ஒருக்காச் சொன்னதாக ஞாபகம் - 83ல் இதே ஜுலை மாதத்தில் -

"போர் என்றால் போர்.. சமாதானம் என்றால் சமாதானம்" என்று அப்பாவித்தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது ஆணவமாகச் சொன்னார்.

ஆணவங்கள் நிலைத்ததில்லை..

:angry:

சிங்களவர்கள் பன்நெடுங்காலமாக மாறவில்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. சர்வதேசம் தன் முகமூடியை கிழித்து உண்மையின் பக்கம் நிற்கவேண்டும். சிங்களருக்கு இருப்பது ஒரே ஒரு கொள்கைதான். "தமிழரை, பண்பாட்டு விழுமியங்களை, கலாச்சாரத்தை, தாயக கோட்பாட்டை அழித்தொழிப்பது" என்பதுதான். இதை தெரியாமல் சர்வதேசம் வில்லுப்பாட்டு பாடுவது, பேச்சுவார்த்தை மண்ணாங்கட்டி என்று காலம்கடத்துவது எல்லாம் சுத்த முட்டாள்தனம். சர்வதேசம் முட்டாளாக இருக்கலாம் (இருப்பதுபோல் நடிக்கலாம்). அதற்காக தமிழர் முட்டாளாக வேண்டியதில்லை. :angry: :angry:

யுத்தமா? பேச்சா? எதற்கும் நாங்கள் தயார்: மகிந்த அறிவிப்பு

[வியாழக்கிழமை, 19 யூலை 2007, 12:51 ஈழம்] [செ.விசுவநாதன்]

யுத்தம் அல்லது பேச்சு எதுவானாலும் நாங்கள் தயாராக உள்ளோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

புதினம்

யுத்தம்தான் தங்கள் தெரிவு என்பதை சொல்வதற்கு கூட துணிவு இல்லை . ்-) .

Edited by வாசகன்

  • கருத்துக்கள உறவுகள்

முப்பது ஆண்டுகளின் பின் மீண்டும் போரா, சமாதானமா என்ற கேள்வி

""போரா? சமாதானமா? நாம் எதற்கும் தயார். புலிகளே எது வேண்டும் என்பதைத் தீர்மானிக்கட்டும். அந்தப் பாதையில் அவர்களை எதிர்கொள்ள நாங்கள் தயார்!''

இப்படி பிரகடனம் செய்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. தொப்பிகலவைக் கைப்பற்றி, கிழக்கு மாகாணத்தைப் புலிகளின் பிடியிலிருந்து முற்றாக மீட்டுவிட்டதாகத் தென்னிலங்கை மார்தட்டும் நிலை யில், அந்த வெற்றிக்களிப்போடு புலிகளைப் பார்த்து போரா, சமாதானமா எனச் சவால் விடுகிறார் அரசுத் தலைவர்.

போர்நிறுத்தம் செய்து, சமாதானப் பேச்சுகள் நடத்தி, பல நீண்ட ஆண்டுகள் தொடர்ந்து அமைதி காத்தும் சமா தானத்தின் சாதகங்களை பலாபலன்களை அனுபவிக்க முடியாமல் போன துரதிஷ்டத்தில் மூழ்கிக் கிடக்கும் மக் களைப் பார்த்து போரா, சமாதானமா என்று ஏளனத்துடன் கேள்வி எழுப்புகின்றார் இலங்கைத் தலைவர்.

இப்படி தென்னிலங்கைச் சிங்களத் தலைவர்கள் தமி ழர் தரப்பைப் பார்த்து நையாண்டித்தனத்துடன் கேள்வி எழுப்புவது இது முதல் தடவையல்ல. முந்தியும் நடந்தது தான்.

முன்னர் ஆயுதம் ஏந்தாமல் யுத்தம் புரியாமல் வன்முறையை நாடாமல் அஹிம்சை வழியில் காந்தீய நெறி யில் அறநெறிப் பாதையில் தமிழர்களின் உரிமை வேண்டி தமிழ்த் தேசிய எழுச்சியைப் பிரவாகம் எடுக்கவைத்த மிதவாதத் தலைவர்களைப் பார்த்து, தென்னிலங்கைச் சிங்களத்தின் ஆட்சித் தலைவர் இதேகேள்வியைத்தான் கேட்டார். அதன் விளைவைத்தான் நாடு இலங்கைத் தீவு தீராத பழியைச் சுமந்தபடி இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.

தமிழினம் தனது சுயநிர்ணய உரிமையின் அடிப் படையில் தனது தாயக பூமியின் இறையாண்மையை நிறுவ உறுதியாகத் தீர்மானம் எடுத்து, அதனைத் தென் னிலங்கையின் அடக்கு முறை சிங்கள அரசின் ஆக்கிர மிப்பாளர்களுக்கும், உலகுக்கும் திட்டவட்டமாகவும், தெளிவாகவும் தெரிவிப்பதற்காக தனது தேசியப் போராட்டத்துக்கு தமிழர் தாயகத்தின் ஆணையைப் பெறுவதற்காக 1977 பொதுத் தேர்தலை ஓர் அரங்காகப் பயன்படுத்தத் தீர்மானித்தது.

சுதந்திரத் தமிழீழ அரசை நிறுவுவதற்கான ஆணை யைத் தமிழீழ மக்கள் அத் தேர்தலில் ஒன்றுபட்டு வெளிப் படுத்தினர். அதேசமயம் தென்னிலங்கையில் ஜே. ஆர். ஜெயவர்த்தனா தலைமையில் இயங்கிய வலதுசாரி ஐக் கிய தேசியக் கட்சி பெரு வெற்றியீட்டியது.

தென்னிலங்கைச் சிங்களம் ஆளும் தரப்பிலும், தமிழ்த் தேசியத்தை நிலைநிறுத்தப் போராடும் தமிழினம் எதிர்த்தரப்பிலும் பிரதான அணிகளாக அமரும் வாய்ப்பு பெரும் வரலாற்றுத் திருப்புமுனையாக அப்போதுதான் நிகழ்ந்தது

தமிழர் தரப்பின் மிதவாதத் தலைவராக இருந்த அப் பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகும் சந்தர்ப்பமும் அப்போது கிட்டியது.

நாடாளுமன்றமே தமிழர் தரப்பு, சிங்களத்தரப்பாக எதிரும் புதிருமாக கன்னை பிரிந்த அந்தச் சமயத்தில் இலங்கைத் தீவில் இன முரண்பாடு கூர்மையடைந்தது. பொதுத்தேர்தல் முடிந்த கையோடு தமிழருக்கு எதிரான இனக்கலவரம் ஆவணி அமளி முன்னரை விடக் குரூர வன்முறையாக வெடித்தது.

ஈழத் தமிழரின் தேசிய ஆன்மாவில் நிரந்தர வடுவை ஆழமாக ஏற்படுத்திய மாபெரும் துன்பியல் நிகழ்வாக ஆவணி அமளி ஆடி அடங்கியபோது, தென்னிலங்கைப் பேரினவாதக் குரூரத் தலைமையின் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் பேரினவாத முடியரசர் தாமே என்று நினை வூட்டும் விதத்தில், இதே சொல்லாடலைத் தான் அப் போதைய அரசுத் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவும் பயன்படுத்தினார்.

கொடூர குரூர இனக்கலவரத்தின் பின்னர் நாடாளு மன்றம் கூடியபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தமிழர்களின் மிதவாதத் தலைவரான அமிர்தலிங்கத்தைப் பார்த்து, அப்போதைய அரசுத் தலைவரும் பிரதமருமான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ""போரா ? சமாதானமா? நீங்களே தீர்மானியுங்கள். எதற்கும் நாம் தயார்! என்று மிடுக் கோடு அறைகூவல் விடுத்தார்.

அந்த அறைகூவலின் விபரீதங்களாகக் கட்டவிழ்ந்த பெரும் போரையும், எண்ணிப்பார்க்க முடியாத பேரழிவு களையும் கடந்த முப்பது ஆண்டுகளாகச் சுமந்துகொண்டு தள்ளாடுகின்றது தடுமாறுகின்றது இந்த இலங்கைத் தீவு.

அன்று இனக்கலவரம் மூலம் தமிழர்களின் தேசிய ஆன்மாவில் ஆழமான வடுவை ஏற்படுத்திய மமதை யோடு தமிழர்களின் மிதவாதத் தலைமையிடம் கேட்ட கேள்வியை

இன்று தமிழரின் தாயகப் பூமியான கிழக்கை முற் றாக ஆக்கிரமித்து மீட்டுவிட்ட செருக்கோடு தமிழர் களின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத் தலைமை யிடம் மீண்டும் எழுப்பு கின்றது சிங்களத் தலைமை.

அன்று கேட்ட கேள்விக்குப் பதிலாக எழுந்த விபரீ தங்களும், அதனால் ஏற்பட்ட துன்பியல் அனுபவங் களும் தென்னிலங்கைக்குச் சரியான பட்டறிவைத் தர வில்லைப் போலும். அதனால்தான் மீண்டும் அதே கேள்வி அதே செருக்கோடு இப்போதும் திரும்ப எழு கின்றது.

அன்றைய கேள்வியின் விடையாக இத்துணை விப ரீதங்கள் நேர்ந்தமைபோல, இன்றைய கேள்வியின் விளைவும் மோசமாக அமையுமா?

காலம்தான் பதில் சொல்லும். அறியக் காத்திருக்க வேண்டும்.

-உதயன்

போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று சொல்லி மூக்குடை பட்ட ஜேஆர் ரின் ஆவியிடம் மகிந்த ஆலோசனை பெற்றால் சிறந்தது

And so the old drama is staged again and acted till it reaches the old catastrophe...

12 years before...

chandrika.JPG

President Kumaratunga 'conquers' Jaffna

& holds a medieval victory ceremony,

6 December 1995

12 years after...

070719victory_ceremony1.jpg

12 years after...

President Rajapakse 'conquers' the East

& holds 'Dawn of the East' victory ceremony,

19 July 2007

http://www.tamilnation.org/tamileelam/arme...ry_ceremony.htm

Edited by ஈழவன்85

ஐயோ பாவம். படத்தில் ஒரு வெற்றி பெற்றவரின் சந்தோசம் தெரிகிறதா

மகிந்தவின் முகத்தில்?

ஏதோ பேய் அறைந்தது போல் காட்சி அளிக்கிறார் சிறீலங்காவின் ஜனாதிபதி

:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.