Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • Replies 4.9k
  • Views 431.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'NEWS 18 தமிழ் விளையாட்டு இனி பயிற்சியை நம்பி பயனில்லை?:ரூ. 16 லட்சம் சம்பளத்தில் இந்திய கால்பந்து அணிக்கு ஜோதிடர் நியமனம் கால்பந்தை வளர்த்தெடுக்க இந்திய கால்பந்து அணிக்காக பிரத்யேகமாக ரூ.16 16 லட்சம் சம்பளத்தில் ஜோதிட நிறுவனம் ஒன்றை அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு நியமித்துள்ளது BYNEWS18TAMIL.COM 22 JUNE 2022 AT 08:22'

இந்திய கால்பந்து அணிக்கு, 16 லட்சம் ரூபாய் சம்பளத்தில்... ஜோதிடர் நியமனம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

மண்ணாசையும் பெண்ணாசையும் 
ஒருங்கிணைய 
வரம் பெற்றவன்.

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de plein air et texte

  • கருத்துக்கள உறவுகள்

Arun Roasted Curry powder - Parameswari

இன்று, முதன் முதலாக.. இந்த மிளகாய்த் தூளை போட்டு... சமையல் செய்து பார்த்தோம்,
நல்ல வாசனையுடன், நல்ல நிறமாகவும், உறைப்பாகவும்  இருந்தது.
இரண்டு கரண்டி தூள் போட... 50 வீட்டுக்கு, வாசம் போகுது. 😁
இது, யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப் படுகின்றது என நினைக்கின்றேன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் kings தான் பாவிப்பது.......உங்களின் சிபாரிசில் அடுத்தமுறை கடைக்கு செல்லும்போது எடுத்துப் பாவித்துப் பார்க்கிறேன்......!   😁

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, suvy said:

நாங்கள் kings தான் பாவிப்பது.......உங்களின் சிபாரிசில் அடுத்தமுறை கடைக்கு செல்லும்போது எடுத்துப் பாவித்துப் பார்க்கிறேன்......!   😁

நாங்கள் முன்பு…. சூரியாவும், கிங்ஸ்’ம் பாவித்தோம்.
நன்பர் ஒருவர்… இதனை பாவித்துப் பார்க்கச் சொன்னார்.
இன்று சமைத்த போது… மிளகாய்த் தூளுக்கு உரிய அத்தனை சிறப்புகளும் இதில் இருந்தது.
பாவித்து விட்டு,  சொல்லுங்கள்… சுவியர். 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

வயித்திலை ஒரு பிரச்சனையும் இல்லையா? உந்த  போத்தில் தூள்களை யோசிக்கவே பயமாய் கிடக்கு 🤔

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

வயித்திலை ஒரு பிரச்சனையும் இல்லையா? உந்த  போத்தில் தூள்களை யோசிக்கவே பயமாய் கிடக்கு 🤔

எத்தினை கரண்டி... தூள் போட்டு சாப்பிட்டாலும்,  
வயித்து பிரச்சினை  இதுவரை வரவில்லை.
ப்ளீஸ்... நாவூறு படுத்தி போடாதீங்க. 😂 🤣 😜

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

நாங்கள் முன்பு…. சூரியாவும், கிங்ஸ்’ம் பாவித்தோம்.
நன்பர் ஒருவர்… இதனை பாவித்துப் பார்க்கச் சொன்னார்.
இன்று சமைத்த போது… மிளகாய்த் தூளுக்கு உரிய அத்தனை சிறப்புகளும் இதில் இருந்தது.
பாவித்து விட்டு,  சொல்லுங்கள்… சுவியர். 🙂

சூர்யா hot  நல்ல உறைப்பாய் இருக்கும் ஆனால் கறியில் கலர் இருக்காது........!   😁

நானும் இப்போது காரத்தை நிறைய குறைத்து விட்டேன் ........இருந்தாலும் தோசை, இடியாப்பத்துக்கு சம்பல் காரமாய் இருந்தால்தான் ஒரு மார்க்கமாய் இருக்கும் ஆகவே அதில் நான் காம்ரமைஸ் செய்வதில்லை......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

எத்தினை கரண்டி... தூள் போட்டு சாப்பிட்டாலும்,  
வயித்து பிரச்சினை  இதுவரை வரவில்லை.
ப்ளீஸ்... நாவூறு படுத்தி போடாதீங்க. 😂 🤣 😜

முந்தியெல்லாம் நான் பழகிற ஏரியா எல்லாம் குமாரசாமி எண்டால் அந்தமாதிரி உறைப்புக்கறி வேணும் எண்டொரு வரலாறு இருந்தது. ஆர்ரை கண் பட்டுதோ கடவுளுக்குத்தான் தெரியும்...ஓக்கம டமேச்ஜ் 😂

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் உடனே கண்ணூறு கழித்து விட்டு தொடர்ந்திருக்க வேண்டும்........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

முந்தியெல்லாம் நான் பழகிற ஏரியா எல்லாம் குமாரசாமி எண்டால் அந்தமாதிரி உறைப்புக்கறி வேணும் எண்டொரு வரலாறு இருந்தது. ஆர்ரை கண் பட்டுதோ கடவுளுக்குத்தான் தெரியும்...ஓக்கம டமேச்ஜ் 😂

வேறை ஆர்.... ஜேர்மன்காரன்தான், கண்ணூறு  படுத்தி இருப்பான். 🤣

6 hours ago, suvy said:

நீங்கள் உடனே கண்ணூறு கழித்து விட்டு தொடர்ந்திருக்க வேண்டும்........!  😂

சுவியர்... கண்ணூறு கழிக்கிற முறையை, அண்ணருக்கு சொல்லிக் குடுங்கோ. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

வேறை ஆர்.... ஜேர்மன்காரன்தான், கண்ணூறு  படுத்தி இருப்பான். 🤣

சுவியர்... கண்ணூறு கழிக்கிற முறையை, அண்ணருக்கு சொல்லிக் குடுங்கோ. 🤣

இணைத்திருந்தேன் காணவில்லை.......நீங்கள் யூ டியூபில் கண் திருஷ்டி என்று அடித்தால் தகவல் கிடைக்கும்.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

இணைத்திருந்தேன் காணவில்லை.......நீங்கள் யூ டியூபில் கண் திருஷ்டி என்று அடித்தால் தகவல் கிடைக்கும்.....!   😁

#ரியாரின், சுயமரியாதை இயக்க தொண்டர்கள்...  தூக்கி இருப்பார்கள். ஹா...ஹா...ஹா....  😂

அவை நீக்க முதல்... காணொளியை  கேட்டு, மனப்பாடம் பண்ணி வைச்சிட்டம்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
🌹தாத்தா🌹
அடம் பிடிக்காம குளிக்கிற
தாத்தாவை குறித்து
பேரன் சொன்னான் அம்மாவிடம்,
தாத்தா சமத்தா குளிக்கிறாருன்னு...!
🐥🐥🐥
மரித்துப்போன தாத்தா
குளிப்பது கடைசிக்குளியல்
என்பது தெரியாமல்...!!
🐥🐥🐥🐥
மாலை போட்டு
உட்கார்ந்த நிலையிலிருந்த
தாத்தாவை மல்லுக்கட்டி
இழுத்துப்பார்த்தான் பேரன்,
வாங்க தாத்தா வாக்கிங் போலாம்னு…
🐥🐥🐥
அடுத்த நாள் காரியத்தில்
அழுதபடி கேட்டான்,
தாத்தா எங்கன்னு...?
🐥🐥🐥
ஆண்டவன் வீட்டுக்கு போயிருக்காரு
அடுத்த வாரம் வருவாருன்னு
ஆறுதலுக்குச் சொல்லிவைத்தார் அப்பா...!
🐥🐥🐥
ஒம்மேல கோவப்பட்டு
அத்தை வீட்டுக்கு போயிருக்காருன்னு
அடக்கமுடியா அழுகையுடன்
சொல்லிப்போனாள்
அம்மா...!!
🐥🐥🐥
அம்மாவின் துணை கொண்டு
அடுத்த நாளே எழுதினான் பேரன்,
தாத்தாவுக்கு ஒரு கடிதம்...!
🐥🐥🐥
அன்பும் பாசமும் நிறைந்த தாத்தாவுக்கு,
உன் அன்பு பேரன் எழுதுவது...
ஒன்னோட வாக்கிங் ஸ்டிக்
இங்க ஹாலில் மாட்டிகிடக்கு,
இது இல்லாம,
எப்படி நீயும் வாக்கிங் போவ...?
🐥🐥🐥
ஒன்னோட மூக்குப்பொடி டப்பா,
உன் மாலை போட்ட படத்துக்கு
முன்னாலே பத்திரமா இருக்கு,
அது இல்லாம,
எப்படி நீயும் சமாளிக்க போற...?
🐥🐥🐥
பேப்பர் படிக்கும்போதெல்லாம்
பேரன் என்ன தேடுவியே...எங்க
வந்து ஒனக்குத் தர...
நீ விட்டுப்போன மூக்குக்கண்ணாடிய...?
🐥🐥🐥
அத்த வீட்டுக்கு போனாலும்
அடுத்த நாளே பேசுவியே,
அழுதபடி வாட்ஸப்பில் நீயும்,
பத்திரமா வச்சிருக்கேன்...
நீ வந்தவுடன் விளையாட
மொபைலில் ஒரு கேம்மும் தானே...!
🐥🐥🐥
வந்துரு தாத்தா வாக்கிங்
போலாம் ரெண்டு பேரும்...
ஒனக்கே கொடுத்துர்றேன்
விளையாட மொபைல...
🐥🐥🐥
நீ இல்லாமே,
இப்போல்லாம்
அப்பா அம்மா வர்ற வரைக்கும்
அடுத்த வீட்டுல தான்
அதிக நேரம் குடி இருக்கேன்...!!
  • கருத்துக்கள உறவுகள்

அதிபரை வாடி என்ற கவிஞர்..சாடிய மேதகு...| தமிழ் சிலம்பரசன் | Tamil Silambarasan.....!

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, people standing and indoor

May be an image of 6 people, people standing and indoor

May be an image of 2 people

அங்கேலா மேர்க்கல், ஜேர்மனியின் அதிபராக இருந்த தருணங்களில் கூட,  
இயலுமானவரை தானே, கடைகளில்... பொருட்களை வாங்கும் பழக்கத்தை கொண்டிருந்தார்.

அவர், மனிசனுக்கு சமைச்சு போடுவதை பெருமையா நிணைப்பவர். 👌

On 23/6/2022 at 20:03, குமாரசாமி said:

Bild

மண்ணாசையும் பெண்ணாசையும் 
ஒருங்கிணைய 
வரம் பெற்றவன்.

மண்ணுக்குள்ள புதைந்திருந்து, மண்ணையும், பெண்ணையும்.... என்னத்தை..... போங்கோ...😁

  • கருத்துக்கள உறவுகள்
On 28/1/2022 at 16:10, Paanch said:

நான் சிறுவயதில் படித்த திருநெல்வேலி சைவப் பள்ளிக்கூடத்தில் ஒரு கணக்கு வாத்தியார் எங்களுக்குக் கணக்குப் படிப்பித்தார், பாடநேரத்தில் தனது தோட்டத்திற்குச் சென்று புகையிலைக் கன்றுப் பாத்திகளுக்குத் தண்ணீர்பாச்சிச் செல்வம் சேர்த்தார்.

இங்கே, பிரிட்டனில், இந்த தொல்லை வேண்டாம் என்று, ஓய்வில் போவதை, பாடசாலை விடுமுறை காலத்தில் அமைவதாக வைத்துக்கொள்வார்கள். ஆக மாணவர்களுக்கு, அடுத்த மாசம் தான் ஓய்வு பெறுகிறார் என்று தோன்றும். ஆனால் இன்று பாடசாலை கடைசி நாளாக இருக்கும். பரிசில்கள் கொடுத்து, உணர்வு பூர்வம் இல்லாமல் விடை பெறுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/6/2022 at 10:27, தமிழ் சிறி said:

Arun Roasted Curry powder - Parameswari

இன்று, முதன் முதலாக.. இந்த மிளகாய்த் தூளை போட்டு... சமையல் செய்து பார்த்தோம்,
நல்ல வாசனையுடன், நல்ல நிறமாகவும், உறைப்பாகவும்  இருந்தது.
இரண்டு கரண்டி தூள் போட... 50 வீட்டுக்கு, வாசம் போகுது. 😁
இது, யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப் படுகின்றது என நினைக்கின்றேன்.

ஆச்சி மசாலாவில் இருந்து அம்மா மசாலா வரை, யாழ்ப்பாண மிளகாய்த்தூள் அனுப்புகிறார்கள். ஆனாலும் சட்டத்தின் படி போட வேண்டுமென்பதால், Produce of India என்று இருக்கிறது.

இது இலங்கையில் இருந்து வருவதனால், Produce of Sri Lanka என்று இருக்கும்.

****

http://www.arunceylonspices.com/index.php?route=information/contact

Arun Ceylon Spices

Malaysia

Telephone
+604-507 7737

Fax
+604-507 7737

Opening Times
24/7

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

ஆச்சி மசாலாவில் இருந்து அம்மா மசாலா வரை, யாழ்ப்பாண மிளகாய்த்தூள் அனுப்புகிறார்கள். ஆனாலும் சட்டத்தின் படி போட வேண்டுமென்பதால், Produce of India என்று இருக்கிறது.

இது இலங்கையில் இருந்து வருவதனால், Produce of Sri Lanka என்று இருக்கும்.

****

http://www.arunceylonspices.com/index.php?route=information/contact

Arun Ceylon Spices

Malaysia

Telephone
+604-507 7737

Fax
+604-507 7737

Opening Times
24/7

நான் பார்த்த விளம்பரத்தில்... யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதி..  முகவரி இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நான் பார்த்த விளம்பரத்தில்... யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதி..  முகவரி இருந்தது.

கெற் ஓபிஸ் இங்க, பக்டரி அங்க.....

சிங்களவனை நம்பி முதலிட ஏலாது.

அதுவே..... சிறீலங்கன் இன்றைய பிரச்சணைக்கு காரணம்.

ஆப்பிள், சீனாவில் சம்பளம் அதிகரிப்பால், அங்கிருந்து கிளம்ப முடிவு செய்ய, இந்தியா தனது நாட்டுக்கு வருமாறு சன்னதமாட..... ஆப்பிள் தேர்ந்தெடுத்த நாடு வியற்னாம்.

இலங்கை..... கோத்தா.... குருந்தாரில விகாரை கட்டிறதில மும்முரம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.