Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பொன்விழா: செல்வச் செழிப்பில் மிளிரும் பாலைவன நாட்டின் கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 மணி நேரங்களுக்கு முன்னர்
புர்ஜ் கலீஃபா.

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் 50வது தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1971ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை பெற்ற ஆறு அரபு நாடுகள் ஒன்றிணைந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆன நாளே அங்கு தேசிய நாள்.

அபு தாபி, அஜ்மன், துபாய், ஃபுஜய்ரா, ஷார்ஜா, அம் அல் குவெய்ன் ஆகிய ஆறு நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய அரபு எமிரேட்சுடன் 1972ல் ராஸ் அல் காய்மா இணைந்தது.

எமிரேட்ஸின் வளர்ச்சி

அபு தாபியைத் தலைநகரமாகக் கொண்டிருக்கும் இந்த நாடு, 1950களில் பெரிதும் பாலைவன பூமியாகவே இருந்தது. அப்பிரதேசத்தின் எண்ணெய் வளங்கள் கண்டறியப்பட்டு, 1962ல் எண்ணெய் ஏற்றுமதி துவங்கியபின், அதன் பொருளாதாரம் வெகு துரிதமாய் வளர்ந்து, இன்று உலகிலேயே மிகவும் செல்வச் செழிப்புமிக்க நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.

பழமைவாதம் சார்ந்த சர்வாதிகார ஆட்சியே நடைமுறையில் இருந்தாலும், தொழில் வளர்ச்சிக்கும் வர்த்தகத்திற்கும் ஏற்ற இடமாகத் தன்னை உருவாக்கிக்கொண்டுள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.

முன்னணியில் துபாய்

குறைந்துவரும் எண்ணெய் வளங்களை ஈடு செய்யும் பொருட்டு, தன்னை உலகின் முக்கியமான ஒரு சுற்றுலா பிரதேசமாக மறு உருவாக்கம் செய்துகொண்டுள்ளது இந்நாடு. இதில் முதன்மையாகத் திகழ்வது துபாய்.

1960களில் வெறும் 40,000 மக்கள் மட்டுமே வாழ்ந்துவந்த பாலைவனப் பிரதேசமான துபாயில், இப்போது 33 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இதில் 31 லட்சம் மக்கள் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

துபாயின் வளர்ச்சியில் அரசர் ஷேக் மொஹமதின் பங்கு

துபாய்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

துபாய் - நகரமயமாதல்.

எண்ணெய் ஏற்றுமதியை மட்டுமே சார்ந்திருப்பதிலிருந்து, துபாயை உலகளாவிய தொழில்-வர்த்தகப் பிரதேசமாகவும் சுற்றுலா பிரதேசமாகவும் உருமாற்றி விரிவாக்கியதில், அதன் இப்போதைய அரசர் ஷேக் மொஹமத் பின் ரஷீத் அல் மக்தூம் ஆற்றிய பங்கு முக்கியமானது.

2006ல், தனது சகோதரர் ஷேக் மக்தூம் அல் மக்தூமின் மரணத்திற்குப் பிறகு, அவரது இடத்தில் ஷேக் மொஹமத் துபாயின் அரசரானார்.

இவரது ஆட்சிக் காலத்தில்தான், இன்று துபாயின் அடையாளமாகத் திகழும் உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபா (2010), உலகின் மிகப்பெரிய வணிக வளாகமான துபாய் மால் (2008), மற்றும் துபாயின் மெட்ரோ ரயில் சேவை (2009) போன்றவை துவங்கப்பட்டன.

குற்றச்சாட்டும் மறுப்பும்

2009ம் ஆண்டு, சர்வதேசப் பொருளாதார நெருக்கடியின்போது துபாயின் கட்டுமானத் துறை பெரும் வீழ்ச்சி கண்டது. இதிலிருந்து மீண்டுவரத் தேவையான நிதியை அபு தாபி தந்து உதவியது.

வானளாவிய கட்டடங்களை எழுப்பி, துரித வளர்ச்சி கண்ட துபாயின் கட்டுமானத் தொழிலில், மிகக் குறந்த சம்பளத்திற்கு அமர்த்தப்படும் பிற நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் மோசமாக நடத்தப்படுவதாகவும், அவர்களின் உழைப்பு சுரண்டப் படுவதாகவும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

இக்குற்றச்சட்டுகளை மறுக்கும் துபாய் அரசு, தம் சட்டங்கள் அனைத்து குடிமக்களையும், துபாயில் வசிக்கும் மற்ற நாட்டைச் சேர்ந்தவர்களையும் நல்ல முறையில் நடத்துவதற்கான அடிப்படையை வழங்குகிறது என்று கூறியிருக்கிறது.

பொன்விழா ஆண்டில் உலகக் கண்காட்சி

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொன்விழா ஆண்டிற்கு முத்தாய்ப்பாக இந்த ஆண்டு அக்டோபர் 1ல் இருந்து, மார்ச் 31, 2022 வரை துபாயில் 'எக்ஸ்போ 2020' நிகழ்கிறது. 2020ல் நடந்திருக்க வேண்டிய இந்த சர்வதேசக் கண்காட்சி, கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. இதல் 192 உலக நாடுகள் பங்கேற்கின்றன.

Dubai Expo 2020 ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

பட மூலாதாரம்,REUTERS

நிலையான வளர்ச்சி, வாகனத் தொழில்நுட்பம், வாய்ப்புகள் (sustainability, mobility, opportunity) ஆகிய முக்கிய தலைப்புகளின் கீழ் இந்தக் கண்காட்சி நடக்கிறது. சர்வதேச சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம், கலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவையும் நிகழ்கின்றன.

7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 5,24,000 கோடி ரூபாய்) செலவில் நடத்தப்படும் இந்நிகழ்வில், 2.5 கோடி பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பொன்விழா: செல்வச் செழிப்பில் மிளிரும் பாலைவன நாட்டின் கதை - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

....

1960களில் வெறும் 40,000 மக்கள் மட்டுமே வாழ்ந்துவந்த பாலைவனப் பிரதேசமான துபாயில், இப்போது 33 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இதில் 31 லட்சம் மக்கள் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள்..

...

 

1998ல் நான் அமீரகம் வந்தபொழுது, 15 நாட்கள் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டேன்.(மருத்துவ சோதனை முழுவதும் முடிந்து அதன் இறுதி அறிக்கை வரும் வரை நிறுவனத்தின் செலவில் இப்படி ஓட்டலில் தங்க வைக்கப்படுவது உண்டு. மருத்துவ அறிக்கை தேறவில்லை என்றால் உடனடியாக விமானத்தில் சொந்த நாடு திரும்ப வேண்டியதுதான்.)

அந்த சமயம், பொழுது போகாமல் ஓட்டல் அறையிலுள்ள எடிசலாட்(Etisalat) தொலைப்பேசி எண் பட்டியல்கள் (Telephone Directory) கொண்ட புத்தகத்தை திருப்பினால், அப்பொழுது மொத்த அமீரக நாட்டின்(UAE) மக்கள் தொகை 33 லட்சம் (உள்ளூர், வெளிநாட்டு மக்களையும் சேர்த்து) என போட்டிருந்தது.

இப்பொழுது துபாய் நகரத்தின் மக்கள் தொகை மட்டுமே 33 லட்சம், வளர்ச்சி அப்படி..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, ராசவன்னியன் said:

அப்பொழுது மொத்த அமீரக நாட்டின்(UAE) மக்கள் தொகை 33 லட்சம் (உள்ளூர், வெளிநாட்டு மக்களையும் சேர்த்து) என போட்டிருந்தது.

17 minutes ago, ராசவன்னியன் said:

இப்பொழுது துபாய் நகரத்தின் மக்கள் தொகை மட்டுமே 33 லட்சம், வளர்ச்சி அப்படி..!

இந்த வளர்ச்சிக்கு மூல காரணம் என்ன?
துபாயில் காண்டம் போன்ற உறைகளுக்கு தடையா?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இந்த வளர்ச்சிக்கு மூல காரணம் என்ன?

மூலக்காரணம் துபாய் பொருளாதாரத்தை பெருக்க - வணிகம், சுற்றுலா மூலம் திரட்ட சீரிய திட்டமிடலும் செயல்படுத்துதலும் தான்.

6 minutes ago, குமாரசாமி said:

துபாயில் காண்டம் போன்ற உறைகளுக்கு தடையா?

அப்படியெல்லாம் ஏதுமில்லை. மருந்துக் கடை, சூப்பர் மார்க்கட்களில் கிடைக்கிறதே!

ஏன் அப்படி கேட்கிறீர்கள்? காரணமில்லாமல் கேட்க மாட்டீர்களே..! 😛

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, ராசவன்னியன் said:

அப்படியெல்லாம் ஏதுமில்லை. மருந்துக் கடை, சூப்பர் மார்க்கட்களில் கிடைக்கிறதே!

ஏன் அப்படி கேட்கிறீர்கள்? காரணமில்லாமல் கேட்க மாட்டீர்களே..! 😛

அதொண்டுமில்லை......அதீர சனத்தொகை வளர்ச்சியை யோசிச்சு கேட்டன்.😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அதொண்டுமில்லை......அதீர சனத்தொகை வளர்ச்சியை யோசிச்சு கேட்டன்.😁

முக்கால்வாசி கேரளா இங்கேதான் சாமி இருக்கிறது..! 😋

நான் வேலையில் அலுவலகத்தில் சேர்ந்தபொழுது ஒரேயொரு சூடானியை தவிர இருந்த அத்தனை பேரும் 'மல்லு'கள்.

அந்த சூடானி முதல்நாள் வேலையில் சேர்ந்தபொழுது "நீங்கள் கேரளாவா..?" எனக் கேட்டார். அவரின் குரலில் சிறிது எரிச்சலும், வெறுப்புமிருந்தது.

"ஏன் அப்படி கேட்கிறீர்கள்..?" என நான் வினவ..

அவர் மலையாளிகளை பற்றி இரண்டு 'ஏ' ரக கதைகள் சொன்னார்.. எனக்கோ சிரிப்பை அடக்க இயலவில்லை..! 🤣

எனக்கு அன்று மல்லுகளின் குணாதிசயம் தெரியவில்லை, பின்னர் அனுபவத்தில் தெளிந்தபோது 'அவர் சொன்னதில் எவ்வளவு உண்மை இருக்கிறது?' என புரிந்துகொண்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, ராசவன்னியன் said:

முக்கால்வாசி கேரளா இங்கேதான் சாமி இருக்கிறது..! 😋

நான் வேலையில் அலுவலகத்தில் சேர்ந்தபொழுது ஒரேயொரு சூடானியை தவிர இருந்த அத்தனை பேரும் 'மல்லு'கள்.

அந்த சூடானி முதல்நாள் வேலையில் சேர்ந்தபொழுது "நீங்கள் கேரளாவா..?" எனக் கேட்டார். அவரின் குரலில் சிறிது எரிச்சலும், வெறுப்புமிருந்தது.

"ஏன் அப்படி கேட்கிறீர்கள்..?" என நான் வினவ..

அவர் மலையாளிகளை பற்றி இரண்டு 'ஏ' ரக கதைகள் சொன்னார்.. எனக்கோ சிரிப்பை அடக்க இயலவில்லை..! 🤣

எனக்கு அன்று மல்லுகளின் குணாதிசயம் தெரியவில்லை, பின்னர் அனுபவத்தில் தெளிந்தபோது 'அவர் சொன்னதில் எவ்வளவு உண்மை இருக்கிறது?' என புரிந்துகொண்டேன்.

மல்லுகளின் வாழ்க்கை முறை உணவு வகைகளை யாழ்களத்திற்கு இறக்குமதி செய்ய முடியுமா சார்? 
பிளீஸ் அர்ஜெண்ட்...😂

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

மல்லுகளின் வாழ்க்கை முறை உணவு வகைகளை யாழ்களத்திற்கு இறக்குமதி செய்ய முடியுமா சார்? 
பிளீஸ் அர்ஜெண்ட்...😂

இரண்டு வேலை செய்ய வேண்டும்.

எப்படி வசதி?

  • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2021 at 22:52, குமாரசாமி said:

இந்த வளர்ச்சிக்கு மூல காரணம் என்ன?
துபாயில் காண்டம் போன்ற உறைகளுக்கு தடையா?

ஜனத்தொகை பெருகுவதை மட்டும் நாட்டின் வளர்ச்சி என்று கொள்ள முடியாது.
வெளிநாட்டவர் இங்கு தொழில் நிமித்தம் வந்து குடியேறியதுதான் நாட்டின் ஜனத்தொகை அதிகரித்தமைக்கு முக்கிய காரணம்.

ஆரம்பத்திலிருந்தே துபாயில் எண்ணெய் வளம் மிக குறைந்த அளவில் தான் உண்டு. துபாயின் வருமானத்தில் ஐந்து விழுக்காடு மட்டுமே எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைக்கிறது. மிகுதி வருமானத்தில் துபாயின் பொருளாதார முதலீடுகள் சுற்றுலா துறை என்பன முக்கிய இடம் வகிக்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.