Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்துகொள்ள பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்துகொள்ள பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம்!

வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்துகொள்ளும் இலங்கை பிரஜை அதற்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பதிவாளர் திணைக்களத்தினால் சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த விதிகள் அமுலுக்கு வரும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பிரஜையை இலங்கை பிரஜை ஒருவர் திருமணம் செய்துகொள்ளும்போது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பிரஜை ஒருவரை இலங்கை பிரஜை திருமணம் செய்துகொள்ள வேண்டுமாயின் இதற்கு முன்னர் உரிய விசா அனுமதி பத்திரம், சிவில் நிலைமையினை உறுதிப்படுத்தும் சான்றிதழ் மற்றும் பிறப்புச் சான்றிதழ் என்பன மாத்திரம் அவசியமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

https://athavannews.com/2021/1258665

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்திற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கண்டிக்கத்தக்கது - முன்னாள் சபாநாயகர் கரு

(எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கை பிரஜை  வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் முடிப்பதாக இருந்தால் அதுதொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் பூரண அனுமதி பத்திரம் ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என பதிவாளர் நாயகத்தினால் சுற்று நிருபம் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.  

நாட்டு பிரஜைகளின் சுதந்திரத்தை வரையறுப்பதற்காக அரசாங்கம் எடுத்திருக்கும் இந்த தீர்மானத்தை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம் என சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை பிரஜை ஒருவர் வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்வதாக இருந்தால், பாதுகாப்பு அமைச்சின் பூரண அனுமதி பத்திரம் ஒன்றை பெற்றுக்கொள்ளவேண்டும் என பதிவாளர் நாயகத்தினால் சுற்று நிரும் ஒன்று வெளியிட்டிருப்பதாக தெரியவருகின்றது. 

அவ்வாறாக இருந்தால், அது அரசாங்கம் எடுத்திருக்கும் தான்தோன்றித்தனமான நடவடிக்கை என்பதுடன் அருவருக்கத்தக்க செயலாகும். நாகரிமான ஒரு அரசாங்கம் ஒருபோதும் பிரஜைகளின் முக்கியமான தனிப்பட்ட சுதந்திரத்துக்கு சட்டம் இயற்றுவதில்லை.

அரச நிர்வாகம் என்பது அறிவியல் தத்துவங்களின் அடிப்படையில் அமையவேண்டுமே தவிர, குடும்பங்களின் சாதாரண நிலைமைக்கு சட்டம் அமைக்கும் செயற்பாடு அல்ல. இலங்கையில் திருமணம் முடிக்கும் சுதந்திரத்துக்கு ஏற்றவகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த புதிய வரையறையானது இலங்கை பிரஜைகளை இரண்டு முறைகளில் நடத்துவதற்கான அடித்தளமாகும்.

 

https://www.virakesari.lk/article/119749

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை இலக்கு வைத்து செய்தது போல இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2021 at 11:00, கிருபன் said:

வெளிநாட்டு பிரஜையை இலங்கை பிரஜை ஒருவர் திருமணம் செய்துகொள்ளும்போது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குண்டு… வைக்க வாறவன், தாலியை கட்டிப் போட்டுத்தான்…. குண்டு வைக்கப் போறானாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

குண்டு… வைக்க வாறவன், தாலியை கட்டிப் போட்டுத்தான்…. குண்டு வைக்கப் போறானாம். 🤣

நளினி, முருகன் நிலை பாருங்கள். ஏன் அந்த வழக்கில் தங்கள் ஆயுட்காலமும் செய்யாத தவறுக்காக இளமையை தொலைத்து இன்னமும் நீதி மறுக்கப்பட்டு அத்தனைபேரும்  வாடுகிறார்கள். தங்களுக்கு ஏற்றமாதிரி எல்லாவற்றையும் மாற்றுவார்கள் அதிகாரம் தங்கள் கையிலுள்ளவரை. ஆனால் அது பறிபோனபின் அது தங்களுக்கு எதிராக மாறுவதை தடுக்க நாட்டில் குழப்பம் ஏற்படுத்துவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டவரைத் திருமணம் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி ; சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுத்து தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதே அதன் நோக்கம் - பிரதமரின் ஒருங்கிணைப்புச்செயலாளர்

(நா.தனுஜா)

இலங்கைக்கு வருகைதரும் வெளிநாட்டவர்கள் தமது வாழ்க்கைத்துணையின் விசாவைப் பயன்படுத்தி நாட்டில் தங்கியிருந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்றுவருவதன் காரணமாகவே வெளிநாட்டுப்பிரஜையைத் திருமணம் செய்துகொள்வதற்குப் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி பெறப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச்செயலாளர் ஜி.காசிலிங்கம் தெரிவித்துள்ளார். 

அதுமாத்திரமன்றி நாட்டிற்குள் அடிப்படைவாதம் வேரூன்றுவதைத் தடுப்பதற்கு இலங்கைப் பிரஜைகளைத் திருமணம் செய்யும் வெளிநாட்டுப்பிரஜைகளிடமிருந்து தடைநீக்கல் சான்றைப் பெற்றுக்கொள்ளுமாறு உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைப்பிரஜைக்கும் வெளிநாட்டுப்பிரஜைக்கும் இடையிலான திருமணப்பதிவின்போது எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் பதிவாளர் நாயகம் டபிள்யூ.எம்.எம்.பி.வணிகசேகரவினால் பிரதேச செயலகங்கள், மாவட்டப் பதிவாளர்கள் மற்றும் மேலதிக மாவட்டப் பதிவாளர்களுக்குக் கடந்த அக்டோபர் மாதம் 18 ஆம் திகதி சுற்றுநிருபமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

விவாகப்பதிவுச்சட்டத்தின் 112 ஆவது பிரிவின்படி இலங்கைப்பிரஜைக்கும் வெளிநாட்டுப்பிரஜைக்கும் இடையிலான திருமணப்பதிவின்போது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, திருமணமாகாதவர் அல்லது விவாகரத்தானவர் என்பதை உறுதிசெய்வதற்கான ஆவணங்கள், தேவையேற்படின் பிறப்புச்சான்றிதழ் என்பன வெளிநாட்டுப்பிரஜையிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும். 

இருப்பினும் இவற்றுக்கு மேலதிகமாக எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து மேலும் சில ஆவணங்களைக் கோருவதற்குத் தீரமானிக்கப்பட்டிருப்பதுடன் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது அச்சுற்றுநிருபத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேற்படி சுற்றுநிருபத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் அறிவிப்பானது திருமணம் பற்றிய தீர்மானத்தை மேற்கொள்ளும் தனிநபர் உரிமையில் அநாவசியமாகத் தலையீடு செய்யும் வகையில் அமைந்திருப்பதாக நேற்று முன்தினம் டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளப்பக்கங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

இவ்வாறானதொரு பின்னணியில் இந்தத் தீர்மானத்திற்கான காரணம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவின் ஊடாக வழங்கியிருக்கும் விளக்கத்திலேயே பிரதமரின் ஒருங்கிணைப்புச்செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

இலங்கைப்பிரஜையொருவர் வெளிநாட்டுப்பிரஜையைத் திருமணம் செய்துகொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சிடம் எதற்காக அனுமதிபெறவேண்டும்? என்று பலராலும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இலங்கைக்கு வருகைதரும் வெளிநாட்டவர்கள் தமது வாழ்க்கைத்துணையின் விசாவைப் பயன்படுத்தி நாட்டில் தங்கியிருந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளமை இத்தீர்மானத்திற்கான முக்கிய காரணமென பாதுகாப்புத்தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

போதைப்பொருள் கடத்தல், சமூகவலைத்தளங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடிகள் என்பனவும் இதில் உள்ளடங்குகின்றன.

இவ்வாறான திருமணங்களுக்காக வறிய பெண்களே இலக்குவைக்கப்படுகின்றார்கள். அதுமாத்திரமன்றி நாட்டிற்குள் அடிப்படைவாதம் வேரூன்றுவதைத் தடுப்பதற்கு இலங்கைப் பிரஜைகளைத் திருமணம் செய்யும் வெளிநாட்டுப்பிரஜைகளிடமிருந்து தடைநீக்கல் சான்றைப் பெற்றுக்கொள்ளுமாறு உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதன்படி உள்நாட்டுப்பிரஜையொருவர் வெளிநாட்டவர் ஒருவரைத் திருமணம் செய்யவிருக்கும்  பட்சத்தில், அவர் பதிவாளர் திணைக்களத்திடம் பாதுகாப்புசார் ஆவணமொன்றைக் கையளிக்கவேண்டும். அந்த ஆவணம் பதிவாளர் திணைக்களத்தினால் பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்பப்பட்டு, குறித்த வெளிநாட்டவர் எவ்வித குற்றச்செயல்களுடனும் தொடர்புபட்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான சான்று வழங்கப்படும். அதுமாத்திரமன்றி சுகாதாரச்சான்றிதழ் ஒன்றும் கையளிக்கப்படவேண்டும்.

அவற்றின் பிரகாரம் தடைநீக்கல் சான்று வழங்கப்பட்டதன் பின்னர், சம்பந்தப்பட்ட இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்பதை பதிவாளர் நாயகம் அவர்களுக்கு அறியத்தருவார். 

இந்த நடைமுறை பல்வேறு நாடுகளாலும் கடைப்பிடிக்கப்படுவதுடன் இது தேசிய பாதுகாப்பையும் நாட்டுமக்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்வதை முன்னிறுத்தி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடைமுறையாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

 

https://www.virakesari.lk/article/119789

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்

ஆனால் பாதுகாப்பு  அமைச்சுக்கு இது தேவையற்றது

நான் இந்தச் சட்டத்தை வரவேற்கின்றேன்.

வெளி நாடுகளில் கள்ள மட்டை பயன்படுத்தி மாட்டுப்பட்டவர்களில் இருந்து, பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் வரைக்கும் தங்களின் குற்றங்களை மறைத்து ஊருக்கு போய் அப்பாவிப் பெண்களை திருமணம் முடித்து ஏமாற்றுவது இதன் மூலம் தடுக்கப்பட்டும் என நம்புகின்றேன்.  வெளினாட்டு வரன் என்றவுடன் எந்தக் கேள்வியும் இல்லாமல் தம் பிள்ளைகளை கட்டிக் கொடுக்கும் சிலர் இதன் மூலமாவது தமக்கு கிடைத்த வரன் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

கனடாவில் இருப்பவர்கள் குற்றம் எதுவும் செய்திருக்காவிடின், இப்படியான பொலிஸ் கிளியரன்ஸ் பெறுவது இலகு. ஆனால் ஏதாவது குற்றம் செய்து இருந்தால், தெளிவாக அதில் குறிப்பிட்டு இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2021 at 10:00, கிருபன் said:

வெளிநாட்டு பிரஜையை இலங்கை பிரஜை ஒருவர் திருமணம் செய்துகொள்ளும்போது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சரி... நல்ல விசயம்.

அதேபோல்.. வெளிநாட்டுப் பிரஜா உரிமை உள்ளவர் ஒருவர் உள்நாட்டு அரசியலில் ஈடுபடும் போது அவர் மீதான வெளிநாட்டுக் குற்றவியல் அறிக்கை... பொருளாதார நிலை அறிக்கை.... இவற்றை யார் தான் எங்கு சமர்ப்பிக்கிறது..????!

அடிக்கடி அமெரிக்காவுக்கு ஓடும்.. சொறீலங்கா அமைச்சர்களால்.. தேசிய பொருளாதாரத்துக்கு எவ்வளவோ அச்சுறுத்தல் வருகுதே.. அதை எல்லாம் ஏன் கணக்கில் எடுக்க மாட்டினமோ..??! ஓ.. அது குடும்பத்துக்கே.. ஆபத்தாகிடுமில்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு பிரஜை நாட்டை நிர்வகிக்கலாம், பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடலாம் அதுக்கு எந்த அனுமதியும் தேவையில்லை.  கலியாணத்துக்கு மட்டும் அனுமதி. இப்ப என்ன? பணம் பாக்கவேணும். விழிப்புணர்வை ஊட்டலாம், அதுக்காக  சட்டம் அனுமதி? இவர்களுக்கே இது அதிகமாக தெரியவில்லை? இராணுவ அதிகாரிகள் தங்கள் நாடுகளுக்கு வரத் தடை! மறைப்பா? இங்கு நாட்டில எல்லாம் ஒழுங்கா நடக்குது. காசை குடுத்தா இவரே நற்சாட்சி பாத்திரம் கொடுப்பார்.  தாங்க முடியவில்லை காட்டுற படம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.