Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகான் - திரைப்பட விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்

நடிகர்கள்: விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா, துருவ் விக்ரம், சனாந்த், வேட்டை முத்துக்குமார், ஆடுகளம் நரேன்; ஒளிப்பதிவு: ஷ்ரேயாஸ் கிருஷ்ணா; இசை: சந்தோஷ் நாராயணன்; இயக்கம்: கார்த்திக் சுப்புராஜ்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என்றெல்லாம் அறிவிப்பு வெளியானபோது, இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் அதிகரித்தது. அந்த எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்கிறதா?

படத்தின் கதை இதுதான்: காந்தி மகானின் (விக்ரம்) குடும்பமே காந்தியவாதிகள். இதனால், சிறுவயதிலிருந்தே மிகுந்த கட்டுப்பாட்டோடு வளர்க்கப்படுகிறார் காந்தி. வளர்ந்து திருமணமாகி, ஒரு பையனும் பிறந்த பிறகு நாற்பது வயதில் ஒரே ஒரு நாள் வாழ்க்கையை தன் மனம் போனபோக்கில் வாழ நினைக்கும் காந்தி, ஒரு பாருக்குச் சென்று மது அருந்துகிறார். ஆனால், அதன் பிறகு அவரது வாழ்க்கையே மொத்தமாக மாறிவிடுகிறது.

படத்தின் முதல் காட்சி குவெண்டின் டெரண்டினோவின் திரைப்படங்களில் வரும் காட்சிகளை நினைவுபடுத்துகிறது. அதற்குப் பிறகு ஒரு நீண்ட ப்ளாஷ் - பேக். நீண்ட ஃப்ளாஷ் பேக்கிற்குப் பிறகு, பழைய நண்பன் சத்யவானைச் (பாபி சிம்ஹா) சந்திக்கும் காந்தி, அவனது சாராய தொழிலில் கூட்டாளியாகி, புதிய மதுபானத்தை அறிமுகப்படுத்தி, ஒருவரை (வேட்டை முத்துக்குமார்) எம்எல்ஏவாக்கி, துணை முதல்வராக்கிவிடுகிறார். அடுத்து இந்திய அளவில் ஏதாவது பதவியைக்கூட இந்தக் கூட்டணி வாங்கிவிடுமோ என்று நினைக்கும் நேரத்தில் ஸ்பீட் பிரேக்கராக அறிமுகமாகிறது தாதாபாய் நௌரோஜி (துருவ் விக்ரம்) பாத்திரம்.

பிறகு இந்த தாதாபாய் நௌரோஜிக்கும் காந்திக்கும் இடையிலான ஆடு - புலி ஆட்டம்தான் மீதிப் படம்.

 
திரைப்பட விமர்சனம்

படத்தின் முற்பாதி நிறைய லாஜிக் பிரச்னைகளோடு வேகமாக நகர்கிறது என்றால், பிற்பாதியில் ஏகப்பட்ட உணர்ச்சிகரமான காட்சிகளோடு விக்ரமையும் படம் பார்ப்பவர்களையும் சோதனைக்குள்ளாக்குகிறது திரைக்கதை. சத்யவானின் மகன் ராக்கி, காந்தி, தாதாபாய் நௌரோஜிக்கு இடையிலான சில காட்சிகள் 'அறிந்தும் அறியாமலும்' படத்தின் சில காட்சிகளை நினைவுபடுத்துகின்றன.

இந்தப் படத்தின் பெரிய பிரச்னையே, படம் பார்ப்பவர்கள் எந்தக் கதாபாத்திரத்துடனும் ஒன்றமுடியாமல் இருப்பதுதான். படத்தின் கதாநாயகனாக விக்ரம் அறிமுகமாகி, அவருடைய பாத்திரத்துடன் பார்வையாளர்கள் இணைந்து செல்லும்போது, பல இடங்களில், விக்ரமின் பாத்திரத்தைவிட மேம்பட்ட நிலையில் சத்யவானின் பாத்திரம் செயல்படுகிறது. ஒரு கட்டத்தில் மகன் செய்யும் எல்லா அக்கிரமங்களையும் ஏற்றுக்கொண்டு, அவனைக் காப்பாற்ற காந்தி நினைக்கும்போது, மொத்தமாக அந்தப் பாத்திரம் கைவிடப்பட்ட பாத்திரமாகிவிடுகிறது. முடிவில் எல்லாப் பழியையும் துணை முதல்வர் மீது போட்டு, அவரைக் காலிசெய்து படம் முடிந்துவிடுகிறது.

 
மகான் திரைப்பட விமர்சனம்

ஒரு சின்னப் பிரச்னைக்கு பெரிதாக எதிர்வினையாற்றி, குடும்பத்தையே பிரித்த மனைவி, மாமனார் ஆகியோர்தான் வில்லன் என ஒருகட்டத்தில் தோன்றுகிறது. முடிவில், சத்யவான், துணை முதல்வர் ஆகியோரை கெட்டவர்களாக்கியிருக்கிறார் இயக்குநர். 'பழிவாங்குகிறேன்' என்ற பெயரில் பார்ப்பவர்களையெல்லாம் என்கவுன்டர் செய்யத் துடிக்கும் தாதாபாய் பாத்திரம் நினைத்ததுதான் நடக்கிறது. திரைக்கதையில் உள்ள இந்த குழப்பங்கள்தான் இதனை எவ்விதமான படம் என்று தீர்மானிப்பதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.

ஒட்டுமொத்தப் படத்தையும் தோளில் சுமந்து செல்கிறார் காந்தியாக வரும் விக்ரம். அட்டகாசமான நடிப்பு. அதற்கு அடுத்த இடத்தில் வருபவர் ராக்கியாக நடித்திருக்கும் சனாந்த். நல்ல பாத்திரங்கள் அமையும்பட்சத்தில் தமிழ் சினிமாவில் அவர் ஒரு பெரிய சுற்றுவரக்கூடும். பாபி சிம்ஹாவின் நடிப்பு ஓகே ரகம். துருவ் விக்ரமின் தோற்றத்திற்கும் அவர் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கும் பொருத்தம் இல்லை என்பதால், அவர் கடுமையாக முயற்சித்தும் பெரிதாகக் கவரவில்லை.

சந்தோஷ் நாராயணனின் இசையில் பல பாடல்கள் இருந்தாலும் எதுவும் மனதில் பதியவில்லை. பின்னணி இசையும் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனால், படத்தின் ஒளிப்பதிவு அட்டகாசமாக இருக்கிறது.

'ஜகமே தந்திரம்' படம் தந்த வீழ்ச்சியிலிருந்து கார்த்திக் சுப்புராஜ் மீண்டுவிடுவார் என்ற எதிர்பார்ப்பை மகான் ஏற்படுத்தியிருந்தது. மீண்டிருக்கிறார். ஆனால், முழுமையாக அல்ல.

மகான் - திரைப்பட விமர்சனம் - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றிரவு முட்டை கொத்து ரொட்டி சாப்பிட்டவாறே இந்த படத்தை அமேசானில் பார்க்க ஆரம்பித்தேன்..

காலையில் அலுவலகத்துக்கு செல்ல, வாட்ச்மேன் வந்து கதவை தட்டும்படி ஆகிவிட்டது..!

அட்டகாசம்..

அருமை..

வொண்டர்புஃல்..

தமிழ் உறவுகளுக்காக, விரைவில் ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகளிலும் ரீமேக் வர வாய்ப்புள்ளது..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ராசவன்னியன் said:

நேற்றிரவு முட்டை கொத்து ரொட்டி சாப்பிட்டவாறே இந்த படத்தை அமேசானில் பார்க்க ஆரம்பித்தேன்..

காலையில் அலுவலகத்துக்கு செல்ல, வாட்ச்மேன் வந்து கதவை தட்டும்படி ஆகிவிட்டது..!

அட்டகாசம்..

அருமை..

வொண்டர்புஃல்..

தமிழ் உறவுகளுக்காக, விரைவில் ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகளிலும் ரீமேக் வர வாய்ப்புள்ளது..!

சிம்ரன்ரை கொடியிடை டான்ஸ் இருக்கா சார்? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிழம்பு said:

படத்தின் முதல் காட்சி குவெண்டின் டெரண்டினோவின் திரைப்படங்களில் வரும் காட்சிகளை நினைவுபடுத்துகிறது. அதற்குப் பிறகு ஒரு நீண்ட ப்ளாஷ் - பேக். நீண்ட ஃப்ளாஷ் பேக்கிற்குப் பிறகு, பழைய நண்பன் சத்யவானைச் (பாபி சிம்ஹா) சந்திக்கும் காந்தி, அவனது சாராய தொழிலில் கூட்டாளியாகி, புதிய மதுபானத்தை அறிமுகப்படுத்தி, ஒருவரை (வேட்டை முத்துக்குமார்) எம்எல்ஏவாக்கி, துணை முதல்வராக்கிவிடுகிறார்.

Quentin Tarantino's movies சரி கடைசியில் தமிழ் படங்களில் கிளைமாக்ஸ் சொதப்பி விடும் இது விதி விலக்கா என்று பார்த்து விட்டுத்தான் சொல்லணும் . சில படங்கள் இத்தாலியன் ஜொப் அப்படியே கொப்பி பண்ணி ஹிந்தியில் சொந்த புத்தியே கிடையாதா இவர்களுக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சிம்ரன்ரை கொடியிடை டான்ஸ் இருக்கா சார்? :cool:

யாருக்கு தெரியும்..?

படம் ஆரம்பித்த மூனு நிமிசத்துலலேயே அவ்வளவு தூக்கம்..! 🤫

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2022 at 01:21, ராசவன்னியன் said:

யாருக்கு தெரியும்..?

படம் ஆரம்பித்த மூனு நிமிசத்துலலேயே அவ்வளவு தூக்கம்..! 🤫

படத்தை தூங்காமல் நேற்றுப் பார்த்தேன்.! இதைப் பார்த்த நேரத்திற்கு “ஊ அண்ட்டவா மாவா” பாட்டைப் பத்துத் தடவை பார்த்திருக்கலாம்😍

அபிலாஷ் இதை ஒரு முக்கியமான படம் என்று சொல்லுகின்றார். 👇🏾

——

 

ஆர். அபிலாஷ்

 

AVvXsEhGcR8TLHktPSQ6_V4_zJz2CBcaRTXx9ex42eBOn7pnFdKecC-eUluZVVKpOtru0uJdryNQPBSG08pgz0BJNE3ULLiNG7eK47Y_mY4PPlZhZr2zTYJ2rY2JspgkyiAfSI7riYsxpI8ORE2PbHX6F9AXPQ3DOZs37EDYQ9L9jxQ1r35YY5Pag24LfVtIwA=w400-h319
 

 

 

கார்த்திக் சுப்புராஜின் "மகான்" அதன் அரசியலைக் கருத்திற்கொண்டால் ஒரு முக்கியமான படம் என்று கூறுவேன். குறிப்பாக, அரசியல் சரிநிலைகளின் உச்சக்கட்டத்தை தமிழ்சினிமா இன்று எட்டியிருக்கும் போது அப்படியான சிலபுனிதங்களை அடித்து நொறுக்கியிருக்கிறது "மகான்". குறிப்பாக காந்தியம் பற்றி அது எழுப்பும் கேள்விகள்.

 காந்தியின் வன்முறை தவிர்ப்பு, சமரசப் போக்கு ஆகியவைஇந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க பரவியதற்கு ஒருமுக்கிய காரணம் மத்திய வர்க்க எழுச்சியும், அதைக்கட்டுப்படுத்தி வந்த முதலீட்டியத்துக்கும் அது வசதியாகஇருந்தது என்பதே. உள்ளுக்குள் ஆயிரம் பாசாங்குகளை, தீமைகளை வைத்துக் கொண்டு வெளியே நல்லவனாக குழந்தைமுகத்துடன் பவனி வர காந்தி குல்லா வெகுவாக உதவியது. அக்டோபர் 2021 ராகுல் காந்தி ஒரு முக்கியமான கேள்வியைகாங்கிரசை நோக்கி வைத்தார்: நமது நிர்வாகிகளில் எத்தனைபேருக்கு மதுப்பழக்கம் இல்லை? காங்கிரஸ் உறுப்பினராகஒருவர் மதுவருந்தக் கூடாது, காதி உடைகள் அணிய வேண்டும்என்பன விதிமுறைகள். இதை கணிசமானோர் இன்றுபின்பற்றுவதில்லை என்பது ராகுல் காந்தியின் வாதம். அந்தகாலத்தில் நிலைமை எப்படி

காந்தியின் காலத்தில் மதுப்பழக்கம் பரவலாக இருந்தது. 1920இல் காந்தி திடீரென மது ஒழிப்பை ஒரு முக்கியகொள்கையாக அறிமுகப்படுத்தி தீவிரமாக பிரச்சாரம் செய்தார். அதே நேரம் காந்தியின் கொள்கையானது எதையொன்றையும்மக்கள் மீது திணிக்காமல், சரியானதொன்றை தேர்ந்தெடுக்கும்உரிமையை அவர்களுக்கே அளிக்க வேண்டும் என்பது. எனில்மதுவை தடை செய்வது அந்த கொள்கைக்கு விரோதமானதுஅல்லவா? ஆம், ஆனால் காந்தியின் அரசியல் என்பது முழுக்கமுழுக்க அந்தந்த சமயத்து அரசியல் தேவைகளை ஒட்டியேஅமைந்தது என்பதால் இப்படி பல முரண்கள் நிறைந்ததாகவேகாந்தியம் இருந்தது. காந்தி ஆப்பிரிக்காவில் இருந்த போதுகறுப்பர்கள் ஆரிய இந்துக்களை விட தாழ்ந்தவர்கள் என்றுஎழுதினார். இந்தியாவிலும் அவர் மேல்சாதிஇந்துக்களுக்காகவே பேசினார், ஆனால் அம்பேத்கர்தலித்துகளுக்கான முக்கிய தலைவராக உயர்ந்த போது காந்திநடுங்கினார், ஏனென்றால் தலித்துகள் அவரது இயக்கத்தின்முக்கிய தூண்களாக இருந்தார்கள். அவர் உடனே தீண்டாமைஒழிப்பை ஒரு கொள்கையாக்கி அப்பொறுப்பை உயர்சாதிஇந்துக்களிடம் ஒப்படைத்தார். ஒரே கல்லில் இரண்டுமாங்காய்கள் - உயர்சாதி இந்துக்களையும் தலித்பாதுகாவலர்களாக்கி அவர்களுடைய ஈகோவை திருப்திப்படுத்திஅதிகாரத்தை அவர்களிடம் கொடுத்தாயிற்று, அதன் வழி சாதிஅமைப்பையும் மறைமுகமாக பாதுகாப்போம் எனஉறுதிப்படுத்தியாயிற்று, தலித்துகளுக்கும் தாம் காவலன் எனக்காட்டியாயிற்று. அதே போலத்தான் ஜின்னாவின் முஸ்லீம் லீக்வளர்ந்து இஸ்லாமியர்களின் குரலானதும் காந்திஇஸ்லாமியர்களுக்காகவும் பேச ஆரம்பித்தார். இப்படி இருந்தகாந்தி ஒரு விசயத்தை இருபதுகளில் புரிந்து கொண்டார் - அன்றைய பிரித்தானிய அரசின் முக்கியமான வருவாய்மார்க்கமாக மது விற்பனை இருந்து வந்தது. ஆகையால்மக்களை மதுவை கைவிட பிரச்சாரம் பண்ணுவது, மதுவைதடை செய்ய வேண்டும் எனக் கோருவது பிரித்தானிய அரசின்வருவாய்க்கு வேட்டு வைக்கும் என அவர் கணித்தார். கூடவேஇதன் மூலம் பெண்களின் பலமான ஆதரவும் தனக்குக்கிடைக்கும் என்று நினைத்தார். (இன்னொரு பக்கம்இஸ்லாமியர்களையும் தன் பக்கம் இழுத்துக் கொள்ளலாம்.)

 வரலாற்று ஆசிரியர் கேதரின் டிரிட்ரிக் 1920இல்அமெரிக்காவில் கிறித்துவ எவேஞ்சலிக்க குழுக்கள் மதுஒழிப்புக்காக தீவிர பிரச்சாரம் செய்து அதை சட்டமாகவும்கொண்டு வந்திருந்ததால், இந்தியாவில் மது ஒழிப்புக்காகபேசுவது அமெரிக்கர்களின் ஆதரவைப் பெறவும் தனக்கு உதவும்என காந்தி நினைத்திருக்கலாம் எனக் கூறுகிறார். ஆனால்காந்தி இங்கு அடித்தட்டு மக்களுக்கு, கடுமையானஉடலுழைப்பை மேற்கொள்ளும் தொழிலாளிகளுக்கு உடல்அலுப்பை களைய நாட்டுச்சாராயம் அவசியமாக இருந்ததுஎன்பதைப் பற்றி யோசிக்கவில்லை - ஏனென்றால் அவரைப்பொறுத்தமட்டில் இந்து மத்திய வர்க்கமே முக்கியம், கீழ்த்தட்டினர் அவர் சொல்லுவதைக் கேட்டு வாய்பொத்திபின்னாலே வர வேண்டும். வடகிழக்கு மற்றும் வட இந்தியபழங்குடியினரின் சடங்குகள் மற்றும் நாட்டார் தெய்வவழிபாடுகளில் அரிசியில் இருந்து செய்யப்பட்டும் பியரும்நாட்டுச்சாராயமும் முக்கியமான பங்களிக்கின்றன. அதுமட்டுமல்ல, கால்நடைகளை பலி கொடுப்பதும் தான் முக்கியமாகஇருக்கின்றன. ஆனால் காந்தியின் மனத்தில் வைணவத்தைத்தவிர பிற மதங்கள் பொருட்படுத்தத் தக்கவை அல்ல. அதுவும்கிறுத்துவம், இஸ்லாம் போன்ற நிறுவனமயமாக்கப்படமதங்களை அவர் ஓரளவுக்காவது ஏற்றுக்கொள்வார், நாட்டார்சடங்குசார் மதங்கள் அவருக்கு அற்பமே. அன்றையகாந்தியவாதிகளும் கணிசமாக இவ்வாறே நம்பினர்.

 1948இல் இந்திய பாராளுமன்றத்தில் இதைப் பற்றி ஒருவிவாதம் நடந்தது - கார்தெகர் எனும் கோலாபூரை சேர்ந்தபிரதிநிதி மது ஒழிப்பு கொள்கையின் பாதகங்களைப் பற்றிபேசும் போது அது எப்படி அடித்தட்டு மக்களுக்கு விரோதமாகஇருக்கக் கூடும் என்று விளக்கினார். பீகாரில் உள்ளபழங்குடிகளின் தலைவரான ஜெய்பால் சிங் என்பவரும் அவரைசேர்ந்த பழங்குடிகளுக்கு மது தவிர்க்க முடியாத ஒன்று என்றுவாதிட்டார். அப்போது பேசிய அம்பேத்கர் மது ஒழிப்பு ஒருதேவையில்லாத ஆணி, அதனால் தான் மதுவொழிப்பை ஒருசட்டமாக நமது அரசியலமைப்பு அங்கீகரிக்கவில்லை, மதுவைஒழிப்பது மாநில அரசின் தீர்மானம் மட்டுமே என்றுஅவ்விவாதத்துக்கு முடிவு கட்டினார்.

 

இது ஒரு தேவையில்லாத ஆணி என்று காந்திக்குத் தெரியாதா? அவர் ஏன் சாதி, மத ஒழிப்புக்கு, பொருளாதார சமத்துவத்துகாகபோராடாமல் இது போன்ற உப்புசப்பில்லாத பிரச்சனைக்காகபோராடினார்? ஏனென்றால் மதுப்பழக்கம் சில இடங்களில்மத்திய வர்க்கத்தின் பொருளாதாரத்தை சீர்குலைத்து வந்தது. மத்திய வர்க்க ஆண்களில் ஒரு பகுதியினருக்கு அளவாகக்குடிக்கத் தெரியவில்லை. அதனால் மதுப்பழக்கத்தை ஒருஒழுக்க சீர்கேடாக மத்திய வர்க்கம் கண்டு அஞ்சியது. பொதுவாக ஒழுக்கம் சம்மந்தப்பட்ட மக்களின் அச்சங்களைவைத்து இந்தியாவில் அரசியல் செய்தால் அதற்கு பெரியகவனமும் ஆதரவும் கிடைக்கும். (ஆனால் மக்கள் ஒரு பக்கம்தனிமனித ஒழுக்கத்துக்காக போராடியபடியே குடித்துக்கொண்டும் தான் இருப்பார்கள்.) அதனால் காந்தி அப்போதுஅதைக் கையில் எடுத்தார். ஏனென்றால் அவர் ஒருகடைந்தெடுத்த அரசியல்வாதி. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகுபல மாநிலங்களில் மதுவைத் தடை செய்து பார்த்தது, ஆனால்மது ஒழிப்பு தோல்வி அடைந்தது.

 இன்றைய நிலைமையைப் பாருங்கள் - சுயமாக சம்பாதிக்கும்பெண்கள் மத்திய வர்க்கத்திலும் மேல்மத்திய வர்க்கத்திலும்பெரிய அளவில் குடிக்கிறார்கள். கணவன் குடித்தால் அதுகுடும்பத்தை அழிக்கும் என்று இன்றைய மனைவியர்நினைப்பதில்லை, அளவோடு இருந்தாலும் போதும், எங்களுக்கும் ஊற்றிக் கொடுத்தால் போதும் எனகோருகிறார்கள்.

அடுத்து காந்தியின் அஹிம்சை கொள்கை - ஒரு பக்கம் அவர்யாரையும் நாம் திரும்ப அடிக்கக் கூடாது, கொல்லக் கூடாதுஎன்று கோரிக் கொண்டே இரண்டாம் முதலாம் இந்தியர்கள்அதிகமாக பிரிட்டனுக்காக யுத்தம் செய்ய வேண்டும் என்றுதீவிரமாக பிரச்சாரம் செய்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்தான் வினோதமானது - சுயராஜ்ஜியம் கிடைத்த பிறகு நமக்குராணுவ ஆற்றல் தேவைப்படும், ஆகையால் உலகப்போரில்பங்கெடுப்பது நமது பயிற்சி அளிக்கும் என்றார். சரி இந்தலாஜிக் சரி என்றால் சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா ஒவ்வொருபத்தாண்டும் எதாவது ஒரு நாட்டுடன் போருக்கு செல்லவேண்டுமே, இல்லாவிட்டால் நமது ராணுவத்திற்கு எப்படிபயிற்சி கிடைக்கும்? தோட்டாக்கள் துருபிடித்து போய் விடாதா? அட தேவுடா

 

அது மட்டுமல்ல, தனது சபர்மதி ஆசிரமத்தில் ஒருஇளம்பெண்ணும் ஆணும் காதலிக்க அவர்களை அழைத்துகண்டித்த காந்தி அப்பெண்ணை மொட்டையடிக்கும்படிகேட்டுக் கொண்டார் என்று லூயிஸ் பிஷர் தனது Life of Gandhi நூலில் எழுதுகிறார். அதுவே அவர்களுக்கு சுயக்கட்டுப்பாட்டைஎதிர்காலத்தில் கொண்டு வருமென நினைத்தார். அவர் ஏன் அந்தஆணை மொட்டையடிக்கும்படி சொல்லவில்லை? ஏனென்றால், பெண்ணின் அழகு கூந்தலில் இருக்கிறது, பெண்ணின்அழகைக் குறைப்பதே ஆணுக்கு தன் இச்சையை கட்டுப்படுத்தஉதவும் என அவர் நினைத்தார். எவ்வளவு பிற்போக்கானசிந்தனை, எவ்வளவு மோசமான மறைமுக வன்முறை பாருங்கள். காந்தியின் காலத்தில் அவரை விட புகழ்பெற்றிருந்த இளம்தலைவர் பகத் சிங் ஆவார். பகத் சிங் சிறைப்பட்டிருந்த போதுஅவர் மீதான தூக்குதண்டனைக்கு காந்தி எதிர்ப்பு தெரிவித்து, அதை ரத்து செய்யும்படி கோரிக்கை வைக்கும்படி அவரதுஆதரவாளர்கள் காந்தியைக் கேட்டார்கள். ஒரு வறட்டுநியாயத்தை சொல்லி அவர் அதை மறுத்து விட்டார். காந்தியும்காந்தியவாதிகளும் பிறர் மீது நேரடியான வன்முறையைபிரயோகிக்க மாட்டார்கள். அவர்களுடைய வன்முறைமறைமுகமானது, கலாச்சாரரீதியானது. நக்சலைட்டுகளை விடமோசமான வன்முறையாளர்கள் காந்தியர்களே. அது மட்டுமல்ல, காந்திக்கும் காந்தியவாதிகளுக்கும் தமது கொள்கையில்அசலான பிடிப்போ ஆழமான புரிதலோ இருந்தாகத்தெரியவில்லை. கடுமை காட்டக் கூடாது என்பது அவர்களுடையகொள்கை என்றால் அடுத்தவர்கள் கடுமை காட்டுவதை'கடுமையாகவே' எதிர்ப்பார்கள். அஹிம்சையை நிறுவ சட்டப்படிஹிம்சிக்கலாம், ஒருவரைக் கொல்லலாம் என்பது அவர்களுடையகொள்கை. எப்படி இருக்கிறது?  

 

இந்த மது ஒழிப்பு ஒழுக்கவாதத்தின், அஹிம்சையின்ஆபாசத்தை, அபத்தத்தை, பாசாங்கை கார்த்திக் சுப்புராஜ்தனது படத்தில் அற்புதமாக அம்பலப்படுத்தி இருக்கிறார். அதாவது இவர்களுக்கு வருமானத்துக்கு மதுவிற்பனைவேண்டும், ஆனால் மக்கள் குடிப்பது ஒழுக்கக் கேடானது, அவர்களை மட்டும் தண்டிக்க வேண்டும், ஆனால் அரசைஆதரிக்க வேண்டும். எப்படி இருக்கிற கொள்கைப் பிடிப்பு? இந்த படத்தில் விக்ரமின் காந்தி பாத்திரத்தின் மனைவி (சிம்ரன்), மகன், மாமனார், மனைவியின் சகோதரன் ஆகியோர்இப்படியான குழப்பமான முரணான கொள்கைகொண்டவர்களே. அவர்கள் மதுவருந்தியதற்காக விக்ரமைதண்டிப்பார்கள், ஆனால் மதுவை விற்று அரசாங்கம் நடத்தும்அரசின் ராணுவத்தில் விக்ரமின் மகன் தாதாபாய் நவ்ரோஜியை(துருவ் விக்ரம்) சேர்த்து பயிற்சி அளிக்கிறார்கள். அவனுடையஒரே நோக்கம் மதுவை விற்று ராஜாங்கம் நடத்தும் தன்அப்பாவை முறியடித்து அவரது நண்பனையும் நண்பனின்மகனையும் கொல்லுவது. அதுவும் தாதா பாய் படம் முழுக்க ஒருசைக்கோவைப் போன்றே நடந்து கொள்கிறான். தன் மகனின்இந்த மிருகத்தனத்தை சிம்ரனின் பாத்திரம் எந்த இடத்திலும்கண்டிப்பதில்லை. மது ஒழிப்புக்காக, சாராய லாபியைஒழிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லலாம் என்பது அவரதுநம்பிக்கை. எந்த இடத்திலும் சிம்ரன் தன் மகனைகண்டிப்பதில்லை. (அவரை கடைசி காட்சியில் கஞ்சாகொடுத்து உறங்க வைக்கிற காட்சி செம பஞ்ச்.) எனக்குத்தெரிந்து முதன்முதலாக போலிசாரின் என்கவுண்டர்கொலைகளை ரொமாண்டிசைஸ் பண்ணாமல் அதன் அத்தனைகொடூரங்களுடனும் இப்படத்தில் காட்டி இருக்கிறார்கள்.

 

இந்த லட்சியவாதம், ஒழுக்கவாதம் போன்ற விழுமியங்கள்எவற்றையும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்காமல் ஒருவன்தன் விருப்பப்படி வாழ நினைத்தால் அது தப்பா?’ என விக்ரம்இப்படத்தில் கேட்கிற கேள்வி முக்கியமானது. ஏனென்றால் மிகமோசமான வன்முறை தீவிர ஒழுக்கவாதத்தில் இருந்தேஎப்போதும் பிறக்கிறது.

 

இப்படத்தில் நான் மேலும் ரசித்த விசயங்களின் ஒன்று அதன்காட்சிபூர்வமான நகைமுரணான மொழி - காந்தி தன் வீட்டை, குடும்பத்தை இழந்த நிலையில் ஒரு பெரிய காந்தி சிலையைகையில் ஏந்தியபடி சாலையில் நிற்கும் காட்சி தமிழ் சினிமாவின்சிறந்த காட்சிகளில் ஒன்று. அவன் பெரிய சாராய வியாபாரிஆகிவிட்ட பிறகும் தன் வீட்டில் காந்தியின் சிலையை, ராட்டையை வைத்திருக்கிறான். துணை முதல்வரைக் கொல்லமுடிவெடுத்து அவன் வீட்டை விட்டுக் கிளம்பும்போது அந்தராட்டையை போகிற போக்கில் சுற்றி விடுகிறான். அதுவும் ஒருஅழகான பஞ்ச். இப்படி பல காட்சிகள் படம் முழுக்க நிறைந்துகிடக்கின்றன.

 

மற்றொரு ரசனைக்குரிய விசயம் தமிழக அரசியல் ஏற்பட்டபல்வேறு மாற்றங்களுக்கு ஏற்ப இன்னொரு பக்கம் சாராய சூதாட்ட வியாபாரமும் வளர்ந்து கொண்டே வந்ததைக்காட்டியதும், கதையை ஒரு தனிமனிதனின் குடும்பக் கதையாகமட்டும் சித்தரிக்காமல் அதை சமூக அரசியல் மாற்றங்களின்ஊடே ஒரு மாற்றுக்கதையாடலாக மாற்றியதும்.

 

விக்ரமின் மகனாக வரும் தாதாபாய் நவ்ரோஜியின் பெயர்த்தேர்வும் சுவாரஸ்யமானது. இந்த தாதாபாய் நவ்ரோஜிபத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த காங்கிரஸ்தலைவர்களுள் முக்கியமானவர். பொருளாதார நிபுணர். எழுத்தாளர். பிரிட்டனுக்கு சென்று எம்.பியாக தேர்வாகிஇந்தியர்களுக்காக பேசியவர், போராடியவர். முக்கியமாக, இவர்காந்தியின் ஆசானாகக் கருதப்படுபவர். காந்தி தேசத் தந்தைஎன்றால் இவர் தேசத்தின் தாதா என்றறியப்படுபவர். ஆக, காந்திஎனும் சாராய வியாபாரியான, ஆற்றல் மிக்க நாயகனை ஒழிக்கப்புறப்படும் பாத்திரத்துக்கு தாதாபாயின் பெயரை சூட்டியதன்பின்னால் அப்பனை முறியடிக்க தாத்தன் தான் வர வேண்டும்எனும் மொழிவிளையாட்டு இருக்கிறது. ஒருவேளை அப்பெயரில்உள்ள "தாதாவும்" கார்த்திக் சுப்புராஜின் கவனத்தைஈர்த்திருக்கலாம் - ஒரு தீவிர காந்தியவாதியும், இன்றையகாங்கிரஸ் காலத்து காந்திய தேசியவாதிகளின்பிரதிநிதியுமானவன் எப்படியான வன்முறையாளனாகஇருக்கிறான், ரௌடிகளுக்கே தாதாவாக இருக்கிறான், இவர்கள் எப்படி அண்டை நாடுகளில் ராணுவத்தை அனுப்பிமக்களைக் கொல்லுபவர்களாக இருந்துகொண்டே இன்னொருபக்கம் கதர், ராட்டை என ஜல்லியடிக்கிறார்கள் என்று காட்டஇப்பெயரை அவரை தேர்ந்திருக்கலாம். இந்த பின்நவீனவிளையாட்டையும் நான் ரசித்தேன்.

 

இப்படத்தின் திரைக்கதையில் சில குறைகள் உண்டு; அவைஇப்படத்தை சற்று தொய்வடைய செய்கின்றன. அவற்றைப் பற்றிமற்றொரு பதிவில் எழுதுகிறேன்.  

 

கார்த்திக் சுப்புராஜுக்கு இது ஒரு முக்கியமான படம். அவர் இதுபோன்ற வேறு பரிசோதனை முயற்சிகளை, அரசியல் பகடிகளைஎதிர்காலத்திலும் செய்ய வேண்டும்.

 

http://thiruttusavi.blogspot.com/2022/02/blog-post_13.html

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 11/2/2022 at 02:21, ராசவன்னியன் said:

யாருக்கு தெரியும்..?

படம் ஆரம்பித்த மூனு நிமிசத்துலலேயே அவ்வளவு தூக்கம்..! 🤫

அருணாச்சலம் வடிவுக்கரசியின்ரை விக்க சிம்ரனுக்கு போட்டு விட்டிருக்கினம்....😂

Bild

சூப்பர்ஸ்டார் படத்தில் நடித்ததால் தலைமறைவான வடிவுக்கரசி.. காரணம் கேட்டு  பிரமித்து போன கோலிவுட் - Cinemapettai

  • கருத்துக்கள உறவுகள்
On 10/2/2022 at 23:06, குமாரசாமி said:

சிம்ரன்ரை கொடியிடை டான்ஸ் இருக்கா சார்? :cool:

சிம்ரனின் கொடியிடையா .....அது ஒரு கனாக்காலம் சார் ........!  😢

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.