Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

பாலு மகேந்திரா: என்றும் அழியாத கோலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பாலு மகேந்திரா: என்றும் அழியாத கோலம்

சமஸ்

spacer.png

திடீரென்று அழைக்கிறார்: “இன்னைக்கு அலுவலகம் வர முடியுமா?”

பொதுவாக, சரியான நேரத்தைப் பின்பற்றுவார் என்பதால், அவர் குறிப்பிட்டபடி சரியான நேரத்தில் அங்கிருந்தேன். வழக்கத்துக்கு மாறாக அவருடைய நாற்காலியில் அமராமல், சோபாவில் அமர்ந்திருக்கிறார். நாற்காலியை இழுத்துப்போட்டு அருகில் அமருமாறு சைகைசெய்கிறார்: “உடம்பு சரியில்லை, டாக்டரைப் போய்ப் பார்த்தேன். என்ன மருந்து எழுதினார்னு தெரியலை. மாத்திரை முழுங்கினதிலேர்ந்து மயக்கமாவே இருக்கு'' என்றவர், சத்யாவை அழைக்கிறார். சத்யா வந்ததும் அவரிடம் சாப்பிட எடுத்துவரச் சொல்லி சைகை காட்டுகிறார்.

சத்யா அகன்றதும், “சத்யா என்னோட மகன் மாதிரி. தப்பு. அவன் என்னோட வளர்ப்பு மகன்'' என்கிறார். கொஞ்சம் இடைவெளி விட்டு, “சத்யா எம்.ஏ. தமிழ் இலக்கியம் படிச்சிருக்கான். டிரைவர் வேலைக்குத்தான் என்கிட்ட வந்தான். ‘தமிழ் இலக்கியம் படிச்சுட்டு என்ன செய்யப்போறாய்'னு கேட்டுட்டு, நான்தான் சினிமா கத்துக்கச் சொன்னேன். இப்போ சத்யா சினிமா படிக்கிறான். அவனும் என்னுடைய மாணவன். ஏதோ, நம்மால முடிஞ்சது இப்படிப்பட்ட உதவிகள்தான்'' என்கிறார்.

சத்யா ஒரு கோப்பையில் காய்கறி சூப்பைக் கொண்டுவந்து கொடுக்கவும், மெல்ல அதைக் கரண்டியால் எடுத்துச் சாப்பிட ஆரம்பிக்கிறார். அவருடைய கைகள் நடுங்கி, சட்டையில் சூப் சிந்துகிறது. தொடர்ந்து ஒவ்வொரு முறை சூப்பை உறிஞ்ச வாய்க்குக் கொண்டுசெல்லும்போதும், சூப் சிந்துகிறது. ஆனால், அதை உணரவோ தடுக்கவோ அவரால் முடியவில்லை. நகரும் கணங்கள் சங்கடமாக மாறுவதை உணர்ந்தவராக, அருகில் இருந்த ஒரு புகைப்படத்தைக் கையில் எடுத்துக்கொடுத்து, “இந்தப் படத்தைப் பார்த்திருக்கீங்களா?'' என்கிறார்.

அது கொஞ்சம் அரிதான படம். ஒலிப்பதிவுக் கூடத்தில் கமலுக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையில் அவர் ஓவெனக் கத்துவது போன்ற படம் அது.

“ ‘மூன்றாம் பிறை'யில ஸ்ரீதேவி பயந்து கத்துவது மாதிரியான காட்சியில, எப்படிக் கத்தணும்னு நான் விளக்கினப்போ எடுத்த படம் இது. ரவி எடுத்தது. ரவி எப்போ, எங்கேர்ந்து படம் எடுக்கிறார்னே தெரியாது'' என்பவருக்குள் இருக்கும் புகைப்படக்காரர் வெளியே வருகிறார்.

“நான் ஸ்ரீதேவியை எடுத்த படத்தை நீங்க பார்க்கணுமே…” என்றவர் கொஞ்சம் உற்சாகம் வந்தவராக, மெல்ல எழுந்து, படங்கள் தொங்கும் அறைக்கு அழைத்துச் செல்கிறார். ஸ்ரீதேவியின் அற்புதமான ஒரு படத்தைக் காட்டுகிறார்: “என்னா அழகு!”

கூடவே அங்கு மாட்டப்பட்டிருக்கும் ஏராளமான படங்களிடையே ரஜினியோடு நிற்கும் ஒரு படத்தைக் காட்டுகிறார். பாலு மகேந்திராவும் ரஜினியும் நின்றுகொண்டிருக்க, அவர்கள் அருகே கீழே அமர்ந்திருக்கும் மாதவி பாலு மகேந்திராவை ரசித்துப் பார்க்கும் படம் அது.

“தனுஷ் இங்கே வந்தப்போ இந்தப் படத்தைப் பார்த்தார். ‘சார்... மாதவியோட பார்வையைப் பாருங்க சார்... எங்க மாமனாரைப் பார்க்கலை; உங்களையே பார்க்கிறாங்க'னு சொன்னார். அப்புறம்தான் கவனிச்சேன். மாதவி என்னைத்தான் பார்த்துக்கிட்டுருக்கார்; இல்லையா?” - சிரிக்கிறார்.

“அந்தக் காலத்துல அட்டகாசமா இருந்திருக்கிங்க!’’

“ஏன், இப்போ மட்டும் என்னவாம்?” மீண்டும் சிரிப்பு.

“எல்லோர் படமும் இருக்கு. சில்க் ஸ்மிதா படம் இல்லையே?”

“ஏன் இல்லை? என் மனசுல இருக்கு'' என்கிறவர் கொஞ்சம் இடைவெளிவிட்டு, “சில்க் பேரழகி. அவளோட முகம், உடல், கால்கள்... சில்க் பேரழகி. அவளுடைய உதட்டுச் சுழிப்பு போதுமே... கவர்ச்சிக்கும் கிறக்கத்துக்கும். அத்தனை சக்தி உண்டு அவ அழகுக்கு.”

“ஸ்ரீதேவியைவிடவும் சில்க் அழகா?” என்றேன்.

“ஆமாம். திராவிட அழகோட உச்சம் இல்லையா அவ? ஸ்ரீதேவியும் அழகிதான். ஆனா, அவளோட சிவப்பு நிறம் திகட்டக்கூடியது. சில்க் அப்படி அல்ல” என்றவர், அப்படியே சில நிமிஷங்கள் யோசனையில் ஆழ்கிறார். “ஒரு பேரழகிங்கிறதைத் தாண்டி எத்தனை அற்புதமான ஆன்மா அவள்? அப்படி ஒரு முடிவு அவளுக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது. நல்ல ஆன்மாக்கள் நம்மகிட்ட நீண்ட நாளைக்கு நீடிக்க முடியாமல்போறது ஒரு சாபக்கேடு” என்கிறார். பேச்சு அவருடைய பழைய படங்கள், நண்பர்களைப் பற்றிச் செல்லும் வேளையில், ஷோபாவிடம் போய் நிற்கிறது. மீண்டும் யோசனையில் ஆழ்கிறார். “உங்களுக்கு ஒரு கனவு வரும்போது அதுல சந்தோஷமான, துக்கமான, நிம்மதியில்லாத இப்படி எல்லா உணர்வுகளும் அதிலே இருக்கும், இல்லையா? அப்படி ஒரு கனவு ஷோபா. வேறென்ன சொல்ல?” என்றவர் இரும ஆரம்பிக்கிறார்.

“யோசிச்சுப்பார்த்தா, ஒவ்வொரு படைப்பாளியோட தனிப்பட்ட வாழ்க்கையுமே சாபம்தான், இல்லையா? பாருங்க, ஒரு சாமானியனுக்கும் படைப்பாளிக்கும் இடையிலே என்ன வித்தியாசம்? நுண்ணுணர்வு. அதைப் படைப்பாக்குற அறிவு. அந்தப் படைப்பை ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்தியே, பகிர்ந்துகிட்டே ஆகணும்கிற வேட்கை. ஒரு சாதாரண விஷயத்தைக்கூடத் தரிசனமாகப் பார்க்குறது. அதைப் பிரமாண்டப்படுத்துறது. உணர்வுபூர்வமாக வாழ்றது. இந்த இயல்பு ஒரு மனுஷனோட படைப்புலக வாழ்க்கைக்கு நல்லது. ஆனா, தனிப்பட்ட வாழ்க்கைக்கோ சாபக்கேடு. சின்னச்சின்ன விஷயங்களைக்கூடப் பெரிசாக்கிப் பார்க்கிறதும் எல்லா விஷயங்களையும் உணர்வுபூர்வமா அணுகுறதும் உறவுகள் சார்ந்து ஆபத்தானது. ஆனா, அதுதான் ஒரு அசலான படைப்பாளியோட இயல்பு. நான் என்னுடைய படைப்புலக வாழ்க்கைக்கு நுண்ணுணர்வாளனாகவும் வீட்டிலே சாதாரணமானவனாகவும் இருப்பேன்னு நடந்துக்க முடியாது. கொஞ்சம் அதிர்ஷ்டசாலிகளுக்கு, இதைப் புரிஞ்சுக்கிட்ட வீட்டுச் சூழல் அமையும். ஆனால், அது எல்லோருக்கும் வாய்க்கிறது இல்லை” - மீண்டும் இருமல் வரவும் அப்படியே அமைதியாகிறார்.

“நான் கொஞ்சம் அதிர்ஷ்டம் செஞ்சிருக்கேன். என்னோட எல்லாக் கிறுக்குத்தனங்களையும் தாண்டி, என் குடும்பம் என்னை ஒரு குழந்தைபோல ஏந்திப் பிடிச்சுருக்கு. குடும்பச் சூழல்ல மட்டும் இல்ல, என்னோட தொழில் சார்ந்தும் நான் அதிர்ஷ்டசாலின்னுதான் சொல்லணும். நாம ஜெயிக்கிறோம், சம்பாதிக்கிறோம், தோக்குறோம், ஒண்ணுமே இல்லாமப் போறோம்... இது எல்லாத்தையும் தாண்டி, நாம இஷ்டப்பட்ட வேலையைச் செய்றோம்கிறது எவ்வளோ பெரிய பாக்கியம்? ஒரு புகைப்படக்காரன், ஒளிப்பதிவாளன், இயக்குநர்… இங்கே நீ சாதிச்சது என்னன்னு என்னை யாரும் கேட்கலாம். இது எல்லாத்தையும்விட, நான் எதைப் பெரிசா நெனைக்கிறேன் தெரியுமா? என்னோட மாணவர்களை. தமிழ் சினிமால பாலு மகேந்திராங்கிற பேர் ஒரு மனுஷன் இல்லை; ஒரு குடும்பம். என் மாணவர்களை நான் பிள்ளைகளாத்தான் பார்க்கிறேன். ஒருகட்டம் இருந்துச்சு, என்ன வாழ்க்கை இவ்வளவுதானான்னு யோசிக்கவெச்ச கட்டம். எல்லாத்தையும் இழந்துட்டு நின்ன மாதிரி இருந்துச்சு. அப்புறம் பார்த்தா, ஏக பலமாயிடுச்சு. பிள்ளைங்க பெரியாளாயிட்டாங்கல்ல? இன்னைக்கு என்னைச் சுத்தி எல்லாரும் நல்லவங்களா இருக்காங்க. நான்தான் பெரிய பணக்காரன்” என்கிறார்.

“என்னோட சின்ன வயசுல என் வீட்டுக்குப் பக்கத்துல ஒரு ஆலமரம் உண்டு. என்னோட பால்ய கால எல்லா ரகசியங்களும் அறிஞ்ச மரம் அது. ஒரு வகையில் அது என்னோட மறைவிடம். வீட்டுக்குத் தெரியாம நான் செஞ்ச எல்லா விஷயங்களும் அந்த மரத்துக்குத் தெரியும். அந்த வயசுல ஒருத்தன் மறைக்கிறதுக்கு நியாயங்கள் இருக்கலாம். இந்த வயசில் என்ன நியாயம் இருக்க முடியும்? மனசுல ஒரு படம் இருக்கு. மனசுல உள்ளதையெல்லாம் கொட்டி அதை எடுக்கணும்கிற ஆசை இருக்கு. ஆனா, இங்கே அது முடியுமா? தெரியலை. ஆனா, முடிக்கணும். பார்ப்போம்!”

நெஞ்சில் அப்படியே நிற்கிறார் பாலு மகேந்திரா; கூடவே அவருடைய நிறைவேறாத கனவும்.

 

 

https://www.arunchol.com/samas-article-on-balu-mahendra

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருமையான மனிதர்.....பேரழகியை பலரின் இதய சிம்மாசனத்தில் அமர வைத்தவர்.......!  

மூன்றாம் பிறை எடுத்து முழுநிலவாய் விண்ணில் விட்டவர்.......!  🌹

Posted
1 hour ago, கிருபன் said:

ஷோபாவிடம் போய் நிற்கிறது. மீண்டும் யோசனையில் ஆழ்கிறார். “உங்களுக்கு ஒரு கனவு வரும்போது அதுல சந்தோஷமான, துக்கமான, நிம்மதியில்லாத இப்படி எல்லா உணர்வுகளும் அதிலே இருக்கும், இல்லையா? அப்படி ஒரு கனவு ஷோபா. வேறென்ன சொல்ல?” என்றவர் இரும ஆரம்பிக்கிறார்.

நிச்சயமாக அத்தனை உணர்வுகளும் இருக்க வேண்டும்.  குற்றம் செய்த எத்தனை பேர் உண்மையை ஒத்துக்கொண்டுள்ளார்கள்???

Posted

பாலு மகேந்திரா நல்ல கலைஞன், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் 5 வயதில் அங்கிள் என்று கூப்பிட்டு மடியில் விளையாடிய சிறுமியை அவர் 18 ஆகும் முன்னமே, சிறுமியாக இருக்கும் போதே, திருமணம் முடித்து, உடலுறவு கொண்ட ஒரு pedophile ஆகவும் உள்ளார்.

இன்று இப்படி நடந்தால் ஆள் சிறைக்குள் தான் இருந்திருப்பார்.

இவரை போற்றுவதே தவறு. ஒரு சிறுமியுடன் பாலுறவு கொண்டவரை அவர் எத்தகைய திறமையிருப்பினும் நிராகரிப்பதே நாகரீகம்.

Posted

பாலுமகேந்திராவுக்கு ஒரு ஒப்பாரி சில ஞாபகங்களுடன்!

 
எனக்கு பாலு மகேந்திராவென்றாலே இளம் வயதில் பரிதாபமாக இறந்த நடிகை ஷோபா ஞாபகம்தான் வருது. அதான் பசி படத்துக்கு ஊர்வசிப் பட்டம் பெற்ற நடிகை! தெரியாதா?. முள்ளும் மலரும் படத்தில் ரஜினி தங்கையாக என்னமா நடித்து இருப்பார். ஏணிப்படிகளாக இருக்கட்டும், இல்லைனா நிழல் நிஜமாகிறாதாக இருக்கட்டும் I have never seen such a casual/natural acting with any other actress!

 http://upload.wikimedia.org/wikipedia/en/8/85/Shoba_actress.jpg

இவர் திடீர் மரணமடைந்தபோது பாலு மகேந்திரா மேலே பலசந்தேகங்கள் எழுந்தன. இதில் வேடிக்கை என்னவென்றால் பாலு மகேந்திராவுக்கும் இவருக்கும் என்ன உறவு (சினிமா தவிர) என்பதே பெரிய கேள்விக்குறியாக இருந்தது! ஆனா இன்னைக்கு விக்கில ஷோபா இவருடைய மனைவினு சொல்லிப் போட்டு இருக்காணுக! ஷோபா இறந்தபோது அவருக்கு வயது  17 னு வேற போட்டு இருக்காணுக!  ஷோபா இறந்தபோது இவரிடம் கேள்விகள் பல எழுப்பி போலிஸ் விசாரனை அது இதுனு  நடந்தது.

தமிழ் சினிமாவில்  இளம் நடிகைகள் இப்படி பலியாவதெல்லாம் ரொம்ப சாதாரணம். சில்க் ஸ்மிதா, படாபட் ஜெயலச்சுமி, லக்ஷ்மி ஸ்ரி, ஷோபா இப்படிப் போயிக்கொண்டே இருக்கும். இதுபோல் இளம் நடிகைகள் பரிதாபமாகச் சாவதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை. ஒப்பாரி வைக்க ஒரு பய இருக்க மாட்டான்! ஆனா 74 வயதுக்கப்புறம் ஒரு ஆம்பளை செத்தான்னா ஆளாளுக்குக் கூடி ஒப்பாரி வைப்பாணுக! வச்சுக்கிட்டே இருப்பாணுக!

இப்போ ஒப்பாரி வைக்கிற யோக்கியன்களிடம், ஷோபாவுக்கும் பாலு மகேந்திராவுக்கும் என்ன உறவு? னு  கேட்டால்,  ஷோபா அவருடைய மனைவினு சொல்வார்களா என்பதே சந்தேகம்தான். என்ன பதில் சொல்லுவாணுகளோ! மனைவி என்று சொன்னால் என்னுடைய கேள்விகள்.. Did he marry a minor? Was he a sick person then? Or everything said in wiki are all BULLSHIT?
 
 
Born Mahalakshmi Menon
23 September 1962
Died 1 May 1980 (aged 17)[1] Chennai, Tamil Nadu, India
Other names Shoba Mahendra, Urvashi Shoba,[1] Baby Mahalakshmi, Baby Shoba
Occupation Actress
Years active 1966-1971, 1977–1980
Spouse(s) Balu Mahendra (1978–1980) her death
Parents K. P. Menon (Father)
Prema (Mother)


மறைந்த பாலுமகேந்திரா ஒண்ணும் இயக்குனராக தமிழ் சினிமாவில் பெருசா கிழிக்கவில்லை என்பதே உண்மை.  soft porn மாரி சொருகப்பட்ட ஒரு கேவலமான சீன்களுடன் சேர்த்து "பொன்மேணி உருகுதே"னு கோர்த்துவிட்ட ஒருபாட்டுதான் மூன்றாம் பிறை யில் மெயின் ப்ளாட்டை விட நம்ம நாட்டான்களைக் கவர்ந்து அந்தப் படத்தை கமர்ஷியல் சக்ஸஸ் ஆக வைத்தது என்பதே உண்மை.

உன் கண்ணில் நீர் வழிந்தால் னு ரஜினி வைத்து இவர் எடுத்த படம் ஒரு படு குப்பை! நிச்சயம் இவர் ஒரு நல்ல கேமராமேன்! அவ்ளோதான். என்ன நம்ம இயக்குனர் பாலா போல சில "சிக் பர்சனாலிட்டி" களை உருவாக்கிவிட்டுப் போயிருக்கிறார். அவனுக எல்லாம் கூடி ஒப்பாரி வைக்கிறாணுக!

 அழியாத கோலங்கள்னு ஒரு படம் எடுத்துவிட்டாரு. இதுலயும் ஷோபா தான் ஹீரோயின். என்ன வெடலைப் பசங்க அந்த வயதில் அலைவதுபோல ஒரு மலையாளப் பட ப்ளாட். இதை ஆகா ஓகோனு நம்ம க்ரிட்டிக்களெல்லாம் புகழ்ந்து தள்ளிப்புட்டாணுகளாம். இதே எழவைத்தான் ஷங்கர்  Boys ல எடுத்து க்ரிட்டிகளிடம் சப்பு சப்புனு அறை வாங்கினார்.

பாலு மகேந்திராவின் தனித்துவம் என்னனா பொதுவாக ஹாலிவுட் அல்லது பிற மொழிப்படங்களை தழுவி எடுப்பதில் இவர் நம்ம ஒலக நாயகனுக்கு ஒரு படி மேலேனு சொல்லலாம். இவருடைய முக்கிய காண்ட்ரிப்யூஷன்னு என்னைக்கேட்டால் மகேந்திரன் படங்கள் மற்றும் பல படங்களில் இவருடைய ஒளிப்பதிவுனு வேணா சொல்லலாம்.

ஆமா செத்தால்தான் எல்லாரும் நம்ம ஊர்ல கடவுளாகி விடுவார்களே ? இன்னொரு கடவுள் உருவாகி இருக்கிறார் இப்போது.  ஏன் இப்படியும் ஒப்பாரி வைக்கலாமே சில உண்மைகளைச் சொல்லி?! என்ன? என்ன? தெய்வகுத்தம் பண்ணிப்புட்டேனா நான்? :(

http://timeforsomelove.blogspot.com/2014/02/blog-post_16.html

 

Anonymous said...

உங்களுக்கு ஏற்பட்ட அதே உணர்வு தான் எனக்கும் ஏற்பட்டது. பாலு மகேந்திரா தனது முதல் படம் கோகிலாவை 1977-யில் இயக்கினார். கன்னடத்தில் உருவாக்கப்பட்டது. கமல் மோகன் சோபா நடித்திருந்தார். சோபா அப்போது ஒரு வளரும் நடிகை, 15 வயது தான். அவர் தாயாரும் ஒரு சிறியளவிலான நடிகையாய் இருந்தவர். அப்போது தான் பாலுவுக்கும் சோபாவுக்கும் பழக்கமானது. அப்போது பாலுவுக்கு வயது 39. கிட்டதட்ட மகள் வயது சோபாவுக்கு. சோபா ஒரு சிறுமி என்றே சொல்லலாம். சோபாவின் தாயாரின் கொடுமைகளில் தவித்துக் கொண்டிருந்தவருக்கு பாலுவின் அறிமுகம் ஆசுவசாம் தந்தது. அங்கிள் என்றே அழைப்பார். சோபாவை காதலிக்கத் தொடங்கிய பாலு, சோபாவை வைத்து மேலும் சில படங்கள் பண்ணினார். தாயாரால் பாலியல் தொழிலுக்கும் நடிப்புக்கும் தள்ளப்பட்ட சோபா பாலுவின் கனிவான பேச்சில் மயங்கியதோடு ஒரு கட்டத்தில் தாயாரோடு கோபித்துக் கொண்டு பாலுவை தேடி வந்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரு வீடு பிடித்து கொடுத்து சின்ன வீடாக வைத்திருந்தார், இவ்வளவு பெரிய மனுசத்தனம் பண்ணத் தெரிஞ்ச பாலுவுக்கு பொண்டாட்டி என்றால் பீப் பயம், கண்ணசைத்தாலே பூனையாய் அடங்குவார், தன் ஆம்பிள்ளைத்தனத்தை இளம் நாயகிகளிடம் தான் காட்டுவார், அன்புக்கு ஏங்கிய சோபா பாலுவை வெறியாய் காதலித்தார், தான் பாலுவை மணந்து கொண்டதாகவும் அறிவித்தார். ஆனால் பாலு மறுத்துவிட்டார், மழுப்பினார், ஆனால் மைனர் பெண்ணோடு குடித்தனம் நடத்தினார். ஒரு கட்டத்தில் சோபா பாலுவிடம் தன்னை மணந்த விடயத்தை உலகுக்கு அறிவிக்குமாறு வேண்டினார், ஆனால் அதற்குள் மர்மமான முறையில் தூக்கில் தொங்கி இறந்தார். அப்போது எம்.ஜி.ஆரின் தயவால் குற்றவாளிகள் தப்பியும் விட்டனர். உலகமும் சோபாவை மறந்து விட்டது. தற்கொலை தான் என வழக்கு மூடப்பட்டது. 1984-யில் சோபாவின் தாயாரும் தூக்கில் தொங்கினார். இந்திய அளவில் உயர்ந்திருக்க வேண்டிய நடிகையை தமிழ் சினிமா இழந்தது. சோபாவின் துயரால் மூன்றாம் பிறை எடுத்ததாக பாலு கூறிக் கொண்டாலும், சோபாவின் பிம்பம் ஒன்று கூட அதில் இல்லை. மூன்றாம் பிறை நாயகிக்கு லவ்ஸ் விட்டுக் கொண்டு திரிந்ததாகவே வட்டாரங்கள் கூறுகின்றன. அத்தோடு பாலுவின் அனேக படைப்புக்கள் ஆலிவுட் தழுவல்கள் தான் அப்படியிருக்க உன்னத படைப்பாளி என்ற பில்டப்பு ரொம்பவே ஓவரு. மூடுபனி படம் கூட ஹிட்ச்காக்கின் சைக்கோவின் ரீமேக். சோபாவை பற்றி நன்கறிந்த ஜார்ஜ் என்ற இயக்குநர் சோபாவின் மரணம் குறித்து லேகாவுடைய மரணம்: ஒரு பிளாஷ்பேக் என்ற படத்தை 1984-யில் எடுத்து சோபாவின் மரணத்தில் சர்ச்சை உள்ளது என அறிவித்தார் ஆனால் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக அப்போதைய எம்.ஜி.ஆர் அரசு தட்டிக்கழித்தது. :( இன்று சோபா உயிரோடு இருந்திருந்தால் 52 வயது தான் இருந்திருக்கும் பெரும் நடிகையாய் பல படைப்புகளில் வலம் வந்திருப்பார் என்பது தான் வருத்தமான உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாலு மகேந்திரா ஒரு பெண்பித்தன்!

அந்தக் காலங்களில் ரகசிய கமராக்கள் இருந்திருந்தால் இவர் மட்டுமல்ல புரட்சித் தலைவர், ரஜனி, கமல் என்று ஒரு பெரிய பட்டாளத்தையே சந்திசிரிக்க வைச்சிருக்கலாம். தப்பீட்டானுகள்! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய திரையுலகில் இருக்கும் மற்றவர்கள் எல்லோரும் ஏதோ புனிதர்கள் போலவும் பாலுமகேந்திரா மட்டும் கெட்டவன் போலவும் இந்த கட்டுரை ஒப்பாரி வைக்கின்றது.

தமிழ்நாட்டு திரையுலகில் வடலி வளர்த்து கள்ளுக்குடித்தவர்களின் பெயர்களை எழுதினால் பல முகங்கள் சுளிக்கும்.... இந்த விடயத்தில் ஒரு சில நடிகைகளும் சளைத்தவர்கள் அல்ல....

முன்னொரு காலத்தில் ஒரு பக்திப்பரவச நடிகை கார் ட்ரைவர் தொடக்கம்  லைட்மேன் வரைக்கும் பதம் பார்த்தவராம்.....

 ஒரு சில நேரங்களில் ஓம் முருகா....ஓம் முருகா அங்கைதான்....அங்கைதான்  எனும் கோஷம் விண்ணை தொடுமாம் 😷

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 17/2/2022 at 08:53, வாலி said:

பாலு மகேந்திரா ஒரு பெண்பித்தன்!

அந்தக் காலங்களில் ரகசிய கமராக்கள் இருந்திருந்தால் இவர் மட்டுமல்ல புரட்சித் தலைவர், ரஜனி, கமல் என்று ஒரு பெரிய பட்டாளத்தையே சந்திசிரிக்க வைச்சிருக்கலாம். தப்பீட்டானுகள்! 

கமலுக்கு ரகசியக் கமராக்களே தேவையில்லை. அந்தளவிற்கு அவர் வெளிப்படையான ஆள்.

இன்று ஷேன் வோர்னின் ஒளிநாடா ஒன்று பார்த்தேன். அவரும் இன்னும் ஐந்து பெண்களும் உடலுறவில் ஈடுபடும் காட்சி, ஒரே படுக்கையில். இன்று இருக்கும் போர்ன் வீடியோக்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு மனிதன் இயங்கியிருக்கிரார். இவரும் கமலைப்போலவே வெளிப்படையானவர்தான், ஆனால் இந்தக் காட்சி மட்டும் வித்தியாசமானது. உல்லாச விடுதியின் அறையின் கூரையில் கமெராவைப் பொருத்தி, அவருக்குத் தெரியாமல் எடுத்திருக்கிறார்கள். உள்ளேயிருந்த அழகியொருத்தியே இதனைத் திட்டமிட்டுச் செய்ததாக நம்பப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/3/2022 at 03:57, ரஞ்சித் said:

இன்று ஷேன் வோர்னின் ஒளிநாடா ஒன்று பார்த்தேன். அவரும் இன்னும் ஐந்து பெண்களும் உடலுறவில் ஈடுபடும் காட்சி, ஒரே படுக்கையில். இன்று இருக்கும் போர்ன் வீடியோக்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு மனிதன் இயங்கியிருக்கிரார். இவரும் கமலைப்போலவே வெளிப்படையானவர்தான், ஆனால் இந்தக் காட்சி மட்டும் வித்தியாசமானது. உல்லாச விடுதியின் அறையின் கூரையில் கமெராவைப் பொருத்தி, அவருக்குத் தெரியாமல் எடுத்திருக்கிறார்கள். உள்ளேயிருந்த அழகியொருத்தியே இதனைத் திட்டமிட்டுச் செய்ததாக நம்பப்படுகிறது.

இதையெல்லாம்மா பார்ப்பார்கள்? ☺️

எனக்கு இப்படியான காணொளிகளின் லிங் ஒரு சிலர் வேண்டுமென்றே தனிமடலுக்கு அனுப்பிவிடுவார்கள். நான் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

இதையெல்லாம்மா பார்ப்பார்கள்? ☺️

எனக்கு இப்படியான காணொளிகளின் லிங் ஒரு சிலர் வேண்டுமென்றே தனிமடலுக்கு அனுப்பிவிடுவார்கள். நான் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.😎

நான் நம்பீட்டன்!

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.