Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரும்பாலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்குகிறது ஜேர்மனி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தினசரி நோய்த்தொற்றுகளில் வீழ்ச்சி: பெரும்பாலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்குகிறது ஜேர்மனி!

தினசரி நோய்த்தொற்றுகளில் வீழ்ச்சி: பெரும்பாலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்குகிறது ஜேர்மனி!

ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் மாறுபாட்டிலிருந்து மெதுவாக மீண்டு வரும் ஜேர்மனி, பெரும்பாலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்கவுள்ளது.

ஜேர்மனியின் தலைவர்கள் நேற்று (புதன்கிழமை) நாட்டின் பெரும்பாலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மார்ச் 20ஆம் திகதிக்குள் முடிவுக்கு கொண்டுவருவதற்கான திட்டங்களை அறிவித்தனர்.

இதனை உறுதிப்படுத்திய அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், கூட்டாட்சி மாநிலங்களின் தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு, கொவிட்-19 தொடர்பாக ஜேர்மனி அதிக நம்பிக்கையுடன் எதிர்நோக்கத் தயாராக இருப்பதாக கூறினார். இருப்பினும், தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று அவர் எச்சரித்தார்.

ஓமிக்ரோன் அலை ஏற்கனவே உச்சத்தை எட்டியுள்ளது என்றும், தினசரி நோய்த்தொற்றுகள் குறையத் தொடங்கியுள்ளன என்றும் சுகாதார அமைச்சர் கார்ல் லாட்டர்பாக் அறிவித்ததை அடுத்து இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எப்போதும் மாற்றமடையும் வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் முகக்கவசங்கள் மற்றும் பிற முக்கிய கருவிகளின் இருப்புக்களை நிரப்புவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

ஜேர்மனியின் கொவிட்-19 தொற்று வீதம் கீழ்நோக்கிச் செல்லத் தொடங்கியதை உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுவதால், மூன்று-படி திட்டம் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் மற்றும் நாட்டின் 16 மாநில ஆளுநர்களால் அங்கீகரிக்கப்பட்டது. இது அண்டை நாடுகளான ஒஸ்திரியா மற்றும் சுவிஸ்லாந்தின் நகர்வுகளுடன் ஒத்துப்போனது.

தடுப்பூசி போடப்பட்டதற்கான ஆதாரம் இல்லாமல் அல்லது அத்தியாவசியமற்ற கடைகளுக்குச் செல்வதைத் தடுக்கும் விதிகளை அகற்றுவது மற்றும் தடுப்பூசி போடப்பட்ட நபர்களின் தனிப்பட்ட கூட்டங்களுக்கான வரம்புகளை நீக்குவது ஆகியவை தளர்த்தப்பட வேண்டும்.

மார்ச் 4ஆம் திகதி முதல், உணவகங்கள் மற்றும் மதுபான சாலைகளுக்குள் நுழைவதற்கான தேவைகள் தளர்த்தப்படும். தற்போது பல பகுதிகளில் தடுப்பூசி அல்லது மீட்புக்கான சான்று மற்றும் சோதனை அல்லது பூஸ்டர் அளவு ஆகியவற்றைக் காட்டிலும் எதிர்மறை சோதனை போதுமானது. நுழைவுக் கட்டுப்பாடுகள் இருந்தாலும், இரவு விடுதிகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்.

https://athavannews.com/2022/1267414

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

மார்ச் 4ஆம் திகதி முதல், உணவகங்கள் மற்றும் மதுபான சாலைகளுக்குள் நுழைவதற்கான தேவைகள் தளர்த்தப்படும். தற்போது பல பகுதிகளில் தடுப்பூசி அல்லது மீட்புக்கான சான்று மற்றும் சோதனை அல்லது பூஸ்டர் அளவு ஆகியவற்றைக் காட்டிலும் எதிர்மறை சோதனை போதுமானது. நுழைவுக் கட்டுப்பாடுகள் இருந்தாலும், இரவு விடுதிகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்.

இவங்களுக்கு  இனி ஒரே தேர்,தீர்த்தத் திருவிழாதான்.....சின்ராசுக்களை இனி கையிலையும் பிடிக்கேலாது.😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

இவங்களுக்கு  இனி ஒரே தேர்,தீர்த்தத் திருவிழாதான்.....சின்ராசுக்களை இனி கையிலையும் பிடிக்கேலாது.😁

இன்னும் நாலு கிழமையில்… வின்ரர் முடிந்து, சமர் வருகுது.
ஒரே… உய்யலாலா தான். 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, தமிழ் சிறி said:

இன்னும் நாலு கிழமையில்… வின்ரர் முடிந்து, சமர் வருகுது.
ஒரே… உய்யலாலா தான். 😁

இவங்கள் நாலுகிழமைக்கு பொறுத்திருக்காங்கள்.....எந்த குளிர் எண்டாலும் விட்ட குறையை பிடிக்கத்தான் பாப்பாங்கள். 😄

  • கருத்துக்கள உறவுகள்

கொரனோ நோய் வந்தவங்கள் மாஸ்க் இல்லாமல் இனி திரிவினம் நோய் வராதவர்கள் இலகுவாக கண்டு பிடிக்கலாம் மாஸ்க் உடன் கையுக்கு கிருமி நாசினி பூசிக்கொண்டு திரிவினம் .

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி,
மார்ச் நடுப் பகுதியில் பெறா மகளின் திருமணம் Wuppertal பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் நடாத்த முடிவு எடுத்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, பெருமாள் said:

கொரனோ நோய் வந்தவங்கள் மாஸ்க் இல்லாமல் இனி திரிவினம் நோய் வராதவர்கள் இலகுவாக கண்டு பிடிக்கலாம் மாஸ்க் உடன் கையுக்கு கிருமி நாசினி பூசிக்கொண்டு திரிவினம் .

வெள்ளை வேட்டிக்கள்ளர் இனித்தான் வெளியிலை தெரிவினம் எண்டுறியள்...😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Ahasthiyan said:

நல்ல செய்தி,
மார்ச் நடுப் பகுதியில் பெறா மகளின் திருமணம் Wuppertal பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் நடாத்த முடிவு எடுத்திருக்கிறார்கள்.

மார்ச் 20´ம் திகதி அளவில், பெரும்பாலான தடைகளை எடுக்க இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

இவங்களுக்கு  இனி ஒரே தேர்,தீர்த்தத் திருவிழாதான்.....சின்ராசுக்களை இனி கையிலையும் பிடிக்கேலாது.😁

நீங்களும் ரைன் நதிக்கரையில் கிறில் பாட்டி வைக்கலாம். நீந்தலாம் .....ஊர் கூடி அலட்டலாம்.😊

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
47 minutes ago, shanthy said:

நீங்களும் ரைன் நதிக்கரையில் கிறில் பாட்டி வைக்கலாம். நீந்தலாம் .....ஊர் கூடி அலட்டலாம்.😊

நான் இருக்கிற இடத்திலை குளம் குட்டையள் தான்..

mario-dirks-6892-bornhorstersee, © CC0-Lizenz, Version 1.0

அதுவும் எல்லா குளக்கரையிலையும் கிறில் போட விடாங்கள். எல்லாம் குடிதண்ணீர் எண்டு கிறிலுக்கு தடை.....😄

ஆத்தங்கரைக்கு நான் எங்கை போவன்?🙃

Vadivelu Feeling GIF - Vadivelu Feeling Feeling It - Discover & Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

ஆத்தங்கரைக்கு நான் எங்கை போவன்?

இங்கு தேம்ஸ் தெமோ எண்டு ஓடுது ரெடிங் பக்கம் வெளி லண்டன்தான் Seakeeper எனும் தொழில்நுட்பம் படகை ஆட்ட விடாது தரையில் உள்ளது போல் வைன் கிளாஸ் தளும்பாமல் மேசையில் இருக்கும் அந்த படகுகளிலே கிரில் போடலாம் வாரீங்களா ?😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, பெருமாள் said:

இங்கு தேம்ஸ் தெமோ எண்டு ஓடுது ரெடிங் பக்கம் வெளி லண்டன்தான் Seakeeper எனும் தொழில்நுட்பம் படகை ஆட்ட விடாது தரையில் உள்ளது போல் வைன் கிளாஸ் தளும்பாமல் மேசையில் இருக்கும் அந்த படகுகளிலே கிரில் போடலாம் வாரீங்களா ?😀

வைன் கிளாஸ் தளம்பாமல் இருக்கும் இது ஓகேதான்...ஆனால் வைன் உள்ளுக்கு போன ஆள் தளம்பினால் படகு தாக்கு பிடிக்குமா சார்? 😂

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

இங்கு தேம்ஸ் தெமோ எண்டு ஓடுது ரெடிங் பக்கம் வெளி லண்டன்தான் Seakeeper எனும் தொழில்நுட்பம் படகை ஆட்ட விடாது தரையில் உள்ளது போல் வைன் கிளாஸ் தளும்பாமல் மேசையில் இருக்கும் அந்த படகுகளிலே கிரில் போடலாம் வாரீங்களா ?😀

படகில் போய் தண்ணியடிப்பதே படகின் தள்ளாட்டத்துக்குத்தான் ......அங்கேயும் தளம்பல் இல்லையென்றால் பிறகென்ன கோதாரிக்கு அங்க போவான்.......!   😋

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

நான் இருக்கிற இடத்திலை குளம் குட்டையள் தான்..

mario-dirks-6892-bornhorstersee, © CC0-Lizenz, Version 1.0

அதுவும் எல்லா குளக்கரையிலையும் கிறில் போட விடாங்கள். எல்லாம் குடிதண்ணீர் எண்டு கிறிலுக்கு தடை.....😄

ஆத்தங்கரைக்கு நான் எங்கை போவன்?🙃

Vadivelu Feeling GIF - Vadivelu Feeling Feeling It - Discover & Share GIFs

வடக்கு பக்கம் கொஞ்சம் எட்டி போனியளெண்டால் ரைன்நதி வருமெல்லோ😅 கோடை காலத்தை ரைன்நதிக்கரையால் நடந்து போகாமல் என்ன பலன் கண்டீர்கள்🤗

ஒரு ஐடியா யாழ்கள நண்பர்கள் ரைன்நதிக்கரையால் ஒரு பயணம் போகலாமா? யார் வாறியள்? 

3 hours ago, குமாரசாமி said:

வைன் கிளாஸ் தளம்பாமல் இருக்கும் இது ஓகேதான்...ஆனால் வைன் உள்ளுக்கு போன ஆள் தளம்பினால் படகு தாக்கு பிடிக்குமா சார்? 😂

வைன் கிளாஸ் மூடியில் வாசனையுணரும் ஆளில்லைத் தானே நீங்கள் 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, shanthy said:

கோடை காலத்தை ரைன்நதிக்கரையால் நடந்து போகாமல் என்ன பலன் கண்டீர்கள்🤗

அதுவும் சரிதான்....😁

1 hour ago, shanthy said:

ஒரு ஐடியா யாழ்கள நண்பர்கள் ரைன்நதிக்கரையால் ஒரு பயணம் போகலாமா? யார் வாறியள்? 

ஒருக்கால் ஜேர்மன் யாழ்கள உறவுகள் ஒன்று கூடத்தான் வேணும். எல்லாம்  எட்டத்தை எட்டத்தையெல்லோ இருக்கிறம். பாப்பம் மிச்ச உறவுகள் என்ன சொல்லீனம் எண்டு???????🙄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, shanthy said:

வைன் கிளாஸ் மூடியில் வாசனையுணரும் ஆளில்லைத் தானே நீங்கள் 😂

நம்ம ஆட்டம் பாட்டங்களை நீங்கள் பாத்ததில்லையே !!!!!!!!!🤣

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

அதுவும் சரிதான்....😁

ஒருக்கால் ஜேர்மன் யாழ்கள உறவுகள் ஒன்று கூடத்தான் வேணும். எல்லாம்  எட்டத்தை எட்டத்தையெல்லோ இருக்கிறம். பாப்பம் மிச்ச உறவுகள் என்ன சொல்லீனம் எண்டு???????🙄

எட்ட இருக்கிற எல்லாரும் ஒருநாள் பயணம் செய்து சந்திக்கலாம். கொலோன் ரைன்நதியோரம் அல்லது டுசில்டோர்ப் ரைன்நதிக்கரையால் இல்லையென்றால் phantasialand இல் ஒரு பொழுதை சந்திக்கலாம். மூத்தவர்கள் கூடி முடிவு எடுங்கோ. 

20 hours ago, குமாரசாமி said:

நம்ம ஆட்டம் பாட்டங்களை நீங்கள் பாத்ததில்லையே !!!!!!!!!🤣

பாத்திருக்கிறம் பாத்திருக்கிறம்... 🤭

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகள் உச்சக் கொரோனா தத்துவப்படி உள்ளன. அந்த வகையில் பிரித்தானியா இந்த விடயத்தில் முதன்மை.  சீனா.. சிங்கப்பூர்.. அவுஸி.. நியுஸி.. பூச்சியக் கொரோனா கொள்கையோடு உள்ள நாடுகள். அங்கு கெடுபிடிகள் தொடரவே செய்யும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 19/2/2022 at 13:02, shanthy said:

எட்ட இருக்கிற எல்லாரும் ஒருநாள் பயணம் செய்து சந்திக்கலாம். கொலோன் ரைன்நதியோரம் அல்லது டுசில்டோர்ப் ரைன்நதிக்கரையால் இல்லையென்றால் phantasialand இல் ஒரு பொழுதை சந்திக்கலாம். மூத்தவர்கள் கூடி முடிவு எடுங்கோ. 

சந்திக்கிறது நல்ல விசயம் தான்.....மற்ற ஆக்கள் என்ன சொல்லீனம் எண்டு பாப்பம்.
ஐ மீன் பாஞ்ச் ஐயா, சிறித்தம்பி, நொச்சியார், கந்தையர் :cool:

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 17/2/2022 at 13:39, Ahasthiyan said:

நல்ல செய்தி,
மார்ச் நடுப் பகுதியில் பெறா மகளின் திருமணம் Wuppertal பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் நடாத்த முடிவு எடுத்திருக்கிறார்கள்.

EU இல் இருந்து பிரித்தானியா பிரிந்த பிறகு ஜேர்மனிக்கு காரில்  பயணம் 16/03/2022
கடவு சீட்டு, கார் காப்புறுதி , மீட்பு (recovery), கை  பேசிக்கான அனுமதிகள் எல்லாம் சரி பார்த்து, Euro tunnel கேட்ட பிரான்ஸ் கொரோனா  படிவங்களை தரவேற்றம் செய்து விட்டு எங்கள் பிரயாணத்தை ஆரம்பித்தோம். இந்த முறை பிரான்ஸ் நாடு நுழைவுக்கான முத்திரையை கடவு சீட்டில் குத்தினார்கள். Calais இல்  அதிகாலை 1 மணியளவில் இறக்கி விட்டார்கள். E40 இல் பிரஸ்ஸெல் ஊடாக 4 மணித்தியால ஓட்டத்தின் பின்பு ஜேர்மன் Wuppertal என்ற நகரத்தை அடைந்தோம். 2 வச்சினும் போட்டு இருந்தால் ஜெர்மனிக்குள் திரியலாம், ஹோட்டல் அறை பதிவு செய்யும் போது வச்சின் அத்தாட்சியை சமர்ப்பிக்க வேண்டும். அடுத்த நாள் இரவு A1 என்ற ரோட்டில்  150km தொலைவில் உள்ள  Osnabrück என்ற இடத்திற்கு போனோம், நகரத்திற்குள் 30kmh இல் செல்ல வேண்டும், நான் கொஞ்சம் கூட ஓடின படியால் கமரா அடித்து விட்டது. ஆனால் இன்னும் அபராதம் வரவில்லை. நாங்கள் தங்க வேண்டிய ஹோட்டலுக்கு போக வேண்டிய பாதையை மூடி விட்டதனால், ஹோட்டல் கண்ணுக்கு தெரிந்தும் அங்கு போவதுக்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது. பெறா மகளின்  திருமணம் அம்மன் கோவிலில் நல்ல படியாக நடந்தேறியது, எனது இளைய மகன் மாப்பிள்ளை தோழன், நானும் மனைவியும் மணப்பெண்ணை தத்தம் பண்ணிக் கொடுத்தோம். 20/3/2022 சென்ற பாதை வழியே திரும்ப ரெயின் ஏற வரும் போது பெல்ஜியம் பிரான்ஸ் எல்லையில் ஒரு சோதனை சாவடியில் காரை நிறுத்த சொல்லி கடவு சீட்டுக்களை சோதித்தார்கள், பின்பு  சுமுகமாக வீடு வந்து சேர்ந்தோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@Ahasthiyan

தகவலுடன் கூடிய குட்டி பயணக்கதை.👍🏾
இப்போதுதான் ஜேர்மனிக்கு முதல் தடவையாக வந்திருக்கின்றீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

@Ahasthiyan

தகவலுடன் கூடிய குட்டி பயணக்கதை.👍🏾
இப்போதுதான் ஜேர்மனிக்கு முதல் தடவையாக வந்திருக்கின்றீர்களா?

இல்லை அண்ணா, இதற்கு முன்பும் 4-5 தடவைகள் காரிலும், விமானம் மூலமாகவும் வந்திருக்கின்றோம். ஜேர்மன் அதிவேக பாதை மிகவும் நல்லது, பிரிட்டன், பெல்ஜியம் போல் விரைவு லேனில் (fast lane) கார்கள் ஆமை மாதிரி ஓடுவது மிக குறைவு. இங்கு காமெராவுக்கு மஞ்சள் பெயிண்ட் அடித்து தெரிய வைத்திருப்பார்கள், கேமராவுக்கு கிட்டவும் வார்னிங் எச்சரிக்கை போட்டிருப்பார்கள். ஆனால் உவ்விடம் சாம்பல் நிறத்தில் வைத்திருப்பார்கள். எங்கள் கார்கள் வலது பக்க ஓட்டம், அடிக்கடி மூளைக்கு சொல்லி கொண்டு இருக்க வேண்டும், சாப்பாட்டு கை பக்கம் நடைபாதை என்று. சமிஞை விளக்குகளில் இடது பக்கம் திரும்பும் போதும் மூளைக்கு சொல்ல வேண்டும், ராசா கவனமாக எடு என்று, கவனம் குறைந்தால்  நேரே வாற  வாகனம் உழுது விட்டு போய் விடும் அல்லது பிழையான லேனில் போய் சேர வேண்டியும் வரும். இப்படி ஒரு பிரச்சனை வாகன அனுமதி பத்திரம் எடுத்த புதிதில்(1993) சுவிஸ்சில் வாடகை கார் எடுத்து ஓடும் போது எதிரில் வரும் வாகனத்தை பற்றி சிந்திக்காமல் எடுத்து மயிரிழையில் தப்பினேன் (எதிரே வந்த சாரதி திறமையானவன் ஆனபடியால்). ஐரோப்பாவில் ஓடும் போது எங்களை வெளி நாட்டு சாரதி என்று தெரிந்தால், மற்றவர்கள் ஓரளவு அவதானமாக ஓடுவார்கள், வாடகை கார் எடுத்தால் அவர்களுக்கு எங்களை வெளி நாட்டவர் என்று தெரியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, Ahasthiyan said:

சிறிய சிறிய நல்ல தகவல்களை சொல்லியிருக்கின்றீர்கள்.

கார் வேக ஓட்டத்திற்கு ஜேர்மனி நல்ல நாடுதான். அதே போல் வேக கட்டுப்பாடுகளும் அதிகம். எந்த புற்றுக்குள் எந்த பாம்பு இருக்கும் என்று தெரியாத மாதிரி கமராக்களை  வைத்திருப்பார்கள். அதிலும் நிரந்தர கமராவை விட கார்களில் கமராமவை பொருத்தி வைத்துக்கொண்டு பிரபலயம் இல்லாத இடத்தில் கூட மீனுக்கு தூண்டிலை போட்டுவிட்டு காத்திருப்பது போல் காத்திருப்பார்கள். இதனால் நான் இரு தடவைகள் வாகன அனுமதி பத்திரத்தை இழந்திருக்கின்றேன். இதே தவறு இனொரு முறை நடந்தால் இடியட் பரிதோதனை செய்யவேண்டி வரும்.☺️

ஆகையால் நான் இப்போது கைத்தொலைபேசியில் இந்த எச்சரிக்கை app நிறுவி வைத்திருக்கின்றேன்.😁

Blitzer.de - Hilfe, Handbücher und FAQ für die Android Apps

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.