Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பச்சைத் தமிழன் காமராஜர்

Featured Replies

கர்மவீரர் காமராஜர்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் மைதானம், சத்திய மூர்த்தி பவன் இவையெல்லாம் பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை இவை காமராசர் தேடிய செல்வம். ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக அவர் தேடியவை.

சென்னையில் வாடகை வீட்டில்தான் கடைசி வரை காமராசர் வசித்தார்.

முதல்-அமைச்சராக இருந்த போது, அவர் வீட்டில் அரசு சார்பில் ஒரு தொலைபேசி இருந்தது. எப்போது பேசினாலும் பேசிய நேரம், பேசிய ஊர் முதலியவற்றை ஒரு நோட்டில் குறித்து வைக்க வேண்டும. அப்போதெல்லாம் எஸ்.டி.டி. வசதிகள் கிடையாது.

டிரங்கால் பதிவு செய்துதான் பேச வேண்டும். டெலிபோன் பில் வந்தவுடன் அந்த நோட்டில் உள்ள விவரங்களைப் பார்த்து அரசு சம்பந்தப்பட்ட தொலைபேசி அழைப்புக்கான கட்டணத்தை மட்டும் அரசு கணக்கில் செலுத்தவும், மீதியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கணக்கில் செலுத்த வேண்டும் என்பது காமராசரின் உத்தரவு.

முதல்-அமைச்சராக இருந்த போது கட்சி நிகழ்ச்சிகளுக்காக செல்ல நேர்ந்தால் அரசுக்கு சொந்தமான காரில் போவதில்லை.முதல்-அமைச்சருக்கான சம்பளத்தை அரசு காசோலையாக (பேங்க் செக்) வழங்கும். அதைப் பணமாக மாற்றுவதற் காகவே காமராசரின் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு இருந்தது.

முதல்-அமைச்சருக்கான சம்பளம் முழுவதையும் காமராசர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிடம் கொடுத்து விடுவார். அவரது அம்மாவுக்கு ரூ. 150ஐ காங்கிரஸ் கமிட்டி அனுப்பி வைக்கும் கட்சிக்காக டில்லிக்கு விமான பயணம் செய்தால் விமான டிக்கெட்டு களை தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டிதான் வாங்கும்.

பழைய தியாகிகள் யாராவது பண உதவி கேட்டு வந்தால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு ஒரு கடிதம் கொடுப்பார். அங்கு பணம் கொடுத்து விடுவார்கள்.

மாதத்தில் பாதி நாட்கள்தான் சென்னையில் இருப்பார். மீதி நாட்களில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பார்.

அதற்கான பயணப்படி உண்டு. ஆனால் பெருந்தலைவர் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் பயணப்படி கோரியதும் இல்லை, பெற்றதும் இல்லை.வெளியூர்களில் பயணம் செய்யும் போது பயணிகள் விடுதியில் (டிராவலர்ஸ் பங்களா) தான் பெரும்பாலும் தங்குவார். அந்தந்த ஊர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பயணிகள் விடுதிக்கான வாடகையைக் கொடுக்க வேண்டும்.

காமராசரின் சட்டையில் ஒரு பெரிய பை இருக்கும். ஆனால் அதில் பணமே இராது. சில சமயங்களில் சில்லறை நாணயங்களை வேஷ்டி மடியில் வைத்திருப்பார். யாராவது யாசகம் கேட்டால் போடுவதற்காக அந்த காசுகள் உபயோகப்படும்.

காமராசரின் சொந்த காருக்கு டிரைவராக ஒரு போலீஸ்காரர் தான் இருந்தார். அந்த டிரைவருக்கான சம்பளத்தையும் காமராசரே கொடுத்து வந்தார். (எனக்குதான் டிரைவர் அலவன்ஸ்'’ என்று சம்பளத்தோடு கொடுக்கிறாங்களே, அந்த பணத்தையும், என் பணம் கொஞ்சத்தையும் டிரைவருக்கு கொடுக்கிறேன் என்றார், பெருந்தலைவர்)

காமராசர் இறந்தபோது அவர் வீட்டில் (சென்னையில்) இருந்த மொத்த பணம் வெறும் 67 ரூபாய் மட்டுமே. (இது அப் போதைய அமைச்சர் ராசாராம் சொன்ன தகவல் என்று `சாவி’ எழுதியுள்ளார்) காமராசர் பல வங்கிகளில் பணம் போட்டு வைத்திருக்கிறார் என்று பலர் மேடைகளில் பேசியதுண்டு, எழுதிய துண்டு. அது பொய் என்று நிரூபித்தது இந்த 67 ரூபாய்.

ராம் மனோகர் லோகியா என்று வட இந்தியாவில் ஒரு தலைவர் இருந்தார். அவர் ஒரு சிறந்த அரசியல்வாதியாகப் போற்றப்பட்டவர். வெளி நாட்டில் படித்துப் பட்டம் பெற்றவர். காங்கிரஸ் கட்சியில் அவர் இருந்தார்.

காங்கிரஸ் கட்சியில் வெளிநாட்டு இலாக்கா என்று ஒரு பிரிவு இருந்தது. அந்த வெளிநாட்டு இலாக்காவுக்கு லோகியாதான் தலைவ ராக இருந்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அப்போதையத்தலைவராக இருந்த ஜவஹர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்தே வெளியேறிய லோகியா சோஷலிஸ்ட் கட்சியைத் துவக்கினார்.

லோகியாவுக்குக் காங்கிரஸ் கட்சியே பிடிக்கவில்லை. நேரு என்றாலே வெறுப்பு. நேருவை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிடுவதும் உண்டு. நேருவின் கொள்கைகளை மிகவும் கடுமையாகச் சாடுவது லோகியாவின் வாடிக்கையாகி விட்டது.

நேரு பிரதமராக இருந்தபோது லோகியா எதிர்க்கட்சித் தலைவர்களுள் ஒருவராக இருந்தார். நேரு பிரதமராக இருந்த காலத்திலேயே நேருவுக்குப் பின் யார் என்று ஒரு பிரபலமான கேள்வி அடிக்கடி எழுவது உண்டு.

ஒரு முறை ஒரு பத்திரிகை நிருபர் “நேருவுக்குப் பின் யார் _ உங்கள் கருத்து என்ன?” என்று லோகியாவைச் சீண்டினார். காமராஜ் இருக்கும் போது என்னிடம் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறாய் என்று லோகியா சொன்னார்.

மிகுதிக்கு-http://velu.blogsome.com/2006/02/05/k-kamaraj/

கனக்க இர்ப்பதால் முழுமையாக பதிய வில்லை என்ன அருமையான தலைவர் அதுவும் ஒரு தமிழன் தமிழர்கள் படிக்க வேண்டிய தலைவர் இவர்

இந்தியாவின் பிரதமராய் வரும் வாய்ப்பை கொண்டிருந்த முதல் தமிழர்... படிக்கவில்லை எண்ற காரணத்தால் அதை நிராகரித்தவர்... அற்புதமான மனிதர்...

இந்தியாவின் பிரதமராய் வரும் வாய்ப்பை கொண்டிருந்த முதல் தமிழர்... படிக்கவில்லை எண்ற காரணத்தால் அதை நிராகரித்தவர்... அற்புதமான மனிதர்...

நான் அமெரிக்கவில் ஒருமுறை வாசிங்டனில் ஆபிரகாம் லிங்கன் சிலை முன்னால் நின்றபொழுது என்மனதில் நினைத்துக்கொண்டேன். " லிங்கன் அவர்களே.. உங்களை விட மேலான ஒரு அரசியல் தலைவன் - தமிழன் காமராசர் இருக்கிறார். " என்று.

அத்தகைய தலைவர்கள் இருந்த நாட்டில் சொந்தங்களுக்கு சொத்துச் சேர்க்கும், காணி பூமி சேர்க்கும் --- தலைவர்கள் தூ..

:angry:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா ஒரு முறை அமெரிக்க சென்ற போது அப்போது அமெரிக்க ஜனாதிபதியா இருந்தவரை சந்திக்க முன் அனுமதி பெற்றும்.. 2 மணி நேரம் காத்திருந்த பின்னும் சந்திப்பு ரத்தானதாம். அதே ஜனாதிபதி இந்தியா வந்து காமராஜர சந்திக்க விருப்பம் தெரிவித்து அனுமதி கேட்ட போது காமராஜர் பதில் அனுப்பினாராம்.. அண்ணா போன்ற ஒரு தமிழனை மதிக்காத ஜனாதிபதியை நான் சந்திக்க விரும்பல்லை என்று..!

தன்மானம் காத்த தமிழன்..!

சுட்டது.. சன் ரீவியின் அசத்தப் போவது யாரில்..! :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காமராசர் அவர்கள் மிகச்சிறந்த அரசியல் தலைவர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அவருக்கு தமிழுணர்வு நீங்கள் குறிப்பிடும் அளவிற்கு இருக்கவில்லை.

1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப் பட்டபோது எல்லைகள் தொடர்பாக பல சிக்கல்கள் ஏற்பட்டன. தமிழனுக்குச் சொந்தமான தேவிகுளம் பீர்மேடு ஆகிய தாலுகாக்களை மலையாளிகள் உரிமைகோரி போராடினர். கேராளாவிற்கு போய்விடும் அபாயம் நெருங்கியது. நிலைமையை அறிந்த அறிஞர் அண்ணா களத்திற்கு உடனடியாக போய் எல்லை மீட்புப் போரில் இறங்கினார். அப்போது தமிழ் நாட்டு முதலமைச்சராக இருந்த கர்மவீரர் காமராசரிடம் அதைனைத் தடுத்து நிறுத்துமாறு அவசர வேண்டுகோளை விடுத்தார். அதற்கு அந்தக் கர்மவீரர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?

குளமாவது மேடாவது (தேவிகுளம், பீர்மேடு) போகட்டுமே, எங்கண்ண போகுது நம்ம இந்தியாவுக்குள்ளதானே போகட்டுமே என்றாராம்.

அண்ணாவிற்கு கடும் சினம் ஏற்பட்டது. அண்ணா எப்போதும்தரக்குறைவான சொற்களை பயன்படுத்துவது கிடையாது. அனால் அன்று மிகவும் தரக்குறைவாக காமராசரை இவ்வாறு திட்டினார்

நாய்கூட மண்ணைக் கிண்டிப் பார்த்துவிட்டுத்தான் சிறுநீர் கழிக்கிறது அந்த நாய்க்கு இருக்கும் மண்பற்றுக் கூட உனக்கு இல்லையே

உடனே காமராசர்

நான் தமிழன்தான் ஆனால் அதற்கு முதல் நான் இந்தியன். தமிழன் என்று சொல்வதைவிட இந்தியன் என்று சொல்வதைத்தான் நான் விரும்புகிறேன்

என்று மிக அபத்தமாக ஒரு பதிலைச் சொன்னார்

விளைவு அண்ணா, சிலம்புச் செல்வர் ம.பொ.சி. போன்றவர்கள் எவ்வளவு போராடியிருந்தாலும் அப்போது முதலமைச்சர் அதிகாரத்திலிருந்த காமராசரின் ஆதரவு கிடைக்காததால் தமிழனுக்குச் சொந்தமான அந்த நிலப்பகுதிகள் கேரளாவிற்குப் போய்விட்டன. அதன் பலனை தமிழர்கள் இன்றுவரை அனுபவித்து வருகிறார்கள்.

ஆதிக்க இருளை அகற்றிய தீபம் காமராசர் என்பதால்தான் பெரியார் அவருக்கு பச்சைத் தமிழன் என்ற பட்டத்தைக் கொடுத்தார். ஆனால் காமராசரின் தமிழின உணர்வு கேள்விகுரியதே!

Edited by இளங்கோ

பொதுவாழ்வில் நேர்மையும் தூய்மையும் கொண்டிருந்த மிகச்சில இந்திய அரசியல்வாதிகளில் காமராசரும் ஒருவர். பெருந்தலைவர் என்ற பெயருக்கு மிக பொருத்தமானவர்.

அதுபோல் காமராசர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த கக்கன் சட்டசபை கூட்டங்களுக்கு கூட பஸ்ஸில் தான் பயணம் செய்வாராம். இவ்வளவு சிறந்த அரசியல்வாதிகள் இருந்த தமிழகத்தின் இன்றைய நிலை?!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இடத்தில் இன்னுமொரு வரலாற்று நிகழ்வை சுட்டக்காட்ட விரும்புகிறேன்

மராட்டய மாநிலம் இரண்டக பிரிக்கப் பட்ட போது மும்பாய் (அப்போது பம்பாய்) யாருக்கு மாராட்டயர்களுக்கா குஜராத்தியர்களுக்கா என்ற உரிமைப்போர் வெடித்தது. அப்போது இந்திய தலைமை அமைச்சராக இருந்த ஜவகர்லால் நேருவின் அமைச்சரவையில் இருந்தவர் சி.டி.தேஷ்முக் என்ற மராட்டயர். இந்திய விடுதலைப் போரில் பங்கெடுத்தவர். நேருவின் மிக நெருங்கிய நண்பர். நேரு எவ்வளவு வேண்டியும் தனது மத்திய அமைச்சர் பதவியை அந்த போராட்டத்திற்காக தியாகம் செய்தார்.

அப்போது அவர் நேருவிடம் என்ன கூறினார் தெரியுமா?

நான் இந்தியன்தான் ஆனால் முதலில் நான் மராட்டியன்.

இதுவல்லவா அழகு!

தேஷ்முக் எங்கே காமராசர் எங்கே!

Edited by இளங்கோ

  • தொடங்கியவர்

அண்ணா ஒரு முறை அமெரிக்க சென்ற போது அப்போது அமெரிக்க ஜனாதிபதியா இருந்தவரை சந்திக்க முன் அனுமதி பெற்றும்.. 2 மணி நேரம் காத்திருந்த பின்னும் சந்தித்து ரத்தானதாம். அதே ஜனாதிபதி இந்தியா வந்து காமராஜர சந்திக்க விருப்பம் தெரிவித்து அனுமதி கேட்ட போது காமராஜர் பதில் அனுப்பினாராம்.. அண்ணா போன்ற ஒரு தமிழனை மதிக்காத ஜனாதிபதியை நான் சந்திக்க விரும்பல்லை என்று..!

தன்மானம் காத்த தமிழன்..!

சுட்டது.. சன் ரீவியின் கலக்கப் போவது யாரில்..! :unsure:

அதுதானே எங்கேயோ கேட்டது போல இருந்தது ஈரோடு மகேஸ் சொன்னது என நினைகின்றேன் :P

  • கருத்துக்கள உறவுகள்

தேஷ்முக் எங்கே காமராசர் எங்கே!

தேஷ்முக் ஒரு சிவப்பு மராட்டியர் ஆனால் காமராஜர் பச்சோ........ தி....தமிழர் :unsure::)

அது சரி இப்ப காமராஜரின்ட பிறந்தநாள் வருதோ அல்லது நினைவு நாள் வருதோ இந்த ஆக்கத்தை போட்ட படியா கேட்கிறன் அல்லது காமராஜர் ஜக்கிய இந்தியாவிற்காக பாடுபட்டார் என்பதை காட்டுவதற்காக பிரசுரித்துள்ளீர்களா அல்லது மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சிக்குபாடுபட்டார் என்பதை காட்டுவதிற்கு பிரசுரிக்கபட்டுள்ளதா சும்மா ஒரு சந்தேகம் வந்தது அது தான் கேட்டேன். :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பிரதமராய் வரும் வாய்ப்பை கொண்டிருந்த முதல் தமிழர்... படிக்கவில்லை எண்ற காரணத்தால் அதை நிராகரித்தவர்... அற்புதமான மனிதர்...

படிக்கவில்லை என்ற காரணத்தால் பிரதமராக வர நிராகரித்தவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வந்திருகிறார் அப்ப தமிழ் நாட்டில் முதல்வராக வாரதிற்கு படிப்பு தேவை இல்லையோ,அப்ப அந்த காலத்தில தமிழ்நாட்டில படிபறிவற்றவர்கள் தான் இருந்தவையோ. :unsure::):huh:

அது சரி இப்ப காமராஜரின்ட பிறந்தநாள் வருதோ அல்லது நினைவு நாள் வருதோ இந்த ஆக்கத்தை போட்ட படியா கேட்கிறன் சும்மா ஒரு சந்தேகம் வந்தது அது தான் கேட்டேன். :unsure:

புத்தன்.. அண்மையில் அப்துல் கலாமின் அரசியல் பண்புகள் பற்றி பேசப்பட்ட பொழுது ஈழவன் காமராஜரை பற்றி நினைத்திருக்கலாம். நானும் அவ்வாறு நினைத்தேன்.

இளங்கோவிற்கு அரசியல் விபரங்கள் நிறைய தெரிந்திருக்கிறது. அவை சரியாகவிருக்கலாம்.

ஆனால் காமராஜர், கக்கன், லால் பகதூர் சாஸ்திரி, அப்துல் கலாம் போன்றவர்கள் அரசியலில் நேர்மையின் சின்னமாக விளங்கியவர்கள். அவ்வளவே.

:)

  • தொடங்கியவர்

காமராஜரின் எளிமை என்னை கவர்ந்தது பொன்னியின் செல்வன் சொன்னது போல கலாம் அவர்களின் கட்டுரையை தேடி போய் காமராJஅரின் கட்டுரையை கண்டு பிடித்தேன் 67 ருபாயுடன் இறந்தார் என்பது மனதுகு நெகிழ்சியை உருவாக்கியது அதுவும் ஒரு தமிழன் என்ற வகையிலேயே பதிந்தேன் காமராஞர் என்னத்துக்கு பாடுபட்டார் என எனக்கு தெரியாது நான் அவரின் எளிமையினால் கவரப்பட்டே இதனை இங்கு பதிந்தேன்

தேவிகுளம் பீர்மேடு தமிழக பகுதிகள் என்று யார் சொன்னது ?????

அவை கேரள பகுதிகளே....அவை தமிழக எல்லை குமுளியில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ..... மேலும் அவை கேரள திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டது...... இதில் காமராஜரை தொடர்புபடுத்தி அவதூறு கூறுவது கொடுமை......

திராவிட இயக்க திருடர்கள் (தி.மு க மற்றும் அ.தி.மு.க )இன்று முல்லைப்பெரியாறு உரிமையை தமிழகம் இழக்க காரணமாக இல்லையா??? அவர்கள் தமிழ் பற்றாளர்களா???

ஈழத்தமிழராகிய உங்கள் முன்னோர் எல்லாம் இலங்கை விடுதலை பெற்ற போது எப்படி விடுதலை கிடைத்ததாக மகிழ்ந்திருப்பார்கள் ..... ஆனால் அவர்கள் இன்று இருந்து இருந்தால் ....ஆங்கில ஆட்சியே மேல் என்றல்லவா எண்ணியிருப்பர்....

காமராஜரின் அன்றைய காலகட்டத்தை எண்ணிப்பார்த்து பேசவேண்டும்.... அவர் இந்தியாவை தம் தாய் நாடாக எண்ணி விடுதலைக்காக சிறை சென்றவர்...... எனவே இந்தியன் என பெருமைப்பட்டிருக்கலாம் அதற்காக நான் முதலில் இந்தியன் பின்பு தான் தமிழன் என்று கூறியதாக சொல்வதெல்லாம் கற்பனையே....

அய்யா நெடுமாறன் காமராஜர் காலம் வரை அவரை தம் தலவராக ஏற்று பணி செய்தவர்......... காமராஜர் அப்பழுக்கற்ற தலைவன்..அப்படி ஒரு தலைவனை இனி ஒருக்காலும் தமிழகம் பெறப்போவதில்லை......

தன்னலமற்ற தன் தாய்க்கு கூட அளந்து பணம் கொடுத்த தலைவன் .... ஆனால் அந்த தாயின் படத்தை எப்போதும் ஒரு பெட்டியில் கையிலேயே வைத்திருந்து....... பாசத்தை க்கூட நாட்டுக்காக மறைத அந்த தங்கத்தலைவனை குறை சொல்லாதீர்....

காமராஜர் ஆற்றிய பணியால் எத்தனை தொழிற்சாலைகள் வந்தன தெரியுமா???

அவர் தமிழ்ப்பற்றுக்கு சான்று இதோ

பொன்விழா: மு.க. ஏற்புரை

ஒருமுறை கம்யூனிஸ்டு உறுப்பினர் கல்யாணசுந்தரம் பேசும்போது, தமிழ்தான் ஆட்சி மொழியாக வர வேண்டும். ஆங்கிலத்தை அகற்ற வேண்டும் என்று கூறினார். அப்போது பெருந் தலைவர் எதிர் வரிசையில் இருந்த எங்களைப் பார்த்துக் கையசைத்தார். அண்ணா, காமராஜர் அருகில் சென்றார். அப்போது அவர் கல்யாணசுந்தரம் பேசுவதை நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது நியாயமா? ஆங்கிலத்தை எடுத்தால் அந்த இடத்தில் இந்தி வந்து குந்திக்கும் என்று குறிப்பிட்டார்.

பின்னர் நானும் அண்ணாவும் காரில் சென்ற போது அண்ணா என்னிடம் காமராஜர் எவ்வளவு பெரிய தத்துவத்தைச் சொன்னார். ஆங்கிலத்தை எடுத்தால் அந்த இடத்துக்கு இந்தி வந்து விடும் என்று எவ்வளவு சரியாகச் சொல்லி இருக்கிறார் என்றார். அதுதான் காமராஜர். அவர் பேசுவது கொச்சைத் தமிழாகவே இருந்தாலும் மேலும் மேலும் அதைக் கேட்பதற்கு இச்சையாக இருக்கும்.

நான் குளித்தலையில் வெற்றி பெற்று முதல் முதலாகக் கன்னிப் பேச்சு பேசியபோது அந்தத் தொகுதியின் பிரச்சினை குறித்து என்ன பேசப் போகிறேன் என்பதைக் கட்சியின் முக்கியமானவர்களிடம் விளக்கிச் சொல்லிக்கொண் டிருந்தேன். அதைக் கேட்ட அண்ணா, கருணாநிதி தொகுதி பிரச்சினை பற்றி விளக்கவில்லை. சபையில் பேசுவதற்கு ஒத்திகை பார்க்கிறான் என்றார். நீங்களும் ஒத்திகை பார்த்துப் பேச வேண்டும். அதற்கு நானே உதாரணம் என்பதற்காக அதை நினைவூட்டினேன்.

இந்த அவையில் இருந்த பலர் இப்போது இல்லை. என் அம்மா இல்லை. அண்ணா இல்லை என்ற கவலை மேலிட்டாலும் என்னுடன் நீங்கள் எல்லோரும் இருக்கிறீர்கள் என்ற ஆறுதல் இருக்கிறது. (கண் கலங்கினார்). நாம் எல்லோரும் துணை நின்று நாட்டையும் சமுதாயத்தையும் காப்பாற்றப் பாடுபடுவோம் என்று சூளுரைக்கிறேன். அதையே ஏற்புரையாக ஏற்க வேண்டும்."

இவ்வாறு கருணாநிதி உரையாற்றினார்.

Edited by வேலவன்

படிக்கவில்லை என்ற காரணத்தால் பிரதமராக வர நிராகரித்தவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வந்திருகிறார் அப்ப தமிழ் நாட்டில் முதல்வராக வாரதிற்கு படிப்பு தேவை இல்லையோ,அப்ப அந்த காலத்தில தமிழ்நாட்டில படிபறிவற்றவர்கள் தான் இருந்தவையோ. :unsure::):huh:

காமராஜர் ஒன்றும் படிக்காத தற்குறி இல்லை ......... அவர் இந்தியாவின் பிரதமர் பதவியை ஏற்க மறுத்ததற்கு பல காரணங்கள் உண்டு ... பதவி ஆசை அவருக்கு எப்போதும் கிடையாது...எனவே தான் எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கிய சமயம் அவருக்கு ஆட்சியை பிடிப்போம் என்ற நம்பிக்கை இல்லாததால் அவர் காமராஜரை தம் கட்சிக்கு தலைமை தாங்க அழைத்தார்........... காமராஜர் நினைத்திருந்தால் அதனை ஏற்று அவர் மீண்டும் முதல்வராகியிருக்கலாம்........ ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை சாகும் வரை தன்மானத்தோடு வாழ்ந்த உண்மை த்தமிழன் காமராஜரை குறை சொல்லும் தகுதி இன்று யாருக்காவது உண்டா???

மேலும் நீங்கள் கூறியது போல் அன்று தமிழகத்தில் படிப்பறிவு மிக மிக குறைவே.... உயர்ந்த சாதியினர் மற்றும் பிராமணர் மட்டுமே படித்திருந்தனர்.... எனவே பச்சைத்தமிழர் படிக்காமலே போகட்டும் என்று அன்றைய முதல்வர் ராஜாஜி அய்யங்கார் குலக்கல்வி திட்டம் கொண்டுவந்து... அவரவர் தங்கள் குலத்தொழிலையே செய்ய வேண்டும் என்றது கேட்டு வெகுண்டு அதன் பின்னரே முதல்வர் பதவிக்கு வந்தவர் காமராஜர் ...... ஏழைகளை பள்ளிக்கு வரவழைக்க மதிய உணவுத்திட்டம் கொண்டுவந்தவர் காமராஜர் .... வறுமையான அந்த காலத்தில் பள்ளி சென்றாலாவது பிள்ளைக்கு உணவு கிடைக்கும் என்று பள்ளிக்கு அனுப்பினர் ஏழை பெற்றோர்.

இவ்வாறு தமிழகத்தில் கல்விக்கண் திறந்தவர் அவர்.... அவர் ஆண்ட 10 ஆண்டுகள் தமிழகத்தின் பொற்காலம்.... பின்னர் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திராவிடக்கட்சிகளின் லட்சணம் தான் அனைவருக்கும் தெரியுமே

Edited by வேலவன்

காமராசர் அவர்கள் மிகச்சிறந்த அரசியல் தலைவர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அவருக்கு தமிழுணர்வு நீங்கள் குறிப்பிடும் அளவிற்கு இருக்கவில்லை.

1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப் பட்டபோது எல்லைகள் தொடர்பாக பல சிக்கல்கள் ஏற்பட்டன. தமிழனுக்குச் சொந்தமான தேவிகுளம் பீர்மேடு ஆகிய தாலுகாக்களை மலையாளிகள் உரிமைகோரி போராடினர். கேராளாவிற்கு போய்விடும் அபாயம் நெருங்கியது. நிலைமையை அறிந்த அறிஞர் அண்ணா களத்திற்கு உடனடியாக போய் எல்லை மீட்புப் போரில் இறங்கினார். அப்போது தமிழ் நாட்டு முதலமைச்சராக இருந்த கர்மவீரர் காமராசரிடம் அதைனைத் தடுத்து நிறுத்துமாறு அவசர வேண்டுகோளை விடுத்தார். அதற்கு அந்தக் கர்மவீரர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?

குளமாவது மேடாவது (தேவிகுளம், பீர்மேடு) போகட்டுமே, எங்கண்ண போகுது நம்ம இந்தியாவுக்குள்ளதானே போகட்டுமே என்றாராம்.

அண்ணாவிற்கு கடும் சினம் ஏற்பட்டது. அண்ணா எப்போதும்தரக்குறைவான சொற்களை பயன்படுத்துவது கிடையாது. அனால் அன்று மிகவும் தரக்குறைவாக காமராசரை இவ்வாறு திட்டினார்

நாய்கூட மண்ணைக் கிண்டிப் பார்த்துவிட்டுத்தான் சிறுநீர் கழிக்கிறது அந்த நாய்க்கு இருக்கும் மண்பற்றுக் கூட உனக்கு இல்லையே

உடனே காமராசர்

நான் தமிழன்தான் ஆனால் அதற்கு முதல் நான் இந்தியன். தமிழன் என்று சொல்வதைவிட இந்தியன் என்று சொல்வதைத்தான் நான் விரும்புகிறேன்

என்று மிக அபத்தமாக ஒரு பதிலைச் சொன்னார்

விளைவு அண்ணா, சிலம்புச் செல்வர் ம.பொ.சி. போன்றவர்கள் எவ்வளவு போராடியிருந்தாலும் அப்போது முதலமைச்சர் அதிகாரத்திலிருந்த காமராசரின் ஆதரவு கிடைக்காததால் தமிழனுக்குச் சொந்தமான அந்த நிலப்பகுதிகள் கேரளாவிற்குப் போய்விட்டன. அதன் பலனை தமிழர்கள் இன்றுவரை அனுபவித்து வருகிறார்கள்.

ஆதிக்க இருளை அகற்றிய தீபம் காமராசர் என்பதால்தான் பெரியார் அவருக்கு பச்சைத் தமிழன் என்ற பட்டத்தைக் கொடுத்தார். ஆனால் காமராசரின் தமிழின உணர்வு கேள்விகுரியதே!

தமிழக பகுதி ஒன்றும் கேரளத்துக்கு போகவில்லை (முல்லைப்பெரியார் பகுதி தேவிகுளம் தாண்டிதமிழகம் வரும் வழியில் உள்ள மலைப்பகுதிஅதில் உள்ள அணை ஒப்பந்தம் திருவாங்கூர் மன்னருட்னே போடப்பட்டத் என்பதனை நினைவில் கொள்க )

கேரள பகுதி வேண்டுமானால் தமிழகத்திற்கு வரவில்லை என்று வேண்டுமானால் சொல்லுங்கள் அய்யா ... தேவிகுளம் பீர்மேடு திருவாங்கூர் பகுதி திருவாங்கூர் என்றுமே தமிழகம் இல்லை ......

ஆனால் அவர் ஆட்சியில் தான் எனது சொந்த மாவட்டமான குமரி மாவட்டம் (இது கூட திருவாங்கூர் பகுதி தான் )எங்கள் மாவட்ட மக்களின் தியாகம் செறிந்த போராட்டத்தால் தாய்த்தமிழகத்தோடு இணைந்தது என்பதையும் அறியத்தருகிறேன்

காமராஜருக்கு அன்னியமண் பற்று தேவையில்லை

காமராஜருக்கு அன்னியமண் பற்று தேவையில்லை

உங்கள் விளக்கத்திற்கு நன்றி வேலவன்.. அன்றும் இன்றும் எனது அபிமானத்துக்குரியவர் காமராஜர் தான்.

:unsure:

ராஜாஜி அய்யங்கார்

சாதிகள் ஒழிய் வேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்பினால் ராஜாஜி ஐயங்கார், காமராஜ நாடார் என்று சாதி பெயர்களை இன்னும் உபயோகப்படுத்தி கொண்டு இருப்பதை முதலில் விட்டு விடுங்கள். அது தவிர குலக்கல்வி என்னும் மோசமான திட்டத்தை கொண்டுவர முயற்சி செய்த ராஜகோபால் போன்றவர்களை இன்னும் ஏன் ஜி போட்டு அழைத்து கொண்டிருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா வேலவன் அவர்களே!

காமராசர் அவர்களை குறை கூறுவது எனது நோக்கமல்ல. அவர்மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பவன். ராஜாஜி போல் அல்ல அவர். இருப்பினும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அவர் நடந்து கொண்ட விதம் சரியானது அல்ல.

தேவிகுளம், பீர்மேடு தமிழகப்பகுதிகளே. ஐயா நெடுமாறன் அவர்கள் 'தமிழன் இழந்த மண்' என்ற நூலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நான் மேலே எழுதியவை காமராசர் அவர் வாயால் சொன்ன வரிகள். வரலாற்றில் பதிவாகியுள்ள வரிகள். நீங்களே எண்ணிப் பாருங்கள் அவை சரியானவையா என்று!

காமராசரின் தூய்மை, நேர்மை, தொண்டு போன்றவைகள் பெரு மதிப்பிற்குரியவை உங்களைப் போன்று அந்த விடயங்களில் நானும் அவரை மதிக்கின்றேன்.

Edited by இளங்கோ

சகோதரர் இளங்கோ அவர்களே தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்டவை.... அங்கு இலங்கையில் உள்ள மலையக பிரதேசம் போல் மிகுதியான தேயிலைத்தோட்டங்கள் இருந்தன ...அந்த தோட்டங்களில் எல்லாம் தமிழர்கள் கூலிகளாக இருந்தனர் (இப்பொழுதும் தான்)

அந்த அடிப்படையில் தமிழகம் அந்த பிரதேசத்தை மொழிவாரி மாகண பிரிப்பு அடிப்படையில் உரிமை கோரியது....... ஆனால் தேயிலை தோட்டங்கள் நமக்கு உரிமைப்பட்டதாக இல்லை ....அந்த பகுதியிலேயே முல்லைப்பெரியாறு உற்பத்தியாகிறது.... பெரியார் அணையும் உள்ளது....

அந்த அணைப்பகுதி திருவாங்கூர் சமஸ்தானத்தைச்சேர்ந்தது என்பதால் தான் பெரியார் அணையை கட்டிய திரு.பென்னி குயிக் அவர்கள் திருவாங்கூர் சமஸ்தான மன்னரிடம் இந்த அணையை தமிழகத்திற்கு (அணையை மட்டும்) 1000 வருடங்கள் குத்தகைக்கு பெற்றார்......எனவே இது தமிழகப்பிரதேசமாக பூகோள ரீதியாக இல்லை ....

ஆனால் மக்கள் தமிழர்கள் இருந்தனர்..... கேரள அரசு இந்த தமிழர்களால் தானே பிரச்சனை எனவே என்று அவர்களை விரட்ட முற்பட்டது ....கேரள செயலாளராக இருந்த பட்டந்தாணுபிள்ளை .... கேரள சிறைகளில் இருந்து கைதிகளை விடுவித்து... அவர்களுக்கு அந்த நிலங்களை வழங்கினார்...

அதே நேரம் திருவாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த தற்போதைய குமரிமாவட்ட தாலுகாக்களான1.அகஸ்தீஸ்வரம்

2.தோவாளை 3.கல்குளம் 4. விளவன்கோடு ஆகிய தாலுகாக்கள் (அப்போதைய திருவனந்தபுரம் மாவட்டம்)

மற்றும் 5.செங்கோட்டை தாலுக (திருனெல்வேலி கேரள எல்லை )

6.தேவிகுளம்

7.பீர்மேடு

8.பாலக்காடு

இன்னொரு ஊர் நினைவில்லை .....ஆக மொத்தம் 9 தாலுகாக்களை கேரளாவிடமிருந்து நாம் கோரினோம்....அவர்கள் மறுத்தனர்

குமரியில் கலவரம் மூண்டது .துப்பாக்கிசூடு நடத்தியது கேரள அரசு... பலர் மாண்டனர்..பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண சொன்னது மத்திய அரசு அதன் படி நடந்த பேச்சு வார்த்தையில் தமிழர் செறிந்து வாழும் பகுதிகளான் (80% மேல்)

1.அகஸ்தீஸ்வரம்,2.தோவாளை 3.கல்குளம். 4.விளவன்கோடு5. சென்கோட்டை தாலுகாவில் பாதியை கேரளம் தமிழகத்திற்கு தந்தது..

தேவிகுளம் பீர்மேட்டையும் தமிழகம் பெற்றிருந்தால் நன்றாக தான் இருந்து இருக்கும்..தண்ணீர் பிரச்சனை இருந்திருக்காது....ஆனால் கேரளம் தேயிலை தோட்டங்களை சும்மா தருமா???

அங்கிருந்த தமிழ் தொழிலாளர்கள் விரட்டப்படலாம் என்பதாலும் பிரச்சனையை முடிக்க வேண்டியும் காமராஜர் இந்த தீர்வுக்கு ஒத்துக்கொண்டார்.... அப்போதே மேடாவது குளமாவது எல்லாம் இந்தியாவில் தானே உள்ளது என்றார் அல்லாமல்..... தமிழகம் கேரளத்திற்கு தேவிகுளத்தையோ பீர்மேட்டையோ வழங்கவில்லை......

அய்யா நெடுமாறன் அவர்கள் தமிழர் வாழும் தேவிகுளமும் பீர்மேடும் நமக்கு கிடைக்கவில்லையே கிடைத்திருந்தால் தண்ணீர் பிரச்சனை இருக்காது என்ற எண்ணத்தில் பறி போன தமிழர் நிலம் என்று குறிப்பிட்டு இருக்கலாம்....ஆனால் பூகோள ரீதியில் அவை கேரளமே

Edited by வேலவன்

பீர்மேடு கேரளத்தில் மலை காடுகள் நடுவே எவ்வளவு தூரம் உள்ளே உள்ளது என்று நீங்களே பாருங்கள் ..... ஜூம் செய்து

http://encarta.msn.com/map_701513696/Kerala.html

முதலில் கேரளத்தை சொடுக்கவும் ( க்ளிக் செய்யவும்) பின்னர் காஞ்சிரப்பள்ளியை சொடுக்கினால் பீர்மேடு தெரியும்

Edited by வேலவன்

செயல் வீரர் காமராஜரைப் பற்றி எல்லோரும் தங்கள் கருத்தை கூறும் போது நானும் அவரைப்பற்றி எனக்கு தெரிந்த ஒரு கருத்தை தெரிவிக்கலாம் என்று நினைக்கிறேன்.

1984 ம் ஆண்டு தாயக விடுதலைச் செயற்பாட்டின் நிமித்தம் எனது அப்பா தஞ்சாவூரில் தங்கியிருந்த காலத்தில் சிறுவனான நானும் அப்போது அங்கேயே தங்கியிருந்தேன்.எங்கள் வீட்டிற்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புக்களை சேர்ந்தவர்கள் வருவார்கள்.எங்கள் வீட்டில் அரசியல் இலக்கியம் தத்துவம் சமயம் மார்க்சிசம் என்று பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடல்கள் நடக்கும்.நான் அவற்றை கேட்டுக் கொண்டிருப்பேன்.தமிழ் உணர்வாளரான தேவநேயன் என்ற ஒரு பொறியலாளர் எனது அப்பாவை சந்திப்பதற்கு அடிக்கடி வீட்டுக்கு வருவார்.ஒரு நாள் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் தமிழக அரசியல் பற்றி விவாதித்துக் கொண்டிருந்த போது காமாராஜர் பற்றி பேச்சு வந்தது.அந்த விவாதத்தில் பங்கெடுத்த தேவநேயன் அவர்கள் செயல் வீரர் காமராஜருடனான தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

காமராஜருடைய ஆட்சிக்காலத்தில் வைகையாற்றுக்கு குறுக்கே விருதுநகர் பகுதியில் ஒரு பாலம் கட்ட திட்டமிடப்பட்டதாம்.மணல் பாங்கான அந்த இடத்தில் பாலங்கட்டுவதற்கான ஆரம்பங்கட்ட வேலைகளையும் மதிப்பீடுகளையும் செய்யும் பொறுப்பு அரச தலைப் பொறியலாளராக இருந்த தேவநாதன் உட்பட மூன்று பேரிடம் ஒப்படைக்கப்பட்டதாம்.விருதுந

காமராஜர் போன்ற தலைவர்களின் வழி காட்டலை அவரின் கட்சியை தமிழ் நாட்டு மக்கள் தூக்கி எறிந்ததனால்தான் தி. மு .க அ தி மு க போன்ற பகல் கொள்ளை கட்சிகள் தமிழ்நாட்டை குட்டிச்சுவராக்கிக்கொண்டிர

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.