Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழர்களை வைத்து சிறிலங்காவை பிணையெடுக்க முயலும் எம்.ஏ.சுமந்திரன். -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களை வைத்து சிறிலங்காவை பிணையெடுக்க முயலும் எம்.ஏ.சுமந்திரன். -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

 

 

 
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-
 
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் 2009 மே மாதம் முடிவடைந்த போதிலும், தமிழர்கள் நிலங்கள் மீதான இராணுவ ஆக்கிரமிப்பானது தொடர்கிறது. நாட்டின் பாதுகாப்புக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லாத படியால் இலங்கையில் பாதுகாப்பு செலவினம் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இதற்கு மாறாக, இலங்கையின் பாதுகாப்புச் செலவினங்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதுடன், அரசாங்கச் செலவுகளில் 15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் போரின் போது, 2009ல் 100,000 சிப்பாய்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, இது 300,000 க்கு மேல் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Sumanthiran--242x300.jpg
தமிழர்களுக்குச் சொந்தமான வளமான காணிகளை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து, இராணுவ முகாம்கள் தமிழர் பிரதேசங்களில் வேரூன்றியுள்ளன. தமிழர் பிரதேசங்களில் நிலவும் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் சிங்கள இராணுவம் கட்டுப்படுத்துகிறது. இன்று இலங்கையில் கள்ளச்சந்தை, பணவீக்கம் மற்றும் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன. இலங்கை இராணுவம் வணிக முயற்சிகள், நிர்மாண ஒப்பந்தங்கள், சிவில் நிர்வாகம் மற்றும் விவசாயத்தை கட்டுப்படுத்துகிறது. இராணுவத்தின் சிவில் நிர்வாகத் தலையீட்டால் 3.5 மில்லியனுக்கும் அதிகமான தமிழ் மக்களை பாரிய இராணுவ மயப்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பின் கீழ் தமிழர்களை நிரந்தரமாக வறுமையில் வைத்திருக்கிறது. இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு அவர்களின் உரிய அரசியல் உரிமைகளை வழங்குவதை விட அவர்களின் வாழ்வாதரத்திற்காக போராட வைத்து அவர்களை வறுமையில் வைத்திருக்கிறது! நீண்ட கால தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு உண்மையாகவும் இதயசுத்தியுடனும் தீர்வுகண்டிருந்தால் இலங்கை தற்போதைய பாரதூரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்காது.
unnamed-2-300x92.jpg
இந்தப் பின்னணியில், தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு எந்தவொரு கணிசமான தீர்வையும் பெறாமல் இலங்கையின் ஊழல் நிறைந்த அரசாங்கத்தை தொடர்ந்தும் பிணை எடுப்பதைத் தவிர்க்குமாறு புலம்பெயர் அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கேட்டுக்கொள்கின்றன. துரதிஸ்டவசமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய அரசியல் கட்சிகளும் புலம்பெயர் அமைப்புக்களின் வேண்டுகோளை உதாசீனப்படுத்துவதுடன் தமது சொந்த இலாபங்களுக்காக ஒரு ஊழல் நிறைந்த ஆட்சிக்கு தொடர்ந்தும் முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசாங்கத்தை கையாள்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற எமது அழைப்புக்களை அலட்சியம் செய்யும் திரு.சுமந்திரன் இலங்கை அரசாங்கத்திற்கும் புலம்பெயர்ந்த அமைப்புக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக சேவையாற்றுவதாகக் கூறிக் கொண்டமை குறித்து நாங்கள் திகைப்படைந்தோம். திரு.சுமந்திரன் தனது அண்மைய உலகளாவிய விஜயத்தின் போது புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் தொடர்புகொள்ள முடியாமல் அவமானப்பட்டதை மறந்துவிட்டார் போலும். புலம்பெயர் தமிழர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் கூட்ட அரங்குகளில் இருந்து பின்வாசல் வழியாக இரகசியமாகத் தப்பிச் சென்றார். திரு.சுமந்திரன் அவர்களின் மக்கள் விரோதப்போக்கின் அடிப்படையில், இலங்கை அரசாங்கத்திற்கு அவர் வழங்கிய முன்மொழிவானது இவரால் செயற்படுத்த முடியாத விடயமாகும்.
1956, 1958, 1962, 1974, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளிலும் அதனைத் தொடர்ந்து 30 ஆண்டுகால யுத்தத்திலும் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலைகள் காரணமாக 1.5 மில்லியனுக்கும் அதிகமான தமிழர்கள் புலம்பெயர்ந்து இலங்கைத் தீவை விட்டு வெளியேறினர். தமிழர்களுக்குச் சொந்தமான பல பில்வியன் டொலர் பெறுமதியான தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் சிங்கள அரசாலும் பௌத்த பிக்குகளாலும் ஏவிவிடப்பட்டு சிங்களக் காடையர்களாலும் சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் அழித்துச் சாம்பலாக்கப்பட்டது. சிங்களக் காடைளர்களால் அப்பாவி தமிழ் பொதுமக்கள் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என வித்தயாசம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர். உக்ரேனில் தற்போது நடைபெறும் யுத்தத்துடன் ஒப்பிடுகையில், தமிழர்கள் மீதான படுகொலைகள் அவர்களின் சனத்தொகை விகிதாசாரத்தில் மிகவும் மோசமானவையாகும். சிங்களத் தலைமைகள் தொடர்ந்தும் குற்றவாளிகளைப் பாதுகாத்து வருவதால் எவரும் இன்றுவரை நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. சர்வதேச நாணய நிதியம் மற்றும் மேற்குநாட்டு சக்திகளால் இலங்கைத் தீவில் காலூன்றுவதற்காக இலங்கை அரசின் பெரும் கடன்சுமையில் இருந்து பிணையெடுக்க எந்த விதமான முன்நிபந்தனைகளும் இன்றி முயல்கின்றன, அதே நேரம் தமிழர்களுக்கு எதிரான இன்னுமொரு இனப்படுகொலை மீண்டும் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்தப் பின்னணியில், ஒரு தோல்வியுற்ற அரசை பிணை எடுப்பதற்காக புலம்பெயர் தமிழர்களுடன் தான் ஒரு பாலமாக சேவையாற்றுவதாகக் கூறிக்கொள்ளும் துணிச்சலை திரு.சுமந்திரன் அவர்களுக்கு புலத்தில் வாழும் ஒருசில அடிவருடிகளா கொடுத்தார்கள்?
சிங்கள இனவாதிகளின் ஏழு தசாப்த கால போலித்தனமான வரலாற்று அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒரு உண்மையான நம்பகமான மூன்றாம் தரப்பினரின் பிரசன்னம் இல்லாமல் இலங்கை அரசாங்கத்துடன் எந்தவிதமான பேச்சுகளிலும் ஈடுபடமாட்டார்கள். 2002 சமாதானப் பேச்சுவார்த்தைகளின் அனுபவங்களின் அடிப்படையில், புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்னுமொரு ‘சமாதானப் பொறிக்குள்’ விழத் தயாராக இல்லை!

Thinakkural.lk

  • கருத்துக்கள உறவுகள்

இருநூறு பில்லியன் டாலர்களுக்குக் கடனாகப்பெற்ற அழிவு ஆயுதங்களால் எமது இனத்தின் இருப்பை அழித்தவர்களுக்கு அதே கடனுக்கான வட்டித்தவணையைப் பெற்றுக்கொடுக்க அதே அழிக்கப்பட்ட தமிழனத்திடம் காசு பார்த்துத் தருகிறேன் எனச்சொல்லுகிறானே தரகன் ஒருவன் இவந்தான் எமது இனத்தில் பல கோடரிக்காம்புகள் இருந்தாலும் முதன்மையான கோடரிக்காப்பாவான்.

நான் முதலில் கேட்ட கேள்விதான் சுமந்திரன் தனது சாப்பாட்டுத்தட்டில் சோத்துக்குப்பதிலாக வேற ஏதாவது அசிங்கத்தை நிரப்பித் திங்கிறாரா!

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன், தற்போதைய அரசியற் சூழல், உலக பொருளாதார நெருக்கடி எதனையும் கருத்தில் எடுக்காமல் தவிர்த்துக்கொண்டு இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்.

தயவுசெய்து உங்கள் உளப்பூர்வமான கருத்தைக் கூறுங்கள்.

இலங்கையில் புலம்பெயர் தமிழர் முதலீடு செய்தல் இலங்கைத் தமிழரின் எதிர்காலத்திற்கு நன்மையாக அமையாதா ? 

 

  • கருத்துக்கள உறவுகள்+

//உள்நாட்டுப் போரின் போது, 2009ல் 100,000 சிப்பாய்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது//

 

3 hours ago, nunavilan said:

உள்நாட்டுப் போரின் போது, 2009ல் 100,000 சிப்பாய்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

 

அவன் அப்பவே 3 இலக்கம் பேரை வச்சிருந்தவன். சும்மா பேப்பர் இருக்குது என்டதிற்காக கண்டதையும் எழுதப்படாது.


=======================

 

மற்றும்படி சுமந்திரன் என்ட புல்லுருவியை எப்படி ஏசினாலும் திட்டினாலும் மகிழ்ச்சியே... ஒழிக்கப்பட வேண்டியவர்கள் எல்லாம் உயிரோடு வாழ்கிறார்கள்!

 

சிங்களவரை காப்பாற்றுவதற்கெண்டே இருக்கிறான்(ர்). சைக்... விரைவாக ஒழிஞ்சுபோனால் நல்லம்.

 

 

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
On 29/3/2022 at 13:14, Kapithan said:

இலங்கையில் புலம்பெயர் தமிழர் முதலீடு செய்தல் இலங்கைத் தமிழரின் எதிர்காலத்திற்கு நன்மையாக அமையாதா ? 

தமிழருக்கு என்ற ஒரு உறுதியான தீர்வும் இன்றி மீண்டும் மீண்டும் கலவரங்கள் மூலம் சொத்துக்களை இழக்க சொல்கிறீர்களா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 29/3/2022 at 14:14, Kapithan said:

இலங்கையில் புலம்பெயர் தமிழர் முதலீடு செய்தல் இலங்கைத் தமிழரின் எதிர்காலத்திற்கு நன்மையாக அமையாதா ? 

தமிழர் கைதுகளை நிறுத்தச்சொல்லுங்கள்.
தமிழருக்குரிய உரிமைகளை கொடுக்கச்சொல்லுங்கள்.
பயங்கரவாத சட்டங்களை நீக்கச்சொல்லுங்கள்.

கொண்டு போன காசை பறித்து விட்டு சிறையில் அடைத்த சம்பவங்கள் நிறைய உண்டு.

வேறு நாடுகளில் குடியுரிமை பெற்று வாழ்ந்தாலும் பிறந்த மண்ணுக்கு போவதென்றாலே என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற பய பிரமை யாவருக்கும் உண்டு.

ஓமோ இல்லையோ? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

தமிழர் கைதுகளை நிறுத்தச்சொல்லுங்கள்.
தமிழருக்குரிய உரிமைகளை கொடுக்கச்சொல்லுங்கள்.
பயங்கரவாத சட்டங்களை நீக்கச்சொல்லுங்கள்.

கொண்டு போன காசை பறித்து விட்டு சிறையில் அடைத்த சம்பவங்கள் நிறைய உண்டு.

வேறு நாடுகளில் குடியுரிமை பெற்று வாழ்ந்தாலும் பிறந்த மண்ணுக்கு போவதென்றாலே என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற பய பிரமை யாவருக்கும் உண்டு.

ஓமோ இல்லையோ? :cool:

நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை. இரண்டு வருடங்களுக்கு முன்னர் வடக்கில் கொஞ்சம் பெரிய முதலீட்டைச் செய்துபோட்டு முழிஞ்சுகொண்டு நிற்கிறேன். 

ஆனால் நான் அதனை அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை. 

ஒருமுறை மறைந்த பாரதப் பிரதமரிடம் பத்திரிகையாளர் (?) ஒருவர் பாகிஸ்தானுடன் இந்தியா நடத்தும் பேச்சுவார்த்தையும் அதன் பலனாக எதிர்பார்க்கப்படும் ஒப்பந்தம் தொடர்பாக. "பாகிஸ்தானை எந்த அளவு நம்புகிறீர்கள் ? அவர்களுடனான ஒப்பந்தங்கள் எந்த அளவு நம்பிக்கையுடையவை " எனக் கேட்டார். அதற்கு நேரு " எழுதப்படும் ஒப்பந்தங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் இரு நாட்டிற்கும் நன்மையே. இந்த ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும் நமக்கு நன்மையே. ஏனென்றால் அவைகள் மீதான பிடி(ஒப்பந்தம்) நம்பிடம் இருக்கிறதல்லவா" என்று கூறினார். 

இங்கே பாகிஸ்தான் மீதான பிடி என்பது முக்கியம். 

அந்த அர்த்தத்திலேதான் புலம்பெயர் தமிழர்களின் முதலீடு இலங்கையில் செய்தல் நன்மையானதா என்று கேட்டிருந்தேன். 

குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் இலங்கையின் EAP Edirisinghe  and Sons ஐ Licatel கொள்வனவு செய்ய முயன்றபோது அது இலங்கையில் பெரும் பிரச்சனையைக் கிளப்பியது.

ஆனால் பின்னர் வேறுவிதமாக Licatel அதனை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததாக அறிந்தேன். (அதன் உண்மை பொய் தெரியவில்லை) Sri Lankan AirLines ஐயும் கொள்வனவு செய்ய ஒரு பகுதி முயன்றதாக வதந்தி. 

ஆயுதத்தால் செய்ய முடியாததை புலம்பெயர் தமிழர் பணத்தால் சாதித்துவிடுவார்களோ என்பதுதான் சிங்களத்தின் பயம். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

தமிழருக்கு என்ற ஒரு உறுதியான தீர்வும் இன்றி மீண்டும் மீண்டும் கலவரங்கள் மூலம் சொத்துக்களை இழக்க சொல்கிறீர்களா ?

உண்மையில் எங்களுக்கு இது நல்ல சந்தர்ப்பம். 

ஆனால் முதலீட்டுக்கு உகந்த சூழல் இல்லாவிட்டால் ஒருவரும் முதலிடார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, Kapithan said:

ஆயுதத்தால் செய்ய முடியாததை புலம்பெயர் தமிழர் பணத்தால் சாதித்துவிடுவார்களோ என்பதுதான் சிங்களத்தின் பயம். 

 சும்மா ஒரு கதைக்கு சொல்கிறேன்....

தமிழர்களிடம் பணம் இருக்கோ இல்லையோ அல்லது தமிழர்களிடம் பலம் இருக்கோ இல்லையோ சிங்களத்திற்கு எப்போதும் தமிழர் மீது ஒரு பயம் உண்டு. அதனால் தான் பாம்பு பயத்தில் கொத்துவது போல் எப்போதும் எங்கேயும் தமிழர்களை அடக்க எத்தனிக்கின்றார்கள். ஏன் இன்று கூட பயங்கரவாத சட்டத்தை இவர்களால் இல்லாதொழிக்க முடியவில்லை.உங்களுக்கு காரணம் தெரியுமென நினைக்கின்றேன்.ஏனெனில் தமிழர்களின் பலம் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.சிங்கள ஆட்சியாளர்களை வழிநடத்தியவர்கள் யாரென்று சிங்களவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.சிங்களவர்களுக்கு கணக்கு பார்த்து செலவு செய்ய தெரியாது.

இந்தியா.

பொருளாதாரத்தில் உலகம் சிறிது தள்ளாடினாலும் இந்தியா தனது திறைசேரியை கொஞ்சம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது. காரணம் காங்கிரஸ் ஆட்சியிலும் சரி பாரதீய ஜனதா ஆட்சியிலும்  சரி நிதி அமைச்சர்களாக இருந்தவர்  இருப்பவர் தமிழர்களே. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

உண்மையில் எங்களுக்கு இது நல்ல சந்தர்ப்பம். 

ஆனால் முதலீட்டுக்கு உகந்த சூழல் இல்லாவிட்டால் ஒருவரும் முதலிடார்.

நல்ல சந்தர்ப்பம் ஆனால் கெடுத்து குட்டிசுவர் ஆக்குவத்துக்கென்றுதான் சுமத்திரன்  இருக்கிறாரே .

  • கருத்துக்கள உறவுகள்
On 29/3/2022 at 14:41, நன்னிச் சோழன் said:

அவன் அப்பவே 3 இலக்கம் பேரை வச்சிருந்தவன். சும்மா பேப்பர் இருக்குது என்டதிற்காக கண்டதையும் எழுதப்படாது.

முழு டிவிசென்கள் ரிசெர்வ் படைகள் மற்றும் போக்குவரத்துக்களில்  உள்ள ஊர்காவல் படை கண்காணிப்பு எல்லாமே சேர்த்து 4.5லட்சத்துக்கு மேல் கடைசி யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டன அவர்களுக்கான செலவுகளில் மொத்த வருமானத்தில் 10க்குள் காட்டியவர்கள் பொய்யாக வேணுமென்றே மிச்சம் நம்ம படைத்துறை ஆய்வாளர்கள் ஆய்வினம் 😃 

  • கருத்துக்கள உறவுகள்+
3 minutes ago, பெருமாள் said:

முழு டிவிசென்கள் ரிசெர்வ் படைகள் மற்றும் போக்குவரத்துக்களில்  உள்ள ஊர்காவல் படை கண்காணிப்பு எல்லாமே சேர்த்து 4.5லட்சத்துக்கு மேல் கடைசி யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டன அவர்களுக்கான செலவுகளில் மொத்த வருமானத்தில் 10க்குள் காட்டியவர்கள் பொய்யாக வேணுமென்றே மிச்சம் நம்ம படைத்துறை ஆய்வாளர்கள் ஆய்வினம் 😃 

உண்மை!

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

நல்ல சந்தர்ப்பம் ஆனால் கெடுத்து குட்டிசுவர் ஆக்குவத்துக்கென்றுதான் சுமத்திரன்  இருக்கிறாரே .

ஏனையா இதுக்குள்ள அந்தாள இழுக்கிறியள். அடுத்த தேர்தலில ஆள வெளியில விட்டா பிரச்சின முடிஞ்சிது.

 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kapithan said:

ஏனையா இதுக்குள்ள அந்தாள இழுக்கிறியள். அடுத்த தேர்தலில ஆள வெளியில விட்டா பிரச்சின முடிஞ்சிது.

 

போன தேர்தலிலே ஆளை வெளியில் விட்டாயிற்று இனவாத சிங்கள தலைவர்கள் விடமாட்டினம் அவர்களுக்கு இவர் முக்கியம் பல் இளித்து கொண்டு பெட்டி வாங்கும் மிருகம் .

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, பெருமாள் said:

போன தேர்தலிலே ஆளை வெளியில் விட்டாயிற்று இனவாத சிங்கள தலைவர்கள் விடமாட்டினம் அவர்களுக்கு இவர் முக்கியம் பல் இளித்து கொண்டு பெட்டி வாங்கும் மிருகம் .

வெளியில அனுப்ப ஏலாட்டி, அப்படியே ஆள வச்சுக்கொண்டு வேலையப் பாருங்கோ. ஏனெண்டா சும்மா புலம்பி ஒரு பிரயோசனமும் இல்ல. 

 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kapithan said:

வெளியில அனுப்ப ஏலாட்டி, அப்படியே ஆள வச்சுக்கொண்டு வேலையப் பாருங்கோ. ஏனெண்டா சும்மா புலம்பி ஒரு பிரயோசனமும் இல்ல. 

 

இனவாத சிங்களவர்களின் அதிகார பலத்தில் ஓவர்ஆக ஆடுகிறார் கொஞ்ச நாளைக்கு உங்களை போன்றவர்கள் அமைதியாகி இருப்பது தமிழ் இனத்துக்கு  செய்யும் நன்மை ஆக இருக்கும் .🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.