Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மிரிஹானவில் கைதானோருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் : இலங்கை மனித உரிமை ஆணைக்குழு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிரிஹானவில் கைதானோருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் : இலங்கை மனித உரிமை ஆணைக்குழு

மிரிஹான சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் மிரிஹான சம்பவம் தொடர்பான நிலைமையை ஆராய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்புக்குழுவொன்றும் மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

நேற்று (31) இரவு நுகேகொடை மிரிஹான பெங்கிரிவத்தையிலுள்ள ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்டு மக்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்நிலையில், இதனை கட்டுப்படுத்த பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டது. பொலிஸாராரல் கண்ணீர்புகை வீசப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த கொழும்பு வடக்கு, தெற்கு மற்றும் மத்திய, நுகேகொடை பொலிஸ் பிரிவு , களனிய பொலிஸ் பிரிவு, கல்கிசை பொலிஸ் பிரிவு ஆகிய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டது.

குறித்த ஊரடங்கு காலை 12.48 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு இன்று காலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்டது.

குறித்த சம்பவத்தில் 45 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டடத்தை பயன்படுத்த வேண்டாம் என இலங்கை  மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/125086

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டடத்தை பயன்படுத்த வேண்டாம் என இலங்கை  மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம்... அதை மறந்து இருந்தாலும்,
 இவங்களே... நினைவூட்டி  பயன்படுத்த சொல்வார்கள். போலுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி வீட்டின் முன்பாக போராட்டம் – கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு!

ஜனாதிபதி வீட்டின் முன்பாக போராட்டம் – கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு!

நுகேகொட – மிரிஹான பகுதியில் நேற்று(வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் பொலிஸ் பேருந்து ஒன்றும், ஜீப் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும், 2 டிராஃபிக் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இராணுவ பேருந்து ஒன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1274218

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பொருளாதார நெருக்கடி: ஜனாதிபதி வீட்டின் முன் நள்ளிரவில் நடந்த போராட்டம் – 45 பேர் கைது

18 நிமிடங்களுக்கு முன்னர்
 

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

நேற்றிரவு இலங்கை நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதையடுத்து அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி பிரயோகமும் செய்தனர்.

இதில் ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளார். கண்ணீர் புகை குண்டு வீச்சால் ஏற்பட்ட புகையில் கண் எரிச்சல் மற்றும் பிற பாதிப்புகளுக்கு பொதுமக்கள் ஆளானதாக களத்தில் இருந்து பிபிசி தமிழுக்காக செய்தி சேகரிக்கும் ரஞ்சன் அருண் பிரசாத் கூறுகிறார்.

இந்த போராட்டம் தொடர்பாக ஒரு பெண் உட்பட இதுவரை 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறையில் காவல்துறை தரப்பில் ஐந்து பேர் காயமடைந்ததாகவும், காவல்துறை ஜீப் மற்றும் இரண்டு மோட்டார் பைக்குகள் எரிக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் நடந்த போராட்டம்

இலங்கை தலைநகர் கொழும்பில் பல வாரங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் மக்கள் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 5,000-க்கும் மேற்பட்டோர், பொருளாதார நெருக்கடியைத் தடுக்கத் தவறிய ஜனாதிபதி பதவி விலகக் கோரி கோஷமிட்டனர்.

இலங்கை அதிபரின் இல்லம் அருகே பேரணி நடத்திய ஒரு பிரிவு போராட்டக்குழுவினர் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களை ஒடுக்க ஏற்கெனவே அங்கு தயார் நிலையில் துணை ராணுவ படையினர், போலீஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

 

மக்கள் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கை நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அங்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள், எரிவாயு ஆகியவற்றுக்கு பல வாரங்களாக கடுமையான பற்றாக்குறை உள்ளது.

13 மணி நேர மின்வெட்டு

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலையில் டீசல் கிடைக்காததால், நாட்டின் பெரும்பாலான இடங்களில் அதிகபட்சமாக 13 மணி நேர மின்வெட்டுக்குள்ளாயினர்.

சாலைகளில் மின் விளக்கு எரிய வைப்பதற்கு கூட போதிய மின்சாரம் இல்லாத நிலை இருப்பதாக களத்தில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதன் காரணமாக சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. பல இடங்களில் மருந்துகள் பற்றாக்குறையால் அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டிருந்த அரசு மருத்துவமனைகளில் மின்தடை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதாக தகவல்கள் வருகின்றன.

மின்சார விநியோக தடையால் செல்பேசி ஒலிபரப்பு நிலைய சேவைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல இடங்களில் செல்பேசி கோபுரங்களை இயக்க மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால் செல்பேசி தொலைத்தொடர்பு விநியோக சேவை பாதிக்கப்பட்டது.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

கொழும்பு பங்குச் சந்தை வர்த்தகத்தை அரை மணி நேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை மட்டுப்படுத்த வேண்டியிருந்தது.

இந்த நெருக்கடி காரணமாக பல நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களை வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டன. மின்சாரத்தை மிச்சப்படுத்த தெரு விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளன என்று ஒரு அமைச்சரை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குடும்பம், குடும்பமாக திரண்ட மக்கள்

இத்தகைய சூழலில்தான் மக்கள் தன்னிச்சையாகவே சிறிது, சிறுதாகவும் பிறகு ஆயிரக்கணக்கிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில், குடும்பம், குடும்பமாக திரளத் தொடங்கினர்.

அவர்களில் பலர் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற கோஷங்களை முழங்கினர். அவர்களை கலைக்க வந்த போலீஸாருடன் பொதுமக்களில் சிலர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். அப்போது சிலர் போலீஸார் மீது பாட்டில்கள் மற்றும் கற்களை வீசினர்.

 

protest

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதையடுத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை போலீஸார் கலைக்க முற்பட்டனர். சமூக ஊடக காணொளியொன்றில் மோட்டார் பைக்கில் வந்த இரண்டு போலீஸ்காரர்களை ஒரு கும்பல் சுற்றி வளைத்த காட்சி இடம்பெற்றிருந்தது.

போராட்டக்களத்துக்கு அருகே உள்ள பகுதியில் ஒரு பேருந்தின் கண்ணாடியை போராட்டக்குழுவினர் உடைத்து நொறுக்கினார்கள். இந்த சம்பவத்தின் உச்சமாக ஒரு போலீஸ் பேருந்து தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வீட்டில் இல்லை என்று அதிகாரபூர்வ ஆதாரங்களை மேற்கோள்காட்டி ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பல நகரங்களின் முக்கிய சாலைகளில் வாகன ஓட்டிகள் எரிபொருள் தட்டுப்பாட்டால் மறியலில் ஈடுபட்டனர்.

ஊரடங்கு உத்தரவு

 

protest

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொடை ஆகிய பகுதிகளுக்கு போலீஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த போராட்டம் வெள்ளிக்கிழமை மேலும் வலுப்பெறலாம் என்று கூறுகிறார் கொழும்பில் இந்த போராட்ட தகவல்களை சேகரித்து வழங்கி வரும் செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத்.

இலங்கை ஜனாதிபதியின் மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்ஷ அந்நாட்டின் பிரதமராக இருக்கிறார். இளையவர் பசில் ராஜபக்ஷ நிதி இலாகாவை வைத்திருக்கிறார். மூத்த சகோதரர் சமல் ராஜபக்ஷ விவசாய அமைச்சராகவும், மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்ஷ விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருக்கிறார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-60951190

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இந்த போராட்டம் தொடர்பாக ஒரு பெண் உட்பட இதுவரை 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

அடுத்தது வெள்ளை வான் வரும், அதோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் காணாமல் போய்விடுவார்கள். அல்லது ஆர்ப்பாட்டம் இன்னும் வீறு கொள்ளும்!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

அடுத்தது வெள்ளை வான் வரும், அதோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் காணாமல் போய்விடுவார்கள். அல்லது ஆர்ப்பாட்டம் இன்னும் வீறு கொள்ளும்!

ஆர்ப்பாட்டம்  இன்னும், வீறு கொள்ளும் என்றே நினைக்கின்றேன்.
வருகின்ற 3´ம் திகதி... பெரிய ஆர்ப்பாட்டத்துக்கு திடடம் இட்டு இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டடத்தை பயன்படுத்த வேண்டாம் என இலங்கை  மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் சட்டத்தினால் தமிழர் வகை தொகையின்றி கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படும்போது இந்த இலங்கை மனித உரிமை ஆணைக்குழு எங்கே போனது? அதுவும் இன பேதம் பார்த்து மவுனம் காத்தது.

4 minutes ago, தமிழ் சிறி said:

ஆர்ப்பாட்டம்  இன்னும், வீறு கொள்ளும் என்றே நினைக்கின்றேன்.
வருகின்ற 3´ம் திகதி... பெரிய ஆர்ப்பாட்டத்துக்கு திடடம் இட்டு இருக்கின்றார்கள்

பாதிக்கப்பட்டவர்களாக இதை ரசிக்க முடியவில்லை. பசியால் மக்கள் அலைவதையும், தண்டிக்கப்படுவதையும். ஆனால் இது அவர்களாகவே தட்டு வைத்து தேடிக்கொண்டதே நாம் என்ன செய்யலாம்? நாம் செய்ய முடியாததை அவர்கள் செய்ய முடிந்ததே என்று ஆறுதலடைய வேண்டியதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்

மிரிஹான இல்லத்தில் ஜனாதிபதி இருந்தாரா?

 

ஜே.ஏ.ஜோர்ஜ்

நேற்றைய தினம் மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதன்போது, அங்கு ஜனாதிபதி இருந்தாரா என்பது தொடர்பிலான தகவல்களை தன்னால் வெளியிட முடியாது என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அரச தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் நடமாட்ட விடயங்களை பொதுவெளியில் வெளியிடுவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்றும் அவ்வாறு வெளியிடுவது சரியான விடயம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் மீது இனக்கலவரம் கட்டவிழ்த்து விட்ட போது சிங்களவரும் முஸ்லீம்களும் தமிழர்களது உடமைகளை கொள்ளையடித்து பொருளாதார பலன் அடைந்ததாக நினைத்துக்கொண்டார்கள் அவர்களுக்கு தெரியாது அவர்க்ள் ஒவ்வொரு இனக்கலவரத்தின் போதும் இலங்கையை பொருளாதார ரீதியில் பின் தள்ளினார்கள் என்பது.

அதே போல்தான் இப்பொதும் நாடே மூழ்கிக்கொண்டிருக்கும்போது பற்றி எரிகிற வீட்டில் எண்ணெய்யினை ஊற்றுவதுதான் இந்த முட்டாள்தனமான போராட்டங்கள், அமைதியாக பொது சொத்துகளுக்கு இழப்பில்லாமல் போராட முடியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

போராட முடியும் ஆனால்  காலம் காலமாய் பழகிப்போச்சு. தமிழனின் சொத்துக்கள்  எண்ட நினைப்பிற்தான் நடக்குதோ எரிந்ததெல்லாம் தமிழனின் சொத்துக்கள்தானே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

தமிழர் மீது இனக்கலவரம் கட்டவிழ்த்து விட்ட போது சிங்களவரும் முஸ்லீம்களும் தமிழர்களது உடமைகளை கொள்ளையடித்து பொருளாதார பலன் அடைந்ததாக நினைத்துக்கொண்டார்கள் அவர்களுக்கு தெரியாது அவர்க்ள் ஒவ்வொரு இனக்கலவரத்தின் போதும் இலங்கையை பொருளாதார ரீதியில் பின் தள்ளினார்கள் என்பது.

அதே போல்தான் இப்பொதும் நாடே மூழ்கிக்கொண்டிருக்கும்போது பற்றி எரிகிற வீட்டில் எண்ணெய்யினை ஊற்றுவதுதான் இந்த முட்டாள்தனமான போராட்டங்கள், அமைதியாக பொது சொத்துகளுக்கு இழப்பில்லாமல் போராட முடியாதா?

திரும்பவும் இனக்கலவரம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. 

இம்முறை அது எப்படி, யாருக்கெதிராக ஆரம்பமாகப்போகிறது என்பதுதான் தெரியவில்லை. 

🧐

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.