Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். களத்தின் செல்வங்களுக்கு

Featured Replies

உங்கள் கலை ஆர்வம் இந்தியக் கலை, கலைஞர்கள் சார்ந்ததாகவே இருக்கிறது. சிவாஜி (நடிகரல்ல - படம்), விவேக், அஜித் (தலயாம்) என்று சொல் அபிசேகங்கள் பக்கம் பக்கமாக செய்கிறீர்கள். அரட்டை அடிக்கிறீர்கள். பரவாயில்லை. எங்கள் கலைஞர்கள் பக்கமும் சற்று கடைக்கண் பாருங்கள். அவர்கள் பற்றி, அவர்கள் படைப்புக்கள் பற்றிய குறிப்புகள் இட்டால் திரும்பியே பார்க்காதவர்கள் அனேகர். அவர்கள் படைப்புகளை இணைப்புகள் இட்டால் மாத்திரம் சந்தோசம் அடைகிறீர்கள்.

படலைக்கு படலை டிவிடி வந்தது. இணைப்பு தரமுடியுமா என்று கேட்கிறீர்கள் வெட்கம் .

காதல் மொழி இணைப்பு தந்தால் தான் கேட்பீர்கள். என்ன.?

கோடிகள் பெறுபவர்களுக்கு தொடர்ந்தும் கோடிகள் சேர்க்க வழி பார்க்கிறீர்கள். நம்மவர்களுக்கு 10 டொலர். 10 ஈரோ கொடுத்தால் குறைந்தா போய் விடும். உங்களுக்கு சொந்த நாட்டின் மீது அபிமானம் என்பது வெறும் வார்த்தை ஜாலங்கள் தானா ? இதுக்கு மேல் சொல்வதற்கொன்றுமில்லை.

:lol:

Edited by Ponniyinselvan

நியாயமான கோபம்...

படைப்புக்கள் யாழ்களத்தில் வருபவற்றை எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்கிறனா. ஆனால் நான் பலவற்றுக்கு கருத்துக்கள் எழுதுவதில்லை... பாராட்டுதல் என்பது நல்லதொரு அங்கீகாரம்தான்... இது மூதல் எல்லா படைப்புக்களுக்கும் பின்னூட்டம் விட முயற்சிக்கிறேன்...!

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நீங்க யாழ்கள படைப்பாளிகளை சொல்லுறீங்களோ அல்லது யாழ்களதிற்குவெளியால் உள்ள படைப்பாளிகளை சொல்லுறீங்களா.

கவனிக்க வேண்டிய விடயம். எம்மவர்களை நாங்கள் தான் தட்டிக்குடுக்கணும் என்பது நிஜம்..எம்மாலான உதவிகள் தொடரும்..

எம்மவர்கள் தட்டிக்கொடுப்பதா...

எம்மவர்கள் காட்டிக்கொடுக்கத்தான் லாயக்கு..

உயிரும் உதிரமும்..மண்ணுக்காக சிந்தும் மைந்தர்கள் நினைவுக்கற்களில் நாய்களோ நாயாக நாட்டியம் ஆடும் எட்டப்பர்கள் ஊரில் மட்டுமல்ல புலத்திலும் நிறைய..

சினிமாத்தனமா வாழ்க்கைக்கு மட்டும்தான் மரியாதை..

உண்மையான மண்மணம்..கிராமிய உணர்வு.. யாருக்கும் பிடிக்காதாம் தெரியாதாம்..

என்னால இதால தாங்க முடியலை போங்க..

நெஞ்சு பொறுக்குதில்லையே கண்ணம்மா இந்த நிலை கெட்ட

மாந்தரை நினைக்கையிலே..

பாரதி பாடியதைப் போல் எண்ணி நோகவேண்டியதுதான்..

என்னங்க சொல்லுறீங்கள்?

என்னைப் பொறுத்தவரை நான் இதுவரை காலத்திற்கு தமிழ் சினிமா சீடி/ டீவீடிக்கு ஒரு சதம் கூட செலவளித்தது இல்லை. நான்கு ஐந்து தடவைகள் தியேட்டருக்கு போய் தமிழ் படங்கள் பார்த்துள்ளேன். அவ்வளவுதான். பாட்டுக்களை இணையத்தளங்களில் கேட்பது.

எனது தனிப்பட்ட அணுகுமுறை என்னவென்றால் நான் பொருட்களை ஒன்லைனில்தான் வாங்குவது. எம்மவர்கள் யாருடையதாவது பிறந்ததினத்திற்கு அல்லது வேறு விசேசங்களிற்கு பரிசுப்பொருளாக நம்மவர்கள் படைப்புக்கள் எதையாவது ஒன்லைனில் வாங்கி அன்பளிப்பு செய்வம் என்று பார்த்தால் அப்படி தமிழ் ஒன்லைன் ஸ்டோர் ஒன்றையும் நமது தேவையை பூர்த்தி செய்யும் வகையில் காணவில்லை.

ஈழத்து படைப்பாளிகளின் படைப்புக்கள் ஒன்லைனில் விற்கப்பட்டால் (பாதுகாப்பான முறையில்) நான் நிச்சயம் அவற்றை வாங்கி ஆதரவு கொடுப்பேன்.

  • தொடங்கியவர்

என்னங்க சொல்லுறீங்கள்?

ஈழத்து படைப்பாளிகளின் படைப்புக்கள் ஒன்லைனில் விற்கப்பட்டால் (பாதுகாப்பான முறையில்) நான் நிச்சயம் அவற்றை வாங்கி ஆதரவு கொடுப்பேன்.

தயா, புத்தன், தூயா, விகடகவி, கலைஞன் ஆகிய அனைவருக்கும் நன்றி. களத்தில் எழுதும் படைப்பாளிகட்கும் உங்கள் ஆதரவு தேவை. அதே போல எங்கள் மண்ணில் பிறந்து கலை முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் பற்றி குறிப்பிடப்பட்டால் அவர்கள் பற்றி அறிய முற்படுங்கள். பின்னூட்டம் இடுங்கள். நாலு பேர் தொடர்ந்து பார்ப்பார்கள். புதிய தகவல்கள் வரும். கலையரசு சொர்ணலிங்கம், தாசிசியஸ், இணுவில் தெட்சணாமூர்த்தி, வீரமணி ஐயா பற்றி களத்தில் ஏற்றப்பட்டபோது யாருமே அவர்கள் யார் என்று அறிய முற்படவுமில்லை. பின்னூட்டம் இடவுமில்லை. நான் களத்தில் எழுத தொடங்கியதின் பின்னர், இப்படி பல கலைஞர்களை பற்றி குறிப்புகள் இட்டேன். கானப்பிரபா, சின்னக்குட்டி ஆகியோரும் இட்டார்கள். பலபேர் கணக்கில் எடுக்கவில்லை. "கல்யாணத்தேன்னிலா" பாட்டை இணத்துப்பார்த்தேன். ஆயிரக்கணக்கில் வந்தார்கள். பின்னூட்டங்கள் அந்தமாதிரி. பலரின் ரசனை எனக்கு புரிந்தது.

ஒன்லைனில் போடும் அளவிற்கு இன்னும் எங்கள் கலைஞர்கள் வரவில்லைத்தான். ஏன் அவர்களுக்கு ஈ-மெயில், கடிதம் போட்டு அனுப்புங்கள் என்று கேட்டால் என்ன. அனுப்பமாட்டார்களா?

இப்படி உங்களிடமிருந்து வேண்டுகோள் போக அவர்கள் மெய்சிலிர்த்து, சந்தோசப்பட மாட்டார்களா?

வசீகரனுக்கு கடிதம் அல்லது இ-மெயில் போடுங்கள். அதேபோல படலைக்கு படலை கலைஞர்கள் உங்கள் ஆதரவை பெருமிததுடன் ஏற்பார்கள்.

"தாய் பிச்சை எடுக்க பிள்ளை கும்பகோணத்திலை கோதானம் கொடுத்தானாம்" என்ற பழமொழி எங்களுக்கு ஏற்புடையதா?

மறைந்த தவில்மேதை தெட்சணாமூர்த்தி, இணுவில் வீரமணி ஐயா, நடிகமணி வி. வி. வைரமுத்து போன்றவர்கள் எங்கள் மண்ணின் மாணிக்கங்கள்.

தெட்சணமூர்த்தியை பற்றி இந்தியாவில் ஒரு விழாவில் நடராஜன் சொல்வதை கேளுங்கள். ( ஒலி - நாதஸ்வர இசை விழா என்ற குறிப்பில் அழுத்துங்கள்)

http://www.bbc.co.uk/tamil/highlights/stor...adeswaram.shtml

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி! நீங்கள் சொல்வது மிகமிகச் சரி. ஏற்கனவே நான் சமீப காலமாக ஈழத்துப் படைப்புகள்தான் வாங்குவதுன்டு. (ஆன்மீகப் புத்தகங்கள் தவிர). நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்..வணக்கம்..வணக்கம்.

நான் சொல்ல வருவது என்னவென்றால் உங்களுக்கு தெரிந்த தகவல்களை முதலில் இணையுங்கள்..அப்புறமாக அதைப்பற்றி அலசுவோம்...அவர்களை கௌரவிப்பதாகவும் அமையும் அல்லவா? முதலில் தொடங்குங்கோ...மற்றவர்களை குறை சொல்லி நேரத்தை வீணடிக்கக்கூடாதல்லவா?

கலைஞர்களின் தொடர்பு தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் தானே பாராட்ட முடியும். உங்களுக்கு தெரிந்திருந்தால் மறக்காமல் தாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னியின் செல்வனின் தாயக உணர்வுக்கு மிக்க நன்றி. நான் என்றும் சிட்னியில் திரையிடப்படும் எம்மவர்களின் திரைப்படங்களை தவறவிடாமல் திரையரங்கில் சென்று பார்ப்பவன். அத்துடன் என்றும் எம்மவர்களின் தொலைக்காட்சிக்கே முக்கியத்துவம் கொடுப்பவன். எனது வீட்டில் இருப்பது முன்பு சிகரம் தொலைக்காட்சி. தற்பொழுது தரிசனம் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சியை வெறுப்பவன்.

இவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்

அவுஸ்திரெலியா தமிழர் இளையோர் அமைப்பினர் சிட்னியில் வரும் சனிக்கிழமை இணுவில் வீரமணி அய்யரின் பாடல்கள் கொண்ட நிகழ்வினை நடாத்துகிறார்கள். ( http://www.tyoaustralia.org/Images/postercopyspmain.jpg)

சிட்னியில் எமது பாரம்பரக்கலைகளில் ஒன்றான காத்தவராயன் கூத்தினை மேடை ஏற்றிய சம்பவங்களுமுண்டு. அவுஸ்திரெலியா தரிசனம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9மணியில் இருந்து 9.30 வரை புலம் பெயர்ந்த ஈழத்தவர்களின் திரைப்படங்களின் தொடர் காண்பிக்கப்பட்டு வருகிறது. தாயகப்பறவைகள் இதழில் மாதம் ஒரு கலைஞர் பகுதியில் ஒவ்வொரு கலைஞர்கள் பற்றிய தகவல்கள் வருகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை தான் கந்தப்பு. நாங்களும் தரிசனம் தான் வைத்திருக்கிறோம் அவர்களுடைய மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நானும் பார்ப்பேன்.

அவர்களால் தாயகத்திலிருந்து நிகழ்ச்சிகளை எடுத்து போடமுடியாதா.

வீரமணி ஐயரின் குரல் எனக்கும் பிடிக்கும் அவரது ஒலி நாடாக்கள் எங்கே வாங்க முடியும் என்டு யாராவது சொல்ல முடியுமாயின் நல்லது

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் கந்தப்பு. நாங்களும் தரிசனம் தான் வைத்திருக்கிறோம் அவர்களுடைய மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நானும் பார்ப்பேன்.

அவர்களால் தாயகத்திலிருந்து நிகழ்ச்சிகளை எடுத்து போடமுடியாதா.

இப்பொழுது தானே ஆரம்பித்துள்ளார்கள். விரைவில் வழங்குவார்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி.. உங்கள் ஆதங்கம் ஆத்திரம் எல்லாமே சரி.

ஆனால் மக்களின் ரசனை மட்டங்கள் மாறுபடும் கோணத்தை ஈழத்துப் படைப்பாளிகள் கவனிக்கிறார்கள் இல்லையே..??!

தென்னிந்திய படைப்பாளிகள் மக்களின் மாற்றங்களுக்கு ஏற்ப கால ஓட்டத்துக்கேற்ப படைப்புக்களை மக்கள் ரசனைக்கு ஏற்ப மாற்றி அமைத்து வழங்குவதால் அவை மக்கள் அபிமானமாகி பேசப்படுகின்றன.

உ+ம்: விளக்கு என்ற படைப்பை பாருங்கள். அதை நாங்க ரசிக்கலாம்.. நீங்க ரசிக்கலாம். ஓர் தென்னிந்திய ரசிகனிடம் எடுத்துச் சென்றீர்கள் என்றால் என்ன சொல்வான்...

ஆனால் குப்பி என்ற படத்தின் மூலம் ராஜீவ் கொலையை வைத்து அவர்கள் செய்யும் பிரச்சாரம் வியாபாரம்.. மக்களை அவர்கள் இந்தியர்களாக இருக்கட்டும்.. இலங்கையர்களாக இருக்கட்டும்.. சிங்கப்பூரா இருக்கட்டும்.. மலேசியாவாக இருக்கட்டும்.. புலம்பெயர்ந்த தமிழர்களாக இருக்கட்டும்.. எல்லோரையும் ரசிக்க வைக்க என்று படைக்கப்படுகிறதல்லவா.. அதுதான் படைப்பின் வெற்றி.

நாம நமக்கு என்று படைச்சிட்டு இருக்கிறதிலும்.. மக்களின் பல ரசனை மட்டங்களையும் அறிஞ்சு அதற்கேற்ப படைக்கனும்.. அதற்காக தரக்குறைவாகவோ.. இல்ல கீழ்த்தரமாகவோ படைக்கனும் என்றில்லை.

கல்வியை.. சீரிஸாகவும் புகட்டலாம்.. சிம்பிளாகவும் புகட்டலாம். எமது படைப்பாளிகள் சீரியஸா புகட்டனும் என்று நினைக்கினம். அவர்கள் சிம்பிளா புகட்டலாம் என்று நினைக்கினம்.

சீரியஸா போனா.. அது ரசனையின் அளவைக் குறைக்கும்.

இப்ப இங்கையே பாருங்க.. ஆங்கில இசைப்பாடல்களை கேட்டு ஆங்கிலம் வளர்க்கச் சொல்லுறாங்க. தமிழ் பாடல்களைக் கேட்டு தமிழ் வளர்க்க முடியும் என்று நாம் இங்கு சாதிக்க முடியுமா..??! நிச்சயமா முடியாது. ஆங்கிலப் பாடல்களும் மக்களின் ரசனைக்கு ஏற்ப அரைகுறை வார்த்தை விழுங்கிகளாகத்தான் வருகின்றன. தமிழும் அப்படித்தான். தேனிசை செல்லப்பாவின் புரட்சிப்பாடல்கள்.. ஈழத்தை எட்டிய புகழோடு ஒப்பிடும் போது தமிழகத்தில் இல்லை. ஆனால் சினிமாவில் வரும் ஒரு சில புரட்சி சார்ந்த பாடல்கள் ஈழத்தை அடைகின்ற போது அவை அடைகின்ற புகழ் அதிகம். அதேவேளை அவை தமிழகத்திலும் புகழ் பெறுகின்றன.

இந்த வகையில் தான் எமது படைப்பாளிகளும் படைக்க முயலனும். அப்பதான் அவர்களும் கோடிகளைக் காண முடியும்.

ஏன் தென்னிந்திய சீரியல்கள் மக்களை வசீகரிக்கின்றன. காரணம் கதாப்பாத்திரங்களின் நடிப்பு.. இயல்போடு ஒன்றிவிடுவதால். நம்மவர்களின் நாடகங்களைப் பார்த்தாலே தெரிகிறது.. கமராவுக்கு முன்னால நடிக்கிறாங்க என்று. நடிப்பில் இயல்பை வெளிப்படுத்தாத போது அது மக்களை மெய்மறந்து பாத்திரத்தோடு ஒன்றிக்க விடாது.

படைப்புக்கள் மக்கள் ரசனையைப் பெறனும் என்றால் மக்களின் உணர்வோடு படைப்புக்கள் ஒன்றிணையும் இயல்பை வெளிப்படுத்த வேண்டும். இன்று மக்களின் ரசனை அப்படித்தான் உள்ளது. மக்கள் கடினமாக இருந்து யோசிச்சு விளங்கி முடிவெடுக்கிற நிலைல அவங்கள் வாழும் செயற்கைத்தனமான வாழ்வியல் சூழல் விடல்ல. மக்கள் மன ஓய்வு நோக்கி தான் படைப்புக்களை தேடினம். ஒப்பீட்டுக்குத்தான் படைப்புகளைத் தேடினம் அதிகமா...??!

மக்களின் நோக்கங்களை அறியாமல்.. ஏதோ படைப்பு ஒன்றை அளிக்கிறதால எல்லாப் படைப்புக்களும் மக்கள் ரசனைக்கு ஆளானது என்று அர்த்தம் கொள்ள முடியாது. நிச்சயமா மக்கள் மனங்களை வெல்லும் படைப்புக்கள் வேறுபாடுகளுக்கு அப்பால் வெற்றி பெறும். வரவேற்பைப் பெறும்.

உ+ம்: இலங்கை பொப் பாடல்களை இன்று இந்திய திரைகளைக் கூட அடைந்து நிற்கின்றன.

இதை அன்று பொப்பை ஆரம்பித்த சில தமிழர்கள் நினைத்திருக்க முடியுமா..??! இல்லை அல்லவா.

படைப்புக்களை மக்களுக்கு திணிக்க முடியாது. படைப்புக்களின் தன்மையை மக்கள் விரும்பப் படைப்பதே மக்களிடம் வெற்றியை படைப்புக்களுக்கு பெற்றுத் தரும்.

அதேபோல்.. மக்கள் மனங்களை கொள்ளை கொள்ளாத படைப்புக்களால்.. படைப்பாளிகள் தங்கள் பெயர்களை காக்க வைக்க முடியாது. ஈழத்தின் பழைய படைப்பாளிகள்.. இன்றைய ரசனை மட்டத்துக்கு தங்கள் படைப்புக்களைத் தர முன்வராவிடில் அவர்கள் இருந்தும்.. மறக்கப்பட்டவர்களாவார்கள். காரணம்.. இளைய சந்ததிக்கு அவர்களின் அறிமுகம் படைப்பால் கிடைக்காமல் போகும் இடைவெளி காரணமாகக் கூட இருக்கலாம்..!

ஆனால் ஒரு விடயத்தில் உங்களோடு மிக உடன்படுறம்.. அதாவது எமது படைப்பாளிகளின் படைப்புகளுக்கும் நல்ல விளம்பரங்கள் அவசியம். காரணம்.. இப்ப படைப்புலகமும் வியாபாரமாகத்தான் மாறி நிற்குது.. போட்டி போட்டு நிற்குது..! காசேதான் கடவுளப்பா.. என்று சும்மாவா சொன்னாங்க. :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

பொன்னி.. உங்கள் ஆதங்கம் ஆத்திரம் எல்லாமே சரி.

ஆனால் மக்களின் ரசனை மட்டங்கள் மாறுபடும் கோணத்தை ஈழத்துப் படைப்பாளிகள் கவனிக்கிறார்கள் இல்லையே..??!

நெடுக்காலபோவான்.. எந்த விசயத்திலும் தெளிவான உங்கள் அபிப்பிராயத்தை துணிவாக முன்வைப்பவர் என்ற ரீதியில் உங்கள் மீது எனக்கு மிகுந்த மதிப்புண்டு.

தென்னிந்திய படைப்பாளிகள் மக்களின் மாற்றங்களுக்கு ஏற்ப கால ஓட்டத்துக்கேற்ப படைப்புக்களை மக்கள் ரசனைக்கு ஏற்ப மாற்றி அமைத்து வழங்குவதால் அவை மக்கள் அபிமானமாகி பேசப்படுகின்றன

மக்களின் ரசனையை வளர்க்க முற்பாடுவதுதான் ஒரு நல்ல சமூக நோக்குள்ள படைப்பாளியின் அடையாளம். மலையாளத்தின் புகழ் பெற்ற இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் ஒரு கருத்தரங்கில் கொழும்பில் சொன்னார்.

"மக்களின் ரசனை வளர்க்கப்பட வேண்டும். வளர்ந்த ரசனை தரமான படைப்புகளை தானாகவே கோரி நிற்கும்"

ரசனை வளர்க்கப்படாமல் இதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் கொடுக்கிறோம் என்று தென்னிந்திய தமிழ் சினிமாக்காரர்கள் சொல்வதுபோல நாங்களும் செய்ய வேண்டுமா ?

உ+ம்: விளக்கு என்ற படைப்பை பாருங்கள். அதை நாங்க ரசிக்கலாம்.. நீங்க ரசிக்கலாம். ஓர் தென்னிந்திய ரசிகனிடம் எடுத்துச் சென்றீர்கள் என்றால் என்ன சொல்வான்

விளக்கை நாங்கள் ரசிக்கிறோம் என்று ஒத்துக்கொள்கிறீர்கள் அல்லவா? அது போதும். நாங்கள் ஏன் தென்னிந்திய ரசிகர்களைப் பற்றி கவலைப்படுவான். எங்கள் கலைஞர்களின் படைப்புக்களை நீங்கள் ரசியுங்கள் என்பதோடு ஆதரவு தாருங்கள் என்பது தானே என் கோரிக்கை.

ஏன் தென்னிந்திய சீரியல்கள் மக்களை வசீகரிக்கின்றன. காரணம் கதாப்பாத்திரங்களின் நடிப்பு.. இயல்போடு ஒன்றிவிடுவதால். நம்மவர்களின் நாடகங்களைப் பார்த்தாலே தெரிகிறது.. கமராவுக்கு முன்னால நடிக்கிறாங்க என்று. நடிப்பில் இயல்பை வெளிப்படுத்தாத போது அது மக்களை மெய்மறந்து பாத்திரத்தோடு ஒன்றிக்க விடாது

தென்னிந்திய சீரியல்கள் தரமானவை என்று நீங்கள் சொல்லக்கேட்க ஆச்சரியமாக இருக்கிறது. குப்பைகள்.

.ஈழத்தின் பழைய படைப்பாளிகள்.. இன்றைய ரசனை மட்டத்துக்கு தங்கள் படைப்புக்களைத் தர முன்வராவிடில் அவர்கள் இருந்தும்.. மறக்கப்பட்டவர்களாவார்கள். காரணம்.. இளைய சந்ததிக்கு அவர்களின் அறிமுகம் படைப்பால் கிடைக்காமல் போகும் இடைவெளி காரணமாகக் கூட இருக்கலாம்..!

எங்கள் பழைய படைப்பாளிகளை நாங்கள் மறந்து போனால் எங்கள் மண்ணுக்கே நாங்கள் செய்யும் மகா துரோகமாகும். சின்மயி, திப்பு என்று பலர் வந்தபின்னும் சுசீலாவின் பாடல்களை , கண்டசாலாவின் பாடல்களை , திருச்சி லோகநாதனின் பாடல்களை தொகுத்து ஆவணப்படுத்த முயலும் இளைஞர்களும் இருக்கிறார்கள்.

http://www.mayyam.com/hub/viewforum.php?f=31

காசேதான் கடவுளப்பா சரி. கோடிகளை எங்கள் கலைஞர்கள் கண்ணில் காட்ட மாட்டீர்கள் தெரியும். 10 ஈரோக்களை டொலர்களை காட்டுங்கள் போதும்.

ஒன்று கவனித்தீர்களா..எங்கள் களத்தில் எங்கள் கலைஞர்களின் படைப்புகள் எங்கே வாங்கலாம் என்று பலர் கேட்க தொடங்கியது சந்தோசம். தொடரட்டும்.

:rolleyes:

Edited by Ponniyinselvan

  • கருத்துக்கள உறவுகள்

எமது மக்கள் பலர் எம்மில் நம்பிக்கை இல்லாது இருக்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் சன் தொலைக்காட்சி வந்ததும் சிலர் எம்மவர்களின் தொலைக்காட்சிகளுக்கு ஆதரவு தராமல் சன் தொலைக்காக்கு ஆதரவு தந்தார்கள். அவுஸ்திரெலியாவில் சிகரம் தொலைக்காட்சி அந்தக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இத்தொலைக்காட்சியைப் பார்க்காமலே தொலைக்காட்சி சரியில்லை என்று சொன்னார்கள். ஒரு தொலைக்காட்சியினைப் பார்க்காது எவ்வாறு சரியில்லை என்று சொல்ல முடியும்?.

தெனிந்தியாவில் திரைப்படங்கள் வந்து 75 வருடங்களாகி விட்டது. அதனால் அவர்களுக்கு அனுபங்கள் இருப்பதினால் திறம்பட நிகழ்ச்சிகள் செய்கிறார்கள். முழு நேரத்தொழிலாகச் செய்கிறார்கள்.ஆனால் எம்மவர்கள் போராட்ட சூழ்நிலைகள், புலம் பெயர்ந்த நாடுகளில் படிப்புக்கள், வேலைகள் மத்தியில் இருப்பதினால் அவர்களால் உடனே தென்னிந்தியப் படைப்புக்களுக்கு நிகராக படைப்புக்கள் வழங்கமுடியாவிடினும் பிற்காலத்தில் மிகவும் தரமான படைப்புக்களைத் தந்தார்கள். நிகழ்ச்சிகள் நடாத்த பண உதவிகள் தேவை. எம்மவர்களின் தொலைக்காட்சிக்கு ஆதரவு குடுக்காமல் சன் தொலைக்காட்சிக்கு ஆதரவு குடுப்பவர்களே அதிகமாக இருக்கிறார்கள். இதனால் எம்மவர்களின் தொலைக்காட்சிக்கு குறைந்தளவில் தான் பண உதவிகள் கிடைக்கிறது. அதை வைத்து ஒரே நாளில் பெரிதாக வரமுடியாது. அப்படி இருந்தும் புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள எம்மவர்களின் தொலைக்காட்சியின் சாதனைகளைக் குறைத்துச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. படலைக்கு படலை என்ற தொடரைப் பார்த்தவர்கள் இவ்வளவு திறமையா எம்மவர்கள் என்று என் காதுபடப் பேசியதைக் கேட்டு ஆனந்தப்பட்டேன். வைத்திலிங்கம் நிகழ்ச்சி கனடா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. நான் இதனை அவுஸ்திரெலியாவில் இருப்பதினால் என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் இதன் புகழ் அவுஸ்திரெலியாவுக்கு பரவியது என்றால் அத்தொடருக்கு கிடைத்த வெற்றி. ரி.ரி.என் இல்லை என்று கவலைப்பட்டவர்கள் அதிகம். இதிலிருந்து தெரியவில்லையா எம்மவர்களும் திறமையாக படைப்புக்களைப் படைப்பார்கள்.

இதைவிட தாயகத்தில் போராட்ட சூழ்நிலையில் இருந்தும் குறுகிய பணத்தினைக் கொண்டு தரமான படைப்புக்களை படைத்துக் கொண்டு வருகிறார்கள். 'உறங்காத கண்மணிகள்' என்ற படத்தைப் பார்த்து நான் வியந்து பார்த்துப் பெருமைப் பட்டேன். ஆங்கிலப்படங்களுக்கு ஏற்றவாறு இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். கனடா சித்துவின் 'தமிழச்சி' படமும் மிகவும் நன்றாக எடுத்திருக்கிறார்கள். அன்னாட்டு சூழ்நிலையினை மையக் கருத்தை வைத்து படம் எடுத்துள்ளார்கள்.

தேசியத்தலைவர் ஆயூதம் தூக்கிய போது யாராவது இப்படி புலிகள் அமைப்பு பெரிய தரைப்படை, கடல்படை, விமானப்படை என பிற்காலத்தில் வைத்திருக்கும் என நினைத்திருப்பார்களா?. அதுபோல எம்மவர்களின் படைப்புக்களுக்கு ஆதரவு குடுங்கள். எமது தொலைக்காட்சிகளுக்கு ஆதரவு அளியுங்கள். நிச்சயம் தென்னிந்தியப் படைப்புக்களை விட மிகவும் சிறந்த படைப்புக்களை எம்மவர்கள் வழங்குவார்கள்.

அப்பு கலைக்கும், தேசிய போராட்டதிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு கண்டீங்களோ கந்தப்பு,மற்றது பாருங்கோ பொதுவா சொல்லுறன் சிட்னியில் நடக்கிற நடந்த நடக்க போகிற கலைநிகழ்ச்சிகள் எல்லாம் தென்னிந்திய இறக்குமதி தானுங்கோ அதை தானே நாங்க தேனிசை மழை,நகைச்சுவை புயல் என்று வர்ணித்து கொண்டு இருகிறோம்.ஏன் எங்களின்ட கலைஞர்களை கூப்பிட்டு பாடினா நிகழ்ச்சி நடத்தமுடியாதோ,உதுகளுக்கு அதியுயர் டிக்கட் வாங்கி போறது நம்ம சனம் தானே சும்மா எல்லாம் எழுதும் போது நல்லா தான் இருக்கு நடைமுறைபடுத்தும் போது தான் கஷ்டம்,இல்லை என்று நான் பகிஷ்கரித்தாலும் மனிசி கூப்பிட்டவா அதுக்காக போனனான் என்று டூப் விடுறது தானே. :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்.. எந்த விசயத்திலும் தெளிவான உங்கள் அபிப்பிராயத்தை துணிவாக முன்வைப்பவர் என்ற ரீதியில் உங்கள் மீது எனக்கு மிகுந்த மதிப்புண்டு.

தென்னிந்திய படைப்பாளிகள் மக்களின் மாற்றங்களுக்கு ஏற்ப கால ஓட்டத்துக்கேற்ப படைப்புக்களை மக்கள் ரசனைக்கு ஏற்ப மாற்றி அமைத்து வழங்குவதால் அவை மக்கள் அபிமானமாகி பேசப்படுகின்றன

மக்களின் ரசனையை வளர்க்க முற்பாடுவதுதான் ஒரு நல்ல சமூக நோக்குள்ள படைப்பாளியின் அடையாளம். மலையாளத்தின் புகழ் பெற்ற இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் ஒரு கருத்தரங்கில் கொழும்பில் சொன்னார்.

"மக்களின் ரசனை வளர்க்கப்பட வேண்டும். வளர்ந்த ரசனை தரமான படைப்புகளை தானாகவே கோரி நிற்கும்"

ரசனை வளர்க்கப்படாமல் இதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் கொடுக்கிறோம் என்று தென்னிந்திய தமிழ் சினிமாக்காரர்கள் சொல்வதுபோல நாங்களும் செய்ய வேண்டுமா ?

புகலிடத்தில் நாம் மக்களின் ரசனையை எமது படைப்புக்களால் வழி நடத்துவது என்பது இமாலய முயற்சி ஒன்றாக இருக்க வேண்டும். தாயகம் அல்லது தமிழ்நாடு போன்ற சூழலில் அல்ல புகலிட மக்களின் வாழ்க்கை. ஒரு வீட்டுக்குள்ளேயே பல ரசனைகள். மொழி விருப்பங்கள். தாயகத்தில் அப்பா அம்மா பார்கிறதைத்தான் பிள்ளையும் பார்க்கும். புகலிடத்தில் அம்மா வேறு.. அப்பா வேறு.. பிள்ளை வேறு.. என்று அவர்களின் ரசனை மட்டங்கள் மாறிட்டே இருக்குது. காரணம் சூழல் தாக்கம். எமது படைப்புக்கள் வெற்றி பெறனும்.. நிலைத்து நீடிக்கனும் என்றால்.. மக்களின் ரசனையை எமது படைப்புக்கள் நோக்கி கொண்டு வரனும் என்றால்.. நாம் சூழலில் உள்ள மக்கள் ரசனையை வென்ற படைப்புக்கள் பற்றிய மீளாய்வை செய்யவும் எமது படைப்புக்களின் தரத்தை உயர்த்தவும்.. முனையனும்.

படலைக்குப் படலையை ஈழத்தில் இருந்து வந்த ஒரு குறித்த வயதுப் பிரிவினர் ரசிக்கலாம். ஆனால் அப்பா அம்மா ரிரிஎன் பார்க்க மகள் சன்ரிவி பார்க்க.. மகன் ஸ்கையில் நிலைக்க... எமது படைப்புக்கள் எத்தனை சவால்களை சந்திக்க என்று படைக்கப்படனும் என்பதை உணருறீங்க தானே. இதை தாண்டி எமது படைப்புக்கள் மக்கள் ரசனையை தனக்காக உருவாக்கும் நிலையில் படைக்கப்படுமா..??!

நாம் படைப்பைப் பற்றி பேசுவதிலும்.. எமது தேசியத்தை போராட்டத்தை மையப்படுத்தி தான் எமது படைப்புக்களுக்கான விளம்பரங்களைக் கூட செய்து எமது படைப்புக்களுக்கு மக்களின் ஆதரவை தேட செய்ய வேண்டி இருக்கிறது. இது படைப்பின் வெற்றியாக காண முடியுதா..??!

எமது படைப்பாளிகள் தரக்குறைவானவர்கள் என்றில்லை. ஆனால் படைப்பின் தன்மை மக்கள் உள்ள மாறுபடும் சூழலுக்கு ஏற்ப.. மாறனும். இல்ல.. எங்களது ரசனையை தான் ரசிக்கனும் என்றால்.. நினைக்கல்ல.. அது மக்களால் வரவேற்கப்படும் என்று.

உ+ம்: எமது தேசிய விடுதலைப் போராட்டத்தில் புரட்சிக் கானங்களின் பங்களிப்பு அளப்பரியது. ஆரம்பத்தில் தென்னிந்திய சினிமா தந்த புரட்சிக் கானங்களுக்குள் கட்டுண்டு கிடந்த மக்களுக்கு இந்தியப் படையின் வெளியேற்றத்தோடு தென்னிந்திய முன்னணிப் பாடர்களின் குரலில் வெளிவந்த எமக்கான தனித்துவ வரிகளை உள்ளடக்கிய தென்னிந்திய திரை இசை வடிவங்களை சார்ந்த பாடல்கள் பெருமளவில் வெற்றி பெற்றன. இன்றும் மக்களால் ரசிக்கப்படுகின்றன.

இன்று அதே பாணியில் எம்மவர்கள் செய்யும் ஒலிப்பேழைகள் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வெற்றி பெறுகின்றன. இசையமைக்குக் கூட சிற்சில மாற்றங்களைக் கொண்டிருப்பினும் வெற்றியடைகின்றன. இருந்தாலும் அடிப்படையில் மக்கள் மத்தியில் இருந்த தென்னிந்திய திரை இசை என்ற ரசனையை கருத்தில் மையப்படுத்தித்தான் ஈழத்துப் பாடல்கள் பாடப்பட்டன.

எம்மவர் படைப்புக்கள் என்று.. நாம்.. ஏதோ ஒன்றை வழங்க முற்பட்டிருந்தால்.. அது எத்துணை திறமைகளைக் கொண்டிருப்பினும்.. மக்கள் மனங்களை கொள்ளை கொண்டிருக்குமா.. என்பது வினாக்குறி.

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் நாம் மக்களின் ரசனை மட்டங்களை மாற்றனும் எமது படைப்புக்களால் என்பதை ஆதரிக்கிறம். அதற்காக மக்கள் எமது படைப்புக்களையே ஆதரிக்கனும் என்ற நிலையை எதிர்பார்க்க முடியாது. மக்களுக்கு பல தெரிவுள்ள சூழலில்.. நாம் தான் அவர்கள் தேடி வரத்தக்க வகையில் படைக்கனும்.. என்றதை எமது படைப்பாளிகளும் சிந்திக்கனும். எமது படைப்புக்கள் வெறும் படைப்பு என்ற நிலைக்கு அப்பால் பணம் பார்க்கவும் வேணும் என்றால்.. நிச்சயம் படைப்புக்கள் மக்களின் ரசனையையும் சந்திச்சு நிற்கனும். எமது படைப்பை மக்கள் ரசிச்சு அதன் பிறகு ரசனையை மாற்றி எமது படைப்புக்களைத் தேடுவினம் என்று எதிர்பார்த்தால்.. அங்கு பல இடர்நிலைகளை சந்திக்கவும் தயாராக இருக்கனும். அதற்கு மக்கள் மீது சீறிவிழக் கூடாது. பதிலாக படைப்பை மக்கள் ரசனைக்கு உள்ளாக்குவது பற்றி பரிசீலிக்கனுமே தவிர. இது நடைமுறையில் அவ்வளவு இலகு என்று நினைக்கல்ல. காரணம் எமது படைப்பாளிகள்... தரமான படைப்புக்களை தரினும்.. மக்கள் ரசனையான படைப்புக்களை தருவது குறைவு. அதனால் அவர்களின் நிதிநிலை.. மக்கள் ரசனையை மாற்ற போராடும் வலுவில் இருக்கா என்பது கேள்விக் குறி..??!

தென்னிந்திய சினிமாவில் கூட என்ரரெயின்மெண்ட் மட்டுமில்ல.. காத்திரமான கதை.. நகைச்சுவை.. பாடல்கள்.. சண்டை... உடை அலங்காரங்கள்.. வாழ்க்கை நடைமுறை மாற்றங்கள் என்று.. கலவைதான் தரப்படுகிறது. காரணம் மக்களின் பல ரசனை மட்டங்களையும் அவை வசீகரிக்கனும் என்றதுக்காக.

சேரனின், தங்கரின் படங்கள்.. கதையை நம்பி வந்தன. சில வெற்றி பெற்றன. பல..??! சினிமாவில் கூட அந்த நிலை.. அவர்களும் மக்களின் ரசனையை மாற்றத்தான் நினைக்கினம்.. ஆனால் மக்களின் தெரிவு என்பது.. அவர்களின் நினைவுக்கு மாறா இருந்திடுதே. மக்கள் ஒரே ரசனை மட்டத்தில் இல்லை. அவர்கள் வேறு வேறு மட்டங்களில் இருக்கின்றனர்.. என்பதை அறியாமல்.. எம்மால் மக்களின் முன் படைப்புக்களோடு செல்வது பெரிய நெருக்கடியைத்தான் தரும். அதைத்தான் எமது படைப்பாளிகளின் படைப்புக்கள் மக்கள் ரசனையை மாற்றத்துக்காக காத்திருந்து தூசி படியும் நிலையில் இருப்பதைக் கொண்டு சொல்ல முடியும். இதுதான் யதார்த்தம்.

உ+ம்: விளக்கு என்ற படைப்பை பாருங்கள். அதை நாங்க ரசிக்கலாம்.. நீங்க ரசிக்கலாம். ஓர் தென்னிந்திய ரசிகனிடம் எடுத்துச் சென்றீர்கள் என்றால் என்ன சொல்வான்

விளக்கை நாங்கள் ரசிக்கிறோம் என்று ஒத்துக்கொள்கிறீர்கள் அல்லவா? அது போதும். நாங்கள் ஏன் தென்னிந்திய ரசிகர்களைப் பற்றி கவலைப்படுவான். எங்கள் கலைஞர்களின் படைப்புக்களை நீங்கள் ரசியுங்கள் என்பதோடு ஆதரவு தாருங்கள் என்பது தானே என் கோரிக்கை.

விளக்கை நாங்க மட்டும் ரசிட்டு இருக்கிற நிலைல வைச்சிருந்து கொண்டு மக்கள் ரசிக்கினமில்லையே என்று கூறக் கூடாது. எமது கலைஞர்களின் படைப்பு என்று ரசிக்க முயலினமே தவிர.. படைப்பு மக்களின் ரசனையைக் கொள்ளை கொண்டதால் தேடி வந்து ரசிக்கினம் என்றில்லை. அதையும் நாம் கவனிக்கனும். தென்னிந்திய திரைக் கலைஞர்களின் கலைவிழாக்கள் தொடர்பான சீடிக்களைக் கூட தேடி வாங்கும் எம்மவர்கள்.. இப்படியான எம்மவர் படைப்புக்களை.. தேடி வருகிறார்களா..??! நாம் தான் வலிந்து திணிக்க வேண்டி இருக்குது..??! இது படைப்பின் தோல்வியா.. இல்ல மக்களின் ரசனையை மாற்ற முனைந்து தோற்றதன் பிரதிபலிப்பா..??! அப்படின்னா ஏன் எதற்கா எமது படைப்புக்களை மக்கள் தேடினமில்ல..??! அதை நிவர்த்திக்க எமது படைப்புக்களில் என்னத்தை நாம் செய்யனும்.. எமது படைப்புக்கள் சார்ந்து என்ன செய்யனும்.. என்பதை யோசிச்சு.. அமுலாக்கிறமா..??!

யாழ் இணையத்தைத் தவிர வேறு இணையங்களில் கூட இந்த விளக்குக்கு இணைப்பைக் காணேல்ல. எமது படைப்பு அதுவும் தமிழர்களின் தேசிய விடுதலைப் போரின் தேவையை உணர்த்திய சிங்கள பேரினவாதத்தின் பயங்கரவாதத்தை சொல்லும் ஒரு 1 நிமிடப் பதிவுக்கு.. கூட ஏன் எம்மவர்கள்.. தங்கள் இணையங்களில்.. ஒரு விளம்பர ரீதியான.. அறிமுகத்தைக் கூட செய்ய முன்வரல்ல..??! காசு கொடுக்க வேணாமப்பா.. உங்க இணையத்தில ஒரு மூலைல.. போடக் கூடவா முடியல்ல..??! எத்தனையோ புலம்பெயர்ந்த இளசுகள்.. தென்னிந்திய திரைக்கு ரசனையை வளர்த்துள்ளனர்... புகலிடத்தில் பிறந்தவர்கள் கூட... அதற்காகவே இணையங்களை நடத்தினம்.. ஆனால்.. இப்படியான படைப்புக்களை.. ரசிக்கிறத்துக்குக் கூட ஒரு சில பேர்தான் இருக்கினம்.. என்ற நிலையை நாம் பரிசீலிக்கவும்.. அதற்கேற்ப படைப்பின் வெற்றியை தீர்மானிக்க செய்ய தேட வேண்டிய வழிமுறைகள் பற்றியும் சிந்திக்கனும்..! இல்ல இவை எமக்குள்ளையே குறுகிய வட்டத்துக்குள்ள அடங்கி நிற்கும். படைப்பு ஒன்று மக்கள் மனங்களில் வெற்றியடயும் போது படைப்பாளிக்கான ஆதரவு தேடி வரும். எமக்குள்ளேயே எத்தனை பேருக்கு தென்னிந்திய திரையில் உள்ள படைப்பாளிகளைத் தெரியும். ஆனால் அவர்களின் படைப்புக்களின் வெற்றி அவர்களின் பெயரை உச்சரிக்க வைக்கின்றன. அந்த நிலையை.. எட்ட முயலுமே தவிர.. ஆதரவு தாங்க.. என்று இறைஞ்சி.. எமது மக்கள் பரிதாபப்பட்டு.. படைப்பை வாங்கும் நிலை.. ரசிக்கும் நிலை.. படைப்பின் வெற்றியாகுமா..??!

ஏன் தென்னிந்திய சீரியல்கள் மக்களை வசீகரிக்கின்றன. காரணம் கதாப்பாத்திரங்களின் நடிப்பு.. இயல்போடு ஒன்றிவிடுவதால். நம்மவர்களின் நாடகங்களைப் பார்த்தாலே தெரிகிறது.. கமராவுக்கு முன்னால நடிக்கிறாங்க என்று. நடிப்பில் இயல்பை வெளிப்படுத்தாத போது அது மக்களை மெய்மறந்து பாத்திரத்தோடு ஒன்றிக்க விடாது

தென்னிந்திய சீரியல்கள் தரமானவை என்று நீங்கள் சொல்லக்கேட்க ஆச்சரியமாக இருக்கிறது. குப்பைகள்.

தென்னிந்திய சீரியல்கள் கதைகள் சார்ந்து தரமானவை என்று சொல்லேல்ல. மக்களை வசீகரிக்கின்றன என்றதைத்தான் சொல்லி இருக்கிறம். அதற்காக அவர்கள் கையால்வது மக்கள் ஒன்றிக்க கூடிய இயல்பான நடிப்பு என்ற மக்கள் ரசனையை கவர்ந்திழுக்கிற விடயத்தை வைச்சு என்றே நினைக்கிறம்.

அந்தளவில் அவை தரமானவை தானே. படைப்பு ஒன்று சொல்லும் விடயத்துக்கு அப்பால் மக்கள் ரசனையையும் கவரும் வகையில் சொல்லும் என்றால்.. அது வெற்றிக்கான தரத்தை எட்டும்.

.ஈழத்தின் பழைய படைப்பாளிகள்.. இன்றைய ரசனை மட்டத்துக்கு தங்கள் படைப்புக்களைத் தர முன்வராவிடில் அவர்கள் இருந்தும்.. மறக்கப்பட்டவர்களாவார்கள். காரணம்.. இளைய சந்ததிக்கு அவர்களின் அறிமுகம் படைப்பால் கிடைக்காமல் போகும் இடைவெளி காரணமாகக் கூட இருக்கலாம்..!

எங்கள் பழைய படைப்பாளிகளை நாங்கள் மறந்து போனால் எங்கள் மண்ணுக்கே நாங்கள் செய்யும் மகா துரோகமாகும். சின்மயி, திப்பு என்று பலர் வந்தபின்னும் சுசீலாவின் பாடல்களை , கண்டசாலாவின் பாடல்களை , திருச்சி லோகநாதனின் பாடல்களை தொகுத்து ஆவணப்படுத்த முயலும் இளைஞர்களும் இருக்கிறார்கள்.

http://www.mayyam.com/hub/viewforum.php?f=31

இன்றைய இளைஞர்கள் மட்டும் அல்ல.. எப்போதும் இளைஞர்களில் இப்படி புதுமையோடு பழமை விரும்பிகளும் இருந்து கொண்டே உள்ளனர். இது ஒன்றும் ஆச்சரியப்படும் படியா பார்க்க முடியல்ல. ஆனால் இந்த வகை இளைஞர்களின் எண்ணிக்கை குறைவு.. தற்போது இதை ஆச்சரியமாகக் காட்டலாம். ஆனால் இருக்கினம்.

காசேதான் கடவுளப்பா சரி. கோடிகளை எங்கள் கலைஞர்கள் கண்ணில் காட்ட மாட்டீர்கள் தெரியும். 10 ஈரோக்களை டொலர்களை காட்டுங்கள் போதும்.

ஒன்று கவனித்தீர்களா..எங்கள் களத்தில் எங்கள் கலைஞர்களின் படைப்புகள் எங்கே வாங்கலாம் என்று பலர் கேட்க தொடங்கியது சந்தோசம். தொடரட்டும். :D

எங்கள் கலைஞர்களும் அவர்களின் படைப்புக்களும் வரனும் வளரனும்.. போட்டி போட்டு வெல்லனும் என்றதுதான் எங்கள் விருப்பமும்.. ஆனால் எங்கள் மக்களின் ரசனையை மாற்றி தங்கள் படைப்புக்களால் செல்வாக்குச் செய்வர் என்ற கனவு நனவாகும் நிலை அருகில் இல்லை என்பதை நாம் உணர்கிறம். எமது கலைஞர்களின் படைப்புக்கள் இன்னும்..எமது மக்களின் மனதில்... இரண்டாம் நிலையில் தான் உள்ளது. கறிவாங்கினா.. கருவேப்பிலை இலவசம் என்ற நிலையிலதான்..கருவேப்பிலையா இருந்து வாசம் வீச வேண்டும்.. அப்புறம் கறியாக மாற முயற்சிப்போமாக. கருவேப்பிலை இல்லாமல் கறியாக்கும் நிலையை உண்டு பண்ணாத வரைக்கு மக்களுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

புகலிடத்தில் நாம் மக்களின் ரசனையை எமது படைப்புக்களால் வழி நடத்துவது என்பது இமாலய முயற்சி ஒன்றாக இருக்க வேண்டும். எமது படைப்புக்களின் தரத்தை உயர்த்தவும்.. முனையனும்.

இன்று அதே பாணியில் எம்மவர்கள் செய்யும் ஒலிப்பேழைகள் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வெற்றி பெறுகின்றன. இசையமைக்குக் கூட சிற்சில மாற்றங்களைக் கொண்டிருப்பினும் வெற்றியடைகின்றன. இருந்தாலும் அடிப்படையில் மக்கள் மத்தியில் இருந்த தென்னிந்திய திரை இசை என்ற ரசனையை கருத்தில் மையப்படுத்தித்தான் ஈழத்துப் பாடல்கள் பாடப்பட்டன.

எம்மவர் படைப்புக்கள் என்று.. நாம்.. ஏதோ ஒன்றை வழங்க முற்பட்டிருந்தால்.. அது எத்துணை திறமைகளைக் கொண்டிருப்பினும்.. மக்கள் மனங்களை கொள்ளை கொண்டிருக்குமா.. என்பது வினாக்குறி.

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் நாம் மக்களின் ரசனை மட்டங்களை மாற்றனும் எமது படைப்புக்களால் என்பதை ஆதரிக்கிறம். அதற்காக மக்கள் எமது படைப்புக்களையே ஆதரிக்கனும் என்ற நிலையை எதிர்பார்க்க முடியாது. மக்களுக்கு பல தெரிவுள்ள சூழலில்.. நாம் தான் அவர்கள் தேடி வரத்தக்க வகையில் படைக்கனும்.. என்றதை எமது படைப்பாளிகளும் சிந்திக்கனும்.

தென்னிந்திய சினிமாவில் கூட என்ரரெயின்மெண்ட் மட்டுமில்ல.. காத்திரமான கதை.. நகைச்சுவை.. பாடல்கள்.. சண்டை... உடை அலங்காரங்கள்.. வாழ்க்கை நடைமுறை மாற்றங்கள் என்று.. கலவைதான் தரப்படுகிறது. காரணம் மக்களின் பல ரசனை மட்டங்களையும் அவை வசீகரிக்கனும் என்றதுக்காக.

சேரனின், தங்கரின் படங்கள்.. கதையை நம்பி வந்தன. சில வெற்றி பெற்றன. பல..??! சினிமாவில் கூட அந்த நிலை.. அவர்களும் மக்களின் ரசனையை மாற்றத்தான் நினைக்கினம்.. ஆனால் மக்களின் தெரிவு என்பது.. அவர்களின் நினைவுக்கு மாறா இருந்திடுதே. மக்கள் ஒரே ரசனை மட்டத்தில் இல்லை.

தென்னிந்திய திரைக் கலைஞர்களின் கலைவிழாக்கள் தொடர்பான சீடிக்களைக் கூட தேடி வாங்கும் எம்மவர்கள்.. இப்படியான எம்மவர் படைப்புக்களை.. தேடி வருகிறார்களா..??! நாம் தான் வலிந்து திணிக்க வேண்டி இருக்குது..??! இது படைப்பின் தோல்வியா.. இல்ல மக்களின் ரசனையை மாற்ற முனைந்து தோற்றதன் பிரதிபலிப்பா..??! அப்படின்னா ஏன் எதற்கா எமது படைப்புக்களை மக்கள் தேடினமில்ல..??! அதை நிவர்த்திக்க எமது படைப்புக்களில் என்னத்தை நாம் செய்யனும்.. எமது படைப்புக்கள் சார்ந்து என்ன செய்யனும்.. என்பதை யோசிச்சு.. அமுலாக்கிறமா..??!

யாழ் இணையத்தைத் தவிர வேறு இணையங்களில் கூட இந்த விளக்குக்கு இணைப்பைக் காணேல்ல. எமது படைப்பு அதுவும் தமிழர்களின் தேசிய விடுதலைப் போரின் தேவையை உணர்த்திய சிங்கள பேரினவாதத்தின் பயங்கரவாதத்தை சொல்லும் ஒரு 1 நிமிடப் பதிவுக்கு.. கூட ஏன் எம்மவர்கள்.. தங்கள் இணையங்களில்.. ஒரு விளம்பர ரீதியான.. அறிமுகத்தைக் கூட செய்ய முன்வரல்ல..??! காசு கொடுக்க வேணாமப்பா.. உங்க இணையத்தில ஒரு மூலைல.. போடக் கூடவா முடியல்ல..??! எத்தனையோ புலம்பெயர்ந்த இளசுகள்.. தென்னிந்திய திரைக்கு ரசனையை வளர்த்துள்ளனர்... புகலிடத்தில் பிறந்தவர்கள் கூட... அதற்காகவே இணையங்களை நடத்தினம்.. ஆனால்.. இப்படியான படைப்புக்களை.. ரசிக்கிறத்துக்குக் கூட ஒரு சில பேர்தான் இருக்கினம்.. என்ற நிலையை நாம் பரிசீலிக்கவும்.. அதற்கேற்ப படைப்பின் வெற்றியை தீர்மானிக்க செய்ய தேட வேண்டிய வழிமுறைகள் பற்றியும் சிந்திக்கனும்..! இல்ல

எங்கள் கலைஞர்களும் அவர்களின் படைப்புக்களும் வரனும் வளரனும்.. போட்டி போட்டு வெல்லனும் என்றதுதான் எங்கள் விருப்பமும்.. ஆனால் எங்கள் மக்களின் ரசனையை மாற்றி தங்கள் படைப்புக்களால் செல்வாக்குச் செய்வர் என்ற கனவு நனவாகும் நிலை அருகில் இல்லை என்பதை நாம் உணர்கிறம். எமது கலைஞர்களின் படைப்புக்கள் இன்னும்..எமது மக்களின் மனதில்... இரண்டாம் நிலையில் தான் உள்ளது. கறிவாங்கினா.. கருவேப்பிலை இலவசம் என்ற நிலையிலதான்..கருவேப்பிலையா இருந்து வாசம் வீச வேண்டும்.. அப்புறம் கறியாக மாற முயற்சிப்போமாக. கருவேப்பிலை இல்லாமல் கறியாக்கும் நிலையை உண்டு பண்ணாத வரைக்கு மக்களுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்

நெடுக்காலைபோவான். உங்களோடு கருத்துப் பரிமாறிக்கொள்வதற்கு முதல் நன்றி கூறிவிட்டு வருகிறேன்.

கருத்து சொன்ன இன்னிசை, வல்வை மைந்தன், கந்தப்பு, தூயா, சுவி, புத்தன் ஆகியோருக்கு நன்றி.

கந்தப்பு .. நீங்கள் தந்த இளைஞர் அமைப்பின் இணைப்பில் தொடர்பு கொள்ள்முடியவில்லை. எமது படைப்புகளுக்கு ஆதரவு தரவேண்டும் என்ற உங்கள் நிலைப்பாட்டுக்கு மிக்க நன்றி.

இன்னிசை - நீங்கள் சொன்ன வீரமணியின் பாடல்கள் - அய்யப்பன் பாடல்கள் பாடும் இந்தியரான வீரமணியாக இருக்கவேண்டும். நாங்கள் சொல்லும் வீரமணி ஐயர் இணுவிலை சேர்ந்தவர். பாடகர் அல்ல. பாடல்கள் இயற்றுபவர். "கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்' முதலான எத்தைனையோ பாடல்களை இயற்றியவர். அவரைப்பற்றிய விபரங்களை இந்த இணைப்பில் பாருங்கள்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%...%AE%B0%E0%AF%8D

நெடுக்காலபோவான். உங்கள் நீண்ட கருத்தில் மாறுபட்ட இரண்டு தன்மைகள் கொண்டவராக இருக்கிறீர்கள். ஆதரவு தருகிறார்கள் இல்லையே என்று சொல்கிறீர்கள். வளரவேண்டும் வளரவேண்டும் என்று சொல்கிறீர்கள். வளரமுதல் ஆதரவு தந்தால் தானே வளரலாம். மரம் வளர தண்ணிர் வார்க்கவேண்டும். வார்க்காமல் நீ வளரு. வளர்ந்து பழங்களைத் தா. பிறகு தண்ணீர் வார்க்கிறேன் என்று சொன்னல் மரம் முளையிலேயே கருகி விடாதா?

கவிஞர் ஜெயபாலனின் கவிதையில் இப்படி வருகிறது - "பாட்டனார் பண்படுத்தி பழமரங்கள் நாட்டி வைத்த தோப்பை அழியவிட்டு தொலைதூரம் வந்தவன் நான்.. என் பேரனுக்காய் எவன் வைப்பான் பழத்தோட்டம்"

பாட்டன் பழமரங்கள் நாட்டுவது தான் பழங்கள் உண்பதற்காக அல்ல. தன் பேரனுக்காக. நாங்களும் எங்கள் பேரன்களுக்காய் எங்கள் கலை விழுமியங்கள் விட்டுச் செல்வோம்.

எங்கள் படைப்புகள் எல்லாமே தென்னிந்திய படங்கள்,சீரியல்கள், பாடல்கள் போல இருக்கவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது தவறு. எங்களுக்கு என்று தனித்துவம் பேணப்படவேண்டும். எங்களுக்கு என்றுமே அருகில் இருக்கும் எங்கள் மொழி பெசும் படங்களை உற்பத்தி செய்யும் நாடு இருப்பதால் போட்டி இருக்கத்தான் செய்யும். ஹொலிவுட் படங்களால், கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் எடுக்கப்படும் அதே மொழி (ஆங்கில) படங்களுக்கு வீழ்ச்சி இருக்கத்தான் செய்யும். ஹொலிவுட்டின் பிரச்சர வியாபார தந்திரங்களின் முன்னால் இந்த நாடுகளின் படங்களின் வருமானம் பாதிக்கப்படத்தான் செய்யும். அதற்காக கை விட்டு விடுவதா?

எம்மவர் படைப்புக்கள் என்று.. நாம்.. ஏதோ ஒன்றை வழங்க முற்பட்டிருந்தால்.. அது எத்துணை திறமைகளைக் கொண்டிருப்பினும்.. மக்கள் மனங்களை கொள்ளை கொண்டிருக்குமா.. என்பது வினாக்குறி

இதில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். எவ்வளவு திறமை கொண்டிருப்பினும் எங்கள் படைப்புகள் என்ற ஒரே காரணத்துக்காக எங்கள் மக்கள் ஆதரவு தர மாட்டார்கள் என்கிறீர்களா?. எங்கள் மக்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அபிப்பிராயம் இதுதானா?

பழைய படைப்பாளிகளை இளைஞர்கள் தூக்கி எறிந்து விடுவார்கள் என்றீர்கள். அப்படி இல்லை என்று காட்டியவுடன் இருக்கத்தான் செய்வார்கள். அதில் ஆச்சர்யம் இல்லை என்று ஏதோ சொல்கிறீர்கள்.

கருவேப்பிலை இல்லாமல் கறியாக்கும் நிலையை உண்டு பண்ணாத வரைக்கு மக்களுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்

நீங்களே இப்படி அபசகுனமாக சொன்னால் எப்படி.

:D

..

Edited by Ponniyinselvan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான். உங்கள் நீண்ட கருத்தில் மாறுபட்ட இரண்டு தன்மைகள் கொண்டவராக இருக்கிறீர்கள். ஆதரவு தருகிறார்கள் இல்லையே என்று சொல்கிறீர்கள். வளரவேண்டும் வளரவேண்டும் என்று சொல்கிறீர்கள். வளரமுதல் ஆதரவு தந்தால் தானே வளரலாம். மரம் வளர தண்ணிர் வார்க்கவேண்டும். வார்க்காமல் நீ வளரு. வளர்ந்து பழங்களைத் தா. பிறகு தண்ணீர் வார்க்கிறேன் என்று சொன்னல் மரம் முளையிலேயே கருகி விடாதா?

எமது கலைஞர்கள் படைப்புக்களின் மூலம் வளரனும் என்பது எமக்கும் விருப்பம் தான். ஆனால் நிகழ்கால உலகில் நிகழ்வது என்ன..??! எமது கலைஞர்களின் படைப்புக்கள் மக்கள் ரசனைக்கு அப்பால் தான் நிற்கின்றன. ஒரு சில உதாரணங்களை வைத்துக் கொண்டு.. எமது படைப்பாளிகளின் படைப்புக்கள் வெற்றி பெறுகின்றன என்று சொல்ல முடியாது. ஆனால் வெற்றி பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கலாம்.

ஆனால் மக்கள் ரசனைக்கு இடமளித்து படைப்புக்கள் வளராத நிலையில்.. திறமைக்குக் கூட இடமில்லாமல் போகும் வாய்ப்பே உண்டு. எமது கலைஞர்கள் என்று சொல்வோர் கூட தென்னிந்திய திரைகளை நம்பித்தான் மேடை ஏறுகின்றனர். எங்கு மேடை நிகழ்ச்சிகள் நடந்தாலும்.. இறுதியில் இன்னிசைக் கச்சேரி என்று.. சினிமா இல்லாத இடமே இல்லை. அதை தவறாக கொள்ள முடியாது. மக்கள் ரசனை கருதி செய்வதாகத்தான் கொள்ளனும். அது போலவேதான் எமது படைப்புக்களின் தனித்துவம் காக்க வேண்டாம் என்று சொல்லேல்ல.. ஆனால் தனித்துவமென்று மக்கள் ரசனைக்கு அப்பால் படைப்புக்கள் அமைவதால்.. அவை மக்களிடம் தோல்வியடையும் போது மக்களைத் திட்ட முடியாது.

அந்த வகையில் எமது கலைஞர்கள் வளரனும் என்பது சாத்தியப்படனும் என்றால்.. தனித்துவம் என்று கொண்டு மட்டும் நிற்காமல்.. தனித்துவத்தை.. மக்கள் ரசனைக்கு ஏற்ப வடிவமைச்சு வழங்கனும் என்பதுதான் நாம் சொல்ல முனைவது. இதில் எமது படைப்பாளிகள் இன்னும் பலவீனமாவே இருக்கிறார்கள்.

கவிஞர் ஜெயபாலனின் கவிதையில் இப்படி வருகிறது - "பாட்டனார் பண்படுத்தி பழமரங்கள் நாட்டி வைத்த தோப்பை அழியவிட்டு தொலைதூரம் வந்தவன் நான்.. என் பேரனுக்காய் எவன் வைப்பான் பழத்தோட்டம்"

பாட்டன் பழமரங்கள் நாட்டுவது தான் பழங்கள் உண்பதற்காக அல்ல. தன் பேரனுக்காக. நாங்களும் எங்கள் பேரன்களுக்காய் எங்கள் கலை விழுமியங்கள் விட்டுச் செல்வோம்.

எங்கள் படைப்புகள் எல்லாமே தென்னிந்திய படங்கள்,சீரியல்கள், பாடல்கள் போல இருக்கவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது தவறு. எங்களுக்கு என்று தனித்துவம் பேணப்படவேண்டும். எங்களுக்கு என்றுமே அருகில் இருக்கும் எங்கள் மொழி பெசும் படங்களை உற்பத்தி செய்யும் நாடு இருப்பதால் போட்டி இருக்கத்தான் செய்யும். ஹொலிவுட் படங்களால், கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் எடுக்கப்படும் அதே மொழி (ஆங்கில) படங்களுக்கு வீழ்ச்சி இருக்கத்தான் செய்யும். ஹொலிவுட்டின் பிரச்சர வியாபார தந்திரங்களின் முன்னால் இந்த நாடுகளின் படங்களின் வருமானம் பாதிக்கப்படத்தான் செய்யும். அதற்காக கை விட்டு விடுவதா?

போட்டிச் சூழலை எதிர்க்கொள்ளக் கூடிய வகையில் படைப்புக்களுக்கு திறன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது உங்கள் கருத்தும். மக்களின் ரசனை மட்டங்களை மற்றவர்களின் படைப்புக்கள் ஆக்கிரமிக்கின்ற போது.. ரசனைக்கு அப்பால் அமைந்த திறமையான படைப்புக்கள் கூட தோல்வியடையலாம்.

உ+ம்: படைக்கும் போது திறமையானது என எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் தோல்வி கட்டமையைச் சொல்லலாம்.

எமது கலைஞர்கள் தோல்வியால் துவண்டு விடுவதால் தான் விரக்தியில்.. மக்களை நோக்கிப் பாய்கின்றனர். அதற்குப் பதிலாக தங்கள் படைப்புக்கள் மேலாண்மை பெறத்தக்கதாக படைக்க முனைய வேண்டும்.. என்பதே எமது கருத்து. அதற்காக தனித்துவத்தை முற்றாக தொலைக்கச் சொல்லேல்ல..!

எம்மவர் படைப்புக்கள் என்று.. நாம்.. ஏதோ ஒன்றை வழங்க முற்பட்டிருந்தால்.. அது எத்துணை திறமைகளைக் கொண்டிருப்பினும்.. மக்கள் மனங்களை கொள்ளை கொண்டிருக்குமா.. என்பது வினாக்குறி

இதில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். எவ்வளவு திறமை கொண்டிருப்பினும் எங்கள் படைப்புகள் என்ற ஒரே காரணத்துக்காக எங்கள் மக்கள் ஆதரவு தர மாட்டார்கள் என்கிறீர்களா?. எங்கள் மக்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அபிப்பிராயம் இதுதானா?

திறமை இருப்பினும் மக்களின் ரசனைக்கு இடமளிக்காத படைப்புக்கள் மக்களைச் சென்றடையாது.. என்பதைச் சொல்கிறம். அப்புறம் படைப்புக்கள் தோல்வியடைய மக்களைத் திட்டிப் பயனில்லை. இதைப் படைப்பாளிகள் கவனிக்கனும்.. அதற்கேற்ப செயற்படனும் என்றுதான் சொல்கின்றம்.

பழைய படைப்பாளிகளை இளைஞர்கள் தூக்கி எறிந்து விடுவார்கள் என்றீர்கள். அப்படி இல்லை என்று காட்டியவுடன் இருக்கத்தான் செய்வார்கள். அதில் ஆச்சர்யம் இல்லை என்று ஏதோ சொல்கிறீர்கள்.

பழைய படைப்புக்களை விரும்பும் இளைஞர்கள் சொற்பம். அதிலும் பழைய கலைஞர்களை மதிப்பவர்கள்.. அறிந்தவர்கள்.. இன்னும் சொற்பம். ஓரிரண்டு பேரை வைச்சு சமூகத்தை எடை போட முடியுமா..??!

அப்படின்னா தலைவர் பிரபாகரன் தமிழர் என்பதற்காக தமிழர்கள் எல்லாம் வீரர்கள் என்று அர்த்தம் கொள்ள முடியுமா..??! 70% தமிழர்கள் கோழைகள்..!

கருவேப்பிலை இல்லாமல் கறியாக்கும் நிலையை உண்டு பண்ணாத வரைக்கு மக்களுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்

நீங்களே இப்படி அபசகுனமாக சொன்னால் எப்படி .

எமது மக்கள் எம்மவர்களின் படைப்புக்களை கருவேப்பிலை நிலையில் தான் வைச்சிருக்கினம் என்பதை நாம் சரியா மதிப்பிட்டனும். இல்ல பாதிக்கப்படப் போவது.. படைப்பாளிகளே தவிர மக்கள் அல்ல. மக்களுக்கு பல தெரிவுகள் உண்டு. ஆனால் படைப்பாளிக்கு...??! படைப்பாளி தன்ர படைப்பை மக்கள் ரசனைக்கு ஏற்ப தயாரிக்க.. மக்களின் மனவோட்டம் பற்றிய சரியான மதிப்பீடு அவசியம். அப்படியில்லாத எம்மவர் படைப்புக்கள் பல ஏட்டுச் சுரக்காய்களாகவே உள்ளன.

உ+ம்: அண்மையில் ஈழத்துக் கவிதைத் தொகுப்பு ஒன்றை பார்த்தம். அந்த நூல் இந்திய தரத்துக்கு வடிவமைக்கப்பட்டிருந்தது. விற்பனைக்கு வைத்த இடத்தில் அப்புத்தகம் அப்படியே இருக்குது.

கடை உரிமையாளரிடம் கேட்ட போது ஏங்க.. தம்பி எங்கட சனங்கள் கண்ணதாசன்.. வைரமுத்து.. மேத்தா..பா விஜய்.. அப்துள் ரகுமான் என்றெல்லோ.. நிற்குது.. எமது கலைஞர்களின் உணர்வுக் கவிதைகள் திறமையா இருந்தும்.. வாங்கினமில்லையே என்று வருந்திக் கொண்டார். அந்த நூலில்.. காசியானந்தன்.. புதுவை.. மற்றும் பல போராளிக் கவிஞர்கள் என்று பலரும் உள்ளடக்கப்பட்டிருந்தனர். துணிச்சலாக கொழும்பில் இருந்து கொண்டு.. பூபாலசிங்கம் புத்தக நிறுவனம் அதை வெளியிட்டிருந்தது. அந்த நிறுவனம் கூட பல தடவைகள் சிங்களப் படையினரால் தீக்கிரையாக்கப்பட்டது. யாழ் நகரில் இருந்த போது. அப்படி இருந்தும் துணிச்சலாக செய்துள்ளனர். ஆனால்.. எம்மவர்கள் எத்தனை பேரிடம் அந்த நூல் இருக்கிறது..??!

பொன்னி உங்களிடம் இருக்கா..??!

இங்கு திறமை.. தரம் வெளிப்பட்டும்.. ஏன் நூல் விற்பனையில்ல. மக்களின் ரசனை என்பதை நூல் கவனத்தில் எடுக்காததா இருக்கலாம். ஆனால் மக்கள் ஈழத்துக் கவிஞர்களுக்கு மதிப்பளிக்கல்ல என்று சொல்ல முடியாது. மதிப்பளிக்கினம்.. ஆனால் படைப்பு என்று வரும் போது.. தங்கள் ரசனைக்குத்தான் முதன்மை அளிக்கின்றனர். மக்களின் ரசனை எடுபட விளம்பரமும் முக்கியம்.. திறமைக்கு முன்.

எம்மவர் படைப்புக்களுக்கு விளம்பரம் கூட அரிது. அதுவும் பின்னடைவுகளுக்குக் காரணம். எம்மவர்களே எம் படைப்புக்களை கவனத்தில் கொள்வதில்லை. வைரமுத்துவின் கவிதை வீட்டில இருக்கனும் என்று கேட்டு வாங்கும் நம்மவர்.. புதுவையின்.. அக்கினிக்குச்சு கவிதைத் தொகுப்பை கண்டும் காணாமல் போகின்ற நிலைக்கு காரணம்.. என்ன..! அதைக் கண்டறிஞ்சு தீர்கனுமே தவிர.. மக்களை திட்டிப் பிரயோசனம் இல்லை..! :P :D

அறியாமையும் பேதமையும் கொண்ட மக்கள் இவர்களால் சுய அபிமானம் இழந்து நிற்கிறார்கள். அவர்களின் அறிவும் மனம் ரசனையும் ஒழுக்கமும் சிதைந்து போவதற்க்கு நமது சினிமாக்களும் அது சம்பந்தப்பட்ட நடிக,டைரக்டர்,தயாரிப்பாளர்கள

  • தொடங்கியவர்

.

படைக்கும் போது திறமையானது என எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் தோல்வி கட்டமையைச் சொல்லலாம்.

இங்கு திறமை.. தரம் வெளிப்பட்டும்.. ஏன் நூல் விற்பனையில்ல. மக்களின் ரசனை என்பதை நூல் கவனத்தில் எடுக்காததா இருக்கலாம். ஆனால் மக்கள் ஈழத்துக் கவிஞர்களுக்கு மதிப்பளிக்கல்ல என்று சொல்ல முடியாது. மதிப்பளிக்கினம்.. ஆனால் படைப்பு என்று வரும் போது.. தங்கள் ரசனைக்குத்தான் முதன்மை அளிக்கின்றனர். மக்களின் ரசனை எடுபட விளம்பரமும் முக்கியம்.. திறமைக்கு முன்.

எம்மவர் படைப்புக்களுக்கு விளம்பரம் கூட அரிது. அதுவும் பின்னடைவுகளுக்குக் காரணம். எம்மவர்களே எம் படைப்புக்களை கவனத்தில் கொள்வதில்லை. வைரமுத்துவின் கவிதை வீட்டில இருக்கனும் என்று கேட்டு வாங்கும் நம்மவர்.. புதுவையின்.. அக்கினிக்குச்சு கவிதைத் தொகுப்பை கண்டும் காணாமல் போகின்ற நிலைக்கு காரணம்.. என்ன..! அதைக் கண்டறிஞ்சு தீர்க்கணுமே தவிர.. மக்களை திட்டிப் பிரயோசனம் இல்லை..! :

வணக்கம்-

திறமையான படங்கள் ஏன் தோல்வி அடைகின்றன? மக்களின் ரசனையை அந்தளவு அதலபாதாளத்திற்கு கொண்டு போயிருக்கிறார்கள்..தென் இந்திய சினிமா வியாபாரிகள். அதையே நம்மவர்களும் செய்ய வேண்டாம் என்றுதான் கேட்கிறேன்.

எங்கள் இலக்கு உயர்ந்ததாக இருக்கட்டும். அடைய காலம் எடுக்கலாம். அதற்காக முயற்சிக்காமல் விட முடியாது.

எம் மக்கள் எம் கவிஞர்களை மதிப்பளிக்கிறார்கள். ஆனால் அவர்கள் படைப்புக்களை வாங்க மாட்டார்கள். என்னே முரண்பாடு.

மக்களை திட்டுகிறோம்..மக்கள் மேல் பாய்கிறோம் என்கிறீர்களே. தவறு, பிழை என்று சொன்னால் பாய்வதாகி விடுமா?

பின்னடைவுகளுக்குக் காரணம். எம்மவர்களே எம் படைப்புக்களை கவனத்தில் கொள்வதில்லை

நீங்களும் அதைத்தானே செய்கிறீர்கள்.

:mellow:

Edited by Ponniyinselvan

  • தொடங்கியவர்

அறியாமையும் பேதமையும் கொண்ட மக்கள் இவர்களால் சுய அபிமானம் இழந்து நிற்கிறார்கள். அவர்களின் அறிவும் மனம் ரசனையும் ஒழுக்கமும் சிதைந்து போவதற்க்கு நமது சினிமாக்களும் அது சம்பந்தப்பட்ட நடிக,டைரக்டர்,தயாரிப்பாளர்கள

��ம் பெரும் பொறுப்பு வகிக்கிறார்கள். சொல்லப்போனால் அவர்கள் கூட அவர்கள் வகிக்கிற அந்த பொறுப்புக்கு காரணமாக மாட்டார்கள். அவர்களும் அதற்கு பலியாகி விட்டவர்கள் தான்.

புராணம் தமிழ் மொழி,கற்பு, பெண்மை கடமை, தியாகம் தர்க்கம், கலை போன்ற ஆர்பாட்டமான பெரிய வார்த்தைகளை லாப வேட்டை கருதி பொய்யா பிதற்றி கொண்டிருக்கின்ற கேவலத்திலையே அவர்கள் மேலும் அமிழ்ந்து போகிறார்கள் ஆனால் இவற்றின் ஊடாகவும் அடிப்படையாகவும் அவர்கள் தீர்த்து கொள்கிற ஒரு கேவலமான இச்சைகளேயாகும்.

இந்த கேவலமான சினிமாத்தனம் பத்திரிகைகளையும் எழுத்தாளர்களின் படைப்புகளையும், படித்த நகரமக்களையும் சமுகத்தின் மேல் தர மக்களையும் முற்றாக பிடித்திருக்கிறது.

ஜெயகாந்தன் சினிமாவுக்கு போன சித்தாளு நாவலுக்கு எழுதிய முன்னுரையின் ஒரு பகுதிங்க.. மேல

நன்றி மதராசி.. பொருத்தமான கருத்தை பொருத்தமான நேரத்தில் இணைத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

:mellow:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்-

திறமையான படங்கள் ஏன் தோல்வி அடைகின்றன? மக்களின் ரசனையை அந்தளவு அதலபாதாளத்திற்கு கொண்டு போயிருக்கிறார்கள்..தென் இந்திய சினிமா வியாபாரிகள். அதையே நம்மவர்களும் செய்ய வேண்டாம் என்றுதான் கேட்கிறேன்.

எங்கள் இலக்கு உயர்ந்ததாக இருக்கட்டும். அடைய காலம் எடுக்கலாம். அதற்காக முயற்சிக்காமல் விட முடியாது.

எம் மக்கள் எம் கவிஞர்களை மதிப்பளிக்கிறார்கள். ஆனால் அவர்கள் படைப்புக்களை வாங்க மாட்டார்கள். என்னே முரண்பாடு.

மக்களை திட்டுகிறோம்..மக்கள் மேல் பாய்கிறோம் என்கிறீர்களே. தவறு, பிழை என்று சொன்னால் பாய்வதாகி விடுமா?

பின்னடைவுகளுக்குக் காரணம். எம்மவர்களே எம் படைப்புக்களை கவனத்தில் கொள்வதில்லை

நீங்களும் அதைத்தானே செய்கிறீர்கள்.

:D

சினிமாக்காரங்க மக்களின் ரசனையைத் தீர்மானிக்கிறாங்க என்பதை 100% ஏற்க முடியாது. சினிமாவை கூட மக்களின் ரசனை தான் மாற்றி அமைக்கிறது சில சமயங்களில்.

சினிமா 100% தப்பாகத்தான் ரசனையைப் படைக்குதும் என்றில்லை. ஆனால் மக்கள் விரும்பக் கூடிய விதத்தில் படைக்குது என்பதை ஏற்கத்தான் வேண்டும்.

இலங்கை சினிமாத்துறையில் சிங்களவர்களின் ஆதிக்கம் போல ஏன் ஈழத்தமிழர்களால் படைக்க முடியல்ல..??!

நாம தனித்துவம் காக்கிறம் என்ற பெயரில.. மக்கள் ரசனையற்ற படைப்புக்களை வழங்க முயற்சிப்பதிலும்.. எமது தனித்துவம் பிரபல்யம் அடையனுமன்னா.. மக்கள் ரசனையை இழுக்க வேணும். அதற்காக கீழ்த்தரமான சினிமாக்கள் வழியில் சென்று மக்களின் கீழ்த்தர ரசனைக்கு தீனி போடச்சொல்லேல்ல. நீங்க சில இடங்களில் எம்மை தவறா விளங்கிக் கொள்றீங்க. :P :mellow:

சினிமாக்காரங்க மக்களின் ரசனையைத் தீர்மானிக்கிறாங்க என்பதை 100% ஏற்க முடியாது. சினிமாவை கூட மக்களின் ரசனை தான் மாற்றி அமைக்கிறது சில சமயங்களில்

இப்படித்தான் நீண்ட நாட்களாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள

Edited by Ponniyinselvan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.