Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருவள்ளுவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. (மழை பெய்யாமல் பொய் படுமானால் கடல் சூழ அகன்ற உலகமாக இருந்தும் உள்ளே பசி நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.)

திருவள்ளுவர்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய து¡உம் மழை. (உண்பவர்க்கு தக்க உணவுப் பொருட்களை விளைத்துத் தருவதோடு பருகுவார்க்கு தானும் ஒர் உணவாக இருப்பது மழையாகும்.)

திருவள்ளுவர்

வான்சிறப்பு வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. (மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால் மழையானது உலகத்து வாழும் உயிரிகளுக்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும்.)

திருவள்ளுவர்

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினு¡உங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. (அறம் சிறப்பையும் அளிக்கும் செல்வத்தையும் அளிக்கும். ஆகையால், உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?)

திருவள்ளுவர்

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். (எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.)

திருவள்ளுவர்

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. (நல்ல பண்புகளாகிய மலையின் மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே ஆயினும் சினங்கொண்டு காத்தல் அரிதாகும்.)

திருவள்ளுவர்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். (பயனிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விலகும் அவர்களுடைய மறைமொழிகளை காட்டிவிடும்.)

திருவள்ளுவர்

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு. (சுவை ஒளி ஊறு ஒசை நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தன் வகைகளையும் ஆராய்ந்து அறிபவனுடைய அறிவு உள்ளது உலகம்.)

திருவள்ளுவர்

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். (செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.)

திருவள்ளுவர்

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. (ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.)

திருவள்ளுவர்

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்!

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான் ஒவ்வொரு குறளுக்குக் கீழேயும் திருவள்ளுவர் என்று போடாமல் எல்லாத்துக்கும் பொதுவாய்க் கடைசியில் போட்டிருக்கலாம். நல்லது நன்றிகள்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய து¡உம் மழை.

உண்பவர்க்கு தக்க உணவுப் பொருட்களை விளைத்துத் தருவதோடு பருகுவார்க்கு தானும் ஒர் உணவாக இருப்பது மழையாகும்.

வான்சிறப்பு வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால் மழையானது உலகத்து வாழும் உயிரிகளுக்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும்.

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினு¡உங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு.

அறம் சிறப்பையும் அளிக்கும் செல்வத்தையும் அளிக்கும். ஆகையால், உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்.

எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது.

நல்ல பண்புகளாகிய மலையின் மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே ஆயினும் சினங்கொண்டு காத்தல் அரிதாகும்.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.

பயனிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விலகும் அவர்களுடைய மறைமொழிகளை காட்டிவிடும்.

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு.

சுவை ஒளி ஊறு ஒசை நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தன் வகைகளையும் ஆராய்ந்து அறிபவனுடைய அறிவு உள்ளது உலகம்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்.

செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி.

ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

அறிவு எனும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காட்ட வல்லவன், மேலான வீட்டிற்கு விதைப் போன்றவன்.

திருவள்ளுவர்

நல்ல முயற்சி

நுனாவிலானுக்கு வாழ்த்துக்கள்.

ஒரு சின்ன சந்தேகம்.....

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்.

செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

சொல்லி செய்வோர் சிறியோர்

சொல்லாமல் செய்வோர் பெரியோர்

சொல்லியும் செய்யாதோர் _________?

இதற்கு ஏதாவது குறள் இருக்கிறதா?

நண்பர்களே!!

நல்ல முயற்சி. தமிழ்நூல் திருக்குறளுக்கு அழகும் கம்பீரமும் தருவது அதன் நுண்ணிய கருத்தும் "ஈரடியும்".

திருக்குறளை எழுதும்போது அதன் இருசீரடிகளை ஒன்றிணைக்காமல் பிரித்து எழுதுவதே முறை.

வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி,மருமகன்,ஈழத்திருமகன். மருமகன் நீங்கள் சொல்லும் கருத்துக்கு குறள் உண்டா என தேடிப்பார்க்கிறேன்.ஈழத்திரு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செயற்கரிய செய்வார் பெரியர்

சிறியர் செயற்கரிய செய்கலா தார்.

செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்

கோமான் இந்திரனே சாலுங் கரி.

ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும்

காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

அறிவு எனும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காட்ட வல்லவன், மேலான வீட்டிற்கு விதைப் போன்றவன்.

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம்

பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு.

பிறப்பு வீடு என்பன போல இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

துறந்தார் பெருமை துணைக்கூறின்

வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டற்று.

பற்றுதலை துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல் உலகத்தில் இதுவரையில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றது.

ஒழுக்கத்து நீத்தார் பெருமை

விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு.

ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்றுவிட்டவர்களின் பெருமையை சிறந்ததாக போற்றிக் கூறுவதே நூல்களின் துணிவாகும்.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு.

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால் மழையில்லையானால் ஒழுக்கமும் நிலைப் பெறாமல் போகும்.

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்

உலகம் வானம் வழங்கா தெனின்.

மழை பெய்யவில்லையானால் இந்தப் பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

மழைப் பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடக்கும் திருவிழாவும் நடைபெறாது. நாள் வழிபாடும் நடைபெறாது.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும்

தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்.

மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலே பெய்யாமல் விடும்மானால் பெரிய கடலும் தன் வளம் குன்றி போகும்.

திருவள்ளுவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

பற்றுதலை துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல் உலகத்தில் இதுவரையில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றது.

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு.

ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்றுவிட்டவர்களின் பெருமையை சிறந்ததாக போற்றிக் கூறுவதே நூல்களின் துணிவாகும்.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு.

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால் மழையில்லையானால் ஒழுக்கமும் நிலைப் பெறாமல் போகும்.

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்

உலகம் வானம் வழங்கா தெனின்.

மழை பெய்யவில்லையானால் இந்தப் பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

மழைப் பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடக்கும் திருவிழாவும் நடைபெறாது. நாள் வழிபாடும் நடைபெறாது.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும்

தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்.

மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலே பெய்யாமல் விடும்மானால் பெரிய கடலும் தன் வளம் குன்றி போகும்.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது.

வானத்திலிருந்து மழைத்துளி விழுந்தால் அல்லாமல் உலகத்தில் ஒரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

கெடுப்பதும் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதும் எல்லாம் மழை.

பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை. மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கு துணையாய் அவ்வாறே காக்கவல்லதும் மழையாகும்.

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்.

மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால் உணவுப் பொருட்களை உண்டாக்கும் உழவரும் ஏர் கொண்டு ஊழ மாட்டார்.

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி.

மழை பெய்யாமல் பொய் படுமானால் கடல் சூழ அகன்ற உலகமாக இருந்தும் உள்ளே பசி நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

திருவள்ளுவர்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்

நீந்தார் இறைவன் அடிசேரா தார்.

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவி ஆகிய பெரிய கடலை கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

கோளில் பொறியின் குணமிலவே

எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.

கேட்காத செவி பார்க்காத கண் முதலியன போல, எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்

கல்லால் பிறவாழி நீந்தல் அரிது.

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவருக்கு அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமும் ஆகிய மற்ற கடல்களை கடக்க முடியாது

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்

கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவருக்கு அல்லாமல் மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்

ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்.

ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர் நிலைப் பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

கடவுளின் உண்மை புகழை விரும்பி அன்பு செலுத்துகிறவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

வேண்டுதல் வேண்டாமை இலானடி

சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவருக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.

அன்பரின் அகமாகிய மலரின் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வர்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால் அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயனென்ன

அகர முதல எழுத்தெல்லாம்

ஆதி பகவன் முதற்றே உலகு.

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டு இருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டு இருக்கின்றன.

திருவள்ளுவர்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மோப்பக் குழையும் அனிச்சம்

முகந்தி¡¢ந்து நோக்கக் குழையும் விருந்து.

அனிச்சம் பூ மோந்தவுடன் வாடிவிடும் : அதுபோல் முகம் மலராமல் வேருபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடிநிற்பர்.

உடைமையுள் இன்மை விருந்தோம்பல்

ஓம்பா மடமை மடவார்கண் உண்டு.

செல்வ நிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்பலை போற்றாத அறியாமையாகும். அஃகு அறிவிலிகளிடம் உள்ளதாகும்.

பாந்தோம்பிப் பற்றற்றேம் என்பர்

விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்.

விருந்தினரைவோம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக் காத்து பின்பு இழந்து பற்றுக்கோடு இழந்தோமே என்று இறங்குவர்.

இனைத்துணைத் தென்பதொன் றில்லை

விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்.

விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இவ்வளவோ என்று அளவுபடுத்திக் கூறத்தக்கது அன்று. விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு.

வந்த விருந்தினரை போற்றி இனி வரும் விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன், வான் உலகில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினராவான்.

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ

விருந்தோம்பி மிச்சல் மிசைவான் புலம்.

விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து விஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று.

தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள்தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை துன்பத்தால் வருந்தி கெட்டுப்போவதில்லை.

விருந்து புறத்ததாத் தானுண்டல்

சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும், அது விரும்பத் தக்கது அன்று.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம்

விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.

வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்

உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும். ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

முன் உதவி செய்தவர் பின்பு கொன்றாற்போன்ற துன்பதைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.

ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறன் அன்று, அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்துவிடுவது அறம் ஆகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்பேசும் மக்களின் பொது மறையான திருக்குறள் தொடர்பான இணைப்பு யாழில் இடம் பெற்றது மகிழ்வூட்டுகிறது. குறள்கள் அனைத்தையும் இணையத்தில் இலகுவாகப் பார்க்க முடியும் :

http://kural.muthu.org/

ஒலிவடிவத்திலும் கேட்கக்கூடியதாக வெளிவந்துள்ளன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலையில் ஒலிவடிவில் குறள் கேட்க இனிமையாக இருக்கும் :

http://karty2k.free.fr/Valluvar1.mp3

http://karty2k.free.fr/Valluvar2.mp3

யாழ்கள ஆர்வலர்களுக்காக இந்த இணைப்பை நன்றியுடன் இணைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல முயற்சி நுihவிலான். பல விடயங்களையும் நுனாவி , நுனாவிப் போடுகிறீர். :):)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி suvy.

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.