Jump to content

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகினர்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அமெரிக்கா: தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் பரிதாப பலி

அமெரிக்கா: தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் பரிதாப பலி

உவால்டே, 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகி உள்ளனர். சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள பள்ளியில் 14 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியரை கொடூரமாக, புரியாத வகையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில கவர்னர் தெரிவித்துள்ளார். 

மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 18 வயதுடைய நபர் என்றும், அவன் 14 மாணவர்களையும் 1 ஆசிரியரையும் சுட்டுக் கொன்றார் என்றும் அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த குழந்தைகள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களைத் தவிர எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது உடனடியாகத் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெக்சாஸ் தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் பலியாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

https://www.dailythanthi.com/News/World/texas-governor-15-killed-in-school-shooting-gunman-dead-707491

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னதொரு உலகம்? எல்லோர் கையிலும் உயிராபத்து ஆயுதங்கள் கிடைக்கும் என்றால் யார் தான் நிம்மதியாக வாழமுடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

18+Teacher+Grandma+Gunman

Freedom and democracy=America ? 

😭

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தன்வினை தன்னை சுடும்?

ஆழ்ந்த இரங்கல்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆரம்பப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு :14 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் உயிரிழப்பு

ஆரம்பப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு :14 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதுடைய ஒருவரால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என்று அம்மாநில ஆளுநர் கிரெக் அபோட் தெரிவித்துள்ளார்.

13 குழந்தைகள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இருப்பினும் செல்லும் வழியிலேயே 2 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

பல தசாப்தங்களாக அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன.

குறிப்பாக 2020 ஆம் ஆண்டில் 19,350 பேர் உயிரிழந்துள்ளதோடு இந்த ஆண்டு இதுவரை 212 பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

https://athavannews.com/2022/1283677

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்கக பாடசாலையில் துப்பாக்கிச் சூடு : 18 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேர் பலி

US school shooting: 18 children killed in attack, suspect identified |  Stuff.co.nz

அமெரிக்ககாவில் ஆரம்பப் பாடசாலையொன்றில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 18 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

School shooting in Texas leaves 18 dead children and 3 adults, per reports  | Marca

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில், மெக்ஸிக்கோ எல்லை அருகேயுள்ள உவால்டே நகரிலுள்ள ரொப் ஆரம்பப் பாடசாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவர்கள்  7 முதல் 10 வயதுக்குட்பட்டவர்கள் அவர்.

18 வயதான இளைஞன் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய சந்தேக நபர் 18 வயதான சல்வடோர் ரமோஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெக்ஸாஸ் ஆளுநர் கிறேக் அபோட் தெரிவித்துள்ளார்.

தாக்குதலாளியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவர் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

 

https://www.virakesari.lk/article/128135

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டெக்சாஸ் துப்பாக்கி சூடு: 19 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

25 மே 2022, 03:16 GMT
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

டெக்சாஸ் துப்பாக்கி சூடு

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

டெக்சாஸ் துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 19க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நடந்தது என்ன?

என்ன நடந்தது

அமெரிக்காவில், தெற்கு டெக்சாஸின் யுவால்டே நகரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில், 18 வயது துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். பின் இவர், காவல்துறையால் கொல்லப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேகநபர் கைத்துப்பாக்கி ஒன்றையும் AR-15 ரக துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்ததாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டின் தொடக்கத்தில் வாலிபர் தனது பாட்டியை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அவர் அப்பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவராக இருக்கலாம் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை 11:32 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு தொடங்கியது, மேலும் தாக்குதல் நடத்தியவர் "இந்த சம்பவதின் போது தனியாகச் செயல்பட்டார்" என்றும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

 

இதுவரை 19க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

 

டெக்சாஸ் துப்பாக்கி சூடு:

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

டெக்சாஸ் துப்பாக்கி சூடு

இந்த சம்பவத்தில், 19 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொல்லப்பட்ட ஆசிரியையின் பெயர் ஈவா மிரெலெஸ் என்று அமெரிக்க ஊடகங்களில் தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு கல்லூரியில் ஒரு மகள் இருப்பதாகவும், ஓட்டம் மற்றும் நடைபயணத்தை அவர் விரும்புவதாகவும் கல்வி மாவட்ட இணையதளம் தெரிவிக்கிறது.

அதேசமயம், உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது என காவல்துறையைக் குறிப்பிட்டு அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்த சம்பவம் நடைபெற்றபோது, அமெரிக்க எல்லைக் கண்காணிப்புப் படையைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர் சற்று தொலைவில் இருந்துள்ளார். அவர்தான், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை, விரைந்து சென்று சுட்டுள்ளார் என்று 'அசோசியேட்டட் பிரஸ்' செய்தி முகமை தெரிவிக்கிறது.

சிபிஎஸ் செய்தியின்படி, துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், பாதுகாப்புக்கவச உடை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே 18ஆம் தேதி, நியூயார்க் பஃபல்லோ பகுதியில் ஒரு மளிகைக்கடையில் துப்பாக்கிச் சூடு நடந்தபோதும், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சொல்லப்பட்ட சந்தேக நபர், கைத்துப்பாக்கியுடன் பாதுகாப்பு உடை அணிந்திருந்தார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

இது தொடர்பாக, வெள்ளை மாளிகையின் ரூஸ்வெல்ட் அறையில் இருந்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , இந்தக் குழந்தைகளுக்காக அமெரிக்கர்கள் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

வெள்ளை மாளிகையின் ரூஸ்வெல்ட் அறையிலிருந்து உரையாற்றிய அவர், "ஏதுமறியாத அழகிய குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், ஒரு போர்க்களத்தைப் போல, தன் நண்பர்கள் கொல்லப்பட்ட காட்சியையும் குழந்தைகள் நேரில் பார்த்துள்ளனர்.

இனி காலம் முழுக்க இதே நினைவுகளுடன் இந்தக் குழந்தைகள் வாழ வேண்டியிருக்கும்" என்று பேசினார்.

 

அமெரிக்க அதிபர் ஜோ பிடன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

அமெரிக்க அதிபர் ஜோ பிடன்

சம்பவம் குறித்து இப்படி பேசிய ஜோ பைடனிடம், இதற்கு பிறகு டெக்சாஸ் செல்வீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.

https://www.bbc.com/tamil/global-61574826

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்காவை உலுக்கிவரும் துப்பாக்கிக் கலாச்சாரத்தின் பின்னால் இருக்கும் பலம்பொருந்திய அமைப்பு - என் ஆர் ஏ !

National Rifle Association - Wikipedia

அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாசாரத்திற்கு அடித்தளமாக இருப்பது நஷனல் ரைபிள் அசோஸியேஷன் எனப்படும் ஒரு தனியார் அமைப்புத்தான். இன்றுவரை அமெரிக்காவின் துப்பாக்கிப் பாவனை தொடர்பான சட்டங்களை அரசுகள் இறுக்கமுடியாமல் இருப்பதற்கான காரணம் இந்தப் பலமான அமைப்பு அமெரிக்க செனட்டர்கள் மீது செலுத்தும் செல்வாக்குத்தான். 

வருடந்தோறும் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றுவரும் கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலாளிகளின் கைகளுக்கு இலகுவாகத் துப்பாக்கிகள் கிடைக்கப்பெறுவதை ஏதுவாக்கியிருக்கும் தற்போதைய சட்டங்களை அரசுகள் மாற்றுவதை இந்த அமைப்புக் கடுமையாக எதிர்த்துவருவதுடன், இதற்காக பெருமளவு பணத்தினையும் வருடந்தோறும் செலவிட்டு வருகிறது.

அமெரிக்க சிவில் யுத்தத்தில் ஈடுபட்ட போர்வீரர்களால் 1871 இல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு சாதாரண மக்களையும் விஞ்ஞான அடிப்படையிலான பொழுதுபோக்கு துப்பாக்கிச் சுடும் நிலையினை உருவாக்குவதற்காகவே இதனை உருவாக்கியதாக கூறப்படுகிறது. 

ஆனால், இந்த அமைப்பு அரசியல் ரீதியாக இயங்கத் தொடங்கியது 1934 இன் பின்னர்தான். தனது அமைப்பின் அங்கத்தவர்களுக்கு துப்பாக்கிகள் தொடர்பான சட்டாங்களை விளங்கப்படுத்துதல், புதிய துப்பாக்கிகள் பற்றிய தரவுகளை தபால் மூலம் அனுப்பிவைக்கத் தொடங்கியதிலிருந்து இவ்வமைப்பின் அரசியல் பிரவேசம் உருவானது. 

1934 மற்றும் 1968 ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்ட தேசிய துப்பாக்கிகள் சாசனம் மற்றும் துப்பாக்கிப் பாவனையினைக் கட்டுப்படுத்துதல் சட்டம் ஆகியவற்றிற்கு இவ்வமைப்பு தனது ஆதரவினை வழங்கியிருந்தது.  அதன் பின்னர், 1970 களில் அமெரிக்காவின் துப்பாக்கிப் பாவனையினைக் கட்டுப்படுத்தும் சட்டம் தொடர்பாக இவ்வமைப்பு கடுமையான அரசியலைச் செய்யத் தொடங்கியது. 

நேரடியான ஆயுத உற்பத்தியில் இந்த அமைப்பு ஈடுபடாவிட்டாலும்கூட, அமெரிக்காவின் பல முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் தமது லாபத்திற்காக இந்த அமைப்பிற்கு பல மில்லியன் டொலர்களை வருடாந்தம் கொடுத்து வருகின்றனர். அத்துடன், பல ஆயுத உற்பத்தியாளர்களும் இந்த அமைப்பில் முக்கிய அங்கத்துவப் பொறுப்புக்களில் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், எந்த ஒரு நபரும் அங்கத்துவப் பணமாக ஒரு மில்லியன் டொலர்களை செலுத்துவதன் மூலம் இவ்வமைப்பில் இணைய முடியும் என்பதுடன், இவ்வமைப்பின் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்தும் தகமையினையும் பெற்றுக்கொள்கின்றார்.

அந்தவகையில், பல ஆயுத உற்பத்தியாளர்களின் பணபலத்துடனும், ஆதரவுடனும் இயங்கிவரும் இந்த அமைப்பு 1975 இலிருந்து அமெரிக்க துப்பாக்கிச் சட்டத்தினை தனக்கேற்ற வகையில் அமைப்பதற்கு தேவையான ஒரு பலமான பரப்புரை பிரிவொன்றினை உருவாக்கியது. 1977 இல், இந்த பரப்புரை பிரிவின் ஊடாக அமெரிக்க சட்டவாளர்கள் பலரை விலைக்கு வாங்கியதுடன், அவர்கள் மூலம் தற்போது அமுலில் இருக்கும் சட்டம் திருத்தப்பட்டுக் கடுமையாக்கப்படுவதை எதிர்த்து வருகிறது. 

US gun control: What is the NRA and why is it so powerful? - BBC News

இவ்வமைப்பின் தற்போதைய தலைவராக இருக்கும் வெயின் லாப்பியெர் தற்போதிருக்கும் துப்பாக்கிச் சட்டத்தினை மிகவும் உறுதியுடன் ஆதரிப்பவர் என்பதுடன், இச்சட்டத்தினைக் கடுமையாக்க எடுக்கும் முயற்சிகளை மிகவும் மூர்க்கத்தனமாக தடுத்துவருபவர் என்று பலராலும் அறியப்பட்டவர். இவரின் தலைமையில் இந்த அமைப்பு அமெரிக்காவின் மிகவும் பலம் பொருந்திய, அரசியலில் மிகுந்த செல்வாக்குடைய தனி அமைப்பாக உருவாகியுள்ளதுடன் அமெரிக்கக் காங்கிரஸின் பல சட்டவாளர்களை விலைக்கும் வாங்கி வைத்திருக்கிறது என்று கூறப்படுகிறது. 

NRA lawsuit: Will NY AG Letitia James' past comments hurt her case?

ஆவணி 2020 இல், இவ்வமைப்பின் தலைவர்கள் பாரிய நிதிக்கையாடல்களில் ஈடுபட்டுள்ளார்கள், அமைப்பின் நிதியினை தமது சொந்த உல்லாசங்களுக்காகச் செலவிட்டார்கள் என்று குற்றஞ்சாட்டி நியூயோக் மற்றும் வோஷிங்க்டன் பொலீஸாரினால் கொண்டுவரப்பட்ட வழக்கு இவ்வமைப்பின் அரசியல் பலத்தின் முன்னால் நின்றுபிடிக்கமுடியாமல் தோற்றுப்போனது. 

னஷனல் ரபிள் அசோஷியேஷன் அமைப்பின் வருடாந்தச் செலவீனம் சுமார் 250 மில்லியன் டாலர்களிலிருந்து 300 மில்லியன் டாலர்கள் வரை இருக்கிறது. இத்தொகையானது அமெரிக்காவெங்கும் இயங்கும் ஏனைய துப்பாக்கி பாவனை அமைப்புக்களின் மொத்த செலவீனத்தைக் காட்டிலும் மிக மிக அதிகமானது. ஏனைய அமைப்புக்களுடன் ஒப்பிடும்போது பெருமளவு அங்கத்துவர்களையும், துப்பாக்கிச் சூட்டு பயிற்சி மைதானங்களையும், பயிற்சி நிலைகளையும் இது கொண்டிருக்கிறது.

தற்போதிருக்கும் துப்பாக்கிப் பாவனைச் சட்டத்தைத் தொடர்ந்தும் பேணுவதற்காக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு என்று சுமார் 3 முதல் 4 மில்லியன் டாலர்களை இந்த அமைப்பு வருடந்தோறும் செலவிட்டு வருகிறது. இதனைத் தவிரவும் தனது பரப்புரைகளுக்கென்றும், தனிப்பட்ட லஞ்சமாகவும் பெருமளவு பணம் இவ்வமைப்பினால் செலவிடப்பட்டுவருவதாகவும், இதனை இவ்வமைப்பு கணக்குகளில் சேர்ப்பதில்லையென்றும் பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

NRA leader 'with backbone of chocolate éclair' given both barrels over  rotten reign | World | The Sunday Times

அமெரிக்காவின் குடியரசுக் கட்சியினருக்கு மிகவும் நெருக்கமானதாகவும், தனது அங்கத்தவர்களைக் குடியரசுக் கட்சியில் களமிறக்கியிருக்கும் அமைப்பாகவும் இருக்கும் நஷனல் ரபிள் அசொஷியேஷன், இக்கட்சியின் உதவியுடன் ஜனநாயகக் கட்சி எடுக்க எத்தனிக்கும் அனைத்துவிதமான துப்பாக்கிச் சட்ட மாற்றங்களையும் தொடர்ச்சியாகத் தடுத்தே வந்திருக்கிறது. 

Power struggles and a 'personal piggy bank': what the NRA lawsuit alleges |  NRA | The Guardian

அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுவரும் தனது அங்கத்துவர்கள் மூலம் அமெரிக்காவின் துப்பாக்கிப் பானவனைச் சட்டங்களை நீட்டித்துவரும் இவ்வமைப்பு, ஏனைய கட்சி அங்கத்தவர்கள் மீதும் தனது உறுப்பினர்கள் மூலம் பாரிய நெருக்குதலையும் கொடுத்துவருவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜனநாயகக் கட்சிமீதும், குடியரசுக் கட்சியின் தமக்கெதிரான உறுப்பினர்கள் மீதும் மிகக் கடுமையான பிரச்சாரத்தினை முடுக்கிவிட்டிருக்கும் இந்த அமைப்பு, பல அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்க்கையினையும் முடிவிற்குக் கொண்டுவந்திருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. தேர்தல் காலங்களில் துப்பாக்கிப் பாவனைக்கு எதிரானவர்கள் என்று தான் அடையாளப்படுத்தும் வேட்பாளர்களை நோக்கிக் கடுமையான ஊடகப் பிரச்சாரத்தினை முடுக்கிவிட்டுவரும் இந்த அமைப்பு, தனக்குச் சார்பானவர்கள் என்று கருதப்படுபவர்கள் தெரிவுசெய்யப்படுவதற்கு பின்னாலிருந்து உழைத்துவருவதாகவும் நம்பப்படுகிறது.

I don't trust them any more': how the NRA became its own worst enemy | NRA  | The Guardian

2016 இல் ட்ரம்பின் வெற்றிக்குப் பின்னர் இவ்வமைப்பு அரசியலில் செலவிட்ட பணத்தின் அளவு குறைந்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான இரண்டு காரணங்களை முன்வைக்கும் ஆய்வாளர்கள், முதலாவதாக தமக்குச் சார்பான ஜனாதிபதியொருவர் ஆட்சியிலிருப்பதால் இவ்வமைப்பு தனது செயற்பாடுகளை குறைத்துக்கொண்டிருக்கலாம் என்றும், இதே காலப்பகுதியில் அமெரிக்காவில் நடந்த பல படுகொலைகளையடுத்து இயல்பாகவே மக்களிடையே ஏற்பட்டுவரும் அதிருப்தியும், இதனால் பல அமைப்புக்கள் துப்பாக்கிக் கலாசாரத்திற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்துக்கொண்டு, அதற்கான பிரச்சாரத்திலும் அரசியல் நடவடிக்கைகளிலும் பாரிய பணத்தினைச் செலவிட்டத்தையடுத்து இவ்வமைப்பின் தனது செலவைக் குறைத்துக்கொண்டிருக்கலாம் என்றும் கருதுகின்றனர். 2018 இல் இவ்வமைப்பு தனது பிரச்சாரப் பரப்புரைகளுக்குச் செலவிட்ட பணத்தைக் காட்டிலும் மிக அதிகமான பணத்தினை துப்பாக்கிகளைத் தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கையினை முன்வைக்கும் அமைப்புக்கள் செலவிட்டதாகத் தெரிகிறது. 


இவ்வமைப்பின் அங்கத்துவர்கள் எண்ணிக்கை தொடர்பான தெளிவான தகவல்களை இவ்வமைப்புப் பகிரங்கப்படுத்துவதில்லை. 2012 ஆம் ஆணு சாண்டி ஹோக் பாடசாலை தாக்குதலின்பின்னர் இவ்வமைப்பின் செயற்பாடுகள், அங்கத்தவர்கள் குறித்த கேள்விகள் எழும்பியபோது, தமது அமைப்பில் சுமார் 5 மில்லியன் அங்கத்தவர்கள் இருப்பதாக அது தெரிவித்திருந்தது. ஆனால், சுயாதீன ஆய்வாளர்களின் கணிப்பின்படி சுமார் 3 மில்லியன் அங்கத்தவர்கள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தனது அங்கத்துவர்களின் எண்ணிக்கையினைப் பெரிதாக்கிக் காட்டுவதன் மூலம் தனது செல்வாக்கினை மக்களிடையே அதிகரிக்க இந்த அமைப்பு முயல்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

George H.W. Bush Quit the NRA With This Sternly Worded Letter

நஷனல் ரபிள் அச்சொஷியேஷன் அமைப்பின் அங்கத்தவர்களில் பல முன்னால் குடியரசுக் கட்சி ஜனாதிபதிகள் உள்ளங்கியவர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்களுள் முன்னாள் ஜனாதிபது ஜோர்ஜ் புஷ்ஷும் ஒருவர்.

Who was Oklahoma City Bomber Timothy McVeigh? | Inside Editionஆனால், 1995 இல் இவ்வமைப்பின் ஆதரவாளர் ஒருவரினால் நடத்தப்பட்ட 
 ஓக்லகோமா அரச கட்டட குண்டுத் தாக்குதலின் பின்னர், விசாரணைகளில் ஈடுபட்ட அதிகாரிகளை "சப்பாத்து அணிந்த நாய்கள்" என்று இவ்வமைப்பின் தலைவர் விமர்சித்ததையடுத்து வேறு வழியின்றி புஷ் இவ்வமைப்பிலிருந்து வெளியேறியதாகத் தெரியவருகிறது. 

Did George H.W. Bush Resign from the NRA? | Snopes.com

தற்போதும் இவ்வமைப்பில் குடியரசுக் கட்சியின் முன்னாள் உப தலைவர் சாரா பாலின், நடிகர்கள் டொம் செல்லெக் மற்றும் வூப்பி கொல்ட்பேர்க் ஆகியோர் அங்கத்துவர்களாக இருக்கிறார்கள்.

Lupica: Sarah Palin's appearance at the National Rifle Association  convention is perfect for phony 'patriots' - New York Daily News சாள்ட்டன் ஹெஸ்ட்டர் எனும் முன்னால் நடிகர் 1998 இலிருந்து 2003 வரை இவ்வமைப்பின் தலைவராக இருந்திருக்கிறார்.

Zero Hour" Massacre at Columbine High (TV Episode 2004) - IMDb1999 இல் இடம்பெற்ற மிகக் கொடூரமான கொலம்பையின் கல்லூரித் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர், துப்பாக்கிகளைத் தடைசெய்யுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை விழித்து, தலைக்கு மேலே துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, "இத்துப்பாக்கியை அவர்கள் என்னிடமிருந்து பறிக்க நினைத்தால், உயிரற்ற, குளிரான எனது உடலிலிருந்துதான் எடுத்து செல்லவேண்டும்" என்று பகிரங்கமாகச் சவால் விட்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

Charlton Heston's “Cold Dead Hands” Speech Fired Up the NRA in 2000 – The  Hollywood Reporter

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று வரை NRA அல்லது NSSF இந்த சம்பவங்களைப்பற்றி ஒன்றும் கூறுவதில்லை.. அதைவிட கவலையானது நாளை இவர்களது வருடாந்த கருத்தரங்கு இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து 300 மைல்களிற்கும் குறைவான தூரத்தில் இருக்கும் Houstonல் நடைபெற உள்ளது. Donald Trump உரையாற்ற உள்ளார்..

அதே போல Republican Texas ஆளுனரின் கூற்று இப்படி உள்ளது.. 

// Later, Abbott said that stricter gun laws aren't a "real solution."

"The ability of an 18-year-old to buy a long gun has been in place in the state of Texas for more than 60 years," he said, claiming that throughout those six decades, the state had "not had episodes like this." 

"The one thing that has substantially changed is the status of mental health in our communities," he added.  

இவர்களைப்பொறுத்தவரையில் ஒன்றுமே நடக்கவில்லை, வாழ்க்கையில் மரணம் சாதாரண ஒன்று என்ற ரீதியில் அமெரிக்க மக்கள் வாழவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.. 

அமெரிக்க மக்களின் இன்றைய உளவியல் சிக்கல்களை எல்லாவற்றிக்கும் காரணமாக காட்டுகிறார்கள்.. 

உளவியல் சிக்கல்கள் எவ்வாறாகவேனும் இருக்கலாம், ஆனால் இந்த gun cultureற்கான அடிப்படை காரணங்களை தீர்க்காமல், இந்த gun lobbyஅக்கு பயப்படாமல் மக்களும் அரசியல்வாதிகளும் முயன்றால்தான் இதை இல்லாதெழிக்கமுடியும்.. 

 

https://www.cbsnews.com/amp/news/texas-school-shooting-biden-second-amendment-is-not-absolute/#app

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 25/5/2022 at 22:56, ரஞ்சித் said:

இவ்வமைப்பின் தற்போதைய தலைவராக இருக்கும் வெயின் லாப்பியெர் தற்போதிருக்கும் துப்பாக்கிச் சட்டத்தினை மிகவும் உறுதியுடன் ஆதரிப்பவர்

Wayne LaPierreதான் மீண்டும் NRAன் தலைவராக வந்துள்ளார். ஒரேயொரு ஒருவர் மாத்திரம்தான் இவர் மீண்டும் தலைவராக வருவதை ஆதரிக்கவில்லை(54-1). எனவே அரசினால் எந்த முடிவு எடுக்க முடியாது.. உலகத்திற்கு பொலீஸாக இருக்கும் அமெரிக்காவில் சொந்த மக்களிற்கு பாதுகாப்பு இல்லை. 

https://www.bloomberg.com/news/articles/2022-05-30/nra-board-re-elects-wayne-lapierre-54-1-despite-scandal

இந்த இணைப்பில் அமெரிக்காவில் நடந்த இது வரை நடந்த இந்த வன்முறைகளின் தொகுப்பு உள்ளது. வாசிக்க வாசிக்க கவலையாக இருந்தது..👇🏽

https://www.wsws.org/en/topics/socialIssuesCategory/mass-shooting

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லோரும் மக்களுக்கு சேவை செய்கிறார்கள் ஆனால் மக்கள்தான் முன்னேற மறுக்கிறார்கள்.
    • பட மூலாதாரம்,AAKA SPACE STUDIO படக்குறிப்பு, லடாக்கில் உள்ள இந்தியாவின் ஹேப்-1 விண்வெளி அனலாக் திட்டம். கட்டுரை தகவல் எழுதியவர், கீதா பாண்டே பதவி, பிபிசி நியூஸ் மேலே உள்ள படத்திலுள்ள முட்டை வடிவிலான இந்த அமைப்புகள், வருங்காலத்தில் இந்திய விண்வெளி வீரர்கள் விண்வெளியில் வாழும் வீடுகளாக இருக்க முடியுமா? நிலத்தில் இருந்துகொண்டே விண்வெளியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் ஹேப்-1 என்றழைக்கப்படும் ஹேபிடட்-1 என்ற சோதனைத் திட்டத்தை முதல் முறையாக இஸ்ரோ உருவாக்கியுள்ளது. லடாக்கில் உள்ள இமயமலைப் பகுதியில் மூன்று வாரங்களுக்கு இந்த சோதனை முயற்சி நடைபெற்றது. விண்வெளி போன்ற ஒரு சூழலை உருவாக்கி இந்தச் சோதனைகள் நடத்தப்படும்போது, விண்வெளி வீரர்களுக்கும் மற்ற உபகரணங்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளைக் கண்டறிந்து சரி செய்ய முடியும் என்று குஜராத்தை சேர்ந்த விண்வெளி நிறுவனமான ஆகாவில் (Aaka), விண்வெளி பொறியாளராகப் பணிபுரியும் ஆஸ்தா கச்சா-ஜாலா பிபிசியிடம் தெரிவித்தார். ஹேப்-1, விண்வெளி தரத்திலான டெஃப்ளான் உலோகத்தால் தயாரிக்கப்பட்டது. இது தொழிற்சாலைகளில் பயன்படுத்தபடும் பாதுகாக்கப்பட்ட ஃபோம் (foam) அமைப்புடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.   இதில் ஒரு மெத்தை, வேலை செய்வதற்கான மடித்து வைக்கக்கூடிய ஒரு மேசை, தினசரி மற்றும் அவசரக்கால தேவைகளுக்கான பொருட்களை வைப்பதற்கான ஓர் இடம், சிறிய சமையலறை மற்றும் கழிவறை இருக்கின்றன. இந்தச் சோதனைக்காக மூன்று வாரங்கள் வரை விண்வெளி வீரர் ஒருவர் இங்கு தங்கியிருந்தார். "செவ்வாய் கிரகமோ, நிலவோ எதுவாக இருந்தாலும் அங்கிருக்கும் சுற்றுச்சூழலில் நிலவும் மிகக் குறைந்த அளவிலான வசதிகள் மற்றும் கட்டுமான சவால்களைக் கருத்தில் கொண்டே ஹேப்-1 கட்டமைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் தண்ணீருக்கு சிக்கல் இருக்கும் என்பதால் நீர் இன்றி இயங்கும் கழிவரையை உருவாக்கியுள்ளோம். அதில் துர்நாற்றம் வெளிவராத வகையில் கழிவை வெளியேற்றும் அமைப்பைப் பயன்படுத்தியுள்ளோம்," என்கிறார் ஆஸ்தா கச்சா-ஜாலா. இஸ்ரோவின் முதல் 'விண்வெளிக் குடியிருப்பை', அதாவது விண்வெளியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய மாதிரி குடியிருப்பை லடாக்கில் அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஜாலா ஈடுபட்டுள்ளார். விண்வெளி: கிறிஸ்துமஸ் மரம் போலக் காட்சியளிக்கும் விண்மீன் திரள் - வியக்கும் விஞ்ஞானிகள் செவ்வாய் கோளில் உயிர்கள் வாழ்ந்தனவா? நாசா ஆய்வில் புதிய மைல்கல் ப்ரோபா-3: சூரியனை ஆய்வு செய்ய செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்குவது ஏன்? அணுக்கரு கடிகாரம்: பிரபஞ்சத்தின் மர்மங்களை கட்டவிழ்க்கும் வழியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்   ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப இந்தியா தயாராகி வருகிறது. இந்தச் சூழலில் விண்வெளிக் குடியிருப்புகள் குறித்த இந்தத் திட்டத்திற்கான சோதனை முயற்சிகளும் தொடங்கியுள்ளன. சுமார் 400 கி.மீ. உயரத்தில், பூமியின் குறைந்தபட்ச சுற்றுப்பாதையில் மூன்று நாட்களுக்கு விண்வெளியில் வீரர்களை நிலை நிறுத்துவதே இஸ்ரோவின் ககன்யான் திட்டம். இதற்கான அனைத்து செயல்முறையும் திட்டமிட்டபடி நடந்தால் இத்திட்டம் வரும் ஆண்டில் செயல்படுத்தப்படும். இந்தியா தனது முதல் விண்வெளி நிலையத்தை 2035ஆம் ஆண்டில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும் 2040ஆம் ஆண்டிற்குள், மனிதனை நிலவுக்கு அனுப்பவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ரஷ்யா, சீனா போன்ற பல்வேறு நாடுகளும், விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் இதுபோன்ற பல 'விண்வெளி வாழ்க்கை' தொடர்பான மாதிரி வடிவமைப்புகளை சோதனை செய்யும் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில், ககன்யான் திட்டத்தில் பங்குபெறத் தேர்வாகியுள்ள நான்கு விண்வெளி வீரர்களில் இருவருக்கு தற்போது நாசாவில் அதற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,AAKA SPACE STUDIO படக்குறிப்பு, நிலாவிலோ செவ்வாயிலோ நிலவும் சுற்றுச்சூழலில், அங்கு கட்டுமானங்களை மேற்கொள்வதில் இருக்கும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு ஹேப்-1 வடிவமைக்கப்பட்டதாகக் கூறுகிறார் ஆஸ்தா கச்சா-ஜாலா "விண்வெளி வாழ்வனுபவம் தொடர்பாகத் தனது சொந்த திட்டங்களை இந்தியாவால் செயல்படுத்த முடியுமானால், நமது விண்வெளி வீரர்களின் பயிற்சிக்கு மற்ற நாடுகளின் விண்வெளி நிலையங்களைச் சார்ந்திருக்க வேண்டியதிலை," என்று லடாக் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப் படிப்புகளுக்கான துறைத் தலைவர் பேராசிரியர் சுப்ரத் ஷர்மா தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில் லடாக் பல்கலைக்கழகமும் கைகோர்த்துள்ளது. லடாக் பாறைகள் நிறைந்த ஒரு தரிசு நிலம் எனக் கூறுகிறார் அவர். "செவ்வாய் மற்றும் நிலவின் நிலப்பரப்புடன் லடாக்கின் நிலவியல் ஒத்திருக்கிறது. அதனால், இந்தப் பகுதி விண்வெளி ஆய்வுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் இங்கு சோதனை செய்யப்பட்டது," என்று பிபிசியிடம் சுப்ரத் ஷர்மா தெரிவித்தார். இந்தச் சோதனையின்போது சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்கின்றனர். இதன் மூலம் விண்வெளியில் அந்தந்த பகுதிகளிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு விண்வெளியில் வீடுகளை அமைக்க முடியுமா என்பதை ஆய்வு செய்கின்றனர். நிலத்தடியில் விளையும் ஆளுயர மரவள்ளிக் கிழங்கு - பாதுகாக்க போராடும் கேரள பழங்குடி பெண்கள்18 டிசம்பர் 2024 கெங்கிஸ் கான் புழுக்களை ஆயுதமாகப் பயன்படுத்தியது எப்படி?18 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,AAKA SPACE STUDIO படக்குறிப்பு, இந்தியாவின் சோதனை விண்வெளி நிலையத்தில் மூன்று வாரங்களை செலவிட்ட விண்வெளி வீரர். இந்திய- சீனா எல்லையில் உள்ள இந்த இமயமலைப் பகுதி சுமார் 3,500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு வானிலை மிகவும் தீவிரமாக இருக்கும். அதாவது ஒரு நாளின் அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்தபட்சம் -18 டிகிரி செல்சியஸ் வரை நிலவக்கூடும். இது செவ்வாயின் வெப்பநிலைக்கோ (-153 செல்சியஸைவிட குறையலாம்) அல்லது நிலவின் வெப்பநிலைக்கோ (ஆழமான பள்ளங்களில் -250 செல்சியஸ் வரை இருக்கும்) எந்த விதத்திலும் பொருந்தவில்லை. ஆனாலும் ஒரு மனிதரால் எந்த அளவு வரையிலான வெப்பநிலையைத் தாங்க முடியும் என்பதை அறிவதற்கான முயற்சியே இந்தச் சோதனை. "ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சோதனைக்காக விண்வெளிக்குச் செல்ல முடியாது என்பதால், விண்வெளி போன்ற அம்சங்களைக் கொண்ட ஒரு சோதனை நிலையம் அவசியமாகத் தேவைப்படும்," என்றார் பேராசிரியர் ஷர்மா. மேலும், "லடாக்கில் தரிசு நிலங்கள் பறந்து விரிந்து கிடப்பதால், நீங்கள் விண்வெளியில் தனியாக இருப்பது போன்ற உணர்வு உங்களுக்குக் கிடைக்கும்," என்றார் அவர். தானும் இதே போலத்தான் உணர்ந்ததாக மூன்று வாரங்கள் இந்தக் கட்டமைப்பில் தங்கியிருந்த விண்வெளி வீரர் தெரிவித்துள்ளார். "மனித சுற்றுச்சூழல் அமைப்புகளில் இருந்து நான் முற்றிலுமாகத் தனிமைப்படுத்தப்பட்டேன். எனது அன்றாடப் பணிகள், எப்போது எழ வேண்டும், எப்போது என்ன செய்ய வேண்டும், தூங்க வேண்டும் என அனைத்துமே முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. நான் செய்யும் அனைத்து வேலைகளும் 24 மணிநேரமும் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். எனது செயல்பாடுகள் மற்றும் ஆரோக்கியம் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும்," என்று தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத, இந்தச் சோதனையில் பங்கெடுத்த 24 வயது நபர் ஒருவர் தெரிவித்தார். "ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக இருந்தது. ஆனால் போகப் போக செய்ததையே மீண்டும் மீண்டும் செய்வது போல் இருந்தது. இது எனது அன்றாடச் செயல்பாடுகளைப் பாதித்தது. நான் தூங்கும் முறையைப் பாதித்தது, எனக்கு கவனக் குறைப்பாட்டை ஏற்படுத்தியது." விண்வெளி வீரரின் உடலில் பயோமெட்ரிக் சாதனங்கள் பொருத்தப்பட்டு அவரது தூக்க முறை, இதயத் துடிப்பு மற்றும் மன அழுத்தம் ஆகியவை கண்காணிக்கப்பட்டன. அவரது உடல் எந்த அளவிற்கு இந்த நிலையை ஏற்றுக்கொள்கிறது என்பதை அவரது ரத்தம் மற்றும் எச்சிலை தினமும் சோதனை செய்து கண்காணித்தனர். சினைப்பையில் நீர்க்கட்டி: டயட் மற்றும் ஊட்டச்சத்து மூலம் குணப்படுத்தலாம் என்ற சமூக ஊடக டிப்ஸ்களை நம்பலாமா?16 டிசம்பர் 2024 நீரிழிவால் கண் பார்வை பறிபோவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு உதவுமா?17 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1969ஆம் ஆண்டு பஸ் ஆல்ட்ரின் நிலவில் நடக்கும் புகைப்படம் இது. விண்வெளியில் மனிதர்களைப் பாதிக்கும் உளவியல் காரணிகளைக் கண்டறிவதும் இந்தச் சோதனைத் திட்டத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உலகம் முழுவதும் உள்ள விண்வெளி நிலையங்கள் தங்களுடைய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப, அவர்களுக்கென நிரந்தரமான தங்குமிடத்தை இனி வரும் காலங்களில் அமைக்க முயன்று வருகின்றன. அதனால் இதுபோன்ற திட்டங்கள் விண்வெளிக்கான ஆய்வுகளிலும் பயிற்சிகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதத்தில் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் ஒரேகன் என்ற இடத்தில் நாசாவின் லாஸீ என்ற இயந்திர நாயை நிலவின் மேற்பரப்பில் நடக்க வைப்பதற்கான சோதனைத் திட்டத்தை மேற்கொண்டனர். கடந்த ஜூன் மாதம் நான்கு பேர், டெக்சாஸில் உள்ள விண்வெளியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வசதியில் தங்கியிருந்து வந்தனர். இந்தச் சோதனை பிரத்யேகமாக செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்ற உணர்வை வழங்கும். எகனாமிஸ்ட் நாளிதழைப் பொருத்தவரை, நிலவின் மேற்பரப்பில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு 3D அடித்தளத்தை நாசா அமைக்கப் போகிறது. அதேநேரத்தில் சீனாவும் ரஷ்யாவும் இந்தத் திட்டத்தில் இணைந்து செயல்படுகின்றனர். விண்வெளித் திட்டங்களைப் பொறுத்தவரை இந்தியா பின்தங்கிய நிலையில் இருக்க விரும்பவில்லை. "லடாக்கில் சேமிக்கப்பட்ட தரவுகளை ஆய்வு செய்த பிறகு, நமது விண்வெளி வீரர்கள் விண்வெளியில் சிக்கலை எதிர்கொள்ளும்போது அவர்களுக்கு உதவ, சிக்கல்களைச் சமாளிக்க மருத்துவ தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு இது உதவும்" என்று பேராசிரியர் ஷர்மா கூறுகிறார். "பூமியைவிட இரவும் பகலும் அதிகமாக இருக்கும் நிலவிலும் அதேபோல ஆக்சிஜன் இல்லாத விண்வெளியிலும் வாழ்ந்தால் நமது மனித உடல் எவ்வாறு செயல்படும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்," என்று அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cgj6yqj7jz7o
    • மாத்தையா, சீனாவுக்கு போய் என்ன வாங்கிக்கொண்டு வாறார் என்று பாப்போம். எங்களின் நாடு இவ்வளவு சீரழிந்ததற்கும் இரத்தம் சிந்தியதற்கும் காரணம் இந்தியாவின் பாதுகாப்பு முன்னுரிமை, தன்னைவிட இலங்கை முன்னேறிவிடக்கூடாது என்கிற கொள்கை. அதை இனவாதிகளும் பயன்படுத்திக்கொண்டனர். இது அனுராவுக்கு ஒன்றும் தெரியாததல்ல, தெரிந்தும் அந்த வலையில் விழுகிறாரென்றால் இவரால் மற்றைய தலைவர்களை விட பெரிசாய் எதை சாதிக்கப்போகிறார்? இனப்பிரச்சினையை  தீர்க்காமல் நாடு முன்னேறுவது இயலாத காரியம்.
    • தயவு செய்து அந்த அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, படித்த, துடிப்புள்ள, இளம் பட்டதாரிகளை நியமியுங்கள். அல்லது காது வைத்திய  நிபுணரிடம் அனுப்பி பரிசோதனை செய்து காது கேட்க்கும் கருவி வசதியை ஏற்படுத்துங்கள் அவர்களுக்கு. செவிப்புலனற்றவர்கள், தாம் சேவை செய்ய முடியவில்லையே என வருந்துகிறார்கள். இவர்களுக்கு கொடுத்த வசதியை வைத்து மற்றவர்களை வதைக்கிறார்கள்.
    • 19 DEC, 2024 | 07:51 AM   மும்பை: மும்பை கடற்கரை பகுதியில் சுற்றுலா படகு மீது, கடற்படையின் அதிவேக ரோந்து படகு ஒன்று மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். 101 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அங்கு தேடும் பணியில் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். மும்பை அருகேயுள்ள எலிபென்டா தீவில் புகழ்பெற்ற கர்பரி குகைகள் உள்ளன. இதை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் மும்பை கடற்கரையிலிருந்து படகுகளில் செல்வது வழக்கம். சுற்றுலா பயணிகள் 100-க்கும் மேற்பட்டோருடன், நீல்கமல் என்ற படகு மும்பையின் கேட்வே ஆப் இந்தியா பகுதியிலிருந்து எலிபென்டா தீவு நோக்கி நேற்று மாலை புறப்பட்டது. அப்போது அந்த வழியாக கடற்படையின் ரோந்து படகு சென்றது. அந்த படகு நேற்று மாலை 3.55 மணியளவில், கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது அதிவேகத்தில் மோதியது. இதில் பயணிகள் படகு பலத்த சேதம் அடைந்து, ஒரு பக்கமாக சாய்ந்தது. இதனால் படகில் இருந்த பயணிகள் சிலர் கடலில் விழுந்தனர். இத்தகவல் அறிந்ததும் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் படகுகளில் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் விழுந்த 13 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். படகில் சென்ற பயணிகள் 101 பேர் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனர். காயம் அடைந்தவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டனர். மீட்பு பணி குறித்து இந்திய கடலோ காவல் படை ஐஜி பிஷம் சர்மா கூறுகையில், “மும்பை கடல் பகுதியில் கடலோர காவல் படை மற்றும் கடற்படை இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. எங்களது கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன” என்றார். இந்த விபத்து குறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “எலிபென்டா தீவுக்கு சுற்றுலா பயணிகளுடன் சென்ற நீல்கமல் என்ற படகு மீது கடற்படையின் அதிவேக ரோந்து படகு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 101 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியில் கடற்படை மற்றும் கடலோ காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணைய தலைவர் உன்மேஷ் வக் அளித்த பேட்டியில், ‘‘எங்கள் துறைமுகத்துக்கு சொந்தமான பைலட் படகு விபத்து நடந்த இடத்தை நேற்று மாலை கடந்து சென்றது. அந்த படகு மூலம் 40 பேர் மீட்கப்பட்டு துறைமுக ஆணைய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்’’ என்றார். https://www.virakesari.lk/article/201614
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.