Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் அறிவுப் புதையல்... யாழ்.பொது நூலகம், தீக்கிரையாகி இன்றுடன்... 41 ஆண்டுகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் அறிவுப் புதையல் யாழ்.பொது நூலகம் தீக்கிரையாகி இன்றுடன் 41 ஆண்டுகள்!

தமிழர்களின் அறிவுப் புதையல்... யாழ்.பொது நூலகம், தீக்கிரையாகி இன்றுடன்... 41 ஆண்டுகள்!

தமிழர்களின் அறிவுப் புதையல் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாகி இன்றுடன் 41 ஆண்டுகள் கழிந்துவிட்டன.

தென்னாசியாவில் பெரிய நூலகமாக விளங்கிய யாழ்ப்பாண பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு இதேபோல் ஒரு நாளில் எரியூட்டப்பட்டது.

இன உரிமைப் போராட்டத்த்தை அழித்து ஈழத் தமிழ் குரலை அழிக்கவும் அதன் சரித்திரத்தை அழிக்கவும் அன்றைய இன வன்முறையாளர்கள் திட்டமிட்டு யாழ்நூலகத்தை எரித்தனர்.

இதனால் ஈழத் தமிழ் மக்கள் மாபெரும் அறிவிழப்பை பாரம்பரிய சொத்திழப்பை, தொன்மை இழப்பை முகம் கொடுத்தார்கள்.

தெற்காசியாவில் மிகப் பெரும் நூலாகமாக கருதப்படும் யாழ் நூலகத்தில் கிட்டத்தட்ட 97 ஆயிரம் அரியவகையான புத்தகங்கள் காணப்பட்டன.

பல நூற்றாண்டுகள் பழமைகொண்ட ஈழ ஓலைச்சுவடிகள், ஈழத்தின் பண்டைய நுல்கள், பல அரிய பண்டைய தமிழ் நூல்கள், ஈழத் தமிழ் பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் என்று பல்வேறு வகைப்பட்ட அரிய ஆவணங்கள் இதில் அழிக்கப்பட்டன.

மாபெரும் அறிவுப் பொக்கிசமாக யாழ் நூலகம் கருதப்பட்ட நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இந்த சம்பவத்தில் அன்றைய அமைச்சர் காமினி திசாநாயக்க உள்ளிட்ட பலர் நேரடியாக செயற்பட்டமைக்கான ஆதாரங்கள் வெளிப்பட்டன.

https://athavannews.com/2022/1284660

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நூலகம் என்பது  அறிவின் களஞ்சியம் என்பது சரிதான். ஆனால் ஈழத் தமிழர் அறிவாளிகள் என்பதும் இந்த நூலகம் எரிக்கப்பட்டதனால் தமிழரின் அறிவு அழிந்துவிட்டது என்பதும்  கொஞ்சம் ஓவர் 🤣

Edited by Kapithan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

நூலகம் என்போது அறிவின் களஞ்சியம் என்பது சரிதான. ஆனால் தமிழர் அறிவாளிகள் என்பது கொஞ்சம் ஓவர் 🤣

சொன்னது… ஆதவன் நியூஸ். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

சொன்னது… ஆதவன் நியூஸ். 

சிம்பு; ஆப்பு எங்களுக்கு சொருகப்படுவதில்ல. நாமாகத்தான் ஆப்பின் மீது போய் உற்காருகிறோம். (உபயம்; கோசான் சே) 

இங்கு ஆப்பு எனக்கு செருகப்பட்டதா அல்லது நான் அதன் மீது உற்கார்ந்தேனா ?

🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kapithan said:

நூலகம் என்பது  அறிவின் களஞ்சியம் என்பது சரிதான். ஆனால் ஈழத் தமிழர் அறிவாளிகள் என்பதும் இந்த நூலகம் எரிக்கப்பட்டதனால் தமிழரின் அறிவு அழிந்துவிட்டது என்பதும்  கொஞ்சம் ஓவர் 🤣

இப்போதெல்லாம் நூலகத்திற்கு வருகை தருபவர்கள் மிக மிக குறைவாம். ஏதோ கொஞ்ச உயர்தர வகுப்பு மாணவர்கள் வந்து போகின்றார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இப்போதெல்லாம் நூலகத்திற்கு வருகை தருபவர்கள் மிக மிக குறைவாம். ஏதோ கொஞ்ச உயர்தர வகுப்பு மாணவர்கள் வந்து போகின்றார்களாம்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் யாழ் நூலகத்திற்கு குடும்பமாகச் சென்றிருந்தோம்.

வாசலில் செருப்பக் கழற்றச் சொன்னார்கள். மறுத்துவிட்டேன். நூலகம் சிறிது பரபரப்பாக இருந்தது. செருப்பைக் கழற்ற மறுத்த களேபரத்தில் நூலகத்திற்குச் செல்லும் மகிழ்ச்சியே போய்விட்டது. அதையும் கடந்து உள்ளே சென்றபோது, கமறாவால் படம் எடுக்க அனுமதிக்கவில்லை. அதிலும் தகராறு. 

உள்ளே சென்றபோது நூலகத்திற்குரிய அமைதியோ, இலேசாக உணரும் சூழலோ இருக்கவில்லை.

திடீரென நூலகம் பரபரப்பானது. 

அங்கு நிற்கப் பிடிக்காமல் மேற்தளத்திற்கு முன்பக்கப் படியால் ஏறிச் சென்றேன். அங்கு முன் அறையின் இரு பக்கங்களிலும் இருந்த மேசைகளின் மேலே, சேலையுடனிருந்த பெண்(😀) உத்தியோகத்தர்கள் அமர்ந்திருந்தார்கள். எங்களை உள்ளே செல்ல விடவில்லை. உள்ளே ஒன்றும் இல்லை என்று கூறியதாக நினைவு. அங்கும் வாக்குவாதம். 

வெறுத்துப்போய் மேலிருந்தபடியே  நான்கைந்து படங்களை கிளிக் செய்துகொண்டடு கீழே எட்டிப்பார்த்தால் பல வாகனங்கள் வந்து நிற்கத் தொடங்கின. இடம் கொஞ்சம் ஆரவாரப்பட்டது. கீளே இறங்கி வந்தால்  எனது பிள்ளைகளுக்கும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 

என்ன விடயம் என்று எட்டிப் பார்த்தால் நடிகர் ஆர்யாவும் இலங்க தமிழ்ப் பெண் ஒருவரும் ஏதோ நிகழ்ச்சி ஒன்றிற்காக வீடியோ எடுக்க வந்திருந்தார்கள். 

நூலகம் ஆர்யா ரசிகர்களால் ஒரே க்ளேபரம். ஆர்யாவுக்கு ராச மரியாதை. நூலகத்தின் ஒழுங்கு காற்றில் பறந்தது.

எனக்கோ கொலைவெறி. 

நான் செருப்புடன் உள்ளே போக முடியாது. ஆனால் ஆர்யாவும் அவர் குழுவும் எந்தவித கட்டுப்படுமில்லாமல் விரும்பியவற்றைச் செய்ய அனுமதி.  கொதியை அடக்க முடியவில்லை.  

அந்த நேரம் பார்த்து ஒரு தென்னிலங்கையர்கள்/ யாத்திரிகர்கள் ஒரு பெரிய வானில் நூலகத்தைப் பார்க்க வந்து இறங்கத் தொடங்கினார்கள். 

களேபரம் அதிகரித்தது. 

ஆரியா தலைதெறிக்க ஓட்டம். எங்கள் சனங்களோ ஆர்யாவின் வாகனத்தை துரத்தத் தொடங்கினர். 

தென்னிலங்கையர்களுக்கும் எதுவித கட்டுப்படுகளும் இல்லை. 

பிறகென்ன.. நான் நடராஜனின் ருத்ரதாண்டவத்தைத் தொடங்கினேன். பிள்ளைகளுக்கோ எனது கோபத்தைக் கண்டு பயம் ஒருபுறம். அங்கு நிற்கும் சனத்தைக் கண்டு வெட்கம் ஒருபுறம். 

சன்னதம் ஆடத் தொடங்கினேன். மனைவி பிள்ளைகள் வெட்கம் தாளாமல் என்னைப் பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்தனர்.  

நண்பனுக்கு அழைப்பை ஏற்படுத்தி கத்திவிட்டேன். (அவரின் நண்பன்தான் மாநகரசபையின் ஆணையாளர் / Commissioner) 

அடுத்த நாள் மாநகர ஆணையாளர் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்ததாக(?) பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருந்தது. 

எனது பிள்ளைகளுக்கு எங்கள் வரலாற்றின் பக்கம் ஒன்றினைக் காட்ட்டச் சென்ற எனக்கு எங்களினதும், எங்கள் மக்களின் பிற்போக்குத்தனங்களின்/போலித்தனங்களின் சிறிய பக்கம் ஒன்றினைப் பார்க்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது.

போர்ச் சூழலிலும் மிகவும் நிதானமாக|செயற்றிறனுடன் இயங்கிய யாழ் மாநகரசபையின் நல்லூர் நூலகத்தை பசுமையுடன் நினைத்துப்பார்க்கிறேன். ஆனந்தமான நாட்களவை. 

😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Kapithan said:

நான்கு வருடங்களுக்கு முன்னர் யாழ் நூலகத்திற்கு குடும்பமாகச் சென்றிருந்தோம்.

வாசலில் செருப்பக் கழற்றச் சொன்னார்கள். மறுத்துவிட்டேன்.

ஐயாவுக்கு மஹாராஜா எண்ட நினைப்போ? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஐயாவுக்கு மஹாராஜா எண்ட நினைப்போ? 🤣

பெரியவா இலங்கைப் பக்கம் போய் நீண்ட நாட்களோ?

இலங்கையில் நாய்களைக் கொலை செய்வது தடைசெய்து நீண்ட நாட்கள். அதன்  விளைவை தெருவோரங்களில் தாராளமாகவே பார்க்கலாம். 
🤮

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

வாசலில் செருப்பக் கழற்றச் சொன்னார்கள்

இப்பொழுது இந்த முறைகள் குறைந்து வருகிறது, ஆனாலும் தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்ற மாதிரி சிலருக்கு இதனை கைவிட கடினமாக உள்ளது. அவ்வளவுதான். யாழ் நகரிற்குள் இருக்கும் வங்கி அலுவலகங்களுக்கு சென்றால் செருப்பினை கழட்டி வைத்து விட்டு உள்ள வரும்படி கேட்கமாட்டார்கள், ஆனால் அதுவே தெல்லிப்பழையில் (உதாரணத்திற்காக)  உள்ள வங்கி அலுவலகம் என்றால் வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கேட்காமலே செருப்பை கழட்டி வெளியே வைத்துவிட்டுத்தான் வருவார்கள். இது அவர்களின் பழக்கதோஷம்..இப்படி சில இடங்களில் எங்களையறியாமலே செருப்பை கழட்டி வைத்துவிட்டு போயிருக்கிறோம்.. ஆனால் இதைவிட மாறவேண்டிய வேறு போலித்தனங்களும் பழக்கவழக்கவ்களும் உள்ளன, அவை மாறினால் எவ்வளவோ நிம்மதி..நன்மை!!

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் திருத்தப்பட்டது

நூலகம் எரிக்கப்பட்டதைத் தமிழர்களின் அறிவு ஒடுக்கப்பட்டது என்பதை விட எமது வரலாற்றுச் சான்றுகளை அழித்த செயலாகவே நோக்க வேண்டியுள்ளது.

தற்போது நூலகம் நூலகமாக மட்டுமே இருக்குமானால் இதைக் கண்காட்சிக் கூடமாகவே பார்க்க வேண்டி வரும். அறிவியல் சார்பாக எவ்வாறு எதிர்காலத்தில் இதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்கலாம் என்று ஆலோசிக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

நூககத்தை Digital க்கு மாற்றவேண்டும். Unlimited internet access, அறிவுசார் கூட்டங்கள், சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள், வழிகாட்டுதல் கருத்தரங்குகள், reading clubs.......என இன்னோரன்ன விடயங்களை உள்ளே கொண்டுவர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, இணையவன் said:

நூலகம் எரிக்கப்பட்டதைத் தமிழர்களின் அறிவு ஒடுக்கப்பட்டது என்பதை விட எமது வரலாற்றுச் சான்றுகளை அழித்த செயலாகவே நோக்க வேண்டியுள்ளது.

தற்போது நூலகம் நூலகமாக மட்டுமே இருக்குமானால் இதைக் கண்காட்சிக் கூடமாகவே பார்க்க வேண்டி வரும். அறிவியல் சார்பாக எவ்வாறு எதிர்காலத்தில் இதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்கலாம் என்று ஆலோசிக்கப்பட வேண்டும்.

நீங்கள் சுட்டியவைதான் மெய்நிலை. ஆனால், எம்மிடம் ஒரு தொடரான செயற்திட்டமும் ஒருங்கமைந்த செயற்பாடும் இல்லை. எதிர்காலத்திலாவது செய்தால் நன்று. இந்த நூலக எரிப்பு விடயம் யாரோடாவது உரையாடினால் 'அப்படியா' என்று ஆச்சரியமாகக் கேட்பார்கள். யூதர்கள் தமது தேசத்தை அடைந்ததோடு, மேலும் நிலங்களைப்பிடித்துவருகிறார்கள். ஆனால் அவர்கள் தமது பரப்புரையைக் கைவிடவில்லை. எமது நகரத்திலே நடக்கும் வாராந்தச் சந்தையிலே மாதமொருதடவையாவது ஒரு 70வயது மதிக்கத்தக்க யூதர் ஒரு மேசையைப் போட்டு தமது அழிவுகளையும் அவலங்களையும் சிறுசிறு பிரசுரங்களாக வைத்துக் கொடுத்துக்கொண்டிருப்பார். நாம் 2009இன் பின் ..................?
நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2022 at 08:13, பிரபா சிதம்பரநாதன் said:

இப்பொழுது இந்த முறைகள் குறைந்து வருகிறது, ஆனாலும் தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்ற மாதிரி சிலருக்கு இதனை கைவிட கடினமாக உள்ளது. அவ்வளவுதான். யாழ் நகரிற்குள் இருக்கும் வங்கி அலுவலகங்களுக்கு சென்றால் செருப்பினை கழட்டி வைத்து விட்டு உள்ள வரும்படி கேட்கமாட்டார்கள், ஆனால் அதுவே தெல்லிப்பழையில் (உதாரணத்திற்காக)  உள்ள வங்கி அலுவலகம் என்றால் வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கேட்காமலே செருப்பை கழட்டி வெளியே வைத்துவிட்டுத்தான் வருவார்கள். இது அவர்களின் பழக்கதோஷம்..இப்படி சில இடங்களில் எங்களையறியாமலே செருப்பை கழட்டி வைத்துவிட்டு போயிருக்கிறோம்.. ஆனால் இதைவிட மாறவேண்டிய வேறு போலித்தனங்களும் பழக்கவழக்கவ்களும் உள்ளன, அவை மாறினால் எவ்வளவோ நிம்மதி..நன்மை!!

சைவக் கோயில்களுக்கு போகும்போது எங்களையறியாமலேயே கால்கள் காலணிகளை துறந்துவிடுகின்றன. ஒருவகையில்  நூலகங்களும் கோயில்கள்தான். ஆனால் இரண்டும் ஒன்றல்ல. 

ஆனால் பாடசாலைகளில் சப்பாத்து அணிந்து வருவது கட்டாயம். அதற்குக் காரணங்கள் உண்டு. அது எல்லோருக்கும் தெரிந்ததே. 

எங்கள் பிற்போக்குத்தனங்கள், போலிப் பெருமைகள், அறிவிலித்தனங்கள் எங்கள் இனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பாதகமாய் இருக்Kறது. 

(துரையப்பா விளையாட்டு அரங்கிற்குச் (பார்க்க)  சென்றபோது காவளாளி உள்ளே விடவில்லை. கட்டணத்தை கட்டிவிட்டுச் செல்கிறேன் என்றேன். அப்படி ஏதுமில்லை  என்றார். உள்ளே செல்ல என்ன செய்ய வேண்டும் என்றபோது, அணையாளரிடம் அனுமதிக் கடிதம் பெற்று வருமாறு கூறினார்.

ஆனால் இங்கே,  நான் இருக்கும் இடத்தில் மிகப்பெரிய recreation centre + Library  இருக்கிறது. அங்கே யாரும் எவரும் எப்போதும் செல்லலாம். சில கட்டுப்படுகள் உண்டு. எனது பிள்ளைகள் கொஞ்ச நேரம் கிடைத்தாலும் நீச்சலுடைகளைத் தூக்கிக்கொண்டு அங்கே ஓடிவிடுவார்கள். 

வேறுபாட்டைப் பாருங்கள் ☹️)

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் சொல்லகிறது எரிக்கப்பட்ட நூலகத்தில் தமிழர் வரலாற்றின் தொன்மையை சொல்வதற்கு ஒன்றும் இருக்கவில்லை என்று. 

அதுவும் தமிழர்கள் எழுதிய வரலாற்று குறிப்பை வைத்து.

On 1/6/2022 at 14:15, இணையவன் said:

நூலகம் எரிக்கப்பட்டதைத் தமிழர்களின் அறிவு ஒடுக்கப்பட்டது என்பதை விட எமது வரலாற்றுச் சான்றுகளை அழித்த செயலாகவே நோக்க வேண்டியுள்ளது.

தற்போது நூலகம் நூலகமாக மட்டுமே இருக்குமானால் இதைக் கண்காட்சிக் கூடமாகவே பார்க்க வேண்டி வரும். அறிவியல் சார்பாக எவ்வாறு எதிர்காலத்தில் இதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்கலாம் என்று ஆலோசிக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்+
21 hours ago, nochchi said:

நீங்கள் சுட்டியவைதான் மெய்நிலை. ஆனால், எம்மிடம் ஒரு தொடரான செயற்திட்டமும் ஒருங்கமைந்த செயற்பாடும் இல்லை. எதிர்காலத்திலாவது செய்தால் நன்று. இந்த நூலக எரிப்பு விடயம் யாரோடாவது உரையாடினால் 'அப்படியா' என்று ஆச்சரியமாகக் கேட்பார்கள். யூதர்கள் தமது தேசத்தை அடைந்ததோடு, மேலும் நிலங்களைப்பிடித்துவருகிறார்கள். ஆனால் அவர்கள் தமது பரப்புரையைக் கைவிடவில்லை. எமது நகரத்திலே நடக்கும் வாராந்தச் சந்தையிலே மாதமொருதடவையாவது ஒரு 70வயது மதிக்கத்தக்க யூதர் ஒரு மேசையைப் போட்டு தமது அழிவுகளையும் அவலங்களையும் சிறுசிறு பிரசுரங்களாக வைத்துக் கொடுத்துக்கொண்டிருப்பார். நாம் 2009இன் பின் ..................?
நன்றி

அந்த யூத ஐயாவிற்கு எனது வாழ்த்துக்கள். 
ஆனால்,

படு தன்னலவாதிகளான தமிழீழர்கள் உதையெல்லாம் செய்வாங்கள் என்டு கனவிலையும் எண்ண வேண்டாம். தானும் தன்ர குடும்பமும் நன்றாக வாழ்ந்தால் காணும், ஆனால் தனக்காக வேறு ஆரேனும் போய்ச் சண்டை பிடித்துச் சாக வேண்டும் என்டு வாழும் இந்தக் கூட்டத்தில் உதெல்லாம் எட்டாக் கனிதான்.  சும்மா நாங்கள் வாயைப் போட்டு பொச்சடிக்க வேண்டியது தான்.

வெள்ளை நாடுகளில் உள்ள இரண்டாம் தலைமுறையில் (2கே) பெரும்பாலானோர் உதை விட மோசம். ஏனென்டு கூடத் திரும்பிப் பார்ப்பது இல்லை. அதை அறியவும் விருப்பமில்லை - தமிழே தெரியாதாம், இது வேறை பாப்பாங்கள் என்டோ நினைக்கிறியள்.

அப்படி மாறிவிட்டது காலம்!

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2022 at 00:40, Kapithan said:

துரையப்பா விளையாட்டு அரங்கிற்குச் (பார்க்க)  சென்றபோது காவளாளி உள்ளே விடவில்லை. கட்டணத்தை கட்டிவிட்டுச் செல்கிறேன் என்றேன். அப்படி ஏதுமில்லை  என்றார். உள்ளே செல்ல என்ன செய்ய வேண்டும் என்றபோது, அணையாளரிடம் அனுமதிக் கடிதம் பெற்று வருமாறு கூறினார்.

ஆனால் இங்கே,  நான் இருக்கும் இடத்தில் மிகப்பெரிய recreation centre + Library  இருக்கிறது. அங்கே யாரும் எவரும் எப்போதும் செல்லலாம். சில கட்டுப்படுகள் உண்டு. எனது பிள்ளைகள் கொஞ்ச நேரம் கிடைத்தாலும் நீச்சலுடைகளைத் தூக்கிக்கொண்டு அங்கே ஓடிவிடுவார்கள். 

வேறுபாட்டைப் பாருங்கள் ☹️)

துரையப்பா விளையாட்டரங்கு எப்பொழுதும் திறந்திருந்தால் குழு சண்டைகள்தான் அதிகமாகும் என்பது எனது தனிப்பட்ட எண்ணம் .. ஏன் என்றால் அரசியல் தலையீடுகளும், யார் பெரியவர் என்ற சமூக மனபாங்கு உள்ள எமது நாட்டில் மாற்றங்களை உருவாக்குவது சற்று கடினம். 

இப்போதைக்கு இந்த மாதிரி பொது மைதானங்கள், அரங்குகள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டால் எல்லோருக்கும் நன்மை. 

நீங்கள் கூறுவது போலவே எமது சமூகம்(புலம்பெயர், இலங்கை வாழ்) போலிப்பெருமைகள், சில நடைமுறைக்கு சரிவராத பழக்கவழக்கங்களை கைவிட்டு முன்னேற வேண்டும் என விரும்புகிறேன். முதலில் கல்வி, வர்க்கவேறுபாடுகள், ஆண்பெண் சமத்துவம், சிறுவர் நலன்கள் என அடிப்படை சிந்தனைகளில் இருந்து மாறவேண்டும். அதன் பிறகு இந்த பிற்போக்குத்தனங்கள், அறிவிலிதனங்கள் குறைந்து போகும் என நம்புகிறேன். 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப் பிழை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.