Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வவுனியாவில் மற்றுமொரு சிறுமி சடலமாக மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் மற்றுமொரு சிறுமி சடலமாக மீட்பு

0 0
 
spacer.png
 

வவுனியா கணேசபுரம் 8 ஆம் ஒழுங்கை பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று (30) இரவு 7.30 மணியளவில் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

ராசேந்திரன் யதுசி (வயது–16) என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
தாய் தந்தையை இழந்த நிலையில் மாமனாருடன் வசித்து வந்துள்ளார்.

நேற்று நண்பகல் தனியார் கல்வி நிலையம் சென்ற நிலையில் மாலை வரை வீடு திரும்பவில்லை.

இதயைடுத்து குறித்த சிறுமியை தேடிய உறவினர்கள் காணாது நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

முறைப்பாட்டுக்கமைய நெளுக்குளம் பொலிஸார், உறவினர்கள் மற்றும் அயலவர்கள் சிறுமியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது அந்தப் பகுதியிலுள்ள மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியிலுள்ள கிணறொன்றிலிருந்து இரவு 7.30 மணியளவில் சிறுமி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் முறைப்பாட்டுக்கமைய வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடவியல் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து அப்பகுதியில் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது கிணற்றிலிருந்து 50 மீற்றர் தூரத்திலுள்ள மரத்தின் கீழ்பகுதியில் சிறுமியின் காலணி மற்றும் புத்தகங்கள் மீட்கபட்டது.

அத்துடன் மோப்ப நாயின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மோப்ப நாய் கிணறு அமைந்துள்ள பகுதியிலிருந்து 100 மீற்றர் தூரத்திலுள்ள காணியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் தஞ்சம் அடைந்திருந்தது. குறித்த பாவனையற்ற வர்த்தக நிலையத்தில் மதுபான போத்தல்கள் மற்றும் கயிறு என்பன காணப்பட்டுள்ளன
அதன் பின்னர் குறித்த வர்த்தக நிலையத்தின் வீட்டாரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

284824580_695122648455206_68323009269000

284955834_695122615121876_81203772145818285034961_695122585121879_80154801028267

285190200_695122681788536_79351836967532

இரவு 11.45 மணியளவில் கிணற்றில் காணப்பட்ட சிறுமியின் சடலத்தை மீட்டெடுக்கும் பணியில் தடவியல் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்திருந்ததுடன் பொதுமக்களின் உதவியுடன் சிறுமியின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.

குறித்த பகுதியில் இராணுவத்தினர் பாரியளவில் குவிக்கப்பட்டமையினால் அவ்விடத்தில் சற்று பதற்ற நிலமை காணப்பட்டதுடன் சடலம் பிரதே பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

சிறுமியின் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னரே மரணத்துக்கான காரணம் தொடர்பில் தெரிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸாருடன் இணைந்து தடயவியல் பொலிஸர் முன்னெடுத்துள்ளனர்.

 

https://newuthayan.com/வவுனியாவில்-மற்றுமொரு-சி/

 

  • கருத்துக்கள உறவுகள்

கண்டா வரச் சோல்லுங்க. கர்ணன கையோட கூட்டிவாருங்க. 

அவன கண்டா வரச் சொல்லுங்க. கர்ணன கையோடு கூட்டி வாருங்க.

😭

  • கருத்துக்கள உறவுகள்

சமூக விரோதிகள் நாட்டில் அதிகரித்து விட்டார்கள்.
போதை வஸ்து பாவனையை ஊக்குவிக்கும் அரசும்,
அவர்களுக்கு வாதாடும்... தமிழ் வக்கீல், அரசியல் வாதிகளும்..
தம்மை திருத்திக் கொள்ள வேண்டும். 😡
இல்லையேல் அடுத்த தேர்தலில் காணாமல் போவீரர்கள்.

தேவையில்லாத இராணுவத்தை வெளியில் எடுத்தாலே பாதி குற்றம் குறையும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வவுனியா அருகே மர்மமாக உயிரிழந்த 16 வயதான சிறுமியின் சடலம் கண்டெடுப்பு

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இலங்கையில் மர்மமாக உயிரிழந்த மற்றுமொரு சிறுமியின் சடலம் கண்டெடுப்பு

இலங்கையில் 9 வயதான சிறுமியொருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தேறி ஓரிரு தினங்களில், மற்றுமொரு சிறுமியின் சடலம் வவுனியா பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா - கணேசபுரம் பகுதியிலிருந்து 16 வயதான சிறுமியின் சடலம் நேற்றிரவு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தனியார் கல்வி நிறுவனமொன்றிற்கு சென்று மீண்டும் வீடு திரும்பாத நிலையில், குறித்த சிறுமியை தேடும் நடவடிக்கைகளை உறவினர்கள் ஆரம்பித்துள்ளனர்.

எனினும், சிறுமியை கண்டுபிடிக்க முடியாத நிலையில், உறவினர்கள் நெளுக்குளம் போலீசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்து, பிரதேச மக்களின் உதவியுடன், போலீசார் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிறுமியின் வீட்டிற்கு அண்மித்த பகுதியிலிருந்து, அவரது பாதணி மற்றும் புத்தகங்களை போலீசார் கண்டெடுத்துள்ளனர்.

இதையடுத்து, தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் வவுனியா பொது மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

நேற்றிரவு சம்பவ இடத்திற்கு போலீசாருக்கு மேலதிகமாக, ராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சிறுமியின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, பெற்றோரை இழந்த சிறுமி, அவரது உறவினர் ஒருவரின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் மற்றும் வவுனியா போலீசார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

9 வயது சிறுமியின் கொலை

களுத்துறை - பண்டாரகம - அட்டுலுகம பகுதியில் கடந்த 28ம் தேதி 9 வயதான சிறுமியொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த 27ம் தேதி கோழி இறைச்சி வாங்குவதற்காக வர்த்தக நிலையத்திற்கு சென்று, மீண்டும் வீடு திரும்பாத நிலையில், சிறுமியை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

 

இலங்கையில் மர்மமாக உயிரிழந்த மற்றுமொரு சிறுமியின் சடலம் கண்டெடுப்பு

இந்த நிலையில், வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலமொன்றில் புதைக்கப்பட்ட நிலையில், சிறுமியின் சடலம் மறுதினம் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பிரதான சந்தேகநபர் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

வர்த்தக நிலையத்திற்கு சென்று வீட்டு திரும்பிய சிறுமியை தான், தோட்டமொன்றிற்கு அழைத்து சென்று, துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளது.

எனினும், சிறுமி அதற்கு எதிர்ப்பை தெரிவித்த நிலையில், சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முடியாது போனதாகவும் அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.

இந்த விடயத்தை சிறுமி ஏதோ ஒரு வகையில், ஏனையோருக்கு வெளிப்படுத்தி விடுவார் என்ற அச்சத்திலேயே, சிறுமியை நீருக்குள் மூழ்கடித்து கொலை செய்துள்ளதாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுமியின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் பாணந்துறை மருத்துவமனையில் நேற்று நடத்தப்பட்டது.

சிறுமியின் வாய் மற்றும் மூக்கு பகுதிக்குள் சேற்று நீர் சென்றமையே, மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனையை நடத்திய மூன்று பேரை கொண்ட சட்ட வைத்திய அதிகாரிகள் குழு அறிவித்துள்ளது.

 

இலங்கையில் மர்மமாக உயிரிழந்த மற்றுமொரு சிறுமியின் சடலம் கண்டெடுப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

அத்துடன், சிறுமி எந்தவகையிலும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்பதும் பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாணந்துறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, இரண்டு தினங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபருக்கு சார்பாக சட்டத்தரணிகள் முன்வர மறுப்பு

அட்டுலுகம பகுதியில் 9 வயதான சிறுமியை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கு சார்பாக எந்தவொரு சட்டத்தரணியும் நீதிமன்றில் முன்னிலையாக மாட்டார்கள் என பாணந்துறை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிறுமியின் மரணம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாணந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அஜித் பீ பெரேரா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரதேசத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளமையே, இவ்வாறான குற்றச்சாட்டுகள் அதிகரிப்பதற்கு காரணம் என தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாணந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அஜித் பீ பெரேரா தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61642184

  • கருத்துக்கள உறவுகள்

அது ஏன்... தமிழ், முஸ்லீம்... சிறுமிகள்தான் கொலை செய்யப் படுகிறார்கள். 😡

  • கருத்துக்கள உறவுகள்

தென்பகுதியில் பலகாலமாக நடந்தது நமது கண்களுக்கு தெரியவரவில்லை. அரசியல்வாதிகள் தம்மை பலப்படுத்துவதற்காக இப்படியான போதைப்பொருள் கலாச்சாரத்தை வளர்த்து, தம்மை வளப்படுத்திக்கொண்டார்கள். அங்கு குடு வலயம் என்று ஆங்காங்கே இருக்கும், காலையில் அந்த இடம் மயான பூமியாக  வெயிலில் நெளியும் புழுப்போல சில நெளிவுகளுடன் உடல்கள் கிடக்கும், மாலையில் அதே இடம் கலவர பூமியாக காட்சியளிக்கும். ஆனால் நாங்கள்; கல்வி, ஒழுக்கம், கடின உழைப்பு என்று வாழ்ந்தவர்கள். நாடு அதலபாதாளத்துக்கு போகும்வரை அங்கு எந்தவித சலனமுமிருக்கவில்லை ஆனால் நாம் எப்பவோ எச்சரிக்கை மணி அடித்தோம், சுரண்டும்போதெல்லாம் தட்டிக்கேட்டோம். எமது கல்வியை அழித்து, கலாச்சாரத்தை சீரழித்து, மொக்கு கூட்டமாக, உரிமை, சுதந்திரம் என்று கேள்வி கேட்க்காமல்  அலைய வைக்க, வேண்டுமென்று, திட்டமிட்டு எமது இளைய சமுதாயத்தை குறி வைத்து திணிக்கப்பட்ட போதை கலாச்சாரமிது. இதை தடுக்க எமது அரசியல்வாதிகளுக்கு நேரமுமில்லை மனமுமில்லை. அவர்கள் தங்கள் பதவிகளை தக்க வைப்பதில் மும்முரம். தெற்கு அரசியல்வாதிகள்போல் மக்களை அன்றாட தேவைகளிலும், அவலங்களிலும்  அலைய வைத்து தாம் சுகம் காண முயல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அடுத்த அதிர்ச்சி: வவுனியா அருகே மற்றுமொரு சிறுமி சடலம் கண்டெடுப்பு

 

  • கருத்துக்கள உறவுகள்

தென் இலங்கையில்... முஸ்லீம் சிறுமி கொலை செய்யப்பட்டதற்கு,
நாடுதழுவிய ரீதியில்  எட்டு மாவட்டங்களில், 
யாழ்ப்பாணம் உள்ளிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

வவுனியா... பாடசாலை  சிறுமியின் கொலைக்கு...  எதுவுமே நடக்கவில்லை.
தமிழ் அரசியல் வாதிகள் கூட... ஒரு கண்டனத்தை தெரிவிக்கவில்லை.
தமிழனின் உயிர் என்றால்... செத்து தொலையட்டும் என்று இருக்கிறார்கள் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

தென் இலங்கையில்... முஸ்லீம் சிறுமி கொலை செய்யப்பட்டதற்கு,
நாடுதழுவிய ரீதியில்  எட்டு மாவட்டங்களில், 
யாழ்ப்பாணம் உள்ளிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

வவுனியா... பாடசாலை  சிறுமியின் கொலைக்கு...  எதுவுமே நடக்கவில்லை.
தமிழ் அரசியல் வாதிகள் கூட... ஒரு கண்டனத்தை தெரிவிக்கவில்லை.
தமிழனின் உயிர் என்றால்... செத்து தொலையட்டும் என்று இருக்கிறார்கள் போலுள்ளது.

அவை பிசி....பொட்டி எப்பவரும் என்று காத்திட்டிருக்கினம்...குழப்ப வேண்டாம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.