Jump to content

ஆந்திரா விபத்து - அணில் ஏறினால் உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து விடுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆந்திரா விபத்து - அணில் ஏறினால் உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து விடுமா?

  • ஷங்கர் வடிசேட்டி
  • பிபிசி தெலுங்கு சேவைக்காக
33 நிமிடங்களுக்கு முன்னர்
 

அணில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆந்திராவில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

மின் கம்பத்தில் அணில் ஏறியதால் மின் கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டு உயர் அழுத்த கம்பிகள் அறுந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விலங்குகள், பறவைகள் உண்மையாகவே மின் கம்பிகளை சேதப்படுத்துகின்றனவா?

ஏதேனும் காரணத்தால் மின்சார கம்பி அறுபட்டால், மின்சாரம் தடைபடுவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில், சத்தியசாயி மாவட்டம் தாடிமரி மண்டலத்திலுள்ள சில்லகொண்டையப்பள்ளியில் ஜூன் 30-ஆம் தேதி எப்படி ஐவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது? இதுபோன்ற சூழல்களில் மின்சாரத்தைத் துண்டிக்கக்கூடிய பிரேக்கர் கட்டமைப்புகளுக்கு என்ன ஆனது?

இது அணிலின் தவறா?

இந்தச் சம்பவம் நடந்த சிறிது நேரத்துக்குப் பிறகு, ஆந்திர பிரதேச தெற்கு மின் விநியோக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹரிநாத ராவ் காணொளி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறினார்.

"அணில் ஒன்று மின்கம்பத்தில் ஏறி கம்பியை அறுத்து விட்டதால், அந்த வழியாகச் சென்ற ஆட்டோ மீது மின் கம்பி விழுந்தது. அப்போது தீ பிடித்த ஆட்டோவில் இருந்தவர்கள் உயிரிழந்தனர். அனந்தபூரம் மூத்த பொறியாளரை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளோம். தொழில்நுட்பக் குழுவிடம் விரிவாக அறிக்கையை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளோம்," என்று அவர் தெரிவித்தார்.

மேலும் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்தார்.

அதன்பிறகு, சம்பவ இடத்திலிருந்த காவல்துறை அதிகாரிகளும் தர்மாவரம் சட்டமன்ற உறுப்பினர் கேதிரெட்டி வெங்கடாமிரெட்டியும் இதே கருத்தை மீண்டும் கூறினர்.

"ஆட்டோவுக்கு மேலிருந்த மேற்கூரை மீது மின் கம்பி விழுந்ததால் இவை அனைத்தும் ஏற்பட்டன," என்று அவர் கூறினார்.

அரசு அதிகாரிகளும் ஆளும் கட்சித் தலைவர்களும் சாக்குப்போக்கை முன்னிறுத்திய விதம் குறித்து எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள், தவறான வயரிங் மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக விபத்து நடந்ததாகக் குற்றம்சாட்டினர்.

 

அணில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

துணை மின் நிலைய பராமரிப்பின்மை காரணமா?

ஆட்டோவில் பயணித்த 13 பேரில் 5 பேர் உயிரிழந்தனர், 6 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், உயர் அழுத்த மின்கம்பிகள் அணில்களால் அறுந்து விழுவது அரிது என்பது மின்சாரத் துறையில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற டி.வி.ராவின் கருத்து.

"அணில்களால் உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து விழும் சம்பவங்களை நான் பார்த்ததில்லை. ஆனால், வயர்களைச் சரிசெய்யும் போது பாம்பு, அணில்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. அந்தச் சூழ்நிலைகளில், அவற்றைச் சரிசெய்யும் பணியாளர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதுபோன்ற விபத்துகளைக் கட்டுப்படுத்த பிரேக்கர்கள் சமீபகாலமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் விபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன. அங்கு விபத்து ஏற்பட்டதற்கு அணில் காரணம் என்று கூறுவது முரணாக உள்ளது. அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் அணில் தான் காரணம் என்று கூறியது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இதற்கு துணை மின்நிலைய நிர்வாகத்தின் பராமரிப்பின்மை தான் காரணம். அந்தப் பிரச்னை அடையாளம் காணப்பட வேண்டும்," என்று பிபிசியிடம் கூறினார்.

 

மின்சக்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரேக்கர்களுக்கு என்ன ஆனது? ஏன் வேலை செய்யவில்லை?

இயற்கையாகவே காகம், சிட்டுக்குருவி போன்ற பறவைகள் மின் கம்பங்களில் அமர்வதையும் அணில் போன்ற உயிரினங்கள் மின் கம்பங்களில் ஏறிச் செல்வதைக் காணலாம். இதுபோன்ற நேரங்களில் ஏதும் பிரச்னை ஏற்பட்டால், மின் விநியோகத்தைத் தடை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு, அவற்றைச் சரி செய்வது இயற்கையான செயல்முறையாகும். அதன்படி, சில்லகொண்டையப்பள்ளி விபத்தில் அணில் பாய்ந்து கம்பி அறுந்தால் மின் விநியோகத்தை நிறுத்த வேண்டும். அதற்காக நிறுவனப்பட்டிருக்கும் பிரேக்கர்கள் வேலை செய்ய வேண்டும்.

பன்னாட்டு நிறுவனத்தில் மின்சக்தி பொறியாளராகப் பணியாற்றும் என்.ராம் மோகன், போதிய அளவு பிரேக்கர்கள் இல்லாததும் மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்ததற்கு முக்கியக் காரணம் என்று கருத்து தெரிவிக்கிறார்.

11 கிலோ வாட் துணை மின்நிலையத்தில் உள்ள பிரேக்கர்கள் ஏதேனும் சிறிய பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக வேலை செய்யும். ஏதேனும் பிரச்னையெனில், 33 கிலோவாட் துணை மின் நிலையத்தில் பிரேக்கர்கள் வேலை செய்ய வேண்டும். இரண்டிலும் ஏதாவது ஒன்றிலாவது வேலை செய்திருந்தால் இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டிருக்காது. ஏன் பிரேக்கர்கள் வேலை செய்யவில்லை என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். சமீபகாலமாக பிரேக்கர்களை தேவைக்கேற்ப பயன்படுத்துவதில்லை. மூன்று லைன்களுக்கு தனித்தனி பிரேக்கர்கள் இருக்க வேண்டிய இடத்தில் அதற்கு எதிர்மாறாக நடக்கிறது. சில இடங்களில் அவை இருக்கிறதா என்றே தெரியவில்லை. இதுபோன்ற விபத்துகள் நடக்கும்போது, உண்மையில் பிரேக்கர்கள் இருக்கின்றனவா இல்லையா என்ற சந்தேகம் ஏற்படுகிறது," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

ராம் மோகன், சாலையிலுள்ள உயர் அழுத்த மின் கம்பிகளில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அபாயத்தைக் கட்டுப்படுத்தப் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

 

ஆந்திரா விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

தரத்தில் குறைபாடுகள்

மின்சார விநியோகத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் தரம் பற்றியும் கேள்விகள் எழுகின்றன. குறிப்பாக உயர் அழுத்த கம்பிகளுக்குப் பதிலாகக் குறைந்த அழுத்த கம்பிகளைப் பதித்துள்ளதாகச் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

"மாநிலத்தின் பல இடங்களில் மின்சாரத் துறை பயன்படுத்தும் கருவிகள் குறித்துப் பல புகார்கள் வந்துள்ளன. ஆனால், மின்சாரத் துறை அதில் கவனம் செலுத்தவில்லை. தனியார் ஒப்பந்ததாரர்கள் தன்னிச்சையாகச் செயல்படுவதால், அதிகாரிகளைக் கண்டு கொள்வதில்லை. தரம் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது.

ஊழியர்களும் இதனால் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் மின் கடத்தில் மிகவும் மோசமாக இருப்பதால் திருப்பி அனுப்பப்படுகின்றன. இன்னும் மின் கம்பிகள், மின் கடத்திகள், மின் கடத்தா பொருட்களின் தரம் குறித்து சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்," என்றார் மின்வாரிய தொழிலாளர் சங்கத் தலைவர் எல்.ராகவராவ்.

1104 சங்கத்தின் தலைவரான ராகவ்ராவ் பிபிசியிடம் பேசியபோது, ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் பணி அழுத்தம் போன்ற பிரச்னைகளை அவர்கள் அனைவரும் எதிர்கொள்கின்றனர். விதிகளின்படி, குறைந்தது 1000 இணைப்புகளுக்கு ஒரு மெயின் மைன் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 5000 இணைப்புகளுக்கு ஒரு மெயின் லைன் தான் இருக்கிறது," என்றார்.

 

ஆந்திரா விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

"கட்டண உயர்வில் தான கவனம் உள்ளது, பராமரிப்பில் அல்ல" - பவன் கல்யாண்

இரண்டு மாதங்களுக்கு முன், எலுரு மாவட்டம், ஜங்காரெட்டி குடேம் அருகே இத்தகைய விபத்து நடந்தது. பைக்கில் சென்ற போது மின்சார கேபிள் அறுந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சமீபத்திய சம்பவத்தில் 5 பேர் உயிருடன் எரிந்து கருகினர். இதுபோன்ற விபத்துகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் கோரிக்கை விடுத்துள்ளார்.

"மாநில அரசு மின் கட்டணத்தை உயர்த்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், மின் கம்பிகளைப் பராமரிப்பதில் அக்கறை காட்டவில்லை. இவ்வளவு பெரிய விபத்துக்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். இதை மூடி மறைக்க முயல்வது ஏற்புடையதல்ல. அணில் என்ற பெயரில் ஏற்படும் தோல்வி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக, விபத்துகள் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அரசின் அலட்சியமே விபத்துக்குக் காரணம். நிபுணர்களைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும்," என்றார்.

அறுந்து விழுந்த மின் கம்பியால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு துணை நிற்கும் என முன்னாள் அமைச்சரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் மாவட்டத் தலைவருமான மு.சங்கரநாராயணா தெரிவித்தார். விபத்து குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது அர்த்தமற்றது என்றார்.

"விபத்து நடந்த உடனேயே முதலமைச்சர் வெளிநாட்டில் இருந்தாலும் உடனடியாக பதிலளித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்தார். காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அடிப்படையில் விபத்து ஒரு பெண்ணால் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. அந்தப் பெண்ணும் மின் கம்பத்தில் காணப்பட்டார். கண்காணிப்பு குழுக்கள் மற்றும் மூத்த பொறியாளரின் அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்று பிபிசியிடம் விளக்கினார்.

மின்சார விநியோகத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதைச் சரிசெய்து மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்குத் தமது அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆந்திர பிரதேச தெற்கு மின் விநியோக நிறுவனத்தின் பதில்

ஆந்திர பிரதேச தெற்கு மின் விநியோக நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளர், மின் வாரியம் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மேற்கொண்ட திட்டங்கள் குறித்தும் விசாரித்து வருவதாகவும் தாடிமரி மண்டலத்தில் விபத்து நடந்த இடத்தை அவர் ஆய்வு செய்ததாகவும் கூறினார். விசாரணைக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழு பல விவரங்களைச் சேகரித்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடம் பேசி விவரங்களைச் சேகரித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஷீத், "இந்தப் பகுதியில் மின்வாரிய பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அனைத்து கோணங்களிலும் விவரங்களைச் சேகரித்து வருகிறோம். இறுதி அறிக்கையில் எங்களுடைய கவனத்திலுள்ள விஷயங்களைக் குறிப்பிடுவோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும்," என்று கூறினார்.

அணிலுக்குச் செய்யப்பட்ட உடற்கூராய்வு

விபத்துக்கு காரணமான அணில் இறந்துவிட்டதாகவும் அந்த அணிலுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தாடிமரை மண்டல கால்நடை அலுவலர் மேற்பார்வையில் பிரேத பரிசோதனை நடந்தது. உயர் அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சிஐ மன்சூருத்தீன் பிபிசியிடம் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/india-62022908

அணில் பாலாஜியின் தாக்கம் ஆந்திராவுக்கும் போயிற்றுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வாதிகள்.... ஊழல் செய்து, 
மலிவான, தரமற்ற பொருட்களால்... திட்டங்களை செய்து 
விபத்து வந்தவுடன்.. வாய் பேசாத பிராணிகளை, துணைக்கு அழைத்து தப்பி விடுவார்கள். 

சேமிப்பு கிடங்கில் இருந்த... பல தொன் சர்க்கரையை, எறும்பு தின்று விட்டது என்றும்..
அதனை வைத்திருந்த சாக்கை.. கறையான் அரித்து விட்டது என்றும் சொல்லி,
கோடீஸ்வரர் ஆன குடும்பங்கள், இப்பவும் ஆட்சி செய்கிறார்கள்.

கூவம் ஆற்றை... சுத்தப் படுத்த முப்பது வருசத்துக்கு முன்பு...
70 கோடி ரூபாய் ஒதுக்கினால்,
ஆற்றில், முதலை நின்றது... அதை பிடிக்க..
அந்த 70 கோடியையும் செலவழித்து விட்டோம்  என்று சொல்லியும் தப்பித்தவர்கள்.
அதனை நம்பவும், ஆட்கள் இருக்கும் போது.. அவர்கள் காட்டில் மழைதான். 

இப்படியான சாக்கு போக்குகளை... 
இந்தியா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் மட்டுமே பார்க்கலாம்.
சீனா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் போன்ற 
நாடுகளில்... சொன்னால், நடப்பதே வேறு..... 

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறந்துபோன அணிலுக்கு ஏன் உடற்கூராய்வு நடத்தினார்கள். அது மின்சாரம் பாய்ந்து இறந்து இருக்கும்....ஒரு கம்பியில் பறவைகள் இருப்பது  தொடுவது பிரச்சனை இல்லை ஆனால் அறுத்து மற்ற கம்பி உடன் முட்டி கொண்டிருக்கும் கம்பியை  பறவைகள் மனிதர்கள் எவரும் தொட்டால் உடனே மின்சாரம் தாக்கும்    இதை குறுக்குசுற்றோட்டம் என்று கூறுவார்கள்.......ஜேர்மனியில் செய்வது போல் நிலத்திக்கு கீழே கம்பி இணப்பது நன்று 👍அந்த ஐவருக்கும் ........ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டோவில் பயணித்த 13 பேரில் 5 பேர் உயிரிழந்தனர், 6 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், உயர்

 

ஆட்டொவில்13 பேர் பயணிக்க முடியுமா ?  வேறு எதோ நடந்திருக்கிறது . அணிலைச்   சாட்டுகிறார்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.