Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி

Published by Rajeeban on 2022-07-09 

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

2.jpg

.
 

 

https://www.virakesari.lk/article/131138

ஜனாதிபதி மாளிகை மக்கள் வசம் ? நாட்டை விட்டு வெளியேறினாரா ஜனாதிபதி ?

கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ள நிலையில், ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளாராக என்ற சந்தேகம் தற்போது போராட்டக்காரர்கள் மத்தியில் தோற்றம் பெற்றுள்ளது.

Open photo

ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான நுழைவாயிலைக் கடந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்ததையடுத்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இதன்போது ஜனாதிபதி மாளிகைக்குள் ஜனாதிபதி இருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு விசேட அதிரடிபடையினரின்  படைவீரர்களும், இராணுவ வீரர்கள் பலரும் தமது பாதுகாப்பு கடமையில் இருந்து பின்வாங்கி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழிவிட்டு அகன்றுக்கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தள்ளார்.
 

 

https://www.virakesari.lk/article/131135

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோட்டா தப்பியோட்டம்: கண்டியில் தேடுதல் 

 

spacer.png

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகிய இரண்டிலும் இலங்கை எதிர்ப்பாளர்கள் நுழைந்துள்ளனர். அவ்விரு இடங்களிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருக்கவில்லை.

இதேவேளை, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாகவும் போராட்டக்காரர்கள் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அங்கும் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது,
 

https://www.tamilmirror.lk/செய்திகள்/கோட்டா-தப்பியோட்டம்-கண்டியில்-தேடுதல்/175-300037

 

கோட்டா தப்பியோட்டமா? 

அதிசொகுசு வாகன பேரணியொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று வெளி வந்த நிலையில் உள்ளது.

குறித்த வாகனப் பேரணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் வாகனப் பேரணியாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

https://www.tamilmirror.lk/செய்திகள்/கோட்டா-தப்பியோட்டமா/175-300038

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon

கோபுரத்தின் உச்சியில், யாரு....  😜

  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கை சனாதிபதி வீட்டுனுள், நீச்சல் தடாகத்தை கைப்பற்றி குளிக்கும் ஆர்ப்பாட்டக்கார்கள்..!🤭😛

 

FXNfa5AWAAAKFcT?format=jpg&name=medium

  • கருத்துக்கள உறவுகள்

பலத்த பாதுகாப்போடு விமான நிலையம் செல்லும் சொகுசு வாகனங்கள் !

பலத்த பாதுகாப்போடு... விமான நிலையம் செல்லும் சொகுசு வாகனங்கள் !

பலத்த பாதுகாப்போடு சொகுசு வாகனங்கள் அதிவேகமாக விமான நிலையத்திற்குச் செல்லும் காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன.

 

 

https://athavannews.com/2022/1290441

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

டிவிட்டரில் உள்ளது.

FXNhIBlWIAQStsD?format=jpg&name=large

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நெருக்கடி: கோட்டாபய மாளிகைக்குள் நுழைந்த மக்கள் - போலீஸ் கண்ணீர் புகைகுண்டு வீச்சு

9 ஜூலை 2022, 05:54 GMT
புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர்
 

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையில் அதிபர் கோட்டாபயவின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் வளாகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். முன்னதாக அவரது இல்லத்தை முற்றுகையிட முயன்றவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தண்ணீரையும் பீய்ச்சி அடித்தனர் இதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் காவல்துறையினர் வைத்த தடுப்புகளைத் தாண்டி கோட்டாபயவின் வீட்டை நோக்கி போராட்டக்காரர்கள் முன்னேறியதால் பதற்றம் ஏற்பட்டது. சில போராட்டக்காரர்கள் இல்லத்தின் பிரதான வாயில் மீது ஏறி இல்லத்துக்குள் நுழைந்தனர். ராணுவத்தினர் போராட்டம் நடக்கும் இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டத்தைக் கலைப்பதற்காக வானத்தை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர்.

 

போராட்டம்

பட மூலாதாரம்,SAJID NAZMI

அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த இருக்கைகளில் அமர்ந்திருக்கும் காட்சிகளும், நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன.

கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சால் காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் காட்சிகளை காண முடிகிறது.

அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

Facebook பதிவை கடந்து செல்ல, 1

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு, 1

நிலைமை தொடர்பில் கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் இல்லாத சூழல் ஆகியவற்றைத் தொடர்ந்து அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

இன்று அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் போன்றவை இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தன.

 

போராட்டம்

நேற்று முதலே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர் அமைப்பினர் தலைநகர் கொழும்புவை நோக்கி வந்தவண்ணம் இருக்கின்றனர். இன்று காலையிலும் ஏராளமான வாகனங்களில் மக்கள் கொழும்பு நகருக்குள் வருவதைக் காண முடிந்தது.

 

போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடந்துவரும் காலி மைதானத்துக்கு வெளியேயும் ஏராளமான போராட்டக்காரர்கள் திரண்டுள்ளனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-62104386

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

இதற்குத்தானே... ஆசைப் பட்டாய்  கோத்தா (குமாரா)  கண் கொள்ளா காட்சிகள். 
இன்று... மிக்க மகிழ்ச்சியான தினம்.  ஈழப்போரில் கோத்தாவால் கொல்லப் பட்ட   
140, 000 தமிழ் மக்களுக்கும் இன்றைய சம்பவங்கள் சமர்ப்பணம். 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கலந்துரையாடி தீர்மானத்தை எடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Articles Tagged Under: ரணில் விக்ரமசிங்க | Virakesari.lk

இந்நிலையில், பாராளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலைக் கடந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்ததையடுத்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இதையடுத்தே நிலைமையைக் கட்டுப்படுத்த  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 

முக்கியஸ்தர்களுடன் இரண்டு கப்பல்கள் பறந்தன 

தற்போது கொழும்பு துறைமுகத்திலிருந்து இரண்டு கப்பல்கள் முக்கியமான சிலருடன் வெளியேறியுள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கடற்படையினருக்கு சொந்தமான கஜபாகு,  சித்துரெல்ல  ஆகிய இரண்டு கப்பல்கள் அவசரமாக கொழும்பு துறைமுகத்திலிருந்து பொதிகளுடன் புறப்பட்டுள்ளன.

குறித்த கப்பல்களில் சிலர் பொதிகளுடன் அவசர அவசரமாக வெளியேறும் காட்சிகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

https://www.tamilmirror.lk/செய்திகள்/மககயஸதரகளடன-இரணட-கபபலகள-பறநதன/175-300046

மாளிகையை மட்டுமன்றி செயலகத்தையும் இழந்தார் கோட்டா 

ஜனாதிபதி செயலகத்துக்குள்ளும் போராட்டக்காரர்கள் நுழைந்தமையை அடுத்து அங்கு மிகவும் பதட்டமான நிலைமை ஏற்பட்டுள்ளது. 
 

spacer.png

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/மளகய-மடடமனற-சயலகததயம-இழநதர-கடட/175-300044

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராஜினாமா செய்யுமாறு கோட்டாவுக்க 16 எம்.பிக்கள் கடிதம் 

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து விலகுமாறு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

  டலஸ் உட்பட மொட்டு கட்சியின் 16 எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் எழுதி, பதவி விலகுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

புதிய பிரதமரின் கீழ் சர்வக்கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு இடமளிக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

spacer.png

https://www.tamilmirror.lk/செய்திகள்/இரஜனம-சயயமற-கடடவகக-16-எம-பககள-கடதம/175-300049

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரணிலை நிராகரித்தனர் 

 

கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருந்த நிலையில், அந்தக் கூட்டத்துக்கு செல்லாமல் இருக்க  கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

https://www.tamilmirror.lk/செய்திகள்/ரணிலை-நிராகரித்தனர்/175-300050

 

வடிவேல் எம்.பியும் வைத்தியசாலையில் 

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தலைமையகத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்ட போது, காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.tamilmirror.lk/மலையகம்/வடிவேல்-எம்-பியும்-வைத்தியசாலையில்/76-300051

  • கருத்துக்கள உறவுகள்

https://www.newswire.lk/2022/07/09/watch-protesters-inside-presidents-office-and-official-residence/

அடேய் அது யாரெல்லாம் படுத்த கட்டில் தெரியுமாடா😆.

#அரச கட்டிலில் மக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இலங்கைத்தீவு இன்றிலிருந்து வந்துவிட்டது. தற்போது ஒருபகுதி காவல்துறையும் இராணுவமும் போராட்டக்காரர்களுடன் இணைந்துள்ளதாக டுவீட்டர் வலைத்தளத்தில் வந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

https://www.newswire.lk/2022/07/09/watch-protesters-inside-presidents-office-and-official-residence/

அடேய் அது யாரெல்லாம் படுத்த கட்டில் தெரியுமாடா😆.

#அரச கட்டிலில் மக்கள்

ஒரு நாள் வாடகையை குடுத்துட்டு போங்கப்பா🤪

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

ஒரு நாள் வாடகையை குடுத்துட்டு போங்கப்பா🤪

டொலரில்….😆

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோட்டா அதிரடி அறிவிப்பு 

 

கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் தான் மதிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார் என, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை 4 மணியளவில் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

https://www.tamilmirror.lk/செய்திகள்/கோட்டா-அதிரடி-அறிவிப்பு/175-300053

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் : கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது - சஜித்

கோட்டாபய ராஜபக்ஸவும் மக்கள் ஆணை இல்லாத தற்போதைய பிரதமரும் பதவி விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றே ஒட்டுமொத்த நாட்டு மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்ற படியால், தற்போது சட்டவிரோதமாக பிரதமராக பதவி வகித்து வரும் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ள கலந்துரையாடல்களில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

Sri Lankan Tamils Prefer Sajith Premadasa To Lead Main Opposition

இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் பதுங்கியிருந்த ராஜபக்ஸக்கள் மீண்டும் அரசியல் களத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பளிக்கப்பட்டதும், இப்போராட்டத்திற்கு துரோகம் இழைத்தவரும் தற்போதைய பிரதமர் ஆவார் என்பதுடன் இந்த நெருக்கடியில் அவரும் பிரதிவாதி என்பதை குறிப்பிட வேண்டும்.

தன்னிச்சையான,அடக்குமுறையான, ஜனநாயக விரோத அரசாங்கத்தின் முடிவு இப்போது கண்ணுக்குத் தென்பட்ட வண்ணமுள்ள வேளையில் குதிரை ஓடிய பிறகு தொழுவத்தை மூடுவது போன்ற வெற்று கலந்துரையாடல்களில் நாங்கள் பங்கேற்கப்போவதில்லை.

எமது அபிமானம் மிக்க தாய்நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஒரே இலக்கில் இந்நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒன்றுபட்டிருக்கும் தருணத்தில் அந்த வெற்றியின் இலக்கு கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருக்கும் நிலையில் போலியான பிரதமரால் அழைக்கப்படும் மற்றொரு வீண் கலந்துரையாடலால் இன்னுமொரு சுற்று ராஜபக்ஸகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுதான் நடக்கும். இத்தகைய நிலையற்ற தீர்வுகளிலிருந்து விடுபட்டு முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும்.

கோத்தபாய ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தின் பாதுகாவலர்களுடனும், வாயில்காப்பாளர்களுடனும் நாட்டின் எதிர்காலம் குறித்து கலந்துரையாட நாங்கள் விரும்பவில்லை என்பதோடு, மக்கள் போராட்டத்துடன் முன்நின்ற அனைத்து தரப்புகளுடன் இணைந்து இந்நாட்டைக் கட்டியெழுப்ப பங்களிப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 

https://www.virakesari.lk/article/131153

 

கோட்டா அவுட் ஆனார்? 

மக்கள் எதிர்ப்பு காரணமாக  கோட்டாபய ராஜபக்ஸ, ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

https://www.tamilmirror.lk/செய்திகள்/கோட்டா-அவுட்-ஆனார்/175-300058

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

கோட்டா அதிரடி அறிவிப்பு 

 

கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் தான் மதிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார் என, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை 4 மணியளவில் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

https://www.tamilmirror.lk/செய்திகள்/கோட்டா-அதிரடி-அறிவிப்பு/175-300053

இவையள் வேற கூத்து பண்ணிக்கொண்டு இருக்கினம்.

அடிக்கிற காத்தில அம்மியே பறக்குது..... குளவிகள் எம்மாத்திரம்..

***

பிரதமரின் அழைப்பினை நிராகரித்தனர், கட்சி தலைவர்கள்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள் - புகைப்படத் தொகுப்பு

Published on : 09 Jul 2022 14:55 pm
 

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png


spacer.png

spacer.png

spacer.png

 

spacer.png

spacer.png

 

https://www.hindutamil.in/album/politics/2921-protesters-break-into-president-s-home-as-sri-lanka-crisis-worsens-23.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்சித் தலைவர்கள் அதிரடி தீர்மானம் 

 

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனைத்து கட்சித் தலைவர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரியுள்ளனர்.

கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் தான் மதிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார் என, பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
 

https://www.tamilmirror.lk/செய்திகள்/கட்சித்-தலைவர்கள்-அதிரடி-தீர்மானம்/175-300059

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நெருக்கடி: கோட்டாபய ராஜபக்ஷ எங்கே? இதுவரை நடந்தது என்ன?

9 ஜூலை 2022, 10:16 GMT

spacer.png

நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகரில் குவிந்தனர்

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தமது அலுவல்பூர்வ மாளிகையில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியேறியிருக்கிறார். அவரது இல்லத்துக்குள் பலத்த பாதுகாப்பையும் மீறி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் சனிக்கிழமை பிற்பகலில் நுழைந்தனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஏற்கெனவே பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இருந்து வரும் செய்தி இணையதளம் ஒன்றில் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடரணி கடற்படை தளத்தை நோக்கிச் செல்லும் காட்சிகளும் அங்கு தயார்நிலையில் இருந்த கப்பலில் ஜனாதிபதி வாகனத்தொடரணியில் இருந்து உடைமைகள் ஏற்றிச் செல்லும் காட்சிகளும் பகிரப்பட்டுள்ளன. 

அது ஜனாதிபதி கோட்டாபயவின் இன்றைய காட்சிகளா என்பதை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. அவர் ராணுவத்தின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் தங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

பிரதமர் அவசர ஆலோசனை

இலங்கையில் தீவிரம் ஆகியுள்ள நெருக்கடி குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் நாடாளுமன்றத்தை கூட்டுமாறும் சபாநாயகரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "கோட்டாபய ராஜபக்ஷவும், மக்கள் ஆணை இல்லாத தற்போதைய பிரதமரும் என இருவருமே பதவி விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றே ஒட்டுமொத்த நாட்டு மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றபடியால், தற்போது சட்டவிரோதமாக பிரதமராக பதவி வகித்து வரும் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ள கலந்துரையாடல்களில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் தமது ட்விட்டர் பதிவில், "சட்டவிரோத ஆட்சியாளர்களின் ஆளுகையை பாதுகாக்க அவர்களுடன் காவல்துறைத் தலைவர் இணைந்து நடத்திய சதியே சட்டவிரோத ஊரடங்கு என்றும் இந்த புற்றுநோய் சர்வாதிகாரத்துவத்தை வீழ்த்த மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும்," என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்த சில எம்.பிக்கள் ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலகுமாறும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்ற ஒருவரை நாட்டை வழிநடத்த அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை தவறாக நிர்வகித்ததாகக் கூறி ஆளும் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக கடந்த பல மாதங்களாக மக்கள் போராட்டங்கள் முன்னெடுத்து வந்தனர். அதைத் தணிக்கும் விதமாக இலங்கை பிரதமர் பதவி வகித்த தற்போதைய ஜனாதிபதியின் சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த மே மாதம் பதவி விலகினார். அதைத்தொடர்ந்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிக்கு வந்த பிறகு மக்கள் போராட்டம் சில வாரங்களுக்கு தணிந்தன.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்வு போன்றவற்றால் மக்கள் மீண்டும் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர். 

இதைத்தொடர்ந்து ஜூலை 9ஆம் தேதி மிகப்பெரிய போராட்டத்துக்காக தலைநகர் கொழும்பில் திரளும்படி நாட்டு மக்களுக்கு போராட்டங்களை வழிநடத்துக்கும் பல்வேறு குழுக்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

பொதுமக்கள் போராட்டம்

 

இலங்கை போராட்டம்

பட மூலாதாரம், GETTY IMAGES

இதையடுத்து தலைநகர போராட்டங்களில் பங்கெடுக்க நாடு முழுவதிலுமிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்புக்கு பேரணியாக சென்றனர்.

 

காலையில் இருந்து தொடர்ச்சியாக போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளையும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸாரும் ராணுவத்தினரும் முயன்றனர். இந்த நிலையில், நண்பகல் 12 மணிக்கு பிறகு போராட்டக்காரர்கள் மீதான தங்களுடைய நடவடிக்கையை போலீஸார் மெல்ல, மெல்ல தளர்த்திக் கொண்டதை காண முடிந்தது. 

இதுவரை நடந்த போராட்டங்களில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் உள்பட குறைந்தது 30 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் காயம் அடைந்தவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை "கோட்டா வீட்டுக்குப் போ!" போன்ற கோஷங்களை எழுப்பியபடி போராட்டக்காரர்கள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் வீட்டை அடைந்தனர். அவர்களை முன்னேற விடாமல் தடுக்க ராணுவத்தினர் சுமார் இரண்டு மணி நேரம் போராடினர். கடைசியில் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையின் நுழைவு வாயில் கேட் மீது ஏறி உள்ளே குதித்தனர். பிறகு நுழைவாயில் கதவைத் திறந்து கொண்டு அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸாரும் ராணுவத்தினரும் ஒதுங்கிக் கொண்டனர்.

முன்னதாக, போலீஸார் சிலர் கூட்டத்தை அச்சுறுத்த வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அந்த நேரத்தில் கோபத்தில் இருந்த கூட்டத்தினர் மிக ஆவேசமாக வீட்டுக்குள் நுழைந்தபோது படையினரால் எதிர்ப்பாளர்களை தடுக்க முடியவில்லை.

 

இலங்கை போராட்டம்

பட மூலாதாரம், GETTY IMAGES

 

படக்குறிப்பு, 

ஊரடங்கு உத்தரவின் மூலம் போராட்டங்களை நிறுத்த காவல்துறை முயன்றது. ஆனால் மறுதினமே அந்த உத்தரவை திரும்பப் பெறும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டனர்.
 

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், கட்டடத்தின் உள்ளே இருந்து பேஸ்புக் லைவ்ஸ்ட்ரீம் செய்யத் தொடங்கினர். நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் மாளிகை அறைகள் மற்றும் அலுவலக அறைகளுக்குள் சென்று அங்கிருந்த மேஜை, நாற்காலிகளில் ஏறி குதித்தனர். 

வேறு சிலர், ஜனாதிபதி மாளிகை நீச்சல் குளத்தில் குதித்து நீச்சல் அடித்து மகிழ்ச்சியாக குரல் கொடுத்தனர். 

சிலர் ஜனாதிபதி மாளிகை அறைக்குள் இருந்த பொருட்களை கொண்டு செல்ல முயன்றனர். அப்போது அங்கிருந்த போராட்டங்களை நடத்தும் குழுவைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட நபர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் ஜனாதிபதி மாளிகையின் நுழைவு வாயிலை மூடி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் அதை கொண்டு வந்துள்ளனர். அங்கு போலீஸாரும் ராணுவத்தினரும் எதுவும் செய்ய முடியாதவர்களாக நிற்கிறார்கள்.

இலங்கை: சில அடிப்படைகள்

  • இலங்கை தென்னிந்தியாவிற்கு அப்பால் உள்ள ஒரு தீவு நாடு: 1948இல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது. மூன்று இனக்குழுக்கள் இங்கு வாழ்கின்றன. சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை உள்ளடக்கிய அந்த சமூகத்தினர் 99 சதவீதம் பேருடன் சேர்த்து இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகை 2.20 கோடி ஆகும்.
  • ரே சகோதர குடும்பம் பல ஆண்டுகளாக இந்த நாட்டின் ஆளுகையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2009ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது அவரது தலைமையிலான அரசாங்கம் தமிழ் ஈழத்துக்காக போராடி வந்த விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடத்திய உள்நாட்டுப் போரில் விடுதலைப்புலிகளை வீழ்த்தியது. அதன் மூலம் தன்னை கதாநாயகன் போல மஹிந்த ராஜபக்ஷ காட்டிக் கொண்டார். அவரது அராசங்கத்தில் அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த அவரது சகோதரர் கோட்டாபய இப்போது நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார்.
  • இப்போது இந்த நாடு எதிர்கொண்டு வரும் அசாதாரண பொருளாதார நெருக்கடியின் தாக்கம் வீதிகளில் மக்கள் கோபத்தின் வடிவில் வெளிப்பட்டுள்ளது. நாட்டின் பணவீக்கம் அதிகரித்து வருவதால் உணவுப்பொருட்கள், மருந்துகள் மற்றும் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மின் தடைகள் பரவலாக இருப்பதால் அதைத் தடுக்க அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சாதாரண மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர். அந்த போராட்டங்கள், பல வடிவங்களில் விரிவடைந்து இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் வெளியேற கோரிக்கை விடுக்கும் அளவுக்கு வலுப்பெற்றுள்ளன. 

கடந்த வாரம், நாட்டின் குறைந்து வரும் எரிபொருள் இருப்புகளைப் பாதுகாக்கும் முயற்சியாக அத்தியாவசியமற்ற வாகனங்களுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. 

 

இலங்கை போராட்டம்

பட மூலாதாரம், GETTY IMAGES

 

படக்குறிப்பு, 

தற்போதைய நெருக்கடிக்கு கோட்டாபய (வலது) மற்றும் மஹிந்த ராஜபக்ஷவே காரணம் என்று அரசு எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்
 

 

ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கடனில் எரிபொருளைப் பெறுவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகிறது - ஆனால் அந்த முயற்சியில் இதுவரை அரசு வெற்றி பெறவில்லை.

தற்போதைய நெருக்கடியை சமாளிக்க அவசர நிதியுதவியை வழங்குமாறு இலங்கை அரசு கோரி வருகிறது. இரண்டு ஆண்டுகளாக கடும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா பெருந்தொற்று, இலங்கையின் சுற்றுலா வர்த்தகத்தை முடக்கி விட்டதாக அரசாங்கம் கூறுகிறது. 

ஆனால், பொருளாதார நிபுணர்களில் ஒரு பிரிவினர் தவறான நிர்வாகமே தற்போதைய நிலைக்கு காரணம் என்று கூறுகிறார்கள். இந்த நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி கடந்த மார்ச் மாதம் முதல் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் தீவிரம் அடைந்ததாலேயே கடந்த மே மாதம் பிரதமர் பதவியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷ விலக நேர்ந்தது.
 

 

 

https://www.bbc.com/tamil/sri-lanka-62105780

 

  • கருத்துக்கள உறவுகள்

ராஜிதவை தாக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள்! (வீடியோ)

ராஜிதவை தாக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள்! (வீடியோ)

 

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் போராட்டக்காரர்களுடன் இணைந்து கொள்ள வந்த பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை போராட்டக்காரர்கள் எதிர்பாராத விதமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://tamil.adaderana.lk/news.php?nid=163246

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி பதவி விலகும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை : ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக தனது பதவி விலகலை அறிவிக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லையென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

Image

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக்கோரி கொழும்பை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட  போராட்டக்காரர்கள் இன்று பகல் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ஜனாதிபதி மாளிகைக்குள்ளும் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகுத்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதையடுத்து தற்போது பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகை வளாகத்திற்குள்ளும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Image

இந்நிலையில் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக தனது பதவி விலகலை அறிவிக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லையென  ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

https://www.virakesari.lk/article/131161

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.