Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருள் உலகம் நிர்ணயிக்கும் காதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிவா நேற்று இரவு தனது மகன் சுரேஷ் சொன்ன வார்த்தையை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியாம குழம்பி போய் இருந்தான் 24 வயசு தான் சுரேசிற்கு, 22 வயசு தான் சுரேசின் தங்கைச்சியான சுதாவிற்கு.சுரேஷ் புலத்தில் பிறந்து ஏனைய தமிழ் பிள்ளைகளை போல் நன்றாக படித்து பட்டம் பெற்று நல்ல உத்தியோகத்தில் கை நிறைய சம்பளத்துடன் ஒரு வேலையும் கிடைத்தது ஒரு அழகான வீடும் வாங்கி விட்டான்.

இவா தான் என்னுடைய கேள் பிரண்ட் இவா தான் கல்யாணம் கட்ட போறேன் என்று தன்னுடைய கேள் பிரண்டை அறிமுகபடுத்தினான் தன் தகப்பனிற்கு,சிவாவும் மிச்சம் நல்லம் என்று புன்முறுவலுடன் கை கொடுத்தான்,சுரேஷின் காதலியை முதலே சிவாவிற்கு அறிமுகமானவள் தான்.ஆனால் சுரேசின் காதலி என்று அல்ல நண்பணின் மகள் என்ற ரீதியில்.

சிவா தனது இளமை பருவத்தை அசைபோடுகிறான்,க.போ.த உயர்தரம் மூன்றாம் தரம் சோதனை எடுபதிற்காக டியூசன் செல்லும் போது தான் அங்கு முதல் தடவையாக மாலதியை கண்டு காதல் கொண்டது அவளும் பயந்து தன் காதலை வெளிபடுத்தினது,பிறகு இருவரும் சைக்கிளிள் செல்வது உயர்தர பரிட்சை முடிவுகள் வெளிவந்ததும் தான் பேராதனைபல்கலைகழகதிற்கு சென்றது மாலதிக்கு யாழ்பல்கலைகழக விஞ்ஞானபீடம் கிடைத்தமை,விடுமுறைகளிள் யாழ்வரும் போது பெற்றோர்களிற்கு தெரியாம மாலதியை சந்திபது ஆனாலும் ஊர் மூலம் அம்மாவிற்கு தெரிய வர அவாவும் தன்னுடைய பங்கிற்கு அப்பரிடம் பத்த வைக்க பிறகு இருவருமாக சேர்ந்து காதலை பிரிக்க கூறிய காரணங்கள்,தம்பி மாலதியை மறந்து போடு அவள் வீட்டில் மூத்த பிள்ளை மற்ற இரண்டு பெட்டைகளையும் அவள் தான் பார்க்க வேண்டும் நீ அவளை கட்டினா உன் தலையில் தான் எல்லா பொறுப்பும் விழும்,அவர்களுடைய அப்பாவும் சாதாரண அரசாங்க உத்தியோகத்தர் தானே அவர்களிடம் அவ்வளவு பணம் இருக்காது உனக்கு தம்பியும்,தங்கைச்சியும் இருக்கீனம் அவர்களை படிபித்து கல்யாணம் கட்டி வைக்கிறது எல்லாம் உன் பொறுப்பு.அப்பாவும் நீ படித்து முடிய முன்னம் ஓய்வு பெறவேண்டும் என்று ஒரு அழுகையுன் தன் எதிர்பார்புகளை சிவாவின் தாயார் கூற,பெற்றோரின் விருப்புக்கு ஏற்ப காதலை துறந்து படித்து பட்டம் பெற்று பொறியளாராக இலண்டன் வந்து பின் தங்கைக்கு இலண்டண் மாப்பிளை கட்டி வைத்தது,தம்பியை இலண்டணிற்கு வரவழைத்து படித்தமை ,பின் சிவா நாடு சென்று இலண்டன் மாப்பிளை என்று பெற்றோர் நிச்சயித்த பெண்ணை தனது 35 வயசில் சிவா திருமணம் செய்து இலண்டண் சென்று குழந்தை செல்வங்கள் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் போது,அவுஸ்ரெலியா நல்லதாம் குழந்தைகளின் எதிர்காலம் நல்லதாம் அத்துடன் காலநிலையும் கிட்டதட்ட எங்களுடைய ஊர் மாதிரி என்று மனைவியின் உறவினர்கள் கூறியதிற்கு இணங்க அவுஸ்ரெலியாவில் குடி பெயர்ந்து சகல பொருளாதார வசதிகளுடன் பிள்ளைகளும் வளர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த் இவ்வேளையில்.......

"டாட் இவா என்னுடைய கேள்பிரண்ட் இவாவை நான் திருமணம் செய்ய போறேன் என்று சுரேஷ் "வெளிபடையா சிவாவிடம் சொல்லி விட்டு போயிட்டான் ஆனா அவரோ தனது பழைய நினைவில் ஆழ்ந்து போய் மனைவி கூப்பிட திடுகிட்டு எழும்பி,அந்த நாளிள எனக்கு பொருளாதார சூழ்நிலையால் மாலதியை கைவிட நேர்ந்தது ஆனா இன்று நம்ம பெடியன் பொருளாதாரத்தில் நல்லா இருகிறான்,அவனிற்கு வேற என்ன கவலை இருகிறது என்று வாயிற்குள் முணுமுணுத்தபடி மனைவியிடம் செல்கிறார்...பொருள் உலகம் தான் காதலை வெற்றியடைய செய்யும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டார்....

Edited by putthan

சுரேசுக்கு பொருளாதார வசதி இருக்கிறது. ஆனால் அவனது தந்தைக்கு உள்ளதுபோன்ற தியாக உள்ளமும் கடமையுணர்வும் இருக்குமா ? காதலிப்பது கூட விளையாட்டாகவே இருக்கும். இடையூறுகளைத் தாண்டி வரும்போதுதான் நாம் பண்படுகிறோம். சிலர் பணம் இருக்கிறது என்பதற்காக தமது பிள்ளைகளுக்காக பணத்தைக் கண்டபடி செலவு செய்வார்கள். ஆனால் அது பிள்ளையின் எதிர்காலத்தைப் பாதிக்கப் போவதை அறியமாட்டார்கள்.

புத்தன் உங்கள் கதையில் சிந்திக்கத்தக்க பல விடயங்கள் உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்திற்கு நன்றிகள்,சுரேஷ் போன்றவர்களின் முதுமை பருவத்தில் வாழும் எழுத்தாளர்கள் தான் அவர்கள் வெற்றியாக வாழ்கை கொண்டு சென்றார்களா இல்லையா என்று கூறமுடியும்,(இன்னும் 25,30 வருடங்களிற்கு பிறகு தான் சுரேஷ் போன்ற கதாபாத்திரங்கள் முதுமை அடைந்து அவர்களின் அநுபங்களை கூறும் போது தான் உண்மை புலனாகும்.) :lol:

Edited by putthan

''பொருள் உலகம் தான் காதலை வெற்றியடைய செய்யும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டார்..."".

காதலுக்காக பொருளைத்துறந்தவர்கள் நிறையப்பேர் இரக்கிறார்கள்

உண்மைதான், சுரேஷின் காலத்தில் சமுதாயத்தில் ஏற்படப் போகும் மாற்றங்களினால் சுரேஷ் தனது இளமைக் காலத்தை நினைத்து பெருமூச்சு விடலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விகிதாசாரபடி பார்த்தால் காதலிற்காக பொருளை துறந்தவர்கள் மிகவும் குறைவும் என்பது என் கருத்து சிவா

பொருள் உலகம்தான் காதலை வெற்றி அடையச் செய்யும் எனபது தவறு என்பதை சுட்டிக்காட்டத்தான் எனது கருத்தை எழுதினேன்

மற்றும்படி நிங்கள் கூறியதுபோல் விகிதாசாரப்படி பார்த்தால் காதலிற்காக பொருளை துறந்தவர்கள் மிகவும் குறைவும் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்

புத்துமாமா உங்க கதையா சூப்பரா இருக்கு............எப்படி இப்படி எல்லாம் முடியுது............அது சரி இந்த லைனை பார்க்கும் போது எங்கையோ இடிக்குதே..................மாலதி நல்ல பெயர் தான் இருங்கோ மாமிகிட்ட போட்டு கொடுகிறென்............. :P :P

சிவா தனது இளமை பருவத்தை அசைபோடுகிறான்,க.போ.த உயர்தரம் மூன்றாம் தரம் சோதனை எடுபதிற்காக டியூசன் செல்லும் போது தான் அங்கு முதல் தடவையாக மாலதியை கண்டு காதல் கொண்டது அவளும் பயந்து தன் காதலை வெளிபடுத்தினது,

பொருள் உலகம்தான் காதலை வெற்றி அடையச் செய்யும் எனபது தவறு என்பதை சுட்டிக்காட்டத்தான் எனது கருத்தை எழுதினேன்

மற்றும்படி நிங்கள் கூறியதுபோல் விகிதாசாரப்படி பார்த்தால் காதலிற்காக பொருளை துறந்தவர்கள் மிகவும் குறைவும் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்

சிவா அண்ணா நிச்சயமா நான் துறக்கவே மாட்டேன்........... :P :P

புத்துஅங்கிள் உங்கள் ஒரு நிமிசக் கதை நல்லா இருக்கு. சிவா வலு கெட்டிக்காரன் போல இருக்கிறார்? மூன்றாம் தரம் ஏ.எல் எடுத்து பேராதனை பல்கலைக்கழகம் பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்படுவது என்றால் சும்மாவா?

சிலவேளைகளில், தான் எஞ்சினியராய் வந்துவிட்டேன் என்றபடியால் சிவாவுக்கு மாலதிமீது இருந்த பற்று குறைந்து போய் இருக்கலாம் அல்லவா? ஏனென்றால், ஆரம்பத்தில் அவர் எதுவித தகுதிகளும் இல்லாமல் இரண்டுதரம் சோதனை எடுத்து வெற்றியும் கிடைக்காமல் மட்டை அடித்துக்கொண்டு அல்லவா இருந்தார்? அந்த நேரத்தில் மாலதி அவர் கண்ணுக்கு பெரிதாக தோன்றி இருக்ககூடும். பிறகு, அம்மா, அப்பாவும் ஏதோ சாட்டு கூற இதுதான் தருணம் என்று மாலதியை அவர் கழற்றி இருக்கலாம். சரியா?

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் உங்க கதை அழகு. நல்லாருக்கு. தொடர்ந்து எழுதுங்க.

பொருள் உலகம் தான் காதலை வெற்றியடைய செய்யும்

இதில எனக்கு உடன்பாடு இல்லை

அருமையான கருப்பொருள்...

முதல்வன் படத்திலை "சக்கலக்க பேபி" பாடல்தான் உடனேயே நினைவில் வந்தது.... "ல

வ்விலை லயிச்சா, லவ்விலை லயிச்சா. வாழ்க்கையே ஓடிவிடும்... லைவ் (Life)ல

ஜெயித்தா லவ்பில ஜெயித்தா பொண்ணுங்க தேடி வரும்... ஓடிவரும்...

அந்த பாடல்....

http://raagam.net/M/Mudhalvan/Tamilmp3worl...laka%20baby.mp3

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துகளை கூறிய ஜம்மு பேபி,கலைஞன்,கறுப்பி,தயா ஆகியோருக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை நல்லாத்தான் இருக்கு! எடுத்தாண்ட கருப்பொருளும் சிறப்பு; ஆனால் பொருளாதாரம் 'காதலை" நிர்ணயிப்பதில்லை. அப்படி ஒரு வேளை நிர்ணயிக்குமாக இருந்தால் அது 'காதலும்' இல்லை!..

எத்தனை எத்தனை இடர்கள் தாண்ட வேண்டும் காதல்' என்பதன்முதல் தகுதியே அதுதான்!.

சிவா தன் காதலியை தன் பெற்றோர்கள் சொல்லிற்கிணங்கி விட்டுட்டாரா?

உது நல்லாவே இல்லை. ஒருக்கா சிவாவைக் கண்டால் புத்து மாமா சொல்லிடுங்க. சரியா மாமா.

இன்னும் தொடர்ந்து எழுதுங்கோ புத்து மாமா.

புத்துமாமா சிவாவை கண்டா சொல்லுறது இருகட்டும் எனக்கு என்னவோ உது புத்து மாமாவின்ட கதையோ என்று டவுட்டா இருக்குது நிலா அக்கா....... :P

புத்துமாமா சிவாவை கண்டா சொல்லுறது இருகட்டும் எனக்கு என்னவோ உது புத்து மாமாவின்ட கதையோ என்று டவுட்டா இருக்குது நிலா அக்கா....... :P

ஓ அபப்டியா? அப்படியெனில் சிவாக்கு பெற்றோர் சொன்னவை போல சுரேஸ் க்கும் ஏதாவது காரணங்களை சொல்லாமல் விட்டிருப்பாரா புத்து மாமா தான் சிவா எனில் :rolleyes:

ஓ அபப்டியா? அப்படியெனில் சிவாக்கு பெற்றோர் சொன்னவை போல சுரேஸ் க்கும் ஏதாவது காரணங்களை சொல்லாமல் விட்டிருப்பாரா புத்து மாமா தான் சிவா எனில் :rolleyes:

புத்துமாமாவிற்கு மகனே இல்லை பிறகு என்ன................நான் நினைக்கவில்லை.......... ;)

புத்துமாமாவிற்கு மகனே இல்லை பிறகு என்ன................நான் நினைக்கவில்லை.......... ;)

அப்போ இது புத்து மாமாவின் கதை இல்லை ஆமா :angry: :angry: :angry:

அப்போ இது புத்து மாமாவின் கதை இல்லை ஆமா :angry: :angry: :angry:

ஆனா பழைய கதை அவரின்டையா இருக்கலாமோ என்று பேபிக்கு ஒரு டவுட் அவ்வளவு தான் நிலா அக்கா...அதுக்கு ஏன் இவ்வளவு கோபம்............ :P ;)

புத்தன் கதை நண்றாக இருக்கின்றது பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தங்கை,வெண்ணிலா,கெளரிபால

புத்துமாமா எனக்கு ஒரு டவுட் கிளியர் பண்ணுங்கோ...........உதாரணதிற்கு ஒருவரை எடுபோம் நம்ம சுண்டலை எடுபோமே.........அவரை விட அவரின்ட காதலிக்கு 2வயசு கூட என்று வைத்து கொள்ளுங்கோ இதை பற்றி நீங்க என்ன நினைகிறீங்க புத்து மாமா........... :P :P :P

புத்துமாமா எனக்கு ஒரு டவுட் கிளியர் பண்ணுங்கோ...........உதாரணதிற்கு ஒருவரை எடுபோம் நம்ம சுண்டலை எடுபோமே.........அவரை விட அவரின்ட காதலிக்கு 2வயசு கூட என்று வைத்து கொள்ளுங்கோ இதை பற்றி நீங்க என்ன நினைகிறீங்க புத்து மாமா........... :P :P :P

:(:(:rolleyes: ஐஸ்வர்யராய் அபிஷேக் , சச்சின் தம்பதிகள்................. இப்படி சில தம்பதிகள் அப்படித்தானே :o

:(:(:rolleyes: ஐஸ்வர்யராய் அபிஷேக் , சச்சின் தம்பதிகள்................. இப்படி சில தம்பதிகள் அப்படித்தானே :o

ஆமாம் தானே நிலா அக்கா..............வல்லவன் படத்தில கூட அப்படி தான் நிலா அக்கா.............. :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.