Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சஜித் அல்லது டலஸ்... ஜனாதிபதி ? – நேற்றைய கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சஜித் அல்லது டலஸ் ஜனாதிபதி ? – நேற்றைய கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயம்!

சஜித் அல்லது டலஸ்... ஜனாதிபதி ? – நேற்றைய கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயம்!

கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதி பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளன.

ஒருமித்த கருத்தின் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் எவ்வித பிளவுகளும் இன்றி இருவரில் ஒருவரை நியமிப்பதற்கான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை நுகேகொடையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரலவின் இல்லத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திரக் கட்சி, அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒன்பது கட்சிகளின் உறுப்பினர்கள் நேற்று மாலை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதன்போது ஒருவரை ஜனாதிபதியாகவும் மற்றையவரை பிரதமராகவும் நியமிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

https://athavannews.com/2022/1290608

  • Replies 59
  • Views 2.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்- வாசுதேவ

13 ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை – வாசு

பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க 13 ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 13ஆம் திகதிக்குப் பின்னர் அமுல்படுத்துவதற்கான தீர்மானங்களை இப்போதே எட்ட முடியும் என்றார்.

இதேவேளை ஜனாதிபதி பதவி விலகுவதற்கு வழிவகுத்ததால் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதில் போராட்டக்கார்களும் ஈடுபட வேண்டும் என அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்தார்

இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் கேட்டுக்கொண்டார்.

https://athavannews.com/2022/1290631

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாற்றத்தை ஏற்படுத்தும் அதிகாரம் மக்களுக்கு உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் – தேசிய மக்கள் சக்தி

ஜனாதிபதி பதவிக்கு... அனுரவின், பெயரை முன்மொழியும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள்?

ஜனாதிபதி வேட்பாளராக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் பெயரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்மொழியவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று  கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதேநேரம், ஜனாதிபதி பதவிக்கு பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோரின் பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2022/1290638

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தருக்கு என்ன குறை..... அவரையும் முன்மொழிய வேண்டும்.😁

  • கருத்துக்கள உறவுகள்

யார் பதில் ஜனாதிபதி : ஐவரின் பெயர்கள் பரிந்துரை

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாளை பதவி விலகுவதாக சபாநாயகருக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் பதில் ஜனாதிபதி பதவிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபை முதல்வர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும,43ஆவது படையணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் யோசனைக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ சர்வக்கட்சி அரசாங்கத்தில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்காமல் சகல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவரை பிரதமராக நியமித்திருந்தால் தற்போதைய நிலை தோற்றம் பெற்றிருக்காது என பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தியையும், ஜனாதிபதியின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி பதவி வெற்றிடமானதை தொடர்ந்து அரசியலமைப்பின் பிரகாரம் ஒருவார காலத்திற்குள் பதில் ஜனாதிபதியாக பிரதமர் அல்லது சபாநாயகர் நியமிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் பாராளுமன்றத்தின் வாக்கெடுப்பின் ஊடாக இடைக்கால ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாளை பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் பிரதமர் பதவி குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும, 43 ஆவது படையணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஆகியோரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் பிரதமர் பதவிக்கு மக்கள் விடுதலை முன்னணியின் அனுர குமார திஸாநாயக்கவின் பெயரை பரிந்துரைத்துள்ளதுடன்,தற்போதைய நிலையில் பொதுஜன பெரமுன எதிர்க்கட்சியாக செயற்படுவது சிறந்ததாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பிரதமர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ,முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும ஆகியோரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரதான கட்சிகளுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  நுகேகொட பகுதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரலவின் இல்லத்தில் ஆளும் மற்றும் எதிர்தரப்பினர் இவ்வாறு பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளனர்.
 
https://www.virakesari.lk/article/131243

ஜனாதிபதி கதிரையில் ரணிலை ஒரு நாளேனும் அமரவிடமாட்டோம்!போராட்டக்களத்திலிருந்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Screenshot-2022-07-11-at-7.38.44-AM.png

13 ஆம் திகதி வரை காத்திருந்து சுபநேரத்தை பார்த்து காலத்தை கழிக்காமல் உடனடியாக இராஜினாமா கடிதங்களை கையளிக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளனர். காலி முகத்திடல் கோட்டா கோ கிராமத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டை விட்டு வெளியேற சுபநேரம் அவசியமா! நாட்டை விட்டு வெளியேறாது சுபநேரத்தை பார்த்துக்கொண்டு பதவி விலகாமல் இன்னும் ஒரு நாள் ஆட்சியில் இருக்க முற்பட்டால், அதற்கு இடமளிக்க முடியாது. கோட்டாபய ராஜபக்ச சென்றவுடன் ஜனாதிபதி கதிரையில் அமரலாம் என ரணில் ஒருபோதும் நினைக்க முடியாது.ரணிலை ஜனாதிபதி கதிரையில் ஒரு நாளேனும் அமரவிடமாட்டோம்.ஜனாதிபதி இராஜினாமா கடிதத்தினை கையளிக்கும் வரை மக்களின் கட்டுப்பாட்டிலிருந்து கட்டிடங்கள் விடுவிக்கப்படமாட்டாது.பதவி விலகுவதாக கூறி விளையாட முற்பட்டால் ஜனாதிபதியை ஒருநாளேனும் இருக்கவிடமாட்டோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரும் வெளியேறியதன் பின்னர், சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்க சிலர் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். ஆனால் மக்களின் அரசியல் கோரிக்கைகளை உள்ளடக்கிய நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும். ஜனாதிபதி கதிரையில் ரணிலை ஒரு நாளேனும் அமரவிடமாட்டோம்!

மேலும்,நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சிகள் சர்வகட்சி அரசாங்கத்தை கட்டியெழுப்ப முயற்சித்தால் அதற்கு இடமளிக்க மாட்டோம்.மக்கள் போராடினார்கள், இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர், அனைத்துக் கட்சிகளின் ஊழல்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க முடியாது. எனவே காலத்தை கழிக்காமல் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக இராஜினாமா கடிதங்களை கைளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

https://akkinikkunchu.com/?p=216512

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சட்டப்படி, கோத்தா பதவிவிலக முன்னர், ரணிலை நீக்கி, வேறு ஒருவரை பிரதமராக்காவிடில் ரணிலே ஜனாதிபதி. ஆனாலும் கோத்தாவின் மொட்டுக் கட்சி, தமக்கு பாதகம் செய்யாத தமது ஆட்களையே கொண்டு வர விரும்பும் என்பதால், அதை முடிவு செய்யவே, பதவி விலகலுக்கு நேரம் எடுக்கிறார்.....

மறுபுறம் அண்டைநாடுகள் பல அழுத்தங்களை பிரயோகிக்கின்றன. வழக்குகள், சிறை இல்லாமல் அமேரிக்காவில் வாழ விரும்பும் கோத்தா, அமேரிக்காவுடன் சில டீல்களை செய்யலாம்.

ஆக.... அடுத்தது யார் என்பதை கோத்தா ஜனாதிபதியாக இருக்கும் போதே முடிவு செய்யாவிடில், இது ஒரு பெரும் குளறுபடியில் முடியப் போகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, Nathamuni said:

புதிய காற்று வீசாதா?

ரணில்,சம்பந்தன்,கோத்தா,மகிந்த,சுமன்,மாவை போன்ற உக்கல் கட்டைகளை தூக்கி எறியும் வரை நாட்டுக்கு விமோசனம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பீலா மாஸ்டர் பொன்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Nathamuni said:

சட்டம் கட்டாயம் அடுத்து பிரதமர்தான் ஜனாதிபதி என சொல்கிறதா? இல்லையே.

ஜனாதிபதியால் பதவி வகிக்க முடியாது போனால் பிரதமர், அவராலும் முடியாது போனால் சபாநாயகர் அவராலும் முடியாது போனால் பிரதம நீதியரசர் என்றே சொல்கிறது என நினைக்கிறேன்.

இங்கே ஜனாதிபதிக்கு பொருந்தும் காரணம் பிரதமருக்கும் பொருந்துவதால் இருவரும் இல்லை என்பது தெளிவு.

ஆனால் அடுத்து சபாநாயகர்/பிரதம நீதியரசர் தவிர ஒருவரை ஜனாதிபதியாக்கினால்தான் சட்ட சிக்கல் வரும்.

உடனடியாக கோட்டா விலக, நீதியரசர் சபாநாயகருக்கு ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்து வைத்து, அதை பாராளுமன்றில் வைத்து செய்து, பின்னர் அதை பாராளுமன்றும் பிரேரணை மூலம் அங்கீகரித்தால் - ஓரளவு legitimacy இருக்கும்.

பின்னர் தேசிய அரசாங்கம் அமைத்து, குறித்த காலத்தில் 2/3 பெரும்பான்மையோடு 19 ம் திருத்தத்தை மீள கொண்டு வந்து - பொது தேர்தலை நடத்தலாம்.

19 பதை அப்படியே மீள கொண்டு வரும் போது ஜனாதிபதியின் பல்லு பிடுங்கபட்டும் விடும்.

18 minutes ago, குமாரசாமி said:

புதிய காற்று வீசாதா?

ரணில்,சம்பந்தன்,கோத்தா,மகிந்த,சுமன்,மாவை போன்ற உக்கல் கட்டைகளை தூக்கி எறியும் வரை நாட்டுக்கு விமோசனம் இல்லை.

நேற்று பிபிசிக்கு ஒரு சந்திரிகாவின் ஆலோசகராக இருந்த ஒருவர் கொடுத்த பேட்டியில் - சுமந்திரன் பெயரும் அடுத்த ஜனாதிபதி என பரிசீலிக்க படுவதாக கூறினார்.

சட் என்று உங்களைத்தான் நினைத்து கொண்டேன்😆.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, goshan_che said:

நேற்று பிபிசிக்கு ஒரு சந்திரிகாவின் ஆலோசகராக இருந்த ஒருவர் கொடுத்த பேட்டியில் - சுமந்திரன் பெயரும் அடுத்த ஜனாதிபதி என பரிசீலிக்க படுவதாக கூறினார்.

சுமன் சனாதிபதியாய் வந்தால் தமிழ்ச்சனத்துக்கு பாதிப்பு ஒண்டுமில்லைத்தானே? 🤣

Bild

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
35 minutes ago, goshan_che said:

சட்டம் கட்டாயம் அடுத்து பிரதமர்தான் ஜனாதிபதி என சொல்கிறதா? இல்லையே.

ஜனாதிபதியால் பதவி வகிக்க முடியாது போனால் பிரதமர், அவராலும் முடியாது போனால் சபாநாயகர் அவராலும் முடியாது போனால் பிரதம நீதியரசர் என்றே சொல்கிறது என நினைக்கிறேன்.

இங்கே ஜனாதிபதிக்கு பொருந்தும் காரணம் பிரதமருக்கும் பொருந்துவதால் இருவரும் இல்லை என்பது தெளிவு.

ஆனால் அடுத்து சபாநாயகர்/பிரதம நீதியரசர் தவிர ஒருவரை ஜனாதிபதியாக்கினால்தான் சட்ட சிக்கல் வரும்.

உடனடியாக கோட்டா விலக, நீதியரசர் சபாநாயகருக்கு ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்து வைத்து, அதை பாராளுமன்றில் வைத்து செய்து, பின்னர் அதை பாராளுமன்றும் பிரேரணை மூலம் அங்கீகரித்தால் - ஓரளவு legitimacy இருக்கும்.

பின்னர் தேசிய அரசாங்கம் அமைத்து, குறித்த காலத்தில் 2/3 பெரும்பான்மையோடு 19 ம் திருத்தத்தை மீள கொண்டு வந்து - பொது தேர்தலை நடத்தலாம்.

இந்த போராட்டங்களை யார் முன்னின்று ஒழுங்கு செய்தார்களோ அவர்களுக்குத்தான் தெரியும் யார்  அடுத்த ஜெனாதிபதி என.....
சிலவேளை அமைச்சரவையையும் அவர்களே தீர்மானிப்பர்...
நாய்க்குட்டிகாரி......😂

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

சட்டம் அப்படி தானே சொல்கிறது.

ஜனாதிபதி நீங்கினால்...... முறையே.... பிரதமர், சபநாயகர், பிரதம நீதியரசர்.....

இப்போது ஜனாதிபதி, பிரதமர் இருவருமே பதவி விலகவில்லை.

இதில் இப்போதய  பிரதமரை, ஜனாதிபதி நீக்கி, புதிய பிரதமரை நியமித்து தான் ஒதுங்கிக் கொள்லலாம். புதியவர் ஜனாதிபதியாவார்.

அல்லது தான் மட்டும் ஒதுங்கினால், இப்போதய பிரதமர் பதவி விலகாவிடில், நிலைமை என்ன?

பிரிட்டன் போலவே..... நாட்டு நிலைமையை மறந்து, லொட்டு, லொடுக்கர்கள் எல்லோரும் ஜனாதிபதி, பிரதமர் கனவில் இருப்பதால்......

கோத்தா , பொறுப்புடன் செய்ய வேண்டியதை செய்ய வேண்டிய அழுத்தம் காரணமாகவே..... புதன்கிழமை வரை தாமதிக்கிறார்.

இங்கே பல இரகசிய பேச்சுவார்த்தைகள், வெளிநாட்டு டீல்கள் நடக்கின்றது. சகலமும் இரண்டொரு நாளில் தெரியும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி பதவி இலங்கைக்கு இனியும் தேவைதானா.  

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Nathamuni said:

சட்டம் அப்படி தானே சொல்கிறது.

ஜனாதிபதி நீங்கினால்...... முறையே.... பிரதமர், சபநாயகர், பிரதம நீதியரசர்.....

ஓம் ஆனால் இதில் சட்டத்தில் போதிய நெகிழ்வு இருக்கிறது. உதாரணமாக ஜனாதிபதிக்கு பின் யார் (பிரதமர், சபாநாயகர்) யார் வந்தாலும் அவர்கள் 1 மாதம் வரை Acting President மட்டுமே. அதற்குள் பாராளுமன்றம் அவர்களை ஜனாதிபதியாக ஏற்க வேண்டும். தான் மட்டுமே உறுப்பினராக உள்ள நிலையில் ரணில் இதை வெல்வதை நினைத்தும் பார்க்க முடியாது.

அதுமட்டும் இல்லாமல் பதவி பிரமாணம் வேறு உள்ளது. ரணில் சின்னதம்பி பட காமெடியன் போல “எனக்கு கல்யாணம், எனக்கு கல்யாணம்” என சொல்வதால் அவருக்கு கோட்ட விலகியதும் ஜனாதிபதி பதவி தன்பாட்டில் வந்து விடாது. பிரதம நீதியரசர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.

ஆகவே ஒட்டு மொத்த நாட்டின், போராட்டகாரரின், பாராளுமன்றின் எதிர்புக்கு மத்தியில் ரணில் அடுத்து ஜனாதிபதியாவது நடைமுறை சாத்தியம் இல்லை.

இதை மிக இலகுவாக ரணிலை தற்காலிகமாக பிரதமராக வைத்து கொண்டே, அவர் உள்பட்ட பாராளுமன்றின் முன் யாப்பாவை ஜனதிபதியாக்கி தீர்க்கலாம்.

இதை விட வேறு வழிகள் (இருவரும் ஒன்றாய் விலகி யப்பாவுக்கு வழி விடுவது, ரணிலை நீக்கி விட்டு கோட்ட விலகுவது) என பல வேறு வழிகளும் உண்டு.

there is more than one way to skin a cat.

நான் நினைக்கிறேன் இப்போதைய நிலையில் ரணிலே தான் ஜனாதிபதியாக வரலாம் என கனவு கூட காணமாட்டார்.

இழுபறிக்கு காரணம் என நான் நினைப்பது 

1. சபாநாயகர், நீரியரசரை தவிர்த்து வேறு எவரையும் அரசியல் சட்டத்துக்கு அப்பால் போய் நியமிக்க எடுக்கப்படும் முயற்சி. இது கொஞ்சம் சிக்கலானது.

2.  வெளிநாட்டு தரகு வேலைகள்

1 hour ago, குமாரசாமி said:

இந்த போராட்டங்களை யார் முன்னின்று ஒழுங்கு செய்தார்களோ அவர்களுக்குத்தான் தெரியும் யார்  அடுத்த ஜெனாதிபதி என.....
சிலவேளை அமைச்சரவையையும் அவர்களே தீர்மானிப்பர்...
நாய்க்குட்டிகாரி......😂

நிச்சயமாக. கோட்டா அவகாசம் கேட்டதே அவர்கள் சொல்படிதான் என இப்போ நான் நினைக்கிறேன்.

1 hour ago, குமாரசாமி said:

சுமன் சனாதிபதியாய் வந்தால் தமிழ்ச்சனத்துக்கு பாதிப்பு ஒண்டுமில்லைத்தானே? 🤣

Bild

இல்லை. பிறகு தமிழர் ஏது அங்கே😆

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஓம் ஆனால் இதில் சட்டத்தில் போதிய நெகிழ்வு இருக்கிறது. உதாரணமாக ஜனாதிபதிக்கு பின் யார் (பிரதமர், சபாநாயகர்) யார் வந்தாலும் அவர்கள் 1 மாதம் வரை Acting President மட்டுமே. அதற்குள் பாராளுமன்றம் அவர்களை ஜனாதிபதியாக ஏற்க வேண்டும். தான் மட்டுமே உறுப்பினராக உள்ள நிலையில் ரணில் இதை வெல்வதை நினைத்தும் பார்க்க முடியாது.

அதுமட்டும் இல்லாமல் பதவி பிரமாணம் வேறு உள்ளது. ரணில் சின்னதம்பி பட காமெடியன் போல “எனக்கு கல்யாணம், எனக்கு கல்யாணம்” என சொல்வதால் அவருக்கு கோட்ட விலகியதும் ஜனாதிபதி பதவி தன்பாட்டில் வந்து விடாது. பிரதம நீதியரசர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.

ஆகவே ஒட்டு மொத்த நாட்டின், போராட்டகாரரின், பாராளுமன்றின் எதிர்புக்கு மத்தியில் ரணில் அடுத்து ஜனாதிபதியாவது நடைமுறை சாத்தியம் இல்லை.

இதை மிக இலகுவாக ரணிலை தற்காலிகமாக பிரதமராக வைத்து கொண்டே, அவர் உள்பட்ட பாராளுமன்றின் முன் யாப்பாவை ஜனதிபதியாக்கி தீர்க்கலாம்.

இதை விட வேறு வழிகள் (இருவரும் ஒன்றாய் விலகி யப்பாவுக்கு வழி விடுவது, ரணிலை நீக்கி விட்டு கோட்ட விலகுவது) என பல வேறு வழிகளும் உண்டு.

there is more than one way to skin a cat.

நான் நினைக்கிறேன் இப்போதைய நிலையில் ரணிலே தான் ஜனாதிபதியாக வரலாம் என கனவு கூட காணமாட்டார்.

இழுபறிக்கு காரணம் என நான் நினைப்பது 

1. சபாநாயகர், நீரியரசரை தவிர்த்து வேறு எவரையும் அரசியல் சட்டத்துக்கு அப்பால் போய் நியமிக்க எடுக்கப்படும் முயற்சி. இது கொஞ்சம் சிக்கலானது.

2.  வெளிநாட்டு தரகு வேலைகள்

நிச்சயமாக. கோட்டா அவகாசம் கேட்டதே அவர்கள் சொல்படிதான் என இப்போ நான் நினைக்கிறேன்.

இன்றைய தினக்குரல் தலையங்கம்; ஆளும் கட்சிக்குள்குழப்ப நிலை. பதில் ஜனாதிபதி பதவியில் கண் வைக்கும் ரணில்.

நாம் கருத்தாடுவது எப்படி இருந்தலும்......கிறவுண்ட் சிற்றுவேசன்...... மொட்டுக் கட்சியே பாராளுமன்ற பெரும்பான்மை..... அவர்கள் விரும்பும் நபரே ஜனாதிபதி.....

தமக்கு, விசாரணை, வில்லங்கம் வராமல் இருக்க தமக்கு சார்பானவர்களையே தெரியப்போகின்றனர்.

மகிந்தா ஆலோசணையில் தான் கோத்தாவின் ராஜினாமா தாமதம். ஆகவே, சஜித், பொன்னர், அநுர டல்லஸ், யாப்பா, டினேஸ், பீரிஸ் (🥹) எல்லாம் சபையேறா சங்கதிகள்.

இந்தியா, மேற்கு விரும்பும் ரணில் பதில் ஜனாதிபதி ஆக வந்தாலும், உடனே ஆறுமாதத்தில் இரு தேர்தலும் அறிவிக்கலாம். அது வரை காபந்து அரசு என்று சொல்லலாம்.

மிக வேகமான திரைமறைவு டீல்கள் நடக்கின்றன. அமெரிகக, இந்திய முகவர்கள் பிசியோ பிசி.

அவர்கள் விரும்பும் நபர் ஜனாதிபதி ஆகிய கையோடு, பாரிய பொருளாதார உதவிகள் அறிவிக்கப்பட, போராட்ட காரர் வீடு போகலாம். அவர்களது தேவை நல்ல அரசல்ல, எண்ணெய், சமையல் காஸ், கிரிபத்....

இநதிய ராணுவ வருகை பேச்சும் வருகிறது என்பதை கவனிக்கவும் வேண்டும்.

ஆக.... ஒரு இடியப்ப சிக்கல்..... பார்ப்போம்....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நேற்று பிபிசிக்கு ஒரு சந்திரிகாவின் ஆலோசகராக இருந்த ஒருவர் கொடுத்த பேட்டியில் - சுமந்திரன் பெயரும் அடுத்த ஜனாதிபதி என பரிசீலிக்க படுவதாக கூறினார்.

சட் என்று உங்களைத்தான் நினைத்து கொண்டேன்😆.

  • கருத்துக்கள உறவுகள்

Daily mirror reported:

நேவியின் கஜபாகு கப்பலில் தங்கியிருந்த கோத்தா, இன்று நாட்டில் இருந்து வெளியேறினார்.

புதன்கிழமை பதவியில் இருந்து அவர் வெளியேற, ரணில் தற்காலிகமாக ஜணாதிபதியாக பிரமாணம் செய்து கொள்வார்.

https://www.dailymirror.lk/latest_news/GR-leaves-the-country/342-240856

நாட்டின் அரசியலமைப்பு சொல்வதை நடைமுறைப்படுத்துதே தனது தலையாய கடமை என்று சொல்லும் ரணில், யாருமே அரசியலமைப்பை மீறவோ, பாராளுமன்றன்றத்தை தவறாக வழி நடத்தவோ தான் அனுமதிக்கப்போவதில்லை என்கிறார்.

ஆக.... அவர் ராஜினாமா செய்யப்போவதில்லை.

https://www.dailymirror.lk/breaking_news/Govt-should-work-within-constitution-no-one-can-go-beyond-it-PM/108-240855

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

இன்றைய தினக்குரல் தலையங்கம்; ஆளும் கட்சிக்குள்குழப்ப நிலை. பதில் ஜனாதிபதி பதவியில் கண் வைக்கும் ரணில்.

நாம் கருத்தாடுவது எப்படி இருந்தலும்......கிறவுண்ட் சிற்றுவேசன்...... மொட்டுக் கட்சியே பாராளுமன்ற பெரும்பான்மை..... அவர்கள் விரும்பும் நபரே ஜனாதிபதி.....

தமக்கு, விசாரணை, வில்லங்கம் வராமல் இருக்க தமக்கு சார்பானவர்களையே தெரியப்போகின்றனர்.

மகிந்தா ஆலோசணையில் தான் கோத்தாவின் ராஜினாமா தாமதம். ஆகவே, சஜித், பொன்னர், அநுர டல்லஸ், யாப்பா, டினேஸ், பீரிஸ் (🥹) எல்லாம் சபையேறா சங்கதிகள்.

இந்தியா, மேற்கு விரும்பும் ரணில் பதில் ஜனாதிபதி ஆக வந்தாலும், உடனே ஆறுமாதத்தில் இரு தேர்தலும் அறிவிக்கலாம். அது வரை காபந்து அரசு என்று சொல்லலாம்.

மிக வேகமான திரைமறைவு டீல்கள் நடக்கின்றன. அமெரிகக, இந்திய முகவர்கள் பிசியோ பிசி.

அவர்கள் விரும்பும் நபர் ஜனாதிபதி ஆகிய கையோடு, பாரிய பொருளாதார உதவிகள் அறிவிக்கப்பட, போராட்ட காரர் வீடு போகலாம். அவர்களது தேவை நல்ல அரசல்ல, எண்ணெய், சமையல் காஸ், கிரிபத்....

இநதிய ராணுவ வருகை பேச்சும் வருகிறது என்பதை கவனிக்கவும் வேண்டும்.

ஆக.... ஒரு இடியப்ப சிக்கல்..... பார்ப்போம்....

நீங்கள் பர பரப்பு ரிஷி யை மிஞ்சி விட்டீர்கள்😆

14 minutes ago, Nathamuni said:

Daily mirror reported:

நேவியின் கஜபாகு கப்பலில் தங்கியிருந்த கோத்தா, இன்று நாட்டில் இருந்து வெளியேறினார்.

புதன்கிழமை பதவியில் இருந்து அவர் வெளியேற, ரணில் தற்காலிகமாக ஜணாதிபதியாக பிரமாணம் செய்து கொள்வார்.

https://www.dailymirror.lk/latest_news/GR-leaves-the-country/342-240856

நாட்டின் அரசியலமைப்பு சொல்வதை நடைமுறைப்படுத்துதே தனது தலையாய கடமை என்று சொல்லும் ரணில், யாருமே அரசியலமைப்பை மீறவோ, பாராளுமன்றன்றத்தை தவறாக வழி நடத்தவோ தான் அனுமதிக்கப்போவதில்லை என்கிறார்.

ஆக.... அவர் ராஜினாமா செய்யப்போவதில்லை.

https://www.dailymirror.lk/breaking_news/Govt-should-work-within-constitution-no-one-can-go-beyond-it-PM/108-240855

இது ரணிலும் கோட்டவும் சேர்ந்து ஆடும் நாடகமாயும் இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

நாட்டின் அரசியலமைப்பு சொல்வதை நடைமுறைப்படுத்துதே தனது தலையாய கடமை என்று சொல்லும் ரணில், யாருமே அரசியலமைப்பை மீறவோ, பாராளுமன்றன்றத்தை தவறாக வழி நடத்தவோ தான் அனுமதிக்கப்போவதில்லை என்கிறார்.

அவர் சொன்ன முக்கியமானதொன்று - தேசிய அரசாங்கம் அமையவேண்டும். 

இது அமைந்த பின் தான் பிரதமர் பதவியில் இருந்து விலக தயார் என்றுதான் அப்போதும் இப்போதும் சொல்கிறார்.

நான் மேலே சொன்னது போலவே அரசியல் அமைப்பை மீறாமல், பாராளுமன்ற உறுப்பினர் முடிவு படி (வெளியில் இருந்து அல்ல) கோத்தா, ரணிலை விலக்கி ஆட்சியை தொடரலாம்.

மாறாக ரணில், பாராளுமன்ற விருப்புக்கு எதிராக தன்னை தானே ஜனாதிபதி என அறிவித்தால் - அதை நடைமுறைபடுத்த அவர் முழுக்க முழுக்க இராணுவத்தையே சார்ந்திருக்க வேண்டி இருக்கும். இராணுவம் போராட்டகாரை சுட்டு கலைத்து மாளிகைகளை மீட்டு ரணிலுக்கு கொடுக்க வேண்டி இருக்கும்.

இது சாத்தியமாக ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்.

அமெரிக்கா இதை விரும்பினால் இது சாத்தியமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

ரிசியா , தாரது... கேள்விப்படவில்லை....

நான் கேள்விப்பட்டதை சொன்னேன்..... நாடகம் ஆடும் நிலையில் கோத்தா இல்லை....

அவருக்கு, அமேரிக்காவில், குடும்பத்துடன் வாழ, வழக்கு, யுத்த குற்ற விசாரணை இல்லாத டீல் வேணும்.

மேற்குக்கு தமக்கு சார்பானவர், கொழும்பில் வேண்டும்....

பாராளுமன்ற விருப்பம் முப்பது நாட்களின் பின்னர்.....

உடனடியாக ரணில் பிரமாணம் எடுக்க.... பிரதம நீதியரர் மட்டுமே தேவை..... அது சேம்பரில் கூட நடக்கலாமே....

சுமந்திரன் வரையும் பிரஸ்தாபம் போயிருப்பது தான் சும்மா தெறிக்கும், நாடகம். 😂

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

உடனடியாக ரணில் பிரமாணம் எடுக்க.... பிரதம நீதியரர் மட்டுமே தேவை..... அது சேம்பரில் கூட நடக்கலாமே....

ஓம். அமெரிக்கா ரணில்தான் என முடிவு செய்து விட்டால், நீதியரசர், கட்சி தலைவர்கள் எல்லாரும் ஓம்படுவார்கள்.

போராட்டகார் கூட.

ஆனால் கட்சி தலைவர்கள் வேறு பாதையில் யோசிக்கிறார்கள். ஆகவே இதில் உண்மையில் அமெரிக்கா ரணிலை தள்ளுகிறதா அல்லது அப்படி ஒரு மாயையை ரணிலே உருவாக்குகிறாரா என்பது தெரியவில்லை.

👇 

COLOMBO (News 1st); Sri Lankan Party Leaders have decided to convene parliament on the 15th of July, two days after the President steps down.

The Party Leaders including Prime Minister Ranil Wickremesinghe, Dinesh Gunawardena, Opposition Leader Sajith Premadasa, Kumar Welgama, Dilan Perera Tiran Alles, Dullas Alahapperuma, Mano Ganesan, Lakshaman Kiriella, Rishad Bathiudeen, Udaya Gammanpila, and several other MPs had attended the crucial meeting on Monday (11) afternoon.

MP Rauff Hakeem speaking to reporters said the nominations for the post of President will be taken up on the 19th of July, and then on the 20th of July, an election will be held.

Sri Lanka Muslim Congress Leader Rauff Hakeem speaking to reporters said Ranil Wickremesinghe made another attempt at the meeting to seek the approval of party leaders to make fuel purchases.

He said the party leaders opposed the decision to move such a proposal, adding that it was a decision to be made by the Cabinet of Ministers and NOT the Party Leaders.

Rauf Hakeem said he will NOT accept Ranil Wickremesinghe as the Prime Minister, adding that Wickremesinghe is attempting to pass the blame on to the Party Leaders by moving a proposal at the meeting to make fuel purchases in the absence of any valid document.

“Words were exchanged at the meeting,” said Rauff Hakeem adding that the objective is to form an all-party government, with a large number of ruling party MPs.

He questioned by the President is not directing his decision to step down in writing to the speaker, rather than making phone calls.

Rauff Hakeem said both the President and the Prime Minister must submit their resignations in writing.

https://www.newsfirst.lk/2022/07/11/party-leaders-meeting-heats-up-pm-tries-to-move-proposal-to-purchase-fuel/

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இதெல்லாம் வேலைக்காகாது என்று நமக்கு தெரியுமே.....

ரணில் ஜனாதிபதி ஆகிய பின், கக்கீம் முதல், பொன்னர் வரை, அமைச்சர் பதவிக்கு அடிபடுவினம்..... 🤪

கோசான் சொல்வது போன்று அரசியலமைப்பின் படி சனாதிபதி இல்லாவிடின் பிரதமர் தான் கண்டிப்பாக அடுத்த சனாதிபதி என்று இல்லை. 

ரணில் சனாதிபதி ஆவது இந்த முறையும் சாத்தியமில்லை. அப்படி சதிகளின் மூலம் வருவாராயின் போராட்டம் மேலும் தொடர்ந்து நிச்சயமற்ற தன்மையே இலங்கை அரசில் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

இதெல்லாம் வேலைக்காகாது என்று நமக்கு தெரியுமே.....

ரணில் ஜனாதிபதி ஆகிய பின், கக்கீம் முதல், பொன்னர் வரை, அமைச்சர் பதவிக்கு அடிபடுவினம்..... 🤪

அது போராட்டகாரர் கையில்.

போராட்டம் அமெரிக்காவின் கையில் இல்லை அல்லது மீறி போய்விட்டது என்றால் - அவர்கள் தொடர்ந்தும் ரணிலை ஏற்க மறுத்தால் back to square one தான்.

அதன் பின் ஆமியை அனுப்பி ரத்தகளரியாக்கித்தான் ரணிலை ஜனாதிபதியின் அலுவலகத்துக்கே அனுப்ப முடியும்.

அமெரிக்கா சொன்னால் சவேந்திரா செய்வார்.

ஆனால் இருக்கும் எல்லாருமே அமெரிகாவின் தாளத்துக்கு ஆடக்கூடியவர் எனும் போது ரணிலுக்க்காக அமெரிகா இத்தளவு தூரம் மினகெடும் என நான் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

கோசான் சொல்வது போன்று அரசியலமைப்பின் படி சனாதிபதி இல்லாவிடின் பிரதமர் தான் கண்டிப்பாக அடுத்த சனாதிபதி என்று இல்லை. 

ரணில் சனாதிபதி ஆவது இந்த முறையும் சாத்தியமில்லை. அப்படி சதிகளின் மூலம் வருவாராயின் போராட்டம் மேலும் தொடர்ந்து நிச்சயமற்ற தன்மையே இலங்கை அரசில் இருக்கும்.

கோசன் அப்படி சொல்லவில்லை என்றே நினைக்கிறேன், நிழலி.

ஜனாதிபதி, பிரதமர் இருவரும் பதவி விலகினால் என்ற நிலைப்பாட்டில்..... இருந்து அவர் சொன்னது சரி.

ஆனால் பிரதமர் பதவி விலகலை அறிவிக்கவில்லை. ஆகவே அவரே பதில் ஜனாதிபதி. அது முப்பது நாட்களில் பாராளுமன்றில் இரண்டில் மூன்று பலத்தால் உறுதிப் படாவிடில், இழுபறியாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.