Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சஜித் அல்லது டலஸ்... ஜனாதிபதி ? – நேற்றைய கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

கோசான் சொல்வது போன்று அரசியலமைப்பின் படி சனாதிபதி இல்லாவிடின் பிரதமர் தான் கண்டிப்பாக அடுத்த சனாதிபதி என்று இல்லை. 

ரணில் சனாதிபதி ஆவது இந்த முறையும் சாத்தியமில்லை. அப்படி சதிகளின் மூலம் வருவாராயின் போராட்டம் மேலும் தொடர்ந்து நிச்சயமற்ற தன்மையே இலங்கை அரசில் இருக்கும்.

எனக்கும் சாத்தியம் இல்லை என்றே படுகிறது.

நிச்சயமாக அரசியலமைப்பின் படி “கட்டாயம்” அடுத்து பிரதமர்தான் வரவேண்டும் என்பதில்லை.

  • Replies 59
  • Views 2.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

எனக்கும் சாத்தியம் இல்லை என்றே படுகிறது.

நிச்சயமாக அரசியலமைப்பின் படி “கட்டாயம்” அடுத்து பிரதமர்தான் வரவேண்டும் என்பதில்லை.

பங்கர், ஏனப்பா ஊகம்?

கூகிள தட்டி, commonlii.org/lk/legis/const/2008/8.html

போய்,

40 (1) (c)

செக்பண்ணி, விளக்கம் தாருங்கோ.

நானும் பிழையா விளங்கியிருக்கலாம்...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி 13 ஆம் திகதி பதவி விலகினால் 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதி தெரிவு - பிரசன்ன ரணதுங்க

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 13 ஆம் திகதி பதவி விலகினால், எதிர்வரும் 20ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ரம்புக்கன சம்பவம் குறித்த விசாரணைக்கு 3 விசேட குழுக்கள் நியமனம் - பிரசன்ன  ரணதுங்க | Virakesari.lk

இந்நிலையில், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் ஜனாதிபதி ஜூலை 13 ஆம் திகதி பதவி விலகினால் பின்வரும் நிகழ்வுகள் இடம்பெறுமெனவும் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், பாராளுமன்றம் ஜூலை 15 ஆம் திகதி கூடவுள்ளதாகவும், ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஜூலை 20 ஆம் திகதி ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி 13 ஆம் திகதி பதவி விலகினால் 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதி தெரிவு - பிரசன்ன ரணதுங்க  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

பங்கர், ஏனப்பா ஊகம்?

கூகிள தட்டி, commonlii.org/lk/legis/const/2008/8.html

போய்,

40 (1) (c)

செக்பண்ணி, விளக்கம் தாருங்கோ.

நானும் பிழையா விளங்கியிருக்கலாம்...

ஊகம் - புற, அக காரணிகள் ரணிலை வர விடுமா, விடாதா என்பதை பற்றி.

40 (1) (c) என்ன சொல்கிறது என்பதை ஏலவே எழுதி விட்டேன். இந்த சரத்து போதிய நெகிழ்வுடனே உள்ளது.

During the period between the occurrence of such vacancy and the assumption of office by the new President, the Prime Minister shall act in the office of President and shall appoint one of the other Ministers of the Cabinet to act in the office of Prime Minister:
Provided that if the office of Prime Minister be then vacant or the Prime Minister is unable to act, the Speaker shall act in the office of President.
 
இலங்கையில் இப்போ இருக்கும் உண்மையான நிலை இதுதான். ஜனாதிபதி விலகுகிறார், மக்கள், பாராளுமன்றின் எதிர்ப்பால் பிரதமர் அந்த வெற்றிடத்தை நிரவ முடியாத நிலையில் உள்ளார் (unable to act).  அது மட்டும் அல்ல, சொந்த வீட்டையே பாதுகாக்க முடியாத அளவு unable to act ஆக உள்ளார்😆.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

😂
Prime Minister is unable to act

அதன் கருத்து அதுவா?

போராட்டக்காரர் பற்றி, அரசியலைப்பு கருத்தில் எடுக்குமா? 😂

PM doesn’t say that he is unable to act but says, he will safeguard the constitution!! 😉

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

😂
Prime Minister is unable to act

அதன் கருத்து அதுவா?

போராட்டக்காரர் பற்றி, அரசியலைப்பு கருத்தில் எடுக்குமா? 😂

PM doesn’t say that he is unable to act but says, he will safeguard the constitution!! 😉

நிச்சயமாக. he can say whatever he wants but he is clearly “unable to act”.

there is no need to protect the constitution- what the party leaders have agreed is within the constitution and I gather Ranil too was present and agreed to this? 

இந்த அதிரடி திருப்பத்தை பார்தீர்களா?

கோட்டா திரும்பி நாட்டுக்கு வந்து முப்படை தளபதிகளை சந்தித்தாராம்….

https://www.dailymirror.lk/latest_news/UPDATE-GR-still-in-the-country-meets-defence-leaders/342-240856

கோட்டா - ரணிலிடம் கொடுக்காமல் - புதிய ஜனாதிபதியை பாராளுமன்றம் தேரும் வரை, (ஜூலை 20) பதவியில் தொடரும் ஐடியாவா?

அல்லது பழையபடி கோட்டவே ஜனாதிபதியாக தொடர்வாரா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு அமெரிக்கா உதவி – ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே.. அடுத்த, தற்காலிக ஜனாதிபதி?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே அடுத்த தற்காலிக ஜனாதிபதியாக செயற்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷ இன்று இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டுள்ள நிலையில் நாளை இராஜினாமா குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனை அடுத்து அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது ஜனாதிபதி மற்றும் புதிய பிரதமருக்கான தெரிவு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2022/1290906

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

வெரி சிம்பிள் லொஜிக்; சஜித் அல்லது வேறு எதிர்கட்சியினர் வருமளவுக்குபாராளுமன்ற பலமில்லை.

ரணில், மொட்டுக்கட்சியின் தேர்வு. அவரே ஜனாதிபதி ஆவார். காரணம் பாராளுமன்றில் உள்ள பலம்.

இப்போதைக்கு ரணில் அவர்களது (ராசபக்சேக்கள்) பாதுகாப்புக்கு தேவை என்பதால், கோத்தா அவரை நீக்காமல் ராஜினாமா செய்து கிளம்புகிறார்...... ஆக ரணிலே ஜனாதிபதியாவார்.

இல்லாவிடில் கோத்தா, வேறு மொட்டுக்கட்சிக்காரரை பிரதமராக நியமித்து கிளம்பி இருப்பார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

20ம் திகதி பாரளுமன்றம் கூடி வாக்கெடுப்பில் வெல்பவர்தான் ஜனாதிபதி.

20ம் திகதி வரை ரணில் Acting President ஆக வரக்கூடும்(முன்னர் நாம் கதைத்த சரத்தின் படி) ? 2009 யுத்த கடைசியில் மகிந்த லிபியா போனபோது மைத்திரியை இப்படி acting ஜனாதிபதியாக்கினார்.

20ம் திகதிக்கு மேல் இன்னொருவரை பாராளுமன்றம் தேர்ந்தால் - ரணில் ஜனாதிபதிகள் வரிசையில் வரமாட்டார்.

இப்போதைய நிலவரப்படி ரணில் பதில் ஜனாதிபதி/பிரதமர் எதுவாக இருந்தாலும் போராட்டகாரர் அவரை ஏற்காயினம். ஒளிந்து இருந்து சூம் மூலம்தான் ஆட்சி செய்ய வேண்டும்😆.

பதில் ஜனாதிபதியானதும் படைகளை வைத்து ரணில் அதிகாரத்தை முழுமையாக அடைய முனையலாம். ஆனால் படைகள் ஒத்துழைக்கும் போல தெரியவில்லை.

இன்று கோட்ட தம்மோடு இல்லை எனவும் இது மக்களை தமக்கு எதிராக திருப்பும் முயற்சி எனவும் விமானப்படை தளபதி கூறியுள்ளார். ரணில் வீட்டில் ஊடக ஆட்களை தாக்கிய எஸ் பி நீக்கபட்டுள்ளார்.

ஆகவே பலத்தை பாவித்து போராட்டத்தை அடக்க, ரணிலுக்கு முண்டு கொடுக்க அதிகாரவர்க்கம் பின்னடிக்கும்.

பாராளுமன்றம் ஒருவரை தேராவிட்டால், மஹாசங்கம் ஒரு பொதுவானவரை நியமிக்கும் என்கிறார் அத்துரலிய தேரர்.

ராஜபக்சேக்கள் நாட்டை விட்டு வெளியேறா வண்ணம் விமானநிலையத்தில் தடுப்பு ஏற்படுத்தபட்டுள்ளது. உச்ச நீதிமன்றிலும் தடை கோரி மனு போடப்பட்டுள்ளது.

கோட்டவுக்கு யூஎஸ் விசா நிராகரிக்கபட்டதாக சொல்கிறது இன்னொரு செய்தி. 

ஆகவே கோட்ட, ரணிலை யூஎஸ் இயக்குகிறது என்பதும் எவ்வளவு தூரம் இவர்களே கட்டிய கதையோ தெரியாது.

இத்தனையையும் வைத்து பார்க்கும் போது,

புதிய ஜனாதிபதியாகா ரணில் வர வாய்ப்புகள் இல்லை என்றே படுகிறது. 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ரணில், மொட்டுக்கட்சியின் தேர்வு. அவரே ஜனாதிபதி ஆவார். காரணம் பாராளுமன்றில் உள்ள பலம்.

இனி அந்த எம்பிகள் மகிந்த, கோட்ட, பசில் எவர் பேச்சையும் கேட்டு ரணிலை ஆதரிப்பார்கள் என்ற நிச்சயம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நாளை 13ம் திகதி, 13:00 மணிக்கு முன்பாக கோட்டவும், ரணிலும் பதவி விலக வேண்டும் என கெடு விதித்தனர் போராட்டகாரர்கள்.

https://www.newswire.lk/2022/07/12/n-protesters-giveatum-to-gota-ranil-to-resign/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இனி அந்த எம்பிகள் மகிந்த, கோட்ட, பசில் எவர் பேச்சையும் கேட்டு ரணிலை ஆதரிப்பார்கள் என்ற நிச்சயம் இல்லை.

3 minutes ago, goshan_che said:

நாளை 13ம் திகதி, 13:00 மணிக்கு முன்பாக கோட்டவும், ரணிலும் பதவி விலக வேண்டும் என கெடு விதித்தனர் போராட்டகாரர்கள்.

https://www.newswire.lk/2022/07/12/n-protesters-giveatum-to-gota-ranil-to-resign/

அட...... விடிஞ்சா தெரிஞ்சிடும்..... இவ்வளவு நாள் பொறுத்தனாங்கள், இரண்டொரு நாள் பொறுத்து பார்ப்போமே கூத்தை.... 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

நாளை 13ம் திகதி, 13:00 மணிக்கு முன்பாக கோட்டவும், ரணிலும் பதவி விலக வேண்டும் என கெடு விதித்தனர் போராட்டகாரர்கள்.

https://www.newswire.lk/2022/07/12/n-protesters-giveatum-to-gota-ranil-to-resign/

இரண்டு பேருக்கும் இவ்வளவு அவமானம், பொருள் இழப்பு என்று ஏற்பட்ட பின்பும்….
பதவியை விட மறுக்கின்றார்கள் என்றால், பதவி ஆசை எவ்வளவு அவர்களில் ஊறியுள்ளது.

சம்பந்தரும்…. நடக்க, பேச இயக்கம் இல்லாத நிலையிலும்,
மீண்டும், மீண்டும் போட்டி போடுவதன் காரணம் இது என்று புரிகின்றது.
அரசியலுக்கு வந்தவர்கள்… இறக்கும் மட்டும் அரசியலில் இருப்பது ஆசியாவில் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

13th deadline before 13 hrs: protesters give ultimatum to Gota & Ranil

July 12, 2022 at 8:17 PM

GotaGoGama protestors have given an ultimatum for President Gotabaya Rajapaksa and Prime Minister Ranil Wickremesinghe to resign from their positions.

The protestors are reportedly demanding that President and PM resign before 1:00 pm tomorrow (13).

Actress Samanalee Fonseka, representing the GalleFace protestors has posted a message in her Facebook page requesting the public to gather at the Presidential Secretariat tomorrow to force the President and PM to resign before the aforementioned deadline. (NewsWire)

13th deadline before 13 hrs: protesters give ultimatum to Gota & Ranil - NewsWire

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Nathamuni said:

அட...... விடிஞ்சா தெரிஞ்சிடும்..... இவ்வளவு நாள் பொறுத்தனாங்கள், இரண்டொரு நாள் பொறுத்து பார்ப்போமே கூத்தை.... 

அதுவும் சரிதான் 🍿🥤💺

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தமிழ் சிறி said:

இரண்டு பேருக்கும் இவ்வளவு அவமானம், பொருள் இழப்பு என்று ஏற்பட்ட பின்பும்….

சொந்த பணமா கவலைப்பட.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தமிழ் சிறி said:

இரண்டு பேருக்கும் இவ்வளவு அவமானம், பொருள் இழப்பு என்று ஏற்பட்ட பின்பும்….
பதவியை விட மறுக்கின்றார்கள் என்றால், பதவி ஆசை எவ்வளவு அவர்களில் ஊறியுள்ளது.

சம்பந்தரும்…. நடக்க, பேச இயக்கம் இல்லாத நிலையிலும்,
மீண்டும், மீண்டும் போட்டி போடுவதன் காரணம் இது என்று புரிகின்றது.
அரசியலுக்கு வந்தவர்கள்… இறக்கும் மட்டும் அரசியலில் இருப்பது ஆசியாவில் அதிகம்.

ஓம். கோட்டா தான் எப்படியாவது டுபாய்க்கு போகும் வரை ஜனாதிபதிக்குரிய சட்ட, ஆயுத பாதுகாப்பை தக்க வைக்க, குடும்பத்தை கூட்டி போக முயல்வதாக தெரிகிறது.

ரணில் முழுக்க முழுக்க கதிரை ஆசைதான். இல்லையென்றால் உடனடியாக சபாநாயகரை ஜனாதிபதியாக்கி, வேறு ஒருவரை பிரதமராக்கி - நாட்டை ஸ்திரப்படுத்தலாம்.

2 minutes ago, ஈழப்பிரியன் said:

சொந்த பணமா கவலைப்பட.

ரணிலிடம் அதிகமில்லை என நினைகிறன்.

சேர்த்து வைக்க பிள்ளையும் இல்லை.

அந்த கதிரையில் 7 நாளாவது இருந்து விடும் பேராசை.

பசிலின் விமான டிக்கெட் மட்டும் 53 மில்லியன் ரூபாயாம்!

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

ரணிலிடம் அதிகமில்லை என நினைகிறன்.

சேர்த்து வைக்க பிள்ளையும் இல்லை.

அந்த கதிரையில் 7 நாளாவது இருந்து விடும் பேராசை.

பசிலின் விமான டிக்கெட் மட்டும் 53 மில்லியன் ரூபாயாம்!

ரணிலுக்கு போக இடமே இல்லை.

கடைசி முயற்சி தான்

வந்தா மலை

போனா மயிர்.

போர்க்குற்றவாளியும் இராணுவத்தில் இருந்த கொடூரனுமான கோத்தாவினாலேயே போராட்டக்காரர்களின் எதிர்ப்பை சமாளித்து ஆட்சியில் தொடர முடியவில்லை என்றால்,  ரணிலால் போராட்டக்காரர்களை எப்படி சமாளிக்க முடியும்?

ரணில் சனாதிபதியானால், கண்டிப்பாக கடும் போராட்டம் வெடிக்கும். நாடு மேலும் நிச்சயமற்ற தன்மைக்குள் சென்று பொருளாதாரம் மேலும் மோசமாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ஈழப்பிரியன் said:

சொந்த பணமா கவலைப்பட.

மூன்று மாதமாக… காலிமுகத்திடலில் வெய்யிலிலும்,
மழையிலும் நின்று போராடுபவர்களை நினைத்துப் பார்க்கவில்லை.
மக்களின் கையில் அகப்பட்டால்… இவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
அப்படியிருந்தும்… பதவி ஆசை, கண்ணை மறைக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நிழலி said:

போர்க்குற்றவாளியும் இராணுவத்தில் இருந்த கொடூரனுமான கோத்தாவினாலேயே போராட்டக்காரர்களின் எதிர்ப்பை சமாளித்து ஆட்சியில் தொடர முடியவில்லை என்றால்,  ரணிலால் போராட்டக்காரர்களை எப்படி சமாளிக்க முடியும்?

ரணிலுக்குள்ள நரிப்புத்தி மற்றவர்களுக்கில்லையே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நிழலி said:

போர்க்குற்றவாளியும் இராணுவத்தில் இருந்த கொடூரனுமான கோத்தாவினாலேயே போராட்டக்காரர்களின் எதிர்ப்பை சமாளித்து ஆட்சியில் தொடர முடியவில்லை என்றால்,  ரணிலால் போராட்டக்காரர்களை எப்படி சமாளிக்க முடியும்?

ரணில் சனாதிபதியானால், கண்டிப்பாக கடும் போராட்டம் வெடிக்கும். நாடு மேலும் நிச்சயமற்ற தன்மைக்குள் சென்று பொருளாதாரம் மேலும் மோசமாகும்.

ரணிலை…. அமெரிக்கா இயக்குகின்றது.
கோத்தா போன கையுடனேயே… தாமதிக்காமல் அடுத்த முடிவை எடுக்கும் படி
அமெரிக்கா அறிக்கை விட்டதும்,
ஐரோப்பிய யூனியன்… தமது உதவிகள் மேலதிகமாக கிடைக்கும் என்று சொன்னதும்,
ரணிலுக்கு பின்னுக்கு இருப்பவர்களை… காட்டிக் கொடுத்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது இருக்கும் எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களும். ஐனதிபதி,பிரதமர் ஆக வர போராட்டங்களை செய்தவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.போராட்டங்களை செய்தவர்களிலிருந்து அடுத்த ஐனதிபத,பிரதமர் வரும் வாய்ப்புகள் அதிகம் உண்டு” மேலும் இராணுவம்,பொலிஸ் அதிக மாற்றங்கள் செய்யப்படும்[ ஒத்துழைக்கவில்லை என்றால் ] அண்மையில் மலேசியாவில் நடத்தது போல்  ஊழல்வாதிகளிடமிருந்து பணம் அரசாங்கத்தின் திறைசோரிக்கு திருப்பப்படுமாயின்  ஐந்து நாளில் பெரும் தொகைபணம்  கிடைக்கும் அமெரிக்கா ஐரோப்பா இந்தியா சீனா....

உதவிகள் தேவையில்லை மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி கிடைக்கும்.....மலேசியாவில் பொலிஸ் உயர் அதிகாரிகள் நிதிபதிகள்.   அமைச்சர்கள் ....சிறைப்படுத்தி அவர்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது ஐந்து நாளில் ஐம்பது பில்லியன் மலேசியா டொலர் பெறப்பட்டுள்ளன 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ரணிலை…. அமெரிக்கா இயக்குகின்றது.
கோத்தா போன கையுடனேயே… தாமதிக்காமல் அடுத்த முடிவை எடுக்கும் படி
அமெரிக்கா அறிக்கை விட்டதும்,
ஐரோப்பிய யூனியன்… தமது உதவிகள் மேலதிகமாக கிடைக்கும் என்று சொன்னதும்,
ரணிலுக்கு பின்னுக்கு இருப்பவர்களை… காட்டிக் கொடுத்து விட்டது.

நிச்சயமாக மகிந்தவை தூக்கிப்போட்டு, ரணிலை கொண்டு வந்தவர்கள், அவரை வைத்திருக்கவே விரும்புவர்.

ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் யார் இயக்கினாலும் உள்ளூரில் நம்பிக்கை இல்லாவிடில் அதிகம் தாக்கு பிடிக்க முடியாது. இதை அமெரிக்கா உணர கியூபா, எகிப்து, ஆப்கானிஸ்தான் என்று பல உதாரணங்கள் உண்டு. 

தவிரவும் அமெரிக்காவுக்கும் ஐயருக்கும் கட்டாயம் ரணில்தான் வேண்டும் என்பதில்லை. ரணிலை விட அழகாக கும்பிடு போடுவார் சஜித்🤣. ஆகவே ரணில்தான் வேணும் என்று ஒற்றைகாலில் நின்று பிரச்சனையை நீடிக்க விரும்பபோவதில்லை.

இது என் கருத்து மட்டுமே.

சில வேளை அமெரிக்க தூதர் தனிப்பட்டு ரணில் நல்லம் என நினைக்ககூடும். அப்படி என்றால் நரிக்கு அடிச்சான் பிரைஸ்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கடைசி நடவடிக்கையாக ரணிலை பதவி நீக்குங்கள் இல்லையேல் இதை விட பாரிய போராட்டம் வெடிக்கும். கோட்டவிடம் கோரினார் - ஜேவிபி தலைவர் அனுர குமார திசாநாயக்க.

https://www.newswire.lk/2022/07/12/sack-ranil-as-your-last-job-akd-tells-gota/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.