Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பாவிற்கான... ‘நோர்ட் ஸ்ட்ரீம்- 1’ எரிவாயு விநியோகத்தை, மீண்டும் தொடங்கியது ரஷ்யா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவிற்கான ‘நோர்ட் ஸ்ட்ரீம்- 1’ எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்கியது ரஷ்யா!

ஐரோப்பாவிற்கான... ‘நோர்ட் ஸ்ட்ரீம்- 1’ எரிவாயு விநியோகத்தை, மீண்டும் தொடங்கியது ரஷ்யா!

ரஷ்யா தனது மிகப்பெரிய ‘நோர்ட் ஸ்ட்ரீம்- 1’ எரிவாயு விநியோகத்தை ஐரோப்பாவிற்கு மீண்டும் தொடங்கியுள்ளது.

விநியோகத்தை கட்டுப்படுத்தலாம் அல்லது முற்றிலும் நிறுத்தலாம் என்ற எச்சரிக்கைகளுக்குப் பிறகு இன்று (வியாழக்கிழமை) விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது.

ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின், அரசாங்க எரிவாயு நிறுவனமான காஸ்ப்ரோம் அதன் ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றும் என்று ஊடகங்களிடம் கூறி அச்சத்தை குறைத்துள்ளார்.

நோர்ட் ஸ்ட்ரீம்- 1 எரிவாயு விநியோகம், கடந்த 10 நாட்கள் பராமரிப்பு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், 40 சதவீத அளவே விநியோகிக்கப்படுகின்றது.

ஜேர்மனியின் சீமென்ஸ் எனர்ஜியால் வழங்கப்பட்ட உபகரணங்களைத் திருப்பித் தருவதில் தாமதம் ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டி, ஜூன் நடுப்பகுதியில், காஸ்ப்ரோம் எரிவாயு பாய்ச்சலைக் குறைத்தபோது, அதே அளவில் இது செயற்பட்டது.

ஐரோப்பிய ஆணையம் ரஷ்யா ஐரோப்பாவின் விநியோகத்தை நிறுத்தினால், அடுத்த ஏழு மாதங்களில் எரிவாயு பயன்பாட்டை 15 குறைக்குமாறு நாடுகளை வலியுறுத்தியது.

ரஷ்யா கடந்த ஆண்டு ஐரோப்பாவிற்கு 40 சதவீதம் இயற்கை எரிவாயுவை வழங்கியது. கடந்த 2020ஆம் ஆண்டு ஜேர்மனி மிகப்பெரிய இறக்குமதியாளராக இருந்தது

ஆனால், தற்போது ரஷ்ய எரிவாயு மீதான அதன் சார்புநிலையை 55 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாகக் குறைத்துள்ளது. இறுதியில், ரஷ்யாவிலிருந்து எரிவாயுவைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்த விரும்புகிறது.

https://athavannews.com/2022/1291887

  • Replies 52
  • Views 3.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தற்போது ரஷ்ய எரிவாயு மீதான அதன் சார்புநிலையை 55 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாகக் குறைத்துள்ளது. இறுதியில், ரஷ்யாவிலிருந்து எரிவாயுவைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்த விரும்புகிறது.👋

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஐரோப்பாவிற்கான... ‘நோர்ட் ஸ்ட்ரீம்- 1’ எரிவாயு விநியோகத்தை, மீண்டும் தொடங்கியது ரஷ்யா!

ரஷ்யா தனது மிகப்பெரிய ‘நோர்ட் ஸ்ட்ரீம்- 1’ எரிவாயு விநியோகத்தை ஐரோப்பாவிற்கு மீண்டும் தொடங்கியுள்ளது.

விநியோகத்தை கட்டுப்படுத்தலாம் அல்லது முற்றிலும் நிறுத்தலாம் என்ற எச்சரிக்கைகளுக்குப் பிறகு இன்று (வியாழக்கிழமை) விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது.

மீண்டும் ரஷ்ய எரிவாயு வருகையினால் ஜேர்மனிய தொழிற்சாலை சம்பந்தப்பட்டவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பல்லாயிரம் வேலை இழப்புகள் காப்பாற்றப்பட்டுள்ளது.

அத்துடன் ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் அவசியமற்றது எனவும் அவை எவ்வித பலனையும் தரப்போவதில்லை எனவும் மக்கள் மத்தியில் விசனம் எழுந்துள்ளதாக வானொலியில் நடந்த கணிப்பு  தெரிவித்துள்ளது.

இப்போதிருக்கும் நெருக்கடிகள் தொடர்ந்தால் இவ்வருட இறுதியில் அரசிற்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் சாத்தியம் உண்டு.

கிழக்கு ஜேர்மனிய மக்களில் அதிகமாக ரஷ்ய ஆதராவாளர்கள் அதிகம்.😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

கோசான் உத வாசிச்சுப்போட்டு...

எத எங்க கொண்டுவ்ந்து இணைக்கலாம் எண்டு இப்ப மனுசன்  எதையாவது தோண்டிக்கொண்டிருப்பார் எண்டு நினைக்கிறன்.

🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

கோசான் உத வாசிச்சுப்போட்டு...

எத எங்க கொண்டுவ்ந்து இணைக்கலாம் எண்டு இப்ப மனுசன்  எதையாவது தோண்டிக்கொண்டிருப்பார் எண்டு நினைக்கிறன்.

🤣

😆 ஆப்பு இந்த கட்டுரையிலேயே இருக்கே.

👇

9 hours ago, தமிழ் சிறி said:

கடந்த 2020ஆம் ஆண்டு ஜேர்மனி மிகப்பெரிய இறக்குமதியாளராக இருந்தது

ஆனால், தற்போது ரஷ்ய எரிவாயு மீதான அதன் சார்புநிலையை 55 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாகக் குறைத்துள்ளது. இறுதியில், ரஷ்யாவிலிருந்து எரிவாயுவைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்த விரும்புகிறது.

உக்ரேனில் ரஸ்யா வென்றாலும் தோத்தாலும் இனி ஈயுவிற்கு எரிவாயு விற்க முடியாது.

6 hours ago, குமாரசாமி said:

மீண்டும் ரஷ்ய எரிவாயு வருகையினால் ஜேர்மனிய தொழிற்சாலை சம்பந்தப்பட்டவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பல்லாயிரம் வேலை இழப்புகள் காப்பாற்றப்பட்டுள்ளது.

அத்துடன் ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் அவசியமற்றது எனவும் அவை எவ்வித பலனையும் தரப்போவதில்லை எனவும் மக்கள் மத்தியில் விசனம் எழுந்துள்ளதாக வானொலியில் நடந்த கணிப்பு  தெரிவித்துள்ளது.

இப்போதிருக்கும் நெருக்கடிகள் தொடர்ந்தால் இவ்வருட இறுதியில் அரசிற்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் சாத்தியம் உண்டு.

கிழக்கு ஜேர்மனிய மக்களில் அதிகமாக ரஷ்ய ஆதராவாளர்கள் அதிகம்.😁

இத்தனை காலம் அங்கு வசித்தும் ஜேர்மன் மக்களின் ஓர்மம், சுய சார்பு, தாங்கு திறனை நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்களோ என எண்ணுகிறேன்.

சக்தி பாதுகாப்பை (energy security) சுயலாபத்துக்காக ஷொர்டர் போன்றோர் ரஸ்யாவிடம் அடகு வைத்தமை எத்தனை பிழை என்பதை ஜேர்மனி இப்போ உணர்வதாயே நான் கருதுகிறேன்.

இனி ஒரு முறை இப்படி ரஸ்யா பிளக்மெயில் பண்ணும் நிலையில் ஐரோப்பாவின் 1ம் பொருளாதாரத்தை வைத்திருக்க கூடாது என்றே இனி ஜேர்மனியின் சக்தி கொள்கை அமையும் என்பது என் எதிர்பார்ப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

😆 ஆப்பு இந்த கட்டுரையிலேயே இருக்கே.

👇

உக்ரேனில் ரஸ்யா வென்றாலும் தோத்தாலும் இனி ஈயுவிற்கு எரிவாயு விற்க முடியாது.

இத்தனை காலம் அங்கு வசித்தும் ஜேர்மன் மக்களின் ஓர்மம், சுய சார்பு, தாங்கு திறனை நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்களோ என எண்ணுகிறேன்.

சக்தி பாதுகாப்பை (energy security) சுயலாபத்துக்காக ஷொர்டர் போன்றோர் ரஸ்யாவிடம் அடகு வைத்தமை எத்தனை பிழை என்பதை ஜேர்மனி இப்போ உணர்வதாயே நான் கருதுகிறேன்.

இனி ஒரு முறை இப்படி ரஸ்யா பிளக்மெயில் பண்ணும் நிலையில் ஐரோப்பாவின் 1ம் பொருளாதாரத்தை வைத்திருக்க கூடாது என்றே இனி ஜேர்மனியின் சக்தி கொள்கை அமையும் என்பது என் எதிர்பார்ப்பு.

ரஸ்யாவிடம் மலிவான விலையில் எரிவாயு பெற்றுக்கொண்ட காரணத்தால்தான் ஐரோப்பிய பொருட்கள் உலக சந்தையில் பிற ஏற்றுமதியாளர்களுடன் போட்டிபோடும் நிலையில் இருந்தது.  இனி ஆசிய மத்திய ஆசிய நாடுகள் குறைந்த விலையில்  தங்கள் உற்பத்தியை சந்தைப்படுத்த முடியும். 

அந்த வாய்ப்பு ஐரோப்பிய நாடுகளுக்கு  அம்பேல் என்கிறீர்கள் ? 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

அதை விட சற்றே கூடிய விலையில் அணு, அலை, ஏனைய மீள்பாவிக்கும் மூலங்களில் இருந்து உள்ளூரிலேயே தயாரிக்கலாம். 

ஆனால் அணு போன்றவை ஆபத்து ( சேனோபில், பூக்காசீமா) என்பதால் அதை செய்யவில்லை. 

இப்போ அணு வெடிப்பு ஆபத்தை விட ரஸ்யாவில் தங்கி இருப்பது பெரிய ஆபத்து என்பதை இந்த நாடுகளுக்கும், மக்களுக்கும் புட்டின் விளக்கி விட்டார்.

ஆகவே, வேறு இடத்தில் இருந்து நிலக்கீழ் எரி பொருள், கிட்டிய நோக்கில் அணு சக்தி, மத்திய, நீண்ட நோக்கில் ஏனைய மீள் சக்தி என இந்த நாடுகள் முன்னோக்க தொடங்கி விட்டன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
43 minutes ago, goshan_che said:

இத்தனை காலம் அங்கு வசித்தும் ஜேர்மன் மக்களின் ஓர்மம், சுய சார்பு, தாங்கு திறனை நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்களோ என எண்ணுகிறேன்.

குறைத்து மதிப்பிடவில்லை. மிகப்பெரிய உருக்கு ஆலைகள் உள்ள நாட்டுக்கு முக்கிய எரிசக்தி  இல்லையென்றால் ஓர்மம் சுய சார்பு இருந்தும் பலனில்லை.வேறு நாடுகளில் இருந்து வரும் எரிசக்திகள் கூடிய விலை. அது சாத்தியமாக இன்னும் 2வருடங்கள் தேவை என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, Kapithan said:

கோசான் உத வாசிச்சுப்போட்டு...

எத எங்க கொண்டுவ்ந்து இணைக்கலாம் எண்டு இப்ப மனுசன்  எதையாவது தோண்டிக்கொண்டிருப்பார் எண்டு நினைக்கிறன்.

🤣

அவர் புட்டினை தட்டுற சங்கத்தில மெம்பராய் இருக்கிறார் எல்லோ? கட்டாயம் கடினமாய் உழைப்பார்.... 😂

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

😆 ஆப்பு இந்த கட்டுரையிலேயே இருக்கே.

👇

உக்ரேனில் ரஸ்யா வென்றாலும் தோத்தாலும் இனி ஈயுவிற்கு எரிவாயு விற்க முடியாது.

இத்தனை காலம் அங்கு வசித்தும் ஜேர்மன் மக்களின் ஓர்மம், சுய சார்பு, தாங்கு திறனை நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்களோ என எண்ணுகிறேன்.

சக்தி பாதுகாப்பை (energy security) சுயலாபத்துக்காக ஷொர்டர் போன்றோர் ரஸ்யாவிடம் அடகு வைத்தமை எத்தனை பிழை என்பதை ஜேர்மனி இப்போ உணர்வதாயே நான் கருதுகிறேன்.

இனி ஒரு முறை இப்படி ரஸ்யா பிளக்மெயில் பண்ணும் நிலையில் ஐரோப்பாவின் 1ம் பொருளாதாரத்தை வைத்திருக்க கூடாது என்றே இனி ஜேர்மனியின் சக்தி கொள்கை அமையும் என்பது என் எதிர்பார்ப்பு.

உண்மை,ரஸ்யாவில் தங்கியிருத்தலை முடிவுக்கொண்டுவரக் காலமெடுத்தாலும் அதற்கான செயற்பாடுகள்(தாமதமானபோதும்) முடுக்கிவிடப்பட்டுள்ளன. எரிவாயுமூலமான வருமான இழப்பு ரஸ்யப் பொருளாதாரத்துக்குப் பின்னடைவாகவே இருக்கும். அரசுத் தலைமைகள் பொருண்மிய் சுமைகளால் அவதியுறுவதில்லை. அப்பாவி மக்களே அழிவதும் அவதியுறுவதும் எழுதாத விதியாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, nochchi said:

உங்கள் கூற்றுப்படி, 

இப்போது நீங்கள் யாரை தண்டிக்க விரும்புகிறீர்கள்? புடினையா அல்லது மக்களையா? 😉

12 hours ago, goshan_che said:

அதை விட சற்றே கூடிய விலையில் அணு, அலை, ஏனைய மீள்பாவிக்கும் மூலங்களில் இருந்து உள்ளூரிலேயே தயாரிக்கலாம். 

ஆனால் அணு போன்றவை ஆபத்து ( சேனோபில், பூக்காசீமா) என்பதால் அதை செய்யவில்லை. 

இப்போ அணு வெடிப்பு ஆபத்தை விட ரஸ்யாவில் தங்கி இருப்பது பெரிய ஆபத்து என்பதை இந்த நாடுகளுக்கும், மக்களுக்கும் புட்டின் விளக்கி விட்டார்.

ஆகவே, வேறு இடத்தில் இருந்து நிலக்கீழ் எரி பொருள், கிட்டிய நோக்கில் அணு சக்தி, மத்திய, நீண்ட நோக்கில் ஏனைய மீள் சக்தி என இந்த நாடுகள் முன்னோக்க தொடங்கி விட்டன.

நீங்கள்  பின்னோக்கித்தான் போகின்றீர்கள். 

தற்போது ஆட்சிக்கு வந்த ஆட்கள் பசமை, பசுமை, பசுமை என்று கூறித்தான் ஆட்சிக்கு வந்த்னர. அதை இலகுவாக மறந்துவிடுகிறீர்கள். 

உங்களிடம் ஒரு கேள்வி, உக்ரேன் யுத்தம் நிறுத்தப்பட வேண்டுமா அல்லது தொடர வேண்டுமா? (தலையைச் சுத்தி மூக்கைத் தொட வேண்டாம் )

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

உங்களிடம் ஒரு கேள்வி, உக்ரேன் யுத்தம் நிறுத்தப்பட வேண்டுமா அல்லது தொடர வேண்டுமா? (தலையைச் சுத்தி மூக்கைத் தொட வேண்டாம் )

உடனடியாக நிறுத்தபட வேண்டும். 

14 minutes ago, Kapithan said:

தற்போது ஆட்சிக்கு வந்த ஆட்கள் பசமை, பசுமை, பசுமை என்று கூறித்தான் ஆட்சிக்கு வந்த்னர. அதை இலகுவாக மறந்துவிடுகிறீர்கள். 

எரிவாயுவை விடமிச்ச எல்லாமுமே பசுமை தெரிவுகள்தான் (green options). அணு கூட.  அணுவில் விபத்து, கசிவு ஆபத்து, அணுகழிவை அகற்றல் ஆகிய ஆபத்துகள் இருப்பதால் அது அலை, சூரிய சக்தி போல விரும்பபடுவதில்லையே ஒழிய -  காபனீரொட்சைட் வெளியேற்றம், புவி வெப்பமாதலை பொறுத்தவரை அணுவும் “பசுமை” தெரிவே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அவர் புட்டினை தட்டுற சங்கத்தில மெம்பராய் இருக்கிறார் எல்லோ? கட்டாயம் கடினமாய் உழைப்பார்.... 😂

புட்டினை மட்டும் அல்ல, தான்மை தலைக்கேறி ஆடும் அத்தனை மனிதர்களையும் நக்கல் அடிக்கும் சங்கத்தில் நான் ஆயுட்கால உறுப்பினர்😆.

அது சரி எங்க உங்கட புட்டின் ரசிகர்மன்ற காரியதரிசி - கல்யாணி? கனகாலமா காணேல்ல?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

அதை விட சற்றே கூடிய விலையில் அணு, அலை, ஏனைய மீள்பாவிக்கும் மூலங்களில் இருந்து உள்ளூரிலேயே தயாரிக்கலாம். 

ஆனால் அணு போன்றவை ஆபத்து ( சேனோபில், பூக்காசீமா) என்பதால் அதை செய்யவில்லை. 

இப்போ அணு வெடிப்பு ஆபத்தை விட ரஸ்யாவில் தங்கி இருப்பது பெரிய ஆபத்து என்பதை இந்த நாடுகளுக்கும், மக்களுக்கும் புட்டின் விளக்கி விட்டார்.

ஆகவே, வேறு இடத்தில் இருந்து நிலக்கீழ் எரி பொருள், கிட்டிய நோக்கில் அணு சக்தி, மத்திய, நீண்ட நோக்கில் ஏனைய மீள் சக்தி என இந்த நாடுகள் முன்னோக்க தொடங்கி விட்டன.

இப்படித்தான் முக்கித்தள்ளியபடி சிறீலங்காவும் போரில்  வென்றது?

இப்ப  தெரியுது  தானே ஓட்டைகள்  எங்கெல்லாம்  இருந்தன  என்று???

ரசியாவும்  இனி  எழுந்திருக்கவே முடியாது 

இருப்பதும்  களன்று பிரிந்து  பகை வந்து  போகப்போகின்றன

பசி  வந்தால்????😂

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

இப்படித்தான் முக்கித்தள்ளியபடி சிறீலங்காவும் போரில்  வென்றது?

இப்ப  தெரியுது  தானே ஓட்டைகள்  எங்கெல்லாம்  இருந்தன  என்று???

ரசியாவும்  இனி  எழுந்திருக்கவே முடியாது 

இருப்பதும்  களன்று பிரிந்து  பகை வந்து  போகப்போகின்றன

பசி  வந்தால்????😂

உண்மைதான். இப்போ இலங்கையில் இருந்த நிலை போல் 90 இல் ரஸ்யா இருந்தது நினைவிருக்கலாம்.

இப்போ அங்கே இருக்கும் வளங்கள் அப்போதும் இருந்தது. 

அன்று மேற்கின் சந்தையில் அதை ரஸ்யா விற்க முதலான நிலமை. இனி வரப்போவது சந்தையில் விற்க முடியாத நிலைமை.

எப்படி நீராவியின் காலம், நிலக்கரியின் காலம் முடிந்ததோ- அதே போல் நிலகீழ் எண்ணை/வாயுவின் காலமும் ஓவர்.

2035 இல் ஜேர்ம்னி 100% நிலக்கீழ் எரிபொருளில் இருந்து விடுபடும் என்பது திட்டம். அதை செய்வதை ஜேர்மன் அரசுக்கு இன்னும் விரைவாக, இலகுவாக்கி உள்ளார் புட்டின்.

எனது அடுத்த கார் ஒன்றில் EV அல்லது PHEV தான். 2£க்கு டீசல் அடிக்க கட்டாது. 

இந்த மாற்றத்தை இனி அத்தனை ஐரோப்பிய நாட்டிலும் காண்போம். 

சவுதி, கட்டார், யுஏஇ போன்ற நாடுகள் அடுத்து பொருளாதாரத்தை எப்படி வளர்க்கலாம் என சிந்தித்து செயல்படுகிறன.

குவைத், நைஜீரியா திட்டம் இல்லாமல் உள்ளன.

ரஸ்யா - ஆயுத பலம் மூலம் ஏனைய நாடுகளை அடக்கி, சுரண்டி ஒரு நவகாலனிய முறையை உருவாக்கலாம் என முயல்கிறது.

ஆனால் உண்மை என்னவென்றால் - பெலரூசை தவிர ஒரு அயல்நாடு கூட ரஸ்யாவிடம் கூட்டு சேர தயாரில்லை.

அமெரிக்காவுக்கு பதில் சொல்ல போய் - இப்போ பிராந்திய ஆளுமையை துருக்கியிடமும், உலக ஆளுமையை சீனாவிடமும் விரைந்து இழக்கிறது ரஸ்யா.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உடனடியாக நிறுத்தபட வேண்டும். 

எரிவாயுவை விடமிச்ச எல்லாமுமே பசுமை தெரிவுகள்தான் (green options). அணு கூட.  அணுவில் விபத்து, கசிவு ஆபத்து, அணுகழிவை அகற்றல் ஆகிய ஆபத்துகள் இருப்பதால் அது அலை, சூரிய சக்தி போல விரும்பபடுவதில்லையே ஒழிய -  காபனீரொட்சைட் வெளியேற்றம், புவி வெப்பமாதலை பொறுத்தவரை அணுவும் “பசுமை” தெரிவே.

சண்ட ய நிப்பாட்டோணுமெண்டா என்னத்துக்கு நீங்க ஆம்ஸ் குடுக்கிறீங்களாம் ? 😏

உத சேர்மனியின் Kறிஸ்ரியன் டெமொக்Kரசி கட்சியினரிடம் சொல்லுங்கோ. 

காஸும் வேணாம், அணுவும் வேணாம், நிலக்கரியும் வேணாம்ணாக்கா குமாரசாமியர் எப்பிடிச் சீவிக்கிறதாம் ?

🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உண்மைதான். இப்போ இலங்கையில் இருந்த நிலை போல் 90 இல் ரஸ்யா இருந்தது நினைவிருக்கலாம்.

இப்போ அங்கே இருக்கும் வளங்கள் அப்போதும் இருந்தது. 

அன்று மேற்கின் சந்தையில் அதை ரஸ்யா விற்க முதலான நிலமை. இனி வரப்போவது சந்தையில் விற்க முடியாத நிலைமை.

எப்படி நீராவியின் காலம், நிலக்கரியின் காலம் முடிந்ததோ- அதே போல் நிலகீழ் எண்ணை/வாயுவின் காலமும் ஓவர்.

2035 இல் ஜேர்ம்னி 100% நிலக்கீழ் எரிபொருளில் இருந்து விடுபடும் என்பது திட்டம். அதை செய்வதை ஜேர்மன் அரசுக்கு இன்னும் விரைவாக, இலகுவாக்கி உள்ளார் புட்டின்.

எனது அடுத்த கார் ஒன்றில் EV அல்லது PHEV தான். 2£க்கு டீசல் அடிக்க கட்டாது. 

இந்த மாற்றத்தை இனி அத்தனை ஐரோப்பிய நாட்டிலும் காண்போம். 

சவுதி, கட்டார், யுஏஇ போன்ற நாடுகள் அடுத்து பொருளாதாரத்தை எப்படி வளர்க்கலாம் என சிந்தித்து செயல்படுகிறன.

குவைத், நைஜீரியா திட்டம் இல்லாமல் உள்ளன.

ரஸ்யா - ஆயுத பலம் மூலம் ஏனைய நாடுகளை அடக்கி, சுரண்டி ஒரு நவகாலனிய முறையை உருவாக்கலாம் என முயல்கிறது.

ஆனால் உண்மை என்னவென்றால் - பெலரூசை தவிர ஒரு அயல்நாடு கூட ரஸ்யாவிடம் கூட்டு சேர தயாரில்லை.

அமெரிக்காவுக்கு பதில் சொல்ல போய் - இப்போ பிராந்திய ஆளுமையை துருக்கியிடமும், உலக ஆளுமையை சீனாவிடமும் விரைந்து இழக்கிறது ரஸ்யா.

நானும் மக்களும்  ஏற்கனவே  hybrides கார்களுக்கு போயாச்சு

டீசல்  கார்கள் முழுமையாக பரிசுக்குள்  தடை வருகிறது

அடுத்து 5ம் 4ம் இலக்கம்  கொடுக்கப்பட்ட  கார்கள்  தடை  செய்யப்பட்டு

தற்பொழுது 3ம்  இலக்க  கார்கள் கடுமையான வழிமண்டல சூழல் நேரங்களில்  தடைக்கும்  கண்காணிப்புக்குள்ளும் கொண்டு  வரப்பட்டு  விட்டன

எனவே டீசலைத்தொடர்ந்து  பெற்றோல்  கார்களையும்  எவரும் இனி வாங்கப்போவதில்லை

நீங்கள் குறிப்பிட்டது  போல்

எரிபொருளில் இருந்து விடுபடும் இவர்களது திட்டத்தை இன்னும் விரைவாக, இலகுவாக்கி உள்ளார் புட்டின்.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

நானும் மக்களும்  ஏற்கனவே  hybrides கார்களுக்கு போயாச்சு

டீசல்  கார்கள் முழுமையாக பரிசுக்குள்  தடை வருகிறது

அடுத்து 5ம் 4ம் இலக்கம்  கொடுக்கப்பட்ட  கார்கள்  தடை  செய்யப்பட்டு

தற்பொழுது 3ம்  இலக்க  கார்கள் கடுமையான வழிமண்டல சூழல் நேரங்களில்  தடைக்கும்  கண்காணிப்புக்குள்ளும் கொண்டு  வரப்பட்டு  விட்டன

எனவே டீசலைத்தொடர்ந்து  பெற்றோல்  கார்களையும்  எவரும் இனி வாங்கப்போவதில்லை

நீங்கள் குறிப்பிட்டது  போல்

எரிபொருளில் இருந்து விடுபடும் இவர்களது திட்டத்தை இன்னும் விரைவாக, இலகுவாக்கி உள்ளார் புட்டின்.

ஐரோப்பா என்பது உலகம் அல்ல. அது உலகத்தின் ஒரு பகுதி. 

தாங்கள் மட்டுமே உலகம் என்று நம்பிகொண்டிருக்கும் ஐரோப்பியர் வரிசையில் எங்கள் ஆட்கள் பலரும் தங்களையறியாமலேயே உள்ளே சேர்ந்துகொண்டுவிட்டனர்.

☹️

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

ஐரோப்பா என்பது உலகம் அல்ல. அது உலகத்தின் ஒரு பகுதி. 

தாங்கள் மட்டுமே உலகம் என்று நம்பிகொண்டிருக்கும் ஐரோப்பியர் வரிசையில் எங்கள் ஆட்கள் பலரும் தங்களையறியாமலேயே உள்ளே சேர்ந்துகொண்டுவிட்டனர்.

☹️

ஓமோம்

சிறீலங்காவுக்கு விற்று ரசியா  பிழைச்சுக்கொள்ளும்??😂

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

ஓமோம்

சிறீலங்காவுக்கு விற்று ரசியா  பிழைச்சுக்கொள்ளும்??😂

🤣

15 minutes ago, Kapithan said:

ஐரோப்பா என்பது உலகம் அல்ல. அது உலகத்தின் ஒரு பகுதி. 

தாங்கள் மட்டுமே உலகம் என்று நம்பிகொண்டிருக்கும் ஐரோப்பியர் வரிசையில் எங்கள் ஆட்கள் பலரும் தங்களையறியாமலேயே உள்ளே சேர்ந்துகொண்டுவிட்டனர்.

☹️

எரி வாயுவில் தங்கி இருக்கும் வட அமெரிக்கா, ஐரோப்பா தவிர்ந்த சந்தைகள் யாவன கற்ப்ஸ்?

அவற்றுக்கு வாயுவை எடுத்து செல்லும் குழாய்கள் எவை?

ஐரோப்பா மட்டுமே உலகம் இல்லை. ஆனால் உலக GDP யில் 45% G7 நாட்டில் உள்ளது. அதே போல் அமரிக்காவை விட சீனா green economy யில் முன்னுக்கு நிற்கிறது.

பிரெக்சிற் நேரமும் இப்படி சொல்லபட்டது - ஈயு மட்டுமே சந்தை அல்ல, யூகே இந்தியாவுடன், அவுசுடன், அமெரிக்காவுடன் வர்த்தக உடன்படிக்கை செய்யலாம் - global Britain ஐ உருவாக்குவோம் என?

நடந்தது என்ன?

அதே போல்தான் இதுவும். யூகே யிற்கும், ரஸ்யாவுக்கும் வாசலில் கிடக்கும் பாரிய சந்தை ஈயூ. அது மூடப்பட்டால்/மட்டுப்பட்டால் அதை ஈடுகட்டுவது கிட்டதட்ட இயலாத காரியம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

முட்டைக்கும் பொன்முட்டைக்கும்  நீங்கள்  விளக்கம்  கொடுத்தாலும்.....???😅

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

உங்கள் கூற்றுப்படி, 

இப்போது நீங்கள் யாரை தண்டிக்க விரும்புகிறீர்கள்? புடினையா அல்லது மக்களையா?

உங்கள் வினாவே தவறானது. நான் யாரையும் தண்டிக்குமாறு சுட்டவில்லை. அரசுகளின் எதேச்சதிகாரத்திற்கு மக்கள் பலியாகிறார்கள் என்பதைத்தான் கூறினேன். புட்டினுக்குப் பலதெரிவுகள் இருந்தன. ஏன் வலிந்த யுத்தத்தைத் தெரிவு செய்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

உண்மைதான். இப்போ இலங்கையில் இருந்த நிலை போல் 90 இல் ரஸ்யா இருந்தது நினைவிருக்கலாம்.

இப்போ அங்கே இருக்கும் வளங்கள் அப்போதும் இருந்தது. 

அன்று மேற்கின் சந்தையில் அதை ரஸ்யா விற்க முதலான நிலமை. இனி வரப்போவது சந்தையில் விற்க முடியாத நிலைமை.

எப்படி நீராவியின் காலம், நிலக்கரியின் காலம் முடிந்ததோ- அதே போல் நிலகீழ் எண்ணை/வாயுவின் காலமும் ஓவர்.

2035 இல் ஜேர்ம்னி 100% நிலக்கீழ் எரிபொருளில் இருந்து விடுபடும் என்பது திட்டம். அதை செய்வதை ஜேர்மன் அரசுக்கு இன்னும் விரைவாக, இலகுவாக்கி உள்ளார் புட்டின்.

ரஸ்யா - ஆயுத பலம் மூலம் ஏனைய நாடுகளை அடக்கி, சுரண்டி ஒரு நவகாலனிய முறையை உருவாக்கலாம் என முயல்கிறது.

ஆனால் உண்மை என்னவென்றால் - பெலரூசை தவிர ஒரு அயல்நாடு கூட ரஸ்யாவிடம் கூட்டு சேர தயாரில்லை.

அமெரிக்காவுக்கு பதில் சொல்ல போய் - இப்போ பிராந்திய ஆளுமையை துருக்கியிடமும், உலக ஆளுமையை சீனாவிடமும் விரைந்து இழக்கிறது ரஸ்யா.

மேற்கூறியவை அவதானத்திற்குரியவை. புட்டின் உக்ரேன் மீதான போர்ஊடாக உலகை அச்சுறுத்தவதாவேபடுகிறது. உணவு முதல் எரிபொருள் வரை பொருண்மியம் வீழ்ந்துவிட்டது. இதா அவர் காணவிரும்பும் உலகு. பட்டினிச்சாவு.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கினது அடிப்படையே பணம்தான். உற்பத்தி மற்றும் விற்பனை. இதில் யார் பலியானாலும் கடந்து சென்றுவிடுதல் என்ற கொள்கை. தமது மக்களது அன்றாட அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்து அமைதியாக வைத்திருப்பது. மக்கள் தெருவுக்கு இறங்காதிருக்குமாறு பார்த்துக்கொள்வது. எரிவாயு திருத்தவேலைகளுக்காக(ரஸ்யக் கூற்றுப்படி) நின்றபோது நாடாளுமன்றிலே அதிர்வலைகள்.நிதியமைச்சர், தொழிற்றுறையமைச்சர் என எரிவாயுப் பேச்சு. பாவனையைக் குறைத்தல். (ஒருவேளை குளிக்காமல் இருக்கச் சொல்வார்களோ யாராறிவார்) அது இது என்று பேசினார்கள். ஆனால், ரஸ்யாவிடமிருந்து எரிவாயு பெறுவதை தமக்கு சாதகமானதொரு நிலையில் நிறுத்திவிடுவார்கள். ரஸ்ய உக்ரேனிய யுத்தத்தில் ரஸ்யா வென்றால் உலகில் சில மாற்றங்கள் நிகழவாய்ப்புள்ளது. அப்படியொரு நிலை தோன்றாதிருப்பதைத் தடுக்கவே மேற்கு நாடுகள் உக்ரேனுக்கு அள்ளிக்கொட்டுகிறார்கள். யுத்தம் நீடிக்குமாயின் உக்ரேனானது வட - தென் உக்ரேன்களாக தோற்றம் பெறுவதில் முடிவடையலாம். தற்போதுள்ள நிலையில் பேச்சுவார்தைமூலம் முடியுமாயின் புதிய எல்லைகளை ஏற்கவேண்டிவரலாம். ஆனால், யுத்தத்தை நடாத்தும் மேற்குலகு ஒத்துக்கொள்ளுமா(?) என்பதும் புரியாதவிடயம். குறித்த ஒரு இலக்கில் உதவுவதோடு, ஒருகட்டத்திற்குமேல் மேற்கு உக்ரேனைக் கைவிட்டாலும் ஆச்சரியப்பட முடியாது.  இதிற் பொதுமக்களே பலிக்கடா. ஆனால் அதிகார சக்திகள் மக்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லைத்தானே.  
நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஓமோம்

சிறீலங்காவுக்கு விற்று ரசியா  பிழைச்சுக்கொள்ளும்??😂

ஐரோப்பா மாதிரி சிறீலங்கா மட்டுமே உலகம் அல்ல  விசுகர். ஐரோப்பா கண்ணை மூடினால் உலகம் இருண்டு போகாது. 

அத்துடன் பொன் முட்டைக்கும், சாதா  முட்டைக்கும் இடையிலான வேறுபாடு தெரியாமல் இங்கே ஒருவரும் கருத்தாடல் செய்யவில்லை. 

 ரஸ்யாவிடம் இருந்து மலிவு Vலையில்   எரிபொருள்(பொன் முட்டையைக்) கொள்வனவு செய்யாமல் வேறு நாடுகளிடம் அதிக விலையில்  சாதா முட்டைக்கு ஐரோப்பா  ஓடுப்பட்டுத் திரிவதை, ஐரோப்பிய உலகத்தவர்களுக்கு மட்டுமல்ல முழு உலகத்துக்குமே தெரியும். இதை வசதிக்குத் தக்கவாறு மறந்துவிடுகிறீர்கள். 

ஒவ்வொரு நாடுகளுக்கும் பல்வேறு தெரிவுகள் இருப்பதை புரிந்துகொள்ளுங்கள். மலிவு விலையில் ரஸ்ய எரிபொருளை தவிர்த்துவிட்டு, அதிக விலையில் கொள்வனவு செய்ய ஐரோப்பவுக்கு உள்ள தெரிவு போன்றுதான், ரஸ்யாவுக்கும் தெரிவுகள் உள்ளன.

அதுசரி, நீங்கள் இப்போது சுடுதண்ணீரில் குளிக்கிறீர்களா அல்லது குளிர் தண்ணீருக்கு மாறிவிட்டீர்களா ? 

🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.