Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பாவிற்கான... ‘நோர்ட் ஸ்ட்ரீம்- 1’ எரிவாயு விநியோகத்தை, மீண்டும் தொடங்கியது ரஷ்யா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nochchi said:

மேற்கூறியவை அவதானத்திற்குரியவை. புட்டின் உக்ரேன் மீதான போர்ஊடாக உலகை அச்சுறுத்தவதாவேபடுகிறது. உணவு முதல் எரிபொருள் வரை பொருண்மியம் வீழ்ந்துவிட்டது. இதா அவர் காணவிரும்பும் உலகு. பட்டினிச்சாவு.

22 Jul, 2022 13:48 
 
Russia slashes key interest rate

The Central Bank cited a further inflation slowdown in making the move
 
Russia slashes key interest rate

© AFP / Kirill KUDRYAVTSEV

The Central Bank of Russia (CBR) cut its key interest rate on Friday from 9.5% to 8.0%, citing a further slowdown in annual inflation and subdued consumer demand. The cut was bigger than predicted by any of the Bloomberg-surveyed economists.

According to the bank’s statement, the decline in business activity has proven slower than had been expected in June. 

However, the external environment for the Russian economy remains challenging and continues to significantly constrain economic activity,” CBR said. 

It also indicated that further rate reductions may follow in the second half of the year. 

The CBR more than doubled rates in February, from 9.5% to 20%, after Russia was hit with an avalanche of sanctions from the US, EU, UK and other countries. The emergency hike was intended to prop up the ruble, which had fallen to record lows. The Russian currency has since recovered to multi-year highs. 

Since then, the rate has been cut several times, most recently on June 10, when the CBR slashed it from 11% back to where it had been in February at 9.5%. 

The regulator also said that it expects annual inflation to edge down to 12-15% this year, before dropping to between 5% and 7% in 2023 and returning to its 4% target in 2024.

https://www.rt.com/business/559467-interest-rate-russia-bank/

ஐரோப்பா வட்டி வீதத்தை உயர்த்தும்போது, ரஸ்யா குறைக்கிறது. 

நாளை இந்த நிலை மீண்டும் மீண்டும்  மாறுபடும். உலகம்  எங்கள் விருப்பம்போல இயங்குவதில்லை என்பதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

51 minutes ago, nochchi said:

உங்கள் வினாவே தவறானது. நான் யாரையும் தண்டிக்குமாறு சுட்டவில்லை. அரசுகளின் எதேச்சதிகாரத்திற்கு மக்கள் பலியாகிறார்கள் என்பதைத்தான் கூறினேன். புட்டினுக்குப் பலதெரிவுகள் இருந்தன. ஏன் வலிந்த யுத்தத்தைத் தெரிவு செய்தார்.

மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பாவின் நடப்புக்களை தொடர்ச்சியாக அவதானித்து வந்திருப்பீர்களானால் உங்களுக்கு இந்தக் கேள்வி வந்திருக்காது என்பது என் அபிப்பிராயம்.

  • Replies 52
  • Views 3.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

ஐரோப்பா மாதிரி சிறீலங்கா மட்டுமே உலகம் அல்ல  விசுகர். ஐரோப்பா கண்ணை மூடினால் உலகம் இருண்டு போகாது. 

அத்துடன் பொன் முட்டைக்கும், சாதா  முட்டைக்கும் இடையிலான வேறுபாடு தெரியாமல் இங்கே ஒருவரும் கருத்தாடல் செய்யவில்லை. 

 ரஸ்யாவிடம் இருந்து மலிவு Vலையில்   எரிபொருள்(பொன் முட்டையைக்) கொள்வனவு செய்யாமல் வேறு நாடுகளிடம் அதிக விலையில்  சாதா முட்டைக்கு ஐரோப்பா  ஓடுப்பட்டுத் திரிவதை, ஐரோப்பிய உலகத்தவர்களுக்கு மட்டுமல்ல முழு உலகத்துக்குமே தெரியும். இதை வசதிக்குத் தக்கவாறு மறந்துவிடுகிறீர்கள். 

ஒவ்வொரு நாடுகளுக்கும் பல்வேறு தெரிவுகள் இருப்பதை புரிந்துகொள்ளுங்கள். மலிவு விலையில் ரஸ்ய எரிபொருளை தவிர்த்துவிட்டு, அதிக விலையில் கொள்வனவு செய்ய ஐரோப்பவுக்கு உள்ள தெரிவு போன்றுதான், ரஸ்யாவுக்கும் தெரிவுகள் உள்ளன.

அதுசரி, நீங்கள் இப்போது சுடுதண்ணீரில் குளிக்கிறீர்களா அல்லது குளிர் தண்ணீருக்கு மாறிவிட்டீர்களா ? 

🤣

நீங்கள் வியாபாரத்தில் இல்லை என்று தெரிகிறது??🤣

மற்றும் ஐரோப்பா உக்ரைன் போருக்கு முன்பே தன்னை சுதாகரித்துக்கொண்டு  விட்டது

சகோ goshan_che மேலே சொன்னது போல

எரிபொருளில் இருந்து விடுபடும் இவர்களது திட்டத்தை இன்னும் விரைவாக, இலகுவாக்கி உள்ளார் புட்டின்.

அப்புறம் சுடுதண்ணீர்

நீங்கள்  ஐரோப்பியரை 

பிரான்சை புரிந்து  கொள்ள இன்னும் நீண்ட தூரம்  நடக்கணும்?😂

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nochchi said:

குறித்த ஒரு இலக்கில் உதவுவதோடு, ஒருகட்டத்திற்குமேல் மேற்கு உக்ரேனைக் கைவிட்டாலும் ஆச்சரியப்பட முடியாது.  

மிக தெளிவான பார்வை.

2 hours ago, Kapithan said:

சண்ட ய நிப்பாட்டோணுமெண்டா என்னத்துக்கு நீங்க ஆம்ஸ் குடுக்கிறீங்களாம் ? 😏

இது மேற்கின் நிலைப்பாடு என நான் கருதுவது (என் நிலைப்பாடு அல்ல). 

இந்த வீண் சண்டையை நிப்பாட்டமுதல், சண்டையை ஆரம்பித்தவர் சண்டைக்கு முன்னான நிலைக்கு அல்லது, இப்போ  உள்ளதை வைத்து ஒரு ஏற்பாட்டுக்கு வரவேண்டும். இல்லாமல் ஆயுதத்தை கொடுப்பதை நிப்பாட்டினால் கியவ் தாண்டி, லெவிவ்தாண்டி, லித்துவேனியா போலந்து தாண்டி, பெர்லினில், பரிசில் வந்து நிற்பார் சண்டியன் (என தன்னை தானே நினைத்துகொள்பவர்).

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஐரோப்பா என்பது உலகம் அல்ல. அது உலகத்தின் ஒரு பகுதி. 

தாங்கள் மட்டுமே உலகம் என்று நம்பிகொண்டிருக்கும் ஐரோப்பியர் வரிசையில் எங்கள் ஆட்கள் பலரும் தங்களையறியாமலேயே உள்ளே சேர்ந்துகொண்டுவிட்டனர்.

☹️

அது தான் உண்மை.  ஐரோப்பா வாங்கவில்லையென்றால் கிழக்காசிய நாடுகளின் எரிபொருள் தேவை தற்போது பலமடங்காக அதிகரித்துள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kapithan said:

ஐரோப்பா வட்டி வீதத்தை உயர்த்தும்போது, ரஸ்யா குறைக்கிறது.

20% உயர்த்தியதை மறந்து விட்டு (கண்ணை மூடி கொண்டு?) எழுதுகிறீகள்😆.

inflation கூடும் குறையும் போது வட்டி வீதமும் மாறுபடும். விழிபுலனற்றவர் யானை பார்த்ததுபோல் பார்க்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

20% உயர்த்தியதை மறந்து விட்டு (கண்ணை மூடி கொண்டு?) எழுதுகிறீகள்😆.

inflation கூடும் குறையும் போது வட்டி வீதமும் மாறுபடும். விழிபுலனற்றவர் யானை பார்த்ததுபோல் பார்க்க முடியாது. 

கூழ்டவுண் கோசான். 

குழந்தைப்பிள்ளை போன்று எழுதுகிறீர்கள். 

இங்கே நிலைமை சிக்கலடைகிறது, அங்கே முன்னரைவிட தற்போது நிலைமை சீராகிறது. அதுதான்  விடயம்.

ரஸ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கும்போது எதிர்பார்த்ததற்கு மாறாக நிலைமை மாற்றமடைந்திருக்கிறது. 

நாலாபக்கமும் விடயங்களை சீர்தூக்கிப் பார்த்தால் மாத்திரம்ர்ர் எங்கள் கணிப்பு சரியானதாக இருக்கும். 

1 hour ago, விசுகு said:

நீங்கள் வியாபாரத்தில் இல்லை என்று தெரிகிறது??🤣

மற்றும் ஐரோப்பா உக்ரைன் போருக்கு முன்பே தன்னை சுதாகரித்துக்கொண்டு  விட்டது

சகோ goshan_che மேலே சொன்னது போல

எரிபொருளில் இருந்து விடுபடும் இவர்களது திட்டத்தை இன்னும் விரைவாக, இலகுவாக்கி உள்ளார் புட்டின்.

அப்புறம் சுடுதண்ணீர்

நீங்கள்  ஐரோப்பியரை 

பிரான்சை புரிந்து  கொள்ள இன்னும் நீண்ட தூரம்  நடக்கணும்?😂

நான் வியாபாரி இல்லை என்பது உண்மைதான்.

ஆனால் நீங்கள் வியாபாரி என்பதை நான் அடிக்கடி மறந்துபோகிறேண் விசுகர். 

🤣

ஐரோப்பியர்கள் குளிக்காமல் இருப்பார்கள்  என்கிறீர்களா? 

😉

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

கூழ்டவுண் கோசான். 

குழந்தைப்பிள்ளை போன்று எழுதுகிறீர்கள். 

இங்கே நிலைமை சிக்கலடைகிறது, அங்கே முன்னரைவிட தற்போது நிலைமை சீராகிறது. அதுதான்  விடயம்.

ரஸ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கும்போது எதிர்பார்த்ததற்கு மாறாக நிலைமை மாற்றமடைந்திருக்கிறது. 

நாலாபக்கமும் விடயங்களை சீர்தூக்கிப் பார்த்தால் மாத்திரம்ர்ர் எங்கள் கணிப்பு சரியானதாக இருக்கும். 

நான் வியாபாரி இல்லை என்பது உண்மைதான்.

ஆனால் நீங்கள் வியாபாரி என்பதை நான் அடிக்கடி மறந்துபோகிறேண் விசுகர். 

🤣

ஐரோப்பியர்கள் குளிக்காமல் இருப்பார்கள்  என்கிறீர்களா? 

😉

நீங்கள்  எங்கேயோ போய் விட்டீர்கள்??

நான்  சொன்னது நாங்க  வைனிலும்  குளிப்போம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

நீங்கள்  எங்கேயோ போய் விட்டீர்கள்??

நான்  சொன்னது நாங்க  வைனிலும்  குளிப்போம்🤣

அது உண்மைதான். 😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

கூழ்டவுண் கோசான். 

குழந்தைப்பிள்ளை போன்று எழுதுகிறீர்கள். 

🤣 என்னத்த சொல்ல கற்ப்ஸ்.

நான் எப்போ ஹீட் அப் ஆனேன்? இப்போ கூல்டவுண் ஆக😆

20% வட்டி வீதத்தை ஒரு நாளில் உயர்தி அதை படிபடியாக 9% க்கு ரஸ்யா கொண்டு வருகிறது.

யூகே யில் இன்னும் 1.50%தான். 

இதை சொன்னால் குழந்தை பிள்ளை என்கிறீகள்.

உங்களுக்கு ஒரு சாவல்!

கடந்த 3 மாதத்தில் RT தவிர ரஸ்யா சம்பந்தமாக நீங்கள் பதித்த லிங்குகள், வேறு ஏதேனும் இருந்தால் பட்டியலிடுங்களேன்? எத்தனை RT லிங்குக்கு எத்தனை non RT லிங் என்று பாருங்கள்.

அப்படி இருந்தாலும் அவை கூட ரஸ்யா வெல்கிறது என்பதை சொல்லும் செய்திகளாகவே இருக்கும்.

முன்பே சொல்லி விட்டேன் - மேற்கின் மீதான வெறுப்பால் நீங்கள் இந்த பிரச்சனையில் “ரஸ்யாவுக்கு வாழ்க்கை பட்டு” போய்விட்டீர்கள்.

மேற்கு நாட்டில் பாணின் விலை 10Pயால் கூடினாலும் அது உலகத்துக்கே தெரியும். ஆனால் முற்றான இரும்பு திரையின் பின்னால் இருக்கும் ரஸ்யாவில் என்ன நிலை என்பதே யாருக்கும் தெரியாது.

முழுக்க முழுக்க RT யின் பிராசாரத்தை, ரஸ்யா சார்பு டிவிட்டர்களை மட்டும் நம்பி - மேற்கின் பொருளாதாரம் சரிகிறது, ரஸ்யா எழும்புகிறது என எழுதுகிறீர்கள்.

அதை சொன்னால், கருத்தாளர்களை குழந்தைபிள்ளை, ஐரோப்பாவை உலகம் என கருதுபவர் என எழுதுகிறீகள்😀.

முதளாலிதுவ பொருளாதாரங்களில் boom and bust வழமைதான். British summer of discontent என தேடிப்பாருங்கள். இதே போல் முன்பே நடந்துள்ளது.

அதே போலத்தான் inflationary cycle உம். 

ஒரு குறித்த ஆண்டுகளுக்கு பின் inflation கூடும், பின் குறையும்.

உங்களுக்கு தெரியுமா? உக்ரேன் யுத்தம் தொடங்க 14 மாதங்களுக்கு முன்பே inflation கூடப்போகிறது, வட்டி வீதம் கூடும், காசை காசாக வைத்திராமல் தங்கம் இதரவற்றில் போடுங்கள் என சொன்ன பல பொருளாதார நிபுணர்கள் உள்ளார்கள்.

அதற்காக இந்த யுத்தம் கணிசமான தாக்கத்தை தரவில்லை என்பதில்லை. 

ஆனால் நீங்கள் உருவகிப்பது போல இந்த யுத்தத்தால் மேற்கின் பொருளாதாரம் தேய்கிறது, ரஸ்யா எழுகிறது என்பதெல்லாம் மிகை மதிப்பீடு - என்பது என் கருத்து.

2 hours ago, Kapithan said:

ரஸ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கும்போது எதிர்பார்த்ததற்கு மாறாக நிலைமை மாற்றமடைந்திருக்கிறது. 

ரஸ்யாவில் என்ன நடக்கிறது என எமக்கு தெரியாத பட்சத்தில் இதை ஒரே ஒரு முறையில் தான் நிறுவ முடியும்.

பொருளாதார தடைக்கு முன் மேற்குலகினுடனா ரஸ்யா ஏற்றுமதி யை விட, இப்போ மேற்கு தவிர் உலகினுடன் ரஸ்யா செய்யும் ஏற்றுமதி வர்த்தகம் பெரிது என இலகுவாக தரவுகளை வைத்து நிறுவலாம்.

தேடி பாருங்களேன்?

2 hours ago, Kapithan said:

நாலாபக்கமும் விடயங்களை சீர்தூக்கிப் பார்த்தால் மாத்திரம்ர்ர் எங்கள் கணிப்பு சரியானதாக இருக்கும். 

அப்படி எண்டால் RTயில் வரும் நாலு கட்டுரைதானே🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

அது சரி எங்க உங்கட புட்டின் ரசிகர்மன்ற காரியதரிசி - கல்யாணி?

புட்டின் ரசிகர்மன்றத்தின் காரியதரிசி  கல்யாணி மற்றும் புட்டின் ரசிகர்மன்றத்தின் தலைவர் ,கொள்கை பரப்பு செயலாளர் எல்லோருமே மேற்குநாடுகளில் இருந்து கோடைகாலத்திலும் துடிப்புடன் செயல்படுகின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, goshan_che said:

இந்த வீண் சண்டையை நிப்பாட்டமுதல், சண்டையை ஆரம்பித்தவர் சண்டைக்கு முன்னான நிலைக்கு அல்லது, இப்போ  உள்ளதை வைத்து ஒரு ஏற்பாட்டுக்கு வரவேண்டும். இல்லாமல் ஆயுதத்தை கொடுப்பதை நிப்பாட்டினால் கியவ் தாண்டி, லெவிவ்தாண்டி, லித்துவேனியா போலந்து தாண்டி, பெர்லினில், பரிசில் வந்து நிற்பார் சண்டியன் (என தன்னை தானே நினைத்துகொள்பவர்)

சண்டைக்கான உண்மையான காரணத்தை மறைக்க மேற்குலக ஊடகங்கள் விடும் பீலா கதைகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, goshan_che said:

எப்படி நீராவியின் காலம், நிலக்கரியின் காலம் முடிந்ததோ- அதே போல் நிலகீழ் எண்ணை/வாயுவின் காலமும் ஓவர்.

2035 இல் ஜேர்ம்னி 100% நிலக்கீழ் எரிபொருளில் இருந்து விடுபடும் என்பது திட்டம். அதை செய்வதை ஜேர்மன் அரசுக்கு இன்னும் விரைவாக, இலகுவாக்கி உள்ளார் புட்டின்.

ஆகா அப்படியா? 2035ல் சகலதையும் நிறுத்துவதாயின் எதற்காக ரஷ்யாவிலிருந்து இரண்டாவது எரிவாயு குழாயை அமைக்க ஆரம்பித்தார்கள். முடிவுறும் நிலையில் இருந்த அந்த திட்டத்தை டொனால்ட் ரம்ப் அரசு  முட்டுக்கட்டை போட்டது.பைடன் அரசு  அதை நிறுத்தியே விட்டது.

ichef.bbci.co.uk/news/1024/cpsprodpb/888F/produ...

மாற்று எரிசக்தி திட்டம் ஐரோப்பிய நாடுகளில் பேசுபொருளில் ஒன்றுதான். ஆனால் பெரிய தொழிற்சாலைகளுக்கு ரஷ்ய எரிவாயு இன்றியமையாதது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யவிருக்கும் எரிவாயுவினால் தேவையில்லாத விலையேற்றங்கள் வரும் என மக்கள் அஞ்சுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

ஆகா அப்படியா? 2035ல் சகலதையும் நிறுத்துவதாயின் எதற்காக ரஷ்யாவிலிருந்து இரண்டாவது எரிவாயு குழாயை அமைக்க ஆரம்பித்தார்கள்.

இதை அமைக்க தொடங்கியது 2011இல். அடுத்த 10 வருடத்தில் உலக வெப்பமாதலும், ரஸ்யாவின் இராணுவ அணுகுமுறையும் பல மாற்றங்களை சந்தித்து விட்டது. 

அணுவை தவிர்த்து 2040-50 வரை எரிவாயு வை பயன்படுத்தும் திட்டம் இப்போ 2035 உடன் 100% பச்சை சக்தி என வந்து நிற்கிறது.

https://www.reuters.com/business/sustainable-business/germany-aims-get-100-energy-renewable-sources-by-2035-2022-02-28/

விவசாய புரட்சி, கைதொழில் புரட்சி, தகவல் தொழில்நுட்ப புரட்சி போல இனி வரும் பச்சை சக்தி புரட்சியில் ஜேர்மனி, யூகே போன்ற நாடுகள் முன்னிலை வகிக்கும்.

necessity is the mother of all inventions.

தேவையே கண்டுபிடிப்புக்களை பிரசவிக்கும் தாய். 

எப்படி கிட்லரின் codes ஐ உடைக்கவேண்டிய தேவை நவீன கம்யூட்டர் கோடிங்கை உருவாக்க உதவியதோ,

எப்படி ஜப்பானின் சரணைடையா தொடர் போரிடும் உத்தி அணுகுண்டை விரைந்து உருவாக்க வைத்ததோ,

எப்படி கொவிட், கொவிட் வக்சீனை சில மாதங்களில் உருவாக்க வைத்தததோ.

அப்படி புட்டினின் யுத்தம் ஐரோப்பாவில் மாற்று சக்தி தேடலை, புதிய கண்டுபிடிப்புகளை, விரைவுபடுத்தும். 

ஒரு சின்ன உதாரணம் கீழே.

https://www.bbc.com/news/science-environment-61996520.amp

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

🤣 என்னத்த சொல்ல கற்ப்ஸ்.

நான் எப்போ ஹீட் அப் ஆனேன்? இப்போ கூல்டவுண் ஆக😆

20% வட்டி வீதத்தை ஒரு நாளில் உயர்தி அதை படிபடியாக 9% க்கு ரஸ்யா கொண்டு வருகிறது.

யூகே யில் இன்னும் 1.50%தான். 

இதை சொன்னால் குழந்தை பிள்ளை என்கிறீகள்.

உங்களுக்கு ஒரு சாவல்!

கடந்த 3 மாதத்தில் RT தவிர ரஸ்யா சம்பந்தமாக நீங்கள் பதித்த லிங்குகள், வேறு ஏதேனும் இருந்தால் பட்டியலிடுங்களேன்? எத்தனை RT லிங்குக்கு எத்தனை non RT லிங் என்று பாருங்கள்.

அப்படி இருந்தாலும் அவை கூட ரஸ்யா வெல்கிறது என்பதை சொல்லும் செய்திகளாகவே இருக்கும்.

முன்பே சொல்லி விட்டேன் - மேற்கின் மீதான வெறுப்பால் நீங்கள் இந்த பிரச்சனையில் “ரஸ்யாவுக்கு வாழ்க்கை பட்டு” போய்விட்டீர்கள்.

மேற்கு நாட்டில் பாணின் விலை 10Pயால் கூடினாலும் அது உலகத்துக்கே தெரியும். ஆனால் முற்றான இரும்பு திரையின் பின்னால் இருக்கும் ரஸ்யாவில் என்ன நிலை என்பதே யாருக்கும் தெரியாது.

முழுக்க முழுக்க RT யின் பிராசாரத்தை, ரஸ்யா சார்பு டிவிட்டர்களை மட்டும் நம்பி - மேற்கின் பொருளாதாரம் சரிகிறது, ரஸ்யா எழும்புகிறது என எழுதுகிறீர்கள்.

அதை சொன்னால், கருத்தாளர்களை குழந்தைபிள்ளை, ஐரோப்பாவை உலகம் என கருதுபவர் என எழுதுகிறீகள்😀.

முதளாலிதுவ பொருளாதாரங்களில் boom and bust வழமைதான். British summer of discontent என தேடிப்பாருங்கள். இதே போல் முன்பே நடந்துள்ளது.

அதே போலத்தான் inflationary cycle உம். 

ஒரு குறித்த ஆண்டுகளுக்கு பின் inflation கூடும், பின் குறையும்.

உங்களுக்கு தெரியுமா? உக்ரேன் யுத்தம் தொடங்க 14 மாதங்களுக்கு முன்பே inflation கூடப்போகிறது, வட்டி வீதம் கூடும், காசை காசாக வைத்திராமல் தங்கம் இதரவற்றில் போடுங்கள் என சொன்ன பல பொருளாதார நிபுணர்கள் உள்ளார்கள்.

அதற்காக இந்த யுத்தம் கணிசமான தாக்கத்தை தரவில்லை என்பதில்லை. 

ஆனால் நீங்கள் உருவகிப்பது போல இந்த யுத்தத்தால் மேற்கின் பொருளாதாரம் தேய்கிறது, ரஸ்யா எழுகிறது என்பதெல்லாம் மிகை மதிப்பீடு - என்பது என் கருத்து.

ரஸ்யாவில் என்ன நடக்கிறது என எமக்கு தெரியாத பட்சத்தில் இதை ஒரே ஒரு முறையில் தான் நிறுவ முடியும்.

பொருளாதார தடைக்கு முன் மேற்குலகினுடனா ரஸ்யா ஏற்றுமதி யை விட, இப்போ மேற்கு தவிர் உலகினுடன் ரஸ்யா செய்யும் ஏற்றுமதி வர்த்தகம் பெரிது என இலகுவாக தரவுகளை வைத்து நிறுவலாம்.

தேடி பாருங்களேன்?

அப்படி எண்டால் RTயில் வரும் நாலு கட்டுரைதானே🤣

Cool down Che, 

நான் RT.COM மட்டும்தான் வாசிக்கிறேன் என்று கூறி எதனை நிறுவ முயற்சிக்கிறீர்கள்? 

 என்னால் இணைக்கப்பட்ட செய்திகளில் ஒன்றாவது திரிவுபடுத்தப்பட்டோ அல்லது பிழையான செய்தி என்றோ உங்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதா?  இல்லையே ? முடிந்தால் அதைச் செய்யுங்கள். 

உங்களுக்கு மேலே, ஏற்கனவே கூறப்பட்டதைத்தான் திரும்பவும் கூறுகிறேன். 

""இங்கே நிலைமை சிக்கலடைகிறது, அங்கே முன்னரைவிட தற்போது நிலைமை சீராகிறது. அதுதான்  விடயம்.

ரஸ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கும்போது எதிர்பார்த்ததற்கு மாறாக நிலைமை மாற்றமடைந்திருக்கிறது.""

இதில் பிழையிருந்தால் அதை கூறுங்கள். வரிக்கு வரி, சொல்லிற்குச் சொல் பிழை பிடித்துக்கொண்டு இருக்க முடியாது. அடிப்படைக் கருத்தில் தவறு இருந்தால் அதனை வாதிடுங்கள. 

உலகம் என்றோ ஒருநாள் நிலக்கீழ் எரியாற்றலிலிருந்து மாறித்தான் ஆக வேண்டும். இitx a must. அந்த மாற்றம் நீங்களோ நானோ எதிர்பார்க்கும் வேகத்தில் இடம்பெறாது என்பது மட்டும் உண்மை. அபிவிருத்தி அடைந்த நாடுகள் வேகமாக அவற்றிற்கு மாறும். 

வலுக்குறைந்த நாடுகள் மாறுவதற்கு அதிக காலம் எடுக்கும். 

காலமும் அரசியல் மாற்றங்களும் அதனை வேகப்படுத்தவோ அல்லது வேகத்தை குறைக்கவோ செய்யும். 

😉

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யவிருக்கும் எரிவாயுவினால் தேவையில்லாத விலையேற்றங்கள் வரும் என மக்கள் அஞ்சுகின்றார்கள்

உலகமே எதிர்த்த போது, இத்தாலியும், ஜப்பானும் கைகொடாத போதும், பெரும் உலக யுத்தத்துக்கு தேவையானவற்றை தயாரித்த தாங்குதிறன் உடைய உழைப்பாளிகள், பொருளாதாரம் ஜேர்மன் பொருளாதாரம். ரஸ்யாவின் பிளக்மெயிலுக்கு பணிந்து போகாமல், நாட்டின், ஒட்டுமொத்த ஈயுவின் இறைமையை பாதுகாக்க, இதை தேவையான விலையாகவே பெரும்பான்மை ஜேர்மானிய மக்கள் கருதுகிறார்கள் என நான் நினைக்கிறேன்.

54 minutes ago, குமாரசாமி said:

சண்டைக்கான உண்மையான காரணத்தை மறைக்க மேற்குலக ஊடகங்கள் விடும் பீலா கதைகள்.

இதை பீலா கதை என ஒப்பீட்டளவில் அண்மையாக இந்த நாடுகளில்  குடியேறிவர்கள் கருதக்கூடும்.

ஆனால் செம்படையிடம் சரணடையாமல் முடிந்தளவு நேச நாட்டு படைகளிடம் சரணடைந்து தமது பகுதிகள், வீரர்களை காக்க வேணும் என்று 2ம் உலக யுத்த முடிவில் இயங்கிவர்கள் ஜேர்மன் மக்கள்.

கிழக்கு ஜேர்மனி என்ற பெயரில் ரஸ்ய எதேச்சதிகாரத்தின் கீழ் துன்பப்பட்டு, பெர்லின் சுவரை புரட்சியால் உடைத்து - சோவியத் யூனியன் என்ற பெயரில் கிழக்கு ஐரோப்பாவை சுரண்டிய ரஸ்ய ஏகாதிபத்தியத்துக்கு சாவு மணி அடித்தவர்கள் ஜேர்மன் மக்கள்.

ஜேர்மனிய சுதேசிகள் மட்டும் அல்ல, பின்லாந்து முதல், ரொமேனியா, துருக்கி வரை அத்தனை தேசிய இன கூட்டங்களின் நிலைப்பாடும் இதுதான்.

3 minutes ago, Kapithan said:

""இங்கே நிலைமை சிக்கலடைகிறது, அங்கே முன்னரைவிட தற்போது நிலைமை சீராகிறது. அதுதான்  விடயம்.

ரஸ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கும்போது எதிர்பார்த்ததற்கு மாறாக நிலைமை மாற்றமடைந்திருக்கிறது.""

இதில் பிழையிருந்தால் அதை கூறுங்கள்.

இதை அப்போதே சொல்லி விட்டேனே கற்ப்ஸ். திடீரென 20% ஆக்கி பின் படிபடியாக 9% க்கு வந்தது முன்னேற்றம்.

ஆனால் boom and bust, inflationary cycle எல்லாவற்றையும் புறம்தள்ளி விட்டு, கொவிட் காலத்தில் negative inflation ஐ தவிர்க்க, 0% ஆக்கி, அதை படிபடியாக 1.25% ஆக்கியது பொருளாதார சரிவு என நீங்கள் நிறுவ முயல்வது - தப்பு - விழிபுலனற்றோர் யானை பார்த்த கதை என.

இந்த narrative (கதையாடல்) தான் பிரச்சாரம் (கீழே வாசியுங்கள்).

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

என்னால் இணைக்கப்பட்ட செய்திகளில் ஒன்றாவது திரிவுபடுத்தப்பட்டோ அல்லது பிழையான செய்தி என்றோ உங்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதா?  இல்லையே ? முடிந்தால் அதைச் செய்யுங்கள். 

இதே போல் இங்கே சி என் என், பி பி சி செய்திகள் இணைக்கப்படாலும் அவற்றை உங்களால் பிழை என நிறுவ முடியாதுதானே கற்ப்ஸ்?

ஆனால் நீங்கள் அவற்றை ஏன் நம்ப மறுக்கிறீகள்?

அதுதான் narrative.

இதைதான் சொல்கிறேன். நீங்கள் முழுவதும் ரஸ்ய narrative இற்குள் இழுபட்டு போனதால், அதை மட்டுமே வாசிக்கிறீகள், அதை மட்டுமே நம்புகிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

உலகம் என்றோ ஒருநாள் நிலக்கீழ் எரியாற்றலிலிருந்து மாறித்தான் ஆக வேண்டும். இitx a must. அந்த மாற்றம் நீங்களோ நானோ எதிர்பார்க்கும் வேகத்தில் இடம்பெறாது என்பது மட்டும் உண்மை. அபிவிருத்தி அடைந்த நாடுகள் வேகமாக அவற்றிற்கு மாறும். 

வலுக்குறைந்த நாடுகள் மாறுவதற்கு அதிக காலம் எடுக்கும். 

நீராவி எஞ்சினில் இருந்து டீசல், பெற்றோல் எஞ்சினுக்கு உலகம் மாறிய போது, வளரும் நாடுகள் பிந்திதான் மாறின ஆனால் -அந்த துறை வளர்ந்த நாடுகள் நீராவி எஞ்சினை கைவிட்டதோடு அடிபட்டு போனது இல்லையா?

அப்போது வினைதிறன் மட்டுமே மாற ஒரே காரணம். யாரும் நீராவி எஞ்சினை தடைசெய்யவில்லை.

ஆனால் இப்போ வலிந்து பெற்றோலியம் தடை செய்யபடவேடிய நிலை.

 மேலை நாடுகளுக்கு மட்டும் அல்ல பரிஸ் உடன்படிக்கை கடப்பாடு எல்லாருக்கும்தான்.

மேலைநாடுகள் பெற்றோலியத்தை கைவிடும் போது, மாற்று எரிசக்தி பெற்றோலியத்துக்கு நிகரான வினைதிறன், லாபம் (effective and profitable )ஆக மாறி விட்டிருக்கும்.

அடுத்து சந்தையை competitive ஆக வைத்திருக்க பெற்றோலியம் பாவித்து உற்பத்தியாகும் பொருட்களுக்கு வரி விதிப்பார்கள். எனவே அதை உற்பத்தி செய்தாலும் மேற்கில் அதிக விலைக்கே விற்க முடியும்.

பெற்றோலியத்தை பாவித்து இயங்கும் உருபடிகள், கண்டுபிடிப்புகள் வராது.

விரும்பியோ, விரும்பாமலோ ஏனைய நாடுகள் பெற்றோலியத்தை விரைந்து கைவிட நேரும்.

இதில் முன்னுக்கு நிற்பது G7+China என்பதையும் கருதுக. இந்த நாடுகள் எல்லாமுமே சக்தியை உள்ளூரில் உற்பத்தி செய்ய முடிந்தால் - பெரும் அளவு அந்நியசெலாவணி இழப்பை தடுத்து, செல்வத்தை தம்நாட்டில் தக்க வைக்கமுடியும்.

தொழில்நுட்பம் இலகுவாகும் போது, இந்தியா, இலங்கை போன்றவையும் தேவையிலாமல் சவுதிக்கு ஏன் அள்ளி கொடுப்பான் நாமே சூரியபண்ணையை எமது தரிசுமண்ணில் போடலாமே என சிந்திப்பார்கள். அதில் முதலிட She’ll, BP முன்னுக்கும் நிற்பார்கள்😆.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

உலகமே எதிர்த்த போது, இத்தாலியும், ஜப்பானும் கைகொடாத போதும், பெரும் உலக யுத்தத்துக்கு தேவையானவற்றை தயாரித்த தாங்குதிறன் உடைய உழைப்பாளிகள், பொருளாதாரம் ஜேர்மன் பொருளாதாரம். ரஸ்யாவின் பிளக்மெயிலுக்கு பணிந்து போகாமல், நாட்டின், ஒட்டுமொத்த ஈயுவின் இறைமையை பாதுகாக்க, இதை தேவையான விலையாகவே பெரும்பான்மை ஜேர்மானிய மக்கள் கருதுகிறார்கள் என நான் நினைக்கிறேன்.

இதை பீலா கதை என ஒப்பீட்டளவில் அண்மையாக இந்த நாடுகளில்  குடியேறிவர்கள் கருதக்கூடும்.

ஆனால் செம்படையிடம் சரணடையாமல் முடிந்தளவு நேச நாட்டு படைகளிடம் சரணடைந்து தமது பகுதிகள், வீரர்களை காக்க வேணும் என்று 2ம் உலக யுத்த முடிவில் இயங்கிவர்கள் ஜேர்மன் மக்கள்.

கிழக்கு ஜேர்மனி என்ற பெயரில் ரஸ்ய எதேச்சதிகாரத்தின் கீழ் துன்பப்பட்டு, பெர்லின் சுவரை புரட்சியால் உடைத்து - சோவியத் யூனியன் என்ற பெயரில் கிழக்கு ஐரோப்பாவை சுரண்டிய ரஸ்ய ஏகாதிபத்தியத்துக்கு சாவு மணி அடித்தவர்கள் ஜேர்மன் மக்கள்.

ஜேர்மனிய சுதேசிகள் மட்டும் அல்ல, பின்லாந்து முதல், ரொமேனியா, துருக்கி வரை அத்தனை தேசிய இன கூட்டங்களின் நிலைப்பாடும் இதுதான்.

இதை அப்போதே சொல்லி விட்டேனே கற்ப்ஸ். திடீரென 20% ஆக்கி பின் படிபடியாக 9% க்கு வந்தது முன்னேற்றம்.

ஆனால் boom and bust, inflationary cycle எல்லாவற்றையும் புறம்தள்ளி விட்டு, கொவிட் காலத்தில் negative inflation ஐ தவிர்க்க, 0% ஆக்கி, அதை படிபடியாக 1.25% ஆக்கியது பொருளாதார சரிவு என நீங்கள் நிறுவ முயல்வது - தப்பு - விழிபுலனற்றோர் யானை பார்த்த கதை என.

இந்த narrative (கதையாடல்) தான் பிரச்சாரம் (கீழே வாசியுங்கள்).

1) பொருளாதாரச் சரிவு அல்லது  வளர்ச்சி என்பதை நான் நிறுவ அற்சிக்கவில்லை. ஆனால்  ரஸ்யா மீதான பொருளாதாரத் தடையும் எரிபொருள் வரவின்மையும் ஐரோப்பிய மக்களின் அன்றாட வாழ்க்கையையும் அதன் தொடர்ச்சியாக அரசியலையும் பாதிப்பதை நீங்கள் இல்லை என்று கூற முயல்வது உண்மையை மறுக்கும் செயல். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

1) பொருளாதாரச் சரிவு அல்லது  வளர்ச்சி என்பதை நான் நிறுவ அற்சிக்கவில்லை. ஆனால்  ரஸ்யா மீதான பொருளாதாரத் தடையும் எரிபொருள் வரவின்மையும் ஐரோப்பிய மக்களின் அன்றாட வாழ்க்கையையும் அதன் தொடர்ச்சியாக அரசியலையும் பாதிப்பதை நீங்கள் இல்லை என்று கூற முயல்வது உண்மையை மறுக்கும் செயல். 

அன்றாடவாழ்வை பாதிக்கிறது என நானே பல திரிகளில் எழுதியுள்ளேனே கற்ப்ஸ்? இதில் கூட 2£ க்கு டீசல் அடித்து கட்டுபடியாகாது என எழுதினேனே?

ஆனால் எரிபொருளளை தவிர, வேறு எதற்கும் ஐரோப்பா அதிகம் ரஸ்யாவை நம்பி இல்லை என்பதும் உண்மையே. ஆனால் அதுவும் பைடனின் சவுதி விஜயம், MBS உடனான சந்திப்பின் பின் படிபடியாக குறைவதை அவதானித்து இருபீர்கள்.

அதேபோல் அன்றாட வாழ்வை பாதிப்பதால் மட்டும் அது அரசியலில் பெரும் தாக்கத்தை தர போகிறது என்பதையே நான் மறுக்கிறேன். 

உலகின் எந்த நாடும் சில அடிப்படை விடயங்களில் விட்டு கொடாது. ரஸ்யாவின் ஆதிக்கம் பற்றிய பயம், யூகே உட்பட்ட அத்தனை ஐரோப்பிய நாடுகளுக்கும் அப்படி ஒரு விடயம்தான். ஆகவே போராட்டங்கள், வேலை முடக்கங்கள் நடக்கும் ஆனால் அது உக்ரேன் போருக்கு நேரடியாக எதிராக இருக்காது.

யூகே, ஐரோப்பிய ஊடகங்களில் கூட “உக்ரேன் போரில் ரஸ்யா ஆக்கிரமித்த போது, நாம் கையை கட்டி வேடிக்கை பார்த்திருக்க வேண்டும்” என எழுதுபவர்கள் கிட்டதட்ட இல்லை என்ற நிலைதான்.

மக்கள் மடையர்கள் இல்லை. 

1. ஒரு மாதமாக அமெரிக்கா படை எடுப்பு நடக்க போகிறது என சொல்லிய போது அதை புட்டின் மறுத்துவிட்டு பின் படை எடுத்தது

2. நேட்டோவில் சேரமாட்டோம் என உக்ரேன் அறிவித்த பின்னும் போரை தொடர்வது

3. ஒரு யூத இனத்தவனை தலைவனாக தேர்தலில் தேர்ந்த ஒட்டு மொத்த நாட்டையே நாசிகள் கூடாரம் என்பது

4. ஜோர்ஜியா, மோல்டோவா வை மிரட்டுவது, நிலம் பறிப்பது

5. சாதாரண யுத்தம் ரஸ்யாவுக்கும் உக்ரேனுக்கும் நடக்கிறது, அதை நேட்டோ ஆதரிக்கிறது ஆனால் இதில் தேவையில்லாமல் அணுஆயுத மிரட்டல் விடுவது - அணு சுவிட்சை வைத்து படம் எடுப்பது - இவை போன்ற சண்டிதன சில்லறை விளையாட்டுகள்

6. ஒரு நாட்டின் அதிபர் என்பது அந்த நாட்டுக்கு சமன். நல்லெண்ணத்தில் போன மக்ரோனை அவமானபடுத்தியது

இவை எல்லாம் - புட்டின் ஐரோப்பாவை ரஸ்யாவின் பிடியின் கீழ் கொண்டு வர முயல்கிறார் என்ற உண்மையை, புட்டின் தான்மை வெறி கொண்ட நம்ப முடியாத ஒரு அரை லூசு சர்வாதிகாரி -தம் இருப்புக்கே ஆபத்தானவர் என்ற உண்மையை ஐரோப்பிய மக்களை தெளிவாக புரிந்து கொள்ள வைத்துள்ளது என்பதே உண்மை.

இதற்கு @விசுகு அண்ணையே நல்ல உதாரணம். அவர் ஒரு போதும் மேற்கின் விசுவாசி அல்ல. உங்கள் அளவுக்கு மேற்கின் மீது எம் விடயத்தில் விசனம் உள்ளவர்.

இவை எல்லாவற்றையும் தாண்டியும் புட்டின் என்ற ஆபத்தை அவரால் கண்டுகொள்ள முடிகிறது.

அவரின் மனநிலையில்தான் பல ஐரோப்பியமக்கள் உளர். என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

Orban: Sanctions Made No Change in Moscow's Course, Europe Lost Four Governments

2 hours ago

© AP Photo / Petr David Josek

Subscribe

BUDAPEST (Sputnik) - Russia-related sanctions have not shattered Moscow's resolve, while Europe has already lost four governments amid economic and political crises, Hungarian Prime Minister Viktor Orban said on Saturday.

"The West's strategy is like a car with flat tires on all four wheels... The sanctions did not destabilize Moscow. Europe is in trouble, economically and politically, and four governments have become victims: UK, Bulgarian, Italian and Estonian… People will face a sharp increase in prices. And the better part of the world deliberately did not support us as well — China, India, Brazil, South Africa, the Arab world, Africa — everybody is aloof from this conflict, they are interested in their own affairs," Orban said, delivering a speech in the Romanian city of Baile Tusnad.

Orban further noted that the Ukrainian conflict is likely to "put an end to the Western hegemony, which could unite the world against someone," and that a "multipolar global order will knock on the door."

Hungarian Prime Minister Viktor Orban said on Saturday that Europe needs a new strategy aimed at peace in the Ukrainian conflict.

"Hungary should not be under the illusion that we can influence the strategy of the West. Nevertheless, it is a matter of honor and morality for us to state our position that a new strategy is needed, the goal of which would be peace and the formulation of a good proposal for peace. The task of the European Union is not to take sides, but to stand between Russia and Ukraine," Orban said in the Romanian city of Baile Tusnad.

https://sputniknews.com/20220723/orban-sanctions-made-no-change-in-moscows-course-europe-lost-four-governments-1097722283.html

👆இதை நான் கூறவில்லை கோசான். ஹங்கேரி அதிபர் கூறியுள்ளார்.

உங்கள் வாதங்களில் பல ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக இருந்தாலும், உக்ரேன் ரஸ்ய யுத்தத்தையும் அதன் தொடர்ச்சியாக  ஐரோப்பாவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களையும் மிகவும் குறைத்து மதிப்பிடுவதாகத் தோன்றுகிறது. 

(தனியே மேற்கின் ஊடகங்களை மட்டும் நம்பினால் என்ன நடக்கும் என்பதற்கு உங்கள் எழுத்துக்கள்  நல்ல உதாரணம்  🤣)

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

டிரம்பை பற்றிய குசா அண்ணையின் கருத்துக்கு பதிலாக ஓபன் பற்றியும் எழுதியுள்ளேன் தேடி வாசியுங்கள். ஓபன் இப்படி சொல்லாவிட்டால்தான் செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

மக்கள் மடையர்கள் இல்லை. 

1. ஒரு மாதமாக அமெரிக்கா படை எடுப்பு நடக்க போகிறது என சொல்லிய போது அதை புட்டின் மறுத்துவிட்டு பின் படை எடுத்தது

உக்ரேனை புரின் தாக்க போகிறார் என்று அமெரிக்கா எச்சரித்த போது கெட்ட அமெரிக்கன் நல்வர் புரின் செய்ய நினைக்காத ஒன்றை செய்யபோவதாக சொல்லி உலகை ஏமாற்றுகிறான் என்று கேலிசெய்தவர்கள் மேற்குலகில் வாழும் இலங்கை தமிழ் புரின் இரசிகர்கள்.

11 hours ago, goshan_che said:

இதற்கு @விசுகு அண்ணையே நல்ல உதாரணம். அவர் ஒரு போதும் மேற்கின் விசுவாசி அல்ல. உங்கள் அளவுக்கு மேற்கின் மீது எம் விடயத்தில் விசனம் உள்ளவர்.

இவை எல்லாவற்றையும் தாண்டியும் புட்டின் என்ற ஆபத்தை அவரால் கண்டுகொள்ள முடிகிறது.

அவரின் மனநிலையில்தான் பல ஐரோப்பியமக்கள் உளர். என்பது என் கருத்து.

    அவரின் மனநிலையில்தான் புரினை விளங்கி கொண்ட உலகில பல இன மக்களும் உள்ளார்கள்.
நான்கேள்விபட்டது சேர்பியன் என்ற நாட்டு இனத்தவர்கள் ரஷ்யாவை ஆதரிக்கின்றனர் அதற்கு காரணம் கொசவு பிரச்சனையில் ரஷ்யா அவர்கள் பக்கமமே நின்றதாம்.  இலங்கை சிங்கலவர்களும்  தமிழர்களும் ஒற்றுமையாக புரின் ஆதரவு  தான் 😂     இலங்கை தமிழர்கள் புரினின் வெறிதனமான இரசிகர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

இதற்கு @விசுகு அண்ணையே நல்ல உதாரணம். அவர் ஒரு போதும் மேற்கின் விசுவாசி அல்ல. உங்கள் அளவுக்கு மேற்கின் மீது எம் விடயத்தில் விசனம் உள்ளவர்.

இவை எல்லாவற்றையும் தாண்டியும் புட்டின் என்ற ஆபத்தை அவரால் கண்டுகொள்ள முடிகிறது.

அவரின் மனநிலையில்தான் பல ஐரோப்பியமக்கள் உளர். என்பது என் கருத்து.

நன்றி சகோ 

பார்வை நீண்டதாக

வரலாறு முன் வழி காட்டுவதால்

சொல்ல வேண்டிய நேரத்தில் இடத்தில் சொல்லவேண்டியதை சொல்லிச் செல்லணும் என்பதற்கமைய சொல்லிச்செல்லும்போது சில இடங்களில் எமது முன்னைய நிலைப்பாடுகளுக்கு எதிர்மறையாக நாமே நிலையெடுக்கவேண்டி வரும் போது உறவுகள் புரிந்து கொள்வர் என்ற நம்பிக்கை மட்டுமே எழுத வைக்கிறது. 

அந்த வகையில் உங்கள் இந்த புரிதல் பெரும் ஆறுதல் என் போன்றோருக்கு. நன்றி சகோ.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நான்கேள்விபட்டது சேர்பியன் என்ற நாட்டு இனத்தவர்கள் ரஷ்யாவை ஆதரிக்கின்றனர்

ஓம் ரஸ்யர்கள், சேர்பியர்கள், உக்ரேனியர்கள் எல்லாரும் ஸ்லாவிக் பெரும் இனத்தவர். ஆனால் சேர்பியாவை சுற்றி உள்ள நாடுகளான குரோசியா, பொஸ்னியா,வடக்கு  மாசிடோனியா, கொசோவா, சிலொவீனியா, மொண்டி நீக்ரோ என்பனவற்றை எல்லாம் சேர்த்து மார்ஷல் டிட்டோ என்பவர் ஒரு சோசலிச நாடாக ஆண்டார். பனிப்போரின் போது யூகொஸ்லாவியா அணிசாரா நாடாக அறிவித்து கொண்டாலும் இந்தியாவை போல சற்றே ரஸ்ய சார்புடனே இயங்கியது.

டிடோவுக்கு பின் யூகொஸ்லாவிய சிதற, ஸ்லொவீனியா பிரிந்து போய் இப்போ ஈயூவில் உள்ளது. குரோசியா போரின் மூலம் தனி நாடாகியது. வடக்கு மசிடோனியாவும் தனி நாடாகியது. இதில் கிழக்கிலங்கை போல சேர்பிய, பொஸ்னிய முஸ்லிம், குரோசிய முவ்வழி சண்டையில் 90 களின் ஆரம்பத்தில் பொஸ்னியா சீரழிந்து, பின் ஐநா தலையீட்டில் இப்போ பொஸ்னியா ஹெர்செகொவீனா என தனிநாடாக உள்ளது.

இந்த போரில் ரஸ்யா மறைமுகமாக சேர்பிய சார்ப்பு எடுத்தது. இந்த போரில் குற்றம் இழைத்தததாக தண்டிக்கபட்ட பலரும் சேர்பியர். இதை செய்வித்தது, பொஸ்னியாவை தம்மிடம் இணைக்காமல் போக காரணமாக இருந்தது மேற்கு என சேர்பியர்களுக்கு கோவம்.

அதே போல் யுகொஸ்லாவியாவில் ஒரு நாடாக அன்றி, எப்போதும் வரலாற்றில் சேர்பியாவின் ஒரு மாகாணமாக இருந்த பகுதி கொசொவோ. சேர்பிய இன, சேர்பியன் பழமைவாத கிரிஸ்தவ சின்னங்கள், தலங்கள் பல உள்ள பகுதி. ஆனால் பல நூற்றாண்டுகளாக அருகில் உள்ள அல்பேனியாவில் இருந்து வந்தோர் குடியேறி - அது அல்பேனிய பெரும்பான்மை இடமாகி விட்டது.

90களின் இறுதியில் கொசோவோவில் பிரிவினை ஏற்பட, அதை அடக்க சேர்பியா முயல- நேட்டோ தலையிட்டு சேர்பியாவை தாக்கி - கொசோவோவை தம் கட்டுபாட்டில் எடுத்து பின் அதை தனிநாடாகவும் ஆக்கியது.

இதில் ரஸ்யா நேரடியாகவே சேர்பியா பக்கம் எடுத்தது.

இதன் பின்னர் கொஸ்டனிஸ்டா என்பவர் அதிபராகி சேர்பியா, ரஸ்யாவை விட்டு விலகி, நேட்டோவுக்கு நெருக்கமாகி, நேட்டோவில், ஈயூவில் சேரும் கதைகள் எல்லாம் அடிபட்டன. பின்னர் அங்கும் குழப்பங்கள் வந்து, முடிவில் ஈயூ உறுபுரிமைக்கு விண்ணபித்து விட்டு, காத்திருக்கும் நாடாக சேர்பியா இருக்கிறது. இப்போ பதவியில் இருக்கும் அரசு நேட்டோ உறுபுரிமையை கோருவதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது.

நான் நினைக்கிறேன் ரஸ்யாவுக்கு வெளியாலே, ரஸ்யா மீது மக்கள் அபிமானம் வைத்துள்ள நாடு (புலம்பெயர் அண்ணைகளை தவிர்து😆) என்றால் அது சேர்பியாதான். மேலே சொன்ன வரலாறும், எங்கே உக்ரேனை போல எம்மையும் நாசாமாக்கி விடுவார்களோ என்ற பயமும் அவர்களை இந்த நிலைப்பட்டை எடுக்க வைத்துள்ளது.

இது அப்படியே அண்மைகாலம் வரை பின்லாந்து எடுத்த நிலை. இப்படி ரஸ்யாவுக்கு பயந்து  வாழுவதை, Finlandization என்பார்கள். 

இதுதான் சேர்பியர் ஒப்பீட்டளவில் ரஸ்யா சார்பாக இருப்பதன் பின்ணணி.

அதே போல் - செர்பியாவை, உக்ரேனை விட புட்டினும் அதிகம் நம்புகிறார்.

சேர்பியா நேட்டோ வேண்டாம் ஆனால் ஈயூ வேண்டும் என சொல்வதை ஏற்றுகொள்ளும் புட்டின், உக்ரேன் இப்போ அதையே சொல்லியும் போரை நிறுத்தவில்லை.

காரணம் புட்டினின் மனதில் உக்ரேன், சேர்பியாவை போலன்றி, ரஸ்யாவின் ஒரு பகுதி. அகண்ட ரஸ்யாவின் பகுதியான உக்ரேன் தனிநாடக இருக்கும் தகுதியே அற்றது, அது எப்படி ஈயுவில் இணைய முடியும்? இதுதான் புட்டினின் மனநிலை.

இதை நான் சொல்லவில்லை. உக்ரேன் ஆக்கிரமிப்பை ஆரம்பித்த பின் பேசிய பேச்சில் புட்டினே சொன்னார். உக்ரேன் ஒரு நாடல்ல, அது ரஸ்யாவின் பகுதியே என்று.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

பிண்ணினைப்பு

1. இந்த உக்ரேன் ஒரு நாடே அல்ல என்ற புட்டினின் கூற்று ஐரோப்பிய வரலாறு தெரிந்தவர்களை நிமிர்ந்து உட்கார வைத்த ஒன்று.

இதே போலத்தான், 2ம் உலக போரின் தொடக்கத்தில் போலந்தின் பெரும் பகுதிகளை, லக்சம்பேர்க் என்ற முழு நாட்டை, அவை நாடுகளே அல்ல, ஜேர்மனியே என கூறி நாசி ஜெர்மனியுடன் இணைத்தார் கிட்லர்.

தனிப்பட்டு, மேற்கின் திருகுதாளங்களுக்கு அப்பால், கிட்லரை போல, புட்டினும் தோற்கடிக்கபடவேண்டிய ஒரு தீயசக்தி என நான் அறுதியாக என் மனதில் துணிந்தது அவரின் இந்த பேச்சின் பின்னரே.

https://blogs.lse.ac.uk/lseih/2020/07/01/there-is-no-ukraine-fact-checking-the-kremlins-version-of-ukrainian-history/

2. https://en.m.wikipedia.org/wiki/Finlandization

1 hour ago, விசுகு said:

நன்றி சகோ 

பார்வை நீண்டதாக

வரலாறு முன் வழி காட்டுவதால்

சொல்ல வேண்டிய நேரத்தில் இடத்தில் சொல்லவேண்டியதை சொல்லிச் செல்லணும் என்பதற்கமைய சொல்லிச்செல்லும்போது சில இடங்களில் எமது முன்னைய நிலைப்பாடுகளுக்கு எதிர்மறையாக நாமே நிலையெடுக்கவேண்டி வரும் போது உறவுகள் புரிந்து கொள்வர் என்ற நம்பிக்கை மட்டுமே எழுத வைக்கிறது. 

அந்த வகையில் உங்கள் இந்த புரிதல் பெரும் ஆறுதல் என் போன்றோருக்கு. நன்றி சகோ.

நன்றி அண்ணை.

Edited by goshan_che

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.