Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரேனிய தானிய ஏற்றுமதி - உருவாகியது ஒப்பந்தம் - என்கிறது துருக்கி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

நடந்தது (facts)

1. ஒடிசாவில் இருந்து தானிய ஏற்றுமதி செய்வோம்.

ம்கப்பல்களை துறைமுகத்துள்/வெளியே உக்ரேன் escort பண்ணும்.

கப்பல்கள் வரும் போது இருபகுதியும் அந்த பகுதியில் போரை நிறுத்தும்.

கப்ப்லகள் ஆயுதம் கடத்தவில்லை என துருக்கி சோதிக்கும்.

2. ஒப்பந்தம் எழுதி 2 மணியுள் ரஸ்யா ஒடிசா துறைமுகத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது.

RT யின் ரஸ்யக் கதையாடல் ( RT’s Russian narrative)

துறைமுகத்தில் நின்ற உக்ரேனிய இராணுவ இலக்கினையே தாக்கினோம்.

ரஸ்யக் கதையாடலை கையிறு விழுங்காமல், சுயமாக சிந்திக்க வேண்டியது

1. இதை ஏன் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட முதலில் தாக்கவில்லை?

2. தாக்குவதற்கு வேறு இராணுவ இலக்குகள் இல்லையா?

3. அப்படி உக்ரேனின் மிக முக்கிய இராணுவ சாதனங்கள் உள்ள துறைமுகம் என்றால் - ரஸ்யா ஏன் அவை விலக்கி கொள்ளபடும் வரை ஒப்பந்தம் செய்யாமாட்டோம் என சொல்லவில்லை?

முடிவு

ரஸ்யா மீண்டும் ஒரு தடவை சீண்டி பார்க்கும் (இங்கே சீண்டல் துருக்கி அதிபருக்கு - புட்டினை காக்க வைத்தமைக்கு பதிலாக இருக்கலாம்) சில்லறைதனத்தை செய்கிறது.

இராஜதந்திரத்தில் statesmanship, brinkmanship  என இரு சொல்லாடல்கள் உள்ளன.

பிரச்சனைகளை இராஜதந்திரமாக கையாள்வது statesmanship- துருக்கி அதிபர் பின்லாந்து, சுவீடனை நேட்டோவில் சேர்க்கும் படலத்தில் நடந்து கொண்ட முறை இதுக்கு நல்ல உதாரணம்.

மாறாக ஒரு பிரச்சனையை மேலும் பூதாகரமாக்கி அதன் மூலம் ஆதாயம் தேட முனைவது, அதாவது பிரச்சனையை விளிம்புக்கு (brink) கொண்டு போய் வைப்பது, brinkmanship.

பூட்டின் brinkmanship மட்டுமே செய்ய தெரிந்தவர். கூடவே அவருக்கு இருக்கும் சில்லறை விளையாட்டுகள் மீதான ஈர்ப்பு. இவைதான் இந்த தாக்குதலின் காரணங்கள்.

பிகு

narrative கதையாடலுக்கு - இன்னுமொரு நல்ல உதாரணம். முள்ளிவாய்காலில் யுத்த சூனிய பகுதி என அறிவித்த பகுதி மீதே தாக்குதல் நடத்தி விட்டு அங்கே புலிகளின் கட்டளையிடும் தலைமை  இருந்தது என defence . lk எழுதியமை. 

https://dictionary.cambridge.org/dictionary/english/statesmanship

https://en.m.wikipedia.org/wiki/Brinkmanship

உலகம் முழுவதும் இதே நிலைதான்  ☹️

  • Replies 106
  • Views 5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

உலகம் முழுவதும் இதே நிலைதான்  ☹️

தேவையான இடத்தில் statesman ஆகவும் தேவையான இடத்தில் brinkman ஆகவும் நடப்பதன் பெயர்தான் இராஜதந்திரம் (diplomacy). 

ஆனால் எப்போதுமே சில்லறை விளையாட்டு, brinkmanship மட்டுமே செய்பவர் என்றால் அது எங்கள் புட்டிந்தான்.

once a secret agent, always a secret agent😀.

புட்டின் ஒரு மிக சிறந்த உளவாளி என்கிறார்கள். ஆனால் உளவு துறையில் வேலை செய்யும் உத்திகள் (tactics) அப்படியே இராஜதந்திரத்தில் பலிக்காது.

அமெரிக்கா, பிரிட்டனுக்கு பின் நேட்டோவில் இராணுவ பலமுள்ள நாடுகள் பிரான்ஸ், துருக்கி.

மக்ரோனும், எர்டஹானும் ஓபனுக்கு அடுத்து புட்டின் மீது அதிக நெகிழ்வை காட்டும் தலைவர்கள்.

பைடனும், ஜோன்சனும் புட்டினுடன் மோதல் போக்கை எடுப்பவர்கள்.

புட்டின் என்ன செய்கிறார்? சில்லறைதனம் மூலம் மக்ரோன், எர்டஹோனை பப்ளிக்காக அவமானப்படுத்துகிறார். இது இந்த நாடுகளையே அவமான படுத்துவதற்கு சமன்.

அப்போ - புட்டினோடு ஜோன்சன் பாணியில் டீல் பண்ணுவதுதான் சரி என்றாகிறது இல்லையா? இதைதான் போலந்து, லித்துவேனிய, பின்லாந்து அதிபர்கள் பின்பற்றுகிறார்கள்.

பிகு

சோவியத் காலத்து அணு ஆயுதங்கள் மட்டும் இல்லை என்றால், நேட்டோ தேவையில்லை, துருக்கியும், பிரான்சும், பிரிட்டனும், உக்ரேனும் மட்டும் போதும் புட்டினின் கொட்டத்தை அடக்க. ஆனால் வெறிகாரன் கையில் fully loaded AK இருப்பதால் இதை அமைதியாக டீல் பண்ணுகிறார்கள். 

அதை ஏதோ தனது தனிப்பட்ட பெருமை என தான்மை தலைகேறி ஆடுகிறார் புட்ஸ்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புட்டின் பார்த்த  முதல் விசர் வேலை.....கியூபாவை  கையுக்கை போட்டு வைக்காதது.😎

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

சோவியத் காலத்து அணு ஆயுதங்கள் மட்டும் இல்லை என்றால், நேட்டோ தேவையில்லை, துருக்கியும், பிரான்சும், பிரிட்டனும், உக்ரேனும் மட்டும் போதும் புட்டினின் கொட்டத்தை அடக்க. ஆனால் வெறிகாரன் கையில் fully loaded AK இருப்பதால் இதை அமைதியாக டீல் பண்ணுகிறார்கள். 

இந்த நிலமை எவளவு காலத்துக்கு என்ற வினாவும் உள்ளது. ஒரு கட்டத்திற்குமேல் மக்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பார்களா? அல்லது  பக்சயாக்களுக்கு நடந்ததுபோல்................... அதற்கான வாய்ப்பு உண்டா?

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, goshan_che said:

எல்லோருக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கிறது. உங்கள் விருப்பத்தை மறுதலிக்க நான் யார்?  🤣

(அண்மைய நாட்களி உங்கள் எழுத்துக்கள் சீர்தூக்கி ஆய்வு என்கிற நிலையில் இருந்து கீழிறங்குவதாகத் தோன்றுகிறது. அதிகம் நளினம் நையாண்டி செய்வதாலோ என்னமோ ☹️)

10 minutes ago, nochchi said:

இந்த நிலமை எவளவு காலத்துக்கு என்ற வினாவும் உள்ளது. ஒரு கட்டத்திற்குமேல் மக்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பார்களா? அல்லது  பக்சயாக்களுக்கு நடந்ததுபோல்................... அதற்கான வாய்ப்பு உண்டா?

இப்போதைக்கு அது சாத்தியம் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

எல்லோருக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கிறது. உங்கள் விருப்பத்தை மறுதலிக்க நான் யார்?  🤣

(அண்மைய நாட்களி உங்கள் எழுத்துக்கள் சீர்தூக்கி ஆய்வு என்கிற நிலையில் இருந்து கீழிறங்குவதாகத் தோன்றுகிறது. அதிகம் நளினம் நையாண்டி செய்வதாலோ என்னமோ ☹️)

அது வேறொன்றுமில்லை கற்ப்ஸ் - உங்களுக்கு ஒத்த கருத்தை எழுதினால் ஆய்வாகவும், ஒவ்வாத கருத்தை எழுதினால் வாய்வாகவும் தெரியும் 😀

இது மனித இயல்பு. எனக்கும் பொருந்தும்.

ஆனால் நக்கல், நளினம் எல்லாம் கூடி பிறந்தது.

நம்ம குருஜி சார்ளி சப்ளின் கிட்லரை செய்யாத நக்கலா?

கிட்லரை போலவே ஒரு நல்ல சப்ஜெக்ட் புட்ஸ் - சப்ளின் செய்ததின் 1% கூட நாம் செய்யாவிட்டால் அவரின் ரசிகராய் இருந்து என்ன பயன்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, nochchi said:

இந்த நிலமை எவளவு காலத்துக்கு என்ற வினாவும் உள்ளது. ஒரு கட்டத்திற்குமேல் மக்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பார்களா? அல்லது  பக்சயாக்களுக்கு நடந்ததுபோல்................... அதற்கான வாய்ப்பு உண்டா?

பக்சேக்களை போல புட்ஸை தூக்கி அடிக்க முடியாது. புட்ஸை அகற்றுவது என்பது கரணம் தப்பினால் மரணம்.

நானே இல்லையாம், இனி ரஸ்யா அழிந்தால் என்ன, உலகம் அழிந்தால் என்ன என்பது புட்ஸ்சின் மனநிலை என்பது என் கருத்து.

ஆகவே ஸ்டாலினை போல ஒரு சந்தர்ப்பம் வர காத்திருப்பார்கள்.

புட்ஸ்சை பொறுத்தவரை containment and patience - கட்டுப்படுத்தல், பொறுமை இவைதான் மேற்கின் அணுகுமுறை.

நிச்சயமாக ரஸ்யாவில் புட்சை தூக்கி எறியும் விதமாக எதையும் இப்போதைக்கு முயல மாட்சார்கள், முயலவும் முடியாது என்றே நினைக்கிறேன்.

எப்படியும் இயற்கை தன் தொழிலை செய்ய அடுத்த தலைமை sensible ஆக நடக்கும் என்று காத்திருக்கிறார்கள்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

புட்டின் பார்த்த  முதல் விசர் வேலை.....கியூபாவை  கையுக்கை போட்டு வைக்காதது.😎

பிடலுக்கு பின்னான கியூபாவும் அமெரிக்காவும் வாழு, வாழவிடு நிலைக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது. 

தவிரவும் ராஸ்யாவில் இப்போ இருப்பது கம்யூனிஸ்ட் அல்லது சோசலிஸ்ட் ஆட்சி அல்ல, மேற்கை விட மோசமான சுரண்டல், ஊழல் நிறைந்த ஒரு mafia state. 

ஆகவே தேவையில்லாமல் ரஸ்யாவுக்காக இழுபட கியூபா தயாரில்லை என்றே நினைக்கிறேன்.

வெனிசுலேவா புட்டினுக்கு அமெரிக்காவில் ஒரு நல்ல தெரிவு. அவர்களும் நண்பர்கள்தான்.

ஆனால் அவ்வளவு தூரம் போய் நிண்டு விளையாடும் ஆற்றல் ரஸ்யாவுக்கு இல்லை (வாசலில் கிடக்கும் உக்ரேனே போக்கு காட்டுகிறது). 

தவிரவும் நடுநிலைநாடுகள் நாடுகள் பலவும் உக்ரேன் ஆக்கிரமிப்பை ரசிக்கவில்லை. நாளைக்கு இதையே இன்னுமொரு நாடு தங்களுக்கு செய்யலாம் என்ற பயம்தான்.

சீனா ரஸ்யாவின் தற்கொலையை தூர இருந்து ரசிக்கிறது. இடைக்கிடை “நேட்டோ வெரி பாட்” எண்டு சவுண்டு மட்டும் விட்டபடி.

ஐயர் இடையால சைக்கிள் ஒட்டி ரெண்டுபக்கமும் லாபம் பார்க்க மட்டுமே முயல்கிறார்😆.

சக சர்வாதிகாரிகளால் ஆளப்படும் ஈரான், பெலருஸ், சிரியாவை தவிர புட்ஸ்க்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை.

அது சரி,

ஒவ்வொரு birthday party யிலும் வெட்டு கத்தியோட வந்து, குடித்து விட்டு ரகளை பண்ணி, வம்பு சண்டைக்கு போகும் வெறி குட்டியை தனிப்பட்ட வாழ்வில் நாங்களும் தள்ளி வைப்பது வழமைதானே? நாடுகளும் அப்படித்தான் 😆

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 23/7/2022 at 19:22, goshan_che said:

ஒரு பெற்றதாய் மகனின் குறைகளை மறைக்க அடுத்த வீட்டு பிள்ளையை சாட்டுவது போல, புட்டினுக்கு கவர் எடுக்கிறியள் பாருங்கோ அண்ணை

இதைத்தான்👇👆 அண்ணை சொல்லுவது being a Putin apologist எண்டு.

நீங்கள் விபரம்பல அறிந்த ஜேர்மன்காரர் - holocaust denial என்பதை கட்டாயம் தெரிந்து இருப்பீர்கள். அதே மனநிலைதான் இதுவும்.

நான் புட்டினுக்கு கவர் எடுக்கவில்லை.

சீனா,இந்தியா,அமெரிக்கா,அவுஸ்ரேலியா ஐரோப்பா என சகலரும் பிராந்திய அரசியல் செய்யும் போது ஏன் ரஷ்யா தன் பிராந்திய அரசியலை செய்யக்கூடாது? அமெரிக்கா உலகில் அனைத்து இடங்களிலும் தன் காலை பதிக்கும் போது ரஷ்யா தன்னை சுற்றியுள்ள நாடுகளை தன்கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பதில் தவறில்லை.

உங்களிடம் ஒரு கேள்வி?

அமெரிக்க சார்பு நாடுகள்  உலக அரசியலில் அமெரிக்காவை மீறி சுயமாக  முடிவெடுக்க முடியுமா?

ஜேர்மனியை அமெரிக்கா இன்றும்  தனது  கட்டுப்பாட்டிலையே வைத்திருக்கின்றது  என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.கிட்டத்தட்ட அமெரிக்காவின் இன்னொரு மாகாணம் ஜேர்மனி.

6 hours ago, goshan_che said:

சக சர்வாதிகாரிகளால் ஆளப்படும் ஈரான், பெலருஸ், சிரியாவை தவிர புட்ஸ்க்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை.

பாரத நாடு ரஷ்யாவின் செல்லக்குட்டி என்பதை நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன். 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 23/7/2022 at 07:34, தமிழ் சிறி said:

ரஷ்யாவின் பெப்ரவரி 24 படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைனிய தானியங்களின் உலகப் பற்றாக்குறை மில்லியன் கணக்கானவர்களை பட்டினி ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

உக்ரேன் உலக தானிய உற்பத்தியிலை 8ம் இடத்திலை இருக்கிறது. சீனா,இந்தியா,ரஷ்யா,அமெரிக்கா,கனடா என பல நாடுகள் முன்னணியில் இருக்கும் போது 8ம் இருக்கிறவர்ரை தானியங்கள் இல்லாததாலை உலகம் பட்டினியாய் கிடக்குதாம்.🤣

நீங்களும் ஏதோ சொல்லுறியள் நாங்களும்  கேட்கிறம் கேட்டுக்கிட்டே இருப்பம் :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

நான் புட்டினுக்கு கவர் எடுக்கவில்லை.

சீனா,இந்தியா,அமெரிக்கா,அவுஸ்ரேலியா ஐரோப்பா என சகலரும் பிராந்திய அரசியல் செய்யும் போது ஏன் ரஷ்யா தன் பிராந்திய அரசியலை செய்யக்கூடாது? அமெரிக்கா உலகில் அனைத்து இடங்களிலும் தன் காலை பதிக்கும் போது ரஷ்யா தன்னை சுற்றியுள்ள நாடுகளை தன்கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பதில் தவறில்லை.

உங்களிடம் ஒரு கேள்வி?

அமெரிக்க சார்பு நாடுகள்  உலக அரசியலில் அமெரிக்காவை மீறி சுயமாக  முடிவெடுக்க முடியுமா?

ஜேர்மனியை அமெரிக்கா இன்றும்  தனது  கட்டுப்பாட்டிலையே வைத்திருக்கின்றது  என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.கிட்டத்தட்ட அமெரிக்காவின் இன்னொரு மாகாணம் ஜேர்மனி.

எல்லாரும் பிராந்திய அரசியல் செய்யலாம். செய்கிறார்கள்.

ஆனால் ரஸ்யா செய்யும் பிராந்திய அரசியல் அல்ல அமெரிக்கா செய்வது. அமெரிக்கா தனது கொள்கைகளுக்கு உயர் மட்டத்தில் ஒத்திசைய வேணும் என மேற்கு ஐரோப்பிய நாடுகளை எதிர்பார்க்கும் ஆனால் அவர்களின் நாட்டுக்குள்ளான அரசியலில், மொழியில், கலாச்சாரத்தில் தலையிடாது.

ஜேர்மனி அமெரிக்காவின் மாகாணம் என்றால் யூகே மாவட்டம்😆.

ஆனாலும் பிரக்சிற், சிரியாவில் சண்டையிட மறுத்தமை உட்பட பல விடயங்களில் அமெரிக்கா விரும்பியதை மீறி பிரிட்டன் நடந்தபோது அதை மேவி நடக்கும் கெட்டிதனம் அமெரிக்காவிடம் இருந்தது. ஜேர்மனி கூட ரஸ்யாவுடன் நெருங்கி போனதை அமெரிக்கா எப்படி லாவகமாக கையாண்டது என்று பாருங்கள். இதுதான் நவகாலனியத்துவம்.

ஆனால் ரஸ்யா செய்வது பழைய காலனியதுவம். இந்த நாடுகளால் கைகை பிடித்து முடக்கி தன் வழிக்கு கொண்டு வருவது. மற்றையது எல்லாமே ரஸ்யாதான் என அவர்களின் தேசிய அடையாளத்தை மறுதலிப்பது.

இரெண்டுமே பிராந்திய ஆதிக்கம்தான்.

ஆனால் அமெரிக்க அணுகுமுறைக்கும், ரஸ்ய அணுகுமுறைக்கும் பாரிய இடைவெளி உண்டு. 

இந்த இடைவெளிதான் அமெரிகாவின் நேட்டோ கூட்டணியில் ஓடி வந்து இந்த நாடுகள் தாமாக இணையவும், ரஸ்யா அருகில் இருந்தும் அதை விட்டு தலை தெறிக்க ஓடவும் காரணம்.

33 minutes ago, குமாரசாமி said:

பாரத நாடு ரஷ்யாவின் செல்லக்குட்டி என்பதை நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்

சொப்பன சுந்தரி - ரஸ்யாவுக்கும், அமெரிகாவுக்கும் ஒரே நேரத்தில் செல்லாக்குட்டி😆

6 minutes ago, குமாரசாமி said:

உக்ரேன் உலக தானிய உற்பத்தியிலை 8ம் இடத்திலை இருக்கிறது. சீனா,இந்தியா,ரஷ்யா,அமெரிக்கா,கனடா என பல நாடுகள் முன்னணியில் இருக்கும் போது 8ம் இருக்கிறவர்ரை தானியங்கள் இல்லாததாலை உலகம் பட்டினியாய் கிடக்குதாம்.🤣

நீங்களும் ஏதோ சொல்லுறியள் நாங்களும்  கேட்கிறம் கேட்டுக்கிட்டே இருப்பம் :cool:

உற்பத்தியில் 8ம் இடம் ஆனால் ஏற்றுமதியில்? மேலே சொன்ன பல நாடுகளின் உற்பத்தியில் பெரும் பகுதி அவர்களுக்கே பயன்படும். ஆனால் உக்ரேன் மிகை உற்பத்தி நாடு.

தானிய தட்டுப்பாடு பொய் அல்ல. உலக சந்தையில் கோதுமை விலை எகிறியுள்ளது.

அதே போல் இந்தியா ஏற்றுமதியை தடை செய்துள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, goshan_che said:

ஆனால் ரஸ்யா செய்யும் பிராந்திய அரசியல் அல்ல அமெரிக்கா செய்வது. அமெரிக்கா தனது கொள்கைகளுக்கு உயர் மட்டத்தில் ஒத்திசைய வேணும் என மேற்கு ஐரோப்பிய நாடுகளை எதிர்பார்க்கும் ஆனால் அவர்களின் நாட்டுக்குள்ளான அரசியலில், மொழியில், கலாச்சாரத்தில் தலையிடாது.

சோவியத்யூனியன் வீழ்ச்சிக்கு பிறது அதிலிருந்து பிரிந்த நாடுகள் தனது கொள்கைக்கு ஒத்திசைய ரஷ்யா விரும்பியது. மாறாக  அந்த நாடுகளோ அமெரிக்க/நேட்டோ படைகள் தளம் அமைக்கும் அளவிற்கு மாறின. இதை ரஷ்யா தனது அச்சுறுத்தலாக எண்ணியதில் தவறில்லயே?

15 minutes ago, goshan_che said:

ஜேர்மனி அமெரிக்காவின் மாகாணம் என்றால் யூகே மாவட்டம்😆.

🤣

16 minutes ago, goshan_che said:

ஜேர்மனி கூட ரஸ்யாவுடன் நெருங்கி போனதை அமெரிக்கா எப்படி லாவகமாக கையாண்டது என்று பாருங்கள். இதுதான் நவகாலனியத்துவம்.

 வழிக்கு வந்துவிட்டீர்கள்😄. இதுதான் உக்ரேன் சண்டைக்கான  முக்கிய காரணம்.:cool:

19 minutes ago, goshan_che said:

ரஸ்யா செய்வது பழைய காலனியதுவம். இந்த நாடுகளால் கைகை பிடித்து முடக்கி தன் வழிக்கு கொண்டு வருவது. மற்றையது எல்லாமே ரஸ்யாதான் என அவர்களின் தேசிய அடையாளத்தை மறுதலிப்பது.

எல்லாமே பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திடம் கற்றுக்கொண்டவை...😂

24 minutes ago, goshan_che said:

ஆனால் அமெரிக்க அணுகுமுறைக்கும், ரஸ்ய அணுகுமுறைக்கும் பாரிய இடைவெளி உண்டு. 

இந்த இடைவெளிதான் அமெரிகாவின் நேட்டோ கூட்டணியில் ஓடி வந்து இந்த நாடுகள் தாமாக இணையவும், ரஸ்யா அருகில் இருந்தும் அதை விட்டு தலை தெறிக்க ஓடவும் காரணம்.

ஓடிப்போன அந்த இரு நாடுகளும் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் முதலாளித்துவ நாடுகள். சாரைப்பாம்பு பயப்பிடுவது போல்  தேவையில்லாமல் பயந்து போயிருக்கின்றார்கள்.😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

வழிக்கு வந்துவிட்டீர்கள்😄. இதுதான் உக்ரேன் சண்டைக்கான  முக்கிய காரணம்.:cool:

இதை நான் 6 மாதத்துக்கு முதலே சொல்லிவிட்டேனே. ஆனால் அமெரிக்கா வேண்டி நின்ற அந்த சந்தர்பத்தை, உக்ரேனை அடிக்கப்போய், தங்க தட்டில் வைத்து அமெரிக்காவிடம் கொடுத்த பெருமை புட்டினையே சாரும்.

9 minutes ago, குமாரசாமி said:

எல்லாமே பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திடம் கற்றுக்கொண்டவை...😂

அவர்களே இனி சரிவராது என கைவிட்ட பழைய பாணியை இவர் இப்போ எடுக்கிறார்😆

2022 பெல்பொட்டம் லோங்ஸ் போடுவதைப்போல 🤣.

11 minutes ago, குமாரசாமி said:

ஓடிப்போன அந்த இரு நாடுகளும் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் முதலாளித்துவ நாடுகள். சாரைப்பாம்பு பயப்பிடுவது போல்  தேவையில்லாமல் பயந்து போயிருக்கின்றார்கள்.😎

ஏனென்றால் ரஸ்யாவின் வரலாறு அப்படி. 2ம் உலக யுத்தத்தில் இருந்து அவர்களும் பயபடாமல்தான் இருந்தார்கள்.

ஆனால் புட்டின் அண்மையில் ஆடிய சாமி ஆட்டம் அவர்களை சிந்திக்க, பயப்பட வைத்துள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, goshan_che said:

ஏனென்றால் ரஸ்யாவின் வரலாறு அப்படி. 2ம் உலக யுத்தத்தில் இருந்து அவர்களும் பயபடாமல்தான் இருந்தார்கள்.

ஆனால் புட்டின் அண்மையில் ஆடிய சாமி ஆட்டம் அவர்களை சிந்திக்க, பயப்பட வைத்துள்ளது.

கதைக்கத்தெரியாத கோமாளி செலென்ஸ்கி பதவியை விட்டு விலகினால் சகலதும் சுபம் என ரஷ்ய அரச தரப்பு கூறியுள்ளது.எனவே  செலென்ஸ்கி நாட்டின்/உலக நன்மை கருதி மனைவி பிள்ளைகள் தங்கியிருக்கும் அமெரிக்காவை நோக்கி பெட்டியை கட்டுவது நல்லது 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மனைவி பிள்ளைகள் தங்கியிருக்கும் அமெரிக்காவை நோக்கி பெட்டியை கட்டுவது நல்லது

இது ரஸ்யாவின் உருட்டு. செலன்ஸ்கியின் மனைவி உக்ரேனில்தான் இருக்கிறார்.

கீழே நேற்றைய செய்தி.

https://www.mirror.co.uk/3am/celebrity-news/piers-morgan-touches-down-ukraine-27558019.amp

இது கிட்டதட்ட தலைவர் குடும்பம் பற்றி கட்டி விட்ட கதைகள் போல.

யாழ்கள வாசகர்களும் இந்த பிரட்டை நம்ப கூடாது என்பதால் இதை சொல்கிறேன்.

1 hour ago, குமாரசாமி said:

கதைக்கத்தெரியாத கோமாளி செலென்ஸ்கி பதவியை விட்டு விலகினால் சகலதும் சுபம் என ரஷ்ய அரச தரப்பு கூறியுள்ளது.

இதைதான் அணுகுமுறை வேறுபாடு என்பது. செலன்ஸ்கி கோமாளியோ, பேமானியோ அவர் மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட தலைவர்.

இதை ஒத்த நிலைப்பாட்டில்தான் அமெரிக்கா ஹங்கேரி அதிபர் ஓபன் மீதும் உள்ளது.

ஆனால் இருவரின் அணுகுமுறையில்தான் எத்தனை வித்தியாசம்.

இதே அணுகுமுறையை அமெரிக்கா எல்லா நாட்டிலும் எடுப்பதில்லை. ஆனால் ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் அமெரிக்கா இப்படித்தான் நடக்கும்.

ஆனால் புட்டினுக்குதான் நட்புறவை எப்படி உருவாக்குவது என்ற சிந்தையே இல்லையே. எல்லாரோடும் மிரட்டல், உருட்டல், சண்டிதனம் மட்டும்தானே அவர் செய்வது.

தனியே ஒரு அறையில் தான் மட்டும் இருந்தாலும் தர்க்கம் ஒன்றை ஆரம்பிக்க கூடிய ஆள் புட்ஸ் 😆

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

பனிப்போர் கால கட்டத்தின் பின் அமெரிக்காவின் உலகத்தின் மீதான ஒற்றை ஏகாதிபத்தியம் பல நியாயமான போராட்டங்களை அநீதியானவர்கள் அமெரிக்க துணையுடன் அழிக்க உதவியிருந்துள்ளது.

 புட்டினினது நடவடிக்கை அமெரிக்க ஒற்றை ஏகாதிபத்தியத்திற்கு சாவு மணி அடித்துள்ளது.

உலகில் மீண்டும் ஒரு பல சமனிலை உருவாகியுள்ளது, இது அடக்குமுறைக்குள்ளாகும் பல தேசிய இனங்களுக்கு ஒரு நல்ல விடயம்.

அது மட்டுமல்லாது அமெரிக்க சார்பு, நிலை அற்ற, உறுதியான உலக பொருளாதார நிலை உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, vasee said:

மீண்டும் முதலில் இருந்தா???🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

மீண்டும் முதலில் இருந்தா???🤣

விளங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விசுகு said:

மீண்டும் முதலில் இருந்தா???🤣

24 minutes ago, vasee said:

விளங்கவில்லை.

பதிலளிக்க விரும்பாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் உங்கள் பதிலை பார்த்தவுடன் எனக்கு தெரிந்த ஒரு அண்ணாவினது நினைவு வந்து சிரிப்பை வரவழைத்தது உங்கள் பதில்.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, vasee said:

பதிலளிக்க விரும்பாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் உங்கள் பதிலை பார்த்தவுடன் எனக்கு தெரிந்த ஒரு அண்ணாவினது நினைவு வந்து சிரிப்பை வரவழைத்தது உங்கள் பதில்.

இது பற்றி  கனக்க  விவாதித்தாகிவிட்டது?

அதனால்  தான் மீண்டும் முதலில் இருந்தா என்று  கேட்டேன்

1 hour ago, vasee said:

உலகில் மீண்டும் ஒரு பல சமனிலை உருவாகியுள்ளது, இது அடக்குமுறைக்குள்ளாகும் பல தேசிய இனங்களுக்கு ஒரு நல்ல விடயம்.

ரசியாவை தேசிய  இனங்களுக்கு உதவும் நாடாக எப்பொழுதிருந்து?

எந்த  ஆதாரத்துடன்  எழுதுகிறீர்கள்???

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, vasee said:

பனிப்போர் கால கட்டத்தின் பின் அமெரிக்காவின் உலகத்தின் மீதான ஒற்றை ஏகாதிபத்தியம் பல நியாயமான போராட்டங்களை அநீதியானவர்கள் அமெரிக்க துணையுடன் அழிக்க உதவியிருந்துள்ளது.

 புட்டினினது நடவடிக்கை அமெரிக்க ஒற்றை ஏகாதிபத்தியத்திற்கு சாவு மணி அடித்துள்ளது.

உலகில் மீண்டும் ஒரு பல சமனிலை உருவாகியுள்ளது, இது அடக்குமுறைக்குள்ளாகும் பல தேசிய இனங்களுக்கு ஒரு நல்ல விடயம்.

அது மட்டுமல்லாது அமெரிக்க சார்பு, நிலை அற்ற, உறுதியான உலக பொருளாதார நிலை உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மிகச்சரியான நல்ல கருத்து.👍🏾
உலக தலைவன் வேடம் போடும் அமெரிக்காவை அடக்குவதற்கு ரஷ்யா,சீனா,இந்தியா போன்ற நாடுகள் அவசியம் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, விசுகு said:

இது பற்றி  கனக்க  விவாதித்தாகிவிட்டது?

அதனால்  தான் மீண்டும் முதலில் இருந்தா என்று  கேட்டேன்

ரசியாவை தேசிய  இனங்களுக்கு உதவும் நாடாக எப்பொழுதிருந்து?

எந்த  ஆதாரத்துடன்  எழுதுகிறீர்கள்???

பனிப்போர் காலகட்டத்தில் ஒரு வலுச்சமனிலை நிலவி வந்தது, 
அமெரிக்கா - இரஸ்சியா 
இந்தியா - சீனா
வட கொரியா - தெஙொரியா
கிழக்கு ஜேர்மனி - மேற்கு ஜேர்மனி
இப்படி பல

அதனால் அமெரிக்கா கியூபா, தென்னமெரிக்க நாடுகள், வியட்னாம், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு நிலை எடுத்தால் அதற்கு எதிராண அணிக்கு இரஸ்சியா உதவியது.

கீரைக்கடைக்கும் எதிர்கடை வேணும் என்பார்கள் அது போல.

ஆனால் பனிப்போரின் பின்னரான காலகட்டத்தில்  அமெரிக்கா மட்டும் களத்தில் இருந்தமையால் அமெரிக்க உதவி பெறும் சக்தி மட்டும் நன்மை அடைந்தது.

அதாவது நியாமற்ற விளையாட்டை போன்றது ஒரு அணியில் 11 பேர் விளையாடும் போது எதிரணியில் 1 மட்டும் விளையாட நிர்பந்திப்பது போல.

நான் இப்போது இரஸ்சியா செய்வது சரியா பிழையா என வாதிட வில்லை, இது பற்றி முன்னமே நீங்கள் குறிப்பிட்டிருந்தால் எனது கருத்துக்கு மன்னிக்கவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

பனிப்போர் கால கட்டத்தின் பின் அமெரிக்காவின் உலகத்தின் மீதான ஒற்றை ஏகாதிபத்தியம் பல நியாயமான போராட்டங்களை அநீதியானவர்கள் அமெரிக்க துணையுடன் அழிக்க உதவியிருந்துள்ளது.

உண்மை.

ஆனால் அதே காலகட்டத்தில் சிரியா, குர்திஸ்தான் உட்பட பல நீதியான போராட்டங்களில் ரஸ்யாவும் அநீதியானவர் பக்கம் நின்றுள்ளது.

2 hours ago, vasee said:

புட்டினினது நடவடிக்கை அமெரிக்க ஒற்றை ஏகாதிபத்தியத்திற்கு சாவு மணி அடித்துள்ளது.

எப்படி நடு நிலையாக இருந்த பின்லாந்தையும், சுவீடனையும் அமெரிக்காவிடம் தஞ்சம் அடைய வைத்தா?

அல்லது ஜேர்மன்-ரஸ்ய வர்தக உறவை முறித்தா?

புட்டினது நடவடிக்கை அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சவால் விடுத்ததா? என்பதே கேள்விகுறி. சாவுமணி என்பதெல்லாம் அதீத கற்பனை. என் கருத்தில்.

2 hours ago, vasee said:

உலகில் மீண்டும் ஒரு பல சமனிலை உருவாகியுள்ளது, இது அடக்குமுறைக்குள்ளாகும் பல தேசிய இனங்களுக்கு ஒரு நல்ல விடயம்.

அப்படி உருவாகியதாக தெரியவில்லை.

அப்படி வந்தாலும் அது அமெரிக்கா v சீனா என்றே அமையும். வாசலில் கிடக்கும் உக்ரேனை பிடிக்க முடியாமல் 6 மாதமாக முக்கும் ரஸ்யா, சீனாவின் பகுதியான தாய்வானில் போய் சவால் விடும் அமெரிக்காவுக்கு நிகரான பலத்துடன் உள்ளது என்பது சரியாக படவில்லை. 

இது அமெரிக்காவை ஏற்றி பாடும் செயல் அல்ல. உறைக்கும் கள யதார்த்தம் (cold reality). 

அப்படி இருப்பினும் இதனால் தேசிய இனங்களுக்கு நன்மை விழையும் என கூற எந்த முகாந்திரமும் இல்லை. 

இரெட்டை சமநிலை இருந்த பனிப்போர் காலத்தில் இருந்து தமிழர், பலஸ்தீனர், குர்தீக்கள் என பல தேசிய இனங்கள் அடக்கபட்டுத்தான் வருகிறன. சமநிலை போட்டியில் அவை சிக்குண்டு சின்னாபின்னமாகவே வாய்ப்பு அதிகம்.

2 hours ago, vasee said:

அது மட்டுமல்லாது அமெரிக்க சார்பு, நிலை அற்ற, உறுதியான உலக பொருளாதார நிலை உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உருவாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அப்படி உருவாகினால் அது சீனா-ரஸ்யா தலைமை தாங்கும் அமைப்பாகவே அமையும். அப்போது அவுஸ்ரேலியா ஒரு சீன மாகாணம் ஆகி விட்டிருக்கும்😆.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, vasee said:

பனிப்போர் காலகட்டத்தில் ஒரு வலுச்சமனிலை நிலவி வந்தது, 
அமெரிக்கா - இரஸ்சியா 
இந்தியா - சீனா
வட கொரியா - தெஙொரியா
கிழக்கு ஜேர்மனி - மேற்கு ஜேர்மனி
இப்படி பல

அதனால் அமெரிக்கா கியூபா, தென்னமெரிக்க நாடுகள், வியட்னாம், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு நிலை எடுத்தால் அதற்கு எதிராண அணிக்கு இரஸ்சியா உதவியது.

கீரைக்கடைக்கும் எதிர்கடை வேணும் என்பார்கள் அது போல.

ஆனால் பனிப்போரின் பின்னரான காலகட்டத்தில்  அமெரிக்கா மட்டும் களத்தில் இருந்தமையால் அமெரிக்க உதவி பெறும் சக்தி மட்டும் நன்மை அடைந்தது.

அதாவது நியாமற்ற விளையாட்டை போன்றது ஒரு அணியில் 11 பேர் விளையாடும் போது எதிரணியில் 1 மட்டும் விளையாட நிர்பந்திப்பது போல.

நான் இப்போது இரஸ்சியா செய்வது சரியா பிழையா என வாதிட வில்லை, இது பற்றி முன்னமே நீங்கள் குறிப்பிட்டிருந்தால் எனது கருத்துக்கு மன்னிக்கவும்.

அப்போ இருந்தது கொள்கைகளுக்கு இடையான மோதல். கொள்கை மட்டும் அல்ல, வாழ்க்கை முறைகளுக்கு இடையான மோதல்.

இப்போ அப்படி இல்லை.

தவிரவும் அப்போ அமெரிக்கா v சோவியத் என்ற மோதல் மட்டுமே இருந்தது நீங்கள் மேலே சொன்னவை மிச்சம் எல்லாம் அந்த மோதல் வெளிப்பட்டு சீரழிந்த நாடுகள்.

உண்மையில் பனிப்போர் காலத்தில் ஒரு பொத்தானை அழுத்தினால் உலக அழிவு என்ற நிலையில் மிகவும் ஸ்தொரமற்ற நிலையிலே உலகம் இருந்தது.

உலகின் ஒரு பாதி மறு பாதியை ஜெபம் எதிரியாக பார்த்தது.

1942-1990 வரை நாடுகள் இடையே இந்த இரட்டை சமநிலை போர்களை தோற்றுவித்தது. 1990-2020 வரை நாடுகளுக்கு இடையான போர் குறைவாக இருந்தது.

இதற்கு காரணம் ஒற்றை தலைமையின் கீழ் உலகம் ஒப்பீட்டளவில் stable ஆக இருந்ததே.

14 minutes ago, குமாரசாமி said:

மிகச்சரியான நல்ல கருத்து.👍🏾
உலக தலைவன் வேடம் போடும் அமெரிக்காவை அடக்குவதற்கு ரஷ்யா,சீனா,இந்தியா போன்ற நாடுகள் அவசியம் தேவை.

ரஸ்யாவின், இந்தியாவின், சீனாவின் ஆளுகையின் கீழ் வாழாத அனுபவ குறைபாட்டால், மேற்கின் ஜனநாயக உரிமைகளை அனுபவித்து taking it for granted ஆல் ஏற்பட்ட மெத்தனத்தால் விளைந்த கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அப்போ இருந்தது கொள்கைகளுக்கு இடையான மோதல். கொள்கை மட்டும் அல்ல, வாழ்க்கை முறைகளுக்கு இடையான மோதல்.

இப்போ அப்படி இல்லை.

தவிரவும் அப்போ அமெரிக்கா v சோவியத் என்ற மோதல் மட்டுமே இருந்தது நீங்கள் மேலே சொன்னவை மிச்சம் எல்லாம் அந்த மோதல் வெளிப்பட்டு சீரழிந்த நாடுகள்.

உண்மையில் பனிப்போர் காலத்தில் ஒரு பொத்தானை அழுத்தினால் உலக அழிவு என்ற நிலையில் மிகவும் ஸ்தொரமற்ற நிலையிலே உலகம் இருந்தது.

உலகின் ஒரு பாதி மறு பாதியை ஜெபம் எதிரியாக பார்த்தது.

1942-1990 வரை நாடுகள் இடையே இந்த இரட்டை சமநிலை போர்களை தோற்றுவித்தது. 1990-2020 வரை நாடுகளுக்கு இடையான போர் குறைவாக இருந்தது.

இதற்கு காரணம் ஒற்றை தலைமையின் கீழ் உலகம் ஒப்பீட்டளவில் stable ஆக இருந்ததே.

நீங்கள் சொல்வதில் உண்மை உள்ளது போல தோன்றுகிறது, அனால் வரலாற்றில் இரஸ்சியா அணுகுண்டினை எவர் மீதும் போட்டமாதிரி தெரியவில்லை. அமெரிக்கா போட்டதுதான் அணுகுண்டு.

6 minutes ago, goshan_che said:

அப்போ இருந்தது கொள்கைகளுக்கு இடையான மோதல். கொள்கை மட்டும் அல்ல, வாழ்க்கை முறைகளுக்கு இடையான மோதல்.

வாழ்க்கை முறைகளுக்கு இடையேயான மோதல் என எதனை குறிப்பிடுகிறீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.