Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டன் பிரதமர் தேர்தல் : கருத்து கணிப்பில் ரிஷி சுனக்குக்கு பின்னடைவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் பிரதமர் தேர்தல் : கருத்து கணிப்பில் ரிஷி சுனக்குக்கு பின்னடைவு

பிரிட்டன்  பிரதமர் தேர்தலுக்கான கருத்து கணிப்பில் ரிஷி சுனக்குக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜோன்சன் அண்மையில் பதவி விலகியதை அடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. 

பிரதமர் பதவிக்கான போட்டியில் 2-க்கும் அதிகமான வேட்பாளர்கள் களம் இறங்கியதால் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில் முதல் கட்ட தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள் பல்வேறு சுற்றுகளாக வாக்களித்து போட்டியிட்ட 8 பேரில் 2 பேரை இறுதி வேட்பாளர்களாக தேர்வு செய்தனர். 

அதன்படி இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் இறுதி வேட்பாளர்களாக தெரிவாகி உள்ளனர். 

இவர்கள் இருவரில் ஒருவரை கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சுமார் 2 இலட்சம் உறுப்பினர்கள் வாக்களித்து தெரிவு செய்வார்கள். அதற்கான தேர்தல் ஆகஸ்டு 4 ஆம் திகதி முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை நடக்கிறது. 

கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள். இடையே நடந்த முதல் கட்ட தேர்தலில் அனைத்து சுற்றுகளிலும் ரிஷி சுனக் முதல் இடத்தை பிடித்ததால் அவர் பிரதமராக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால் தற்போதைய நிலவரத்தின்படி கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடையே ரிஷி சுனக்கை காட்டிலும், லிஸ் டிரஸ்சுக்கே அதிக ஆதரவு உள்ளது. இதனிடையே பிரதமர் பதவிக்கான போட்டியில் லிஸ் டிரஸ், ரிஷி சுனக்கை விட 28 புள்ளிகள் முன்னிலையில் இருப்பதாக கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. 

இதனால் பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
https://www.virakesari.lk/article/132080

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் முடியும் என்பது ரிசி  சுனாக்கிற்கே தெரியும்.  இதில் ஆச்சரியப்பட எதுவுமே இல்லை. 

போட்டியில் வென்றாற்கூட அவரை பிரதமராக்க மாட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில பிறந்த ஒரு வேறுநாட்டவரை பிரதமாரக்க இந்தியன்கள் சம்பதிப்பாங்களோ… கடைசிவரைக்கும் மாட்டாங்கள். பிறகெப்படி ஒரு இந்தியவம்சாவளியை ஆங்கிலேயர் ஏற்றுக்கொள்வார்கள்.. இது ஒட்டகத்திற்கு இடம் பொடுத்த கதைதான்.. 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ragaa said:

இந்தியாவில பிறந்த ஒரு வேறுநாட்டவரை பிரதமாரக்க இந்தியன்கள் சம்பதிப்பாங்களோ… கடைசிவரைக்கும் மாட்டாங்கள். பிறகெப்படி ஒரு இந்தியவம்சாவளியை ஆங்கிலேயர் ஏற்றுக்கொள்வார்கள்.. இது ஒட்டகத்திற்கு இடம் பொடுத்த கதைதான்.. 

ராஜீவ் இறந்த அலையில்… காங்கிரஸ் வென்று சோனியாவை பிரதமராக்க முனைந்த போது..
இந்தியா எங்கும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. சில பெண் எம்பிக்கள் தலை முடியை எடுப்பேன்,
தலை வார மாட்டேன், வெள்ளைச் சீலை உடுப்பேன் என்று எல்லாம் சபதம் எடுத்தார்கள்.

 அப்படி அவர் பிரதமராகி இருந்தாலும்… கொலை செய்யப் பட்டிருப்பார்.
விடுதலைப் புலிகள் மேல் பழி விழுந்திருக்கும்.
தமிழக லூசு காங்கிரஸ் இன்று வரை, ஈழத்தமிழரை கரிச்சுக் கொட்டிக் கொண்டே இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தமிழ் சிறி said:

உந்த சோனியா இந்தியாவிலை இருக்கும் மட்டும் மோடி அரசை யாராலையும் அசைச்சுக்கூட பார்க்கேலாது.😂

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷியோட, ஜாவிட் என்னும் பாகிஸ்தானிய வம்சாவளிகாரர் ஒருவரும் ராஜினாமா செய்திருந்தார்.

அவருக்கு தெரியும் என்ன நடக்கும் என்று, போட்டி இடவில்லை.

இவர்... தேவையில்லாமல் இதுக்குள்ள போய், தோல்வி அடையப்போகிறார்.

இது இலங்கை போல எம்பிக்கள் தேர்வில் இல்லை.நாடு முழுவதும் உள்ள, இரண்டு லட்சத்துக்கும் மேலான கட்சி உறுப்பினர்கள் தேர்வில் நடைபெறுவது. ஆகவே வெள்ளையம்மா தான் வெல்லுவார்.

பிரித்தானிய வரலாறில், விக்டோரிய மகாராணி காலத்தில் 19ம்  நூறாண்டில், பெஞ்சமின் டீஸரேலி எனும் யூதர் பிரதமராக வந்தார். அவரது வீடு, நேஷனல் டிரஸ்ட் என்னும் தர்ம ஸ்தாபனத்தின் பொறுப்பில் உள்ளது. அந்த வீட்டின், உள்ளே, unlikely prime minster in Victorian era என்று பொறிக்கப்பட்டு இருந்தது.

அதன் அர்த்தம் என்ன என்று அங்கிருந்த பெண்மணியிடம் கேட்டேன். அந்த காலத்தில், பேரரசு ஒன்றை நடாத்திய, பெரும் பலத்துடன், உலகின் தாதா போன்று திகழ்ந்த, இனவாதம் மிக்க (no blacks, no dogs) , அடிமை வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒரு நாட்டில், ஒரு யூத அகதி குடும்பத்தின் மகன் பிரதமராக வருவதனால், அதீத திறமை மிக்கவராக இருந்திருக்க வேண்டும் அல்லவா என்றார்.

அதே போல, அவர் இறந்த பின்னர், மரபை மீறி, அவரது அந்த வீட்டுக்கு சென்ற, விக்டோரியா மகாராணியார், எனது பிரதமர்களில், மிக திறமைமிக்கவர் ஆக இருந்தார் என்று நினைவு குறிப்பில், சொந்த கையெழுத்தில் பதிந்து சென்றார்.

அந்த திறமை இவருக்கு இருப்பதாக தெரியவில்லை. 

மேலும், அவருக்கு பதவி தந்து அழகு பார்த்த போரிஸ் முதுகில் குத்தியவர் என்ற கறுப்பு புள்ளி இவர் மேல் உள்ளது. அது ரசிக்க கூடியது அல்ல.  

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, Nathamuni said:

இது இலங்கை போல எம்பிக்கள் தேர்வில் இல்லை.நாடு முழுவதும் உள்ள, இரண்டு லட்சத்துக்கும் மேலான கட்சி உறுப்பினர்கள் தேர்வில் நடைபெறுவது. ஆகவே வெள்ளையம்மா தான் வெல்லுவார்.

எவ்வளவுதான் பல்லின கலாச்சார நாடுகளாக மாறினாலும் நாட்டை ஆளும் அதியுச்ச பதவிகளுக்கு தம் இனம் சார்ந்தே சாய்வார்கள் என நினைக்கின்றேன். அமெரிக்காவில் கூட ஏதாவது பிரச்சனை வரும் போது கறுப்பினத்தவர்களை அவ்ரோ அமெரிக்கன்  என விளித்து கூறுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எவ்வளவுதான் பல்லின கலாச்சார நாடுகளாக மாறினாலும் நாட்டை ஆளும் அதியுச்ச பதவிகளுக்கு தம் இனம் சார்ந்தே சாய்வார்கள் என நினைக்கின்றேன். அமெரிக்காவில் கூட ஏதாவது பிரச்சனை வரும் போது கறுப்பினத்தவர்களை அவ்ரோ அமெரிக்கன்  என விளித்து கூறுவார்கள்.

இன, நிற மத வேறுபாடுகளை மீறி, மக்கள் விரும்பினால், ஒருவர் உயர் பதவிக்கு வரமுடியும் என்பதற்கு உதாரணம், பெஞ்சமின் டிசேரலி - யூதர், ஹிட்லர் - ஆஸ்திரியர், ஒபாமா - மிக சிறந்த பேச்சு வன்மை கொண்ட கலப்பினத்தவர்.   

**

மோ பாரா (மொஹமட் பாரஹ்) என்னும் சோமாலியர். அகதியாக பத்து வயதில் பிரிட்டன் வந்தவர். ஒலிம்பிக் போட்டிகளில் நீண்ட மரதன் போட்டிகளில் வென்று, மக்களினால் விரும்பப்படும் ஒருவர். ராணியம்மாவினால் சார் பட்டம் கொடுக்கப்பட்டவர்.

அண்மையில், தனது உண்மையான பெயர் வேறு, இது நாட்டினுள் கடத்தியவர்கள் வைத்த பெயர் என்று சொல்ல, அரசும், அதனால் என்ன, உண்மையான பெயரை திருத்திக் கொள்ளலாமே.... அறியாத சிறு வயது.... ஏமாத்த பட்டிருக்கிறார் என்று சொல்லி விட்டது.

சட்டப்படி பொய் சொன்னால், குடியுரிமை பறி போகலாம். ஆனால் மக்கள் விரும்பும் ஒருவர் என்பதால் கடந்து போகிறார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ரிஷியோட, ஜாவிட் என்னும் பாகிஸ்தானிய வம்சாவளிகாரர் ஒருவரும் ராஜினாமா செய்திருந்தார்.

அவருக்கு தெரியும் என்ன நடக்கும் என்று, போட்டி இடவில்லை.

ஜாவிட் ஆரம்பத்தில் போட்டியில் இருந்தார் பிறகு தனக்கு அதிக எம் பிக்கள் ஆதரவு கிடையாது என்று தெரிந்ததும் விலகி விட்டார்.

28 minutes ago, Nathamuni said:

இன, நிற மத வேறுபாடுகளை மீறி, மக்கள் விரும்பினால், ஒருவர் உயர் பதவிக்கு வரமுடியும் என்பதற்கு உதாரணம், பெஞ்சமின் டிசேரலி - யூதர், ஹிட்லர் - ஆஸ்திரியர், ஒபாமா - மிக சிறந்த பேச்சு வன்மை கொண்ட கலப்பினத்தவர்.   

நீங்கள் சொல்வது சரியே. நிச்சயம் பிரிட்டனில் இன, நிற வேறுபாடுகள் ஒரு காரணியாக இருந்தாலும் அது தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. 

குறிப்பாக பழமைவாத கட்சி அங்கத்தவர்களிடம். சுனாக்கின், ஜாவிட்டின் தொகுதிகளை எடுத்து பார்த்தால் அவை வெள்ளையினத்தவர் அறுதி பெரும்பான்மையுள்ள தொகுதிகள்.

பழமைவாத கட்சியினர்க்கு நிறம், இனம், மதத்தை விட வர்க்கம் முக்கியம். பழமைவாத கட்சியின் முதலாளிகள் நலன் பேணும் கொள்கையை ஆதரித்தால் அவர்கள் ஏனையவற்றை அதிகம் பொருட்படுத்துவதில்லை.

ரிசி தோற்கபோகிறார் என்பதற்கு நான் காணும் காரணங்கள், முக்கியத்துவ வரிசை அடிப்படையில்.

1. பொறிஸ், ரிசி வெல்ல கூடாது என நினைக்கிறார். இப்போதும் பொரிசுக்கு கணிசமான ஆதரவு கட்சியில் உண்டு.

பொரிஸின் கதாநாயகன் சேர்சிலை போல, மீண்டும் வந்து கதிரையை பிடிப்பது பொரிசின் திட்டம் என நான் நம்புகிறேன். இப்பொதே குர்டாஸ் போன்றோர் கையெழுத்து இயக்கம் ஆரம்பித்து விட்டார்கள்.

லிஸ்சை விட ரிசி திறமைசாலி. ரிசி வந்தால் தன் மீள்வருகை பாதிக்கும் எனவே லிஸ் வந்து போட்டடித்த பின், தான் மீண்டும் கட்சி தலைமை அடுத்து பிரதமர் என்பதே பொரிசின் அடுத்த கட்ட திட்டம்.

ஆகவே தன்னால் முடிந்த அளவு ரிசிக்கு எதிராக உள்ளடி வேலை செய்கிறார்.

2. ரிசி பொரிசை முதுகில் குத்தினார். The hand that wields the knife shall never wear the crown. (மன்னரை) கொன்ற கைகள் (அடுத்து) முடியை அணிய முடியாது.

தச்சரையும் முதுகில் குத்திய ஹெசல்டைன் அடுத்து வெல்லவில்லை.

3. வரலாற்றில் இல்லாத வகையில் வரியை கூட்டிய நிதி மந்திரி ரிசி. பழமைவாத கட்சியின் அடிப்படையே வரிக்குறைப்பு. சிறிய அரசு (small state, tax cutting). இதற்கு நேர்மாறாக வரியை கூட்டி, அரச செலவீனத்தை அதுவும் கடனில்,  பன்மடங்கு கூட்டியவர் ரிசி. இப்போதும் வரியை குறைப்பேன் என ரிசி சொல்லவில்லை, ஆனால் லிஸ் சொல்கிறார். 

3. போட்டியில்லை என அறிவிக்கும் வரை பென் வலஸ்தான் உறுப்பினர் மத்தியில் 1ம் தெரிவு. அதே போல கட்சியின் மிதவாத அணியின் (எனதும்) விருப்பாக இருந்தவர் டூகன்ஹாட். இருவரும் லிஸ்சை ஆதரிக்கிறனர். 

4. மனைவியின் வரி ஏற்பாடுகள் ( இதையும், 4 ஐயும் ஊடகத்து கசிய விட்டது பொரிஸ், அதுவரை ரிசிதான் கட்சியின் செல்லபிள்ளை).

5. ரிசி வெள்ளையர் அல்லாதது

6. மந்திரி ஆனபின்பும் கூட சில மாதம் க்ரீன் கார்ட்டை வைத்திருந்தது - இது ரிசி பிரித்தானியாவுக்கு எவ்வளவு விசுவாசமாக உள்ளார் என்ற கேள்வியை எழுப்பியது ( இதை புள்ளி5 உடன் கோர்க்கலாம்).

7. ரிசி அதீத செல்வந்தராய் இருப்பதால், பொதுமக்கள் அவரை தம் பிரச்சனைகளை அறிய கூடியவராக கருத மாட்டார்கள் என, கட்சி உறுப்பினர் கருதுவது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Nathamuni said:

இன, நிற மத வேறுபாடுகளை மீறி, மக்கள் விரும்பினால், ஒருவர் உயர் பதவிக்கு வரமுடியும் என்பதற்கு உதாரணம், பெஞ்சமின் டிசேரலி - யூதர், ஹிட்லர் - ஆஸ்திரியர், ஒபாமா - மிக சிறந்த பேச்சு வன்மை கொண்ட கலப்பினத்தவர்.

அத்தி பூத்தாப்போல் வந்து போகும்.ஆனால் அடி மனதில் இன,நிறவாதம் இருந்தே தீரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.