Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏர் ஃப்ரையர் Vs ஓவன் - நாம் உண்ணும் உணவை எதில் சமைப்பது அதிக நன்மை தரும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏர் ஃப்ரையர் Vs ஓவன் - நாம் உண்ணும் உணவை எதில் சமைப்பது அதிக நன்மை தரும்?

5 மணி நேரங்களுக்கு முன்னர்
 
ஏர்ஃப்ரையர் Vs ஓவன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2021 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஏர் ஃப்ரையர்களை வாங்குவது 400 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஏர் ஃப்ரையரில் மிகக் குறைந்த அளவு எண்ணெய் பயன்படுத்தியோ அல்லது எண்ணெய் இன்றியோ பொரிக்க முடிகிறது. எனவே இது மற்ற சமையல் முறைகளை விட ஆரோக்கியமானது எனக் கருத முடியுமா?

வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் இவ்வேளையில், ஏர்ஃப்ரையர், மின்சாரம் அல்லது ஆற்றல் நுகர்வை எவ்வாறு அதிகரிக்கிறது என்பது குறித்தோ அதற்கு ஆகும் செலவு குறித்தோ சிந்திக்க வேண்டியுள்ளது.

கிரெக் ஃபுட், பிபிசி ரேடியோ 4 இன் 'ஸ்லைஸ்ட்-பிரெட்' நிகழ்ச்சியின் தொகுப்பாளர். அவர் இது தொடர்பாக இரண்டு நிபுணர்களுடன் பேசி, ஏர்ஃப்ரையர்களின் நன்மைகள் மற்றும் வரையறைகளைப் புரிந்து கொள்ள முயன்றார்.

உணவின் நாலாபக்கங்களிலிருந்தும் வெப்பக்காற்றைப் பாய்ச்சி உணவைச் சமைக்கிறது ஏர் ஃப்ரையர்

ஏர்ஃப்ரையர் சுமாராக ப்ரெட் டோஸ்டர் அளவிலானது. சமையலறை மேடையில் பொருந்துகிறது. அது உள்ளே வைக்கப்பட்டுள்ள உணவைச் சுற்றி, மிக அதிக வேகத்தில் மிக வெப்பமான காற்றைப் பாய்ச்சி, சுற்றியடிக்கிறது.

ஜேக்கப் ராட்ஜிகோவ்ஸ்கி லண்டன் இம்பீரியல் கல்லூரியில் சமையல் கல்வி வடிவமைப்பாளராக உள்ளார். "இது அடிப்படையில் மிகவும் வலுவான மற்றும் மிகவும் வெப்பமான காற்று. நீங்கள் அதை ஒரு ஹேர் ட்ரையர் போல் நினைக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.

ஏர்ஃப்ரையர் Vs ஓவன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இது அடிப்படையில் விசிறி-அடுப்பு போன்றது. ஆனால் அளவில் சிறியது. இதன் உள்ளே இருக்கும் மின்விசிறி மிக வேகமாகச் சுழலும்."

கன்வென்ஷன் ஓவனைவிட விரைவில் உணவு சமைக்கிறது ஏர் ஃப்ரையர்

"ஏர்ஃப்ரையரின் விசிறி மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் அதன் பெட்டி மிகவும் சிறியது, மேலும் இந்த முழு சாதனமும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 20 நிமிடங்களில் ஏர்ஃப்ரையரில் சிக்கன் லெக் பீஸை சமைக்க முடியும். அதை அடுப்பில் சமைக்க இன்னும் அதிக நேரம் ஆகும்." என்கிறார் ஜேக்கப்.

பெரிய கன்வென்ஷன் ஓவனில் சமைக்க, ப்ரீ ஹீட் செய்யவே அதிக நேரம் பிடிக்கும்.

ஆனால் உணவுப் பொருட்களை வைத்துச் சமைக்கும் இடவசதி மிகவும் குறைவாக இருப்பதால் ஒரே நேரத்தில் குறைந்த அளவு உணவை மட்டுமே சமைக்க முடியும்.

"நீங்கள் நான்கு அல்லது ஆறு நபர்களுக்கு சமைக்கிறீர்கள் என்றால், அது நேரத்தை மிச்சப்படுத்தாது, ஏனெனில் சிறிய அளவில் மீண்டும் மீண்டும் உணவை ஃப்ரையரில் வைத்துச் சமைக்க வேண்டியிருக்கும்," என்பது உணவு ஆய்வாளர்களின் கருத்து.

மொறு மொறு உணவு வகைகளுக்கு ஏர் ஃப்ரையர் ஏற்றது

பொதுவாக நாம் விளம்பரங்களில் பார்க்கும் பெரும்பாலான ஏர்ஃப்ரையர் மாடல்கள் சிக்கன் மற்றும் ஃப்ரைஸ் செய்வதாகவே காணப்படுகின்றன, ஏனெனில் நீங்கள் மொறு மொறு உணவுவகைகளைச் சாப்பிட விரும்பும் போது இந்தச் சாதனம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த உபகரணங்கள் உணவை மொறு மொறுப்பாக ஆக்குகின்றன என்று ஜேக்கப் கூறுகிறார். எனவே நீங்கள் மிகவும் கர கர மொறு மொறு உணவு வகைகளைச் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், இந்த உபகரணங்கள் உங்களுக்கு ஏற்றவையாக இருக்கும்.

ஏர்ஃப்ரையர் Vs ஓவன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இது ஆரோக்கியத்திற்கு ஏற்றதா?

நிறைய சூடான எண்ணெயில் டீப்-ஃப்ரை செய்து சமைப்பதை விட ஏர்ஃப்ரையரில் சமைப்பது ஆரோக்கியமானது என்கிறார் ஜேக்கப்.

கன்வென்ஷனல் ஓவனில் சமைப்பதை விடவும் கூட இது ஆரோக்கியமானதாக இருக்கும்.

உருளைக்கிழங்கில் எண்ணெய் தெளித்துச் சமைத்தால் கூட, கிழங்கு அந்த எண்ணெயை உறிஞ்சிவிடும். ஆனால் ஏர்ஃப்ரையர்களைப் பொறுத்தவரை, எண்ணெய் ஒரு வடிதட்டின் மூலம் கீழே சென்று விடுகிறது.

"ஏர்ஃப்ரையரில் அதிக எண்ணெய் இருந்தால், அது தானாகவே வடிகட்டியில் விழுந்து தங்கி விடும். உங்கள் உணவில் வராது."

ஆனால் இதுவே ஆரோக்கியமான சமையல் முறை என்று கூறமுடியாது. நீங்கள் ஆரோக்கியமான உணவை உண்ண விரும்பினால், ஆவியில் வேகவைத்த உணவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பிபிசியின் குட் ஃபுட் இதழின் ஆசிரியர் அன்யா கில்பர்ட் கூறுகையில், சில புதிய மாடல் ஏர்ஃப்ரையர்களில் 15 விதமான செயல்பாடுகள் உள்ளன. இது அந்த சாதனத்தை இன்னும் சிறப்பாக்குகிறது என்கிறார்.

ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஓவனை விடக் குறைவான மின் நுகர்வு

இந்த முடிவுக்கு வரும் முன்னர், சைமன் ஹோபன் (பிபிசியின் ஸ்லைஸ்டு ப்ரெட் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்) ஒருவருக்கான கோழிக்கால் மற்றும் ஃப்ரைஸ் சமைக்க முயற்சித்தார். முதலில் அடுப்பில் வைத்துச் சமைத்த பிறகு அதே அளவு, ஏர்ஃப்ரையரில். சமைத்துப் பார்த்தார். இந்த உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டபோது மற்ற அனைத்து மின்சாதனங்களும் அணைக்கப்படுவதையும் அவர் உறுதி செய்தார்.

இதைத் தொடர்ந்து, இந்த இரண்டு வெவ்வேறு சாதனங்களில் உணவு சமைக்க எவ்வளவு மின்சாரம் செலவழிக்கப்பட்டது என்பதை மின் மீட்டரில் சரிபார்த்தார்.

"ஓவனில் சிக்கன் சமைக்க சுமார் 35 நிமிடங்கள் ஆனது, மீட்டரைப் பார்த்தபோது, 1.05 கிலோவாட்-ஹவர் மின்சாரத்தைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பிரையரில் அதே சிக்கனை சமைக்க 20 நிமிடங்கள் ஆனது, நான் பார்த்தேன். மீட்டரில், 0.43 கிலோவாட்-ஹவர் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது."

இது தவிர, ஃப்ரைஸ் செய்யும் போது, ஓவனில் சரியாக சுமார் ஒரு மணி நேரம் ஆகும். இதில் 1.31 கிலோவாட் மணி நேரம் மின்சாரம் செலவிடப்பட்டது.

அதேசமயம் ஃப்ரையரில் ஃப்ரைஸ் மிகக் குறுகிய நேரத்தில் தயாராகிவிட்டது.

சிமோனின் கூற்றுப்படி, "35 நிமிடங்களில் ஃப்ரைஸ் தயாராகிவிட்டன. இது ஒரு மணி நேரத்திற்கு 0.55 கிலோ வாட் என்ற விகிதத்தில் மின்சாரத்தை உட்கொண்டது."

ஓவனுடன் ஒப்பிடும்போது ஏர்ஃப்ரையரில் உணவு சமைக்கச் செலவாகும் மின்சாரம் பாதிக்கும் குறைவானது என்ற முடிவுக்கு வருகிறார் கிரெக்.

ஏர் ஃப்ரையர்,ஒவனுக்கு மாற்றாகாது ஆனால், அதிக செயல்திறன் மிக்கது

இருப்பினும், ஏர்ஃப்ரையர் ஓவனுக்கு முழுமையான மாற்றாகும் என்ற் ஜேக்கப் கருதவில்லை. "நிச்சயமாக... நீங்கள் ஒரு முழு கோழியை அல்லது டர்க்கியை ஏர்ஃப்ரையரில் சமைக்க முடியாது." என்கிறார் அவர்.

"ஆனால் இது மிகவும் அருமையான கண்டுபிடிப்பு என்று நான் நினைக்கிறேன். என்னிடம் ஒன்று உள்ளது, நான் அதை அதிகம் பயன்படுத்துகிறேன். அடுப்பு இல்லாதவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள விஷயம் என்று நான் நினைக்கிறேன்."

https://www.bbc.com/tamil/science-62371025

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம், பகிர்வுக்கு நன்றி ஏராளன் .......!  👍

நான் இப்ப வளவு துப்பரவாக்கும் பொழுது நிறைய விறகுகள் சேர்த்து வைத்திருக்கிறேன். ஆறு மாதத்துக்கு போதும் எனக்கு.......மனிசிமார் வழக்கம்போல கரண்ட் அடுப்புதான்....... விறகுக்கு கிட்டவும் வராயினம்......!  😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஏராளன் said:

ஏர் ஃப்ரையர் Vs ஓவன் - நாம் உண்ணும் உணவை எதில் சமைப்பது அதிக நன்மை தரும்?

ரஷ்யன் காஸ்ல் சமைச்சால் சாப்பாடு ருசியாய் இருக்கும். சுத்தமானது,சுகாதாரமானது, தரமானது மலிவானது.கண்ணுக்கு குளிர்ச்சியானது. பக்க விளைவுகள் இல்லாதது. 😎

Does the Nord Stream 1 shutdown show Europe can't survive the winter  without Russia gas exports? | Euronews

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ரஷ்யன் காஸ்ல் சமைச்சால்

உருசிய எரிவாயுவை சொல்கிறீர்களா அண்ணை😉😂.

  • கருத்துக்கள உறவுகள்

2020 ஐக்கிய இராச்சிய இரெண்டாம் பொது முடக்க நேரத்தில் திண்ணையிலும் சமையல் திரி ஒன்றிலும் இந்த “காற்று-பொரியி” (😜) பற்றி பிரஸ்தாபி….மன்னிக்கவும் எடுத்து கூறி இருந்தேன். 

அன்றில் இருந்து எங்கள் வீட்டில் சமையல் இதில்தான். தனியே பொரிக்க மட்டும் இன்றி, அவிக்கவும், சமைக்கவும், வெதுப்பவும் வசதிகள் உள்ள பொரியிகள் சந்தையில் உளன.

அதிக லீட்டர் கன அளவு அண்டாவை வாங்கினால் 5 பேருக்கு சமைக்கலாம்.

பிகு.

லீட்டருக்கு என்ன தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ரஷ்யன் காஸ்ல் சமைச்சால் சாப்பாடு ருசியாய் இருக்கும். சுத்தமானது,சுகாதாரமானது, தரமானது மலிவானது.கண்ணுக்கு குளிர்ச்சியானது. பக்க விளைவுகள் இல்லாதது. 😎

குமாரசாமி அய்யா... தயவு செய்து,  கொஞ்ச நாளைக்கு... 
ஆங்கிலம் கலக்காமல் எழுதும்படி, வினயமாக வேண்டிக் கொள்கின்றேன். 🙏

1 hour ago, goshan_che said:

உருசிய எரிவாயுவை சொல்கிறீர்களா அண்ணை😉😂.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அய்யா... தயவு செய்து,  கொஞ்ச நாளைக்கு... 
ஆங்கிலம் கலக்காமல் எழுதும்படி, வினயமாக வேண்டிக் கொள்கின்றேன். 🙏

நான் சொல்லவந்ததை அங்கை ஒராள் தான் விளங்கிக்கொள்ள பஞ்சிப்படுறார் எண்டால்  சிறித்தம்பி நீங்களுமா?🤣

எனவே நான் பத்து தென்னம்பிள்ளை நடுற திட்டம்  உறுதியாகிக்கொண்டு வருது😂

Plant Library

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

2020 ஐக்கிய இராச்சிய இரெண்டாம் பொது முடக்க நேரத்தில் திண்ணையிலும் சமையல் திரி ஒன்றிலும் இந்த “காற்று-பொரியி” (😜) பற்றி பிரஸ்தாபி….மன்னிக்கவும் எடுத்து கூறி இருந்தேன். 

அன்றில் இருந்து எங்கள் வீட்டில் சமையல் இதில்தான். தனியே பொரிக்க மட்டும் இன்றி, அவிக்கவும், சமைக்கவும், வெதுப்பவும் வசதிகள் உள்ள பொரியிகள் சந்தையில் உளன.

அதிக லீட்டர் கன அளவு அண்டாவை வாங்கினால் 5 பேருக்கு சமைக்கலாம்.

பிகு.

லீட்டருக்கு என்ன தமிழ்

@நன்னிச் சோழன்  னுக்கு... வேலை வந்திட்டுது.
உடனை இங்கை  ஓடியாங்கோ... கோசான் என்னவோ  கேட்கிறார். 😂

  • கருத்துக்கள உறவுகள்+
10 minutes ago, தமிழ் சிறி said:

@நன்னிச் சோழன்  னுக்கு... வேலை வந்திட்டுது.
உடனை இங்கை  ஓடியாங்கோ... கோசான் என்னவோ  கேட்கிறார். 😂

ஆத்தி... இதெல்லாம் எனக்குத் தெரியாதப்பா... 

(லீட்டருக்கு லீட்டர் தானுங்கோ.)

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அய்யா... தயவு செய்து,  கொஞ்ச நாளைக்கு... 
ஆங்கிலம் கலக்காமல் எழுதும்படி, வினயமாக வேண்டிக் கொள்கின்றேன். 🙏

51 minutes ago, குமாரசாமி said:

நான் சொல்லவந்ததை அங்கை ஒராள் தான் விளங்கிக்கொள்ள பஞ்சிப்படுறார் எண்டால்  சிறித்தம்பி நீங்களுமா?🤣

எனவே நான் பத்து தென்னம்பிள்ளை நடுற திட்டம்  உறுதியாகிக்கொண்டு வருது😂

Plant Library

😂 எமக்கு வந்தால் இரத்தம், அதுவே பிறர்கு என்றால் தக்காளி சுவைகூட்டி என்பதாக இருக்க கூடாது என்பதை நகைச்சுவையாக சுட்டவே அப்படி எழுதினேன்.

தமிழுடன் ஆங்கிலமும் பேசும் அனைவரும் தம்மை உயர்த்தி காட்டவோ, மமதையிலோ, அல்லது தாம் படித்தவர்கள் என்பதை காட்டவோ அப்படி பேசுவதில்லை.

என்னை பொறுத்தவரை இப்படி யோசிப்பது ஒரு வகை தாழ்வுமனசிக்கல் என்றே நினைக்கிறேன்.

தம்மை மேட்டுகுடி அல்லாதவராக, மொழி பற்றாளர்களாக, ஆசாரவாதிகளாக பாவனை செய்வோரும் கூட இந்த வழக்கத்துக்கு மாறில்லை என்பதுதான் உண்மை.

ஆங்கிலத்தை ஆங்கில எழுத்திலோ, தமிழ் எழுத்திலோ எழுதினாலும் அது ஆங்கிலம்தான். 

மொத்தத்தில் மொழி என்பது ஒரு தொடர்பாடல் சாதனம். சொல்ல வருவதை முடிந்தளவு விளக்கமாக கேட்பவருக்கு சொல்லுவதே அதன் பிரதான இலக்கு.

ஆகவே உக்ரேன் யுத்தத்தை பற்றிய கருத்து பரிமாற்றத்தில் சக கருத்தாளர் ஆங்கிலம் கலந்து எழுதுவதை தூக்கி பிடித்து, அதை இன்னும் ஓரிருவர் வந்து ஒரு நகைச்சுவை ஆக்காமல் கடந்து போனால் - தென்னம்பிள்ளை நடும் அவசியம் எழாது🙏.

(யாவும் சிரித்து கொண்டே எழுதப்பட்டது)

53 minutes ago, நன்னிச் சோழன் said:

ஆத்தி... இதெல்லாம் எனக்குத் தெரியாதப்பா... 

(லீட்டருக்கு லீட்டர் தானுங்கோ.)

நன்றி நன்னி.

உண்மையிலேயே எனக்கு விளங்கவில்லை. லீட்டரை, கொக்கோகோலாவை, மக்டொனால்ஸ்சை அப்படியே பாவிக்க முடிந்தால் ஏன் டிவிட்டரை, வாட்சப்பை, பேஸ்புக்கை மொழி மாற்ற வேண்டும்.

கருவிகளை, வலைத்தளம், இணையம், சமூகவலை போன்றவற்றை மொழிமாற்றுவது ஏற்றுகொள்ள கூடியதே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

😂 எமக்கு வந்தால் இரத்தம், அதுவே பிறர்கு என்றால் தக்காளி சுவைகூட்டி என்பதாக இருக்க கூடாது என்பதை நகைச்சுவையாக சுட்டவே அப்படி எழுதினேன்.

தமிழுடன் ஆங்கிலமும் பேசும் அனைவரும் தம்மை உயர்த்தி காட்டவோ, மமதையிலோ, அல்லது தாம் படித்தவர்கள் என்பதை காட்டவோ அப்படி பேசுவதில்லை.

என்னை பொறுத்தவரை இப்படி யோசிப்பது ஒரு வகை தாழ்வுமனசிக்கல் என்றே நினைக்கிறேன்.

தம்மை மேட்டுகுடி அல்லாதவராக, மொழி பற்றாளர்களாக, ஆசாரவாதிகளாக பாவனை செய்வோரும் கூட இந்த வழக்கத்துக்கு மாறில்லை என்பதுதான் உண்மை.

ஆங்கிலத்தை ஆங்கில எழுத்திலோ, தமிழ் எழுத்திலோ எழுதினாலும் அது ஆங்கிலம்தான். 

மொத்தத்தில் மொழி என்பது ஒரு தொடர்பாடல் சாதனம். சொல்ல வருவதை முடிந்தளவு விளக்கமாக கேட்பவருக்கு சொல்லுவதே அதன் பிரதான இலக்கு.

ஆகவே உக்ரேன் யுத்தத்தை பற்றிய கருத்து பரிமாற்றத்தில் சக கருத்தாளர் ஆங்கிலம் கலந்து எழுதுவதை தூக்கி பிடித்து, அதை இன்னும் ஓரிருவர் வந்து ஒரு நகைச்சுவை ஆக்காமல் கடந்து போனால் - தென்னம்பிள்ளை நடும் அவசியம் எழாது🙏.

(யாவும் சிரித்து கொண்டே எழுதப்பட்டது)

அதெப்படி தாங்கள் எழுதினால் நகைச்சுவை மற்றவன் எழுதினால் நகைச்சுவையாக தெரிவதில்லை? 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அதெப்படி தாங்கள் எழுதினால் நகைச்சுவை மற்றவன் எழுதினால் நகைச்சுவையாக தெரிவதில்லை? 😁

😆 எனக்கு அப்படித்தன் தெரிகிறது. உங்களுக்கும் அப்படித்தான் என்றால் - நோ பிராப்ளம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, goshan_che said:

நன்றி நன்னி.

உண்மையிலேயே எனக்கு விளங்கவில்லை. லீட்டரை, கொக்கோகோலாவை, மக்டொனால்ஸ்சை அப்படியே பாவிக்க முடிந்தால் ஏன் டிவிட்டரை, வாட்சப்பை, பேஸ்புக்கை மொழி மாற்ற வேண்டும்.

கருவிகளை, வலைத்தளம், இணையம், சமூகவலை போன்றவற்றை மொழிமாற்றுவது ஏற்றுகொள்ள கூடியதே.

நான் அப்படி எழுதியதில்லை. நான்,

  • Facebook - வேசுபுக்கு 
  • Twitter - துவிட்டர்
  •  ........

என்று வேற்றுமொழி பெயர்மொழிகளை தமிழ் இலக்கணத்திற்கு ஏற்பவே எழுதுபவன். அவற்றை மொழிபெயர்ப்பது கிடையாது. ஒருவரின்/ஒன்றின் பெயரை நாம் மொழிபெயர்த்தல் கூடாது என்பது எனது கொள்கை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

😂 எமக்கு வந்தால் இரத்தம், அதுவே பிறர்கு என்றால் தக்காளி சுவைகூட்டி என்பதாக இருக்க கூடாது என்பதை நகைச்சுவையாக சுட்டவே அப்படி எழுதினேன்.

தமிழுடன் ஆங்கிலமும் பேசும் அனைவரும் தம்மை உயர்த்தி காட்டவோ, மமதையிலோ, அல்லது தாம் படித்தவர்கள் என்பதை காட்டவோ அப்படி பேசுவதில்லை.

என்னை பொறுத்தவரை இப்படி யோசிப்பது ஒரு வகை தாழ்வுமனசிக்கல் என்றே நினைக்கிறேன்.

தம்மை மேட்டுகுடி அல்லாதவராக, மொழி பற்றாளர்களாக, ஆசாரவாதிகளாக பாவனை செய்வோரும் கூட இந்த வழக்கத்துக்கு மாறில்லை என்பதுதான் உண்மை.

ஆங்கிலத்தை ஆங்கில எழுத்திலோ, தமிழ் எழுத்திலோ எழுதினாலும் அது ஆங்கிலம்தான். 

மொத்தத்தில் மொழி என்பது ஒரு தொடர்பாடல் சாதனம். சொல்ல வருவதை முடிந்தளவு விளக்கமாக கேட்பவருக்கு சொல்லுவதே அதன் பிரதான இலக்கு.

ஆகவே உக்ரேன் யுத்தத்தை பற்றிய கருத்து பரிமாற்றத்தில் சக கருத்தாளர் ஆங்கிலம் கலந்து எழுதுவதை தூக்கி பிடித்து, அதை இன்னும் ஓரிருவர் வந்து ஒரு நகைச்சுவை ஆக்காமல் கடந்து போனால் - தென்னம்பிள்ளை நடும் அவசியம் எழாது🙏.

(யாவும் சிரித்து கொண்டே எழுதப்பட்டது)

நன்றி நன்னி.

உண்மையிலேயே எனக்கு விளங்கவில்லை. லீட்டரை, கொக்கோகோலாவை, மக்டொனால்ஸ்சை அப்படியே பாவிக்க முடிந்தால் ஏன் டிவிட்டரை, வாட்சப்பை, பேஸ்புக்கை மொழி மாற்ற வேண்டும்.

கருவிகளை, வலைத்தளம், இணையம், சமூகவலை போன்றவற்றை மொழிமாற்றுவது ஏற்றுகொள்ள கூடியதே.

பெயர்  மொழி மாற்றம் செய்யப்படுவதில்லை. 

ஆ.ஆனால் பூவைப் பூ என்றும் கூறலாம், புஸ்ட்பம் என்றும் கூறலாம்...

அதுக்காக உனது அப்பா என்ன  தமிழ்ப் பண்டிதரா என்றெல்லாம் கேட்கக் கூடாது  சரியா.....🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நன்னிச் சோழன் said:

நான் அப்படி எழுதியதில்லை. நான்,

  • Facebook - வேசுபுக்கு 
  • Twitter - துவிட்டர்
  •  ........

என்று வேற்றுமொழி பெயர்மொழிகளை தமிழ் இலக்கணத்திற்கு ஏற்பவே எழுதுபவன். அவற்றை மொழிபெயர்ப்பது கிடையாது. ஒருவரின்/ஒன்றின் பெயரை நாம் மொழிபெயர்த்தல் கூடாது என்பது எனது கொள்கை. 

நன்றி. நான் பொதுவாகவே சொன்னேன்.  நீங்கள் எழுதியதாக பொருள் கொள்ள வேண்டாம்🙏

5 minutes ago, Kapithan said:

பெயர்  மொழி மாற்றம் செய்யப்படுவதில்லை. 

ஆ.ஆனால் பூவைப் பூ என்றும் கூறலாம், புஸ்ட்பம் என்றும் கூறலாம்...

அதுக்காக உனது அப்பா என்ன  தமிழ்ப் பண்டிதரா என்றெல்லாம் கேட்கக் கூடாது  சரியா.....🤣

அப்ப நீங்க பண்டிதரா எண்டு கேட்ப்போம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நன்றி. நான் பொதுவாகவே சொன்னேன்.  நீங்கள் எழுதியதாக பொருள் கொள்ள வேண்டாம்🙏

அப்ப நீங்க பண்டிதரா எண்டு கேட்ப்போம்🤣.

பண்டி....த...ர் என்று திட்டாதவரைக்கும் ஓகே..🤣

Edited by Kapithan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.