Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரானிலிருந்து... செயற்கைக் கோளை ஏவியது, ரஷ்யா: உக்ரைன்- இஸ்ரேல் உள்ளிட்ட  நாடுகள் அச்சம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானிலிருந்து செயற்கைக்கோளை ஏவியது ரஷ்யா: உக்ரைன்- இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் அச்சம்!

ஈரானிலிருந்து... செயற்கைக் கோளை ஏவியது, ரஷ்யா: உக்ரைன்- இஸ்ரேல் உள்ளிட்ட  நாடுகள் அச்சம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி ஆகியோர் மேற்கு நாடுகளுக்கு எதிராக இணைந்து செயற்படுவதாக உறுதியளித்த மூன்று வாரங்களுக்குப் பிறகு, ரஷ்யா தெற்கு கஸகஸ்தானில் இருந்து ஈரானிய செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் செலுத்தியது.

11ஆம் நூற்றாண்டின் பாரசீக கவிஞரும் தத்துவஞானியுமான உமர் கயாமின் பெயரிடப்பட்ட ரிமோட் கயாம் உணர்திறன் செயற்கைக்கோள், கஸகஸ்தானில் உள்ள பைகோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து ரஷ்ய சோயுஸ் ரொக்கெட் மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏவப்பட்டு வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நுழைந்ததாக ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானின் விண்வெளி நிறுவனம் செயற்கைக்கோளில் இருந்து அனுப்பப்பட்ட முதல் டெலிமெட்ரி தரவுகளைப் பெற்றுள்ளது என்று அதிகாரப்பூர்வ ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் அதன் உளவுத்துறை திறன்களை அதிகரிக்க ரஷ்யாவால் செயற்கைக்கோள் பயன்படுத்தப்படலாம் என்ற கூற்றை ஈரான் நிராகரித்துள்ளது. ஈரானுக்கு முதல் நாளிலிருந்தே அதன் மீது முழுக் கட்டுப்பாடும் செயற்பாடும் இருக்கும் என்று கூறியுள்ளது.

வொஷிங்டன் போஸ்ட் கடந்த வாரம் ரஷ்யாவிற்கும் ஈரானுக்கும் இடையே வளர்ந்து வரும் விண்வெளி ஒத்துழைப்பு குறித்து அமெரிக்க அதிகாரிகள் கவலை கொண்டுள்ளனர், இந்த செயற்கைக்கோள் உக்ரைனில் ரஷ்யாவிற்கு உதவுவது மட்டுமல்லாமல், இஸ்ரேல் மற்றும் பரந்த மத்திய கிழக்கில் சாத்தியமான இராணுவ இலக்குகளை கண்காணிக்க ஈரானுக்கு முன்னோடியில்லாத திறன்களை வழங்கும் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், கதிர்வீச்சு மற்றும் விவசாய நோக்கங்களுக்காக சுற்றுச்சூழல் கண்காணிப்பு உள்ளிட்ட அறிவியல் ஆராய்ச்சிக்காக இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஈரான் கூறுகிறது.

கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி முதல் ஈரானுடனான உறவை ஆழப்படுத்த ரஷ்யா முயன்று வருகிறது. கடந்த ஜூலை மாதம், புடின் உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவப் பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து முன்னாள் சோவியத் யூனியனுக்கு வெளியே தனது முதல் சர்வதேச பயணமாக ஈரானுக்கு விஜயம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1294203

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஈரானிலிருந்து... செயற்கைக் கோளை ஏவியது, ரஷ்யா: உக்ரைன்- இஸ்ரேல் உள்ளிட்ட  நாடுகள் அச்சம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி ஆகியோர் மேற்கு நாடுகளுக்கு எதிராக இணைந்து செயற்படுவதாக உறுதியளித்த மூன்று வாரங்களுக்குப் பிறகு, ரஷ்யா தெற்கு கஸகஸ்தானில் இருந்து ஈரானிய செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் செலுத்தியது.

நல்லதொரு செயல்.
உக்ரேனுக்கும் அமெரிக்காவுக்கும் இப்பவே சாடையாய் வயித்த கலக்க தொடங்கும்..🤪
எப்பிடியும் இஸ்ரேலுக்கும் உக்ரேனுக்கும் குடுக்கிறதுக்கு பேதி குளிசையையும் சேர்த்து மேல ஏவியிருப்பார்கள் என நம்புவோமாக...😎

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியாவது புட்டினை யூதருக்கு எதிராக நிறுத்திவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் திட்டத்தின் அடுத்த கட்டம் இது.

ஈரான் போல இஸ்ரேலின் இருப்பை ஏற்று கொள்ளாத சக்திக்கு ஆதரவளிக்கும் யாரையும் இஸ்ரேல் அதிகாரத்தில் அதிக காலம் விட்டு வைக்காது.

@வாலிபலகாலமாக சொல்லிவருவது போல் புட்ஸ் Jaffa cake சாப்பிடும் காலம் நெருங்கி வருகிறது🤣

  • கருத்துக்கள உறவுகள்

"ஈரானிலிருந்து.....செயற்கைக்கோளை ஏவியது ரஸ்யா "  

கசக்ஸ்தான் எங்கே இருக்கிறது ? 

 

அடியும் பிழை, நுனியும் பிழை. இதில் நடுப்பகுதி  மட்டும் எப்படி  சரியானதாக இருக்கும்? 

😏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படித்தவர்கள் சொல்வது போல் மேற்குலகு மனிதாபிமானம் உள்ளவர்கள். எந்தவொரு உயிர்களுக்கும் பங்கம் விளைவிக்க நினைக்காதவர்கள்.
படித்தவர்களின் உளவியல் விதிப்படி ரஷ்யா மனிதாபிமானம் இல்லாத நாடு. தனிமனித உரிமை இல்லாத நாடு. உலகின் பெரிய நாடாக இருந்தும் அதிக இயற்கை வளங்களை கொண்டிருந்தும் நல்லெண்ணம் இல்லாத முட்டாள் நாடு.உக்கல் ஆயுதங்களை வைத்து கலவரங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நாடு.
சிறிது சிறிதாக ரஷ்யாவை சினமூட்டிக்கொண்டிருந்தால் யாராவது ஒரு ரஷ்ய மடையன் அணுகுண்டு சிவப்பு பொத்தானை அமுக்கி விடவும் பஞ்சிப்படமாட்டான்.

அது சரி அணுகுண்டை வலுவில்லாமல் செய்ய பெரிய அண்ணன் அமெரிக்காவிட்ட ஏதாவது ரெக்னிக் இருக்கும் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

பைபிளில் சொல்லியதை நம்புகின்ற கூட்டமும் இங்குள்ளது ஆச்சரியம் அளிக்கவில்லை.🙂

A Soyuz-2.1b rocket booster with the Iranian satellite "Khayyam" blasts off from the launchpad at the Baikonur Cosmodrome

Russian rocket successfully launches an Iranian satellite

World Aug 9, 2022 11:52 AM EDT

MOSCOW (AP) — A Russian rocket on Tuesday successfully launched an Iranian satellite into orbit.

The Soyuz rocket lifted off as scheduled at 8:52 a.m. Moscow time (0552 GMT) Tuesday from the Russia-leased Baikonur launch facility in Kazakhstan.

WATCH: International Space Station’s future in doubt after Russia announces withdrawal

About nine minutes after the launch, it placed the Iranian satellite called Khayyam into orbit. It’s named after Omar Khayyam, a Persian scientist who lived in the 11th and 12th centuries.

Iran has said the satellite fitted with high-resolution camera will be used for environmental monitoring and will remain fully under its control.

Tehran said no other country will have access to information it gathers and it would be used for civilian purposes only, but there have been allegations that Russia may use it for surveillance of Ukraine amid its military action there.

If it operates successfully, the satellite would give Iran the ability to monitor its archenemy Israel and other countries in the Middle East.

Yuri Borisov, head of Russia’s state space corporation Roscosmos, hailed the launch as an “important landmark” in cooperation between Moscow and Tehran.

Iranian state television aired footage of the launch live, noting that the country’s telecommunications minister attended the liftoff in Kazakhstan. Tehran said the satellite will help improve productivity in the agriculture sector, survey water resources, manage natural disasters, confront deforestation and monitor border areas.

Citing Iran’s civilian space agency, state television said the satellite would provide high-resolution surveillance images with a one-meter-per-pixel definition. Western civilian satellites offer around half-a-meter per pixel, while U.S. spy satellites are believed to have even-greater definition.

Iran has both a civilian and military space program, which the U.S. fears could be used to advance its ballistic missile program. However, Iran has seen a series of mishaps and failed satellite launches over recent years.

https://www.pbs.org/newshour/world/russian-rocket-successfully-launches-an-iranian-satellite

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்போது ஜெருசலம் அழிகின்றதோ அன்று  இந்த உலகும் அழியுமாம்  😁

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

எப்போது ஜெருசலம் அழிகின்றதோ அன்று  இந்த உலகும் அழியுமாம்  😁

அப்படியென்றால் ஏற்கனவே உலகம் ஒருமுறை அழிந்திருக்க வேண்டுமே ?

🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kapithan said:

அப்படியென்றால் ஏற்கனவே உலகம் ஒருமுறை அழிந்திருக்க வேண்டுமே ?

🤣

சும்மா ஒரு கதைக்கு சொன்னத பெரிசா எடுத்துக்கொண்டு.....😂

அது சரி கிரீம் தீவுலை வெடிச்சத்தம் கேக்குதாம் மெய்யே?

Ukraine-News: Krim: schwere Explosionen auf russischer Luftwaffenbasis |  STERN.de

புளுகர் பொன்னையா  செலென்ஸ்கி 10  ரஷ்யன் கப்பலை அழிச்சிட்டம் எண்டுறாரு... 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

படித்தவர்கள் சொல்வது போல் மேற்குலகு மனிதாபிமானம் உள்ளவர்கள். எந்தவொரு உயிர்களுக்கும் பங்கம் விளைவிக்க நினைக்காதவர்கள்.
படித்தவர்களின் உளவியல் விதிப்படி ரஷ்யா மனிதாபிமானம் இல்லாத நாடு. தனிமனித உரிமை இல்லாத நாடு. உலகின் பெரிய நாடாக இருந்தும் அதிக இயற்கை வளங்களை கொண்டிருந்தும் நல்லெண்ணம் இல்லாத முட்டாள் நாடு.உக்கல் ஆயுதங்களை வைத்து கலவரங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நாடு.
சிறிது சிறிதாக ரஷ்யாவை சினமூட்டிக்கொண்டிருந்தால் யாராவது ஒரு ரஷ்ய மடையன் அணுகுண்டு சிவப்பு பொத்தானை அமுக்கி விடவும் பஞ்சிப்படமாட்டான்.

படித்தவன்லாம் கலீஜாம் கிளப்பி விட்டாங்க,

அந்த கருத்த மாத்து அண்ணாத்த🤣

2 hours ago, குமாரசாமி said:

அது சரி அணுகுண்டை வலுவில்லாமல் செய்ய பெரிய அண்ணன் அமெரிக்காவிட்ட ஏதாவது ரெக்னிக் இருக்கும் தானே?

இருக்கும்.

இல்லாமலும் இருக்கும்.

ஆனால் இருந்தாலும் தம்பட்டம் அடிக்க மாட்டார்கள். 

“நானும் ரவுடிக்கும்”, ரியல் ரவுடிக்கும் உள்ள வித்தியாசம்தான்🤣.

2 hours ago, kalyani said:

பைபிளில் சொல்லியதை நம்புகின்ற கூட்டமும் இங்குள்ளது ஆச்சரியம் அளிக்கவில்லை.🙂

எல்லாரையும் எம்மை போல நினைக்ககூடாது.

மேலே இஸ்ரேலை பற்றி சொன்னது, பைபிளின் அடிப்படையில் அல்ல, சையனிசத்தை புரிந்து கொண்டதன் அடிப்படையில்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
57 minutes ago, goshan_che said:

இருக்கும்.

இல்லாமலும் இருக்கும்.

ஆனால் இருந்தாலும் தம்பட்டம் அடிக்க மாட்டார்கள். 

“நானும் ரவுடிக்கும்”, ரியல் ரவுடிக்கும் உள்ள வித்தியாசம்தான்🤣.

அமெரிக்கா வியட்னாம் ஆப்கானிஸ்தானில் பாடம் படித்து முன்னேறியது போல் ரஷ்யாவும் படித்து முன்னேறியிருக்கும்.

அமெரிக்காவின் பயம் தற்போது டொனால்ட் ரம்பிற்கு கொடுக்கும் நெருக்குவாரத்தில் தெரிகின்றது.😂

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.