Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டஸ்மானிய புலி இனத்தை மீட்க விஞ்ஞானிகள் திட்டம்: 90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த விலங்கை ஜீன் எடிட்டிங், ஸ்டெம் செல் மீட்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டஸ்மானிய புலி இனத்தை மீட்க விஞ்ஞானிகள் திட்டம்: 90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த விலங்கை ஜீன் எடிட்டிங், ஸ்டெம் செல் மீட்குமா?

5 மணி நேரங்களுக்கு முன்னர்
 
டஸ்மானியப் புலி.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் உயிரியல் பூங்காவில் இருந்த டஸ்மானியப் புலி. இந்தப் படம் எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் இல்லை.

90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன டஸ்மானியன் புலி இனத்தை, ஜீன் எடிட்டிங் மற்றும் ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மூலம் மீட்க அமெரிக்க, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டஸ்மானியன் புலி என்று அழைக்கப்படும் இந்த உயிரினத்தின் முறைப்படியான பெயர் 'தைலசைன்' என்பதாகும். இந்த இனத்தில் மிச்சம் இருந்த கடைசி விலங்கு 1930களில் இறந்துபோனது.

ஜீன் எடிட்டிங் மற்றும் ஸ்டெம் செல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இன்னும் 10 ஆண்டுகளில் முதல் தைலசைன் விலங்கினை உருவாக்கி காட்டில் விட முடியும் என்று இந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ள வல்லுநர்கள் கூறுகிறார்கள். அழிந்த உயிரினங்களை மீட்கும் இந்த தொழில்நுட்பம் ஏற்கெனவே உள்ளதுதான் என்கிறார்கள் இவர்கள்.

ஆனால், அழிந்துபோன உயிரினத்தை மீட்பது சாத்தியமா என்பது குறித்து மற்ற விஞ்ஞானிகள் சந்தேகம் கொள்கிறார்கள். இதெல்லாம் அறிவியல் புதினம் போன்ற கற்பனையே என்பது அவர்களது கருத்து.

உடலின் மேற்பகுதியில் புலிக்கு உள்ளதைப் போல கோடுகள் இருப்பதால் இந்த விலங்குக்கு டஸ்மானியன் புலி என்ற புனைபெயர் வந்தது. ஆனால், உண்மையில் இது மர்சூபியல் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பைம்மா இனத்தைச் சேர்ந்த விலங்கு ஆகும். ஆஸ்திரிலியாவில் பெரிதும் காணப்படும் பைம்மா பாலூட்டி இன விலங்குகளுக்கு வயிற்றின் வெளிப்புறம் பை போன்ற ஒரு அமைப்பு இருக்கும். கங்காருவுக்கு இருக்குமே அதைப் போன்ற இந்தப் பையில் இந்த விலங்குகள் தங்கள் குட்டிகளை வைத்து வளர்க்கும்.

எப்படி மீண்டும் உருவாக்குவார்கள்?

ஜீன் எடிட்டிங். வரைகலை.

பட மூலாதாரம்,MARK GARLICK/SCIENCE PHOTO LIBRARY

படக்குறிப்பு,

மரபணுவில் பட்டி டிங்கரிங் - வரைகலை

டஸ்மானிய புலி இனத்தைப் போலவே இருக்கும் வாழும் பைம்மா இன விலங்கு ஒன்றின் டி.என்.ஏ.வை எடுத்து அதை ஜீன் எடிட்டிங் முறையில் மாற்றியமைத்து அழிந்துபோன டஸ்மானிய புலிகளை மீண்டும் உருவாக்குவதற்கு அமெரிக்க, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இப்படி உருவாக்கப்படும் விலங்கு மிகச்சரியாக டஸ்மானிய புலியாகவோ அல்லது அதைப் போல மிக நெருக்கமாகக் காணப்படுவதாகவோ இருக்கும் என்கிறார்கள் அவர்கள்.

பல விஞ்ஞானத் தடைகளை உடைத்துதான் இந்த விலங்கினை விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டியிருக்கும். அப்படி அதை செய்து முடிக்கும்போது அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.

"கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வேட்டையாடி அழிக்கப்பட்ட இந்த தைலசைன் இனக் குட்டி ஒன்றை 10 ஆண்டுகளில் உயிரோடு உருவாக்கிவிட முடியும் என்று நம்புகிறேன்," என்கிறார் இந்த ஆய்வுத் திட்டத்துக்குத் தலைமை ஏற்கும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஆன்ட்ரூ பாஸ்க்.

ஆஸ்திரேலியாவுக்கு பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் வந்து சேர்ந்ததில் இருந்து டஸ்மானியப் புலிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. டிங்கோஸ் எனப்படும் ஒரு காட்டு நாய் இனம் உருவானபோது மீண்டும் இந்த எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

நடந்து முடிந்தால் பெரிய அதிசயம்

கடைசியாக டஸ்மானிய தீவில் மட்டுமே இந்த விலங்குகள் சுதந்திரமாகத் திரிந்தன. ஆனால், அங்கேயும் பிறகு வேட்டையாடி அழிக்கப்பட்டன. ஹோபர்ட் உயிரியல் பூங்காவில் இருந்த உலகின் கடைசி டஸ்மானியப் புலி 1936ல் இறந்தது.

இந்த டஸ்மானியப் புலிகளை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றால், அழிந்துபோன பிறகு மீட்டெடுக்கப்படும் முதல் உயிரினமாக டஸ்மானியப் புலி இனம் இரு்கும். ஆனால், இந்த திட்டத்தில் இடம்பெறாத பல விஞ்ஞானிகள் இதற்கான சாத்தியம் குறித்து சந்தேகம் கொண்டுள்ளார்கள்.

உயிரியல் ஆய்வு

பட மூலாதாரம்,ANDREW BROOKES/GETTY

"அழிந்த உயிரினத்தை மீட்டெடுப்பது என்பது ஒரு கற்பனைக் கதை," என்று சிட்னி மார்னிங் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் பழங்கால டி.என்.ஏ. தொடர்பான ஆஸ்திரேலிய மையத்தை சேர்ந்த இணைப் பேராசிரியர் ஜெரமி ஆஸ்டின்.

"இந்த திட்டம் விஞ்ஞானிகளுக்கு ஊடக வெளிச்சம் தருவதே தவிர, உண்மையில் காத்திரமான அறிவியல் பணி தொடர்பானது அல்ல" என்றும் அவர் கடுமையான மொழியில் விமர்சித்துள்ளார்.

டஸ்மானியப் புலிகளை மீட்டெடுக்கும் யோசனை 20 ஆண்டுகளாக உள்ளதுதான். 1999ல் ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் இந்த விலங்கை குளோன் செய்யும் திட்டத்தை தொடங்கியது. இந்த விலங்கின் மாதிரிகளில் இருந்து டி.என்.ஏ.வை பிரித்தெடுக்கவும், மறு கட்டுமானம் செய்யவும் பல முயற்சிகள் விட்டுவிட்டு நடந்தன.

டஸ்மானிய புலிகளை மீட்கும் தற்போதைய திட்டத்தை மெல்போர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் டெக்சாஸ் நகரில் இருந்து இயங்கும் கொலோசல் நிறுவனமும் இணைந்து செயல்படுத்த உள்ளன.

பல ஊழிகளுக்கு முன்பு அழிந்துபோன மாமத யானைகளை உயிரோடு மீட்பதற்கு ஒரு திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தது கொலாசஸ் நிறுவனம். ஆனால், இந்த முயற்சியில் இன்னும் வெற்றி கிடைக்கவில்லை.

https://www.bbc.com/tamil/science-62572295

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஏராளன் said:

90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன டஸ்மானியன் புலி இனத்தை, ஜீன் எடிட்டிங் மற்றும் ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மூலம் மீட்க அமெரிக்க, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

டஸ்மானிய புலி இனம் அழிந்த இனமல்ல. மாறாக கேடு கெட்ட மனிதனால்(ஆங்கிலேயனால்) அழிக்கப்பட்ட இனம்.

உலகில் மற்றைய உயிரினங்கள் அழிந்து வரும் நிலையில் மனித இனம் மட்டும்  இப்படி பல்கி பெருகி.......🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

டஸ்மானிய புலி இனம் அழிந்த இனமல்ல. மாறாக கேடு கெட்ட மனிதனால்(ஆங்கிலேயனால்) அழிக்கப்பட்ட இனம்.

உலகில் மற்றைய உயிரினங்கள் அழிந்து வரும் நிலையில் மனித இனம் மட்டும்  இப்படி பல்கி பெருகி.......🤣

ஆங்கிலேய துரைமாருக்கு… புலி வேட்டை, யானை வேட்டை என்று….
துப்பாக்கியால்… சுட்டு விளையாடுவது ஒரு பொழுது போக்கு.
அவர்களே பல உயிரினங்களை அழித்து விட்டு,
அழிந்து போச்சுது என்று உருட்டிக் கொண்டு திரிகிறார்கள்.. பிளடி இங்கிலிஷ்காரன். 😂

32 minutes ago, குமாரசாமி said:

டஸ்மானிய புலி இனம் அழிந்த இனமல்ல. மாறாக கேடு கெட்ட மனிதனால்(ஆங்கிலேயனால்) அழிக்கப்பட்ட இனம்.

உலகில் மற்றைய உயிரினங்கள் அழிந்து வரும் நிலையில் மனித இனம் மட்டும்  இப்படி பல்கி பெருகி.......🤣

21 minutes ago, தமிழ் சிறி said:

ஆங்கிலேய துரைமாருக்கு… புலி வேட்டை, யானை வேட்டை என்று….
துப்பாக்கியால்… சுட்டு விளையாடுவது ஒரு பொழுது போக்கு.
அவர்களே பல உயிரினங்களை அழித்து விட்டு,
அழிந்து போச்சுது என்று உருட்டிக் கொண்டு திரிகிறார்கள்.. பிளடி இங்கிலிஷ்காரன். 😂

கற்பனையில் பொய்யான தகவல்களை எழுத வேண்டாம்.

நாய்கள் அவுஸ்திரேலியாவுக்குள் வர ஆரம்பித்தபோதே இந்த இனம் அழியத் தொடங்கியது. அவுஸ்திரேலிய ஆதிவாசிகளின் வேட்டையும் காரணம். ஐரோப்பியர்கள் வருமுன்பே இந்த இனம் ஏறத்தாள முற்றாக அழிந்திருந்தது. 1792 இல் தான் ஐரோப்பியர்கள் இதனை அபூர்வமாகப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

https://en.wikipedia.org/wiki/Thylacine

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, இணையவன் said:

நாங்கள் கற்பனையில் எதுவும் எழுதவில்லை. உங்களைப்போல் வாசித்த அளவை வைத்த வைத்துத்தான் இங்கே கருத்தெழுதுகின்றோம்.கற்பனைக்கதைகள் எழுத வேண்டிய அவசியம் எதுவுமில்லை. அதே போல் தெரியாத விடயங்களில் மூக்கை நுழைத்ததுமில்லை..நாங்களோ நீங்கள் சார்ந்தவர்களோ பிறக்கும் போதே எல்லாம் தெரிந்து வந்தவர்கள் அல்ல. எல்லாம் படித்த படிப்பை வைத்துத்தான் இங்கே கருத்தெழுதுகின்றோம்.. எடுத்த வாக்கில் கற்பனை என மற்றவர் கருத்தை தூக்கியெறிவதில்லை.
இணைய உலகிலிருந்து நீங்கள் ஆதாரங்களை நிறுவும் முனையும் போது நாங்களும் இணைய ஆதாரங்களை இணைக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.

டஸ்மானி புலிகள் ஆடுகளை வேட்டையாடிய படியால் அவைகள் அழிக்கப்பட்டதாகவும் தகவல் உள்ளது.

https://www.google.com/search?q=Beutelwolf&rlz=1C1NMEO_deDE982DE982&sourceid=chrome&ie=UTF-8

23 minutes ago, குமாரசாமி said:

வெள்ளையர்கள் குடியேற ஆரம்பித்தது 1770 ற்குப் பின். 1800 அளவில்தான் சில ஆயிரக்கணக்கானவர்கள் குடியேறினர். அத்போது இந்த விலங்கு மிக அபூர்வமாகி விட்டது. சுட்டு வேட்டையாடியதால் அது அழிந்தது என்று எங்காவது உள்ளதா ? 3000 வருடங்களுக்கு முன் இது அவுஸ்திரேலியா முழுவதும் பரவியிருந்தது. நான் மேலே குறிப்பிட்டதுபோல் மனிதர்கள் வேட்டையாடியதும் ஒரு காரணம். அது வெள்ளைக்காரன் அல்ல. சில ஆயிரக்கணக்கானோர் வேடையாடி அழிக்க அவுஸ்திரேலிய ஒன்றும் சிறிய தீவு அல்ல.

நீங்கள் இணைத்த வீடியோவில் வழக்கம்போலவே யூடியூப் ஆசாமிகள் சில படங்களை வைத்து வெள்ளைக்காரந்தான் இந்த இனத்தை அழித்தது என்று கதை அளந்துள்ளனர். உங்கள் ஆதாரங்களை நன்றாக வாசித்துப் பாருங்கள். ஐரோப்பியர்கள் குடியேறியது 18 ஆம் நூற்றாண்டு இறுதியில்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விக்கிபீடியாவில் யாரும் எழுதலாம். நானும் எழுதலாம். அந்த ஆசாமிகளும் எழுதலாம்.

https://en.wikipedia.org/wiki/History_of_Australia_(1851–1900)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

நீங்கள் இணைத்த வீடியோவில் வழக்கம்போலவே யூடியூப் ஆசாமிகள் சில படங்களை வைத்து வெள்ளைக்காரந்தான் இந்த இனத்தை அழித்தது என்று கதை அளந்துள்ளனர்.

In the 1950s, the government turned to biocontrol. They released rabbits infected with myxoma—a rabbit-specific virus—into southeastern Australia. The myxoma virus was the first ever virus to be purposefully introduced to the wild to eradicate an animal. Australian scientist Peter Kerr said of this release, “Thus, inadvertently, began one of the great experiments in natural selection, conducted on a continental scale.” The myxoma virus leads to myxomatosis, a disease that only kills rabbits. Although the myxoma virus did lead to the deaths of many of the rabbits in Australia, the rabbits eventually developed an immunity to the virus, rendering it ineffective. If the scientists wanted to eradicate these invasive rabbits, they were going to have to try something else.

https://education.nationalgeographic.org/resource/how-european-rabbits-took-over-australia

வெள்ளைக்காரர் அவுசுக்குள் குடியேறிய நேரம் 5௦௦௦ புலிகள் அளவில் உள்ளதாக சொல்கிறார்கள் வெள்ளைகளுடன் குடியேறிய கால் நடைகளை இந்த புலிகள் அழித்து விடும் எண்ணத்தில் இவற்றை அழித்தார்கள் என்று சொல்கிறார்கள் .

In Australia, the settlers brought dogs with them. It’s likely the dogs also contributed to the Tasmanian tigers’ decline through direct competition and by introducing new diseases. There were reports that a distemper-like disease was killing many Tasmanian tigers right before the wild population winked out of existence.

https://untamedscience.com/biodiversity/tasmanian-tiger/

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

நீங்கள் இணைத்த வீடியோவில் வழக்கம்போலவே யூடியூப் ஆசாமிகள் சில படங்களை வைத்து வெள்ளைக்காரந்தான் இந்த இனத்தை அழித்தது என்று கதை அளந்துள்ளனர்.

அப்படி பொய்யான தகவல்களை யுடியுப்பர் சொல்வார்கள் ஆனால் நேரே பெட்டிசம் போடலாம் முன்பு போல் இல்லை இப்பவெல்லாம் உடனே தூக்கி விடுவார்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
42 minutes ago, பெருமாள் said:

அப்படி பொய்யான தகவல்களை யுடியுப்பர் சொல்வார்கள் ஆனால் நேரே பெட்டிசம் போடலாம் முன்பு போல் இல்லை இப்பவெல்லாம் உடனே தூக்கி விடுவார்கள் .

இந்த திரியின் தலையங்கம் 90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த விலங்கினத்தை என தொடங்குகின்றது.

Quote

டஸ்மானிய புலி இனத்தை மீட்க விஞ்ஞானிகள் திட்டம்: 90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த விலங்கை ஜீன் எடிட்டிங், ஸ்டெம் செல் மீட்குமா?

இணையவன் ஐரோப்பியர்கள் வரும் முன்னே இந்த இனம் ஏறத்தாள  முற்றாக அழிந்து விட்டது என தகவல் தருகின்றார்.

6 hours ago, இணையவன் said:

ஐரோப்பியர்கள் வருமுன்பே இந்த இனம் ஏறத்தாள முற்றாக அழிந்திருந்தது.

வெள்ளையர்கள் அங்கு குடியேறவில்லை. பெரிய பிரித்தானியாவின் பெரும் குற்றவாளி கைதிகளை நாடு கடத்த பயன்படுதப்பட்ட தீவுதான் அவுஸ்ரேலியா எனும் முன்னாள் சிறைச்சாலை. இது இணையத்தகவல் அல்ல.அரசியல் பாடத்தில் உள்ளது..

4 hours ago, இணையவன் said:

வெள்ளையர்கள் குடியேற ஆரம்பித்தது 1770 ற்குப் பின். 1800 அளவில்தான் சில ஆயிரக்கணக்கானவர்கள் குடியேறினர். அத்போது இந்த விலங்கு மிக அபூர்வமாகி விட்டது. சுட்டு வேட்டையாடியதால் அது அழிந்தது என்று எங்காவது உள்ளதா ?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

இந்த திரியின் தலையங்கம் 90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த விலங்கினத்தை என தொடங்குகின்றது.

இணையவன் ஐரோப்பியர்கள் வரும் முன்னே இந்த இனம் ஏறத்தாள  முற்றாக அழிந்து விட்டது என தகவல் தருகின்றார்.

வெள்ளையர்கள் அங்கு குடியேறவில்லை. பெரிய பிரித்தானியாவின் பெரும் குற்றவாளி கைதிகளை நாடு கடத்த பயன்படுதப்பட்ட தீவுதான் அவுஸ்ரேலியா எனும் முன்னாள் சிறைச்சாலை. இது இணையத்தகவல் அல்ல.அரசியல் பாடத்தில் உள்ளது..

யுடுப்பர் பற்றிய பார்வை முன்பு போல் இல்லை அதை அவர் மாற்றி கொள்ளனும் பொய்யான தகவல் ஆகா இருந்தால் உடனே ஆப்பு கொடுக்கலாம் அதனால் தமிழ் யுடியுப்பர் இனி வருபவர்கள் இருப்பவர்கள் உண்மையே சொல்வார்கள் .

இங்கு சிலர் தங்களின் கருத்துக்கு விக்கியையும் யுடிப்பையும் ஆதாரத்துக்கு கொண்டு வரும்போது அதை பிழை என்று வாதிடுபவர்கள் அதே அவர்கள் இணைக்கும்போது சொல்லும்போது சரி என்பது என்ன நியாயம் ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, பெருமாள் said:

யுடுப்பர் பற்றிய பார்வை முன்பு போல் இல்லை அதை அவர் மாற்றி கொள்ளனும் பொய்யான தகவல் ஆகா இருந்தால் உடனே ஆப்பு கொடுக்கலாம் அதனால் தமிழ் யுடியுப்பர் இனி வருபவர்கள் இருப்பவர்கள் உண்மையே சொல்வார்கள் .

இங்கு சிலர் தங்களின் கருத்துக்கு விக்கியையும் யுடிப்பையும் ஆதாரத்துக்கு கொண்டு வரும்போது அதை பிழை என்று வாதிடுபவர்கள் அதே அவர்கள் சொல்லும்போது சரி என்பது என்ன நியாயம் ?

நீங்கள் கூறுவது போல் முன்னரைப்போல் யூ ரியூப்பில் சேட்டைகளோ பொய்யான தகவல்களையோ பகிரமுடியாது.. எனக்கு தெரிய பல யூ ரியூப் தகவல் தளங்களை தடை செய்து விட்டார்கள்.பல மில்லியன் சந்தாதாரர்களை கொண்ட தமிழ் தகவல் யூ ரியூப் ஊடகங்கள் உள்ளன. அவர்கள் அவ்வளவு சுலபமாக அவர்களை ஏமாற்றி தகவல் தர முடியாது என நினைக்கின்றேன். இருப்பினும் சினிமா,அரசியல்,செய்தி,சமையல்,ஊர் சுற்றுதல் போன்ற யூ ரியூப் தளங்களை ஆசாமி தளங்கள் என சொல்லலாம்.

விக்கிபிடியாவில் நானும் தகவல்களை  எழுதலாம்.
இன்றைய உலகில் தொலைக்காட்சி ஊடகங்களைப்போல் யூ ரியூப் தளங்களும் முன்னேறி விட்டன.தொலைக்காட்சி ஊடகங்களும் இப்போது யுரியூப்பில் நேரடி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுவிட்டது.எனவே யூ ரியூப்பில் வரும் அனைத்தையும் ஆசாமிகள் தளம் என ஒதுக்கிவிட முடியாது.

.

இணையம் தினம்தோறும் மாறிக்கொண்டு தன்னை புதுபுத்திகொண்டு உள்ளது  எங்களின் கற்பனைக்கு மேலாக .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.