Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யாவில்... 10 குழந்தைகள், பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு... ‘மதர் ஹீரோயின்’ பட்டத்துடன், பெரும் தொகை பரிசு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

நான் இப்போது கதைப்பது தமிழர்களை குறித்து......பிற நாட்டவர்களை பற்றியல்ல...

நான் கதைப்பது ரஸ்யா ஏன் வெளிநாட்டவர் விரும்பி குடியேறும் ஒரு நாடாக இல்லை என்பதை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இதை நான் ஏற்கவில்லை. குடியேறிகள் தேவை எண்டால் “வாங்கோ” எண்டு கூப்பிட்டால் ஒட்டு மொத்த இலங்கையும் வாசலில் வந்து நிக்கும்🤣.

அதுவும் தேவையான தகுதியுடன் அல்லது தகுதி இல்லாமல் வடிவாக screening செய்து எடுக்கலாம். 

வருவோர்கு அகதிகளுக்கு கொடுக்க கூடிய கொடுப்பனவும் கொடுக்கத்தேவையில்லை.

அவர்களை பல மில்லியன் செலவழித்து, சட்ட போராட்டம் நடத்தி ருவாண்டா அனுப்ப முயற்சிக்கவும் தேவையில்லை.

மேற்கு நாடுகளின் தொழிலும், போரும் இனி தானியங்கி மயப்பட்டே இருக்கும்.

இப்போதே வேல்சில் வேலை இல்லாமல் அடிப்படை சம்பளம் (universal income) கொடுக்கும் மாதிரி திட்டம் (pilot) அமலாகிவிட்டது.

இப்போ இருக்கும் சனத்தொகையை அப்படியே வைத்துகொண்டால் மேற்குக்கு போதும்.

இது தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை தேடி நோக்குக. அண்மைய மத்திய கிழக்கு யுத்தங்கள் தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகளை படித்துள்ளேன். அவற்றில் பொதுவாகக் குறிப்பிடப்படும் ஒரு முக்கிய விடயம், மேற்குலகிற்கான இளம் வயது ஆளணிக்கான தேவை. (உடல் உழைப்பாளருக்கான தேவை) 

ஓர் யுத்தத்தை ஆரம்பிப்பது தனியே ஒரு காரணத்திற்காக மட்டும் அல்ல. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

இதனால்தான் சவுதிக்கு போனாலும் இலங்கையர் ரஸ்யா போவதில்லை.

அந்தளவுக்கு புலம்பெயர் இலங்கை தமிழர்களால் தீண்டதகாத நாடு என்று ஒதுக்கி வைக்கபட்டது ரஷ்யா. மேற்குலகில் வாழ்ந்து கொண்டு புரினுக்கும் ரஷ்யாவுக்கும் தீவிர ஆதரவு மட்டும் வழங்கபடும்😂

7 hours ago, goshan_che said:

ஒப்பீட்டளவில் பரவாயில்லை.

பரவாயில்லையா 😭
அமெரிக்காவிலையும் ஐரோப்பா மேற்குலக நாடுகளில் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் ராஜ வாழ்க்கை வாழ்கிறார்கள்  ரஷ்யாவை வாழ தகுதியற்ற நாடு என்று ஒதுக்கிவைத்து விட்டார்களே

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் இலங்கையை விட்டு வெளியேறியவர்கள் அநேகமாக பொருளாதார அகதிகள் தான். 

அதனால் ரசியா அவர்கள் தெரிவாக வரமுடியாது

ஆனால் போர் உச்சமடைந்த காலப் பகுதியில் வெளியேறியவர்கள் ரசியாவிலும் தஞ்சம் அடைந்தனர். பின்னர் வெளியேறி விட்டனர் 

அப்புறம் தலைப்புக்கு எழுதினால் புட்டினுக்கு ஆயுதத்தை எங்கும் பாவிக்க தெரியவில்லை?😂

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா - அவர்கள் தெரிவாக வரமுடியாது
ரசியாவிலும் தஞ்சம் அடைந்தனர். பின்னர் வெளியேறி விட்டனர்  
ஆயுதத்தை எங்கும் பாவிக்க தெரியவில்லை]

விடயங்களை விளங்கபடுத்திவிட்டீர்கள் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

ஆரம்பத்தில் இலங்கையை விட்டு வெளியேறியவர்கள் அநேகமாக பொருளாதார அகதிகள் தான். 

அதனால் ரசியா அவர்கள் தெரிவாக வரமுடியாது

ஆனால் போர் உச்சமடைந்த காலப் பகுதியில் வெளியேறியவர்கள் ரசியாவிலும் தஞ்சம் அடைந்தனர். பின்னர் வெளியேறி விட்டனர் 

அப்புறம் தலைப்புக்கு எழுதினால் புட்டினுக்கு ஆயுதத்தை எங்கும் பாவிக்க தெரியவில்லை?😂

curve.JPG

இலங்கை தமிழர்களுக்கு ஆரம்ப காலகட்டத்தில் சில நாடுகள் 83 கலவரத்தினை அடுத்து திறந்த குடியுரிமை அந்தஸ்து வழங்கினார்களாம் (கன்டா போன்ற நாடுகள்) அதனால் முன்னால் போனவர்களை பின்பற்றி அடுத்த தலைமுறையும் அந்தந்த நாடுகளுக்கு மட்டுமே சென்றனர்.

இதனை கூட்ட மனப்பான்மை என்பர்.

ஒரு ஆட்டு மந்தையில் முன்னால் போகும் ஒரு ஆட்டின் முன்னே தடையினை ஏற்படுத்தினால் அது பாய்ந்து கடந்து செல்லும், அந்த தடையினை எடுத்து விட்டாலும் பின்னால் வரும் ஆடுகள் கூட பாய்ந்து கடந்து செல்லும்.

எமது முடிவுகளில் 80% மானவையினை மற்றவர்களே தீர்மானிக்கிறார்கள் எனக்கூறுகிறார்கள், ஆனால் எமது சமூகத்தில் இது 95% இருக்கும் என நம்ம்புகிறேன்.

நாம் எல்லோரும் ஆரம்பத்தில் ஒருவர் செய்வதனையோ அல்லது சொல்வதனையோ ஒரு காலகட்டத்தின் பின் தொடருகின்ற நிலையே காணப்படுகிறது.

மேலே உள்ள வரைபடத்தில் உள்ளது போல ஒரு கட்டத்தின் ஒரு கருத்தோ, பொருளோ, அல்லது ஒரு முதலீடோ எங்கே தாம் அந்த கூட்டத்திலிருந்து விடுபட்டுவிடுவோமோ என்னும் பதற்றத்தில் தொடருவார்கள் இவர்கள் மேலுள்ள வரைபடத்தில் பிந்திய பெரும்பான்மை என வரையறுக்கப்படுவர்.

Cartoon of the Day: Mousetrap - 12.31.2019 FOMO trap cartoon

இதனை FOMO  என அழைப்பார்கள்.

ஊரில் சொல்வார்கள் முன்னால போற மாடு ஒழுங்காப்போனால் பின்னால போற மாடுகளும் ஒழுங்காகப்போகும் என்று, இந்த மாதிரி  நாட்டுத்தெரிவுக்கு பெரும்பாலான காரணம் கூட்ட மனப்பாண்மையே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

83 இல் எத்தனை நாடுகள், எவ்வளவு காலம் இப்படி திறந்த வீசா கொடுத்தார்கள்?

அதில் எத்தனை பேர் நாட்டை விட்டு வெளியேறினார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, goshan_che said:

இஞ்ச அடியள் விழுந்தாலும் ஹம் அம்மாலாட்சிக்கு கோபுரம் கட்டி, தேர் இழுக்கும் அளவுக்கு சுதப்திரமும் இருக்கெல்லே.  

போய் குந்துற நாடுகளிலை எல்லாம் கோயில் கட்டி குப்புடுறம்.கும்மாளம் அடிக்கிறம்.நினைச்சதை செய்யிறம்.வீடு வாங்கிறம்.படிக்கிறம் இதெல்லோ ஜனநாயக நாடுகள் எண்டு  ஏகோபித்த குரலாய் மார்தட்டுறம்.😂
ஆனால் சிங்களவன் தான் இருக்கிற நாட்டிலை புத்த கோயில் கட்டினாலோ  புது காணிகளிலை வீடுகள் கட்டினாலோ குடியேறினாலோ அக்கிரமம் ஆக்கிரமிப்பு எண்டு கத்துறம். அதுவும் ஜனநாயக நாடுதானே....😁

சொந்த ஊருக்குள் பக்கத்து ஊர்காரனே காணி வாங்க விடாதவன் வெளிநாடுகளுக்கு வந்து ஜனநாயகம் பற்றி வகுப்பு எடுக்கினம்.🙃

தமிழ் பகுதியிலை இருக்கிற  சிங்கள பேக்கரி முதலாளிகளை அடிச்சு கலைச்ச வீர தமிழன் புலம்பெயர்ந்து ஜனநாயகம் ,கோயில் கட்டுறம் என புலம்புகின்றான்🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

இது தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை தேடி நோக்குக. அண்மைய மத்திய கிழக்கு யுத்தங்கள் தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகளை படித்துள்ளேன். அவற்றில் பொதுவாகக் குறிப்பிடப்படும் ஒரு முக்கிய விடயம், மேற்குலகிற்கான இளம் வயது ஆளணிக்கான தேவை. (உடல் உழைப்பாளருக்கான தேவை) 

ஓர் யுத்தத்தை ஆரம்பிப்பது தனியே ஒரு காரணத்திற்காக மட்டும் அல்ல. 

ஜேர்மனிக்கு/ஐரோப்பாவுக்கு சிரியர்கள் வந்த போது கூட இப்படி ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது.

ஆனால் நான் மேலே சொன்ன தர்க்க ரீதியான காரணங்களை வைத்து பார்த்தால் இது பிழை என்பது புரியும்.

இப்படி வருபவர்களால் ஈயூ நாடுகளிடையே நீ பார், நான் பார் என ஒரே புடுங்குபாடு. துருக்கி வருபவரை தடுக்காவிடில் பெரும் பிரச்சனை வரும். இதை வைத்து துருக்கி பெரும் அளவில் ஈயூவிடம் சலுகைகளை பெறுகிறது.

யூகேயில் கடலால் வருபவரை தடுப்பதில்லை என்பது அரசு மீதான அதிருப்திக்கு காரணம்.

இப்படி ஐரோப்பாவில் வாழ்வோரை கேட்டீர்களானால் சொல்வார்கள் இந்த குடியேறிகளால் இந்த நாடுகளில் எவ்வளவு அரசியல் குழப்பம் வருகிறது. தமது நாட்டுக்கு இவர்கள் அதிக அளவில் வரகூடாது என ஒவ்வொரு அரசும் எப்படி சிரத்தை எடுக்கிறது என.

இப்படியான குழப்பம் எதுவும் இல்லாமல் வடிவாக பொலிஸ் கிளியரன்ஸ் செக் பண்ணி, தமக்கு தேவையான ஆட்களை எடுக்கும் வசதி இந்த நாடுகளில் இருக்கும் போது இதற்காக யுத்தம் செய்கிறார்கள் என்பது லாஜிக்கலாக இல்லை.

அண்மையில் அமெரிக்காவில் கூட தென்னமெரிக்காவில் இருந்து பலர் உள்ளிட முயன்றார்கள். தென்னமரிக்காவில் யுத்தம் இல்லை என்பது குறிப்பிடதக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

போய் குந்துற நாடுகளிலை எல்லாம் கோயில் கட்டி குப்புடுறம்.கும்மாளம் அடிக்கிறம்.நினைச்சதை செய்யிறம்.வீடு வாங்கிறம்.படிக்கிறம் இதெல்லோ ஜனநாயக நாடுகள் எண்டு  ஏகோபித்த குரலாய் மார்தட்டுறம்.😂
ஆனால் சிங்களவன் தான் இருக்கிற நாட்டிலை புத்த கோயில் கட்டினாலோ  புது காணிகளிலை வீடுகள் கட்டினாலோ குடியேறினாலோ அக்கிரமம் ஆக்கிரமிப்பு எண்டு கத்துறம். அதுவும் ஜனநாயக நாடுதானே....😁

சொந்த ஊருக்குள் பக்கத்து ஊர்காரனே காணி வாங்க விடாதவன் வெளிநாடுகளுக்கு வந்து ஜனநாயகம் பற்றி வகுப்பு எடுக்கினம்.🙃

தமிழ் பகுதியிலை இருக்கிற  சிங்கள பேக்கரி முதலாளிகளை அடிச்சு கலைச்ச வீர தமிழன் புலம்பெயர்ந்து ஜனநாயகம் ,கோயில் கட்டுறம் என புலம்புகின்றான்🤣

👆இது டக்ளஸ், சங்கரி, ஏன் ஞானசார சொல்லும் அதே விடயங்கள். இது உங்கள் நிலைப்பாடில்ல என்பதும் தெரியும். இருந்தாலும் பதில் கீழே.

நாம் எமது பாரம்பரிய வாழிடத்தில் அரச ஆதரவோடு கிராமம், கிராமமாக வந்து, எம்மை விரட்டி விட்டு குடியேறுவதையும், அடாத்தாக எமது வழிபாட்டிடங்களை கைப்பற்றி விகாரை கட்டுவதையுமே எதிர்கிறோம்.

தனி ஆட்களாக வாய்ப்புத்தேடி எமது பகுதிக்கு வந்த சிங்களவர்களை நாம் என்றுமே துன்புறுத்தவில்லை. அதே போல் அப்படி வந்தவர்களின் கல்வி, வழிபாட்டு தேவைக்கு ஏற்ற அளவில் எம் பகுதியில் விகாரைகளும் சிங்கள பள்ளி கூடங்களும் கூட அனுமதிக்கப்பட்டே இருந்தன.

நாம் கொழும்பில், மேற்கு நாடுகளில் தனியர்களாக, அரச ஆதரவின்றி குடியேறியமைக்கும் - இங்கே எமது சமூக தேவைக்கு ஏற்ப, எமது செலவில் கோவில் கட்டியமையை இலங்கையில் நடக்கும் திட்டமிட்ட இன ஒழிப்போடு ஒரு போதும் ஒப்பிட முடியாது.

யுத்தம் என்றாகியபிந்தான் பேக்கரிகார்ர வெளியேற வேண்டியதாகிற்று.

தேசவழமையின் சில கூறுகள் சாதிய பிண்ணனியில் உருவானவை என்பது நியாயமான கருத்துத்தான். அதை விட சிறந்த காணி சட்டம் நாம் வாழும் நாடுகளில் உள்ளதால்தான் நாம் இப்படி வாழ முடிகிறது. இதை ஏற்று கொண்டு எழுதுவது வகுப்பெடுத்தல் அல்ல. 

2 hours ago, விசுகு said:

அப்புறம் தலைப்புக்கு எழுதினால் புட்டினுக்கு ஆயுதத்தை எங்கும் பாவிக்க தெரியவில்லை?😂

🤣 இத்து போன 1980 இன் ஆயுதங்கள். துல்லியமாக தாக்காது.

அடிக்கடி நடுவழியில் பெற்றோல் வேற தீர்ந்து போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

👆இது டக்ளஸ், சங்கரி, ஏன் ஞானசார சொல்லும் அதே விடயங்கள். இது உங்கள் நிலைப்பாடில்ல என்பதும் தெரியும். இருந்தாலும் பதில் கீழே.

நாம் எமது பாரம்பரிய வாழிடத்தில் அரச ஆதரவோடு கிராமம், கிராமமாக வந்து, எம்மை விரட்டி விட்டு குடியேறுவதையும், அடாத்தாக எமது வழிபாட்டிடங்களை கைப்பற்றி விகாரை கட்டுவதையுமே எதிர்கிறோம்.

தனி ஆட்களாக வாய்ப்புத்தேடி எமது பகுதிக்கு வந்த சிங்களவர்களை நாம் என்றுமே துன்புறுத்தவில்லை. அதே போல் அப்படி வந்தவர்களின் கல்வி, வழிபாட்டு தேவைக்கு ஏற்ற அளவில் எம் பகுதியில் விகாரைகளும் சிங்கள பள்ளி கூடங்களும் கூட அனுமதிக்கப்பட்டே இருந்தன.

நாம் கொழும்பில், மேற்கு நாடுகளில் தனியர்களாக, அரச ஆதரவின்றி குடியேறியமைக்கும் - இங்கே எமது சமூக தேவைக்கு ஏற்ப, எமது செலவில் கோவில் கட்டியமையை இலங்கையில் நடக்கும் திட்டமிட்ட இன ஒழிப்போடு ஒரு போதும் ஒப்பிட முடியாது.

யுத்தம் என்றாகியபிந்தான் பேக்கரிகார்ர வெளியேற வேண்டியதாகிற்று.

தேசவழமையின் சில கூறுகள் சாதிய பிண்ணனியில் உருவானவை என்பது நியாயமான கருத்துத்தான். அதை விட சிறந்த காணி சட்டம் நாம் வாழும் நாடுகளில் உள்ளதால்தான் நாம் இப்படி வாழ முடிகிறது. இதை ஏற்று கொண்டு எழுதுவது வகுப்பெடுத்தல் அல்ல. 

🤣 இத்து போன 1980 இன் ஆயுதங்கள். துல்லியமாக தாக்காது.

அடிக்கடி நடுவழியில் பெற்றோல் வேற தீர்ந்து போகிறது.

ஒன்று சரி 

இன்னொன்றுக்கு நீலம் போட்டிருக்கணும்?😜

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

ஒன்று சரி 

இன்னொன்றுக்கு நீலம் போட்டிருக்கணும்?😜

 🤣. தப்பா நினையாதையுங்கோ மக்கள்.

அண்ணன் Euro6 டீசல் எஞ்சினுக்கு AdBlue உத்துவதை மட்டும்தான் சொல்லுறார்🤣.

https://www.carbuyer.co.uk/tips-and-advice/152834/what-is-adblue?amp

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

 🤣. தப்பா நினையாதையுங்கோ மக்கள்.

அண்ணன் Euro6 டீசல் எஞ்சினுக்கு AdBlue உத்துவதை மட்டும்தான் சொல்லுறார்🤣.

https://www.carbuyer.co.uk/tips-and-advice/152834/what-is-adblue?amp

ஆனாலும் பத்து குண்டுகள் குறி தவறக்கூடாது என்பது புட்டினுக்கு கொஞ்சம் ஓவர் தான் 😜

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

83 இல் எத்தனை நாடுகள், எவ்வளவு காலம் இப்படி திறந்த வீசா கொடுத்தார்கள்?

அதில் எத்தனை பேர் நாட்டை விட்டு வெளியேறினார்கள்?

யாருக்குத்தெரியும்?

யாழ்கள் விஜயகாந்த், கடஞ்சாவிடம் கேட்டுப்பார்க்கலாம், அவர்தான் வரலாறுகள், புள்ளிவிபரங்கள் எல்லாம் நுனிவிரலில் வைத்திருப்பவர்.

இந்த இரஸ்சிய உக்கிரேன் போர் திரிகளிலேயே முதன்முதலில் உக்கிரேனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தவர்கள் யார் என்பதே எனக்கு தெரியவில்லை ( மணி வளைவில் 2.5% ஆனவர்கள், அந்த 2.5 நீங்கள் கூட இருக்கலாம் மன்னிக்கவும் எனக்கு தெரியவில்லை ).

இப்போது இந்த திரிகளில் அவர்கள் எழுதுகிறார்களா என்பதும் தெரியாது.

ஆனால் நான் எப்போதும் பிந்திய பெரும்பான்மைதான்.

இந்த 2.5% தீர்மானிக்கும் சக்தியினர் என வகைப்படுத்துகிறார்கள் (Trend setters).

சமூக தலைவர்களாக, நல்ல முதலீட்டாளர்களாக, பெரும் தொழில் அதிபராக, கண்டுபிடிப்பாளர்களாக இவர்கள் இருப்பார்கள்.

இரண்டாவது 13.5% கட்டத்திலுள்ளவர்கள் புதிய கருத்துகளையோ அல்லது பொருள்களையோ அல்லது தொழிலையோ ஏற்கும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் பெரும்பாலும் திறந்த மனதுடன் சவால்களை எதிர்கொள்ளும் முதலாம் பிரிவினர் போன்ற எதிர்நீச்சல் போடும் தைரியாசாலிகள்.

3 வது கட்டத்திலிருப்பவர்கள் தொடர்பவகர்கள் 34% (முந்தய பெரும்பான்மை) இங்குதான் பிரச்சினை ஆரம்பிக்கின்றது, 4வது கட்டத்திலுள்லவர்கள் அடுத்த 34% (பிந்திய பெரும்பான்மை) தோல்வியாளர்கள், இவர்கள் குதிரை ஓடியபின் இலாயத்தின் கதவினை மூடுபவர்கள், உதாரணமாக பிட் கொயினை 68000 வாங்கிவிட்டு விலை 20000 வரை குறைந்தபின்பும் பிதொயின் 100000 போகும் என நம்புபவர்கள் (நான் இந்த பிரிவினர் என நம்புகிறேன்).

இந்த 3வது, 4வது பிரிவினர்தான் பெரும்பான்மை தொடருபவர்கள் (68%), இவர்களது கூச்சல்தான் அதிகமாக இருக்கும் . வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இவர்கள்தான் 1வது பிரிவினர் போல தெரியும்.

5வது பிரிவினர் (16%) 3வது மற்றும் 4வது பிரிவினர் விட்டுபோனவற்றை பொறுப்பேற்கும் பரிதாபத்துக்குரியவர்கள்.

ஒரு 6 மாதத்திற்கு முன்பு நடந்தது கூட எனக்கு தெரியவில்லை, வரலாறைப்பற்றி என்னிடம் கேட்பது சரியாக இருக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.