Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் மொத்தக் கடன் சுமார் 3 லட்சம் கோடி ரூபா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மொத்தக் கடன்

சுமார் 3 லட்சம் கோடி ரூபா!

கொழும்பு, ஓக. 16

இலங்கையின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன் மூன்று லட்சம் கோடி ரூபாவை எட்டியிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மே மாதத்தில் மொத்தக் கடன் நிலுவை 2 லட்சத்து 77 ஆயிரத்து நூறு கோடி ரூபாவை எட்டியிருந்தது. இது கடந்த ஆண்டில் இருந்த கடன் நிலுவையை விட 38 ஆயிரத்து 700 கோடி ரூபா அதிகமாகும்.

மே மாதம் வரையான கடன் நிலுவையின்படி வெளிநாட்டுக் கடன் ஒரு லட்சத்து 21 ஆயிரம் கோடி ரூபாவாகும். உள்நாட்டுக் கடன் பொறுப்பு ஒரு லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாவாகும்.

1997 இல் ஆக 76 ஆயிரத்து 400 கோடி ரூபாவாக இருந்த கடன் நிலுவை பத்து ஆண்டுகளின் முடிவில் சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாவை எட்டியிருக்கின்றது.

இந்தப் பத்து ஆண்டு காலத்தில் கடன் பொறுப்பு ஒரு சீராக அதிகரித்து வந்தபோதும் 2002, 2003 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற அமைதி முயற்சிகளை ஒட்டி 2004 2005 ஆம் ஆண்டுகளில் சுமார் 6 ஆயிரத்து 800 கோடி ரூபாவால் அது வீழ்ச்சி கண்டது.

ஆனால் அமைதி முயற்சிகள் குழம்பி, யுத்த நெருக்கடி தீவிரமடைந்த பின்னணியில் தற்போதைய கடன் பொறுப்பு அதிகரிப்பு வீதம் மீண்டும் மோசமாக உயர்ந்திருக்கின்றது.

தவறான பொருளாதாரக் கொள்கை, மோசமான நிதி நிர்வாகம், கட்டுமட்டில்லாத வீண் விரயம், ஊதாரித்தனமான செலவு, உருப்படியான திட்டங்கள் இல்லை என்ற பல்வேறு காரணங்களினாலும், இவ்விவகாரத்தில் தொடர்ந்து வந்த அரசுகளின் பொறுப்பற்ற போக்கினாலும் இலங்கை மீதும் மக்கள் மீதும் மோசமான கடன்சுமை சுமத்தப்பட்டிருப்பதோடு, அது மோசமாக அதிகரித்து வருகிறது என்று சிவில் சமூக அமைப்புகள் விசனம் தெரிவித்து வருகின்றன.(உ)

நன்றி - சுடர் ஒளி

அதாவது எங்களுக்கு விளங்கிற தமிழில சொல்லுங்கோ...

மூண்டு லட்சம் கோடி ரூவா எண்டால்

3,000,000,000,000 இவ்வளவு ரூவா கடன்? இலங்கையில் இரண்டு கோடி சனத்தொகை இருக்கிது எண்டு சும்மா ஒரு கணக்குக்கு வச்சா ஒரு குடிமகனிண்ட தலையில 15,000 ரூவா வெளிநாட்டு காசு கடன் இருக்கிது... ??

கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் எண்டதெல்லாம் பழய கதை போல.... இப்ப புதுசா "கடன் கொடுத்தால் காலடியில் கிடப்பான் இலங்கை வேந்தன்"...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-08-17

கடனில் மிதக்கும் நாடு

இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பாகத் தொடர்ந்து வெளிப்படுகின்ற தகவல்கள் அதிர்ச்சி அளிப்பனவாக இருக்கின்றன.

யுத்தத்தால் பீடிக்கப்பட்டு, பொருளாதார சுபீட்சம் பற்றிய நம்பிக்கையைத் தொலைத்துத் தள்ளாடும் இலங்கைத் தீவின் மொத்தக் கடன் பற்றிய தகவல் மக்களை மிரள வைக்கின்றது.

கடந்த மே மாதம் வரையான புள்ளிவிவரங்களின்படி இலங்கையின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன் பொறுப்பு சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாவாகும்.

பொருளாதார அபிவிருத்தி இல்லாத சூழலில் இந்தக் கடன் நிலுவை நாளொரு வீதமும் பொழுதொரு கணக்குமாக உயர்ந்து செல்கின்றதே தவிர குறைவதாக இல்லை.

இலங்கையின் மக்கள் தொகை அண்ணளவாக 2 கோடி என்றால் இலங்கை அரசின் கடன் பொறுப்பு தலா ஒருவருக்கு ஒன்றரை லட்சம் ரூபாவாகிறது.

ஆக, இலங்கைத் தீவின் ஒவ்வொரு பிரஜையின் கணக்கிலும் சுமார் ஒன்றரை லட்சம் ரூபா கடன் தொகை சுமத்தப்பட்டிருக்கின்றது. இது தினசரி அதிகரித்துச் செல்லும் வீதத்தைப் பார்த்தால் அடுத்த தலைமுறையினர் ஒவ்வொருவருக்கும் தலா பல மில்லியன் ரூபா கடன் பொறுப்பைச் சுமத்தி விட்டுப் போகும் நிலையில் நாடு இருக்கின்றது என்பதும் தெளிவாகிறது.

ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும், எதிர்காலம் பற்றிச் சிந்திக்காமல் தான் கடன் எடுத்து, தன்னுடைய ஆட்சி அதிகாரத்தையும், ஆளுகையையும் அனுபவித்து விட்டு, கடன் பொறுப்பை அடுத்து வரும் அரசுகளின் மீது சுமத்தி விட்டுப்போகும் வழமை நிலையைப் பார்க்கும்போது, அடுத்த தலைமுறைக்கு பெரும் தொகையான கடன் நிலுவையைச் செலுத்தும் பொறுப்பற்ற போக்குக் குறித்து இந்தத் தலைமுறை சிந்திக்காமல் இருப்பதை குறைகூறமுடியாமல்தான் உள்ளது.

விலைவாசி எகிறிக் கொண்டிருக்கின்றது. பண வீக்கமோ வீங்கி வெடிக்கும் நிலையில். வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து பெரும் சரிவைக் கண்டு கொண்டிருக்கிறது.

மத்திய வங்கியும், அதன் ஆளுநரும் என்னதான் உறுதி மொழியை அளித்த போதிலும் பண வீக்கம் கடந்த ஜனவரியிலேயே 20 வீதத்தைத் தாண்டிவிட்டது. இப்போது அது இன்னும் மோசமான கட்டத்தை அடைந்திருக்கும் எனக் கருத்தப்படுகின்றது.

வங்கி வட்டி வீதங்களும் 20 வீதத்துக்கு அதிகமாக உயர்ந்துள்ளதால் நாட்டின் பொருண்மிய நிலை ஊகிக்க முடியாத மோசமான கட்டத்தை நோக்கி நகர்கின்றது என நிபுணர்கள் எச்சரிக்கின்றார்கள்.

இலங்கை ரூபாவின் பெறுமதி முன்னெப்போதும் இல்லாதவாறு மிகத் தாழ்ந்து, ஓர் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி நூற்றியிருபதை எட்டிவிட்டது.

எரிபொருள், உணவுப் பொருள் போன்றவற்றின் விலை அதிகரிப்புகளால் நுகர்வோர் விலைச்சுட்டெண் அதிகரிப்பு 17.6 வீதத்தைத் தொட்டு நிற்கின்றது.

இத்தகைய மிகமோசமான பொருளாதாரப் பின்னடைவுகளுக்கு மத்தியிலும், அதைப் பொருட்படுத்தாது, மேலும் பெரும்தொகை கடன்பட்டு, தமிழர்களுக்கு எதிரான யுத்த முனைப்பைத் தீவிரப்படுத்தி, இராணுவ நடவடிக்கைத் திட்டங்களை அளப்பரிய பொருட்செலவோடு முன்னெடுக்கக் கங்கணம் கட்டி நிற்கின்றது இந்த அரசு.

தன்னுடைய பாதுகாப்புச் செலவினத்தை இந்த வருடத்தில் 44 வீதத்தால் மஹிந்தரின் அரசு அதிகரித்திருக்கின்றது. அதனால் அந்தச் செலவு மட்டும் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேசிய இனப்பிரச்சினையை நீதிப் போக்கோடு அணுகி, சிறுபான்மையினருக்கான வாழ்வியல் உரிமைகளை நியாயமான முறையில் வழங்கி, அமைதிப் பாதையில் சமாதானத் தீர்வு காண முழு வாய்ப்புகளும் வழிவகைகளும் இருந்தும், தனது பௌத்த சிங்கள மேலாதிக்கச் சிந்தனை காரணமாக, அவற்றையெல்லாம் அடியோடு நிராகரித்துத் துறந்து, பெரும் பொருட்செலவோடு யுத்த முனைப்பில் கடுமையாக நிற்கின்றது மஹிந்தரின் நிர்வாகம்.

அரச நிறுவனங்கள் மற்றும் பொது நிதியங்களில் மொத்தம் 15 ஆயிரம் கோடி ரூபா மோசடி செய்யப்பட்டிருப்பதான அதிர்ச்சிக் கண்டுபிடிப்பை பொது நிறுவனங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு வெளியிட்டுள்ளது. அரசுத் தரப்பு எம்.பியான விஜேதாஸ ராஜபக்ஷ தலைமையிலான குழுவே இந்தப் பரபரப்புத் தகவலை வெளியிட்டது.

இத்தகைய பெரும் ஊழல் மோசடி குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து, தவறிழைத்தோரைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டித்து, இழக்கப்பட்ட பெரும் தொகையை மீட்க வேண்டிய அரசு, அதைவிடுத்து, அந்த ஊழல் தொடர்பாகத் தன்னிடம் சிக்கிய "குடுமி'யை வைத்துக்கொண்டு, அதை குறுகிய அரசியல் லாப நோக்கத்துக்குப் பயன்படுத்துகின்றது என்பது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

மேற்படி ஊழல்கள் தொடர்பான மோசடிப் பேர்வழிகளை அரசியல் வாதிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசுத் தலைமை, அதற்கு மாறாக, அந்தப் பிரச்சினையைக் காட்டியே சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளை அச்சுறுத்தி, அடிபணிய வைத்து, தன் பக்கத்துக்கு "பல்டி' அடிக்கச் செய்து, அதற்குப் பதிலாக அவர்களுக்கு அமைச்சர் பதவியைப் பரிசாகக் கொடுத்து அலங்கரிக்கிறது. இதை அரசின் முன்னாள் பங்காளிகளான ஜே.வி.பியினரே நாடாளுமன்றில் அப்பட்டமாகப் பகிரங்கப்படுத்தி விட்டனர்.

பல்லாயிரம் கோடி ரூபா ஊழல்களைத் தடுத்து, நிறுத்தித் தண்டிக்காமல், அதை அரசியல் லாபத்துக்கு இலாவகமாகப் பயன்படுத்தும் அரசு ஒன்று ஆட்சிப் பீடத்தில் இருக்கும் போது நாட்டின் கடன் பொறுப்பு லட்சம் கோடி ரூபாவைத் தாண்டுவதில் வியப்பில்லைத்தானே.....!

நன்றி - உதயன்

அதாவது எங்களுக்கு விளங்கிற தமிழில சொல்லுங்கோ...

மூண்டு லட்சம் கோடி ரூவா எண்டால்

3,000,000,000,000 இவ்வளவு ரூவா கடன்? இலங்கையில் இரண்டு கோடி சனத்தொகை இருக்கிது எண்டு சும்மா ஒரு கணக்குக்கு வச்சா ஒரு குடிமகனிண்ட தலையில 15,000 ரூவா வெளிநாட்டு காசு கடன் இருக்கிது... ??

ஓய் கலைஞா ளொள்ளா அவங்கள் வாங்கின கடனை என்ர தயைில போடுறீரா ??

:angry: :angry: :angry:

ஓய் கலைஞா ளொள்ளா அவங்கள் வாங்கின கடனை என்ர தயைில போடுறீரா ??

:angry: :angry: :angry:

சீ,.சீ ப்பு... அவர் உங்களை சொல்ல இல்லை அரசாங்கத்தோடை சேந்து காசை அடிச்சு பையுக்கை வைக்கிற்ற உங்கட மச்சான் குத்தியனை பற்றி செல்லுறார்..... :P

சிறிலங்காவின் கடன் தொகை 3 றில்லியன்கள்: "த பொட்டம்லைன்"

[புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2007, 13:36 ஈழம்] [புதினம் நிருபர்]

சிறிலங்காவின் வெளிநாட்டு மற்றும் உள்ளுர் மொத்த கடன் தொகை 3 றில்லியன் ரூபாய்களை (3,000 பில்லியன் ரூபாய்கள்) எட்டியுள்ளது என்று "த பொட்டம்லைன்" என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அந்த இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியின் தமிழ் வடிவம்:

உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட தகவல்களின் படி கடந்த மே மாதம் வரையிலான சிறிலங்காவின் கடன் தொகை 2.77 றில்லியன் அல்லது 2,771 பில்லியன் ரூபாய்களாகும். இது கடந்த ஆண்டைவிட 387 பில்லியன் ரூபாய்கள் அதிகமாகும்.

இவற்றில்

வெளிநாட்டு கடன் தொகை 1.21 றில்லியன் ரூபாய்களும்,

உள்நாட்டு கடன் தொகை 1.56 றில்லியன் ரூபாய்களும் ஆகும்.

இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் வெளிநாட்டு கடன் தொகை 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 10 பில்லியன் ரூபாய்களாக அதிகரித்துள்ளது.

ஜூலை மாதத்தின் இறுதிப்பகுதியின் பொருளாதார நிலையை பொறுத்த வரை பொதுமக்களின் கடன் சுமை மேலும் அதிகரிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அனைத்துலக பண சந்தையில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை அல்லது 50 பில்லியன் ரூபாய்களை அரசாங்கப் பிணைகளை வைத்து கடனாக பெறுவதில் முனைப்புடன் செயலாற்றி வருகின்றது.

அரசாங்கத்தின் இந்த முயற்சியானது எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

இந்த அதிகப்படியான கடன் கொள்வனவுகள் மக்களுக்கு மேலதிக சுமையை ஏற்படுத்தும் என சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரையில் வெளிநாட்டு கடன் தொகைகளிற்கான மீள் செலுத்தல் தொகையாக 383 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் செலுத்தியுள்ளது. இதில் 311 மில்லியன் டொலர்களே கடன் தொகைகளுக்கான மீள்கட்டுமான தொகையாகும். எஞ்சிய தொகை வட்டியும், ஏனைய செலவுத் தொகையுமாகும்.

இருந்த போதும், மே மாதம் வரையிலும் செலுத்தப்பட்ட கடன் மீளளிப்பு தவணைப்பணம் 2007 ஆம் ஆண்டுக்கான தவணைப் பணமான 860 மில்லியன் டொலர்களில் 44.5 விகிதமாகும்.

அரசாங்கத்தின் மொத்த கடன் தொகைக்கான வட்டிப் பணமானது 71 பில்லியன் ரூபாய்களாகும். இது 15 விகிதத்தால் அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டு வட்டி விகிதம் அதிகரிக்கலாம்.

"நாட்டுக்கு மேலதிக கடன் தேவையில்லை ஆனால் அதற்கான பெறுமதி தேவை" என்று பொருளியல் நிபுணரான ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடனாக பெறும் 500 மில்லியன் டொலர்களை நாட்டின் உட்கட்டுமானப் பணிகளுக்கு என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதாவது வானூர்தி நிலையத்தின் நிர்மாணத்திற்கும், வானூர்தி சேவையின் தொடக்கத்திற்கும் இதனை அரசு பெறுகின்றது. அவர்கள் இந்த திட்டங்களில் பொது மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புக்கும் அனுமதியளிக்க வேண்டும். அவர்கள் எல்லோரும் அதன் மூலம் அனுகூலங்களை அடைந்தால் அது எல்லோருக்கும் நன்மையானது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் உண்மையான கேள்வி என்னவெனில், உண்மையாகவே இந்த நிதி எதற்காக என்பது தான். இந்த நிதி எதற்கு என்பதற்கான எந்த திட்டங்களும் தற்போது இல்லை. இது உட்கட்டுமானப் பணிகளுக்காக இல்லை என்றால் அரசின் நாளாந்த வீண் செலவுகளுக்கே இந்த நிதி விரயமாகப் போகின்றது.

எனவே பொருளியல் நிபுணர்களின் பார்வையில் அரசு 500 மில்லியன் டொலர்களை கடனாக பெறுவது சரியோ அல்லது தவறோ என்பதல்ல விவாதம். ஆனால் அரசின் நோக்கம் என்ன? என்பது தான் முக்கியமானது. சுகாதாரம், கல்வி போன்றவற்றில் இருந்து எடுத்து வானூர்தி சேவைக்காக பலசரக்கு கடையை நடத்த அரசு முயன்றால் இத்தகைய கடன் பெறும் நடவடிக்கைகள் நீண்டகாலத்திற்கு தொடரலாம் எனவும் ஹர்சா தெரிவித்தார்.

எனினும் இப்படிப்பட்ட கருத்துக்களை நிராகரித்த அரச தரப்பினர் நாட்டின் உட்கட்டுமானப் பணிகளுக்கே இந்த நிதி பெறப்படுவதாக தெரிவித்துள்ளனர். நாட்டின் மொத்த உற்பத்தியுடன் ஒப்பிடும் போது இந்த கடன் தொகை திருப்தியாக உள்தாகவும், தற்போது அது 90 விகிதமாக உள்ள போதும் 2002 மற்றும் 2004 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அது 105 விகிதமாக இருந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கொடையாளிகளின் உதவிகளினால் நாடு பலன்களை அனுபவித்து வருகின்றது. கடந்த மே மாதம் வரையிலும் சிறிலங்காவுக்கான அனைத்துலகத்தின் உதவித்தொகையாக 874 மில்லியன் டொலர்கள் அறிவிக்கப்பட்ட போதும் 331 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது.

மே 31 ஆம் நாள் வரைக்கும் வழங்கப்படாத தொகையாக 4.7 பில்லியன் டொலர்கள் உள்ளன. பொதுவாக இந்த நிதி தொகைகள் கிடைப்பதற்கு 3 தொடக்கம் 5 வருடங்கள் எடுக்கலாம் என திறைசேரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிக அழுத்தங்கள் உள்ள போதும் நாட்டின் செலவீடுகள் திருப்திகரமாக கையாளப்படுகின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் ஜனவரியில் இருந்து மே மாதம் வரையில் செலவீடுகள் 12 விகிதத்தால் உயர்ந்துள்ளன. இது 318 பில்லியன் ரூபாய்களாகும்.

பொதுத்துறை, ஓய்வூதியத் திட்டம், வட்டிகளின் மீள் கட்டுமானம், பாதுகாப்பு தொடர்பான செலவீடுகள் போன்றவற்றால் தற்போதைய செலவீடுகள் வேகமாக அதிகரித்துள்ளன. 85 பில்லியன் ரூபாய்களாக உயர்ந்த இந்த தொகை 30 விகித அதிகரிப்பாகும். நாட்டின் வருமானம் 27 விகிதத்தால் அதிகரித்துள்ளது. இது 218 பில்லியன் ரூபாய்கள் அதிகரிப்பாகும், அதாவது மொத்த உற்பத்தியில் 6.7 விகிதம். எனவே 2007 ஆம் ஆண்டுக்கான வருமானத்தின் இலக்கை அடையும் நம்பிக்கை திறைசேரிக்கு உண்டு என்றும் அரச வட்டாரங்கள் தெரித்ததுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

--- நன்றி : புதினம் ---

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது எங்களுக்கு விளங்கிற தமிழில சொல்லுங்கோ...

மூண்டு லட்சம் கோடி ரூவா எண்டால்

3,000,000,000,000 இவ்வளவு ரூவா கடன்? இலங்கையில் இரண்டு கோடி சனத்தொகை இருக்கிது எண்டு சும்மா ஒரு கணக்குக்கு வச்சா ஒரு குடிமகனிண்ட தலையில 15,000 ரூவா வெளிநாட்டு காசு கடன் இருக்கிது... ??

உங்கள் கணக்கு தவறு சார்..

3X10^12 / 2X10^7 = 1.5 X 10^5 = 150000/=

ஒரு சிறீலங்கா குடிமகனின் கடன் தொகை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாக்கள். :P

Edited by nedukkalapoovan

நன்றி! நன்றி! பிழையை திருத்தியமைக்கும், மேலும் உங்கள் கணக்கு சரியாக இருந்தால்... :):D

ஆங்கிலத்தில் மில்லியன், பில்லியன் என்று சொல்லி இருந்தால் இன்னும் விளக்கமாக இருந்து இருக்கும். இது கோடி என்று சொல்ல நான் எனது வீட்டுக்கோடியை நினைத்து விட்டேன் போல இருக்கு. 100 இலட்சம் தானே ஒரு கோடி? :lol:

சிறிலங்காவே ஆசியாவில் அதிக வட்டி விகிதம் உள்ள நாடு: "த புளும்பேர்க்" இணையத்தளம்

[வியாழக்கிழமை, 23 ஓகஸ்ட் 2007, 06:21 ஈழம்] [பி.கெளரி]

உலகத்தின் கடன் சந்தைகளில் சிறிலங்காவின் நிதி நிலமை மிகவும் மோசமாக உள்ளதனால் சிறிலங்காவின் கடன் மீளச் செலுத்தும் தன்மைக்கான தரம் மேலும் குறைக்கப்படலாம் என்று "பிற்ச்" தரப்படுத்தல் அமைப்பு தெரிவித்துள்ளதுதாகவும், ஆசியாவிலேயே அதிக வட்டி விகிதம் கூடிய நாடாக சிறிலங்கா திகழ்வதாகவும் "த புளும்பேர்க்" இணையத்தளம் தனது பத்தியில் தெரிவித்துள்ளது.

அதன் தமிழ் வடிவம் வருமாறு:

இந்த அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொண்ட தரப்படுத்தலில் சிறிலங்கா பிபி அல்லது முதலீட்டுக்கான தரத்திற்கு மூன்று தரம் குறைவாக தரப்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல்களே இந்த தரக்குறைவிற்கான காரணம்.

இழப்புக்களைச் சந்தித்த அமெரிக்காவின் வீட்டுக்கடன் திட்ட கொடுப்பனவு நிறுவனங்களின் நிதி சந்தையும் கடந்த மாதம் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. இது குறைந்த வட்டிவீத முதலீட்டாளர்களை முதலீடுகளை தவிர்க்கத் தூண்டியுள்ளது.

சிறிலங்கா தொடர்பில் தொடர்ச்சியாக, எதிரான தரப்படுத்தல்களே வெளிவந்து கொண்டுள்ளன என்ற இந்த அமைப்பின் பிரித்தானியாவை தளமாகக்கொண்ட குழுவின் தலைவரான போல் ராவ்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்ந்தும் கவலையை அளிக்கின்றன. பரந்த பொருளாதார கொள்கையின் சூழ்நிலை தற்போதைய உலக நிதிச்சந்தையின் நெருக்கடி நிலைமையின் பிரகாரம் முன்னேற்றமாக இல்லை என்ற அவர் மேலும் தெரிவித்தார்.

உலகின் உறுதியற்ற பொருளாதார கடன் சந்தை சிறிலங்காவை மேலும் கடினமான பாதையில் தள்ளியுள்ளது.

ஏனெனில் அனைத்துலகத்தில் இருந்து அதிக நிதியை பெறுவதனால் ஆசியாவில் சிறிலங்காவே அதிக கடன், செலவுகள் உள்ள நாடாகும்.

தெற்காசியாவின் தீவான சிறிலங்கா கடந்த ஒகஸ்ட் 2 ஆம் நாள் ஜேபி மோகன் சேஸ் அன் கோ (JPMorgan Chase & Co), பார்கிளேஸ் கபிற்ரல் (Barclays Capital), எச்எஸ்பிசி கோல்டிங்ஸ் (HSBC Holdings Plc) ஆகிய நிதி நிறுவனங்களின் உதவியுடன் பிணைகளைச் செலுத்தி 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனைத்துலகத்தில் பெற முனைந்துள்ளது.

20 மில்லியன் மக்களை கொண்ட சிறிலங்காவில் கடந்த இருபது வருட கால போரை முடிவுக்கு கொண்டுவர நடைபெற்ற பேச்சுக்கள் கடந்த ஆண்டு ஒக்ரோபரில் முறிவடைந்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கும், அரச படையினருக்கும் இடையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடந்த வருடத்தில் இருந்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

ஸ்ரான்டட் அன் புவர்ஸ் (Standard & Poor's) என்ற அமைப்பும் கடந்த ஓகஸ்ட் 8 ஆம் நாள் சிறிலங்கா தொடர்பான தனது தரப்படுத்தல்களை வெளியிட்டுள்ளது. அது சிறிலங்காவை பி பிளஸ் (B+) ஆக தரப்படுத்தி உள்ளது. அதாவது இது முதலீட்டுக்கான தரத்தில் இருந்து நான்கு தரம் குறைவானதாகும். ஏதிர்மறையான இந்த வெளிப்பாடுகள் நாட்டின் தரத்தை குறைப்பதை அதிகரிக்கச் செய்யும்.

ஜூலை மாதம் விலையேற்றம் எதிர்பார்த்ததை விட அதிகரித்ததைத் தொடர்ந்து, சிறிலங்காவின் வட்டி விகிதத்தை மத்திய வங்கி ஒகஸ்ட் 14 ஆம் நாள் மாற்றம் இன்றி 10.5 ஆக பேணி வருகின்றது. இதுவே ஆசியாவின் அதி உயர் வட்டிவிகிதமாகும்.

அதிகளவான நிதிக் கொள்வனவுகள், நாட்டில் நடைபெற்று வரும் மோதல்கள் என்பன 26 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுள்ள நாட்டின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தியுள்ளது. அது கடந்த இரு வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தின் முதல் கால் பகுதியில் மெதுவாகவே அதிகரித்து உள்ளது.

படைத்துறை கொள்வனவுகள், விடுதலைப் புலிகளுடனான மோதல்கள், எரிபொருள் விலையேற்றம் என்பன விலையேற்றத்தை மோசமாக்கியுள்ளதுடன் மத்திய வங்கியின் விலைக் கட்டுப்பாட்டு நோக்கத்தையும் அச்சுறுத்தி வருகின்றது.

நோர்வேயின் மேற்பார்வையில் உருவான போர் நிறுத்தத்தில் பொருளாதாரம் சீரான வளர்ச்சி கண்டிருந்தது. மத்திய வங்கியின் ஆளுநர் நிவாட் கப்ரால் மற்றும் அவரது கொள்கை வகுப்பாளர்களும் இந்த ஆண்டு முடிவுக்குள் நாட்டின் விலையேற்றத்தை ஒற்றை இலக்கத்திற்குள் கொண்டுவர முயன்று வருகின்றனர். அவர்களே கடந்த ஆண்டில் கடன் கொள்முதல்களை 1.25 விகிதத்தாலும், இந்த வருடம் பெப்ரவரி 23 ஆம் நாள் 0.5 விகித்தாலும் அதிகரித்தவர்கள்.

விலையேற்றத்தை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வருவது சிறிலங்காவிற்கு முக்கியமானது. அதுவே அதன் கடன் சேவைகளின் செலவுகளை குறைக்கும் என்று "பிற்ச்" தரப்படுத்தல் அமைப்பு முன்னர் தெரிவித்திருந்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-- நன்றி : புதினம் --

500 மில்லியன் டொலரை கடனாகப் பெற முடிவு: சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி

500 மில்லியன் அமெரிக்க டொலர்களை 13 வெளிநாட்டு வங்கிகளிடமிருந்தும், இரண்டு உள்நாட்டு வங்கிகளிடமிருந்தும் கடனாகப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று வியாழக்கிழமை கூடியபோது வாழ்க்கைச் செலவு குறித்து எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க சிறப்பு உரை நிகழ்த்தினார். அந்த உரையில், மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களையும், சலுகைகளையும் நிறுத்தியுள்ள மகிந்த அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து 500 மில்லியன் டொலர் அமெரிக்க டொலர்களை கடன்பெறுவதாக குற்றம் சாட்டினார்.

மேலும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போவதாகவும் அவர் கூறினார்.

ரணிலின் இந்த உரைக்குப் பதிலளித்த சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் கடனாகப் பெற உள்ளதாகத் தெரிவித்தார்.

ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கு ஆளுந்தரப்பினர் பதில் விமர்சனங்களை முன்வைத்ததால் சிறிலங்கா நாடாளுமன்றில் பல மணிநேரமாக குழப்பம் நிலவியது.

http://www.eelampage.com/

  • கருத்துக்கள உறவுகள்

கடனில் மூழ்கும் சிறிலங்கா கரைசேருமா?-

3000பில்லியன் ரூபா கடனில் சிறிலங்கா மூழ்க்ப்போயுள்ளது.வெளிநாட்ட

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"வெளிநாட்டுக் கடன்களில் மூழ்கும் சிறீலங்கா"

இக்கடன் பெறுகை தொடர்பாக ஏற்கனவே தரகுப் பணமாக 2.5 மில்லியன் டொலர் பரிமாறப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. எனினும் திரு. ரணில்விக்கிமசிங்க சிறீலங்கா அரசுக்கு வழங்கப்படும் கடன்களை நாம் ஆட்சிக்கு வந்தால் பொறுப்பேற்கப் போவதில்லையென கடித மூலம் தெரிவித்துள்ளார்.

இவர் சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இவரின் கடிதங்கள் அலட்சியப்படுத்தப்பட முடியாதவை. ஏனெனில் ஜனநாயக அடிப்படையில் ஒரு நாட்டின் பிரதமருக்கு வழங்கப்படும் கௌரவம் எதிர்க்கட்சித் தலைவருக்கும் வழங்கப்படுவதுண்டு.

சிறீலங்காவில் பிரதமரே அதிகார

மற்றதொரு பொம்மை என்ற நிலையில் இருக்கும் போது எதிர்க்கட்சித் தலைவருக்கான கௌரவத்தை எதிர்பார்ப்பது தவறுதான். எனினும் இரு சர்வதேச வங்கிகளுடன் தொடர்புடைய ஒரு விசயமாக இருப்பதால் இவரின் ஆட்சேபனைகள் கருத்தில் எடுக்கப்படமாட்டா எனவும் சொல்லிவிட முடியாது.

எனினும் இப்படியான ஒரு சூழ்நிலையில் கூட கொங்கொங் சங்காய்பாங்க் என்ற சர்வதேச வங்கி நிறுவனம் சிறீலங்கா அரசுக்கு 5,600 கோடி ரூபா கடன் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இத்தொகை பத்து

வருடங்களில் தவணை அடிப்படையில் மீளச்செலுத்த வேண்டியதாகும்.

இவ்வகையில் சிறீலங்கா பத்துவருடத்தில் வட்டியுடன் சேர்த்து வழங்கவேண்டிய தொகை ஏறக்குறைய 12,000 கோடியாகும். அதாவது கிட்டத்தட்ட பெறப்பட்ட தொகையிலும் இருமடங்காகும்.

இக்கடனை வழங்கவேண்டாமெனக் கோரி எச்.எஸ்.பி யின் கொழும்புக் கிளையின் முன்பாக ஐக்கிய தேசியக் கட்சியினர் ஒரு ஆர்ப்பாட்டத்தை கடந்த 30.08.2007 அன்று நடத்தியுள்ளனர்.

இது மேற்படி வங்கியினால் கணக்கில் எடுக்கப்படுகிறதோ இல்லையோ முற்றுமுழுதாகவே சிறீலங்காவை மீளமுடியாத கடன் சுமைக்குள் தள்ளுவது தொடர்பான பல விடயங்கள் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்படுகின்றன.

சிறீலங்காவிற்கு கடன் வழங்கவேண்டாமென சர்வதேச நிறுவனங்களுக்கு எழுத்து மூலமான கோரிக்கைகளை வைத்தல், கடன் வழங்கப்படுவதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்துதல் போன்றவை மகிந்த அரசிற்கு எதிரான மக்களின் எதிர்ப்புணர்வை வளர்ப்பதில் ஒரு காத்திரமான பங்கை வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இது ஐக்கிய தேசியக் கட்சிக்கு அரசியல் ரீதியாக நல்ல பலன்களை கொடுக்கக்கூடும். அதாவது அடுத்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் கனவுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

ஆனால், எதிர்க் கட்சியினரின் கோரிக்கைகளை ஏற்று சர்வதேச வங்கிகள் கடன் வழங்குவதை நிறுத்துமா? என்பது ஒரு கேள்வியாகவே பல தரப்பாலும் எழுப்பப்படுகிறது. சர்வதேச நிதி வழங்கும் நிறுவனங்களோ அல்லது வங்கிகளோ கடன் வழங்கும் போது அந்தக் கடனைவிடப் பல மடங்கு பலனை கடன் பெறும் நாட்டிடமிருந்து பெறும் வகையிலேயே கடன்களை வழங்கும் போது அவை நிபந்தனைகளை முன்வைக்கின்றன.

மேலோட்டமாகப் பார்க்கும் போது கடனுக்கான வட்டியினைச் செலுத்துவதே கடன் பெறும் நாடுகளின் மேலதிகக் கொடுப்பனவு என்பது போலத் தோன்றும். ஆனால் கடன் வழங்கும் நிறுவனங்கள் கோரும் நிபந்தனைகளையோ அவர்கள் வழங்கும் கடன்களை விடப் பல மடங்கு தொகையை மறைமுகமாகச் சுரண்டும் வகையிலேயே அமைந்திருக்கும்.

இந்நிறுவனங்களின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்று வரவு செலவைக் குறைத்தல். வெளிப்படையில் இதன் அர்த்தம் அமைச்சர்கள் உயரதிகாரிகள் போன்றோரின் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தல் என்பது போலவே தோன்றும்.

ஆனால் உண்மையில் அவற்றுக்கும் இந்த நிபந்தனைக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இருப்பதில்லை. மாறாக அரசு செலவீனங்களைக் குறைப்பது என்பது மருத்துவம், கல்வி, போக்குவரத்துப் போன்ற மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கான செலவீனங்களை வெட்டுவதாகும்.

இதில் விவசாயம் உட்பட தேசிய உற்பத்திகளுக்கு மானியம் வழங்கப்படுவதை நிறுத்துவது அல்லது குறைப்பது அடங்கும். அடுத்த நிபந்தனை தனியார் துறையை ஊக்குவிப்பதாகும்.

மூன்றாம் உலக நாடுகளில் சர்வதேச தனியார் நிறுவனங்களுடன் முதலீடு செய்வதற்கு தனியாரோ, தனியார் நிறுவனங்களோ இல்லை. எனவே தனியார் உற்பத்தியினை ஊக்குவிப்பது என்பது சர்வதேச முதலீட்டாளர்களை இந்த நாடுகளில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதாகும். இதில் இங்கு முதலீடு செய்யும் அந்நிய நிறுவனங்களுக்கு வசதிகளை வழங்குவதற்காக மின்சார உற்பத்தி, துரித போக்குவரவு வசதிகள் போன்ற ஏற்பாடுகளை அரசே செய்யவேண்டும்.

இந்த ஏற்பாடுகளைச் செய்வதற்கு வாங்கும் கடனில் ஒரு பகுதி செலவு செய்யப்படும்.

பொது மக்களுக்கான வசதிகளை, அரச செலவீனங்களைக் குறைப்பது என்ற பெய

ரில் குறைக்க வேண்டும் எனவும், தனியார் உற்பத்தியை ஊக்குவித்தல் என்ற பெயரில் அந்நிய முதலீட்டாளர்களுக்கு வசதிகள் செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதிக்கும் கடன் வழங்கும் நிறுவனங்கள், இந்தக் கடனை போரிற்குச் செலவு செய்யக் கூடாது என நிபந்தனை போடுவதில்லை.

ஏனெனில் ஒரு போரிற்கான ஆயுதங்கள், வாகனங்கள் ஏனைய தேவைப் பொருட்கள் அந்நிய நிறுவனங்களிடமே கொள்முதல் செய்யப்படுகின்றன. எனவே போரின் மூலம் வழங்கப்படும் கடனில் ஒரு பகுதி மீண்டும் அந்நிய நிறுவனங்களுக்கே திரும்பிச் சென்று விடுகின்றன.

எனவே உலகக் கடன் வழங்கும் நிறுவனங்களுடன் பெறும் கடன்கள் காரணமாக வாங்கும் நாடுகளை விடபெரும் முதலிட்ட நிறுவனங்கள் கூடுதலான பலன்களைப் பெறுகின்றன. அதேவேளையில் கடன் பெறும் நாடுகளின் ஆட்சியாளர்களும் அதிகார பீடத்தினரும் தரகுப் பணங்கள் மூலம் தங்கள் சொந்த நலன்களைப் பேணிக் கொள்வர்.

ஆனால் நாடும், நாட்டு மக்களும் மேலும், மேலும் கடனாளிகளாகி துன்ப துயரங்களுக்குள் தள்ளப்படுவர்.

இப்படியான ஒரு நிலையில் சிறீலங்கா அரசு அவர்களால் விடுக்கப்படும் நிபந்தனைகளை ஏற்கனவே ஏற்றே செயற்பட்டு வருகிறது.

எனவே அந்நிய நிதி வழங்கும் நிறுவனங்கள் உள்ளூர் எதிர்ப்புக்களை மீறி நிதி வழங்குவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. ஆனால் இன்று ஐக்கிய தேசியக் கட்சியினர் சர்வதேச நிதி வழங்கும் நிறுவனங்கள் சிறீலங்கா அரசிற்கு நிதி வழங்கக் கூடாது என நடாத்தும் போராட்டங்களைக் கூட தமக்குச் சாதகமாக பயன்படுத்தத் தவறப்போவதில்லை.

இப்படியான எதிர்ப்புக்கள், ஆர்ப்பாட்டங்கள் காரணம் காட்டி கடன் வழங்கும் நிறுவனங்கள் சிறீலங்கா அரசின் மேல் மேலும் புதிய நிபந்தனைகளைச் சுமத்தும். எப்படியாவது கடன் வாங்கி போரை நடத்த வேண்டிய நிலையில் உள்ள அரசு அவற்றிற்கு கட்டுப்பட்டு கடனைப் பெறும்.

இதன் சுமைகளை மேலும் மேலும் சுமக்க வேண்டிய துயர நிலை மக்கள் தலை மீதேவிழும். எனவே இன்று சர்வதேச நிதி நிறுவனங்கள் சிறீலங்காவிற்கு கடனை வழங்குவது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொள்ளும் எதிர்ப்புக்கள் அந்த நிறுவனங்களுக்கே சாதகமான சூழலை ஏற்படுத்தும்.

இது சிறீலங்காவை மீள முடியாத கடனுக்குள் மூழ்கடிக்கும் ஒரு நிலையை மேலும் அதிகரிக்கச் செய்வதை விட வேறு எதையும் சாதித்து விட முடியாது.

- நா.யோகேந்திரநாதன் -

நன்றி - "ஈழமுரசு"

செய்திகள் இங்கே....

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=8&

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.