Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனியில்... விலை உயர்வு நெருக்கடியைச் சமாளிக்க,  65 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் விலை உயர்வு நெருக்கடியைச் சமாளிக்க 65 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு!

ஜேர்மனியில்... விலை உயர்வு நெருக்கடியைச் சமாளிக்க,  65 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு!

உக்ரைன் போரைத் தொடர்ந்து ஐரோப்பாவிற்கு ரஷ்ய எரிவாயு விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டதை அடுத்து, பல ஐரோப்பிய நாடுகள் நீண்ட குளிர்காலத்திற்குத் தயாராவதற்கு அவசர நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், ரஷ்ய எரிவாயு விநியோக தடையால் நேரடியாக மற்றும் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள ஜேர்மனி, மக்கள் மற்றும் வணிகங்கள் உயரும் விலையைச் சமாளிக்க உதவும் வகையில் 65 பில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

எதிர்வரும் மாதங்களில் எரிசக்தி செலவுகள் உயரும் என்ற எதிர்பார்ப்புகளின் மத்தியில், ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கடந்த பெப்ரவரி மாதம், ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தை கட்டுப்படுத்தியது. இரண்டு நாட்களுக்கு முன்பு, ரஷ்யா ஐரோப்பாவிற்கு எரிவாயு வழங்கும் ஒரு முக்கிய குழாய்த்திட்டத்தை காலவரையின்றி மூடியது.

இது, ஜேர்மனி போன்ற நாடுகள் வேறு இடங்களில் மாற்று எரிசக்தி விநியோகங்களை நாட வேண்டிய கட்டாயத்துக்கு வழிவகுத்தது.

இந்த நிலையில், டிசம்பரில் எரிவாயு விநியோகத்தை முழுவதுமாக நிறுத்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும், குளிர்காலத்தில் தனது நாடு அதைச் செய்யும் என்றும் ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் உறுதியளித்தார்.

மேலும், ‘ரஷ்யா இனி நம்பகமான ஆற்றல் பங்காளியாக இல்லை’ என்று ஸ்கோல்ஸ் கூறினார்.
இந்த தொகுப்பு நன்மை உயர்வுகள் மற்றும் பொது போக்குவரத்து மானியம் உள்ளிட்ட நடவடிக்கைகளுடன் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகங்களை உயரும் பணவீக்கத்திலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என ஸ்கோல்ஸ் கூறினார்.

வருமான வரி செலுத்தும் தொழிலாளர்கள் ஒருமுறை எரிசக்தி விலை கொடுப்பனவாக 300 டொலர்கள் பெறுவார்கள். அதே சமயம் குடும்பங்கள் ஒரு குழந்தைக்கு 100 டொலர்கள் ஒரு முறை சலுகையாகப் பெறுவார்கள், இது குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு இரட்டிப்பாகும்.

அடுத்த சில ஆண்டுகளில், பழைய கட்டடங்களை சீரமைக்க ஆண்டுதோறும் 12 முதல் 13 பில்லியன் டொலர்கள் வரை ஒதுக்கப்படும்.

எவ்வாறாயினும், ரஷ்ய விநியோகங்களை மாற்றுவதற்கான செலவை பயன்பாடுகளுக்கு உதவும் வகையில் ஒரு வரி விதிக்கப்பட்ட பிறகு, ஜேர்மன் குடும்பங்கள் எரிவாயுவிற்கு வருடத்திற்கு 500 டொலர்கள் அதிகமாக செலுத்த வேண்டும்.

யுனிபர் மற்றும் பிற இறக்குமதியாளர்கள் உயரும் விலையை சமாளிக்க உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட வரி, ஒக்டோபர் 1 முதல் விதிக்கப்பட்டு ஏப்ரல் 2024ஆம் ஆண்டு வரை நீடிக்கும்.

https://athavannews.com/2022/1297590

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

உக்ரைன் போரைத் தொடர்ந்து

உக்கல் உக்ரேனுக்கு ஆயுதங்களை குடுத்துக்கொண்டு இஞ்சாலை பொது சனத்துக்கு தேவையான அத்தியாவசிய சாமான்களுக்கு விலையை கூட்டீனம்.😡

எல்லாம்  நெருப்பு விலை....சும்மா ரைம் பாஸ்க்கு கடைக்குள்ள போறதெண்டாலே 50 ஈரோ  தாள் வேணும்.:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Demo in Leipzig: Linke protestiert gegen Krisenpolitik der Regierung -  Politik - SZ.de

Montag, der 5. September 2022: Demo-Abend in Leipzig, 11 verletzte  Polizist/-innen und Gedenken an Olympia-Attentat – Nachrichten aus Leipzig  - Leipziger Zeitung

ஜேர்மனிய மக்கள் விலைவாசி உயர்வு மற்றும் அரசியல் போக்குகளை கண்டித்து வீதிக்கு இறங்க தொடங்கி விட்டார்கள்.

உக்ரேனும் உழுத்துப்போன கத்தரிக்காயும்....இதிலை இருந்து என்ன தெரியுது????? மற்ற நாட்டு பிரச்சனைக்காக சனம் பட்டினி கிடக்க தயாரில்லை...😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

இந்த நிலையில், டிசம்பரில் எரிவாயு விநியோகத்தை முழுவதுமாக நிறுத்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும், குளிர்காலத்தில் தனது நாடு அதைச் செய்யும் என்றும் ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் உறுதியளித்தார்.

மேலும், ‘ரஷ்யா இனி நம்பகமான ஆற்றல் பங்காளியாக இல்லை’ என்று ஸ்கோல்ஸ் கூறினார்.

அடுத்த சில ஆண்டுகளில், பழைய கட்டடங்களை சீரமைக்க ஆண்டுதோறும் 12 முதல் 13 பில்லியன் டொலர்கள் வரை ஒதுக்கப்படும்.

அப்படி  போடு அரிவாளை...

புட்டினுக்கெல்லாம்  ஐரோப்பா இனி  காசு  தராது...

ஆபிரிக்கா  சிறீலங்கா பக்கம்  பைப்  லைன் போடவேண்டியது  தான்..

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, விசுகு said:

அப்படி  போடு அரிவாளை...

புட்டினுக்கெல்லாம்  ஐரோப்பா இனி  காசு  தராது...

ஆபிரிக்கா  சிறீலங்கா பக்கம்  பைப்  லைன் போடவேண்டியது  தான்..

விசுகர்! சிறிலங்காவுக்கு பைப் லைன் போட்டு என்னத்த உறிஞ்சி எடுக்கிறது? 🤣

தேவைப்படும் பட்சத்தில் பிரான்ஸ் ஜேர்மனிக்குத் தன்னிடமுள்ள மேலதிக எரிவாயுவை வினையோகிக்கும். மாற்றீடாக பிரான்சில் குளிர்காலத்தில் மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டால் ஜேர்மனி பிரான்சுக்கு முன்வினையோகம் செய்யும். பிரான்சில் பிரதான அணுமின் நிலையங்கள் பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

விசுகர்! சிறிலங்காவுக்கு பைப் லைன் போட்டு என்னத்த உறிஞ்சி எடுக்கிறது? 🤣

ரணில் தன்ர  பைப்லைனை இணைப்பார்  தானே  அண்ணை???🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

உக்கல் உக்ரேனுக்கு ஆயுதங்களை குடுத்துக்கொண்டு இஞ்சாலை பொது சனத்துக்கு தேவையான அத்தியாவசிய சாமான்களுக்கு விலையை கூட்டீனம்.😡

எல்லாம்  நெருப்பு விலை....சும்மா ரைம் பாஸ்க்கு கடைக்குள்ள போறதெண்டாலே 50 ஈரோ  தாள் வேணும்.:(

சம்பளமும் கூட இல்லையா?. உழைகிறீர்கள் தானே    ? செலவு செய்யுங்கள்  😂மனிதன் உயிருடன் இருக்கும் போது… தான் செலவு செய்ய முடியும்  சேமித்து வைத்து விட்டு நாங்கள் இந்த உலகத்தை விட்டு போவதில் என்ன பலனை காணப்போகிறோம் 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, Kandiah57 said:

சம்பளமும் கூட இல்லையா?. உழைகிறீர்கள் தானே    ? செலவு செய்யுங்கள்  😂மனிதன் உயிருடன் இருக்கும் போது… தான் செலவு செய்ய முடியும்  சேமித்து வைத்து விட்டு நாங்கள் இந்த உலகத்தை விட்டு போவதில் என்ன பலனை காணப்போகிறோம் 🤣

உழைப்பிற்கேற்ற ஊதியம் மட்டும் இருந்தால் போதாது. பொருளுக்கேற்ற விலையும் மதிப்பும் இருக்க வேண்டும். 50 சதம் விற்க வேண்டிய பொருள் 2 ரூபா விற்கின்றதே?பணம் இருக்கின்றது என்பதற்காக அறா விலைக்கு பொருட்கள் வாங்க முடியுமா என்ன? இதெல்லாம் முதலாளிகள் நிறைந்த முதலாளித்துவ மேற்குலகால் வந்த வினைகள்.

இவ்வளவு விலை ஏற்றத்திற்கு இயற்கை  மனித இனத்திற்கு எந்தக்குறையும் வைக்கவில்லை கண்டியளோ😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

தேவைப்படும் பட்சத்தில் பிரான்ஸ் ஜேர்மனிக்குத் தன்னிடமுள்ள மேலதிக எரிவாயுவை வினையோகிக்கும். மாற்றீடாக பிரான்சில் குளிர்காலத்தில் மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டால் ஜேர்மனி பிரான்சுக்கு முன்வினையோகம் செய்யும். பிரான்சில் பிரதான அணுமின் நிலையங்கள் பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளன.

இவர் குடுக்க அவர் வாங்க....அவர் குடுக்க இவர் வாங்கிறதெல்லாம் வழமையான நடவடிக்கைகள் தான்.

ஆனால் இதெல்லாம் தேவையில்லாத ஆணி விளையாட்டுக்கள்.அது மட்டுமில்லாமல் விலைகள் உச்சத்தை தொட்டு விட்டது. மக்கள் தேவையில்லாத விலையேற்றங்களை தாக்கு பிடிக்க முடியாமல் கஷ்டப்படுகின்றார்கள்.கஷ்டப்படப்போகின்றார்கள்.

கடந்த 20 வருடங்களில் தேவையில்லாத சண்டைகளால் மட்டுமே இந்த விலையேற்றங்கள்.பல முறை பட்டும்  வர்ம/வக்கிர சண்டைகள் தரும் பரிசுகள். இதனால் பாதிப்பப்படுவது அப்பாவி பொது மக்கள் மட்டுமே.

ரஷ்யாவின் பொருட்கள் வேண்டாம் என சொல்பவர்கள் தங்கள் நாட்டு பொருள் விலையேற்றத்தினை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றார்கள். சரி  மாற்றுவழி கண்டு பிடித்தாலும் ஏறிய விலையேற்றத்தினை குறைப்பார்களா என்று பார்த்தால் அதுவுமில்லை.

எங்கு பார்த்தாலும் மின் உற்பத்தி காற்றாடிகள். எங்கு பார்த்தாலும் சூரிய ஓளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் சொலார் தகடுகள்......

ஆனால் மின்சாரத்தின் விலையோ நாளுக்கு நாள் எகிறிக்கொண்டிருக்கின்றது.

இதுதான் மேற்குலகின் சுரண்டல் பொருளாதார கொள்கை.

 ஜேர்மனியில் இந்த வருட இறுதிக்குள் அரசியல்/ பொருளியல் அனுபவம் இல்லாத போலி அரசியல்வாதிகள் தூக்கி எறியப்படுவர் என எதிர்பார்க்கலாம்.

இன்றிருக்கும் அனுபவமில்லாத அரசியல்வாதிகளினால்  இனவாத கட்சிகளுக்கு மக்கள் முதன்மை அளிக்க தலைப்பட்டு விட்டனர். இன்னொரு கிட்லர் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியில் ஒரு  தரமான ரொய்லட் பேப்பர் தொழிற்சாலை எரிவாயு விலையேற்றத்தினால் மூடப்படுகின்றது. இது போல் எரிவாயுவை முக்கியமாக கொண்டு இயங்கும் தொழிற்சாலைகள் மூடும் அபாயம் உள்ளது.

Zentrale des Hygienepapier-Herstellers Hakle

Das Hakle-Klopapier im Laufe der Zeit

https://www.bild.de/news/inland/news-inland/nicht-schon-wieder-wie-die-gaskrise-unser-klopapier-bedroht-81257586.bild.html

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

போங்க அண்ணா மூடினால் மூடட்டும்.  நாளைக்கு இன்னும் ஒருவர் வந்து திறக்கிறார்  மூடுவதற்கு பல காரணம் உண்டு அதில் ஒன்று எரிவாயு விலையேற்றம்    சம்பள உயர்வு காரணம் இல்லையா? சம்பள உயர்வு வேண்டும் என்றால்வி,லை உயர்வும். இருக்க தான் செய்யும்    இங்கே வேலை செய்ய கூடாது என்ற சட்டம் இருந்தது  அந்த நேரத்தில் நான் உள்பட எனது நண்பர்கள் பலர்  வேலை செய்ய அனுமதித்ததால்  நாங்கள் உழைத்து சாப்பாடுவோம். என்று சொன்னார்கள்   அதே நாக்கு இன்று வேலை அனுமதியுடன்...அடிப்படை சம்பள சட்டம் போட்டு மணித்தியாலத்துக்கு பத்து பன்னிரெண்டு யூரோ சம்பள வழங்கும் போது  சட்டம் கதைக்கிறார்கள்.  இதே நபர்கள்  ஒரு மார்க் சோசல் வேலையும் களவாக ஐந்து மார்க்கு வேலையும் செய்தவர்கள்....போர் இல்லாத நேரத்திலும்  இரண்டு மூலம் வீதம் விலையேற்றம் இருந்தது      கொரோனா வந்ததும் விலையேற்றம் அதிகம்    உக்ரேன் ரஷ்யா போரிலும் விலையேற்றம் தான்      இதற்காக ரஷ்யாவிடம்  மண்டியிட முடியுமா?.  நீங்கள் ஜேர்மன் பிரதமர் எனில்    புட்டினிடம்   மண்டியிடுவீர்கள?    ஜேர்மனி எப்படி ஆளப்படவேண்டும?.   என்பதை சொல்லுங்கள் பார்ப்போம்...ஜேர்மனிக்கு ஒரு தன்மானம் உண்டு.....விலையேற்றம் ஆகாயத்தை தொட்டாலும்   தன்மானம்  விட்டு கொடுக்க முடியாது...😄

Just now, Kandiah57 said:

மூன்று 

எரிவாயு பெற்றோலிய விலைகள் கடந்த 2 நாட்களாக சர்வதேச சந்தையில் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. 3 மாதங்களுக்கு முன் 100 டொலர்களாக இருந்த எண்ணை நேற்றைய வீழ்ச்சியுடன் 82 டொலர்களுக்குப் போகிறது. இன்னும் குறையும் என்கிறார்கள். எரிவாயுவுக்கும் இதே நிலைதான்.

இதற்கான காரணம் ஐரோப்பா தனது எரிவாயு தாங்கிகளை நிரப்பியுள்ளது மற்றும் ரஷ்யாவின் பிரதான எரிபொருள் சந்தை இந்தியா சீனாவுக்கு மாறியுள்ளமை போன்றன முக்கிய காரணங்களாகக் குறிப்பிடுகிறார்கள்.

இன்னும் 2 - 3 மாதங்களில் ஐரோப்பிய எரிபொருள் கையிருப்பு குறையும்போது விலைகள் மறுபடி ஏற ஆரம்பிக்கும். ரஷ்யாவின் பிரதான எரிபொருள் இலாபச் சந்தை ஐரோப்பாதான்.

கந்தையா சொன்னதுபோல் ஐரோப்பாவில் தொழிற்சாலைகள் மூடப்படுவதும் வேறொன்று திறக்கப்படுவதும் சாதாரணம். பொதுவாக தொழில்நுட்பச் சந்தை வலுவாகவே உள்ளது.

ஆனால் ரஷ்யாவின் நிலை தலைகீழ். போரினால் ஏற்பட்ட எரிபொருள் விலை ஏற்றத்தினால் வழக்கத்துக்கு மாறான பெரும் இலாபத்தை ஈட்டி வந்தது. இக் காலகட்டத்தில் எரிபொருள் மட்டுமே ரஷ்யாவின் பொருளாதாரத்தை உயர்த்தியது.  ஏனைய தொழில்நுட்ப வருமானம் பொருளாதார தடையாலும் ஐரோப்பிய தொழில்நுட்பத்தைச் சார்ந்து இருப்பதாலும் பெறுமளவு வீழ்ச்சியைக் கண்டுள்ளது. உதாரணமாக வாகன உற்பத்தி ஏறத்தாள நிறுத்தப்பட்டுள்ளது. எயர்பஸ் போயிங் விமானங்களைப் பெருமளவில் கொண்டுள்ள போக்குவரத்து நிறுவனங்கள் உதிரிப்பாகங்கள் கிடைக்காததால் நல்ல நிலையில் உள்ள சில விமானங்களைப் பிரித்து அதன் உதிரிப்பாகங்களைப் பாவிக்கவேண்டிய நிலையில் உள்ளன. 

வெல்ல முடியாத யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய அவசியம் ஐரோப்பாவுக்கு மட்டுமல்ல ரஷ்யாவுக்கும் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Kandiah57 said:

போங்க அண்ணா மூடினால் மூடட்டும்.  நாளைக்கு இன்னும் ஒருவர் வந்து திறக்கிறார்  மூடுவதற்கு பல காரணம் உண்டு அதில் ஒன்று எரிவாயு விலையேற்றம்    சம்பள உயர்வு காரணம் இல்லையா? சம்பள உயர்வு வேண்டும் என்றால்வி,லை உயர்வும். இருக்க தான் செய்யும்    இங்கே வேலை செய்ய கூடாது என்ற சட்டம் இருந்தது  அந்த நேரத்தில் நான் உள்பட எனது நண்பர்கள் பலர்  வேலை செய்ய அனுமதித்ததால்  நாங்கள் உழைத்து சாப்பாடுவோம். என்று சொன்னார்கள்   அதே நாக்கு இன்று வேலை அனுமதியுடன்...அடிப்படை சம்பள சட்டம் போட்டு மணித்தியாலத்துக்கு பத்து பன்னிரெண்டு யூரோ சம்பள வழங்கும் போது  சட்டம் கதைக்கிறார்கள்.  இதே நபர்கள்  ஒரு மார்க் சோசல் வேலையும் களவாக ஐந்து மார்க்கு வேலையும் செய்தவர்கள்....போர் இல்லாத நேரத்திலும்  இரண்டு மூலம் வீதம் விலையேற்றம் இருந்தது      கொரோனா வந்ததும் விலையேற்றம் அதிகம்    உக்ரேன் ரஷ்யா போரிலும் விலையேற்றம் தான்      இதற்காக ரஷ்யாவிடம்  மண்டியிட முடியுமா?.  நீங்கள் ஜேர்மன் பிரதமர் எனில்    புட்டினிடம்   மண்டியிடுவீர்கள?    ஜேர்மனி எப்படி ஆளப்படவேண்டும?.   என்பதை சொல்லுங்கள் பார்ப்போம்...ஜேர்மனிக்கு ஒரு தன்மானம் உண்டு.....விலையேற்றம் ஆகாயத்தை தொட்டாலும்   தன்மானம்  விட்டு கொடுக்க முடியாது...😄

நீங்கள் சொன்ன பொருட்கள் விலையேற்றம்,பிரச்சனைகள் அனைத்திற்கும்  அன்று   தொடக்கம் தொடரும் எரிபொருள் விலையேற்றம் மட்டுமே காரணம்.

உங்களைப்போன்றவர்கள் எண்ணைக்கிணறுகள்,எரிவாயு அகழ்வுகள் வற்றிவிட்டது என சொல்லாத வரைக்கும் சந்தோசம் 🤪

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் சொன்ன பொருட்கள் விலையேற்றம்,பிரச்சனைகள் அனைத்திற்கும்  அன்று   தொடக்கம் தொடரும் எரிபொருள் விலையேற்றம் மட்டுமே காரணம்.

உங்களைப்போன்றவர்கள் எண்ணைக்கிணறுகள்,எரிவாயு அகழ்வுகள் வற்றிவிட்டது என சொல்லாத வரைக்கும் சந்தோசம் 🤪

இன்றைய விலையேற்றங்களுக்கு  எரிபொருளோ ஏன் உக்ரேன்  யுத்தமோ கூட  காரணமில்லை

அதை  வைத்து வியாபாரிகளும் அரசியல்வாதிகளும்

சர்வதேச  போட்டியாளர்களும் 

தத்தமது அடுத்த கட்டங்களுக்கான  விலையை இடத்தை  நிர்ணயிக்கமுயல்கிறார்கள்??

இதில் அமெரிக்கா மட்டுமல்ல ரசியா  ஏன் சீனாவுக்கு கூட பெரும்  பங்கிருக்கு?

இதற்குள் சாதாரண  மக்களாகிய  எமது  குரலெல்லாம்......????

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

உழைப்பிற்கேற்ற ஊதியம் மட்டும் இருந்தால் போதாது. பொருளுக்கேற்ற விலையும் மதிப்பும் இருக்க வேண்டும். 50 சதம் விற்க வேண்டிய பொருள் 2 ரூபா விற்கின்றதே?பணம் இருக்கின்றது என்பதற்காக அறா விலைக்கு பொருட்கள் வாங்க முடியுமா என்ன? இதெல்லாம் முதலாளிகள் நிறைந்த முதலாளித்துவ மேற்குலகால் வந்த வினைகள்.

இவ்வளவு விலை ஏற்றத்திற்கு இயற்கை  மனித இனத்திற்கு எந்தக்குறையும் வைக்கவில்லை கண்டியளோ😂

இஞ்ச 300 ரூபா கொடுத்து பாண் வாங்குறோம் ஓவர் ஓவர்👈👈

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

போங்க அண்ணா மூடினால் மூடட்டும்.  நாளைக்கு இன்னும் ஒருவர் வந்து திறக்கிறார்  

Quote

கந்தையா சொன்னதுபோல் ஐரோப்பாவில் தொழிற்சாலைகள் மூடப்படுவதும் வேறொன்று திறக்கப்படுவதும் சாதாரணம். பொதுவாக தொழில்நுட்பச் சந்தை வலுவாகவே உள்ளது.

இதெல்லாம் முதலாளித்துவ தர்க்க வாதங்கள்.

மேற்கில் மூடப்பட்ட/மூடப்பட்டுக்கொண்டிருக்கும்/மூடப்படவிருக்கும் தொழிற்சாலைகளுக்கு பதிலாக சீனாவில் முதலிடப்பட்டு விட்டன.வியாபார நோக்கங்களுடன் மலிந்த மனித வலுவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.தற்போது மேற்குலகு உணர தலைப்பட்டாலும்  சீனாவில் இட்ட பல முதலீடுகளிலிருந்து மீள முடியாமலேயே இருக்கின்றார்கள்.

தற்போது  ஜேர்மனிக்கு ஒரு பகுதி பாணும் சீனாவிலிருந்தே வருகின்றது.

57 minutes ago, விசுகு said:

இன்றைய விலையேற்றங்களுக்கு  எரிபொருளோ ஏன் உக்ரேன்  யுத்தமோ கூட  காரணமில்லை

விசுகர்! உண்மைக்காரணம் எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களால்   வெளியே  சொல்லப்படுவது எரிபொருள் விலை உயர்வு மட்டுமே.

காரணகர்த்தாக்கள்....
முதலில் ஈரான் பயணக்கைதிகள் பிரச்சனையால் எரிபொருள் விலை உயர்வு
பின்னர் சதாம் ஹுசைன்
இப்போது புட்டின்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இஞ்ச 300 ரூபா கொடுத்து பாண் வாங்குறோம் ஓவர் ஓவர்👈👈

கணக்கு பார்த்தால் இஞ்ச விலை கூட ராசன்....40- 50 கிராம் சின்ன பாணின் விலை 50  தொடக்கம் 70 சென்ற் வரைக்கும் போகின்றது.

Vestakorn Handwerksbrötchen, 9x Schrippen - frische Brötchen –  Weizenbrötchen mit röscher Kruste, 9 Stück, selbst aufbacken in 6 Minuten :  Amazon.de: Lebensmittel & Getränke

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

கொரோனா வந்ததும் விலையேற்றம் அதிகம்    உக்ரேன் ரஷ்யா போரிலும் விலையேற்றம் தான்      இதற்காக ரஷ்யாவிடம்  மண்டியிட முடியுமா?.

உண்மை தான்.

கொரோனா காலத்திலேயே வளர்ச்சி அடைந்த நாடுகளில் பல நிறுவனங்கள் மூடபட்டன.
உக்ரைனை தாக்கும் எண்ணம் இல்லை எல்லையில் பயிற்சி எடுக்கிறோம் என்று சொல்லி கொண்டிருந்த ரஷ்யா   அதையே உக்ரைனை ஆக்கிரமிப்பதற்க்காக போர் செய்வதை கைவிட்டு தனது எல்லைக்கு திரும்பி செல்லட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

விசுகர்! உண்மைக்காரணம் எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களால்   வெளியே  சொல்லப்படுவது எரிபொருள் விலை உயர்வு மட்டுமே.

காரணகர்த்தாக்கள்....
முதலில் ஈரான் பயணக்கைதிகள் பிரச்சனையால் எரிபொருள் விலை உயர்வு
பின்னர் சதாம் ஹுசைன்
இப்போது புட்டின்

காரணகர்த்தாக்கள்....
முதலில் ஈரான் பயணக்கைதிகள் பிரச்சனையால் எரிபொருள் விலை உயர்வு
பின்னர் சதாம் ஹுசைன்
இப்போது புட்டின்...

முட்டை தான் முதலில்

இல்லை  கோழி  தான்...?

ஆனால் நீங்கள்  சொல்வது  அனைத்தும்

எரிபொருளை  களவெடுத்து தமது மக்களுக்கு  மலிவாக கொடுப்பதற்காக  நடந்தவை  என்று தான் ஈரான்  ஈராக்  மக்களும் அவர்களைச்சார்ந்தவர்களும்  சொல்கிறார்கள்

அப்படியென்றால்  ஏதோ உதைக்குதே??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.