Jump to content

ஐ நா மனித உரிமை சபையும் ஈழத் தமிழர்களும்-பா.உதயன் 

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐ நா மனித உரிமை சபையும் ஈழத் தமிழர்களும்-பா.உதயன் 

மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் அலுவலக அறிக்கையை சமர்ப்பித்த மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர், இலங்கையின் நிலைமை பலவீனமாக இருப்பதாகவும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் கூறினார்.

 அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் அரச அடக்கு முறைக்கும் உள்ளாக்கப்பட்டு வரும் அதே வேளை தமிழர் பிரதேசங்களில் இராணுவமயமாக்கல் அதே போல் காணாமல் ஆக்கபட்டோருக்கான எந்த நீதியையும் வழங்கவில்லை என தொடர்ந்தும் பயங்கரவாத சட்டத்தின் மூலம் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்றும் இம் முறை அரசியல் குற்றச்சாட்டு மட்டும் இன்றி இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கான காரணத்தையும் சுட்டிக் காட்டியது. இன்னும் பல குற்றச்சாடுக்களை மனித உரிமை சபையால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. சட்டத்தின் ஆட்சி, பாகுபாடு காட்டாமை மற்றும் மனித உரிமைக்கான மரியாதை (rule of law, non-discrimination and respect for human rights) என்னும் முக்கியமான விடியங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன. ஆனால் தமிழ் மக்களின் இனப் படுகொலை சார்பாக எந்தக் கருத்தும் இந்த அறிக்கையில் சொல்லப்படவில்லை. 

எது எப்படி இருப்பினும் எல்லா நாடுகளுமே தம் சுய நலன்( Self-interest ) சார்ந்தே காய்களை நகர்த்துவார்கள். தொடர்ந்தும் ஐ நா அறிக்கை விடுவதும் தீர்மானக்களை வருடா வருடம் நிறைவேற்றியதாகவே இருக்கின்றது. எந்த வித பயனும் எட்டியதாக தெரியாவில்லை. இந்த தீர்மானங்களை நிறைவேற்றிய நாடுகளே மீண்டும் இலங்கையுடன் சில ஒப்பந்தங்களுக்கு போகின்றன இது இவர்களது இரட்டை நிலைப்பாடை( double standard morality) பிரதிபலிக்கின்றன.

பல ஐரோப்பியா நாடுகள் இலங்கையின் மனித உரிமை மீறலை கண்டித்ததோடு மற்றும் நல்லிணக்கம் (Promoting Reconciliation and Accountability ) பொறுப்பு கூறல் நடை முறை படுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தின. மனித உரிமை ஜனநாயகம் மதிப்பளிக்கப் பட்டு இலங்கையில் ஒரு மாற்றம் வேண்டி மனித உரிமை அமைப்பு வேண்டி நின்றது. இந்தியா வழமை போலவே 13 க்கு தூசு தட்டி மீண்டும் கொண்டு வந்து அதை முழுமையாக நடைமுறைப் படுத்த வேண்டியது. அருகில் இலங்கை பிரதிநிதிகள் இருந்து மெல்லமாக தமக்குள் பேசிக்கொண்டன அது இந்தியாவின் வழமையான ஒரு பாடல் என்று. என்னவாக இருந்தாலும் இந்தியாவின் சில அழுத்தங்கள் தமிழ் மக்களின் இன்றைய நிலையில் முக்கியமானதென கருத இடமுண்டு.

எது எப்படியோ இம் முறை மனித உரிமைப் பேரவை சற்று இறுக்கமான அறிக்கையை சமர்ப்பித்தது. இது எவ்வளவு தூரம் எதிர் காலத்தில் நன்மை அளிக்கும் அல்லது நடைமுறைப் படுத்தப்படும் என்பது கேள்விக் குறியே. கடந்த பல ஆண்டுகளாக ஐ நா மனித உரிமைப் பேரவையால் கொண்டு வரப்பட்ட தீர்மானக்கள் யாவும் இலங்கை அரசால் கிடப்பில் போடப் பட்டு எந்த வித காத்திரமான நடைமுறைப்படுதலோ அன்றி எந்த நீதியும் தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை.

இது இவ்வாறு இருக்க இலங்கையின் சார்பில் பேசிய இலங்கை வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி இலங்கையின் இறைமையை (Sovereignty ) மனித உரிமை அமைப்பு மீறுவதாக கூறி இலங்கை இதை நிராகரிப்பதாக கூறினார். எந்த முஸ்லீம் மக்கள் தொடர்ந்தும் ஒடுக்கப்படுகிறார்களோ அந்த இனத்தில் இருந்து வந்த முஸ்லீம் சமூகத்தை சேர்த்த இலங்கை வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி அவர்கள் தம் இனத்துக்கு ஏற்படும் துன்பத்தை இல்லை என்று மறைப்பதும் பொய் கூறுவதும் இலங்கையில் வாழும் சிறு பான்மை சமூகத்து செய்யும் பெரும் மன்னிக்க முடியாத துரோகமாகும். 

காலம் காலமாக இலங்கை அரசு மிகவும் தந்திரமாக காய்களை நகர்த்தி சிறு பான்மை தேசிய  இனங்களுக்கிடையே சிலருக்கு மிக முக்கிய பதவிகளை வழங்கி அவர்களைக் கொண்டே பெரும் பொய்களைக் கூற வைத்து இந்த தேசிய இனங்களின் போராட்டத்தை அடக்கும் சதி அன்றும் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. பதவிக்காகாவும் பணத்துக்ககாக்கவும் தம் சொந்த இனத்துக்கு தொடர்ந்து செய்யும் துரோகிகள் தமிழ் பேசும் சமுதாயத்தில் பலர் இருப்பது பெரும் அவலம். சொந்த இனத்தை விற்கும் ஓர் பாதகச் செயல். தம் அடிப்படை உரிமையையும் விடுதலையையும் வேண்டி நிற்கும் மக்கள் அனைவரும் இதை வன்மையாக கண்டிக்க வேண்டும்.

”பாதகம் செய்வோரை கண்டால் பயங்கொள்ளலாகாது பாப்பா- மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!”

பா-உதயன் ✍️
 
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/9/2022 at 20:39, ஈழப்பிரியன் said:

உதயன் நல்லதொரு கட்டுரை.நன்றி.

கருத்துக்கு நன்றிகள் ஈழப்பிரியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/9/2022 at 20:19, uthayakumar said:

அரசியல் ஆய்வுக் கட்டுரைக்கு, நன்றி உதயன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதன்முறையாக தமிழகத்தில் 10 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக! தமிழ்நாட்டில் முதன்முறையாக 10 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில், பாஜக 10 சதவீத வாக்குகளை முதல் முறையாக பெற்றுள்ளது. அதன்படி, இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 10.21 சதவீத வாக்குகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1385958
    • 210 நபர்களின் நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கம்-அரசாங்கம் நடவடிக்கை! பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் கட்டளைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் உள்ளிட்ட 15 தீவிரவாத அமைப்புக்களுக்கும் அவற்றடன் தொடர்புடைய 210 பேரினது நிதி, ஏனைய நிதிச் சொத்துக்களை முடக்கி குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்குவிதிகளின் கீழ், இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், விடுதலைப் புலிகள் அமைப்பு (LTTE), தமிழர் புனர்வாழ்வு அமைப்பு (Tamils Rehabilitation Organisation – TRO), உலக தமிழர் இயக்கம் (WTM), நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE), உலக தமிழர் நிவாரண நிதியம் (WTRF), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) ஆகிய புலம்பெயர் அமைப்புக்கள் முடக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியின் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், HQ Group, தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) , ஜமாதே மிலாதே இப்ராஹீம் (JMI), விலயாத் அஸ் செய்லானி (WAS), கனேடியன் தமிழ் தேசிய பேரவை (NCCT), தமிழ் இளைஞர் அமைப்பு (TYO), டருள் அதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் (SLISM), Save the Pearls போன்ற அமைப்புகளும் முடக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1385906
    • இன்று இப்படித்தான் மக்கள் பலர் சென்று கொண்டிருக்கிறார்கள்........பணத்தை மையப்புள்ளியாக வைத்து சுழலும் இவ்வுலகில் மக்கள் பெரும்பாலும் இப்படித்தான் வாழ்வார்கள்......!  😴
    • கேரளா திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபி( பா ஜ க ) வெற்றி 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.