-
Tell a friend
-
Topics
-
0
ஏராளன் · தொடங்கப்பட்டது
-
Posts
-
By ஏராளன் · பதியப்பட்டது
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை (Arjuna Mahendran) நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நாம் சட்டமா அதிபரிடம் கலந்துரையாடினோம். சட்ட இடையூறுகள் இந்தநிலையில் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதில் சில சட்ட இடையூறுகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். நாம் மீண்டும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இது தொடர்பில் எழுத தீர்மானித்துள்ளோம். இந்தநிலையில் நாடுகடத்தல் சட்டம் இதற்கு தடையாக இருக்காது என்ற தர்க்கத்தை இந்த தரப்பிலிருந்து அனுப்பியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எனவே, நாம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முயல்கின்றோம் அத்தோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்து. அது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்றுள்ளன, மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை மேற்கொள்வதாக இருந்தால் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு தடவை அனுமதியை பெற்றுகொள்ள வேண்டும். இதனடிப்படையில், அடுத்த வழக்கு விசாரணை நடைபெறும் தினத்தில் அதற்கு அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும்” என அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/action-to-bring-arjuna-mahendran-to-the-country-1731023300#google_vignette -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
3000க்கும் மேற்பட்ட வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் இரத்து! இந்த வருடத்தில் 3000 க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளின் அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது உரிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதும், வாகனங்கள் சரியான தரத்தில் இல்லாததுமே பிரதான காரணம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் மொஹமட் மஹிஷ் தெரிவித்துள்ளார். எனவே, வாகனத்தை ஓட்டுவதற்கு முன்னர் அதன் தரத்தை பரிசோதிப்பது அவசியமானது. நாட்டின் வீதி அமைப்பில் காணப்படும் குறைபாடுகளும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2024/1407734 -
By ஏராளன் · பதியப்பட்டது
டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) தைரியம் தன்னை ஈர்த்துள்ளது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார். ரஷ்யாவில்(Russia) நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “டொனால்டு ட்ரம்பை தாமாகவே முன்வந்து தொடர்பு கொள்வதில் எந்த அவமானமும் இருப்பதாக தாம் கருதவில்லை என குறிப்பிட்டுள்ள விளாடிமிர் புடின், அதை நான் செய்ய விரும்பவில்லை. டொனால்ட் ட்ரம்பின் தைரியம் எவரேனும் ஒருவர் மீண்டும் தம்மை தொடர்பு கொண்டால் அதை தாம் வரவேற்பதாகவும், விவாதிக்க தயார். அது போலவே, டொனால்டு ட்ரம்புடனும் தாம் விவாதிக்க தயாராக இருக்கின்றேன். ஜூலை மாதம் ட்ரம்ப் மீதான தாக்குதலின் போது அவரின் செயல்பாடு தம்மை ஈர்த்தது. அவர் ஒரு தைரியமான நபராக மாறியுள்ளார். மட்டுமின்றி, அந்த தருணத்திலும் பொதுவான கொள்கைகளுக்காக போராட வேண்டும் என ட்ரம்ப் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது உண்மையில் வியக்க வைக்கும் செயல். புடினின் வாழ்த்து ஒரு நபர் தனது உண்மையான சுயத்தை அசாதாரணமான சூழ்நிலைகளில் வெளிப்படுத்துகிறார், அங்கு அவர் ஒரு மனிதனைப் போல தைரியமான முறையில் தன்னை நிரூபித்தார். ட்ரம்பின் முதல் ஆட்சி காலத்தில் அவரை கேலி செய்தவர்கள் பலர். ஒரு முடிவெடுக்க முடியாமல் அவரை தடுமாற வைத்தார்கள்.தற்போது என்ன நடக்கும் என்பது தமக்கு தெரியவில்லை ” என்றார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனல்ட் ட்ரம்ப் வெற்றிப்பெற்றுள்ள நிலையில் அவருக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர். ரஸ்ய ஜனாதிபதி புடினின் வாழ்த்து மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நேர்காணலில் வாழ்த்து தெரிவித்துள்ளார். எனினும் உத்தியோகபூர்வமாக அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/putin-praises-trump-says-russia-ready-for-dialogue-1731016171#google_vignette
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts