Jump to content

அரோகரா!!ஆலேலோயா!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சிவாவும்,கண்ணணும் பள்ளி தோழர்கள் சிறுவயதில் இருந்து ஒன்றாக படித்தார்கள் பெற்றோரும் குடும்ப நண்பர்கள் இதனால் அவர்களின் நட்பிலும் பிணைப்பி அதிகமாக இருந்தது விளையாட்டு,டியூசன் போன்றவற்றிற்கு போகும் போது ஒன்றாக செல்வார்கள்.

க.போ.த உயர்தரம் இருவரும் கணிதபிரிவில் படிப்பதிற்காக முடிவு செய்தனர் வழமையான அந்த வயதில் இளைஞர்களிற்கு ஏற்படும் காதல்,கள்ள தம் ,பனைமரத்து உற்சாக பானம் போன்ற பழக்கங்கள் ஏனைய நண்பர்களுடன் சேர்ந்து பழகி கொண்டார்கள்,ஆனால் இருவரும் படிப்பில் கவனம் செலுத்தினார்கள்,க.போ.த பரிட்சைகள் முடிந்தவுடன் ஏதோ பயங்கர சாதனை ஒன்றை முடித்த நினைப்பில் அதிகமாக ஊரை சுற்றினாம் கண்ணண்.சிவா தனது படிப்பு முடிந்தவுடன் ஆங்கில வகுப்புகளும்,கோயில்களிற்கு செல்வதும் விரதங்கள் பிடிப்பதாகவும் இருந்தான்.கண்ணணை கண்டால் சிறிது அட்வைஸ் பண்ணவும் செய்தான் கோயிலிற்கு வரும் படியும் வறுபுறுத்தினான்,சிவா கோயிலிற்கு சென்று அங்கு தேவாரம் படித்து முதியோரிடம் ஆத்மீக கதைகளும் கதைத்து வீடு வருவான்.சிவாவின் குரலையும் ஆத்மீக பற்றையும் முதியோர்கள் பாராட்டினால் அவனுக்கு அது ஒரு பெரிய மகிழ்ச்சியாக இருக்கும் அதை கண்ணணிடமும் தன் சக நண்பர்களிடமும் சொல்லி பெருமைபடுவான்.

ஒரு முறை மாக்கான் கடையில் கொத்து ரொட்டி வாங்கி சாப்பிடதாக கண்ணண் சொல்ல இன்று வெள்ளி கிழமை ஏன் மாட்டு இறைச்சி போட்ட கொத்துரோட்டியை சாப்பிடாய் என்று திட்டினான்,பரிட்சை முடிவுகளும் வந்தது சிவாவிற்கு பல்கலைகழகம் கிடைக்கும் என்று உறுதியான முடிவு கிடைத்தது கண்ணணுக்கோ தந்தி கம்மி முடிவு தான்( 4 வெயில்)கண்ணணுக்கு பெற்றோர்களிடம் திட்டு விழுந்தது உன்னோடு படித்தவன் பல்கலைகழகம் செல்ல போகிறான் நீ சும்மா ஊற் சுற்றினது தான் மிச்சம் என்று.கண்ணணுக்கு தொடர்ந்து ஊரில் இருக்க விருப்பமில்லாம வெளிநாடு செல்ல ஆயத்தங்கள் செய்து வெளிநாடும் புறபட்ட்டுவிட்டான்.

நீண்ட நாட்களின் பின் தொலைபேசி அழைப்பு வந்தது நான் சிவாஸ் பேசுகிறேன் என்று ஆங்கிலத்தில் உரையாடினான்,அவனது பேச்சில் ஒரு தமிழ் வார்த்தை கூட இடம்பெறவில்லை ஒரு மதபோதகர் போல் உரையாடினான். தான் கனடாவில் உறவினர் வீட்டில் வந்து நிற்பதாகவும் வந்து தன்னை சந்திக்கும்படியும் கூறி இருந்தான்.

கண்ணணும் மகிழ்ச்சியுடன் உற்சாக பான போத்தல் இரண்டை காரிற்குள் போட்டு கொண்டு நண்பனை சந்திக்க சென்றான்.கண்ணணை கண்ட சிவாவும் கட்டி அணைத்து பரஸ்பரம் சுகம் விசாரித்தனர்.சிவாவின் உறவினர்கள் சிவாவை ஜேசு ஜெபத்தை தொடங்குவோமா என்று அழைத்தது கண்ணணை திடுகிட வைத்தது.அப்பொது தான் சிவா சொன்னா தான் கிறிஸ்தவானக மாறிவிட்டான் என்றும் உன்னையும் இன்று ஜெபத்தில் பங்குபற்ற தான் அழைத்தனான் என்று கூறியவன் கண்ணணிண் பதிலையும் எதிர்பார்க்காமல் அங்கிருந்த கூட்டத்துடன் சேர்ந்து "ஆலேலோயா" என்று ஜெபிக்க தொடங்கிவிட்டான்.

சிவாவுடன் சேர்ந்து பழைய நினைவுகளை மீட்கலாம் என்று உற்சாக பானத்துடன் உற்சாகமாக சென்றவனுக்கு கிடைத்ததோ ஏமாற்றம்.மனிதனி மன உலகம் இவ்வளவு மலிவானதா மாற்றம் அடைய கூடியதா நினைத்து கொண்டு வீடு வந்து தனிமையில் உற்சாகபானத்துடன் உற்சாகமாக இருக்க தொடங்கிவிட்டான் கண்ணண்.

Posted

ஸ்லாமு அலைக்கும் புத்தா... கதை அசத்தல் ஆனால் அதென்ன உற்சாக பானம் .... ஓ... எனேயி றிங்ஸ்சா..... :P

Posted

சிவாவும்,கண்ணணும்

ஆமாம் கண்ணண் எங்கையோ கேள்விபட்ட பெயரா இருக்கு அப்ப நிசமா உங்க கதையா மாமோய்...................நல்லா தான் ஊர் சுற்றி இருகிறீங்க..............நல்லா உற்சாக பானமும் குடித்து இருகிறீங்க..........அது சரி எப்ப கனடா பக்கம் போனனீங்க சொல்லவே இல்லை நல்லா இருக்கு கதை மாமோய்............ :P ;) :lol:

Posted

ஸ்லாமு அலைக்கும் புத்தா... கதை அசத்தல் ஆனால் அதென்ன உற்சாக பானம் .... ஓ... எனேயி றிங்ஸ்சா..... :P

அண்ணா எனேர்ஜி ரிங்க்ஸ் பேபிகளும் குடிக்கலாமா.......... :P

Posted

அண்ணா எனேர்ஜி ரிங்க்ஸ் பேபிகளும் குடிக்கலாமா.......... :P

இப்பவே எனேர்ஜி ரிங்ஸ் குடித்த மாதிரித்தான் இருக்கீங்க அதுவும் குடித்தால் பேபி சொல்லவா வேண்டும்..... :P

Posted

இப்பவே எனேர்ஜி ரிங்ஸ் குடித்த மாதிரித்தான் இருக்கீங்க அதுவும் குடித்தால் பேபி சொல்லவா வேண்டும்..... :P

இப்ப பேபி பால் தான் குடிகிறது ..................எனர்ஜி ரிங்சும் குடித்தா எப்படி இருக்கும் என்று யோசிகிறேன்........... :P :P

Posted

அட கோயிலில் தேவாரம் பாடிய சிவா கிறிஸ்தவனாக மாறிவிட்டானா? ஏன் மாறினான் என சொல்லவே இல்லையே.

வெளிநாட்டுக்கு போன கண்ணன் என்னவாக இருக்கிறார்? உற்சாக பானத்தோடு தானோ? ம்ம் மாமா கதை நல்லாக இருக்கு.

அண்ணாக்கும் தம்பிக்கும் இப்ப லொள்ளு கூடிட்டுது.

Posted

அட கோயிலில் தேவாரம் பாடிய சிவா கிறிஸ்தவனாக மாறிவிட்டானா? ஏன் மாறினான் என சொல்லவே இல்லையே.

வெளிநாட்டுக்கு போன கண்ணன் என்னவாக இருக்கிறார்? உற்சாக பானத்தோடு தானோ? ம்ம் மாமா கதை நல்லாக இருக்கு.

அண்ணாக்கும் தம்பிக்கும் இப்ப லொள்ளு கூடிட்டுது.

வெளிநாட்டு போன கண்ணண் இன்னும் உற்சாகபானத்தோட தான் இருகிறார் அக்கா....................லொள்ளா அப்படி என்றா என்னவென்றே தெரியாது எங்களுக்கு.......... :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உப்பிடித்தான் வெளினாடு வந்த ஒருவர் சில காலத்துக்கு பிறகு மதம் மாறினார். தான் தற்பொழுது நல்ல வேலையில் இருப்பதற்கு ஜேசு தான் உதவினார் என்று சொன்னார். அதற்கு அவருடைய நண்பர் கேட்டார், நீங்கள் வெளினாடு வந்தது, படித்து முடித்த காலத்தில் மதம் மாறவில்லை. அக்காலத்தில் உங்களுக்கு முருகனா உதவினார் என்று கேட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உப்பிடித்தான் வெளினாடு வந்த ஒருவர் சில காலத்துக்கு பிறகு மதம் மாறினார். தான் தற்பொழுது நல்ல வேலையில் இருப்பதற்கு ஜேசு தான் உதவினார் என்று சொன்னார். அதற்கு அவருடைய நண்பர் கேட்டார், நீங்கள் வெளினாடு வந்தது, படித்து முடித்த காலத்தில் மதம் மாறவில்லை. அக்காலத்தில் உங்களுக்கு முருகனா உதவினார் என்று கேட்டார்.

வேலைதான் பறவாய் இல்லை. எனக்கு ஒருவர் சொன்னார் தங்களுக்கு 10 வருசத்க்கு மேல பிள்ளையள் இருக்க இல்லையாம். மாறினாபிறகு ஜேசு தந்திட்டாராம் எண்டு. எந்த ஜேசு எண்டு கேட்க பார்திட்டு நமக்கேன் வம்பு எண்டு விட்டுட்டேன். :P

Posted

வேலைதான் பறவாய் இல்லை. எனக்கு ஒருவர் சொன்னார் தங்களுக்கு 10 வருசத்க்கு மேல பிள்ளையள் இருக்க இல்லையாம். மாறினாபிறகு ஜேசு தந்திட்டாராம் எண்டு. எந்த ஜேசு எண்டு கேட்க பார்திட்டு நமக்கேன் வம்பு எண்டு விட்டுட்டேன். :P

உண்மையா சபேசன் மாமா ஜேசு பிள்ளையும் கொடுகிறாரா நான் நினைத்தே டாக்டர் தான் பிள்ளை கொடுப்பார் என்று...............நான் பேபி தானே.............. :P

Posted

உண்மையா சபேசன் மாமா ஜேசு பிள்ளையும் கொடுகிறாரா நான் நினைத்தே டாக்டர் தான் பிள்ளை கொடுப்பார் என்று...............நான் பேபி தானே.............. :P

ஜேசு என்ன பிள்ளை கொடுக்கிறது?

உலக நடப்புக்குள் எத்தனை சாமிமார் என்ன எல்லாமோ கொடுக்கிறாங்களாம்? உது தெரியாதோ?

லேட்டஸ்ட் ஆக நம்ம கெளரியண்னாக்கு ஒரு ஆசை சாமியாக போறாராம் எல்லோ. உது தெரியாமல் தம்பி :angry: :mellow:

Posted

ஜேசு என்ன பிள்ளை கொடுக்கிறது?

உலக நடப்புக்குள் எத்தனை சாமிமார் என்ன எல்லாமோ கொடுக்கிறாங்களாம்? உது தெரியாதோ?

லேட்டஸ்ட் ஆக நம்ம கெளரியண்னாக்கு ஒரு ஆசை சாமியாக போறாராம் எல்லோ. உது தெரியாமல் தம்பி :angry: :mellow:

அப்ப ஜேசும்,சாமிமார்களும் தான் பிள்ளை கொடுக்கீனமோ நிலா அக்கா...........என்ன அண்ணா சாமியாரா மாற போறாராமோ அண்ணாவிற்கு என்ன நடந்தது............. :P :huh:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உந்த மதம் மாறினதுகள் செய்யுற சேட்டையள் ஒரே ஆக்கினையாய் கிடக்கப்பா ஊரிலை இருக்கேக்கை பால்ச்செம்பு,காவடி எண்டு கோயில் கோயிலாய் திரிஞ்சு போட்டு இப்ப இஞ்சை வந்து நிண்டு கொண்டு எங்கடை அவர் பிள்ளை தந்தார் இல்லாட்டி குடுத்தார் எண்டு தத்துவம் வேறை என்ரை சொந்தங்களுக்குள்ளை இரண்டு மூண்டு மதம் மாறீட்டுதுகள் அதுகள் செய்யுற திருக்கூத்துக்கள் சொல்லி வேலையில்லையப்பா அதுகளை நான் இப்ப வீட்டுக்கை வீடுறதேயில்லை (மன்னிக்கவும் அஃறிணையில் விளிப்படுத்தியதற்கு)

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.