Jump to content

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போலந்தில் விழுந்து இருவர் உயிரிழப்பு !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போலந்தில் விழுந்து இருவர் உயிரிழப்பு !

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போலந்தில் விழுந்து இருவர் உயிரிழப்பு !

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை ஒன்று உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள தமது கிராமத்தின் மீது விழுந்ததாக போலந்து வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கிழக்கு போலந்தில் உள்ள கிராமத்தில் ஏற்பட்ட இந்த குண்டுவெடிப்பில் இருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த தாக்குதல் தானியங்களை உலர்த்தும் தொழிற்சாலையை பாதித்ததாகவும் இந்த சம்பவம் குறித்து ரஷ்ய தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

எவ்வாறாயினும் ரஷ்ய ஏவுகணைகள் போலந்து பிரதேசத்தை தாக்கியதாக வெளியான குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

மேலும் இது நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில் வேண்டுமென்றே செய்யப்படும் ஆத்திரமூட்டல் நடவடிக்கை என்றும் சாடியுள்ளது.

நேட்டோ உறுப்பினரான போலந்தின் மீதான தாக்குதலால் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் மேலும் வலுக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேட்டோ உடன்படிக்கையின் 4 வது பிரிவின் கீழ் நட்பு நாடுகளுடன் கலந்தாலோசிப்பது குறித்து போலந்து பரிசீலித்து வருகின்றது.அதன் ஒரு அங்கமாக போலந்து ஜனாதிபதி அண்ட்ரேஜ் டுடாவும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் பேசியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஜேர்மனியும் கனடாவும் நிலைமையை அவதானித்து வருவதாகவும், ஐரோப்பிய ஒன்றியம், நெதர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் மேலதிக விவரங்களைத் தேடி வருவதாகவும் தெரிவித்தன.

https://athavannews.com/2022/1310753

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் படையினரின் ஏவுகணையே போலந்தில் விழுந்து வெடித்திருக்கலாம் - அமெரிக்க அதிகாரிகள்

By Rajeeban

16 Nov, 2022 | 11:57 AM
image

ரஸ்ய படையினர் மீது உக்ரைன் படையினர் ஏவிய ஏவுகணையே போலந்தில் விழுந்து வெடித்துள்ளது என  அமெரிக்க அதிகாரிகள் கருதுவதாக ஏபி செய்தி வெளியிட்டுள்ளது.

ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் இது தெரியவந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக போலந்து அதிகாரிகள் இந்த ஏவுகணை ரஸ்யாவில் தயாரிக்கப்பட்டது என தெரிவித்திருந்தனர்.

இதேவேளை ரஸ்யா இந்த ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டிருக்கும் என தான் கருதவில்லை என அமெரிக்க ஜனாதிபதி தெரிpவித்துள்ளார்.

FhoPFLFXoAEhLqg.jpg

இதேவேளை நேட்டோவின் உறுப்பு நாடான போலந்தில் வீழ்த்து வெடித்த ஏவுகணை குறித்து மதிப்பீடுகளை மேற்கொள்வது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என பிரான்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பலநாடுகளிடம் இதேபோன்ற ஆயுதங்கள் உள்ளன என தெரிவித்துள்ள பிரான்ஸ் இதன் காரணமாக அந்த ஏவுகணை எதுவென அடையாளம் காண்பதன் மூலம் தாக்குதலை மேற்கொண்டது யார் என்ற முடிவிற்கு வரமுடியாது என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

FhoPFLNWAAEIAcU.jpg

நாங்;கள் இந்த விடயம் குறித்து மிகவும் அவதானத்துடன் அணுகுவதே  அர்த்தபூர்வமானது என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை போலந்து எல்லைக்கு மேல் சென்றுகொண்டிருந்த நேட்டோ விமானமொன்று ஏவுகணையை அவதானித்தது என தகவல் வெளியாகியுள்ளது.

 

https://www.virakesari.lk/article/140189

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

உக்ரைன் படையினரின் ஏவுகணையே போலந்தில் விழுந்து வெடித்திருக்கலாம் - அமெரிக்க அதிகாரிகள்

Bild

சகுனி உக்ரேனின் திருவிளையாடல்கள் போகப்போகத்தெரியும்.😎😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலந்து ஏவுகணை விவகாரம்: அமெரிக்காவுக்கு ரஷ்யா பாராட்டு

By DIGITAL DESK 3

16 NOV, 2022 | 04:12 PM
image

போலந்தில் ஏவுகணை வீழ்ந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்கா கவனமாக பதிலளித்துள்ளதாக ரஷ்யா பாராட்டியுள்ளது.

யுக்ரைன் எல்லையிலுள்ள போலந்து கிராமமொன்றில் நேற்றிரவு  ஏவுகணை வீழ்ந்ததால் இருவர் கொல்லப்பட்டனர்.

இந்த ஏவுகணை ரஷ்யாவினால் ஏவப்பட்டிருக்க வாய்ப்பில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். 

ஆமெரிக்காவின் இந்த கருத்துக்கு ரஷ்யா பாராட்டு தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதியின் ஊடக செயலாளர் திமித்ரி பேஸ்கோவ்  இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,  அமெரிக்காவின் கவனமான பதில் தொடர்பில் இச்சந்தர்ப்பத்தில்  கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார். 

அதேவேளை போலந்து சம்பவத்தில் ரஷ்யாவுக்கு தொடர்பு எதுவும் இல்லை எனவும் அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/140247

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ஏராளன் said:

போலந்தில் ஏவுகணை வீழ்ந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்கா கவனமாக பதிலளித்துள்ளதாக ரஷ்யா பாராட்டியுள்ளது.

யுக்ரைன் எல்லையிலுள்ள போலந்து கிராமமொன்றில் நேற்றிரவு  ஏவுகணை வீழ்ந்ததால் இருவர் கொல்லப்பட்டனர்.

இந்த ஏவுகணை ரஷ்யாவினால் ஏவப்பட்டிருக்க வாய்ப்பில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். 

ஆமெரிக்காவின் இந்த கருத்துக்கு ரஷ்யா பாராட்டு தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதியின் ஊடக செயலாளர் திமித்ரி பேஸ்கோவ்  இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,  அமெரிக்காவின் கவனமான பதில் தொடர்பில் இச்சந்தர்ப்பத்தில்  கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார். 

அதேவேளை போலந்து சம்பவத்தில் ரஷ்யாவுக்கு தொடர்பு எதுவும் இல்லை எனவும் அவர் கூறினார்.

 

3 hours ago, குமாரசாமி said:

சகுனி உக்ரேனின் திருவிளையாடல்கள் போகப்போகத்தெரியும்.😎😂 

உக்ரேனின் நரித்தனம் இன்னும் வரும்.....:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

உக்ரேனின் நரித்தனம் இன்னும் வரும்.....:cool:

இந்த வருட ஆரம்பத்தில் போர் ஆரம்பித்த உடனேயே...
உக்ரைன்,  பல உயிருள்ளவர்களை படுக்க வைத்து,  துணிகளால் மூடி   
ரஷ்யாவினால் கொல்லப் பட்டவர்கள் என்று, மேற்கு  ஊடகங்களுக்கு  காட்டியது.
அதில் பல ஆட்களின் கால்கள் ஆடுவதையும், காற்றுக்கு துணி விலகுவதையும் கண்டோம்.

அப்பவே... உக்ரைன் பச்சை கள்ளர்கள் என்று புரிந்து விட்டது.
இவன் செய்கிற சுத்துமாத்து வேலைகளால்.. உலக யுத்தம் வந்தாலும் ஆச்சரியமில்லை. 

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

இந்த வருட ஆரம்பத்தில் போர் ஆரம்பித்த உடனேயே...
உக்ரைன்,  பல உயிருள்ளவர்களை படுக்க வைத்து,  துணிகளால் மூடி   
ரஷ்யாவினால் கொல்லப் பட்டவர்கள் என்று, மேற்கு  ஊடகங்களுக்கு  காட்டியது.
அதில் பல ஆட்களின் கால்கள் ஆடுவதையும், காற்றுக்கு துணி விலகுவதையும் கண்டோம்.

அப்பவே... உக்ரைன் பச்சை கள்ளர்கள் என்று புரிந்து விட்டது.
இவன் செய்கிற சுத்துமாத்து வேலைகளால்.. உலக யுத்தம் வந்தாலும் ஆச்சரியமில்லை. 

உக்ரேன்ரை கள்ளத்தனம் தெரியாமல் எங்கடை ஆக்கள்  கொஞ்சப்பேர் உக்ரேனுக்கு கொடி புடிச்சு கதை,கவிதை,கட்டுரை எழுதிக்கொண்டு திரியினம்.....😂  அதிலையும் புனித ஈழப்போராட்டத்தோட ஒப்பிட்டு......:(
என்ர சிவனே  எங்கை போய் முட்ட?????? ~*~ ..om.. namah Shivaye namoh namahe.. ~*~

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஏவுகணை உக்கிரைனில் உட்பதி செய்ததாக கூட இருக்கலாம், ரஷ்யா தொழில்நுட்ப வடிவமைப்பில். 

ஏனெனில், உக்கிரைன் ரஷ்யாவின் (சோவியத் யூனியன் காலத்தில்) ஆயுத உற்பத்தி தொழிற்சாலை. 

ரஷ்யா, உக்கிரனை  சோவியத் யூனியன் இறைமையில் இருந்து கைவிட்டதும், ரஷ்யா இடம் உக்கிரைன் ரஷ்யா இடம் மீளளிக்காத ஆயுதங்கள் (வேறு எந்த அரசியல், பொருளாதாரா, படைவளம், இயற்கை வளம், என் கலாசார குறியீடுகள், வளங்கள் போன்றவை அனைத்தும்)  அனைத்தும் உக்கிரைன் இன் இறைமைக்குள் வந்துவிட்டது.

இதுவே, உக்கிரைன் இன்னும் பல உயர்வலு ரஷ்ய ஆயுதங்களை வைத்து இருப்பதற்கு. 

மேற்கின் பிரச்சாரம் அணு ஆயுத யுத்தத்தில் கொண்டு வருவதற்கு தூபம் போடுகிறது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலந்து ஏவுகணை : வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல: நேட்டோ

By DIGITAL DESK 3

16 NOV, 2022 | 06:42 PM
image

போலந்தில் ஏவுகணை வீழ்ந்து வெடித்த சம்பவம் வேண்டுமென்றே நடத்தப்பட்டமைக்கான அறிகுறி இல்லை என நேட்டோ அமைப்பின் தலைவர் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பேர்க் இன்று கூறியுள்ளார்.

போலந்து கிராமமொன்றில் நேற்றிரவு ஏவுகணையொன்று வீழ்ந்து வெடித்ததால் இருவர் உயிரிழந்தனர்.

நேட்டோ அங்கத்துவ நாடான போலந்தில் இச்சம்பவம் இடம்பெற்றமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் நேட்டோ செயலாளர் நாயகம் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பேர்க் இது தொடர்பாக கூறுகையில், 'இச்சம்பவம் தொடர்பில் எமது விசாரணைகள் தொடர்கின்றன. அதன் பெறுபேறுக்கு நாம் காத்திருக்க வேண்டும்.  ஆனால்,  அது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலின் விளைவு என்பதற்கான அறிகுறிகள் இல்லை' என்றார். 

யுக்ரைனிய படையினர் ஏவிய விமான எதிர்ப்பு ஏவுகணையொன்றின் விளைவாக இச்சம்பவம் இருக்கலாம் எனவும் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பேர்க் கூறினார். 

எனினும் இது யுக்ரைனின் தவறு அல்ல எனவும், யுக்ரைன் மீது ரஷ்யா சட்டவிரோத யுத்தத்தை தொடர்வதால் ரஷ்யாவே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இதேபோன்ற கருத்தை போலந்து ஜனாதிபதி அண்ட்றே டூடாவும் தெரிவித்துள்ளார். இது ஒரு துரதிஷ்டமான விபத்து என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுக்ரைன் படையினர் ஏவிய சோவியத் காலத்து ஏவுகணையொன்றின் விளைவாக இது இருப்பதற்கான அதி வாய்ப்புள்ளது என ஜனாதிபதி அண்ட்றே டூடா கூறினார்.

முன்னதாக, மேற்படி ஏவுகணை ரஷ்யாவிலிருந்து ஏவப்பட்டிருக்க வாய்ப்பில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார். பைடனின் இக்கருத்தை ரஷ்யா பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/140276

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனதும்.. பிரிட்டன் உட்பட்ட முந்திரிக்கொட்டை ஐரோப்பிய நாடுகளினதும்.. பக்கச்சார்ப்பை பார்த்து சந்தி சிரிக்குது. உக்ரைன் தானே அடிச்சிட்டு பழியை ரஷ்சியா மீது போட்டு நேட்டோவை நேரடியாக மோதவிட்டு குளிர்காயலாம் என்று சிலுங்கி கள்ளக் கணக்குப் போட்டிருப்பார்.. எல்லாம் பிடிபட்டுப் போச்சு. நேட்டோ ஐரோப்பிய வாலுகள் தான் இதற்குப் பொறுப்பு. அமெரிக்கா புத்திசாலித்தனமாகத்  தப்பிவிட்டது. 

Edited by nedukkalapoovan
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

போலந்தில் ஏவுகணை வீழ்ந்து வெடித்த சம்பவம் வேண்டுமென்றே நடத்தப்பட்டமைக்கான அறிகுறி இல்லை என நேட்டோ அமைப்பின் தலைவர் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பேர்க் இன்று கூறியுள்ளார்.

மேற்குலக வியாபார கள்ளர்ரை புத்தியை பார்த்தியளே?????😂

அடிச்சது உக்ரேன் எண்டு தெரிஞ்சவுடனை  வேணுமெண்டு அடிக்கேல்லையாம் எண்டு நேட்டோ மழுப்ப வெளிக்கிட்டீனம். நேற்று இந்த நேரமெல்லாம் இந்தா புடி ரஷ்யாவின்ரை வேலையப்பார்....அஜாரகத்த பார்....வெட்டுறம் கொத்துறம்.....இந்தா துவக்கை ரஷ்யாவுக்கு நேராய் நீட்டுறம்....நாங்கள் ஆரெண்டு காட்டுறம் எண்ட பீலிங்கில இருந்திச்சினம். இப்ப தற்செயல் எண்டு அடக்கி வாசிக்கிறம்.🤣

மக்களே இப்பவும் சொல்லுறம் ரஷ்யாவின்ர நோக்கம் மற்ற நாட்டை பிடிக்கிறதோ ஆக்கிரமிக்கிறதோ இல்லை. எல்லாம் சுய பாதுகாப்பிற்கான நடவடிக்கை மட்டுமே.:cool:

போயும் போயும் கோமாளி செலென்ஸ்கிக்காக வக்காளத்து வாங்காதீர்கள்.🤪

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலந்தில் விழுந்த ஏவுகணை குறித்து உக்ரைன் விசாரணை

Saturday, November 19, 2022 - 3:28pm
w6.jpg?itok=OiB-CK1v

போலந்தைத் தாக்கிய ஏவுகணை குறித்து புலன்விசாரணை நடத்த உக்ரைனிய நிபுணர்கள் சென்றுள்ளனர்.

போலந்து, நேட்டோ கூட்டணி, மற்ற மேற்கத்திய நாடுகள் ஆகியவை அந்த ஏவுகணை தற்செயலாக உக்ரைனில் இருந்து பாய்ந்ததாக நம்புகின்றன.

ஆனால் உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி அதனை மறுக்கிறார். அது ரஷ்யாவில் இருந்து பாய்ச்சப்பட்டதாக அவர் கூறுகிறார். எனினும் நூறு வீதம் உறுதியாகச் சொல்ல முடியாது என்று அவர் தற்போது தமது நிலையைச் சற்று மாற்றிக்கொண்டார்.

 
 

போலந்து ஜனாதிபதி ஆன்றே டூடா தமது நாட்டின் புலனாய்வு முடிவை உக்ரைனிடம் காட்டலாம் ஆனால் சர்வதேச சட்டத்தின்படி நடக்க வேண்டும் என்று கூறினார். ஏவுகணை யாரிடம் இருந்து பாய்ந்தது என்பதில் அமெரிக்கா, போலந்து, உக்ரைன் என்று தரப்புக்கொரு கருத்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே உக்ரைனில் பத்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எரிசக்தி வசதி இல்லாமல் குளிர்காலத்தைச் சந்திக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.