Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

25 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட அமெரிக்காவில் பொறியியல் பட்டம்பெற்ற நபர் கைது!

By DIGITAL DESK 2

17 NOV, 2022 | 02:39 PM
image

 

அமெரிக்காவில் கணினி மென்பொருள் பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர் ஒருவர், பல திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் நாரஹேன்பிட்டி கித்துல்வத்தை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

25 கொள்ளைகள் மற்றும் 6 திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவர் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான உடைமைகளை  கொள்ளையடித்துள்ளமையும் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.

 

bus-accident-_2_.jpg

சந்தேகநபரிடமிருந்து சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான பல ஸ்மார்ட் கைத்தொலைபேசிகள் மற்றும் தங்க நகைகளும்  கைப்பற்றப்பட்டுள்ளன.

வீதிகளில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களை திருடி கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து கைப்பைகளை கொள்ளையடித்து வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

https://www.virakesari.lk/article/140336

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதென்ன கறுமமாய் கிடக்கு.
அமெரிக்காவில் எஞ்சினியர் பட்டம் பெற்று விட்டு, 
சில்லறை திருட்டு செய்து இருக்கிறான்.
கைத்தொலைபேசி, பெண்களின்  கைப்பைகளை கொள்ளையடிக்கவா இந்தப்  படிப்பு படித்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தமிழ் சிறி said:

இதென்ன கறுமமாய் கிடக்கு.
அமெரிக்காவில் எஞ்சினியர் பட்டம் பெற்று விட்டு, 
சில்லறை திருட்டு செய்து இருக்கிறான்.
கைத்தொலைபேசி, பெண்களின்  கைப்பைகளை கொள்ளையடிக்கவா இந்தப்  படிப்பு படித்தான். 

 

எதில் அதிக  வருமானம் கிடைக்க  சந்தர்ப்பமுண்டோ

அதனை தொழிலாக  கொள்ளல் என்ற  தற்போதைய தலைமுறையின்  வளர்சசி??  இது சிறி

இது  தொடரும்???😭

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, விசுகு said:

 

எதில் அதிக  வருமானம் கிடைக்க  சந்தர்ப்பமுண்டோ

அதனை தொழிலாக  கொள்ளல் என்ற  தற்போதைய தலைமுறையின்  வளர்சசி??  இது சிறி

இது  தொடரும்???😭

விசுகர்... இப்படி சில்லறையாக திருடி காசு சம்பாதித்தால் 
மரியாதை  போய் விடும் என்று அவன் நினைக்கவே  இல்லை.
படித்த படிப்பை கேவலப் படுத்தி விட்டான்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

இதென்ன கறுமமாய் கிடக்கு.
அமெரிக்காவில் எஞ்சினியர் பட்டம் பெற்று விட்டு, 
சில்லறை திருட்டு செய்து இருக்கிறான்.
கைத்தொலைபேசி, பெண்களின்  கைப்பைகளை கொள்ளையடிக்கவா இந்தப்  படிப்பு படித்தான். 

உந்தக் கள்ளன், அமெரிக்கன் பெரிய இன்னீயர் படிப்பெல்லாம் படிச்சனான் எண்டு பீலா விட்டிருக்கிறான்.

இதெல்லாம் செக் பணணிப் பார்கவே போகினம்..... படிச்சகள்ளன் எண்டு அடி விழாமல் இருக்கும் எண்ட ஜடியா போல...

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

படிப்புக்கும் பழக்கவழக்கத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பதை நிறுவும் இன்னொரு கேஸ்.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுக்கு பேசாமல் ஒரு அரசியல்வாதியாகி மானம் மரியாதை புகழோடு பேரம்பேசியே வழ்ந்திருக்கலாம்.......!  😁

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, goshan_che said:

படிப்புக்கும் பழக்கவழக்கத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பதை நிறுவும் இன்னொரு கேஸ்.

சரியாகச் சொன்னீர்கள் கோசான்.

மனிதர்களின் தரம் கல்வியால் மெருகூட்டப்படவேண்டுமே தவிர, கல்வியை இழிவுபடுத்தக்கூடாது. அதிலும் மேற்கு நாட்டில்US/UKயில் மேற்படிப்பு படித்துவிட்டு இப்படிச் செய்யக்கூடாது அல்லவா ? 

கோசானின் நல்லகாலம் இந்தத் திருடன் யாழ் பல்கலையில் கல்வி கற்றிருக்கவில்லை. அப்படிக் கற்றிருந்தால் கோசான் மலையேறியிருந்திருக்க வேண்டி வந்திருக்கும். 

😉

 

 

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, Kapithan said:

சரியாகச் சொன்னீர்கள் கோசான்.

மனிதர்களின் தரம் கல்வியால் மெருகூட்டப்படவேண்டுமே தவிர, கல்வியை இழிவுபடுத்தக்கூடாது. அதிலும் மேற்கு நாட்டில்US/UKயில் மேற்படிப்பு படித்துவிட்டு இப்படிச் செய்யக்கூடாது அல்லவா ? 

கோசானின் நல்லகாலம் இந்தத் திருடன் யாழ் பல்கலையில் கல்வி கற்றிருக்கவில்லை. அப்படிக் கற்றிருந்தால் கோசான் மலையேறியிருந்திருக்க வேண்டி வந்திருக்கும் அல்லவா ?

😉

 

 

கற்ப்ஸ் நான் எழுதினதை திரும்பி வாசியுங்கோ.

படிப்புக்கும் பழக்க வழக்கத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை எனத்தான் எழுதி உள்ளேன்.

கோணல் புத்தி உள்ளவர்கள் யாழ், கேம்பிரிஜ், ஸ்டான்போர்ட் எதிலும் இருப்பார்கள்.

பழக்கவழக்கம் என்பது பெற்றோரால் நாம் வளர்க்கபடும், அனுபவ அடிப்படையில் நம்மை நாமே வளர்க்கும் விதத்தில் தங்கியுள்ளது.

பழக்கவழக்கம் என்பது “சுத்துமாத்து செய்தால்தான் புலம்பெயர் நாட்டில் பிழைக்கலாம்”(நியாபகம் இருக்கும் -bounce back loan fraud பற்றிய உரையாடல்)  என்ற அணுகுமுறை தவறு என்று உணரவைக்கும். 

எங்கு படித்தாலும் இதை சிலர் உணரமாட்டார்கள்.

ஆனால் பல்கலை கழக பக்கமே போகாத காமராஜரும், கக்கனும் கை சுத்தமாக இருந்தார்கள்.

ஆகவே,

படிப்புக்கும் பழக்க வழக்கத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

 

 

43 minutes ago, suvy said:

இதுக்கு பேசாமல் ஒரு அரசியல்வாதியாகி மானம் மரியாதை புகழோடு பேரம்பேசியே வழ்ந்திருக்கலாம்.......!  😁

🤣 பொத்தாம் பொதுவா சொல்லாமல் யாரெண்டு அடிச்சு சொல்லுங்கோ 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, goshan_che said:

கற்ப்ஸ் நான் எழுதினதை திரும்பி வாசியுங்கோ.

படிப்புக்கும் பழக்க வழக்கத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை எனத்தான் எழுதி உள்ளேன்.

கோணல் புத்தி உள்ளவர்கள் யாழ், கேம்பிரிஜ், ஸ்டான்போர்ட் எதிலும் இருப்பார்கள்.

பழக்கவழக்கம் என்பது பெற்றோரால் நாம் வளர்க்கபடும், அனுபவ அடிப்படையில் நம்மை நாமே வளர்க்கும் விதத்தில் தங்கியுள்ளது.

பழக்கவழக்கம் என்பது “சுத்துமாத்து செய்தால்தான் புலம்பெயர் நாட்டில் பிழைக்கலாம்”(நியாபகம் இருக்கும் -bounce back loan fraud பற்றிய உரையாடல்)  என்ற அணுகுமுறை தவறு என்று உணரவைக்கும். 

எங்கு படித்தாலும் இதை சிலர் உணரமாட்டார்கள்.

ஆனால் பல்கலை கழக பக்கமே போகாத காமராஜரும், கக்கனும் கை சுத்தமாக இருந்தார்கள்.

ஆகவே,

படிப்புக்கும் பழக்க வழக்கத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

 

நீங்கள் கூறியதை ஆமோதித்துள்ளேனே தவிர, முரண்படவில்லையே. 

இதிலும் பல்வேறு அர்த்தங்கள் கண்டுபிடிப்பீர்களோ?

பேசாமல் உங்களுக்கு "~அர்த்தக வித்தகர்"" என்று பட்டமே கொடுக்கலாம். 

🤣

  • Thanks 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • என்னால் வாக்களிக்க முடியவில்லை. முடிவுகளைப் பார்த்த பின்பு வாக்களிக்க முடியாது எனட்று சொல்கிறது.விசு அண்ணாவின் கடந்தகால அனுபவத்தினால் நான் முடிவுகளைப் பார்க்கவும் இல்லை  ஆனால் பார்த்து விட்டேன் வாக்களிக்க முடியாது. வாக்கு மெசினில் சுத்துமாத்து பண்ணி விட்டார்கள். ஜனநாயக விரோதம். நான் இல்லை என்றே சொல்கிறேன். சுமத்திரனை தமிழ்மக்கள் அரசியலில் ஓய்வு கொடுத்து வீட்டுக்குள் முடக்கி விட்டார்கள்.இந்தமுறை தமிழரசுக்கட்சியை தவறாக வழிநடத்தியவர் அவர். அவருசைpறிதரனுக்கும் நியமனம் வழங்கக்கூடாது என்று நியமனக்குழுவில் வாதிட்டதாகவும் சிறிதரன் பதிலுக்கு நான் போட்டியிட முடியாதென்றால் நீரும் போட்டியிடக்கூடாது என்று வாதிட்டதால் வேறு வழியின்றி சிறிதரனைச் டசேர்த்துக்கொண்டதாகவும் சிறிதரன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். சிறிதரனும் இல்லையென்றால் தமிழரசுக்கட்சிக்கு யாழ்மாவட்டத்தில்ஒரு இடமும் கிடைத்திருக்காது.இனிமேல் சிறிதரன் அரசியிலில் மூக்கை நழைக்காது லோயர் வேலையைச் செய்யட்டும்.சிறிதரனுக்கு தலைமைப்பதவியை ஏற்று தமிழரசுக்கட்சியை வழிநடத்த வழிசெய்யும் வகையில் வழக்கை வாபஸ்பெறட்டும். இதுதான் இவரை அரசியலில் வைத்திருந்த தமிழரசுக்கட்சிக்கு அவர் செய்த நன்றிக்கடனாகும்.
    • சும் ஏற்கனவே கட்சியில் தனது தலைக்கு ஆபத்து வரக்கூடியவர்களை எல்லாம் களை பிடுங்கியது மட்டுமல்லாது தனது அல்லக்கைகளை கட்சியின் பொறுப்பான பதவிகளிலும்  இருத்தி / அடிமையாக்கி  உள்ளார்.   விடுதலைப் புலிகளால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினை அழித்து இன்று தமிழரசு கட்சியையும் குழி தோண்டி புதைத்துள்ளார் சும். அத்துடன் பிரதேச சபை மாநகர சபை என்ற வட்டத்தில் இருந்தவர்களை மாகாண சபையையும் தாண்டி பாராளுமன்ற தேர்தலுக்குள் காலடி எடுத்து வைக்கச்  சந்தர்ப்பம் சும்மின் அடாவடியினால் ஏற்பட்டது / ஏற்படுத்தப்பட்டது. இது இன்று சும்மிற்கே வாழ்வா சாவா என்ற கட்டத்தை எட்டியுள்ளது.     கூடவே தேர்தல் முடிவும் ஒன்றை சொல்லாமல் சொல்லி உள்ளது. அடைக்கலநாதன் தவிர்த்து முன்னாள் போராளிகள் தமிழ் மக்களால் அரசியல் அரங்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.   இது படிப்படியாக மக்களை வேறு பக்கம் திசை திருப்புகிறதா?  இங்கு நவம்பர் 11 just a  Remembrance Day என்பது போல் எமது போராட்டமும் மறைக்கப்படுமா என யோசிக்க வைக்கின்றது. மாறாக சிங்கள மக்கள் முன்னாள் போராளிகளை அல்லது அவர் சார்ந்த கட்சியை பலப்படுத்தி உள்ளனர்.       
    • கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அனுர அவர்களே...தமிழரசுக்கட்சியின்  தேசியப் பட்டியல் உறுப்பினரும் இணைய வேண்டுமல்லவா..குறிப்பு அவரு பழம் தின்று கொட்டை போட்ட ஆளு..இப்ப உருட்டல் மிரட்டலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்....வந்திடுவார்...வந்தால் உங்களுக்கே வகுப்பெடுப்பார்..அவதானம்.
    • அதெப்படி உங்களுக்குத் தெரியும்? அவர் உங்கள் பிரண்டோ,.? 🤣 உங்கள் கோவண அரசியல் யாரையெல்லாம் நாடாளுமன்றம் அனுப்பியிருக்கு பார்த்தீங்களா?  நாடாளுமன்றத்தில் உங்கள் பிரண்ட் அர்ச்சுனா யாழ்ப்பாணீஸின் பீத்தல் கோவணத்தை உதறித் தொங்க விடும்போது யாழ்ப்பாணீஸின் அம்மணம் அப்படியே வெளித் தெரியும். 🤣 (பெருசு,.. உங்களை அறியாமலேயே தாங்கள் அர்ச்சுனாவின் ஆபாச வீடியோக்களை ரசிப்பவர் என்று பகிரங்கமாக  காட்டிவிட்டீர்களே,...என்ன ஒரு புத்திசாலித்தனம்,..👍)
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.