Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களுக்கு சாவுவருகின்றது என்று நீங்கள் நினைத்த கணத்தில் உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்கள் எவை?

24 members have voted

  1. 1. சில செக்கன்கள் அல்லது நிமிடங்கள் நீங்கள் உண்மையில் சாகப் போவதாய் உணர்ந்த அந்த இறுதி அனுபவம் ஏதாவது உங்கள் வாழ்வில் ஏற்பட்டதா?

    • ஆம்!!
      12
    • இல்லை!!
      12

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • தொடங்கியவர்

அது சரி ஜெனரல் நீங்கள் என்ன உயரம் எண்டு சொல்லவில்லை? உங்களையும் அண்ணை எண்டு கூப்பிடுற நிலமை வரும்போல இருக்கு??

உங்கள் உண்மையான உயரம் என்ன எண்டு இன்னொரு பரிசோதனையை துவங்குவமா? :icon_mrgreen:

இந்த யாழ் புரபைலில் (profile) உயரம், மற்றும் நிறை, கண்களின் நிறம், தோலின் நிறம், உடலில் உள்ள சிறப்பு அடையாளங்கள், மச்சங்கள்... , திருமணம் ஆனவரா அல்லது தனியாக வாழ்பவரா இப்படி... அதாவது உந்த பாஸ்போர்ட்டை நிரப்பும்போது கேட்கும் கேள்விகளை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பரணியின் கதையை பார்க்க உந்த மிக்கிமவுஸ் கதை தான் நினைவுக்கு வருகிது! :lol: சாவு துரத்திக்கொண்டு இருக்கிது... அவரும் தப்பித்தப்பி ஓடிக்கொண்டு இருக்கிறார்... இவருக்கு மயிரிழையோன் எண்டு ஒரு பட்டம் குடுப்பமா? அதாவது பல தடவைகள் வாழ்வில் மயிரிழையில் உயிர் தப்பியமைக்காக! :lol:

ஜெனரல் அவர்களே!!

என்னை அண்ணா என்று சொல்ல வேண்டிய நிலை வராது ..........உயரதிற்கு ஒரு பரிசோதனையா குருவே மக்கள் நம் மேல் கடுப்பாக இருகிறார்கள் எனி பரிசோதனை வைத்தா ரியாக்சன் எப்படி இருக்கு என்று தெரியவில்லை ஆனாலும் வைத்து பார்போம்.......... :icon_mrgreen:

ஜெனரல் அவர்களே உதில ஒரு விசயம் போட பல பேர் தயங்குவீனம் அது எனக்கு நல்லா தெரியும் அப்படியான பரிசோதனை எல்லாம் நானும் சுண்டல் அண்ணாவும் செய்யிறனாங்கள் இரகசியமாக........அதாவது திருமணம் ஆனவரா இல்லையா என்று கேள்வி கேட்டா விடை இல்லை என்று தான் வரும் பாருங்கோ..குருவே புரோபைலில் சில நாளா ஒரு படம் இருந்தது அது உங்களின் படமா பிறகு எடுத்துவிட்டீர்கள் பாதுகாப்பு காரணமா நாம நம்ம படத்தை போட்டா பல சிக்கல்கல் வரும் அது தான் இரகசியம் பேணுகிறோம்............ :P

ம் கொடுத்தாலும் கொடுப்பீங்கள்.

இலங்கையில் இருந்தால் தினமும் மரணவாழ்வுதான்.

ஒன்று தெரியுமா கலைஞன். மிக்கி மவுஸ் மாதிரி நானும் ஓடி இருக்கிறன். திருகோணமலையில் கல்வி வளாகத்திற்கு சென்றுகொண்டிருக்கும்போது என் கண்முன்னேயே தாக்குதல் நடைபெற்றது. இராணுவத்தின் வாகன அணி மீது ஒரு பெண் கைக்குண்டு வீசினவர்.வீசினவர் போய்ச்சேர்ந்திருப்பார். சும்மா வந்த நான் ஓடின ஓட்டம் இருக்கே . . நினைச்சால் சிரிப்பாயும் இருக்கு அந்த நேரத்தை நினைக்க கலக்கமாகவும் இருக்கு . .

பரணி மாஸ்டர் நல்லா தான் ஓடுறீங்க வாழ்கையில் பல தரம் ஓடி இருகிறீங்க போல........ஓட்டம் நின்றுவிட்டதா இன்னும் ஓடி கொண்டு தான் இருகிறீங்களா.............. ;)

ஜெனரல் அவர்களே இறப்பை பற்றி பரிசோதனை நடத்தியாச்சு இனி பிறப்பை பற்றி நடத்துவோம்.............உங்களுக்கு ஆண் குழந்தை பிடிக்குமா இல்லை பெண் குழந்தை பிடிக்குமா என்று எப்படி இருக்கு யோசனை............... :P

உயரத்துக்கும் அண்ணைக்கும் என்ன சம்பந்தம் கலைஞன்

  • தொடங்கியவர்

வேறொண்டும் இல்ல, நீங்கள் அடிச்சுப்போடுவீங்கள் அல்லது எனக்கு குட்டிப்போடுவீங்கள் எண்ட பயம்தான் அண்ணை காரணம்! இப்ப பள்ளிக்கூடத்தில, ரியூசனில உயரமான, தோற்றமான பெடியங்கள் தானே மற்ற ஆக்களுக்கு அடிக்கிறாங்கள்? எனவேதான், உங்களிடம் இருந்து என்னை பாதுகாக்க ஒரு எச்சரிக்கைக்கு - தற்பாதுகாப்புக்கு அண்ணை எண்டு மரியாதையாக கூப்பிட்டன். இனியும் அப்படித்தான் உங்களை நான் கூப்பிடுவன்! :lol:

அந்த கணத்தில் "நான் சாக மாட்டேன். என் அப்பாவை பார்த்து கொள்ள நான் இருந்தே ஆகணும்" என்று மட்டும் நினைத்தேன்.

ஈழவன் ,பரணி மாஸ்டர் இவ்வளவு கஸ்டங்களாஇ எல்லாம் தாண்டி வந்திருக்கிறீங்க.ஐயோ நானென்றால் ஏங்கியே செத்திருப்பேன் போல இருக்கு. இவற்றை எல்லாம் யாழில் சொல்லி நமக்கு அறியபப்டுத்த வைத்த கலைஞன் அண்னாக்கு ஒரு ஓ போடுங்க.

ஈழவன் ,பரணி மாஸ்டர் இவ்வளவு கஸ்டங்களாஇ எல்லாம் தாண்டி வந்திருக்கிறீங்க.ஐயோ நானென்றால் ஏங்கியே செத்திருப்பேன் போல இருக்கு. இவற்றை எல்லாம் யாழில் சொல்லி நமக்கு அறியபப்டுத்த வைத்த கலைஞன் அண்னாக்கு ஒரு ஓ போடுங்க.

ஏங்கியே செத்திருபீங்களா அக்கா பொய் சொல்லாதையுங்கோ எல்லாரையும் விட உங்களுக்கு துணிச்சல் கூட என்று எனக்கு நல்லா தெரியும்.................ஜெனரலிற்கு ஏற்கனவே ஓ போட்டாச்சு............ :lol: ;)

ஏங்கியே செத்திருபீங்களா அக்கா பொய் சொல்லாதையுங்கோ எல்லாரையும் விட உங்களுக்கு துணிச்சல் கூட என்று எனக்கு நல்லா தெரியும்.................ஜெனரலிற்கு ஏற்கனவே ஓ போட்டாச்சு............ :lol: ;)

துணிச்சல் வாய் பேச்சில் தான். ஈழவன் சொன்ன போல ஹெலி வந்து சுட்டால் எப்படி இருக்கும்? :lol:

துணிச்சல் வாய் பேச்சில் தான். ஈழவன் சொன்ன போல ஹெலி வந்து சுட்டால் எப்படி இருக்கும்? :lol:

ஓ நீங்கள் வாய் பேச்சில் நான் நம்பிட்டன்..........................கெலி வந்து சுட்டா அக்கா என்ன செய்வா என்று எனக்கு தெரியும்............. :lol:

வணக்கம் கலைஞன்

என்ன சாவைப்பற்றியே யாழில் திரும்பவும், திரும்பவும் யோசிக்கிறன்.. எழுதிறன் எண்டு கோவிக்ககூடாது. :lol: இப்போது எனக்கு சாவு பற்றிய எண்ணங்கள் வந்துபோகிது. என்றபடியால் இதுபற்றி எழுதுகின்றேன். உள்ளதை, உள்ளபடி சொல்வது பிழை இல்லை தானே?

சாகிற நேரம் தெரிந்தால்

வாழுகிற காலம் நரகம்.

(நன்றி சிவாஜி )

  • 3 years later...
  • தொடங்கியவர்

இன்று வேறோர் விடயம் சம்பந்தமாக தேடல் செய்தபோது மூன்று வருடங்களுக்கு முன்னர் கலந்துரையாடிய குறிப்பிட்ட இந்தக்கருத்தாடலை பார்த்தேன். எத்தனையோ பல நினைவுகள் வந்து செல்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் இப்பதிவைப் பார்த்தேன். கலைஞன், உங்கள் அனுபவத்தை வாசித்தேன். சிறிலங்காச் சிறைக்குச் செல்லும் போது நீங்கள் உயிருடன் திரும்பி வருவீரா என்று நினைக்கவில்லையா?.

எனது அனுபவம் என்றால்

இந்தியா இராணுவம் அக்டோபர் 97ல் காங்கேசன் துறை வீதியினால் முன்னேறும் போது எறிகணை வீசிக் கொண்டு முன்னேறினார். நாங்கள் ஒடிக்கொண்டிருந்தோம். ஒரு எறிகணை எங்களுக்கு மேலாக வந்து எங்களுக்கு முன்னால் இருந்த எருக்கும்பலுக்குள் வீழந்தது. நல்ல காலம் வெடிக்கவில்லை. வெடித்திருந்தால்....?

இன்னுமொரு முறை இந்திய இராணுவமும் ஈபிஆர் எல் எவ்மும் நான் வீதியினால் வரும் போது என்னைப் பிடித்துவிட்டார்கள். ஈபிஆர்.எல். எவ் காரர் ஒருவன் துப்பாக்கியை எனது வாய்க்குள் வைத்து சுடப் போவாதாகவும் லோலாவை தெரியுமா என்று கேட்டான். நான் அதற்கு ஈபிஆர் எல் எவ்வில் இருக்கும் ஒருவரின் பெயரை (எனக்கு அந்த ஆளைத் தெரியாது. ஆனால் எங்கட பாடசாலையில் முன்பு படித்தவர் என்று யாரோ கதைத்த ஞாபகம்)த் தெரியும். எனது பாடசாலையில் தான் படித்தவர் என்று சொல்ல, என்னை விட்டு விட்டார்கள்.

  • தொடங்கியவர்

நிறைய அனுபவங்கள் உள்ளன கந்தப்பு. அப்போது மேற்கண்ட அனுபவங்களை சுருக்கமாக பகிர்ந்துகொண்டேன். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சாவைப் பற்றிய அனுபவம் அண்மையில் ஏற்பட்டது.

மூன்று மாதத்திற்கு முன்பு, துருக்கி நாட்டிற்குச் சென்றிருந்த போது..... கடலில் குளித்தேன்.

அப்போ.... சும்மா , இடுப்பளவு தண்ணீரில் நின்றேன். திடீரென்று கடலில் பெரிய அலையும், நிலத்திற்குக் கீழே.... கடல் மணலை வறுகி..... ஆழம் ஏற்படுத்தி மூக்குக்கு மேலே தண்ணீர் வந்து, என்னால் மூச்சு, விட முடியாமல்...... ஒரு நிமிடம் அளவில் கரைக்கு வர முயற்சித்த போதும்.... கடல் அலையின் வேகம் என்னை முன்னுக்கு வர விடவில்லை. உடனே அருகில் நீந்திக் கொண்டிருந்த பிள்ளைகள் தான்.... என்னை இழுத்துக் கொண்டு வந்து கரையில் விட்டார்கள்.

.

Edited by தமிழ் சிறி

எனக்கு சாவு அனுபவம் இல்லை. ஆனால் சாவின் பின்பு என்ன நடக்கும் என்று சிந்திக்கிறனான். 12 அல்லது 13 வயதில் எண்டு நினைக்கிறன் கிணற்றில கப்பி வாளில தண்ணி அள்ளிக்கொண்டு இருக்கேக்கை கயிறை சரியா பிடிக்காம சமநிலை குழம்பி கிணற்றுக்க விழுந்திட்டன். நீந்த ஓரளவு தெரிஞ்ச படியா தண்ணிக்கு மேல வந்த உடன நீந்தி கரைக்கு வந்து கரைய பிடிச்சு கொண்டு நிண்டனான். பாம்புகள் சிலவேளை நிக்கிறது, அதுக்குத்தான் பயமா இருந்தது. பிறகு ஏணி மூலமா ஏறி மேல வந்திட்டன்.

அன்னக்கிளி படம் பார்த்துவிட்டு நானும் எனது நண்பனும் (இப்போ லண்டனில் இருக்கின்றார்) வந்து யாழ்பாபாணம் பஸ்ராண்டிற்கு வெளியில் பஸ்சிற்கு நின்றோம்..ட்ரைவர் கொண்டுவந்து பஸ் ஸ்ராண்டுடன் நெருக்கமா பஸ்ஸை அடிக்க என்னை அது பஸ்ஸ்ரான் தகரத்துடன் வைத்து இ.றுக்கத் தொடங்கிவிட்டது.என்னால் கத்தவும் முடியாமல் போய்விட்டது.நண்பன் கத்த பஸ்ஸில் இருந்தவர்களும் பஸ்ஸை பலமாக தட்ட பஸ்ஸை திருப்ப கொஞ்சம் முன்னெடுத்து என்னை இழுத்தெடுத்தார்கள்.அண்ணர் இங்கிலாந்தால் அனுப்பிய புது சேட் அப்படிவே வயிற்றடியில் வெட்டப்பட்டுவிட்டது.

எனக்கும் தலைசுற்றி சிறிய்கு மயக்கமும் வந்துவிட்டது.பிறகு சோடா எல்லாம் வங்கித்தந்து அடுத்த பஸ்ஸில் அனுப்பி வைத்தார்கள்..

இது இந்தியாவில் நடந்தது. முகாமொன்றுக்கு ஒரு தேவை நிமித்தம் போனேன்.அங்கிருந்தவர்களெல்லம் குளிக்க போஇக்கொண்டிருந்தார்கள்.என்னையும் அழைத்தார்கள்.சரி என்று நானும் புறப்பட்டேன்.பென்னாம் பெரியதொரு கிணறு நாலு பக்கமும் மோட்டர் போட்டு வயலுக்கு நீர் இறைத்துக்கொண்டிருந்தார்கள்.இவர்கள் போய் டொக்.டொக் என்று கிணத்திற்குள் பாய்ந்தார்கள்.எனக்கு நீச்சலும் தெரியாது அந்த அளவு துணிவும் இல்லை.பாயத்தான் வேண்டாம் படியை பிடிச்சு இறங்குங்கோ என்றார்கள்.படியால் இறங்கி ஒரு ரவுண்ட் கிணத்தை சுற்றிவருவம் என்று நீந்தத்தொடங்கினேன்.அரைவாசிபோயிருப்பேன் கீழே போகத்தொடங்கிவிட்டேன்.எவ்வளவு தூரம் போயிருப்பேன் எனத் தெரியாது ஒரு கை எனதுகழுத்தைசுற்றி மேலே இழுத்து வந்தது.எல்லோரு பயந்துவிட்டார்கள்.லண்டனில் இருந்து வந்த பொய் சொல்லிவிட்டு சுழிஓடுகின்றார் என நினைத்தார்கள்களாம்.தாங்கள் ஒருவருமே இன்னமும் முழுக்க கீழே போகவில்லை எவ்வளவு ஆழமென்றும் தெரியாது என்றார்கள்.உடம்பு நடுங்கத் தொடங்கிவிட்டது.திரும்ப படியால் ஏறமுடியாமல் முகாமிலிருந்து பெட்சீட்டுகள் கொண்டுவந்து இடுப்பில் கட்டி மேலே இழுது எடுத்தார்கள்.பெரிய வெட்கமாக போய்விட்டது.என்னை காப்பற்றியவர் இப்போது உயிருடன் இல்லை..

இறந்தாலும் பரவாயில்லை என இன்னொரு அலுவலும் செய்தேன் ஒரு நண்பனின் உதவியால் அதிலிருந்து அன்று தப்பினேன்.(தஞ்சை பெரிய கோவிலுக்கும் நன்றி) சந்தர்ப்பம் அமைந்தால் எழுதுகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

chumma...., on 01 September 2007 - 11:39 AM, said:

நான் யாழ் களத்திற்கு வருவது ஏதாவது தெரியாததை தெரிந்து கொள்ளத்தான். கடந்த ஆறு ஏழு வருடங்களாக பார்த்து வருகின்றேன். தினமும் பார்க்கும் தளம் என்றே சொல்லலாம். ஆனால் கலைஞன் போன்ற சைக்கோ க்களின் எழுத்துகளை வாசித்து எனது மன நிலையை குழப்ப விரும்பாததால், இன்றிலிருந்து யாழ் களத்தை நான் எனது வீட்டில் பில்ட்டரில் போட்டு விடப்போகின்றேன். யாழ் கழத்தில் பலர் நிறைய கற்றுக்கொண்டு வருகின்றார்கள். கலைஞனின் ஆக்கங்களை மட்டுறுத்துனர்கள் மீளாய்வு செய்வது நல்லது என்று நினைக்கின்றேன். நான் பல சிறு பிள்ளைகளுக்கு 8- 15 வயது உள்ள குழந்தைகளுக்கு இந்த தளத்தை அறிமுகப்படுத்து வைத்திருக்கின்றேன்... அவர்கள் பெற்றோர் பார்த்தால் என்னை அடிக்க வரப்போகின்றார்கள். நான் யாழ் களத்திற்கு வர மாட்டேன், ஆகவே எனக்கு பதில் போட்டு உங்கள் வெட்டியான நேரத்தை வீணடிக்க வேண்டாம் கலைஞன். நன்றி

சிந்திக்க தூண்டும் கருத்துக்கள். ஏன் யாழ்களம் யோசிக்க கூடாது.

சித்தன், உங்களுக்கு நான் எங்கு கருத்து வைக்கும்போது எங்கு வலிக்கின்றது என்று எனக்கு நன்றாகத் தெரிகின்றது. :lol: என்றாலும்.. இதுபற்றிய ஓர் சுவாரசியமான தகவல் ( உங்களுக்காக அல்ல.. மற்றவர்களுக்காக :lol: )

சும்மா:

சும்மாவுடன் பல கருத்துக்களை யாழில பரிமாறி இருக்கிறன். எனக்கு மிகவும் ஆரம்பமாய் நினைவில இருக்கிறது சிவாஜி பட புறக்கணிப்பு சம்மந்தமாய் நான் ஆரம்பிச்ச கருத்தாடலில் “மிஸ்டர். கலைஞன்..” எண்டு துவங்கி... எனது ஆற்றல்களை இப்படியான தேவையற்ற விடயங்களில செலவளிக்க வேண்டாம் எண்டு கூறும் சும்மாவின் கருத்து.

நான் சிறிதுகாலம் முதல் கொஞ்சம் புதுமையான விசயங்களை – ஆண்கள் எதிர்காலத்தில குழந்தை பெறல், சாவு இவை சம்மந்தமாக சில கருத்தாடல்களை ஆரம்பிக்க சும்மாவுக்கு கோவம் வந்துவிட்டிது. என்னை யாழில சைக்கோ எண்டு அழைச்ச முதலாவது பெருமகன் சும்மா.

நான் ஆரம்ப காலங்களில கருத்தாடல் செய்யும்போது யாராவது என்னை திட்டினால் கண்டுகொள்வது இல்ல. அல்லது பெரிதாக எடுப்பது இல்ல. ஆனால்... பின்பு எனது கருத்தாடல் போக்கை மாற்றிகொண்டன். அதாவது எனக்கு தரப்படும் மரியாதையின் அடிப்படையில மற்றவருக்கும் மரியாதை செய்து கருத்தாடல் செய்கின்ற பாங்கு.

சும்மாவிண்ட முறைப்பாடு என்ன எண்டால் தான் யாழ் இணையத்துக்கு தமிழ் கற்கிறதுக்கு சிறுவர்களை அழைத்து வந்ததாகவும், எனது கருத்துக்களை வாசிக்கும் சிறுவர்கள் பழுதாகப்போய் விடுவீனமாம் எண்டும் கருத்து சொல்லி இருந்தார்.

நான் எனது அபிப்பிராயமாக முன்பு கூறியது, இப்போதும் கூட கூறுவது என்ன எண்டால் இந்த யாழ் கருத்தாடல் தளம் சிறுவர்களுக்கு உகந்த ஒண்டு அல்ல. ஊர்பாசையில சொல்லிறதாய் இருந்தால் ஆகக்குறைஞ்சது 16 (Preferably 18) வயசுக்கு கீழ்ப்பட்டவர்கள் பிரதான கருத்தாடல் தளத்தில பங்குகொள்வது தவிரக்கப்படவேண்டும். வெளிநாடு எண்டால் பிள்ளைகள் எல்லாம் பிஞ்சிலை முத்தீட்டுதுகள். நான் பதினெட்டு வயசில அறிஞ்ச விசயங்களை இப்ப பால்குடிகள் அஞ்சு, ஆறு வயசில அறிஞ்சுவச்சு இருக்கிதுகள்.

நீங்கள் யாராவது அண்மையில கேள்விப்பட்டு இருப்பீங்களோ தெரியாது அமெரிக்காவில இருக்கிற ஒரு ஒன்பது வயசு சின்னப்பெடிப்பிள்ளை ஒருவர் பெண்களை எப்படி கையாள்வது, பெண்களுடனான உறவுகளை வளர்ப்பது சம்மந்தமாக (Dating) ஒரு புத்தகம் எழுதி அமெரிக்கா எங்கும் அறியப்பட்ட முக்கியஸ்தர் ஆகிவிட்டார். கலிகாலத்தில நிலமை இப்பிடி இருக்கிது. ஏன் எங்கட நாயன்மார்கள் அந்தக்காலத்தில ஒன்பது வயசில கலியாணமே செய்து இருக்கிறீனமே எண்டு நீங்கள் சொன்னால் ஒண்டும் செய்யஏலாது.

மற்றது இன்னொரு விசயம், யாழில பெரும்பாலும் ஒருவரும் பொருத்தமான தமிழில, எழுத்து, இலக்கணப்பிழைகள் இல்லாமல், மேலும் நல்ல நாகரீகமான வார்த்தைகளை பாவிச்சு கருத்து எழுதுவது இல்லை. என்னைப்பொறுத்தவரை தமிழ்கற்ற விரும்பும் குழந்தைகளிற்கு யாழ் இணையம் ஆகாது – கண்ணில காட்டக்கூடாது எண்டு அவர்கள் பெற்றோருக்கு பரிந்துரை செய்வன். யாழ் களத்தில குழந்தைகளுக்கு எண்டு ஒரு தனியான சிறுவர் பகுதி இருக்கிது. வேண்டுமானால் அவர்கள் – குழந்தைகள் அங்குபோய் ஏதாவது பயன் பெறலாம்.

இந்தநேரத்தில இன்னொரு முக்கியமான் விசயத்தை சொல்லவேணும் என்ன எண்டால் அண்மையில நோர்வேயில இருக்கிற எங்கட ஜெயபாலன் அண்ணாவிண்ட துணைவி வாசுகி அக்காவை அஜீவன் அண்ணா பேட்டி கண்டு தனது வானொலியில ஒலிபரப்பி இருந்தார். அதில கதைக்கப்பட்ட ஒரு முக்கிய விசயம் என்ன எண்டால் இந்தகாலத்தில சிறுவர்களுக்கான படைப்புக்களில எங்கட கலைஞர்கள் கவனம் செலுத்துறது மிகவும் குறைஞ்சு போச்சிது எண்டு. சிறுவர்களுக்கான படைப்பிலக்கியங்கள் உருவாக்கப்படுவது இப்ப நல்லாய் குறைஞ்சிட்டிது.

வலைத்தளத்திலையும் இதே நிலமைதான். தமிழ் சிறுவர்களுக்கு மட்டுமான வலைத்தளம், கருத்தாடல் தளம் எண்டு ஏதாவது இருக்கிறதாய் எனக்கு தெரிய இல்ல. யாராவது அக்கறை உள்ள ஆக்கள் முக்கியமாக மோகன், இளைஞன், சோழியன் மாமா, நெடுக்காலபோவான் (குருவிகள்?) எல்லாரும் சேர்ந்து இந்தக்குறையை போக்கலாம் எண்டு நினைக்கிறன். சிறுவர்களுக்கு ஏற்றவகையில குழந்தைகளுக்கு மட்டுமான ஒரு கருத்தாடல்தளம் இருந்தால் உண்மையில சூப்பராய் இருக்கும். கூகிழில அல்லது தமிழ்நாட்டு தளங்கள் ஏதும் சிறுவர்களுக்காக தனிப்பட இருக்கிதோ தெரியாது. நான் தனிப்பட இதுபற்றி ஆராய்ச்சி செய்ய இல்லை. அப்படி ஏதாவது இருந்தால் - யாழ் முகப்பில அதை போட்டுவிட்டால் தேவையில்லாத பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

சும்மாவை பற்றி சொல்லிறதாய் இருந்தால் நன்கு கல்வி கற்றவர். தொழில் தகமை உடையவர். மடியுக்க நிறையக்காசு வச்சு இருப்பவர் எண்டு சொல்லலாம். தான் Business Templates ஐ உருவாக்கின்ற உலகப்பிரசித்திபெற்ற ஒரு நிறுவனத்தில வேலை செய்யுறதாக சொல்லி இருந்தார். சும்மாவை கையுக்கபோட்டு வச்சால் நீங்கள் அவர்மூலம் பல அனுகூலங்களை பெற்றுக்கொள்ளலாம். எண்டபடியால அவருடன் சினேகபூர்வமாக உரையாடி நல்லுறவை வளர்த்துக்கொள்ளுங்கோ.

சும்மா முன்பு யாழ் சமூகச்சாளரத்தில எழுதிய கருத்துக்களை நான்வாசிச்சு அறிஞ்சது என்ன எண்டால் சும்மா அவர்களது வாழ்விலும் யாரோ பெண்கள் புகுந்துவிளையாடி வேதனையை ஏற்படுத்தி இருந்தார்கள். அத்தோட அதனாலதான் என்னமோ அவர் தமிழ் பெண்களை வெறுத்து வேற்றின பெண் ஒருவரை திருமணம் செய்யப்போவதாக சொல்லி இருந்தார் எண்டு நினைக்கிறன்.

சும்மாவுடன் எனக்கு தனிப்பட தொடர்புகள் கிடையாது. எங்கிருந்தாலும் எவரை திருமணம் செய்தாலும் சும்மா அவர்கள் வளமுடன், மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள்!

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஏற்கனவே திண்ணையில ஒருக்கால் சொல்லியிருக்கிறன்..! :lol:

இந்தியாவில் 11 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நேரம். பள்ளிக்கூடத்தால் வரும்போது அநேகமாக படிக்கட்டில் தொங்கிக்கொண்டுதான் வருவது. :lol: ஃபிகர்கள் வந்தால் உள்ளே ஏற்றிவிட்டு பாதுகாப்பாக படியில் தொங்கிக்கொண்டு வருவோம்..! :D

கைப்பிடி எதையும் பிடிக்க அநேகமாக வழியிருக்காது. கதவின் சட்டங்களைப் பிடித்துத்தான் தொங்குவது. அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை..! இமேஜ்தானே முக்கியம்..! :lol:

அப்படி ஒருநாள் தொங்கிக்கொண்டு வந்தேன். ஒரு தரிப்பிடத்தில் நின்றபோது ஆட்கள் இறங்க ஏற விட்டுவிட்டு பேருந்து கிளம்பும்போது மறுபடியும் படியில் தொங்க ஆரம்பித்தேன்..! :wub: அப்போது எனக்குப் பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு எருமை என்ன நினைச்சிதோ தெரியாது, கொஞ்சம் முண்டி அடித்துக்கொண்டு உள்ளே ஏற வெளிக்கிட்டது. எனக்கு ஏற்கனவே கிறிப் காணாது. பஸ் இதுக்குள்ள 50, 60 கி.மீ வேகத்தில போய்க்கொண்டிருந்தது. என்ர கைப்பிடி நழுவிறது வடிவாத் தெரிஞ்சது..! :huh:

பிறகென்ன.. கைப்பிடி நழுவ பிடரிப்பக்கமா ரோட்டை நோக்கி விழுந்தேன்..! விழும்போது ஏற்பட்ட உணர்வு இன்னும் ஞாபகம் இருக்கு. எதுவித இரைச்சல்களும் கேட்கவில்லை. ஒருவிதமான அமைதி..! நானும் சத்தம் போடவில்லை..! :)

கீழே விழுந்து ஒரு பத்தடி உருண்டிருப்பேன்..! அதிசயமாக என் பிடரியில் அடிபடவில்லை. முதுகுப் பை என்னைக் காப்பாற்றிவிட்டிருந்தது. கை கால் எல்லாம் உராய்ந்த காயங்கள்..! பள்ளிச் சீருடையும் சின்னாபின்னம் ஆகி விட்டிருந்தது..! :lol: அப்போது உந்துருளியில் வந்த ஒரு மகான், 'என்ன விழுந்திட்டியாப்பா,' என்று கேட்டுவிட்டு என்னை ஏற்றிக்கொண்டு தன் வீட்டுக்குச் சென்று எனது காயங்களைக் கழுவச் செய்தார். பிறகு ஒரு சாரத்தைக் கட்டக் குடுத்து இன்னொரு பஸ் ஏற்றி அனுப்பி வைத்தார். இப்போது பஸ்ஸில் சீற்றில் குந்தியிருந்து வீட்டுக்குப் போனேன்..! :lol:

பிறகு வைத்தியரிடம் போனபோது, நீ இன்னும் உயிரோடு இருக்கிறியா எண்டு கேட்டார். மருந்தைக் கட்டிப்போட்டு, பிறகு சாரத்தையும் தோய்ச்சு, இன்னொருநாளில் அந்த மாகானிட்டை குடுத்து நன்றியும் சொல்லிட்டு வந்தன்..! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.